அத்தியாயம் 7

ஏன்டா இப்படி பண்ண?” என்றவாறு சிவா வயிற்றில் ஓங்கி குத்தினான் தமிழ். சிவா கடவாயில் ரத்தம் வழிய கொடூரமாக சிரித்தான். 

“நீ யார்டா அதை கேட்க? வெட்டி பைய இனி இந்த விஷியத்துல நீ தலையிடாத எங்க குடும்ப பிரச்சனை” என அவனை தள்ளினான் சிவா. 

“நான் கேட்காம யார்டா கேட்பா *****நாயே? நீ கட்டினது பேரு தாலியாடா? அதை கழட்டி வீசிட்டு நான் கட்டுவன் டா நாளைக்கு” 

அந்த தமிழ்மாறன் அனைவருக்கும் புதிதாக இருந்தான். அமைதியான அவன் முகத்தையே அறிந்தவர்கள் அவன் கோபத்தை பார்க்க முதுகு தண்டு சிலிர்த்து. 

“தமிழ் அதான் சிவா தாலிகட்டிடான்ல இனி இதை அவங்க அண்ணங்க பார்த்துப்பாங்க நீ உன் வேலையை பாரு. சாதனா சிவா பொண்டாட்டி” என அறிவு இடைபுக அவர் சட்டை காலரை இரண்டு கையால் பிடித்து தூக்கிவிட்டான் தமிழ். 

“யாரு யார் பொண்டாட்டி டா?  சட்டப்படி சாதனா என் பொண்டாட்டி.  அப்பனையும் மகனையும் வெட்டி புதைக்காம விடமாட்டன் டா நான்” என அவன் கர்ஜனையில் அனைவருமே குழப்பமாக அவனை பார்த்தனர். 

“என்னடா பாக்குற இன்னைக்கு   ரிஜிஸ்டர் ஆபிஸில் லீகலா எங்க கல்யாணத்தையும் ரிஜிஸ்டர் பண்ணிட்டு தான் வந்தோம். அவன் தாலிய போட்டது சாதனா கழுத்தில இல்லை மிசஸ்.சாதனா தமிழ்மாறன் கழுத்தில” என்றவன் அவர் காலரை இறுக்கினான். 

தமிழ்மாறன் சொல்லியதை கேட்டு சாதனாவிடம் பெரும் கேவல் வெடிக்க  சதிசும் வந்துவிட அவரை தள்ளிவிட்டு  சாதனாவிடம் சென்றான் தமிழ்மாறன். 

நாளை சுப முகூர்த்தம் காலை ஏழு மணியோடு  முடிவதால் இன்றே ரம்யா சுரேஷ்க்கு பதிவு செய்யும் போது இவர்களும் பதிவு திருமணம் செயத்துக்கொண்டனர். இதுவும் சுந்தரமூர்த்தி எடுத்த முடிவுதான் இதை பெரிதாக யாரிடமும் அவர்கள் சொல்லாது குடும்பத்தோடு முடித்துவிட்டனர். 

தமிழ்மாறன் சாதனாவிடம் நெருக்கம் காட்டியதும் இன்று அவர்களுக்கும் திருமண நாள் என்பதனால் தான். இருவரும் மிக மகிழ்ச்சியாக அதை கொண்டாடினர். பதிவு திருமணத்திற்கு அவர்கள் மாற்றிக்கொண்ட மாலையை தான் தமிழ் கையில் வைத்திருந்தான். 

“சது….” 

அவன் குரலில் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினாள் சாதனா. 

“ஏய்…. எதுக்கு அழுவுற? இங்க பாரு… ப்ச்…. சொல்றேன்ல கையை எடு” என அவள் கையை விலக்க முகம் வீங்கி சிவந்து போயிருந்தது. அவள் கண்ணை துடைத்துவிட்டான் அவன். 

அவள் பார்வை தவிப்போடு அவனிடம் முறையிட்டது 

‘என் நிலையைப் பார்த்தாயா?’ என. 

“எனக்கு தெரியலை… த்தான் இப்படி செய்வானு நினைக்கலை…. பயமா இருக்கு… என்னை விட்டுடுவிங்களா?” அவள் குரலில் மரண வலி அவன் உயிரை உரசி பார்த்தது. 

“அறைஞ்சனா பாரு… பைத்தியமா டி நீ?   முதல் அழுவுரத  நிறுத்து? “

“முடியாலை …த்தான் அழுகையா வருது” என்றவள் கண்கள் பொங்கி வழிந்தது. 

“இப்போ என்னாச்சு சாதனா? நான் என்ன செத்தா போயிட்டேன்?” என தமிழ்மாறன் கத்த பதறிப்போய் அவன் வாயை மூடினாள் அவள். 

“கையை எடுடி…. ஏதோ அசிங்கம் மேல பட்டதா நினைச்சிக்க அவ்வளவுதான் சரியா? இங்க பாரு இதெல்லாம் ஒன்னும் இல்லை… அத கழட்டி அவன் மூச்சில வீசிடு சது. உன் கண்ணீரை வீண் பண்ணாத” என அதட்டியவன் பலவாறு அவளை தேற்றினான். சுரேஷூம் வந்துவிட பெரும் களபரமானது. 

“என்ன நடந்தாலும் சரி நாளைக்கு நம்ம கல்யாணம் நடக்கும் சாதனா. கமான் அதை கழட்டி எறிச்சிட்டு வா…  நீ யார்னு அந்த நாயிக்கு புரியவை”

இங்க நிறையே பேர் தாலினு ஒன்ன பெண்ணை கட்டிபோடுற மந்திர கயிறா நினைக்கிறாங்க அப்படி இல்லனு அவனுக்கு சொல்லுமா விருப்பம் இல்லாமல் கட்ற தாலி எல்லாமே வெறும்  தங்கம் தான் நூல் கயிறுதான்னு சொல்லு. நீ அழக்கூடாது பாரு” அவன் தேற்ற தலையாட்டியவள் அந்த செயினை கழட்ட இன்னும் பெரிதாக அதிர்ந்தனர் இருவரும். தமிழுக்கு  பணிக்கட்டியை யாரோ அவன் தலையில் கவிழ்த்தது போல் இருந்தது. 

சுரேஷ் அடித்த அடியில் சிவா சட்டை கிழிய அவன் பனியன் உள்ளே இருந்து அந்த நீண்ட தாலி வெளியே வந்தது. பார்த்த அனைவருக்கும் பேர் அதிர்ச்சி சிவா உட்பட. அனைவரும் சாதனாவை காண அவள் கையில் வெறும் தங்கசெயின் தான் இருந்தது. 

தன் பணக்கார பெருமையை காட்ட முறுக்கு செயின் இரண்டை எப்போதுமே போட்டிருப்பான் அதுவே அவனுக்கு ஆப்புவைத்துவிட்டன. அவசரத்தில் தாலிக்கு பதில் செயினை மாற்றி அவள் கழுத்தில் போட்டுவிட்டதை உணர்ந்தவன் தலை முடியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். 

அவன் செயின் போட்ட உடனே அடிதடி ஆரம்பித்ததில் யாரும் பதட்டத்தில் அதை கவனிக்கவில்லை சாதனாவும் அதிர்ச்சியில் அப்படியே கீழே அமர்ந்துவிட வெறும் செயினை தாலி என நினைத்து பிரச்சனையாகிருந்தது. 

அனைவரும் சிவாவை பார்த்து சிரித்துவைக்க அவனுக்கு பெரிய அவமானமாக போய்விட சதிஷ் சுரேஷ் அடிப்பதை வாங்கிக்கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான். 

இங்கே சாதனாவை இழுத்து அனைத்திருந்தான் தமிழ் அவனுக்கு அத்தனை ஆசுவாசம். பின்னே? நாளை கல்யாணம் இருக்க இன்று இன்னொருவன் தாலி போட்டுவிட அதை கழட்டி விட்டாலும் நம் ஊர் பெண்களால் சாதாரணமாகக் கடந்துவிட முடியுமா? அதுவும் நாளையே திருமணம் இருக்க அவள் மனநிலையை நினைத்து கலங்கியிருந்தான் அவன். 

அவன் அணைப்பில் சத்தம்போட்டு தேம்பி அழுதாள் சாதனா. ‘எத்தனை பயம்….யார் செய்த புண்ணியமோ? பெரும் வலியில் இருந்து அவளை காப்பாற்றி இருக்கிறார் கடவுள்’

சிவா போட்டது தாலியில்லை என்பது அவள் உயிரை மீட்டியிருந்து சுந்தரமூர்த்தி வரும்போது பிரச்சினைகள் ஓய்ந்திருந்ததால்  சிறிய அதிர்ச்சியும் பெரும் கோபமும் அவரிடம். சிவாவை போலீஸில் ஒப்படைத்தான் தமிழ்மாறன். 

அதை  சுரேஷ் மறுக்க தமிழ் பிடிவாதமாக இருந்தான். 

“உங்களுக்கு தங்கச்சி தான் ஆனா எனக்கு வைஃப். என் வைஃப் கிட்ட இவன் நடந்துகிட்ட முறைக்கு இவன கொல்ல தோணுது. போலீஸ்ல  ஒப்படைக்கிறது கூட ஒரு வாய்ப்பு தான். இனி சாதனா  பத்தி இவன் நினைச்சா கூட கொண்ணு புதைச்சிடுவேன்” என சரேஷிடம் ஆரம்பித்து அறிவிடம் மிரட்ட  ஊரே  சிவாவையும் அவன் பெற்றோரையும் தூற்ற தலைகுனிந்து அங்கிருந்து சென்றனர். 


மறுநாள் குறித்த முகூர்த்தத்தில் சாதனா கழுத்தில் தாலிகட்டினான் தமிழ்மாறன். எல்லையில்லாத நிறைவோடு அவன் இட்ட குங்குமத்தை வாங்கிக்கொண்டாள் அவள். இருவர் ஜோடி பொருத்தத்தை அனைவரும் புகழ்ந்தனர். 

மண்டபத்தில் சடங்குகளை முடித்ததும் சாதனா வீட்டில் பால் பழம் உண்டவர்கள் மாலையே தமிழ்மாறன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். 

வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும் ஒரு வாரம் தம்பதியினரை தமிழ்மாறன் வீட்டில் வைத்துவிட்டு முறைகள் முடிந்ததும் அங்கே அழைப்பதாக சொல்லியிருக்க சிறது நிம்மதியாக இருந்தான் தமிழ். சுரேஷ் அதையும் மறுக்க அவனை கெஞ்சாத குறையாக இழுத்து சென்றிருந்தான் சதிஷ். 

இன்று தான் சுரேஷ் ரம்யாவுக்கும் இரவு சடங்கு என்பதனால் அவர்களுக்கு அங்கே வேலையிருக்க வந்தவுடன் கிளம்பிவிட்டனர்.  எட்டு மணிக்கே வாசுகியும் பாவினியும் அழகேசனின் ஒன்றுவிட்ட தங்கை வீட்டுக்கு சென்றுவிட்டனர். செல்லும் முன் இருவரையும் உண்ண வைத்து சாமிமாடத்தில் சாதனாவை விளக்கேற்ற வைத்துவிட்டு தான் சென்றார். 

வாசுகி இருந்தவரை சாதாரணமாக இருந்தவளுக்கு அவனுடன் தனிமை பயத்தையும் மயக்கத்தையும் சேர்த்து தர அவஸ்தையாக அமர்ந்திருந்தாள் சாதனா. 

அவள் போனை திறப்பதும் எதையாவது தேடிவிட்டு அணைப்பதுமாக இருக்க உதட்டுக்குள் நெலிந்த சிரிப்போடு உள்ளே சென்றவன் மடிக்கணினியை எடுத்துவந்து அவளுக்கு எதிரே அமர்ந்து நோண்டிக் கொண்டிருந்தான். 

சிறதுநேரம் பார்த்தவள் எழுந்து பின்பக்கம்  செல்ல  குளிர்காற்று அலைமோதியது. தூரத்தில் மின்னல் கீற்று ஓடி மறைய அவள் கண்ட கனவுகளின் நினைவில்  தலையை உலுக்கிக்கொண்டாள். 

பட்டுப்புடவை வேறு ஜரிகை உடம்பில் குத்த  ‘மாற்றிவிடுவோம்’ என நினைத்து திரும்பியவள் அவள் பின்னே நின்ற தமிழ்மீது மோதிக்கொண்டாள். 

“மழை வர மாதிரி இருக்குல கதவை சாத்த வந்தேன்” என்றவன் அவளுக்கு இருபக்கமும் கையை செலுத்தி கதவை மூடி தாழ் போட்டான். ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு உரசல் தீப்பொறி பறக்க. உட்லை குறுக்கி நின்றாள் சாதனா. 

தமிழுக்கு கையை எடுக்க மனமில்லாமல் இருக்க மெதுவாக நகர்ந்து கதவில் சாய்ந்தாள் சாதனா. தமிழின் கண்கள் அவள் மேனியில் அலைந்தது அவன் மூச்சுகாற்றை கூட தாங்காமல் கால்கள் நடுங்க தலைகுனிந்து நின்றாள். 

மெதுவாக அவளை நெருங்கி நின்றவன் பொட்டு பொட்டாக அவளுக்கு வேர்க்க வாயை குவித்து ஊதினான். அந்த வெப்ப காற்று ஊசிமுனையாக மாற சிலிர்த்து போனாள் அவள். 

“சது உனக்கு ஏன் இப்படி வியர்க்குது?” என்றவன் அவள் காதோரத்தில் வழிந்த வியர்வை துளியை ஒற்றை விரலில் தொட்டு அவள் கன்னத்தில் கோலம் போட அடிவயிற்றில் மின்னல் அடித்தது அவளுக்கு. அவனை தள்ளிக்கொண்டு உள்ளே ஓட அப்படியே கதவில் சாய்ந்தான் தமிழ்மாறன். 

சிறுது நேரம் சென்று அவன் உள்ளே வர சமையல் அறையில் நின்றாள் சாதனா. . சிரித்துக்கொண்டே முன்பக்கம் கதவை அடைத்தவன் சுற்றியுள்ள விளக்குகளை அணைத்துவிட்டு வர அவள் இன்னும் அங்கேயே தான். 

“சாதனா” என்றவன் சத்தத்தில்  வெளியே வந்தவளை அமர சொன்னவன் அவளுக்கு அருகே அமர்ந்தான். இருவரும் மர பெஞ்சில் இடைவெளிவிட்டு அமர்ந்திருக்க  பேச்சை ஆரம்பித்தான் தமிழ்மாறன். 

“ஏன் ஒரு மாதிரி இருக்க? பாரு எப்படி வியர்க்குது” என

“அது… அது… மழை வரமாதிரி இருக்குல  வெக்கை” என கையால் துடைக்க நகர்ந்து அவள் கைபற்றினான் தமிழ். 

“ஏ…  என்ன? “

“ஒன்னும் இல்லையே” என்றவன் பார்வை அவள் இதழில் படிந்தது. 

“காலேஜ் போனியா நீ?” என்றவன் இன்னும் நகர அவளும் நகர மீண்டும் இருவருக்கும் நடுவே இடைவெளி. 

“ம்ம் போ… போறன். நீங்க சொன்ன அடுத்த நாளே காலேஜ் போக ஆரம்பிச்சிட்டேன் த்தான்” என்றவள் கண்கள் மின்னின. பின்னே? அவன் சொல்லியதை செய்துவிட்டாளே அந்த மின்னல் அது. அவன் கண்களும் மின்னின  ஓரம் சாரமாக தெரிந்த அவளின் ரகசிய அழகை கண்டு. 

“அப்போ அதுக்கு பரிசு தரணுமே” என்றவன் நீண்ட கை அவள் இடையில் விழ தன்னோடு அவளை இழுத்துக்கொண்டான் தமிழ்மாறன். 

அவன் நெஞ்சில் முகம் பதித்திருந்தவள் கண்ணை இறுக மூட கன்னத்தை பற்றியவன் வியர்வையோடு துடித்த இதழை வன்மையாக  சிறைபிடித்தான். மூச்சடைத்தது அவளுக்கு கண்ணை திறக்கவே முடியாத அளவுக்கு போதை அவளை இழுக்க அவனை கெட்டியாக பிடித்தவள் துவண்டு சாய அவளை அப்படியே மடியில் தூக்கிக் கொண்டவன் இன்னுமே வேகம் காட்டினான். 

“மாறா… ” என அவள் முனக 

“திரும்பி சொல்லு” என்றவன்  கழுத்து சரிவில் இளைப்பாறினான். 

“ம்ம் மா..” அதற்கு மேல் “றா” அவன் இதழோடு புதைந்தது. 

தீண்டி தீண்டி

தீயை மூட்டுகிறாயே

தூண்டி தூண்டி தேனை

ஊட்டுகிறாயே நீயே காதல்

நூலகம் கவிதை நூல்கள்

ஆயிரம் காதல் தீவிரவாதியின்

ஆயுதம் ஆனதே

அவள் காலுக்கு தன் நீண்ட காலால்  விலங்கு போட்டவன் கைகள் மெல்ல ஆடைமேல் அழுந்தி வெப்பம் மூட்ட இன்பமா? துன்பமா? என தெரியாத வேதனையில் அவள் கைகள் அவனுக்கு தடைப்போட்டது. மறுப்புடன் அவள் விரல் நகங்கள் அழுந்தி அவனை கீற அதை மீறி தொடுகை பயணம் அவள் உடலெங்கும் தொடர. 

தொடங்கினால்

கூசும் இடங்களால்

நகங்களே கீறும் படங்களா

அவன் முத்த வேகத்தில் மொத்தமாக புயலில் சிக்கிய கொடியாக அவள் தடுமாற அவளை தழுவி இழுத்து பினைந்திருந்த பட்டாடை அவன் கையில் கசங்கி நெகிழ உடல் எங்கும் உதறல் பாவைக்கு.

தேகம் என்பதென்ன

ஓர் ஆடை கோபுரம் ஆடை

நழுவும்போது ஓர் காமன்

போர் வரும்

குறும்புகள்

குறையாது தழும்புகள்

தெரியாது

அவன் அடுத்தகட்ட முயற்சிக்கு தடையாக இருந்த நகையை அவசரமாகக் கழட்டி எறிந்தான். காமனின் சபையில் தங்கத்துக்கு என்ன மரியாதை முத்தங்கள் தானே ஆபரணம்  வெட்கம் தானே ஆடைகள். 

கைகள் மேயுது

மேயுது ரேகைகள்

தேயுது

எனை தீண்டி தீண்டி

தீயை மூட்டுகிறாயே

தூண்டி தூண்டி தேனை

ஊட்டுகிறாயே

அவளை அப்படியே தோளுக்கு மேல் தூக்கிக் கொண்டவன் அவன் அறையில் விரித்திருந்த பாயில் விட்டான். மலர்களுக்கு நடுவே செந்தாமரையாக கண்ணை மூடி கிடந்தவளை காண உணர்வுகள் கட்டவிழ்ந்தது அவனுக்கு. அவன் விரல்கள் அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை வெளியே இழுக்க தலையை திருப்பி கையால் முகத்தை மூடிக்கொண்டாள் சாதனா.  

அவள் கையை பிரித்தவன் “கண்ண திரடி சது” என மயக்கத்துடன் மிரட்ட  இன்னுமே உடலை குறுக்கி சாதனா ஒடுங்க பார்க்க அவன் வருடலில் தேகம் இளகி தாபம் பேரலையாக இருவரையும் இழுக்க அவளிடம் சரிந்தவன் எழும் போது சாதனா முழுமையாக அவனுடையவளாக மாறியிருந்தாள். 

தீண்ட தீண்ட தேகம் தீப்பற்ற  விலகலும் விலகி போக இரு உயிர்கள் ஒரு உயிராய் மாறிப்போய் காமம் கடந்து முத்த அர்ச்சனைகளில் ஆரம்பித்து மீண்டும்  காதலாய் ஒரு பயணம்.