அத்தியாயம் 8

அத்தியாயம் 8

அவள் மொத்த சக்தியையும் பறித்துக்கொண்டவன் உறங்கி விட காதல் கைசேர்ந்த நிறைவுடன் அவன் நெஞ்சில் கிடந்தாள் சாதனா. 

தூக்கம் வராது தலையை தூக்கி பார்த்தவளுக்கு அவ்வறையை கண்டு வெட்கம் பிடிங்கியது. தூரமாக கிடந்த புடவையை எடுக்க நினைக்க அவளை அழுத்தி கையணைப்பில் வைத்திருந்தான் தமிழ்மாறன். அவன் எழுந்துவிட்டாள் அவனை எதிர்கொள்ள வெட்கப்பட்டு அப்படியே அசையாது இருந்தாள். 

வெளியே மழை அடித்து ஊற்றவும் இவளுக்கு அவஸ்தை அதிகமாகியது வேறு வழியின்றி அவனையே தொட்டு அசைக்க வேகமாக எழுந்து அமர்ந்தாவன்

“என்னடி? என்னாச்சு?” என்றவாறு அவள் நெழிவதை பார்த்து 

“நீ ஓகே தானே? ஏதாச்சும் பண்ணுதா சது? ” எனவும் அவள் முகம் குப்பென்று சிவக்க அதற்குள் அவன் பதறி

“சொல்லு என்ன பண்ணுது?” என விளக்கை போட்டான். 

“ரெஸ்ட் ரூம் போகணும்” என்றவள் தரையை பார்க்கவும் எழுந்து அவளுக்கு கை கொடுத்தான். 

“இப்படியே எப்படி வருவேன்?” அவள் சிணுங்க  “ப்ச் ஆமால இரு வரேன்” என்றவன் உள்ளிருந்து ஒரு டீசர்ட்டை எடுத்து தர திரும்பி நின்று போட்டாள் அவள். 

“இது கொஞ்சம் ஓவர்டி சது” என்றவன் வெளியில் விளக்கை போட அவன் பின்னே சென்றாள். 

அவள் திரும்பி வரும் போது சமையல் அறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தான். 

“என்ன செய்றீங்க இங்க?” என வந்தவளை தூக்கி அங்கிருந்த திண்டில் அமரவைத்தவன்  ராகி கிச்சடி செய்து சக்கரை போட்டு சூடாக எடுத்து வந்தான். 

“இப்போ எதுக்கு அத்தான் இது?” என்றவளுக்கு வயிற்றுக்குள் சத்தம் கேட்க உணவைப் பார்த்ததும் பசி வந்தது. 

“சும்மா தான். நான் காலேஜ் படிச்ச டைம்ல நைட் இப்படி ஏதாச்சும் சாப்பிடுவோம். மிட்நைட்ல சூடா  அதுவும் மழை கூட” என்றவன் உண்ண ஆரம்பிக்க பாவமாக அவனை பார்த்தாள் அவள்.  

அதை கண்டு சிரித்தவன் அவளுக்கு ஒரு வாய் ஊட்ட அதன் சுவையில் நன்றாக சாப்பிட்டு முடித்தாள் சாதனா. உடம்பில் கொஞ்சம் தெம்பு வந்ததுபோல் இருந்தது. 

“நல்லாருக்கு த்தான் செம டயர்ட் இப்போ தான் தெம்பா இருக்கு” 

“வேலை செஞ்சது நான் உனக்கு டயர்டா” என அவன் கண்ணடிக்க அவனை கிள்ளினாள் . 

“போதுமா உனக்கு?” என சிரித்தவாறு எல்லா வற்றையும் கழுவி வைத்த தமிழ்மாறன்

“தூக்கம் வந்தா தூங்கு சாதனா” என  மடிக்கணினியை எடுக்க அவனை பின்னிருந்து அணைத்தாள் அவள். 

“என்னை விட மாட்டியாடி நீ” அவன் சிரிக்க  அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள்

“என்ன பண்ண பேறிங்க? இன்னைக்கு இதை எடுக்கனுமா?” அவள் கொஞ்சல் மொழியில் அவளை ஒற்றை கையால் இழுத்து கன்னத்தை வலிக்க கடித்தவன்

“போய் தூங்கு  ஒரு சின்ன வேலை” என தரையில் அமர அவன் மடியில் அமர்ந்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்து முகத்தை அவன் கழுத்தில்  புதைத்துக்கொண்டாள். 

“ப்ச் என்ன சாதனா? வேலை இருக்கு சொன்னேன்ல? ” 

“வேலை மட்டுமா இருக்கும்? நானும் தான் இருக்கேன்” 

“நல்லா வாய் சேற நீ” 

“அது இப்போ தான் உங்களுக்கு தெரியுமா? “

“ம்ஹூம் அன்னைக்கே தெரியும் மீட்டிங் பாயிண்ட்ல பேசுனியே ஹாஹாஹா என்னை பாத்தாலே எப்போதும் பயந்து ஓடுறவ என்ன பேச்சி பேசின நீ கேடி” என்றவன் மடிக்கணினியில் ஆழ்ந்துவிட சாதனா நினைவெல்லாம் தமிழ்மாறன் சொன்ன அன்றையத்தினமே. 

“தவறாக நினைத்துவிட்டான்” என எண்ணி  அவள் அழுத அழுகையை ஒன்றுமேயில்லாது ஆகிவிட்டதே அன்று அவன் பேச்சு. 

சுந்தரமூர்த்தி திருமணம் என்றதும் மறுக்க வாய் திறந்தவள் அது மாறன் என்றதும் மௌனமாகி விட்டாள். “நடக்காது” என விரக்தியோடு நினைத்தவள் படுக்கையில் தஞ்சமாகிவிட இரு தினங்கள் சென்று தமிழ்மாறன் அழைப்பதாக போனை தந்துவிட்டு சென்றான் சதிஷ். 

அவளுக்கு என்ன செய்வது? என தெரியாமல் போனை எடுத்து காதில் வைத்தவள் “ஹ… ஹலோ” என்க சிறு அமைதிக்கு பின் “சாதனா” என்றான் அவன். 

முதல் முறையாக தன்னவன் வாய் வழி தன் பெயர் உச்சரிக்கப்படுகிறது  பூரித்துபோனாள் அவள் உடல் சிலிர்த்தடங்கிடயது. 

“சொல்லுங்க…?” அவள் தீனமான குரலில் அவள் மனநிலை அவனுக்கு  புரிந்தது. 

“உன்கிட்ட பேசனும் ஈவினிங் மீட்டிங் பாயிண்ட் வர முடியுமா?” என்றவனுக்கு “சரி” என சொல்லியவள் அலுத்துக்கொண்டு தான் சென்றாள்.

“எப்படியும் வேண்டாம்னு தானே மாறா சொல்ல போற” என நினைத்து சென்றவள் அவன் பேச பேச அழுதேவிட்டாள். 

தன் எதிரே அமர்ந்திருந்த சாதனாவை பார்த்தவன்  அவளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுக்க உண்ணாது அமர்ந்திருந்தாள் அவள். 

“சாப்பிடு சாதனா” 

“பேசனும்னு சொன்னிங்க?” என்றவள் அவனை பார்த்தாள். 

“நமக்கு கல்யாணம் பேசுறாங்க தெரியுமா?” 

“தெரியும் அப்பா சொன்னாங்க” 

“என்னை வீட்டோட மாப்பிள்ளையா கேட்டிருந்தார் அது தெரியுமா?” எனவும் இல்லை என தலையாட்டினாள் அவள். 

“லுக் சாதனா எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டம் இல்லை” அவன் போட்டு உடைக்க அவள் இதயம் இரத்தம் வடித்தது. அவள் முகத்தில் படிந்த ஏக்கத்தில் தடுமாறி நின்றான் தமிழ்மாறன். 

‘என்ன மாதிரி பார்வை அது?  காதலில் தோற்று வாழ்கையே இழந்தது போல்’ நினைக்கும் போதே அவன் மனம் திடுக்கிட்டது. 

‘அப்படியா?’ என தோன்ற அவள் முகத்தை பார்த்தான் உயிரற்ற கண்கள் கண்ணீர் நடுவே மிதந்துக்கொண்டு “ஆமாம்” என்றன. 

தன்னை சாதரணமாக வைத்துகொள்ள சாதனா சிரமப்பட புருவத்தை அழுத்தியவாறு அவளை ஆராய்ந்தான். கருத்து இளைத்திருந்தாள் அவள். 

‘ஒருவேளை இவ தான் அவங்க அப்பாவ பேச சொல்லியிருப்பாலோ?’ என்ற யோசனைகள் ஓடியது. 

வாசுகியிடம் எத்தனையோ பேசிவிட்டான் அவர் தன் முடிவில்  திடமாக நிற்க ரம்யாவும் மறுத்து பார்த்தாள்  எதற்கும் வாசுகி அசையவில்லை அதைவிட சுந்தரமூர்த்தியும் சேகரும் அவரை அத்தனை மூளைச்சலவை செய்துக்கொண்டிருந்தனர். அதானல் அப்படி ஒரு பிடிவாதம் இறுதியில் “அம்மாக்காக” என தமிழ்தான் இறங்கிவந்தான். 

என்னதான் தாயிடம் சம்மதித்து இருந்தாலும் துணைவியாக வரப்போறவளிடம் தன் மனநிலையை தெரியப்படுத்த நினைத்தான். 

தற்போது அவனுக்கு இத்திரும்ணம் நிற்க வேண்டும் அதை மறையாது அவளிடம் சொல்லியப்பின்னும் நிம்மதியில்லை அதற்கு முழு காரணம் அவள் முகம். கசங்கி கலங்கியிருந்த அவள் முகம் அவனை  ஏதோ செய்தது. 

“என்ன உனக்கு எப்போலேந்து தெரியும்?” சம்பந்தமே இல்லாமல் அவன் கேட்க விழித்தவள் 

“தெரியலை ஆனா உங்கள தெரியும்” என்றாள். 

“ப்ச் அதை கேட்கலை என்னை பத்தி ஏதாச்சும் தெரியுமா? “

“ம்ம் கொஞ்சமா தெரியும். மார்னிங் எங்க தெரு வழியா வாக் போவிங்க கூடவே ஒரு நாயும் வரும். தினைக்கும் சாயங்காலம் அங்க கடைல நியூஸ் பேப்பரை படிப்பிங்க அப்பறம் யாரையும் சைட் அடிக்க மாட்டீங்க சிகரட் ஸ்மெல் உங்களுக்கு அலர்ஜி. அயன் பண்ணாத டிரஸ் போட்டு பார்த்தது இல்லை. குப்பையை குப்பை தொட்டில தான் போடுவிங்க. யார்கிட்டையும் பேச அவ்வளவா பிடிக்காது. ஜோக் சொன்னா கூட லைட்டா தான் சிரிப்பிங்க நீங்க மேக்ஸ் டியூசன் டிச்சர்” அவள் அடுக்க  அவனுக்கே ஆச்சரியம். 

“இதெல்லாம் எப்ப நோட் பண்ண? “

“சின்ன வயசுலேந்து உங்கள பாத்திருக்கேன். வாசு அத்த பையனு தெரியும்”

“ஓஓ சரி… நான் ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனு கேட்கலை நீ?”

“வேண்டாம்னு சொல்லிட்டிங்களே அதான் அப்பறம்… அப்பறம்…” என அவள் தயங்க 

“அப்பறம்?” எடுத்துக்கொடுத்தான் அவன். 

“எனக்கு தான் காரணம் தெரியுமே” என்றவளை முறைத்தான். அவள் எதை சொல்ல வருகிறாள் என்பதை கண்டுக்கொண்டான். 

“சிவா சொன்னது நான் நம்பலை சாதனா. உன்ன அந்த மாதிரியான பொண்ணா நான் நினைக்கல அதை நினைச்சி இந்த கல்யாணத்தை நான் மறுக்கலை. உனக்கு மட்டுமில்ல எனக்கும் உன்ன சின்ன வயசிலேந்து தெரியும்” என அவளுக்கு இன்ப அதிர்ச்சி தந்தவனை கடவுளை போல் பார்த்தாள் அவள். கண்ணைவிட்டு கண்ணீர் உருண்டோடி துப்பட்டாவில் மறைந்தன. 

எத்தனையோ நபர்கள் நண்பர்கள் என அவளை சமாதானம் செய்ய சொல்லிய அதே வார்த்தயைதான் சொன்னான் அவனும் ஆனால் அது தமிழ்மாறன் வாயால் கேட்ட பிறகே ஜீவன் திரும்பியது அவள் முகத்தில். 

“நம்பலை யா…? நிஜமா வா? சமாதானத்துக்கா சொல்லலையே?” மூக்கை இழுந்து கொண்ட கண்ணீரோடு அவள்  திரும்பி கேட்க அவனுக்கு அவள் மேல் இரக்கம் சுரந்தது  ஆதுரமாக சிரித்தவன்

“ச்ச பாவும் இந்த சிவா பொறுக்கியால இவ ரொம்பவும் கஷ்டபட்டுட்டா போல” என நினைத்தான். 

“ஏன் உங்களுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்றவளை பார்க்க தெளிந்திருந்தாள் அவள். 

“வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு விருப்பம் இல்லை சாதனா”

“அதுதான் உங்க பிரச்சனைனா ரொம்ப சிம்பிள் எனக்கும் வீட்டோட மாப்பிள்ளை பிடிக்கலை  ஆனா அப்பா தான் பிடிவாதமா இருக்கார்”

“நீ வீட்டுல சொல்லலையா? “

“சொல்லிட்டேன் கேட்கலை ஆனா எப்படியும் என் ஹஸ்பண்டை கொடுமை பண்ணி வீட்டவிட்டே துரத்திட்டு நானும் பின்னடியே ஓடிரலாம்னு தான் இருந்தேன்” அவள் துடுக்குத்தனம் வெளியே எட்டிப்பார்க்க சிரிப்பாக வந்தது அவனுக்கு. 

“அப்பறம்…” அவளிடம் பேச ஏனோ தமிழுக்கு ஆர்வமாகியது. 

“இன்னும் நிறைய பிளான் எ,பி,சி னு. ஆல்ரெடி பிளான் எ அவுட் பிளான் பி தான் உங்க கிட்ட சொன்னேன்”

“அப்போ சி? “

“சி சீக்ரெட்” எனவும் வாய்க்குள்   சிரித்தான் அவன். 

“நீங்க என்ன கல்யாணம் பண்ணிகிட்டாலும் என்ன வெளியே அழைச்சிட்டு வந்திடுங்கனு தான் கேட்டிருந்திருப்பேன் சோ வேற ரீசன்?”

“என்கிட்ட வேலை இல்லை சாதனா”

“நீங்க நல்லா படிச்சவங்க கண்டிப்பா சீக்கிரம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்” 

“கிடைக்கும் ஆனா நான் காத்திருக்கிறது வேற விஷியத்துக்காக” என்றவனை பார்த்தவள் தீவிரமாக யோசித்தாள் அவளை பார்க்க சுவாரசியமாக இருக்கவும் தமிழ் அவளையே பார்த்திருந்தான். 

“உங்க மனைவி உங்களுக்கு கீழ் னு ஈகோ பாப்பிங்கலா?” திடிரென்று அவள் கேட்க இல்லையென தலையாட்டினான் அவன். 

“நீங்க நினைச்ச வேலை கிடைக்கிற வரை என் பேர்ல இருக்க நகை கடையை  நீங்க பாத்துக்கோங்க” எனவும் மறுப்பாக தலையாட்டினான் அவன். 

“அது சரிவராது சாதனா” என்றவனை கவலையோடு பார்த்தவள் தயங்கி தயக்கி சொன்னாள். 

“எனக்கு உங்களை பிடிக்கும் ரொம்ப… ரொம்ப… சிவா பிரச்சினை பண்ண அன்னைக்கு தான் உங்கள எவ்வளவு பிடிக்கும்னு… இல்லை எவ்வளவு லவ் பண்றேனு தெரிஞ்சது”  என்றுவிட்டு அவனை பார்க்க அதை எதிர்பார்த்தவன் போல் அமர்ந்திருந்தான் தமிழ்மாறன். 

“நீ உன்னை மட்டும் நினைக்கிற சாதனா” சுயநலம் என சொல்லாமல் சொன்னான். 

“உங்களை மட்டுமே நினைக்கிறேன் நான்” தலைகுணிந்து சொன்னவளை திட்ட அவனுக்கு மனதே வரவில்லை. 

“புரிஞ்சிக்க சாதனா” கனிவாக சொன்னான். 

“அத்தைக்கும் அப்பாக்கும் நடந்த சண்டை தான் காரணமா?” 

“அப்படியில்லை சாதனா ஒருத்தவங்க உதவி செய்யலைனு  கோச்சிக்கவும் திட்டவும் யாருக்கும் உரிமை கிடையாது. அது அவங்க அவங்க விருப்பம் அண்ட் உன் அப்பா எங்கள ஏமாத்தி எதையும் பண்ணலை உன் அம்மாக்கு பிடிக்கலை அதனால எங்களை விலகி விலக்கிட்டார் எங்க அம்மாக்கு அது கஷ்டமா இருந்தாலும் எங்களுக்கு அதை பத்தின நினைப்பே இல்லை. உன் அப்பாவே கொடுத்திருந்தாலும் எங்க அம்மாப்பா அதை திருப்பி கொடுத்திருப்பாங்க. அதையெல்லாம் நினைச்சு பகையை வளர்க்க எங்களுக்கு நேரம் கிடையாது” அவன் முகத்தில் துளிகூட கோபமில்லை. 

“உண்மையான காரணம் எனக்கான கடமை நிறைய இருக்குமா அதான்”

“அப்போ இந்த கடமை எல்லாம் கொஞ்ச நேரம் தள்ளிவச்சிட்டு சொல்லுங்க என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?” மிட்டாய் கேட்டு அழும் சிறுமியாக அவள் கேட்க பிடிக்கலை என சொல்ல மனம் வருமா?  அவனே அறியாமல் “பிடிச்சிருக்கு” என ரசனையுடன் சொல்லியிருந்தான். அவள் முகத்தில் பரவிய வெளிச்சத்தில் சரியான பதில் செல்லியது போல் தோன்றியது அவனுக்கு. 

“தேங்கஸ்” என்றவள்

“சப்போஸ் நீங்க வேலைக்கு போய் கல்யாணம் செஞ்சிட்டு அப்பறம் உங்களுக்கு வேலையில்லாம ஆகிட்ட உங்க மனைவி காசுல வாழ முடியாதுனு அவங்களை விட்டுட்டு போய்டுவிங்களா?” எனவும் ஆச்சரியமாக அவளை பார்த்துவிட்டு

“நீ சின்ன பொண்ணுனு நினைச்சேன்” என்றவன் “என் மனைவி காசுல வாழ அவமானமா நினைக்கலை நான். ஆனா எனக்கான ரெஸ்பான்சிபிலிட்டிஸ் நிறைய இருக்கு என் முன்னேற்றத்துக்கு கமிட்மெண்ட்ஸ் சரிவராது சாதனா. அதான் முக்கிய காரனம் அண்ட் நான் வீட்டோட மாப்பிள்ளையா வந்தா நீ எதிர்பாராத பிரச்சனை வர வாய்பிருக்கு அது நம்ம லைப்ல பிரதிபலிச்சா வாழ்க்கையே நாசமாகிடும்” பொறுமையாக எடுத்து சொன்னான் அவன். 

“எல்லாமே உன் விருப்பம் தான் சாதனா. இந்த கல்யாணம் நடக்கிறதும் நடக்காததும் உன் இஷ்டம்”

“உங்க ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இனி என் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் உங்களுக்கு என்னைக்கும் தடையா நான் இருக்கவே மாட்டேன். நீங்க உங்களுக்கு விருப்பம் போல இருக்கலாம். எந்த பிரச்சனை வந்தாலும் உங்களை இழுக்காம நானே சால்வ் பண்ணிப்பேன் ப்ளீஸ். இது தான் உங்க பிரச்சனைனா? நீங்க உங்க கணவை அச்சீவ் பண்றவரை நான் உங்கள தொல்லை செய்ய மாட்டேன்” அவள் பேச்சு கெஞ்சலில் இருந்தது. தமிழ்மாறனுக்கு தான் “ஐயோ” என்றானது. 

“என்னிடம் போய் கெஞ்சிகிறாளே” என்றது மனம். 

“பேரழகி செல்வச் சீமாட்டி செல்ல தங்கை அனைவருக்கும் பிடிக்கும் குறும்புகாரி அவள் பேச்சே சொல்லியதே அறிவாளி பெண் பிறகு என்னிடம் ஏன் கெஞ்சிகிறாள்” என அவன் மனம் கேள்வி கேட்க  அவள் கண்கள் அந்த பதிலை சொன்னது “காதல்” என்று. 

“எதுக்காக சாதனா இப்படி? நான் உன் அளவு இல்லை என்னைவிட நீ எங்கையோ இருக்க” 

“உங்களுக்கு பிடிக்கலனா அதெல்லாம் விட்டுவிட்டு கூட நான் வருவேன்” 

“நான் உனக்கு என்ன செஞ்சேன்? என்கிட்ட என்ன இருக்கு? உன் வயசுக்கு எல்லாம் சாதாரணமா தெரியும் அப்பறம் ரீயலைஸ் பண்ணும் போது தான் தப்பே புரியும்” அவன் கோபம் கொள்ள எதிர்காலத்தை நினைத்த தவிப்பு தெரிந்தது. 

“எதையோ எதிர்பார்த்து பண்றது கால்குலேசன் ஏன்னு தெரியாம வரது தான் லவ் இந்த அளவுக்கு நான் தெளிவானதே உங்கள காதலிக்க ஆரம்பிச்சதில் இருந்து தான்.  என்ன தப்புன்னு தெரியலை அன்னைக்கு நீங்க கடையில பாத்தீங்களே கடைசியா…. அந்த பார்வைக்கான அர்த்தம் சிவா சென்னதை நீங்க நம்பிட்டிங்கனு நினைச்சு நான் அழுகாத நாளே இல்லை. அப்படியே அருவெருப்பா இருந்துச்சி செத்துடுனு மனசு சொல்ல அதுக்கு கூட செய்ய தெம்பு இல்லாம வீட்டுகுள்ளே அடைஞ்சி கிடந்ததேன். ஏன் தெரியுமா….? நீங்க தான்…. என்ன பாக்கும் போதெல்லாம் திரும்ப என்ன அப்படி நினைச்சிருவீங்களோன்ற ரீசன்” என அவள் விம்ம வாயடைத்துபோனான். 

உள்ளே ஏதோ செய்ய தொண்டையடைத்து அவனுக்கு. 

‘இப்பெண் என்னை இத்தனை விரும்பினாளா?’ என நினைக்க உள்ளே ஏதோ பிறழ்ந்தது

“ஏய் தண்ணி குடி” அவன் கிளாஸை நீட்ட வாங்கி குடித்தாள். 

“சரி டைம் ஆச்சு நீ கிளம்பு” எனவும் அவன் முகம் பார்த்தாள் அவள். 

“அதான் அழுதே சாதிச்சிட்டியே பட் நீ கொடுத்த வாக்கை காபாத்தனும் அப்பறம் இனிமே கண்ட ரீசன் சொல்லி காலேஜ் போகமல் இருக்க கூடாது” என்க தலையாட்டிவிட்டு அவள் செல்ல அவள் கைக்குட்டை டேபிளில் மறந்துவிட்டு சென்றிருந்தாள். அதை எடுத்து சட்டை பையில் வைத்துக்கொண்டான். 

நாட்கள் ஓட சிறுது சிறுதாக அவனே அறியாமல் அவள் மேல் உரிமை உணர்வு எழுந்து சாதனா தன்னுடையவள் தன் மனைவி என்ற எண்ணம் உருவாகியது. பெரிதாக அவளை பார்க்கா விட்டாலும் தினமும் ஒரு குட் நைட் குட் மார்னிங் இருவருக்கும் இடையே இருக்கும்.

அவளிடம் தாராளமாக பழக  கடமை அவனை விடவில்லை என்றாலும் மனதில் அவள் மேல் காதல் முலைவிட்டதை எதாலும் தடுக்க முடியவில்லை. அவன் முழுதாக சாதனா தன்னவள் என நினைத்த நேரத்தில் தான் சிவா தமிழை மிரட்டி அடிவாங்கியிருந்தான். 

யோசனையில் இருந்து வெளிவந்த தமிழ்மாறன் மடிக்கணினியை பார்க்க திறந்து வைத்துக்கொண்டு அவன் கனவு கண்டதில்  திரை அணைந்திருந்தது.  மடியில் சாதனா நன்றாக உறங்க வேறு வழியின்றி அதை மூடி வைத்தவன் அவளை எழுப்பி தானும் உள்ளே சென்று படுத்துக்கொண்டான்.