அத்தியாயம் 4

தன் முன் அமர்ந்திருந்த சிவாவை சலிப்பாக பார்த்தான் சுரேஷ். 

“நான் சொன்னதுல எந்த மாற்றமும் இல்லை மச்சான். எனக்கு தான் முதல் உரிமை இருக்கு” அவன் திமிர் பேச்சில் அடிக்கடி எட்டிப்பார்த்த கோபத்தை முயன்று அடக்கினான் சுரேஷ். 

“முறை உரிமை எல்லாமே அப்பறம் தான் சிவா. உன்னை சாதனாக்கு பிடிக்கனும் அது மட்டும் இல்லை நாங்க வீட்டோடு மாப்பிள்ளை தேடுறோம்” அப்படியாவது விலகிவிடமாட்டானா என சொன்னான் சுரேஷ்.  

சாதனாவிற்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்ததில் இருந்து சுரேஷை நச்சரித்துக் கொண்டிருந்தான் சிவா. 

“எந்த காலத்தில் என்ன பேசுறிங்க? நான் இங்கே பக்கத்து தெருவில் தானே இருக்கேன்? பாருங்க மச்சான் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை? என் தங்கச்சியை நீங்க தானே கல்யாணம் பண்ண போறீங்க. அப்பறம் ஏன் யோசிக்கனும்?” விடாகண்டனாக அவன் முயன்றான். 

அவன் பேச்சில் சுரேஷிற்க்கு பகிர் என ஆனது. சிவாவின் தங்கையான  அனித்தாவை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அவள் வாய்க்கு பயந்து அவர்கள் வீட்டுப்பக்கமே யாரும் தலையை திருப்ப மாட்டார்கள். அப்படிபட்ட அமைதியே உருவான பெண்ணை பெற்றவர்  அவன்  தாய்மாமன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே  சென்று வந்து கொண்டிருந்தனர் சுரேஷ் வீட்டினர். இதில் அதிமுக்கியமான விடயம்  சாதனாவிற்க்கு அனித்தாவை சுத்தமாகவே பிடிக்காது என்பதே. 

“அனித்தா எனக்கு தங்கச்சி மாதிரி சிவா தப்பா பேசாதே” என அவனை அதட்டியவன் முகம் வேர்த்தது. 

“அது எப்படி சுரேஷ் தங்கச்சி மாதிரி நினைச்ச நீங்கதான் என் தங்கச்சி வரும் போதெல்லாம் சைட் அடிச்சிங்களோ?” என அவன் முறைக்க அசடுவழிந்தான். அனிந்தா பேரழியாக இருந்தால் பாவம் என்ன செய்வான் அவனும். 

‘ஏதோ தப்பி தவறி இரண்டு மூன்று முறை சைட் அடிச்சிருப்பேன் அதுக்காக அவளை கட்டிகிக்கனுமா? அதுக்கு நான் சன்யாசம் வாங்கிட்டு இமயமலைக்கு போயிடுவேன் டா’ அவன் பார்வையை சரியாக புரிந்துக்கொண்ட சிவா நமட்டுசிரிப்பு சிரித்தான். 

“எனக்கு வேலை இருக்கு சிவா” என எழுந்து ஓட பார்த்தான் அவன். 

“இருங்க மச்சான் உங்க பிரச்சினையை அப்பறம் பார்க்கலாம் என் தங்கச்சி உங்களுக்கு தான் நீங்க பயப்படவே வேண்டாம்” 

‘என் பயமே அதுதான் டா வென்ன’ சுரேஷ் அழுவதற்க்கு தயாராக அந்த பேச்சை அப்படியே விட்டான் சிவா. 

“புரிஞ்சிக்க சிவா சாதனாவை விட்டு எங்களால் இருக்க முடியாது” 

“அதை சாதனா சொல்லட்டும்  மச்சான்” சூழ்நிலையை இறுக்கமாக்கியது அவன் பேச்சு

“நீ தேவையில்லாம பேசுற சிவா” 

இருவருமே முறைத்துக்கொண்டனர்

“நீங்க ஒத்துகிட்டா உங்களுக்கு தான் நல்லது மச்சான்” சிவா மிரட்ட சுரேஷ் கண்கள் சிவந்தது. 

“இல்லனா என்னடா பண்ணுவ?” 

“வீடு புகுந்து தூக்குவேன் அதற்கான உரிமை எனக்கு இருக்கு”

“என்னடா சொன்ன?” என கொந்தளித்த சுரேஷ் சிவாவின் சட்டையை கொத்தாக பற்றி உலுக்க

“ஆமாடா உன் கண் முன்னே அவளை தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன் டா” என்ற சிவாவின் வாயில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் சுரேஷ். 

ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து உருண்டு புரண்டனர். ஊர் கூடியது அனைவரும் அவர்களை பிரிக்க போராடினர். திமிற திமிற இருவரையும் பிரித்து நிறுத்த வாய்ப்போர் தொடர்ந்தது. திரண்டு நின்ற ஊரை தனக்கு சாதகமாக மாற்ற நினைத்தான் சிவா. அவன் நாக்கு விஷ கொடுக்காக மாறியது. 

“டேய் உன் தங்கச்சி என்கூட கெட்டுப் போனவடா. தாலி கட்டலைனாலும் நான் தான் அவ புருசன்” என கத்த அனைவருமே அதிர்ந்துவிட்டனர். சற்றும் யோசிக்காமல் சுயநலமாக சிவா பேசியது ஒரு பெண்ணிற்கு எப்பெயரை பெற்று தரும் என்பதை உணராது வார்த்தையை விட்டு விட்டான் அவன். அந்த நொடி அவள் கிடைக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே. 

“டேய்ய்ய்ய்ய்” சுரேஷ் பாய சிவா குற்றுயிராகப்பட்டான். விஷயம் காட்டுதீயா பரவியது  தவறே செய்யாமல் சாதனா தரம் இறக்கபட்டாள். அதனை சிலர் நம்பாது சிவாவை சாடினர் பலர் கீழ்தரமாக பேசி சிரித்தனர்.  சுந்தரமூர்த்திக்கு செய்தி சொல்லபட நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்துவிட்டார். இது எதுவும் தெரியாது சாதனா கல்லூரிக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் தமிழ்மாறனை பார்த்தாள். 

எப்பொழுதும் அமரும் அதே டீக்கடையில் அமர்ந்து எப்பொழுதும் போல் கையில் இருந்த செய்தித்தாளினை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தான். 

அவள் பழைய சாதனாவாக இருந்திருந்தால் அவன் பக்கம் பார்வையை கூட திருப்பியிருக்க மாட்டாள். அத்தனை அசட்டுத்தனம் கொண்ட துருதுரு பெண்ணான நம் கதாநாயகிக்கே அவனை பார்த்தால் உள்ளுக்குள்ளே ஒரு பயம் சிறுவயது முதல். ஆனால் அந்த நிகழ்விற்கு பிறகு அவனை கடக்கும் போதெல்லாம் அவள் மனம் சலனம் கொண்டது. கால்கள் நடுங்கியது அடுத்த அடியை நகர்த்தவே சிரமப்பட்டு படபடக்கும் இதயத்தையும் சிவப்பு நிறம் கொள்ளும் முகத்தையும் மறைக்க அவள் படும் பாடு அதிகம். அதுவும் அடிக்கடி அவனை காண துடிக்கும் விழிகளை நினைத்து மனதில் புலம்பாத நாளேயில்லை. 

இன்றும் அவனை கண்டு மூச்சடைக்க  அந்த  கனவும் நினைவில் சேர உதறும் காலை மெல்ல நகர்த்தி அங்கிருந்து ஓடி விட நினைத்து வேகமாக நடையை போட்டவளை இடைமறித்த அவள் தோழி  மறுக்க மறுக்க சாதனாவை அதே டீக்கடைக்கு இழுத்துச் சென்றாள். 

“நான் வரலை அபி கையை விடு ப்ளீஸ்” அவள் மறுக்க அதை காதில் வாங்காமல் அழைத்து வந்தவள் அவளை தனியே விட்டுவிட்டு அவர்களுக்கு தேவையானதை வாங்க சென்றுவிட்டாள் அபி. 

ஓர விழியால் அவனை பார்த்த சாதனா கூர்விழியால் தன்னையே ஆராய்ச்சி பார்வை பார்த்த தமிழ் மாறனை கண்டு திடுக்கிட்டாள்.

“இவங்க ஏன் இப்படி பாக்குறாங்க”

முகம் சூடாக கால் கட்டை விரலை தரையில் அழுத்தினாள். என்றும் ஏர் எடுத்து பார்காதவன் திடிரென்று வைத்த கண் வாங்காமல்  பார்க்க அவளுக்கு பதட்டமாகியது. அவள் தோழி கொடுத்த டம்ளரை தவறவிட்டவள் அவன் அழுத்தமான பார்வையிலிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிவிட்டாள். 

ஆலங்கட்டி மழையா மனசு

உருலுதடா

ஆசையெல்லாம் அடைமழைக்கு

தெரளுதடா

நான் பாய்மரமா 

மெதக்குரனே 

உன்ன மொரட்டுதனமா காதல் பண்ண

திருட்டுத்தனமா தொரத்தி வந்தேனே

ஏலம்மா ஏல

உன் நினைப்பு உச்சன் தலைகுள்ள ஓடுதடா 

தமிழ்மாறன் அவளை கவனித்தலில் புதிதாக முளைத்த சிறகோடு முகம் சிவக்க அங்கிருந்து ஓடி மறைந்தாள் சாதனா. 

தமிழ்மாறன் அவளை அளவீடும் பார்வைதான் பார்த்தான். மதியமே அவனிடம் வம்பு பேசி சிரித்திருந்தனர் சிலர். “என்ன தமிழ் உன் தாய்மாமான் பொண்ணுக்கும் அறிவு பையனுக்கும் ஏதோ கசமுசாவாம்” என சிரித்தவர்களை உணர்ச்சியற்று பார்த்தவன் அமைதியாகவே நகர்ந்துவிட அதற்கும் சிரித்த கூட்டத்தை நினைத்து எரிச்சலில் இருந்தவனுக்கு கவனம் செய்தி தாளில் பதியவில்லை. 

“அடிச்சாலும் திருந்தாத ஜென்மங்கள் எவனோ சொன்னானு அபாண்டமா பேசுறாங்க” மனம் புகைந்தான் தமிழ்மாறன்.  பதிலடி கொடுத்துவிடலாம் தான் ஆனால் அதையும் வேறு கதையாக திரித்து உலவ விடுவார்கள் தேவையா அவனுக்கு? 

சாதனா வந்ததும் அவன் கவனம் அவள் மேல் பதிய அவனே அறியாமல் ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் நினைவில் தன்னை தள்ளிவிட்டு மிரட்சியோடு விலகி அமர்ந்த சாதனா வந்தாள். 

அவள் குழந்தை முகத்தை கூர்ந்து பார்த்தான் “இவள் அப்படி செஞ்சுருப்பாளா?” மனம் கேட்ட கேள்வி அவனுக்கே அபத்தமாக இருந்தது.

அவளை தவறாக நினைக்கவில்லை அவன் அப்படி சொல்வதைவிட அவனால் சாதனாவை தவறாக நினைக்க முடியவில்லை. 

அவன் அடிமனம் ஆதாரமின்றி அவளை நம்பியது அவளுக்காக இறக்கப்பட்டது கவலையின்றி உயிர்ப்போடு இருக்கும் அந்த அழகிய முகம் கண்ணீரில் கரைவதை  நினைத்து பாவப்பட்டது. அவ்வளவே அவளுக்காக அவன் யோசித்தது அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிட்டான். 

சாதனா துள்ளலோடு வீட்டுக்குள் வந்தவள் தந்தையின் அறைக்கு செல்ல அங்கே அவன் அண்ணன்மார்கள் மூலைக்கு ஒருவராக அமர்ந்திருந்தனர். 

“என்ன எல்லாரும் இங்க உக்காந்திருக்கீங்க” என்றவளுக்கு அவர்கள் கலங்கிய முகம் எச்சரிக்கை செய்ய பதைப்போடு படுத்திருந்த தந்தையை நடுங்கும் கையால் எழுப்பினாள். 

“அப்பா…” அவள் குரல் கேட்டு சிரமபட்டு கண்ணைத் திறந்தார் சுந்தரமூர்த்தி. அவர் நிலையை கண்டு கண்கள்  உடைப்பெடுக்க “என்னப்பா ஏன் படுத்திருக்கிங்க?” என கேட்டவளை கண்டு தந்தைக்கும் கண்கள் கசிந்தது. 

“உடம்பு சரியில்லையா ப்பா…” 

“டாக்டர்ட போனிங்களா?” என்ற மகளுக்கு “ஆம்” என தலையசைத்தார் சுந்தரமூர்த்தி. 

“அண்ணா அப்பாவுக்கு என்னன்னு சொல்லு” என உதடுபிதுக்கியவளை பார்த்து மனம் நடுங்கியது சுரேஷ்க்கு. 

“ரத்த கொதிப்பு அதிகமாகிட்டு டா அம்மு வேறெதுவும் இல்லடா” என்று சமாளித்தான் சதிஷ். 

“பொய் சொல்லாத சின்னவனே?  நீங்க ரெண்டும் பேரும் அழுதிங்களா? வேற ஏதோ இருக்கு என் அப்பாக்கு என்னாச்சு?” என வீரிட்டு அழுதவளை சமாதானம் செய்ய இயலாது  தவித்தனர் இருவரும். 

“ஒன்னும் இல்லடா அம்மு” என நலிந்த குரலில் சுந்தரமூர்த்தி மகளை சமாதானம் செய்ய 

“என்ன மச்சான் ஒன்னும் இல்லைனு சொல்றீங்க. சாதனாக்கு என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என்றவாறு உள்ளே வந்த அறிவை எரிப்பது போல் பார்த்தனர் மூவரும். அறிவு சிவாவின் தந்தை. 

“நீங்க எதுவும் சொல்ல தேவையில்லை மரியாதையா வெளியே போயிடுங்க” சுரேஷ் கத்த விஷயம் பெரிது என புரிந்தது சாதனாவிற்கு. சுரேஷ் பேச்சில் அறிவு முகம் சுருங்க சண்டைக்கு வந்தார் அவர் மனைணவி நீலா. 

“சுரேஷ் மரியாதையா பேசு அவர் வயசு என்ன உன் வயசு என்ன? “

“உங்களுக்கு மரியாதை தரணும்னு எங்களுக்கு என்ன அவசியம்?” என சதிஷ் எகிர பார்வையால் அவனை அடக்கினான் சுரேஷ். 

“பிரச்சனை வேண்டாம் இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லை. வெளியே போயிடுங்க” என்றவனை முறைத்தவர்கள் அவனை மெத்தனமாக பார்த்தவாறு சென்று நடு கூடத்தில் அமர பல்லை கடித்தனர் இருவரும். 

“என்ன பிரச்சனை இங்க? சொல்லுங்க?” சாதனா அதட்ட வேறு வழியின்றி மொத்தமாக சதிஷ் சொல்லிவிட அதிர்ந்து தரையில் அமர்ந்தாள். 

“எப்படிபட்ட பெயரை எனக்கு  தந்துவிட்டான் பாவி” தொண்டை அடைத்தது அவளுக்கு.  

“இந்த இழுக்கு அவளோடு மட்டுமா? தாய்க்கும் தாயாக  சீராட்டிய தந்தையையும் சகோதரர்களையும் சேர்த்தல்லவா பாதிக்கும்” தரையை வெரித்த தங்கையின் வேதனை தாளாமல் அவள் அருகில் அமர்ந்தான் சதிஷ். 

“அம்மு அண்ணா இருக்கோம் மா அந்த நாயை மரத்தில் கட்டி வச்சி அடிக்கிற அடில அவன் வாயாலேயே உண்மைய சொல்ல வைக்கிறேன்”

“எந்த ஆதாரமும் இல்லாமல் அவன் சொன்ன பொய்யை நம்பினவங்க எந்த ஆதாரத்தை காட்டினா நான் அப்படிபட்ட பொண்ணு இல்லைனு நம்புவாங்க அண்ணா” என உடைந்தவளை கான சிவாவை கண்டதுண்டமாக வெட்ட தோன்றியது. 

“அவங்க உன்ன நம்புனா என்ன? நம்பாட்டி என்ன டா? ஊரு ஆயிரம் பேசும்”  சதிஷ் பேச பேச அவள் நினைவுகள் தமிழை நோக்கி சென்றது. அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் வேறாக தெரிய நெஞ்சில் பெரும் அழுத்தம் வலியாக மாறியது. 

‘அவனும் என்ன அசிங்கமா நினைச்சிதான் அப்படி பார்த்தானா? மாறா நீயும் என்ன அப்படி நினைச்சியா?’ மனம் அதிர்ந்து கண்கள் பொழிய பெரும் கேவலோடு 

“இல்ல நான் அப்படி செய்யல அம்மா…. நான் என்ன செய்வேன் ஐயோ…ஐயோ…” என தலையில் அடித்துக்கொண்டு கதறியவளை சமளிக்கும் வலி தெரியாமல் தவித்தனர் மூவரும். அந்த கணம்  மாறன் மீது அவள் வைத்திருக்கும் காதலை உணர்ந்தாள் சாதனா. அந்த கனவின் தாக்கம் தமிழ்மாறன் அவள் மணாளனாக பதிந்து போயிருந்ததான். தன்மேல் விழுந்த அவப்பெயர் கூட அவளை பெரிதாகப் பாதிக்கவில்லை மாறனின் பார்வையில் தான் தப்பான பெண்ணாக தெரிந்தது அவள் உயிரை வதைத்தது. 

‘என்ன நம்பு மாறா நான் எந்த தப்பும் செய்யலை’ என சுருண்டு அண்ணன் மடியில் விழுந்தவளை தாங்கிக் கொண்டான் சதிஷ். 

சுரேஷ் கோபமாக வெளியே சென்றவன் அறிவை எழுப்பி வெளிபுறம் தள்ள அவனை பிடித்து தள்ளிவிட்டார் நீலா. 

“என்னடா  கை நீலுது? அடக்கமா இருந்தா உங்களுக்கு தான் நல்லது இல்லை” என மிரட்ட 

“என்னமா பண்ணுவ? பொம்பள னு பார்க்கிறேன் மரியாதையா உன் புருசனை கூட்டிட்டு போயிடு”

“வார்த்தைய பார்த்து பேசுப்பா ஏதோ என் புருசன் தங்கச்சி மகளுக்காக பாக்குறோம்” என்றவர்

“இங்க பாரு சுரேஷ் நாங்க வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பறோம். சாதனாவ சிவாக்கு கட்டிக்கொடுத்திருங்க” என முடிக்க அவன் ஆத்திரம் உச்சம் தொட்டது. 

“நான் செத்தாலும் அது நடக்காது” அவன் கத்த 

“சின்ன புள்ள வெள்ளாம வீடு வந்து சேராதுனு சரியா இருக்கு. நீ உன் கோபத்தை முன்ன வைக்காத சாதனா வாழ்க்கையை பாரு ஊரே அவளை சிவா கூட சேர்த்துவச்சி பேசுறாங்க. அவங்க ரெண்டு பேரும் கட்டிக்கிறது தான் சரியா இருக்கும். நடந்ததை மறந்திட்டு ஆக வேண்டியதை பாக்கலாம்” நீலா பொறுமையாகப் காயை நகர்த்தினாள். எப்படியும் சாதனாவிற்கு சேரவேண்டிய சொத்துக்கள் அவர்கள் சொத்தைவிட இரண்டு மடங்குகள் அதிகம் அதை தவறவிட அவர்களுக்கு என்ன பைத்தியமாபைத்தியமா? சிவா போட்ட கோட்டில் ரோட்டை போட்டார்கள் இருவரும். 

முகம் இறுக நின்றான் சுரேஷ். அவசரத்தில் எடுக்கும் முடிவில்லையே தங்கை வாழ்க்கை முன்னே நிற்க ஓய்ந்து அமர்ந்தான் அவன். 

“இந்த பய இப்படி செய்வான்னு நாங்களும் நினைக்கல சுரேஷ். நடந்தது நடந்து போச்சி ரெண்டு பேருக்கும் முடிச்சி வச்சிருவோம். இன்னைக்கு சொத்துபத்து இருக்குனு கட்டிக்க வருவானுங்க ஆனா நாளைக்கு இதை சொல்லி காட்டிட்டா நம்ம புள்ளை வாழ்க்கைல வினாப்போகும்” அறிவு சுரேஷ் மண்டையை கழுவ முயன்றார். இருவரும் மாறி மாறி பேசவும் சுரேஷ் முகம் யோசனையாக அவன் எதிர்க்க மாட்டான் என்ற நம்பிக்கையில்

“என்னாப்பா அமைதியா இருக்க வர முகூர்த்தம் நல்லா இருக்கு அப்போவே முடிச்சிரலாமா?” என்றார் நீலா பல்லை காட்டியபடி. ஆனால் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து வந்த எதிர்ப்பில் அவர்கள் தந்திரம் பலிக்காது போனது. 

“என்ன சொல்லற சாதனா?” நீலா அதட்ட திடமான நடைபோட்டவள் “காது கேட்கலையா? உங்க பிள்ளை மாதிரியான ஒரு பெருக்கிய கட்டிக்க எனக்கு விருப்பமும் இல்ல அவனுக்கு தகுதியும் இல்லை” என்றவள் தோரணையோடு அமர்ந்தாள். 

“ஏய்ய் என் பிள்ளைய விட்டா உன்னை கட்டிக்க எவன்டி வருவான். ஒழுங்கா நாங்க சொல்றதை கேட்டு அடக்கமா இருக்க பார்” என்றவர் நெற்றியில் வந்து விழுந்தது பூ ஜாடி. 

“ஐய்யே…  அம்மா… ” நீலா அலற அடுத்த பூ ஜாடியை கையில் எடுத்துக்கொண்டு சாதாரணமாக அமர்ந்தாள் சாதனா. 

“நீங்க சொன்ன மாதிரி அடுத்த முகூர்த்தத்திலேயே நாள் குறிக்கலாம் ஆனா கல்யாண நாள் இல்லை உன் மகனுக்கு கருமாதி நாள்” என்றவள்

“சின்னவனே எனக்காக சிவாவை கொல்ல மாட்டியா?” என அவனை பார்க்க “இதோ” என தயாரானான் சதிஷ். 

“ப்ச் சரி நீ வேண்டாம் பெரியவனே இப்பேவே அவன் தலை எனக்கு வேணும் செய்வியா? ” என அவனை பார்க்க அந்த நொடியில் அதை நிறைவேற்ற துடித்தது அவன் கரங்கள். 

“சொல்லு அம்மு” என எழுந்து நின்றவர்களை மிரண்டு பார்த்த சிவாவை பெற்றவர்கள் முகம் கருத்தது. 

“கொலை செஞ்சிட்டு தப்பிக்க முடியுமா…  ஜெயிலில் கலி தான் திங்கனும். இவங்கள அனுப்பிட்டு நீ நிம்மதியா இருந்திடுவியா?” அவர்கள் தட்டு தடுமாறி சாபால் விட கண்ணை சுருக்கினான் சாதனா. 

“அதுவும் சரிதான் ம்ம்… எப்படியும் என் பேரு அடி வாங்கிட்டு அதுகூட பரவால்ல அது உங்க பையன் சிவாங்கும்போது தான் கொமட்டுது ச்சை. சரி என்ன பண்றது வாங்கின பேரு வாங்கியாச்சு கூடவே கொலை பலியும் சேரட்டும். எப்படினு தெரியனுமா? என் கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் தற்காப்புக்காக கொன்னுட்டேனு சொல்வேன். ஆதாரமா வெர்ஜினிட்டி சர்டிபிக்கட் காட்டுவேன். அப்பறம் நம்ம ஊரே எனக்கு சாட்சி சொல்லும் செய்யட்டுமா?” என்க வந்த சுவடு தெரியாமல் ஓடிவிட்டனர் இருவரும். அவர்கள் சென்றது தான் தாமதம் வெடித்த அழுகையோடு உள்ளே ஓடிவிட்டாள் சாதனா. 

தன் பெயரை  களங்கம் செய்தவனை மணந்துகொள்ள எந்த பெண்தான் விரும்புவாள். அதுவும் மனதில் தமிழை சுமப்பவளுக்கு அந்த பேச்சே ஒவ்வாமையை தந்தது. ‘இவர்கள் மகனால் தானே என் மாறன் என்னை தவறாக நினைத்தான்’ அந்த கோபத்தில் அவர்களை ஓட விட்டவள் மீண்டும் துவண்டுவிட்டாள். 

(எபி சின்னதா இருந்தா சொல்லுங்க ரீடர்ஸ் 😇😇)