அத்தியாயம் – 7

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 7

பெங்களூர் வந்த வேணி தன் இருப்பிடம் செல்ல… அவளைக் கட்டித்தழுவி வரவேற்றாள் அவளின் தோழி சிநேகா.

“வெல் கம் பேக் க்ரிஷ் டார்லிங்… ” என்ற சிநேகாவை சிநேக புன்னகையுடன் பார்த்த க்ரிஷ்…

“அப்புறம் நான் இல்லாத இந்த ஒரு வாரத்தில் என்னென்ன நடந்துச்சு ? ” என்று கேட்க,

“என்ன நடந்துச்சு… காலேஜ் போரிங்கா போச்சு… கீழ் வீட்டில் இருக்கற பப்பி வேற ஒரு டாக்கோட ஓடிப்போச்சு… நமக்கு எதிர் வீட்டில் இருக்கற அந்த அண்ணாவுக்குப் பொண்ணு கிடைச்சு போச்சு… நம்ம ப்ரோபசர் கண்ணாடி உடைச்சு போச்சு… ” என்று கிண்டலாகப் பேசியவளை முறுவலுடன் பார்த்த கிருஷ்ணவேணி என்கிற க்ரிஷ்… தான் கொண்டு வந்திருந்த உடைமைகளை எடுத்து வைத்துவிட்டுக் குளியலறை உள்ளே நுழைந்தாள்.

சிநேகா தன் பேச்சை தொடர்ந்த படியே இருக்க… குளியலறையில் ரெப்ரெஷ் செய்த படியே அவள் கூறுவதை ‘ம்’ கொட்டி கேட்டாள் க்ரிஷ்.

“க்ரிஷ்… என் மாமா பையன் போன் பண்ணியிருந்தான் டி. “

“என்ன விசயம் ? கல்யாணமா ? “

“அடிப்போடி… எங்க வீட்டில் நாங்க எதையாவது சாதிச்சா தான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க. “

“வேற என்ன ? “

“க்ரிஷ்… என் மாமா பையன் புருஷும் (புருஷோத்தமன்) அவனோட பிரண்ட் மாறனும் ஆரம்பிச்சிருக்கற விளம்பர படங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு ஒரு புது ப்ராஜெக்ட் எடுக்கப் போறாங்களாம். அதுக்கு நம்மைக் காஸ்டியூம் டிசைன் பண்ணித் தர முடியுமான்னு கேட்டான். நான், நீ ஊருக்கு போயிருக்க… வந்ததும் கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன். “

“காஸ்டியூமா ? நாமளா ? சிநேக்… நம்ம இன்னும் டிகிரி கம்ப்ளீட் பண்ணல… ஒன்னும் இரண்டு செமஸ்டர் இருக்கே. “

“அது அவனுக்குத் தெரியும் க்ரிஷ். அவங்களும் புதுசா தானே தொடங்கி இருக்காங்க. அதிகச் செலவு பண்ணி காஸ்டியூமரை அரேஜ் பண்றது அவங்களுக்கும் சிரமமா இருக்கும் இல்லையா ? “

“ஆனா… நாம ஏதாவது சொதப்பிட்டா… அவங்க லைஃபே ஸ்பாயில் ஆகிடும். ” என்று கூறிய படியே குளியலறை உள்ளே இருந்து வெளி வந்தாள் க்ரிஷ்.

“க்ரிஷ்… நீயா இப்படிப் பேசற… நீ காலேஜ் டாப்பர்… உன்னோட பைனல் ரேம்ப் மட்டும் நடந்து முடிஞ்சா… பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் நான் நீன்னு போட்டி போட்டு ஆஃபர் தருவாங்க. “

“… “

“ஒருவேளை அதனால தான் உனக்கு இந்தச் சின்னக் கம்பெனிக்கு வேலை செய்ய இஷ்டமில்லையா ? “

“லூசா நீ ? என்னைப் பார்த்து இப்படிக் கேட்க உனக்கு எப்படி மனசு வந்தது சிநேக். ” என்றவள் கோபத்தோடு பூத்துவலை துண்டை படுக்கை மேல் வீசி விட்டு பால்கனி செல்ல… அவளை முறுவலுடன் தொடர்ந்தாள் சிநேகா.

“சும்மா விளையாடினேன் க்ரிஷ்… இதுக்குப் போய்க் கோச்சிக்கிட்டியே… ” என்ற சிநேகா அவளின் தாடையைப் பிடித்துத் தன் முகம் பார்க்கும் படி திரும்பினாள்.

“போ… பேசாதே… ” என்ற க்ரிஷ் அவளின் கையைத் தட்டிவிட,

“அப்புறம்… உன்னை நீயே குறைவா சொன்னா எனக்கு மட்டும் கோபம் வராதா ? அதான் அப்படிச் சொன்னேன். “

“…”

“க்ரிஷ்… உன்னால முடியும். நாம இப்ப அவங்களுக்கு உதவி செஞ்சா… அவங்க வளரும் போது நாமும் அவங்களோட சேர்ந்தே வளரலாம். யோசிச்சி பாரு… நாம தனியா ஒரு பிராண்ட் உருவாக்க பண்ணற செலவை விட… அவங்க செய்யப்போற செலவில் ஒரு பங்கா நம்மோட உழைப்பை கொடுத்தா… எப்படி இருக்கும். “

“நீ சொல்றது எனக்குப் புரியுது சிநேக்… ஆனா இப்ப நான் இருக்கற நிலைமையில் என்னால என்ன பண்ண முடியும்னு யோசிக்கறேன். “

“என்ன உன் நிலைமை ? “

“தெரியாத மாதிரி கேட்கற பார்த்தியா ? “

“இல்ல புரியல… உடம்பு எதுவும் சரியில்லையா ? “

“சிநேக்… “

“…”

“எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு. அடுத்த ஸ்டெப் எப்படி இருக்கும்னு யோசிக்கக் கூட முடியல. “

“ச்சே… இதுதானா ? நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். “

“உனக்கு இது பெரிய விசயம் இல்லையா சிநேக் ? “

“க்ரிஷ்‌… கல்யாணம் முடிஞ்சிடுச்சு… வீட்டுல இருன்னு சொல்லாம உன்னைப் படிக்க அனுப்பியிருக்காங்க. அப்படின்னா என்ன அர்த்தம் ? “

“என்ன அர்த்தம் ?”

“அவங்க உன்னைக் கட்டிப்போட விரும்பல. உன் சுயத்தை இழக்க சொல்லி சொல்லலையே… அப்புறம் ஏன் பயப்படற ? “

“பயப்படல சிநேக்…. குழப்பமா இருக்கு. “

“என்ன குழப்பம் ? “

“இதுவரை நான் என் வாழ்க்கையில் எடுத்த எல்லா முடிவும் என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சி எடுத்தது தான். என் முடிவுக்கு அப்பா எப்பவும் குறுக்க நின்னதில்ல. ஆனா… இனி நான் எடுக்கப் போற எல்லா முடிவும் இன்னொருத்தரை பாதிக்காம பார்த்துக்கற பொறுப்பிருக்கு. அந்தக் குழப்பம் தான். “

“க்ரிஷ்… நீ வேலைக்குப் போக உங்க மாமா ஒத்துக்க மாட்டாருன்னு நினைக்கறியா ? “

“ம்… ஆமாம்… “

“சரி… அவர் கிட்டயே இதைப் பத்தி கேட்டுடு… “

“எப்படிக் கேட்கறது ? “

“இது என்ன கேள்வி… போன் பண்ணி கேளு… “

“அவரு நம்பர் என்கிட்ட இல்லையே… “

“ஏய்… ஒரு வாரமா நம்பர் கூடவா வாங்கல ? “

“ம்… அவரோட பேசவே முடியல. “

“பேச முடியலன்னா என்ன அர்த்தம் ? ஒரு பத்து நிமிஷம் கூடவா கிடைக்கல. “

“கிடைக்கலையே… அதுவுமில்லாம அவரோட பேச எனக்கு ஒரு சின்னப் பயமும் தயக்கமும் இருக்கு. அதான்…. “

“என்ன க்ரிஷ்… இப்படிப் பண்ணிட்ட. “

“….”

“நான் வேற நீ வந்ததும் ப்ராஜெக்ட்க்கு உதவறேன்னு சொல்லிட்டேன். அவங்களும் என் வார்த்தையை நம்பி வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப போய் நான் இதை எல்லாம் சொன்னா புருஷ் கத்துவான். மாறன் வேற செமையா டென்ஷனாவான். “

“…”

“க்ரிஷ் ஒரு ஐடியா… இப்ப நீ படிக்கத் தானே வந்திருக்க. நமக்காக அசைன்மெண்ட் பண்ணுவோம் இல்ல… அதுமாதிரி இதை நினைச்சுபோம். நம்ம படிப்பு முடியவரை அவங்களுக்கு உதவறதா சொல்லுவோம்… அப்புறம் உன் சூழ்நிலை எப்படி இருக்குன்னு பார்த்திட்டு அங்க கன்ட்டினியூ பண்றதா வேண்டாமான்னு யோசிப்போம். ஓகே வா ?”

சற்றே யோசித்த க்ரிஷ்… “நீ சொல்றது சரிதான். அப்படியே செய்வோம். இன்னும் எட்டு மாசத்துக்கு மேல இருக்கு… அதுவரை அவங்களுக்கு உதவுவோம்… நாமளும் அப்படியே நுணுக்கங்களைக் கத்துக்கலாம். அதுக்கு அப்புறம் நடக்கறதை அப்ப பார்த்துப்போம். “

“…”

“அப்பா சொன்னதை யோசிச்சு பார்த்தா யாரும் என் கனவுக்குக் குறுக்க நிக்க மாட்டாங்கன்னு தான் தோணுது. ஆனாலும்… அதை மணி மாமாவோட பேசி தெளிவா தெரிஞ்சிக்கிட்டிருந்தா நான் குழப்பமில்லாம இருந்திருப்பேன். அது நடக்கல… அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. “

“மணி மாமாவா ? “

“ம்… அது தான் அவரு பேரு… “

“என்னடி பேரே ரொம்பப் பழசா இருக்கு. ஆளும் பார்க்க‌ வயசானவரு மாதிரி தான் இருப்பாரா ? தாய்மாமான்னு வேற சொல்ற ? “

“அவருக்குச் சின்ன வயசு தான். ஐ மீன் என்ன விட ஒரு ஆறு ஏழு வயசு பெரியவரா இருப்பாரு. அவ்வளவுதான் “

“அப்ப என் புருஷ் வயசுதானா ? பரவாயில்லை நான் கூட மாமானதும் கொஞ்சம் பயந்துட்டேன். ” என்றவள்… “படிச்சிருக்காரா ? “

“தெரியாது சிநேக்… நான் ஊருக்கு போகும் போது பார்ப்பேன்… எங்க தோட்டத்து வேலையில் ரொம்பப் பிஸியா இருப்பாரு. வேலை ஆளுங்க எல்லாம் இவரைப் பார்த்தா பம்முவாங்க. வரவு செலவு கணக்கு எல்லாம் விரல் நுணியில் வெச்சிருப்பாரு. “

“அப்ப பக்கா கிராமத்து ஆள் தான். “

“ம்… அப்படித் தான் தோணுது. எங்க அப்பாவுக்கு அடுத்த இடத்தில் இவரு இருக்கறதால தான் அப்பா என்னை அவருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்காரோன்னு தோணுது. ஏன்னா சித்தி பசங்க… அதான் என்னோட தம்பி தங்கச்சியைத் தாய்மாமாங்கற முறையில் நல்லா பார்த்துப்பாரு… கூடவே இலவச இணைப்பா நானும் இருந்தேன்னா… என்னைச் சித்தி எப்பவும் ஒதுக்க முடியாதுன்னு நினைச்சு இப்படிப் பண்ணிட்டாருன்னு நினைக்கறேன். “

“…”

“காலேஜ் முடிக்க ஒத்துக்கிட்டாங்க… ஆனா அதுக்கு அப்புறம்… ‘மாமா இங்க தான் இருக்கான் பாப்பா, நீயும் அவனோட இருக்கறது தான் சரியா இருக்கும்னு’ சொல்லி… என்னையும் வீட்டோட வெச்சிக்கிட்டாலும் வெச்சிக்கலாம். ஏன்னா இத்தனை வருஷம் பேசாத என் தங்கச்சி என்னோட பேசி அவளோட நம்பர் கொடுத்திருக்கா… அப்பப்போ பேசுங்கன்னு வேற சொல்லியிருக்கா. அதான் குழப்பமாவே இருக்கேன். “

ஒரு நெடியமூச்சை இழுத்துவிட்ட சிநேகா… “எப்படி வேணா இருக்கட்டும் க்ரிஷ்… உன் வாழ்க்கையோட முடிவு உன் கையில் தான் இருக்கு. இப்ப நாம இந்த ப்ராஜெக்ட்க்கு உதவுவோம்… மத்ததை அப்புறம் பார்த்துப்போம். ” என்றவள் மௌனமாக… வாசல் கதவின் அழைப்பு மணியோசை கேட்டது.

“புஃட் ஆடர் பண்ணியிருந்தேன். ” என்றபடியே எழுந்த சிநேகா கதவை திறந்து, வந்த உணவை வாங்கிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தாள். இருவரும் உணவை உண்டுவிட்டு உறங்க சென்றனர்.

இரண்டு மூன்று நாட்கள் கல்லூரி செல்வதில் கழிய… மூன்றாம் நாள் மாலை சிநேகாவின் மெயிலுக்குப் புருஷோத்தமன் அனுப்பிய செய்தி ஒன்று வந்தது. அதைப் பார்த்தவுடனே சிநேகா க்ரிஷை உலுப்பினாள்.

“என்னடி… இப்பதானே காலேஜில் இருந்து வந்தோம். ஒரு காபி போட விடேன். ” என்ற கிருஷ்ணவேணியிடம் சிநேகா உற்சாகமான குரலில்…

“க்ரிஷ் அவங்களோட விளம்பர ஐடியா வந்துடுச்சு. அவங்க கேட்கற மாதிரி நாம காஸ்டியூம் டிசைன் பண்ணனும். வந்து பாரேன். “

“இரு டி வரேன்… ” என்றவள் காபி போடும் மூடில் இருக்க… மடிக்கணினியை எடுத்து வந்த சிநேகா மெயிலில் வந்த காணொளி காட்சியை அவளுக்குப் போட்டு காண்பித்தாள்.

அது ஒரு பெயிண்ட் விளம்பரத்தின் மாதிரி வடிவக் காணொளி. அதில் வீட்டின் உட்புறமும் வெளிப்புறமும் இயற்கையின் வண்ணத்தை வீட்டின் சுவர்களில் பார்க்கலாம் எனக்கூற காட்சிகள் விரிய ஆரம்பித்தது. ஒரு பசும் புல் தளம் அதன் மேல் சின்னஞ்சிறிய வெள்ளை நிற பூக்கள்…. அதன் மேல் ஒரு பட்டாம்பூச்சி. அப்படி அக்காட்சி ஒரு வீட்டின் சுவராக மாறியது. அடுத்து கரிசலாங்கண்ணியின் மஞ்சள் நிறம் விரிய அதன் ஊடே வெளிர் நிற ஊதாபூவின் தூரல்கள். இப்படி ஒவ்வொரு நிறமும் இயற்கையின் பிரதிபலிப்பாய் மாறி ஒரு வீட்டை அலங்கரிக்க… இயற்கையின் வண்ணத்துடன் இனிய வீடு… உங்களுக்காக வழங்குது ***பெயிண்ட்ஸ் என்று ஒலித்து அமைதியானது விளம்பர காணொளி.

“வாவ்… சூப்பரா இருக்கு. ” என்ற க்ரிஷ்… அந்தக் காணொளியை மீண்டும் ஒளிக்கவிட்டு ஒவ்வொரு ப்ஃராமாக ரசித்துத் தனக்கு வேண்டிய சில குறிப்புகளை எடுத்து கொண்டு… சிநேகாவிடம்… “நாம இந்த ப்ராஜெக்ட்டை எடுத்துக்கலாம் சிநேக். ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு. ” என்றிட.

“அதைத் தான் நானும் சொன்னேன். “

“சரி… இப்ப அவங்களோட பேசனுமே. நாம என்ன மாதிரியான காஸ்டியூம் டிசையின் பண்ணறதுன்னு கேட்கனுமே.‌.. “

“இதோ‌… இப்பவே புருஷை கூப்பிடறேன். ” என்றவள் தன் மாமன் மகனான புருஷோத்தமனுக்கு அழைத்தாள்.

அழைப்பு ஏற்கப்பட்டது… “ஹாய் புருஷ்… ” என்றவள் கூற

“…”

“ஓ… மாறன். எப்படி இருக்கீங்க ” என்றபடியே அலைப்பேசி அழைப்பை ஒலி பெருக்கியில் போட்டாள்.

“நான் நல்லா இருக்கேன் சிநேகா. ” என்றது எதிர்புறம்.

“உங்க டிசைன் பார்த்தோம். மைன்ட் ப்ஃளோயிங்… “

“தேங்க்யூ… “

“செலக்ட் ஆகிடுச்சு தானே ? “

“எஸ்… கம்பெனி ஓகே சொல்லிட்டாங்க. இப்ப நாங்க ஷூட்டிங் போகனும். “

“ஓகே… நாங்க என்ன பண்றது ? “

“உன் பக்கத்தில் உன் பிரண்டும் இருக்காங்களா ? “

“ஆங்… இருக்கா மாறன். போன் ஸ்பீக்கரில் தான் இருக்கு. “

“குட்… ” என்ற எதிர்புறம் தன் தேவைகளைக் கூறத்தொடங்கியது.

“எனக்கு நேட்சுரல் கலர்ல… டிரஸ் இருக்கனும். டிரஸ் டிசைன்ஸ் உங்க இஷ்டம்…. நான் அனுப்பி இருக்கற காம்பிநேஷன்ல இருந்தா இன்னும் நல்லா இருக்கும். நீங்க மெட்டிரியல் வாங்கிட்டு சொல்லுங்க‌… நான் மாடல் யாருன்னு சொல்றேன்… அவங்களை நேரில் பார்த்து அளவெடுத்து தெச்சிடுங்க… ஷூட்டிங் இன்னும் பதினைஞ்சு நாளில் ஸ்டாட் பண்ணிடுவோம். அதுக்குள்ள வேணும். “

“டைம் ரொம்பக் கம்மியா இருக்கு மிஸ்டர். மாறன். ” என்றாள் க்ரிஷ்… எதிர்புறம் சில கணங்கள் மௌனம்.

க்ரிஷ் மீண்டும் “ஹலோ… ” என்றழைக்க…

“சாரி… அதுக்குள்ள இங்க ஒரு வேலை. ” என்ற எதிர்புறம்… “எனக்குப் புரியுது… ஆனா எங்க கிட்டையும் அதிக டைம் இல்ல. “

…”

“உங்களால ஒரு பத்து நாள் லீவ் போட முடியுமா ? “

“லீவ்வா ? அதெல்லாம் ரொம்பக் கஷ்டம் மிஸ்டர்.மாறன். “

“கொஞ்சம் கன்ஷிடர் பண்ணுங்க… ப்ளீஸ்… “

“சிநேக்…. என்னடி இது ? ” என்று ஜாடையாகக் கேட்டாள் க்ரிஷ்.

“இரு… ” என்று சைகை செய்த சிநேகா… “மாறன்… லீவ் எடுக்கறதை பத்தி நாங்க கொஞ்சும் யோசிச்சி சொல்றோம். “

“அப்ப… இந்த ப்ராஜெக்ட் ? “

“நாங்க உங்களோட வொர்க் பண்ண சம்மதிக்கறோம் மாறன். நான் காஸ்டியூம் டிசைன்ஸ் எல்லாம் வரைபடமா வரைஞ்சிட்டு உங்களுக்கு மெயில் பண்றேன். ” என்றாள் கிருஷ்ணவேணி.

“ரொம்பத் தேங்க்ஸ்… “

“சரிங்க நாங்க வெச்சிடறோம். ” என்று க்ரிஷ் கூற… அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

தொடரும்….