அரத்தமே 14

அடக்கப்பட்ட கோபத்தில்  கர்ணனின் முன் அமர்ந்திருந்தான் மலைமுத்து, அடிப்பட்ட நரியல்லவா அவன்.

“இவனா தாய் மாமன்…! இந்தப் பவி என் கிட்ட சொல்லவே இல்ல டோலரே!…” உதட்டைப் பிதுக்கினான் குணா.

“இந்த நாய் மாமன, தாய் மாமன் வேற சொல்லனுமா! விடுடா என்ன தான் பண்ணுவான் நானும் பார்க்கறேன்…” என்று முஷ்டியை இருக்க, “டோலரே! ஏற்கெனவே  நீங்க பார்த்ததே, என் கல்யாணத்தை பாதிக்குமோனு பயமா இருக்கு.. இதுல இன்னைக்கு எதாவது பார்த்து பவி எனக்கில்லைனு ஆக்கிடாதீங்க ப்ளீஸ், உங்களுக்கு புண்ணியமா போகும், கையை கீழ இறக்குங்க…” என்றான் பாவமாக,

“மச்சான், இவங்க தான் பவிய பொண்ணு கேட்டு வந்திருக்காங்க,  பவியும் இந்த தம்பியும்  விரும்புறாங்க… எங்களுக்கும் பிடிச்சிருக்கு, நீங்க என்ன சொல்றீங்க?”

“நம்ம பவிக்கு வேற சம்பந்தம் பார்க்கலாம் மாப்பிள… இவன் வேணாம்” என்றார் இருவரையும் பார்த்து…

மல்லியும் நதியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்… கர்ணன், பேச எத்தனிக்க குணா அவனை அடக்கினான்.

“என்ன மச்சான் இப்படி சொல்றீங்க? ஏன் இந்த சம்பந்தம் வேணாம் சொல்றீங்க? உங்களுக்கும் இந்த தம்பிக்கும் என்ன பிரச்சனை…?” என விசாரிக்கவும்,

“அந்தக் காலேஜ்ல இருந்து என்னை  துரத்தினது  இவனுங்க தான் மாப்பிள… அது மட்டுமில்ல, என் லைசென்ஸே கேன்சல் பண்ணதும் இவனுங்க தான்… என்னால் இப்போ எந்தக் காலேஜ் கேண்டீனலையும் ஆடர் எடுக்க முடியாம போச்சு மாப்பிள, எனக்கு எதிரா செஞ்சவனுங்க கிட்ட சொந்தம் கொண்டாடணுமா?  வேணாம்  வேணாம் மாப்பிள இவனுக்கு நம்ம பவிய கொடுக்க  வேணாம் …”என்றார் கோபத்தோடு, பவியின் தந்தை ரத்னவேல் யோசிக்க,  “என்ன மாப்பிள யோசிக்கிறீங்க, இவனுங்கள இங்க இருந்து போகச் சொல்லுங்க … இந்த சம்பந்தம்  நமக்கு வேணாம்” என்றார் இருவரையும் பார்த்து குரூர சிரிப்போடு.

” இங்க பாருங்க… நீங்க பேசுறது சரியா? உங்களுக்கும் இவங்களுக்கும் தானே பிரச்சனை, எதுங்க கல்யாணம் வேணாம் சொல்றீங்க? ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க, பெத்தவங்களா, வளர்த்தவங்களா  அவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காம, உங்க கோபத்தால,  இரண்டு பேரை பிரிக்க நினைக்கறீங்களே இது நல்லாவா இருக்கு…? அப்றம் என் பசங்க தப்பு பண்றவங்க இல்ல…  அவங்களால நல்லவங்க யாரும் பாதிக்க பட மாட்டாங்க…” மல்லிகா தெளிவாகவும் தன்னிரு மகன்கள் மேலும் நம்பிக்கை வைத்து கூற,

“அப்போ நான் கெட்டவன் சொல்றீங்களா?  பார்த்தீங்களா மாப்பிள உங்க முன்னாடி என்னை கெட்டவன் சொல்றாங்க இவங்க…” இருவருக்குமிடையே சண்டை மூட்டுவிட,

“ஏங்க நான் எப்போ…?”மல்லிகா ஆரம்பிக்க, அவரை தடுத்த கர்ணன், ரத்னவேல் அருகில் சென்று அமர்ந்தவன், அவர் கைப்பற்றி, “அப்பா, நான் பவிய தங்கையா தான் பார்க்கறேன்… அவளோட வாழ்க்கை நல்லா இருக்கணும் ஒரு அண்ணனா, எனக்கே தோணும் போது, அவளோட அப்பா, உங்களுக்கு நிச்சயம் அந்த எண்ணம் இருக்கும்… பவிக்கு, குணாவை பிடிச்சிருக்கு, குணாவுக்கு பவியை பிடிச்சிருக்கு. இவரோட பழிவெறிக்கு ஏன் இவங்க சந்தோசத்த பறிக்கணும் சொல்லுங்க…?

இவர் கேண்டீன்ல நல்ல சாப்பாடு கொடுத்து, ஏதோ நான் தான் இவர் மேல் வன்மம் வச்சு அவருடைய  ஆடரை கேன்சல் பண்ணின மாதிரி சொல்றார் . ஆனா, உண்மை இவரால பல பசங்களோட உடல் நிலை மோசமாயிருக்கு. கேண்டீனை நம்பியே, இருக்கற  பசங்களுக்கு இவர் எப்படி சாப்பாட குடுத்திருக்கணும், ஆனா… இவரு அப்படி பண்ணல. அதான் நான் அப்படி செஞ்சேன்.இது தப்புனு நீங்க நினைச்சா, அந்தத் தப்பை நான் தான் செஞ்சேன், குணா இல்லை… நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா?  கேக்கறேன், ஆனா அவங்க ரெண்டு பிரிச்சிடாதீங்கப்பா .. காலமுழுக்க அந்த வழிய சுமந்துட்டே இருக்கணும்…” குரல் கமறியது

See More  👫 தேடல் 17 👫

“மாமா, சாரி… என் கர்ணா மன்னிப்பு கேட்டுத்தான் என் கல்யாணம் நடக்கணும்ன்ன எனக்கு அந்தக் கல்யாணம் வேணாம்… தப்பே செய்யாம, ஏன் என் கர்ணா மன்னிப்பு கேட்கணும்…?” என அவனும் பொங்க, ” குணா, நீ கொஞ்சம் அமைதியா இரு நான் பேசிக்கிறேன் …” என்றவனை தடுத்தவன்,

“இல்ல கர்ணா…!  நீ மன்னிப்பு கேட்டு, நான் கல்யாணம் பண்ணினா,  அந்தக் குற்றவுணர்ச்சில என்னால வாழவே முடியாத,  ப்ளீஸ் மன்னிப்பு கேட்டு, எனக்கு அந்த தண்டனைய வாழ்நாள் முழுவதும் கொடுத்திடாத…”

” இல்ல குணா நான் …” என பேசும் முன்னமே, மலைமுத்து, ” பார்த்தீங்களா  மாப்பிள எவ்வளவு  திமிரா பேசுறான்னு…? மன்னிப்பு  கேட்க கூடாதாம்… இவன் வேணாம் மாப்பிள…” என்றார் மீண்டும்.

” மச்சான், தப்பா எடுத்துக்காதீங்க, பவி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா, உங்க மேல தான் தப்பு இருக்குனு எனக்கு தெரியும்… இருந்தாலும் தாய் மாமன ஒரு மரியாதைக்கு அழைக்கணும் தான்  கூப்பிட்டேன்…  என் பொண்ணுக்கு இதவிட ஒரு நல்ல வரன் கிடைக்காது, கிடைச்சாலும் இவ சந்தோசமா இருக்க மாட்டாள். அதுனால …” என இழுக்கும் போதே ..

“கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்திட்டீங்கள… நீங்க முடிவு எடுத்ததுக்கு அப்றம் என்னை ஏன் கூப்பிட்டீங்க?  இதுக்கு மேல நான் இருந்தால் எனக்கு மரியாதையே இல்ல நான் கிளம்புறேன்…” என்று சென்று விட, தன் மனையாளை பார்த்தார்.
அவரும் சரியென்று இமை மூடி திறந்தார்.

“அவருக்காக  நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகறேன்…” என்று கையெடுத்து கும்பிட,  பதறிய குணா, தன் மாமனாரின் கையைப் பற்றி கொண்டவன்…” என்ன மாமா, உங்க பிள்ளை கிட்ட மன்னிப்பு கேட்கலாமா?”  என பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி வைக்க,
பவியும் கர்ணனும் நமட்டுச்சிரிப்புடன் பார்த்தனர். நதியா, மல்லிகாவிடம், ” மா, உன் புள்ள ஆக்டீங்க ஆரம்பிச்சுட்டான்..” என்றாள்.

அதன் பின்னே, அடுத்தடுத்த வந்த நல்ல நாளில் முதல் நாள் நிச்சயம் மறுநாள் கல்யாணமென பேசி முடிவு செய்தனர்… மகிழ்ச்சியோடு இல்லம் திரும்பினார்கள் .

பிரச்சனை முடிந்து ஒருவாரமான   நிலையிலும்  சித்து அர்ஜுனிடம் பேசாது  போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் ..

அவனும் பல முறை கெஞ்சி பார்த்து விட்டான். ம்கூம் கீழ் இறங்கி வருவதாக இல்லை… அதான் இன்று இரண்டில் ஒன்று தெரிய வேண்டுமென்று முடிவு செய்தவன். அவளது அறைக்குள் நுழைய, அவளோ குளியறையில் இருந்தாள். அவளுக்காக அவளது அறையில் காத்து கொண்டிருத்தான்.

அவளது அறையை நோட்டமிட்டவன், அவளது போட்டோ ஒன்று பிரம்மில் இருக்க, அதை எடுத்து தன்னுள் பதுக்கிக் வைத்தான்.

அவளும் குளித்து முடித்து விட்டு வர அர்ஜுனை தன் அறையில் கண்டதும் விழித்தவள் ” இங்க என்ன பண்ற எதுக்கு இங்க வந்த?” எனக் கத்திக் கொண்டு வந்தவளை திரும்பி பார்க்க, குளித்து விட்டு வந்ததால், முகத்திலும்  கழுத்து வளைவிலும் ஆங்காங்ககே நீர் துளிகள், அதிகாலை ரோஜாவின் இதழில் துயிலுறங்கும் பனித்துளி போலிருக்க,  தன்னை மறந்து ரசிக்க ஆரம்பித்தான்.

அவன் தோளை உலுக்கி, ” ஹலோ என்ன “பே”னு பார்க்கற, கொஞ்சம் அழக இருந்திடக் கூடாதே, ஜொள்ளு விடுவீங்களே …!” என்று சிலாகித்து கொள்ள, ” கொஞ்ச அழகா… ! இது உன் ரூம் கண்ணாடிக்கே அடுக்குமா? யூ ஆர் அப்சரஸ்… இதுக்கு முன்னே இப்படி ஒரு அழகை பார்த்தது  இல்ல, யூ ஆர் யூனிக்…” அவன் பாட்டுக்கு பேச, அவன் உதட்டின் ஓரம் துவலை வைத்து ஒற்றி எடுக்க புரியாமல் பார்த்தான் அர்ஜுன்..

” ஓவரா வழியுது அதான் துடைச்சு விட்டேன்…” என்றதும் கோபம் எட்டிப் பார்க்க, அவளை தன் பக்கமிழுத்து மெத்தையில் கிடத்தி எழுதாவாறு அணையிட்டான். ” என்ன டீ ரொம்ப பண்ற…? அழகா இருக்கீயே உனக்கு காம்பளிமெண்ட் கொடுத்தா வழியிறேன்னா சொல்ற… அழகா  இருக்கேன் திமிரா, உன்னை விட பெரிய அழகி எல்லாம் பார்த்து வந்தவன் டீ… ரொம்ப தான் சீன் போடுற …?” என்றதும்

See More  சிந்தையில் பதிந்த சித்திரமே - 17 precap

“ஒ… அப்ப சார் ஏன் இந்தப் பக்கம் வந்தீங்க? அந்த பெரிய அழகிகளோடு  உங்க நேரத்தை செலவழிக்கலாமே…!”  அவன் கையை தட்டுவிட்டு  எழுந்தமர்ந்தாள்.

“பச்… வாட் டூ டூ, என் மனசும் மூளையும் இந்த அழகியே போதும் சொல்லுதே…!” என இருவிரல் கொண்டு அவளது முடியை ஒதுக்கி விட, “ஏய்… இந்த டச் பண்ற வேலை எல்லாம் இங்க வேணாம்…  நான், நீ பேசினதும் ஈஸியா மயங்கிற பொண்ணு இல்ல… இங்க இருந்து கெளம்பு இல்ல, கழுத்த பிடிச்சி வெளிய தள்ளுவேன்…” என ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்தாள்…

“ராட்சசி…! என்ன பார்த்தால் மட்டும் ஏன் எரிஞ்சு விழுற…? அப்படியென்ன நான் பண்ணிட்டேன்…?” எனக் கேட்டவன் அவள் கோப விழிகளை கண்டதும், ” ஓகே ஓகே… உன் ஃபிரண்ட  அடிச்சேன் தான்… ஆனா, உண்மை  தெரிஞ்சு மன்னிப்பு கேட்டேனே! இதுக்கு மேல நான் என்ன டீ பண்ணனும் சொல்லு… இதுவே நான் அர்ஜித்  அடிச்சிருந்தால், உனக்கு நான்  ஹீரோவா தெரிஞ்சுருப்பேன். என் கிரகம் மாத்தி உன் ஃபிரண்ட அடிச்சிட்டேன்… அதுக்கு ஏதோ வில்லனை போல நினைக்கற நானும் ஹீரோ தான் மா…” காலரை பின்னுக்கு தள்ள, அவனையே பார்த்திருந்தாள்..

“ராட்சசி, இந்த ஹீரோ அழகா இருக்கேனா?  என்னை ஏன் அப்படி பார்க்கற…?” எனவும்” நீ என்னைக்குமே எனக்கு ஹீரோவா தெரிய மாட்ட.. நீ நல்லதே பண்ணாலும் உன் மேல் எனக்கு இருக்க கோபம் குறையாது…” என்றவளை புரியாமல் பார்க்க, ” என் ஃபிரண்ட அடிச்சது கூட, உங்க தங்கச்சிக்காக இருக்கலாம்… ஆனா, என்னையும் அவனையும் சேர்த்துவச்சு ச்ச… ஏன் ஒரு பொண்ணு  பையனுக்காக துடிச்சா, அது  தன்னோட காதலனுக்காக தானா? நண்பனுக்காக இருக்கக் கூடாதா?  உன் புத்திய ஒரு நிமிஷத்துல காட்டிடேல, நாள பின்ன உனக்கும் எனக்கும்  கல்யாண முடிவு  பண்ணாலும் உன்னை கட்டிக்க நான் சம்மதிக்க மாட்டேன்… இப்போ என் நட்பை தவறாக நெனச்சா நீ, கல்யாணத்துக்கு அப்றம் அதே நினைப்போடு இருந்தால் என்ன பண்ண?  என் வழியில  நீ வராத, இது போல என்னை  எப்பயும் தொந்தரவு செய்யாத… ” என்றாள் தீர்க்கமாக,

அவனோ உறைந்து போய்விட்டான், அன்று கோபத்தில் சொன்ன வார்த்தையை இன்றளவில் நினைவில் வைத்திருக்கிறாளே! அது தான் அவளது கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கும் கயிறாக தெரிய… மன்னிப்பு கேட்டால் கூட மன்னிக்கும் ஆளா அவள்… விட்டு தான் பிடிக்கவே வேண்டும் .. இல்லை பிடிக்க வைக்க வேண்டும்…” என்றெண்ணி கொண்டு அவ்விடம் விட்டு எழுதவன்.

” அப்போ நான் உனக்கு சந்தேகப்படுறவன் போல தான் தெரியிறேன்ல. இட்ஸ் ஓகே வெளியப்படையா உன் கோபத்துக்கான ரீசனை சொன்னதுக்கு தேங்க்ஸ்… ஏன் சொன்னேன் விளக்கம் குடுத்து உன்னை கன்வியன்ஸ் பண்ண விரும்பல, அதுக்காக நான் பேசினது தப்புன்னு சொல்லவும் முடியாது அதுக்காக சாரி…! பட், என்னை பத்தின உன் எண்ணத்தை மாத்துவேன் .. என்னையும் நீ நம்பி அக்ஸ்ப்ட் பண்ணுவ…! மே பீ, வீட்ல  நமக்கு மேரேஜ் அரெஞ்சு பண்ணா கூட, நீயா முதல் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைப்பேன்…. பை குட் நைட்…” என்று அவ்விடம் விட்டு சென்றான்… ‘அதையும் தான்  பார்க்கலாம்…’ அசட்டையாக சிரித்துக் கொண்டாள்..

தந்தையில்லாத வீடு என்பதால், குணாவின் திருமணத்திற்காக அனைத்தையும் கர்ணனே முன்னிருந்து கவனித்து கொண்டான்… மல்லிகாவும் நதியாவும் சொந்தபந்தங்களை  அழைக்க, குணாவும் கர்ணனும்  நண்பர்களுக்கும் வெளியூர் இருக்கும் சொந்த பந்தங்களுக்கு இவர்களே சென்று அழைத்து வந்தனர்…

See More  🌊 அலை 9 🌊

பத்மநாதனின்  காலில் பவியும் குணாவும் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கல்யாணத்திற்கு அழைத்தனர்… அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்தவர், ” உன் கூட்டாளி கல்யாணம் பண்ணிக்க போறதெல்லாம் சரி, நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற? இதெல்லாம் நீ சொல்லா மாட்டீயா? ” கர்ணனிடம் ஆரம்பித்து குணாவிடம் கேட்டு முடித்தார்.

“ஐயா!!!  தங்கச்சி கல்யாணம் முடிந்ததும் அடுத்து அண்ணன் கல்யாணம் தான்… நீங்க கவலை படாதீங்க உங்க தலைமையில் தான் அண்ணனுக்கு கல்யாணமே நடக்கும்…” என்று விதுர்ஷாவை எண்ணி பவி சொல்ல, இருவரும் அமைதியாக நின்றனர்… ” அப்ப கூட வாய் திறக்கறான பாரு… இவன் பெண்டாட்டி வரட்டும் போட்டு கொடுத்து நல்லா கவனிக்க சொல்லனும்” என்று சிரிக்க, பேருக்கென்று சிரித்து வைத்தான்…

கல்லூரியில் வேலை செய்யும் அனைவருக்கும் கொடுத்தனர் கடைசியா, அவனது டெபார்ட்மென்ட்டில் இருக்கும் ஆசிரியருக்கும் கொடுக்க, வர… கர்ணன் வகுப்பு இருப்பதால்,  எடுக்கச் சென்றான் மற்றவர்களும் சென்று விட, விதுர்ஷா மட்டும் இருந்தாள்.

பவியும் குணாவும் சேர்த்து அவளுக்கு பத்திரிக்கைக் கொடுத்தனர்… பவியைக் கட்டிணைத்துக் கொண்டவள்.  குணாவிடம் வந்து, “வாழ்த்துக்கள் டோலரே! சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு என் கிட்ட இருந்து தப்பிக்கலாம் பார்க்கறீங்க போல… ” என அமர்த்தலாக கேட்க,

“அதெல்லாம் இல்ல டோலி, வீட்ல தான்  இப்போ விட்டால், அடுத்து மாசக்கணக்காகும் ஆகும் பேசி முடிவு பண்ணிட்டாங்க… வேணும்ன்னா டோலி உங்க ஃபிரண்ட் கிட்ட கேளுங்க… ” என்று பவியை மாட்டிவிட,

” கல்யாணம் பண்ணிட்டா, எப்படி நம்மல பிரிப்பானு தப்பு கணக்கெல்லாம்  போட்டாறாதீங்க டோலரே! எனக்கு நீங்க உதவி செய்யல, பவி கல்யாணத்துக்கு அப்றமும் உங்களுக்கு இல்லை… ” என அவனை மிரட்ட,  பவியை பார்த்தான்..

“அடியே, உன் மிரட்டல் எல்லாம் இந்த வாய் பூச்சி கிட்டதானா? எங்க கிட்ட ஹெல்ப்  கேட்கற சரி, மேடம் நீங்க என்ன முயற்சி செய்தீங்க ..? அண்ணாகிட்ட நீ தான் உன் காதலை சொல்லணும் அதுக்கும் எங்ககிட்ட  உதவி கேட்டா, நீ எதுக்கு காதலிக்கற? மொதல்ல என் புருசனை மிரட்றது இருக்கட்டும், போய் உன் லவ்வ என் அண்ணன் கிட்ட சொல்ற வழிய பாரு… வா, குணா, நீயும் அவளுக்கு பயந்துட்டு…” அவனை அழைக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளோடு சென்றான்…

‘ அந்தக் கரண்டு கம்பிய நினைச்சாலே உள்ளுக்குள்ள பதறுது. இதுல எங்க அவர் முன்னாடி போய் நின்னு என் காதலை சொல்ல…? இப்போ அதை யோசிச்சாலும் உதறல் எடுக்குதே…! ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்… விது, என் பயப்படற? பயப்படாத,  என்ன மிஞ்சி  மிஞ்சி  போனால் கத்துவாரு அடிப்பாரு அதுக்கு அப்றம் என்ன செஞ்சிட போறார்…  அவர் வேணும்ன்னா இதையெல்லாம் தாங்கி தான் ஆகணும்…’ என தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்..

நாட்கள் வேக நடையில் செல்ல, கோயம்பத்தூரில் இருந்து விஷு, மேகவாணனின் தோழர் ஒருவர்,  தன் மகள் கல்யாணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்,  வாட்ஸப்பில் அழைப்பிதழையும் அனுப்பி வைக்க, வீட்டில் அதனைப் பகிர்ந்து கொண்டனர்.  நால்வரும் மட்டும் செல்வதாக கூற, அர்ஜுனின் அந்த நாளை குறித்து வைத்துக் கொண்டான்…
அன்றைய நாளில்  எப்படியாவது ஊருக்கு சென்று தாத்தாவை பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்…

குணா பவி, நிச்சயதாரத்தம் தொடங்க, மண்டபத்தில் அங்குமிங்கும் அழைந்து கொண்டிருந்த  கர்ணனை தடுத்து தனியாக அழைத்து வந்தவள்,  அவனது பார்வையை  காண  முடியாமல் திண்றியவள், தன் காதலை சொல்ல, வாய்த்திறந்தாள்..