அத்தியாயம் 6.1

காலை நான்கு மணிக்கே ரம்யாவை எழுப்பிவிட்டார் வாசுகி. அவள் குளித்து தலையை காய வைத்துக்கொண்டிருக்க 

“பாவினி  தமிழ்ல காபி எடுத்துட்டு வர சொல்லிருந்தேன் வாங்கிட்டு வாடி” என உட்கார்ந்துகொண்டு தூங்கியவளை வாசுகி விரட்ட கண்ணைக் கசக்கிக்கொண்டே சென்றாள் அவள். 

இன்று சுரேஷ் ரம்யாவுக்கும் நாளை சாதனா தமிழ்மாறனுக்கும் திருமணம் என நிச்சயத்திருந்தனர். அவர்கள் ஜாதகப்படி ஒரே மேடையில் இரு திருமணம் செய்யகூடாது என சொல்லியிருக்க இந்த ஏற்ப்பாடு. நேற்று இரவு பரிசம்போட்டு ரம்யாவை மண்டபத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். சுரேஷூம் தமிழும் புதுமாப்பிள்ளை என்பதால் சதிஷ் பொறுப்பை எடுத்துக்கொண்டான். 

பாவினி  எதிரே சதிஸ் காபி எடுத்துவர தூக்க கலகத்தில் அவனை பார்காமல் போனவளை கண்டு தலையில் தட்டிக்கொண்டான். 

“ஏய்ய் சுண்டக்கா’ என அவளை அழைக்க  படக்கென திரும்பி பார்த்தாள் அவள். 

“என்னையா?” என்றவாறு வந்தவளை கண்டு முறைத்தவன் 

“தூக்கம் போகலையா உனக்கு? என்ன டிரஸ் இது?” என  அதட்ட குனிந்து பார்த்தாள் நயிட்டி தான் அணிந்திருந்தாள். 

“இதுக்கு என்ன?” அவளுக்கு புரியவில்லை. ரம்யாவும் அவளும் வீட்டில் எப்பொழும் போடும் உடை தான். ஆனால் சதிஷ் வீட்டுப்பெண்கள் வெளியில் நயிட்டி அணிவதை  விரும்பமாட்டான்.

“வெளியே இதை போட்டு வருவியா? அத்தை எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்றவனை முறைத்தாள் பாவினி. 

“இனிமேல் இதோடு வெளியே வரக்கூடாது” அவன் மிரட்ட எரிச்சல் மூண்ட போதும் ‘பிரச்சனை வேண்டாம்’ என தலையசைத்தவள் நகரவும்  அவள் கையில் பிளாஸ்கை வைத்தான். 

“தமிழ் அத்தைட்ட இதை தர சொன்னாங்க போய் கொடு” எனவும் அதை வாங்கிக்கொண்டு அவள் உள்ளே சென்றுவிட்டாள். பாவினியை துகிலுரிக்கும் பார்வை பார்த்துக்கொண்டே   மேடையில் அலங்காரம் செய்துக்கொண்டிருந்த ஒருவனை  எரிப்பது போல் முறைத்தவன் 

“சுண்டைக்கா  அறிவே இல்லை ஆளும் சைசும் குட்டச்சி” என திட்டிக்கொண்டே சென்றுவிட்டான். 

நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சொந்தங்கள் ஒன்றாக கூட அரட்டை கச்சேரிகள் கலைகட்டியது. இரு வீட்டினரும் நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தனர். கல்யாண செலவுகள் அனைத்தும் சுந்தரமூர்த்தி பார்த்துக்கொண்டது தமிழுக்கு சங்கடத்தை கொடுக்க முகத்தில்  எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.  வாசுகியும் சுந்தரமூர்த்தியும் பேசுவதை கண்டவர்கள் சிலர் வாழ்த்தவும் நக்கல் செய்யவும் இருக்க மிக பிரமாண்டமாக கல்யாண எற்ப்பாடு நடந்துக்கொண்டிருந்தது. சுந்தரமூர்த்தி தன் பணபலத்தை காட்டியிருந்தார். 

அழகேசன் குடும்பத்திற்கு அடுத்து சுந்தரமூர்த்தியின் குடும்பம் தான் அவ்வூரில் பெரும் வசதி படைத்தவர்கள். குமரேசன் அழகேசனிடம் இருந்து பறித்துக்கொண்டவை பாதியை விற்றுவிட்டு வெளிநாட்டில் குடியேரிவிட சுந்தரமூர்த்தி முதன்மையாக்க பட்டிருந்தார். 

சாதனா அழகோவியமாக நடமாடிக்கொண்டிருந்தாள். மனம் கவர்ந்தவன் மணாளனாக இருக்க முகத்தில் கல்யாண கலை தாண்டவமாடியது. முழங்கைவரை கல்யாண வளையல் அடிக்கியிருக்க ஊர் கண்ணே அவள் மேல் விழுந்தது. அவை மட்டுமா? இரண்டு நாட்களுக்கு முன்தான் ஊர் சபையில் சாதனா மேல் சுமத்திய பலிக்காக மனம் உணர்ந்து மன்னிப்புக் கேட்டிருந்தான் சிவா. 

அவள் காலில் விழுவே சென்றுவிட்டவனை மன்னித்துவிட்டாள். சிறுவயதில் இருந்து சகோதரன் போல் பழகியவனை பார்க்க பாவமாக இருக்க அவனுக்காக மனம் இறங்கி சகோதரர்களையும் மன்னிக்கவும் வைத்திருந்தாள். 

ஏனோ தமிழ் மாறனுக்கு மட்டும் அதில் விருப்பம் இல்லை அதை சாதனாவிடம் மறைக்காமல் முகத்தில் காட்டிவிட்டான் சாதனாவிற்கு தான் அது புரியாமல் போய்விட சுரேஷ் கண்டுக்கொண்டான். அவனும் ஏறத்தாள தமிழ்மாறன் நிலையில் தான் இருந்தான். 

சுரேஷிடம் ரம்யாவை விட்டு தர சொல்லி அழுது கெஞ்சியிருந்தான் செல்வம். பொங்கிய கோபத்தை அடக்கி மறுத்துவிட்டு வந்தவன் செல்வத்திற்கு பயத்து வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டான். 

பின்ன ஆவ்வூரிலேயே அழகு ரதியான தங்கச்சிலையை வீட்டிலேயே பார்த்துவைக்க   அவளை விட்டுகொடுத்துவிட்டு விரல்சூப்ப அவன் என்ன குழந்தையா? அதுவும் செல்வத்தின் ஒருதலைக் காதல் நிறைவேறினால் என்ன நிறைவேறாவிட்டால் அவனுக்கு என்ன? அன்றே ரம்யாவை செல்வத்திடம் “பேசக்கூடாது” என மிரட்டிவிட்டு ஒய்ந்தவன் அவன். 

சாதனா சொல்லி மறுக்க முடியாததால் சிவா குடும்பத்தையும் திருமணத்திற்கு அழைத்திருந்தனர். 

சாதனாவிடம் பூவை கொடுக்க வந்த தமிழ் உள்ளே வந்த அறிவுமணி நீலா தம்பதியினை கண்டு முகம் சுளித்தான். 

‘இவங்க இங்க எதுக்கு வந்தாங்க?’ என மனதில் நினைத்தவன் பாவினியிடம் பூவை தந்துவிட்டு சென்றான். 

“ஏன் பாவினி உங்க அண்ணன் எப்போதும் விரப்பா தான் இருப்பாங்களா?” என்றவளை கண்டு சிரித்தனர் ரம்யாவும் பாவினியும். அவள் சொன்னது தமிழ்மாறன் காதிலும் விழுந்தது. 

“நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் நீங்களே கேளுங்க சாதனா” என பாவினி கண்ணடிக்க அவள் தலையில் குட்டினாள் ரம்யா. 

“இன்னைக்காச்சும் கல்யாண பொண்ணா வெட்க படு ரம்ஸ். எப்பொழுதும் டீச்சர் மாதிரி குட்டிகிட்டு” என மண்டையை தேய்த்தாள் பாவினி. 

“ஆமா அண்ணி டியூசன் வாத்தி தங்கச்சினு நினைப்புல பெரியவனை வெளியே நிக்க வச்சிடாதிங்க” சாதனாவின் கேலியில் ரம்யாவின் முகம் செவ்வானமாக சிவக்க 

“ஏய் சாதனா உங்க அண்ணிக்கு கவலை படுவது இருக்கட்டும் தமிழ் அண்ணா  கணக்கு வாத்தியாராமே  நாளைக்கு நைட் கணக்கு சரியா இல்லனா விடிய விடிய விடமாட்டார் பாத்துக்கோ” என அவள் தோழியான அபி சிரிக்க அவளை கில்லிவிட்டு ஓட பார்த்தாள் சாதனா. 

“சாதனா பூவை வாங்காம போறிங்க பூவே இல்லைனு பொய் சொல்லி உங்க புருஷனை வாங்கிட்டு வர சொல்லிட்டு வச்சிக்காம போனால் எங்க அண்ணன் மனசு தாங்குமா?” பாவினி கத்த ஓடி வந்து அவள் வாயை மூடியவள் பூவை பறித்துக்கொண்டு ஓடிவிட்டாள். 

சாதனா சுந்தரமூர்த்தியை தேடி வர எதிராக சிவா வந்துக்கொண்டிருந்தான். அதை தமிழ்மாறன் கவனிக்கவும் சாதனாவை தான் முதலில் தேடினான். சரியாக அவளும் அங்கே இருக்கவும் வேகமாக அவளிடம் தமிழ் செல்ல அதற்குள் அங்கிருந்த ஒரு சிலரின் பார்வை முழுக்க சிவா சாதனா மேல் படிந்தது. 

“சந்து குட்டி” என வந்தவனை பெரிதாக கண்டுகொள்ளாமல் “வாங்க” என மட்டும் அழைக்க அவளை பேச்சில் பிடித்துக்கொண்டான் சிவா. அவர்கள் நின்ற இடத்தில் விருந்தினர் தங்கும் அறைக்கள் இருக்க காரிடரில் நின்றிருந்தனர். 

“என்ன சந்து மன்னிச்சிட்டனு சொன்ன? ஆனா அப்படி இல்லை போல” அவன் குரல் கரகரத்து வர எரிச்சலானாள் சாதனா. 

“அப்படிலாம் இல்லையே” 

“இல்லை நீ பொய் பேசுற” 

“சரி விடுங்க சாப்பிட்டிங்களா?” என உபசரித்து பேச்சை மாற்றினாள். 

“பேச்சை மாத்தாத சந்து. நீ என்னை இன்னும் மன்னிக்கலை தானே?”

“ஏன் இப்படி நினைக்கிறீங்க?” அவனிடம் பேசவே அலுப்பாக இருந்தது. மன்னித்துவிட்டேன் என சொன்னவலால் அதை நடைமுறைப்படுத்த சிரமமாக இருந்தது. 

“தன் பார்வையில் இருந்து சென்றுவிடமாட்டானா?” என தோன்ற சதிஸை தேடினாள் அவள். 

“அப்பறம் ஏன் பழைய மாதிரி சிவாத்தானு  கூப்பிடல” அவன் குறைபட 

“இனிமேல் அதுக்குதான் நான் இருக்கனே சிவா அதானால் தான். என்ன சது? சரி தானே?” என்றவாறு சாதனாவின் தோளில் தமிழ்மாறன் கையை போட பல்லைகடித்தான் சிவா. 

தமிழ்மாறினின் திடீரென்ற நெருக்கத்தில் தடுமாறினாள் அவள். முகம் ரத்தம்மாக மாற அவள் குண்டு கன்னத்தை கடிக்க தோன்றியது தமிழ்மாறனுக்கு மயக்கத்தை கண்ணில் மறைக்காமல் வழிய விட்டவன் சிவாவிடம் திரும்பாமல் அவளை விழுங்குவது போல் பார்த்துக்கொண்டே 

“சிவா நிக்கீறான் பாரு சீக்கிரம் சொல்லு” என்க

“ஏ… என்ன த்தான் புரியலை?” என தினறியவளை பார்த்து சிரித்தவன். 

“இனிமேல் என் புருஷன மட்டும்தான் அத்தானு சொல்லுவேன்னு சொல்லு சது” என அவன் கேலி பேச எதுவும் புரியவில்லை என்றாலும் “ஆமா” என தலையாட்டி வைத்தாள். அவன் நெருக்கம் அவளை பித்தாக்கிகொண்டிருந்தது. செர்ரி பழம் போல் ஆங்காங்கே சிவந்திருந்த முகத்தில் தமிழ் ஆழ்ந்துவிட சிவாதான் நகர வேண்டியதாகியது.