அத்தியாயம் 9


சுரேஷ் தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்தவன் சுற்றிலும் பார்க்க ரம்யா அங்கில்லாதது அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அருகில் இருந்த பழதட்டை தட்டிவிட்டவன் படுக்கையில் இருந்து எழ பால்கனியில் இருந்து எட்டி பார்த்தாள் அவள். தலை துவட்டிக்கொண்டு இருந்தவளை பார்த்தவன் முகத்தை திருப்பிக்கொண்டான். 

சிறிது நேரத்தில் உள்ளே வந்த ரம்யா அவனை கண்டுக்கொள்ளாமல் அறையை சுத்தம் செய்ய அவளை முறைத்தவாறு நின்றான் சுரேஷ். நன்றாக அழுதிருப்பாள் போல் முகம் வீங்கி சிவந்திருந்தது. 

மனைவி அழுதது அவனக்கு வருத்தம்தான்  என்றாலும் ‘அவ நொண்ணனை சொன்னா இவளுக்கு என்ன அவ்வளவு கோபம்’ என பல்லைக்கடித்தவன்  குளித்துவிட்டு வர அவ்விடமே சுத்தமாக இருந்தது அதை விட அறை எங்கும் அவள் வாசனை அவனை நிறைத்தது. சீட்டியடித்தவாறு இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்தவன்  அவன் மார்பில் இருந்த நக கீரலை வருடி பார்த்துவிட்டு சிரித்தான். அப்பட்டமான வெட்கம் அதை ரம்யாவும் பார்த்தாள் தான் அனால் அவள் முகம் கோபத்தில் இருந்தது. 

காபி டம்ளரை கூட தரையை பார்த்து தந்தவள் கன்னத்தில் ‘ஒரு அறை விடலாமா?’ என யோசித்தான் அவன்.  ‘ஒரு அறைக்கே சுருண்டு விழுந்தவள் மீண்டும் தாங்குவாளா’ என்ற சந்தேகம் வரவும் அப்படியே விட்டுவிட்டான். 

இரவு எல்லாமே நன்றாக தான் சென்றது. இருவரும் ஒருவரை ஒருவர் உருகி குழைந்து  கூடிக்களித்து இளைப்பாறிய போது தான் சுரேஷின் திமிர் பேச்சில் முதல் நாளே முதல் போர் இருவருக்கும் இடையே. 

தமிழின் தங்கையான ரம்யா அவன் மனைவி என்பதை சிறிது கூட உணராமல் அவள் ஏசியறையில் வாழ்கையை தொடங்க சுரேஷின் அன்பு தங்கை மட்டும் எப்படி அந்த ஓட்டை வீட்டில் வாழ்க்கையை தொடங்கலாம்?  அவன் தந்தையான சுந்தரமூர்த்தி அவசர புத்தியால்  வேலைக்கு  போகாது சோம்பேரியாக திரியும் தமிழ்மாறனை தன் தங்கை மணக்க வேண்டியதாகி விட்டது என அவன் பேச பேச ரம்யா முகம் தொங்கிவிட்டது. சுரேஷ் தமிழ்மாறை கேவலமாக நினைக்கிறான் என்பது புதிய செய்தி அவளுக்கு. அவனிடம் இருந்து விலகி படுத்துக்கொண்டாள்  அப்போதும் நிறுத்தவில்லை அவன். 

சொத்துக்கள் மேல் ஆசைபட்டு தான் தமிழ் சாதனாவை மணந்துக்கொண்டதை போல் சுரேஷ் பேசிக்கொண்டே செல்ல எழுந்து அமர்ந்துவிட்டாள் ரம்யா. 

“என்னாச்சி?” என்றவாறு சுரேஷ் விளக்கை போட அப்போது தான் அவள் அழுவதே அவனுக்கு தெரிந்தது. 

“போதும் இதுக்கு மேல எங்க அண்ணாவ ஏதாச்சும் பேசுனிங்க?” என்றவாறு படுக்கையில் இருந்து எழுந்தவளை வெடுக்கென்று இழுத்து தள்ளினான். 

அவனை பெறுத்தவரை தமிழ்மாறனின் ஆதரவாளர்களும் அவனுக்கு எதிரிகளே. அதுவுமில்லாமல் தன் மனைவி தனக்கு இயைந்து பேசவில்லை என்று கோபம் துளிர்த்தது. 

அவன் மூர்கமான முகம் அவளை அஞ்ச வைக்க

“ஏன் அவனை பேசினா என்ன? அவன்லாம் ஒரு ஆளா? என் அம்முக்கு டாக்டர் மாப்பிள்ளை பாத்திருப்பேன்டி நான்” அவன் கத்தியதில் சுருக்கென்று கோபம் வர அவனை அழுத்தமாய் பார்த்தாள் ரம்யா. 

“பாக்க வேண்டியது தானே?” 

“என்ன திமிரா? ” 

“டாக்டர் மாப்பிள்ளை பாக்கவேண்டியது   தானே? ஏன் பாக்கல?”

“உன் மாமனார் பண்ண வேலை டி இல்லைனா நீயும் உன் நொண்ணனும் எங்க வீட்டுக்குள்ள வந்திருக்க முடியுமா?” ஆத்திரத்திம் கண்ணை மறைத்தது அவனுக்கு. 

யாரை காயப்படுத்தி பேசினான் என தெரியாமல் அவன் மனைவியை அசிங்கபடுத்தி கொண்டிருந்தான். மனம் கசந்தது அவளுக்கு  ‘தங்களை இத்தனை கேவலமாக நினைத்தவனிடமா கூடிக்களித்தோம்?’ அருவருப்பான மன நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள். 

“தெரியாம தான் கேட்கிறேன் சென்னையில் படிச்சானு சொன்னிங்களே ஜர்னலிசம் படிச்சானா? இல்லை ‘சீக்கிரமே பணகாரன்’ ஆவது எப்படினு படிச்சான?” என நக்கலாக பேசியவனை எரிப்பது போல் பார்க்க ஒற்றை புருவத்தை ஏற்றி உச்சு கொட்டினான் சுரேஷ். 

“எங்க அம்மா வந்து உங்ககிட்ட கேட்டாங்களா?  பொண்ணு தாங்கனு எங்க அம்மாவா கேட்டாங்க? இல்லை உங்க தங்கச்சியும் என் அண்ணாவும் லவ் பண்ணாங்களா?” 

தந்தைக்கு நிகராக தமயனை வைத்திருந்தாள் ரம்யா அவள் உள்ளமெங்கும் எரிந்தது அவன் பேச்சில். 

‘நாங்களா இவங்களை தேடி வந்தோம்?’ நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது

“நீங்க கேட்டாலும் நாங்க தந்திருக்க மாட்டேம் டி” என்றவனை இப்போது ரம்யா நக்கலாக பார்த்தாள். 

“சாதனா பேர் ஊர்ல கெட்டுப் போனதால மட்டும் தானே எங்க அண்ண மாதிரி ஒரு இளிச்சவாயனா பாத்து கட்டிவச்சிங்க?” என பேசிக்கொண்டிருக்கும் போதே “பாளார்” என அறைந்திருந்தான் சுரேஷ். 

அவன் அடித்ததில் “ம்மாஆ” என்றவாறு ரம்யா சுருண்டு தரையில் விழ புயல் வேகத்தில் அவள் முடியை கொத்தாக அல்லினான் சுரேஷ். 

அப்பட்டமான அதிர்ச்சி அவள் முகத்தில். விவரம் தெரிந்த நாளில் இருந்து அவளை யாரும் அடித்ததே இல்லை வலியில் துடித்துபோனாள் ரம்யா.

“என் தங்கச்சி பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? காசுக்கு ஆசைபட்டு வந்தவதானே நீ?” உண்மை சுட்டதில் கண்மண் தெரியாத கோபம் அவனிடம். 

“யாரு நாங்களா காசுக்கு ஆசை பட்டோம்? அபாண்டமா பேசாதிங்க” என ஒற்றை விரலை அவன் முகத்திற்கு நேர் நீட்டியவள் விழிகளில் வழிந்த கண்ணீர் கூட அவனை இறக்கவில்லை 

“அப்படி தான் பேசுவேன் என்னடி பண்ணுவ? எங்க வீட்டுல் வசதியா வாழலாம்னு தானே என்னை கல்யாணம் பண்ண?” என அவள் கையை வலிப்பதுபோல் முறுக்கியவன் ஒரு ராட்சசன் போல் தெரிந்தான் அவளுக்கு. 

இத்திருமணம் பெரிய தவறு என உணர்ந்தாள் ரம்யா. 

“உங்கள கல்யாணம் பண்ணி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்”  மனதில் வெம்மையில் வெறுப்பை கொட்ட சுரேஷ் முகம் பயங்கரமாக மாறியது. 

‘முதல் நாளே இப்படி பேசுபவன் இனி வாழ்நாள் முழுவதும் பேசியே உயிரை குடிக்கப்போகிறான்’ என தோன்ற அதை மறையாது கொட்டிவிட்டாள். 

“ஓ…ஓ… அப்படியா? மேடம் வேற யாரை கல்யாணம் பண்ணா நல்லா முடிவா இருந்திருக்கும்?? அந்த செல்வத்தையா…?” அவன் குத்தல் பேச்சில் கையை உறுவிக்கொண்டாள் ரம்யா.  

அதுவறை இருந்த பிரச்சனை திசை மாறியது அவளை நோகடிக்க வார்த்தையை விஷமாக கோர்த்துவிட்டான். இதை சுத்தமாக  எதிர்பார்க்கவில்லை அவள்

“இப்போ எதுக்கு செல்வத்தை இழுக்குறிங்க?” என்றவள் குரல் நடுங்கியது  

“அவன் என்னடி உனக்காக அப்படி கெஞ்சினான்?  அப்போவே இந்த கல்யாணத்தை நிருத்தியிருக்கனும்  என் தங்கச்சிகாக உன்னலாம் கல்யாணம் செஞ்சிருக்கவே கூடாது”

மனதளவில் பலமாக அடிவாங்கினாள் ரம்யா. சற்றும் முன் அவளிடம் கிறங்கி உளறியது என்ன முத்தங்களின் காயங்கள் கூட ஆரவில்லை அதற்குள் துடிக்க துடிக்க அவளை வார்த்தையால் வதைத்து விட்டவனிடம் என்ன பேசுவது. 

“நீங்க என்ன தொட்டதெல்லாம் கூட உங்க தங்கச்சிகாக தான்னு சொல்லிடாதிங்க” என்றவள் அழுகையோடு குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

__________

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை எழுப்பிவிட்டான் தமிழ்மாறன். இருள்பிரியா வேளையில் கண்ணை திறக்க முடியாமல் சிணுங்கியவளை தூக்கி வந்து வெளியே விட்டவன் பரபரப்பாக அறையை சுத்தம் செய்ய அவனை பார்த்தவாறு நின்றவள் தமிழ் கூட்டி பெறுக்கி குளித்துவிட்டு வரும்வரையில் சுவற்றில் சாயந்து தூங்கிக்கொண்டிருந்தாள் சாதனா. 

அவளை குளிக்க அனுப்புவதற்குள்  ஒரு வழியாகிவிட்டான் தமிழ்மாறன். 

நேற்று பெய்த மழையின் குளிர் மெல்ல தழுவ ஒரு  இனிமையோடு அந்த வீட்டை சுற்றி பார்த்தாள் சாதனா. வெளியே தமிழ்மாறனின் குரல் கேட்க ஒரு முறை கண்ணாடியில் தன்னை பார்த்தவள்  தலையை மட்டும் வெளியே நீட்டினாள். 

ரவியோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தவன் ரவி குரைந்துக்கொணடே சாதனாவை நோக்கி போக அப்போது தான் அவள் நிற்பதையே பார்த்தான். அவன் பார்த்ததும் தலையை இழுத்துக்கொண்டாள் சாதனா. 

‘வெட்கமா உனக்கு?’ என நினைத்து சிரித்தவன்

“சது குளிச்சிட்டியா?” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவன் அவள் முன் வந்து நிற்க தலையை குனிந்து கொண்டவளை ரசனையாக பார்த்தான் தமிழ். பச்சை நிறத்தில் புடவை அணிந்து நீண்ட கூந்தலை பின்னி மல்லி சரம் இரு தோளிலும் வழிய நின்றிருந்தாள் அவன் மனைவி. புதிதாக வகிட்டில் வைத்திருந்த குங்குமம் அவனை ஏதோ  செய்ய தன் முழு பாரத்தையும் அவள் மேல் போட்டு சுவற்றில் அவளோடு  சாய்ந்து படர்ந்தவன்  இதழ் வழி அவள் உயிரை பருகிக் கொண்டிருந்தான். 

விடவேண்டும் என்ற என்னம் அவனுக்கும் இல்லை போல் நீண்ட நொடி ஒரு தேடல். ரவியின் சத்தத்தில் இருவரும் விலக தமிழை பார்த்து குரைத்தது ரவி. 

“என்னடா?” என தமிழ்மாறன் அதனிடம் குனிய இப்போது சாதனவை பார்த்து குரைத்தான் ரவி. அவள் பயந்து அவன் முதுகின் பின் மறைய 

“அண்ணிடா ரவி ச்சு ச்சு பாரு பயப்பிடுறா” என்றதும் தரையில் அமர்ந்து வாலை ஆட்டி கையை தூக்கினான் ரவி. 

“சாதனா அவன் உனக்கு கைத்தரான் பாரு இங்க வா” என அவளை அழைக்க பயத்தோடு கையை நீட்டினாள் அவள். 

அவள் கைமேல் கையை வைத்து ரவி நாவால் நக்கி சிணுங்க இன்னொரு கையால் அதன் தலையை தடைவி கொடுத்தவளிடம் தலையை கொடுத்துவிட்டு சுகமாக படுத்துக்கொண்டது அது.  

ரவி சாதனா புடவையை வாயால் இழுக்க அதன் போக்கில் எழுந்து சென்றனர் இருவரும். ரவி அழைத்து சென்ற இடத்தை பார்த்து கண்ணை விரித்தாள் சாதனா. 

“வாவ்… என்ன த்தான் இது? செடியில ஒரு வீடா? ” 

“வீடு இல்லை சது மாட்டு கொட்டாய்” 

“இதுலையா? மாடு செடியை தின்னாதா?”

“லூசு மாட்டை வித்தாச்சு. இது சும்மா தான் இருந்தது நான் தான் கீத்தை எடுத்துட்டு மல்லிகை செடிய நட்டு படரவிட்டேன்”

“ஹய்யோ… சூப்பரா இருக்கு த்தான். என்ன என்ன செடி வச்சிங்க?”

“மல்லி குண்டு மல்லி முல்லை காட்டு முல்லை காக்கரட்டான் இன்னும் நிறையவே இருக்கு”

“இப்போவே ஆழகா இருக்குல? “

“ம்ம் பூப்பூக்கும் போது இன்னும் ஆழகா இருக்கும்”

“நிறைய பூக்குமா?”

“தெரியலை  இது வரைக்கும் பூக்கலை சீசன் வரும்போது தான் பூக்கும்” 

“ஓஓ…  என்னை மாதிரி இவங்களும் புதுசா? ” 

“ம்ம் ஆமா ஆனா உன்னை விட சீனியர். இவங்களுக்கு இந்த இடம் பிடிச்சி நல்லா வளர்ந்திட்டு இருக்காங்க” 

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வாசுகி வந்துவிட நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. 

___________

தமிழ்மாறன்  தொலைபேசி ஒலிர  “த்தான் போன்” என கத்திவிட்டு பின்னலிட்டுக் கொண்டிருந்தாள்  சாதனா. 

அவள் துப்பட்டாவை எடுத்து பின் செய்ய மீண்டும் அதிர்ந்தது அது. தமிழ் அங்கிருப்பதற்கான அறிகுறியே இல்லாததால் அவளே அதை ஏற்க எதிர்முனையில் இனிமையான குரலில் ஒரு பெண் பேசினாள். அவள்  ஹிந்தியில் பேச  சாதனா ஒன்றும் புரியாமல் ‘தெரியம எடுத்திட்டுமோ?’ என மனதில் புலம்ப அப்பெண் ஆங்கிலத்தில் பேசினாள். 

“இஸ் தட்  ஸ்பீகிங் இஸ் மாறன்? ” 

“தமிழ்மாறன்  நாட் ஐம்  ஹிஸ் மிசஸ்” என தட்டுத் தடுமாறி அவள் பேசும் போதே தமிழ் வந்துவிட  அவசரமாக அவன் கையில் தினித்தாள் போனை. 

“யாரு சது? ” என்றவன் போனை பார்க்க அவன் முகம் பிரகாசித்தது. 

“ஹெய் சீமா” என அவன் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேச ஆரம்பித்துவிட வாயை திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் சாதனா. 

எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தவன் தன்னையே பார்த்த சாதனவை பார்த்துவிட்டு மணியை பார்க்க நேரமாகியும் அவள் கிளம்பாமல் இருப்தை கண்டு போனை வைத்துவிட்டு அவளை கிளப்பிக்கொண்டு கீழே இறங்கினான். 

“யாரு த்தான் போன்ல! உங்க பிரண்டா? ” என கேட்க “ஆமாம்” என்ற தலையசைப்பே அது அவளுக்கும் பழகியும் விட அமைதியாகிவிட்டாள். 

அவன் அப்படிதான் இருவருக்கும் தனிமையான அறையில் மட்டுமே கொஞ்சல் கெஞ்சல்  அறையை விட்டு வந்தால் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான் அது அவளாக இருந்தாலும் சரி. அவன் தான் இப்படி என்றால் ரம்யா அவனுக்கு சளைக்காதவளாக இருந்தாள் தேவைக்கு மட்டுமே பேசுவாள் சாதனாவிடம் கொஞ்சம் தாராளம் அவ்வளவே.

திருமணம் முடிந்து இரண்டு மாதம் கடந்திருந்தது. தமிழ்மாறன் சாதனா வீட்டிற்கு வந்து நாட்கள் ஓடினாலும் அவனிடம் ஒரு ஒட்டா தன்மை அதை சாதனாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவன் அமைதி குணம் என நினைத்து மிக சந்தோஷமாக வாழ்கையை வாழ்ந்துக்கொண்டிருந்தாள். 

சற்று கவனித்திருந்தாள் அவளுக்கே தெரிந்திருக்கும். சுந்தரமூர்த்தி எதை நினைத்து அவளுக்கு வீட்டோடு மாப்பிள்ளை பார்த்தாரோ அது சரி என்பதுபோல் தான் அவளும் இருந்தாள். கல்லூரி செல்லும் பெண்ணுக்கான மனநிலை தானே அவளுக்கு இருக்கும். 

எல்லாவற்றையும் சாதரணமாக எடுத்துக்கொண்டாள். ஆராய்ந்து பார்க்க அவளுக்கு நேரமும் இல்லை அதுக்கான தேவையும் அமையவில்லை. 

தேவைகள் ஏற்படும்போது தான் தேடல்கள் ஆரம்பிக்கின்றன

அவளின் தேவை தமிழ்மாறன் என்றால் அவளுடைய தேடலும் அவனை நோக்கியே. 

சாதனா சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது தான் வந்தமர்ந்தார் சுந்தரமூர்த்தி. 

“என்னப்பா கிளம்பியாச்சா?” என தமிழை பார்க்க

“ஆமா மாமா” என்றவன் அமைதியாகிவிட்டான். 

“சாப்பிடுங்க தமிழ்” என்றவர் “ரம்யா அண்ணனுக்கு சாப்பாடு எடுத்துவை மா” என்க  அவருக்கு மட்டும் சாப்பாடு வைத்துவிட்டு நகர்ந்தவளை கேள்வியாக பார்த்தார் அவர். 

“என்ன மா? ” 

“அண்ணன் சாப்பிட்டுச்சி மாமா” என உள்ளே சென்றுவிட்டாள் ரம்யா. அப்போது தான் அங்கே வந்த சுரேஷ் காதில் அது விழுக தமிழை கேவலமாக பார்த்துக்கொண்டே வந்தான். 

‘ஊருக்கு முன்ன கொட்டிகிட்டான் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாதவன்’ என மனதில் நினைத்தவன் சத்தம் வர நாற்காலியை இழுத்து போட நிமிர்ந்து பார்த்தான் தமிழ்மாறன். 

“பரவாயில்லை ரம்யா உங்க அண்ணனுக்கும் சாப்பாடுவை என் கூட திரும்ப சாப்பிடட்டும் அப்போவே சாப்பிட்ருப்பார் செரிச்சிருக்கும்”  அவன் நக்கல் குரல் ரம்யாவுக்கு புரிய கண்கள் கலங்கியது.

அவன் தட்டில் பத்து தோசையை போட்டவள் 

“தமிழுக்கு ஹெல்த் கான்சியஸ் அதிகம் அளந்து தான் சாப்பிடும்” என்றவள் அவனையும் தட்டையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல பல்லை கடித்தான் அவன். 

சாதனாவும் அவன் சாப்பிட்டுவிட்டான் என நினைத்து அவள் உண்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.   தமிழ் முகம் இறுக்கத்தில் இருக்க மனைவிக்காக வாசலில் சென்று அமர்ந்துக்கொண்டான். 

இரு மாதத்திலேயே சுரேஷின் குத்தல் பேச்சில் அண்ணன் தங்கை இருவருமே நன்றாக காயப்பட்டுவிட்டனர். தமிழ்கூட காலையில் சாதனாவுடன் செல்பவன் மீண்டும் இரவு  தூங்க தான் வருவான். ஆனால் ரம்யா பாடுதான் தின்டாட்டமாக இருந்தது. சுரேஷின் சிறு செய்கை கூட தமிழ்மீதான வெறுப்பை காட்டியது. 

இரவில் படுக்கையில் கூட அவளை வார்த்தையால் வதைத்துவிட்டு தான் விடுவான். அவளால் அவன் நெருங்கும் சமையம் மறுக்கவும் முடியவில்லை அதற்கும் அவளை தேளாக கொட்டுவான்.