அத்தியாயம்-23

காலை ஏழு மணி. பிருத்விகா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

சந்திர விலாசத்தில் ஆர்ப்பாட்டத்துடன் ஒரு கார் வந்து நின்றது. அது வந்த சத்தத்தில் தேவகி அம்மாளே எழுந்து வந்து வெளியில் வந்தார். புன்னகை முகத்துடன் இறங்கினான் கிருஷ். இறங்கியவன் தன் காரில் இருந்து ஒரு பெரிய டிராலியை எடுத்து வைத்தான்.

அதற்கு பின்னால் இன்னொரு டிராலி. அவன் அதைத் தூக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது வருணும் வெளியில் வந்தான்.

“ஹே.. கிருஷ்ணா.. என்ன பாரின் போகற மாதிரி கிளம்பி வந்துருக்க?”

“விட்டா உசுரு போயிரும். ஒரு டிராலியில் என்னோட டிரஸ். என்னோட இன்னொரு டிராலியில் புக்ஸ்.”

“என்னோட புக்ஸ் இருக்கே?”

“யா.. ஐ நோ.. ஆனால் எனக்கு என்னோட புக்ஸ் வேணும். ரூம் ரெடியா?”

“ரெடி.. ரெடி..” என தலையை ஆட்டினான் வருண்.

“ஹாய் தேவகிம்மா.. உங்களைப் பத்தி நிறைய பிருத்வி சொல்லிருக்காள்.” என்று இயல்பாகப் பேசினான்.

கன்னத்தில் குழியுடன் அழகாகப் பேசுபவனை இமைக்காமல் பார்த்தார் தேவகி அம்மா.

“என்ன தேவகி அம்மா இப்படி பார்க்கறீங்க?”

“ஒன்னுமில்லை தம்பி.. நீங்க நல்ல இலட்சணமா இருக்கீங்க?”

“இலட்சணமா? ஒ..  தேங்க்ஸ்..”

கிருஷ் புத்திசாலி என்றாலும் அவன் பிறரிடம் மிக இயல்பாகப் பழகுவான். அதோடு துரு துருப்பும், நகைச்சுவையும் அவனுடைய இரட்டைக் குணங்கள். அவன் அழகும் சேர மிஸ்டர். நைஸ் காய் தேவகி அம்மாளை உடனே கவர்ந்து விட்டிருந்தான்.

ஒரு டிராலியை இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல மற்றொரு டிராலியை வருண் எடுத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ் வருண்.” என்றபடியே அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தான் கிருஷ்.

வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தவன், “ஹே.. வருண்.. சும்மா சொல்லக் கூடாது வீடு சூப்பர். உனக்கு நல்ல டேஸ்ட்.” என்றான்.

“எனக்கு இல்லை.. என்னோட அம்மாவுக்கும் அவங்க மருமகளும் தான் வீட்டை டிசைன் செஞ்சாங்க.”

“நைஸ்..”

“என்னோட ரூம் எங்க?”

“பர்ஸ்ட் புளோர்.. லைப்ட் சைட் ரூம்.”

“பர்ஸ்ட் புளோரா.. இந்த டிராலியை வேற தூக்கிட்டு போகனுமே..”

“கீழ வச்சுடு. அப்புறம் வேலண்ணன் வருவார். அவர் எடுத்து வச்சுடுவார்.”

“ஷ்.. ஆமால்ல.. ஐ பார்காட். நீ யாருனு? நானே எடுத்து வச்சுக்கிறேன்.” என்று பதில் கூறிய கிருஷ்ஷே அந்த டிராலியை இழுக்க ஆரம்பித்தான்.

“யூ..” என்ற வருணும் டிராலியை இழுத்துக் கொண்டு அவன் பின்னால் ஏற ஆரம்பித்தான்.

ஒவ்வொரு படிக்கட்டாக எடுத்துக் கொண்டு செல்வதற்குள் ஒரு வழியாகிவிட்டான் வருண். யாராக இருந்தாலும் படிக்கட்டில் அவ்வளவு கனமுள்ள டிராலியை எடுத்தால் சிரமப்பட்டே தீர வேண்டும். அதுவும் புத்தகங்கள் உடைகளை விட மிக எடையுள்ளவை என்பதால் வருண் தடுமாறிவிட்டான்.

“ஸ்டாமினா பத்தலை வருண். சீரியல் கில்லர் இதை விட ஸ்டாராங்கா இருப்பான்.” என்றான்.

“டேய்.. பேசாம போ.. டிரஸ் வச்சது உனக்கு.. புக்ஸ் வச்சது எனக்கா? டைமிங்கில் நீ நல்ல செய்யற?”

திரும்பு அவனை ஒரு கேலிப் புன்னகையுடன் பார்த்த கிருஷ், “என்னோட பிரண்ட் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்.. அதுக்கு எல்லாம் எனக்கு டைமிங்கில் கொடுக்கனும். அது யாரா இருந்தாலும்.. சான்சை விட மாட்டேன்..” என்றான்.

அவன் குரலில் இருந்த உறுதியில் வருண் சில நொடிகள் அவனை ஆழ்ந்து நோக்கினான்.

“பிரண்டு மட்டுமா?” என்ற கேள்வி அவன் வாயிலிருந்து அவனை அறியாமல் வந்திருந்தது.

அதற்கும் திரும்பி ஒரு ஏளனப் புன்னகையை பரிசளித்தான் கிருஷ்.

“அன்பார்ச்சுனேட்டலி என்னோட லவ் ஆஃப் லைஃப் வேற ஒரு பொண்ணு.”

“வேற ஒரு பொண்ணா?

“ம்ம்ம்.. அதெல்லாம் உனக்குப் புரியாது. சோ பேசாமல் பெட்டியைத் தூக்கு.”

தன்னுடைய பெட்டியைக் கூட இதுவரை வருண் தூக்கிப் பார்த்திராத தேவகி அம்மாள் கிருஷ்ஷின் பின்னர் டிராலியைத் தூக்கிச் செல்வதை வாயைப் பிளந்தபடி பார்த்தப்படி நின்றார்.

‘இதா நம் வருண் தம்பி’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தார். வருண் நிறைய மாறி விட்டிருந்தான். ஆனால் அதைப் பார்ப்பதற்காக சந்தர்ப்பம் தேவகி அம்மாளுக்கு இதுவரை கிட்டியது இல்லை என்பதே உண்மை.

“என்னோட வீட்டுக்கு இன்வைட் செஞ்சதுக்கு என்னையை போர்ட்டர் வேலை பார்க்க வச்சுட்ட..” என்று சலித்துக் கொண்டபடி அவனுடைய அறையில் டிராலியை வைத்தான் வருண்.

“இதுக்குப் பேரு வேலை இல்ல. மியூட்சுவல் பிரண்டுக்கு ஹெல்ஃப். புரியுதா? அது மட்டுமில்லால் நமக்கு இன்னொருத்தர் ஹெல்ஃப் பன்ன வருவாங்கனு காத்திட்டு இருக்கக் கூடாது. பிருத்வியைப் பாரு. எவ்ளோ பெரிய பிரச்சினையில் இருக்காள். ஆனால் நம்மகிட்ட இதுவரைக்கும் வாயைத் திறந்து ஹெல்ஃப் பன்னுனு கேட்கலை. தன்னோட பிரச்சினையில் யாருக்கும் எதுவும் ஆகிடக் கூடாதுனு எண்ணம்.”

“ஆமா.. கேட்ருக்க மாட்டா.. இதுக்கே நான் எப்படி எல்லாம் பிளாக் மெயில் செய்ய வேண்டி இருந்ததுனு எனக்கு மட்டும் தான் தெரியும்?”

“ஆனால் உங்கிட்ட எனக்குப் புடிச்ச விஷயமே இதான். உனக்கு மட்டும் தான் பிருத்விகா அடங்குவா. என்னை எல்லாம் ஃப்பூ ஊதிவிட்டு போயிடுவா. குட் ஜாப் மேன்.”

“முதல் தடவையா என்னோட எபிலிட்டிகாக நானே பெருமை பட்டுகிட்டேன்.” என்று சலிப்புடன் கூறியவன் மெத்தையில் அமர்ந்தான். அவன் முகத்தில் கவலை படிந்திருந்தது.

வருணின் தோளில் கை வைத்தான் கிருஷ்.

“ஹே.. சில்.. நீதான் எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுட்டையே.. அப்புறம் என்ன?”

“செஞ்சுட்டேன்.. ஆனால் என்னமோ மனசுக்குள்ள.. என்னனு எக்ஸ்பிளைன் செய்ய முடியலை.”

“வருண்.. இது பிருத்விகாவோட லைஃப் அண்ட் டெத் சுட்சுவேசன். நீதான் எல்லாரையும் விட அலார்ட்டா இருக்கனும். பிருத்விகா சொன்ன மாதிரி நீ ரொம்ப ஷார்ப். கன்பூயூஸ் ஆகாத.. உன்னோட லவ் ஆஃப் லைப்க்கு நீ இப்ப ரொம்ப தேவைப்படற..”

“அது உனக்கு எப்படி? நான் முகத்தில் எப்பவும் காட்டிகிட்டது கிடையாது.” கிருஷ்ஷை நிமிர்ந்து பார்த்தான் வருண்.

“யாருக்குத்தான் தெரியாது?  பிருத்விகாவைத் தவிர… நீ எவ்வளவு மறைச்சாலும் உன்னோட அன்பு அப்பப்ப புகை மாதிரி காட்டிக் கொடுத்திடும். மாதுளம் பழ ஜூஸ் பிருத்விகாவுக்கு பிடிக்காது. ஆனால் அவளோட ஹெல்த்துக்காக நீ குடிக்க வைப்ப. பிகாஸ் அவளுக்கு அல்சர் அப்பப்ப வரும். அதுவும் பீவர் டேப்லெட் போட்டா நிச்சயமா.. சோ எப்படியாவது குடிக்க வச்சுடுவ. அப்புறம் உன்னோட பாடி லாங்குவேஜ். உன்னை குளோஸா அப்சர்வ் பன்ன ஆட்களில் நானும் ஒருத்தன். அதிலும் ஒன் சைட் லவ்வில் இருக்கற எனக்குத் தெரியாதா?”

“ம்ம்ம்.. யாரு அந்த பொண்ணு?”

“வருண்.. உன்னோட கண்ணு எப்பவும் ஒரு பொண்ணு மேலதான் இருந்துச்சு. நேரம் வரும் போது சொல்றேன். நான் கூட உன்னை ரொம்ப ஆட்டியூட். தஸ்வி மாதிரி போஷ், ஸ்னாப்னு நினைச்சேன். அதனால் தான் பிருத்விகாவை இன்சல்ட் செய்யறேனு நினைச்சேன். ஆனால் அப்படி இல்லைனு போகப் போகப் புரிஞ்சுது. ஹோப் வி கெட் அலாங்க்.” என வலது கரத்தை நீட்டினான்.

அவனின் நட்புக் கரத்தை ஒரு புன்னகையுடன் சிரித்தப்படி ஏற்றுக் கொண்டான் வருண்.

சில மணி நேரம் கழித்து,

“ஏய் கும்ப கர்ணி.. எழுந்திரு..”

தன் நண்பியின் காதில் கத்திக் கொண்டிருந்தான் கிருஷ்.

“ஹே.. பிருத்வி.. எழுந்திரு?”

சத்தத்தில் அங்கும் அசைந்த பிருத்விகா கையை நீட்ட அது நேராக கிருஷ்ஷின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

“உனக்கு சோறு கொண்டு வந்தா நீ என்னை சாத்திட்டு இருக்கற.. எழுந்திரு பக்கி.. டைம் பதினொன்னு..” சத்தமாக கிருஷ் காதிற்கு அருகில் கத்தவும் சட்டென எழுந்து அமர்ந்தாள் பிருத்விகா.

அவள் தடாலடியாக எழுந்ததில் குட்டித் தலையணை ஒன்று கிருஷ்ஷின் மீது விழுந்தது.

“கிருஷ்..”

தூக்கத்தின் பிடியில் இன்னும் இருந்த பிருத்விகா கிருஷ்ஷைப் பார்த்ததும் அவன் பெயரைக் குறிப்பிட்டாள்.

“மகாராணி எழுந்து வீட்டீர்களா? எருமைமாடு மாதிரி தூங்கிட்டு போ பிரஷ் பன்னிட்டு வா.. சாப்பிட்டு மார்னிங்க் டேப்லெட் போடனும். இப்பவே லஞ்சு வந்திரும் போல..”

கிருஷ்  கூறியதும் நேரத்தைப் பார்த்தாள். மணி பத்து ஐம்பம் என்று கடிகாரம் காட்டியது.

எழ முயற்சித்தவளை கையைப் பிடித்து எழுப்பி விட்டான் கிருஷ்.

பாத்ரூம் வரை விட்டவன் கிரட்சையும் கையில் கொடுத்து விட்டான்.

“நான் தேவகி அம்மாவை வரச் சொல்றேன். அவங்க எழுப்பியும் நீ எந்திரிக்கவே இல்லைனு புலம்புனாங்க..”

நம் தூக்கத்தைக் கெடுப்பவர்கள் பெஸ்ட் பிரண்ட் என்பதின் இலக்கணம் மாறாமல் தன் தோழியின் தூக்கத்தைக் கலைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் கிருஷ்.

தேவகி அம்மாள் வரவும் அவர் உதவியுடன் குளித்து முடித்து காலை உணவை உண்டு மாத்திரையும் உண்டாள். மெத்தையில் அமைதியாக தன் கைப்பேசியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தவளின் அறைக்குள் கதவைத் தட்டி விட்டு வந்தான் கிருஷ்.

“குட் நூன் பெஸ்டி..”

முகத்தை சுருக்கி, “குட் நூன்.. ஏண்டா எழுப்புன? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருப்பேனில்லை..” என்றாள்.

“என்ன இன்னும் கொஞ்ச நேரமா? வழக்கமா நீ இப்படி எல்லாம் தூங்க மாட்ட.. ஏன் நைட் தூங்கலையா? எந்த இடம் கிடைச்சாலும் நமக்குத்தான் தூக்கம் வருமே.. அப்புறம் ஏன்? அதுவும் நைட் முழுக்க விழிச்சுருந்தாலும் நீ மார்னிங்க் எந்திருச்சுருவ? வாட் இஸ் த இஸ்யூ?”

“ஒன்னுமில்லை.. வலியில் சரியாகத் தூங்கலை..”

“வலியிலா.. அதுக்குத்தான் பெயின் ரீலிவர் கொடுத்தாங்களே..”

“கொடுத்தாங்க..”

“சரி.. சமாளிபிகேஷன் போதும்.. என்ன பன்னிட்டு இருக்க?”

“சும்மா.. புரவுசிங்க்..”

“ஓ.. வா.. ஹாலுக்கு கூட்டிட்டுப் போறேன்.. அங்க மூவி பார்க்கலாம்..”

“டே.. இன்னும் ஃபைவ் டேஸில் இன்ட்ர்ல்ஸ்..”

“என்னுமோ நீயும் நானும் படிக்காத மாதிரி.. வா.. இன்னிக்கு ஒரு நாள் லீவ் எடுத்துக்கோ..”

அவளை ஹாலுக்கு இழுத்துத்தான் சென்றான். சோபாவில் அமர வைத்து விட்டு நெட்பிளிக்ஸில் தேட ஆரம்பித்தான்.

“டே டே.. எம்மா வாட்சன் இருக்க.. லிட்டில் வுமன் போடுடா..”

“ஹே அதான் புக் இருக்கே..”

“புக் இருக்கட்டும். மூவி எப்படி இருக்கனு பார்க்கனும். ரொம்ப நாள் பார்க்க நினைச்சுட்டு இருந்தேன். பிளீஸ் வை டா.”

“சரி.. என சலித்துக் கொண்டவன் அவள் கேட்டபடி சரியாக படத்தை வைத்தான்.

அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருக்க இடையில் தேவகி அம்மாள் பாப்கார்னுடன் வந்தார்.

“பிருத்வி பாப்பா.. இந்தாங்க.. வாட்ச்மேன் கொடுத்துட்டு போனார்.”

“அட தேவகி அம்மா பாப்கார்ன் வந்துருச்சா.. நான் தான் ஆர்டர் பன்னேன்..”

“இந்தாங்க.. சாப்பிடுங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்.” அதில் இருக்கும் ஒரு பேப்பர் பக்கெட்டை எடுத்து தேவகி அம்மாளிடம் கொடுக்க அவரோ உச்சி குளிர்ந்து போனார்.

“பிருத்வி பாப்பா.. நீதான் இப்படினா உன்னோட பிரண்டும் அதே மாதிரி.. ரொம்ப நன்றி தம்பி.” என வாங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

மீண்டும் மூவியை ரெஸ்யூம் செய்த கிருஷூம், பிருத்விகாவும் கேரமல் பாப்கார்னிலும், ஜோ மார்ச்சின் கதையிலும் மூழ்கினர்.

பிட்டர் ஸ்வீட் ஸ்டோரிக்கு இனிப்பு பாப்கார்னோடு பொழுது சென்றது.

கதை முக்கால் பாகம் நகரும் போது அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் வருண். பிருத்விகா அவனை கவனிக்கவில்லை. அந்த மிகப் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சி அவள் கவனத்தை பிடித்து வைத்திருந்தது. அவள் அருகில் வருண் அமர்ந்ததை எல்லாம் கவனிக்கவில்லை. ஆனால் கிருஷ் கவனித்து விட்டான். வருண் அமைதியாக அமர்ந்து படத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

பிருத்விகா பாப்கார்னை ஒவ்வொன்றாகத் தின்றவாறு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். படம் முடிந்தது. ஒரு ஆர்வத்தில் ரிமோட் எடுக்க வேண்டி வழக்கம் போல் எழுந்து விட கால் வலி பளீரென்றிட விழச் சென்றவளை தோளில் பிடித்து நிறுத்தி இருந்தனர் வருணும், கிருஷ்ஷூம்.

“ரிமோட் வேணும்னா கேட்க வேண்டியதுதானா பிருத்வி?” என கிருஷ் கூறவும், “இல்லைடா. கால்ல அடிபட்டது மறந்துருச்சு.. அதான்..” என்றாள்.

“சரி பரவாயில்லை உட்காரு.” என வருண் கூற அவளும் அமர்ந்தாள். கீழே அமர்ந்தவுடன் சட்டென அவன் காலைப் பிடித்தான் வருண். காலைப் பிடித்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“இன்னும் வீக்கம் இருக்கு.” என காலைத் திருப்பிப் பார்த்தான். அவர்கள் இருவரையும் பார்த்தப்படி கிருஷ் அமர்ந்திருந்தான்.

“ நீ எப்ப வந்த வருண்?” என பிருத்விகா கேட்டாள்.

“ரைட்.. நான் வந்தது கூட தெரியாமல் நீதான் பாப்கார்ன் சாப்பிட்டு இருந்த. ஒரு அரை மணி நேரம் இருக்கும்.”

“ஓ..” என அமைதியாகி விட்டாள்.

“சரி பிருத்வி.. வா ரூமில் விடறேன். ரெஸ்ட் எடு..”

“இல்லை வேண்டாம். எதாவது மூவி போடு பார்க்கலாம்.”

“ஆஹான்.. இண்டர்ன்ல்ஸ்.. படிக்கனும்.. அது இது யாரோ சொன்னாங்க.. அவங்க எங்கம்மா காணோம்?”

“டே ஓவரா பன்னாத.. ரிமோட் கொடு.. நான் மூவி பார்க்கனும். நீ படிக்கனும்னா இடத்தை காலி பன்னு..”

“ஓ.. கடவுளே.. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா?” என ஒரு கையை மடக்கி தலையில் வைத்தப்படி இழுத்துப் பேசினான் கிருஷ்.

“படத்துல இருக்கறவங்களை விட நீ ஓவரா நடிக்கற கிருஷ். ரிமோட் கொடு..”

“சொல்லு.. இப்ப என்ன படம்?”

“சென்ஸ் அண்ட் சென்ஸிபிளிட்டி..”

“உனக்கு அதெல்லாம் இல்லையே பிருத்வி.. சரி பார்த்தாவது கத்துக்கோ.. ஒரே ஹிஸ்டாரிக்கல் பிலிமா பார்க்கற!.. நடத்து பேபி..”

“யூ… போடா.. ஆன் பன்னு..” என சோபாவில் சாய்ந்து கொண்டாள். வருணும் அவர்களுடன் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

பிருத்விகா நடுவில் இருக்க இரு பக்கமும் கிருஷ்ஷூம், வருணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையில் சதுர வடிவ தலையணிகள்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பிருத்விகா படம் முடிவடையும் தருவாயில் தூக்கம் சொக்க ஆரம்பிக்க தலை தாழ ஆரம்பித்தது. இறுதியில் கிருஷ் பக்கம் விழ கிருஷ் அவளை தலையை தள்ளி விட வருண் தோளில் சாய்ந்தாள். ஒரு மணி நேரம் கழிந்தது.

கண் விழித்தாள் பிருத்விகா. வருணின் கழுத்தை இரண்டு கைகளால் பிடித்தப்படி தலையைச் சாய்த்துக் கொண்டு உறங்கியவள் கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

வருணைப் பிடித்திருக்கிறோம் என்று உணர்ந்ததும் உடனே கைகளை விடுவித்தாள்.

“சாரி.. எழுப்பி.. விட்டிருக்கலா… சாரி..” என நகர்ந்து அமர்ந்தாள். பிருத்விகாவை ஆழமாகப் பார்த்தவன் உடனே தன் டீசர்டைக் கழற்றினான்.

அத்தியாயம்-24

பிருத்விகாவைப் பார்த்தப்படி எழுந்து நடந்து கொண்டே  டீசர்ட்டைக் கழற்றிய போதுதான் பிருத்விகா கவனித்தாள். வருணின் தோளில், கையிலும் சிவப்பு சிவப்பாக திட்டு திட்டாக இருந்தது.

“வருண் இங்க வா.”

“என்ன பிருத்விகா?”

அமைதியாகக் கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தாள்.

“என்னதிது உன்னோட தோளில்?”

சட்டென்று டீசர்ட்டை தன் மேல் தூக்கிப் போட்டவன் எழுந்தான்.

“அது ஒன்னுமில்லை.” அவன் இயல்பாகப் பேசினாலும் பிருத்விகா சந்தேகத்தோடு பார்த்தாள்.

“இரு நானே எழுந்து பார்க்கறேன்.” என பிருத்விகா எழ முயல உடனே அவள் தோளைப் பிடித்து நிறுத்தினான்.

இதுதான் சமயம் என்று அவன் தோளில் உள்ள டீசர்ட்டை விலக்கிக் கையைப் பார்த்தாள்.

“ஏண்டி இப்படி இம்சை பன்னற?”

“இது பல் தடம். கடிச்சு வச்சது யாரு? அதுவும் இரண்டு தடவை. குழந்தை கடிச்சு வச்ச மாதிரி இல்லை.”

“பிருத்விகா ஸ்டாப் இட். அது ஒன்னும் இல்லை.”

“இல்லை என்னனு சொல்லு?”

தன் கையை வருடிக் கொண்டிருந்த அவள் கையை மென்மையாகப் பிடித்தான். நிமிர்ந்து பார்த்த போதுதான் அவன் மார்புப் பகுதியில் டேட்டூ போன்று இருப்பதைக் கவனித்தாள்.

“ஹே அது என்ன டேட்டூவா? எப்ப போட்ட? உனக்குத்தான் டேட்டூ பிடிக்காதே. இங்கே காட்டு.” அவனுடைய ஸ்லீவ்லெஸ் பனியனை இன்னொரு கையால் விலக்க முயன்றாள்.

மீண்டும் கை பிடித்து தடுத்தான் வருண். அவளுடைய இரண்டு கைகளும் அவன் கைக்குள் அடங்கி இருந்தது.

“ஹே காட்டு.. என்ன ஏதோ லெட்டர் மாதிரி தெரியுது. நான் பார்க்கனும்.”

“பிருத்விகா அது பர்சனல். பிரைவசி.” என வருண் கூறியவுடன் அவள் முகம் லேசாக சுருங்கி இயல்பு நிலைக்கு மாறியது.

மீண்டும் அவன் கை மீது கவனம் திரும்பியது. தீடிரென்று அவள் மனதில் அவனைத் தான் தோட்டத்தில் வைத்து கடித்து வைப்பது போன்ற நினைவு எழுந்தது.

‘ச்சே.. என்ன இப்படி எல்லாம் திங்க் பன்றோம்.’ அவள் முக மாறுதலைக் கவனித்துக் கொண்டிருந்த வருண், “நீ ரொம்ப நேரம் நிக்க வேண்டாம். வா ரூமில் விடறேன்.” என்றான்.

ம்ம் என்று தலைய மட்டும் அவள் ஆட்ட உடனே வருண் அவளை அழைத்துச் சென்றான். அவர்களின் செயல்களை மாடியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் கிருஷ்.

பிருத்விகாவை அவளது அறையில் விட்டு விட்டு மாடியில் ஏறினான் வருண்.

“வருண் உங்கிட்ட பேசனும்.”

“கம் பால்கனிக்கு போலாம்.”

தன் அறையில் உள்ள பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.

“என்ன கிருஷ்?”

“நீ இப்படியே செஞ்சுட்டு இருந்தால் பிருத்விகா நிச்சயம் கண்டுபிடிச்சுடுவா?”

“என்னத்தை?”

“உன்னோட லவ்வை?”

“லவ்வா? என்னோடதா?”

“ம்ம்ம்.. உனக்கு என்ன லவ் இருந்தாலும் கொஞ்சம் கண்ட்ரோலில் இரு. இது ரொம்ப குருஷியல் டைம்.”

“நான்  நெயன் இயர்ஸா கன்ட்ரோலாதான் இருக்கேன்.”

“நெயன் இயர்ஸா?”

“ம்ம்ம்.. அடப்பாவி. அப்புறம் ஏண்டா அவகிட்ட வம்பிழுத்து வெறுப்பை வாங்கி கட்டிகிட்ட.”

“முதலில் அவளை வம்பிழுக்க பிடிச்சுருந்தது. ஜஸ்ட் பன்னுக்காக டீஸ் பன்னுவோமில்ல அப்படி. அதுக்கப்பறம் அவள் எந்த பசங்ககிட்ட பேசுனாலும் பிடிக்கலை. இன்டேரக்டா அவளை மிரட்டி கூட பார்த்தேன். ஆனால் அவளுக்கு அது பிடிக்கலை. அவள் முகத்தில் வருத்தம் தெரிஞ்சுது. அப்புறம் தான் எனக்கும் புரிஞ்சது. பிருத்விகா என்னோட பக்கத்தில் இருக்கறதால் அவள் நிம்மதியா இல்லை. என்னோட லவ்வை மறைக்க அவளைத் தொடர்ந்து வம்பிழுக்க ஆரம்பிச்சேன். அது இப்படி நிக்கிது.”

“வருண்.. நீ டாப் ரேங்கர். புத்திசாலியா இருந்து என்ன பிரயோஜனம். உனக்கு புடிச்ச பொண்ணுனா அட்லீஸ்ட் கொஞ்சமாவது அன்பைக் காண்பிக்கனும். நான் செஞ்ச அதே மிஸ்டேக்கை நீயும் செய்யாத.”

“சில சமயம் அவளுக்கு நான் தகுதி இல்லையோனு தோணும். அதுவும் ஒரு காரணம்.”

வருணின் தோளில் கையை வைத்தான் கிருஷ்.

“வருண் இந்தப் உலகத்தில் இருக்கற மேக்ஸிமம் ஆண்கள் அவங்க மேரேஜ் பன்னி இருக்கற பெண்களுக்கு தகுதியானவங்க இல்லை. சில எக்ஸப்ன்ஸ் இருக்கும். ஆனால் நீ உன்னை எப்பவும் அப்படி நினைக்காத. அந்தப் பொண்ணுக்கு புடிச்ச மாதிரி நீயும், உனக்குப் பிடிச்ச மாதிரி அந்தப் பொண்ணும் நடந்துக்கும். அதெல்லாம் லவ் இருந்தால் பாசிபிள். இல்லை மாறவே தேவை இல்லைனாலும் அன்ட்ர்ஸ்டேண்டிங்க் இருக்கும்.”

“இத்தனை வருஷம் நீ அவகிட்ட பேசும் போதெல்லாம் ரொம்ப ஜெலசா இருக்கும்.” கிருஷ் மேல் இருக்கும் பொறாமையை முதல் முதலாக ஒப்புக் கொண்டான் வருண்.

“நாங்க பெஸ்ட் பிரண்ட்ஸ் மட்டும் தான். நீ பார்ட்டியில் பார்த்த இல்லை. அவங்க அப்பாவுக்கு ஆர்டர் போடற மாதிரி எனக்கு ஆர்டர் போட்டதை. பெஸ்ட் பிரண்டுகிற பேரில் இருக்கற அடிமை நான். இதைப் பார்த்து ஜெலஸ் ஆனாராம் சார். அந்த தஸ்வி எவ்வளவு சீன் போடும். ஆனால் உனக்காக அவளும் என்ன என்ன குரங்கு சேட்டை பன்னுவா தெரியுமா.”

“தஸ்வியைப் பத்தி எங்கிட்ட பேசாத. நானும் எவ்வளவு தடவை பொறுமையா எடுத்து சொல்லிட்டேன். அந்தப் பொண்ணு கேட்கவே இல்லை.”

“உன்னோட பேன் கேர்ள்ஸ் எல்லாம் நீதான் டீல் பன்னிக்கனும். அதுக்கெல்லாம் நான் ஹெல்ப் பன்ன முடியாது.”

“எனக்கு பிருத்விகாகிட்ட புரப்போஸ் செய்யனும்.”

“இப்பதான் சொன்னேன். உங்க இரண்டு பேருக்கும் ஆஞ்சநேயரா நான் இருப்பேன். ஆனால் இப்ப இல்லை.”

“ஆஞ்சநேயரா?”

“ம்ம்ம்.. அவருதான். ராமர் சீதாவோட கியூபிட்.”

கிருஷ் கூறிய தொனியில் வருண் முகம் பெரிதாகப் புன்னகையைத் தத்தெடுத்தது.

“ஆனால் நீ இவ்வளவு ஓப்பனா பேசுவனு நினைச்சுப் பார்க்கலை.”

“வெரி சிம்பில் வருண். நீயும் எங்கிட்ட அப்படி பேசுன. ஏனால் இந்த டைமில் நாம ஒருத்தரை ஒருத்தர் நம்பறது ரொம்ப அவசியம். நமக்குள்ள டிரஸ்ட் வேணும்.”

“யெஸ்.”

“நெக்ஸ்ட் பிளான் என்ன?”

“மித்ரா விஜயம்.”

“மித்ரா இங்க வரப் போறாளா?” கிருஷ்ஷின் கண்களில் கூடுதல் ஒளி.

அப்போதுதான் வருணுக்குப் புரிந்தது. கிருஷ்ஷின் மனதில் இருப்பது யாரென்று. இதுவரை மித்ரா அவனைப் பற்றி எதுவும் பேசியது இல்லை. கிருஷ்ஷூம் அவளும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தார்கள் என்று மட்டும் கூறி இருக்கிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்தார்கள் என்றும் தெரியும். ஆனால் கிருஷ்ஷின் எண்ணம் வேறு என்று தோன்றியது. மித்ராவையும் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது வருணுக்கு.

கிருஷ் வந்த அடுத்த நாள் மித்ராவும் வீட்டுக்கு வந்தாள். ஆனால் அது எப்படி என்று தெரியவில்லை. வீட்டில் உள்ள மற்ற மூவரும் குழப்பத்தில் இருந்தனர்.

“மித்ரா அதுக்குள்ள எப்படி நீங்க வந்தீங்க? இன்னும் வருண் உங்க வீட்டில் பேசவே இல்லை.”பிருத்விகா கேட்டாள்.

“அதான் எனக்கும் தெரியலை. என்னோட டாடி என்னை இன்னும் இரண்டு மாசம் இந்த வீட்டில் இருந்து நல்ல படியாக படிக்கச் சொல்லிட்டு போயிட்டாரு. என்னால அதை நம்பவே முடியலை. ஒரு டிரிப் போறதுனா கூட அவ்வளவு கொஸ்டீன் கேட்பாரு. அப்புறம் தான் அனுப்புவாரு. எனக்கு என்ன நடந்துச்சுனு புரியவே இல்லை.”

“நாங்களும் இன்னும் எதுவும் செய்யலை. அதுக்குள்ள எப்படி?” கிருஷ் யோசித்தான்.

“இட்ஸ் ஓகே மித்து. நீ வந்துட்டல்ல.. கமான்.” அவளை தோள் பற்றி அணைத்த வருணின் முதுகில் தட்டியவள், “என்னோட பெஸ்டி வீட்டில் வந்து இருப்பேனு நான் நினைச்சுக் கூட பார்த்தது இல்லை.” என்று அவனை அணைத்து விடுவித்தாள்.

அவளுடைய பேகை எடுத்துக் கொண்ட வருண் அவளிடம் பேசியபடியே மித்ரா தங்கப் போகும் அறையைக் காட்டியபடி நடந்து செல்ல அவன் முதுகை வெறித்தாள் பிருத்விகா.

“உனக்குத்தான் இந்த வீட்டோட இண்டிரியர்ஸ் ரொம்ப பிடிக்குமே.. டூ மன்த்ஸ் இங்கதான்.”

“டீரிம் மாதிரி இருக்கு. என்னதான் எனக்கு கேரளா டைப் வீடு பிடிச்சாலும் உன்னோட வீடு சம்திங்க் ஸ்பெஷல் டா.”

“நீயாவது இங்க என்ஜாய் பன்றியே!!” சலிப்புடன் வருண் கூறினான்.

“என்னடா? உன்னோட ஆளுக்கு அப்படி ஆயிருச்சுனு பீலிங்ஸா?”

“ம்ம்ம்.. அப்படியும் சொல்லலாம்.” வருண் உடனே ஒப்புக் கொண்டான்.

“அப்ப ஒத்துக்குற?”

“இல்லை..”

“இல்லையா?”

“ஆமா”

“என்ன ஆமாவா? அப்ப பிருத்விகாகிட்ட சொல்லிட வேண்டியதுதான்.”

“ஹேய்.. பிசாசு..” மித்ரா வேகமாக வெளியில் செல்ல முற்பட அவளைப் பிடித்து தடுத்தான்.

“வந்த உடனே ஆரம்பிச்சுராத.. தாயே. இப்பதான் பத்ரகாளி அமைதியா இருக்கா. இதில் நீ போய் நச்சுனு நாலு பிட் போட்டு ஆப்பு வச்சுராத. தேவகி அம்மாள்ட்ட சொல்லி உனக்குப் பிடிச்ச அத்தனையும் பன்னி தரச் சொல்றேன்.”

“சரி போனாப் போகுது. பெஸ்ட் பிரண்ட்டுனு விடறேன்.”

என அவன் தலையில் திரும்பக் கொட்டியவள் சிரித்துக் கொண்டே திரும்ப அறை வாசலில் நின்றிருந்தனர் பிருத்விகாவும், கிருஷ்ஷூம்.

மித்ராவின் முகம் சட்டென மாறியது. வருணின் முகமும் மாறியது.

“தேவகிம்மா.. சாப்பிட வர சொன்னாங்க.” கிருஷ் கூறவும், வருணின் முகம் தெளிந்தது. எதாவது கேட்டிருந்தால் பிருத்விகா அமைதியாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.

“முன்னாடி போங்க வரோம்.”

“சொல்லு பக்கி. எதை எங்க வைக்கனும்?” என்றபடி மீண்டும் அவள் மீது வருண் கவனத்தைச் செலுத்த பிருத்விகாவை அழைத்துக் கொண்டு செல்லும் கிருஷ்ஷை ஒரு முறை பார்த்த மித்ரா தன் நண்பனின் மீது கவனத்தைச் செலுத்தினாள்.

அதைக் கவனித்த வருணுக்கும் இப்போது தெளிவாக புரிந்தது.

காலை உணவு உண்ணும் போது அந்த டேபிளில் அப்படி ஒரு அமைதி நிலவியது. கிருஷ் அடிக்கடி பிளேட்டைப் பார்ப்பதும் எங்கோ பார்ப்பதுமாக இருந்தான்.

ஒரு வழியாக உணவை உண்ணு முடித்ததும் கிருஷ் மாத்திரை கொடுத்து பிருத்விகாவை அவளது அறையில் விட்டான்.

ஒரு மாதம் கழிந்தது. பிருத்விகா முன்பை விட அமைதியாக இருப்பது போல் தோன்றியது வருணுக்கு. கிருஷ்ஷிடம் எப்போதும் போல் பேசியவள் மித்ராவிடமும் நன்றாகப் பேசினாள்.

கல்லூரிக்கு வழக்கமாக சென்று வந்தாலும் இன்னும் காலில் கட்டு இருந்தது. ஒரு நாள் கிருஷ் ஏதோ வேலையாக வெளியே செல்ல, மித்ராவும் அன்று தாமதமாக வர வேண்டி இருந்தது.

அதனால் வருண் பிருத்விகாவை அழைத்து வந்தான்.

சோபாவில் அவளை அமர வைத்து விட்டு தானும் அமர்ந்து சாய்ந்தான். கண்களை மூடியவன் ஒரு பெருமூச்சு விட்டான். கண்களைத் திறந்து பிருத்விகாவைப் பார்க்க அவள் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன பேபி இப்ப எல்லாம் ரொம்ப சைலண்டா இருக்க?” என்றான்.

“ஒன்னுமில்லையே..”

“ம்கூம்.. வீ காண்ட் ஸ்டேண்ட் ஈச் அதர் சைட். ஆனால் இப்படி ரொம்ப அமைதியாக இருக்கற பிருத்விகா புதுசு. இப்ப எல்லாம் நான் சொன்னாலும் அமைதியா கேட்டுக்குற.”

அவனை அமைதியாகப் பார்த்த பிருத்விகா எழுந்து செல்ல முற்பட்டாள். அவள் செல்வதைத் தடுக்க வேகமாக வருண் அவள் கையைப் பிடிக்க அதில் தடுமாறி அவன் மீது விழுந்தாள் பிருத்விகா.

அத்தியாயம்-25

பேச்சோ கோபமாக..

செய்கையோ முத்தமாக..

உன் இதழ்கள்

இரண்டும் முரண் கவிதை.

இருவரின் மூச்சு காற்றும் மோதிக் கொண்டன. அவளுடைய கூந்தல் பாதி கலைந்து முகத்தை மறைத்திருந்தது. அவன் மடியில் சரியாக அமர்ந்திருந்தாள் பிருத்விகா. அவள் முடியை ஒதுக்கியவன் அவன் விழிகளை உற்று நோக்கினான். அடுத்தது பார்வை அவள் துடிக்கும் இதழ்களுக்குச் சென்றது. பிருத்விகாவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனை அறியாமல் அவன் கைகள் அவளை இன்னும் அவன் அருகில் இழுத்தது.

அவள் கழுத்தில் முகம் புதைத்தவுடன் பிருத்விகா கண்களை மூடிக் கொண்டாள். மெல்ல கழுத்திலிருந்து தாடைக்கு முன்னேறியவன் அடுத்து நின்றது இதழ்களில். நொடிகள் நிமிடங்களாகின. இருவரின் இதழ்களும் ஓயவில்லை. வருணின் தலை மூடியின் பின் பக்கத்தை இறுக்கிப் பிடித்திருந்தாள் பிருத்விகா. அவன் முகம் முழுக்க அவள் இதழ்கள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தது. அவன் தாடையிலும், கழுத்து என அனைத்தும் இதழ்களின் பிரவேசம் செய்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவனுக்குள் தாபத்தை ஏற்றிக் கொண்டிருந்தது. கண்களை மூடி அவளின் மென்மையான தாக்குதலில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான்.

வெளியில் காரின் ஹாரன் கேட்டது. உடனே சட்டென இருவரும் விலகினர். அவனை விட்டு உடனே பிருத்விகா விலகி எழுந்து நின்றவள் அவள் அறை பக்கம் வேகமாக சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

கால் அவளுக்கு ஓரளவுக்கு சரியாகி இருந்தது. நன்றாகத் தேறி இருந்தாள். தேவகி அம்மாளின் கவனிப்பைச் சொல்லவா வேண்டும்.

படுக்கையில் அமர்ந்தவள் அதன் எதிரே இருந்த கண்ணாடியை நோக்கினாள். அவள் கழுத்தில் லேசான பல் தடங்கள். சிவக்க ஆரம்பித்தது. உடல் முழுவதும் வெப்பம் ஏறி இதயம் வெளியில் வரும் அளவுக்குத் துடித்துக் கொண்டிருந்தது.

‘நானா?.. வருணையா?’ நடந்தவை அனைத்தும் மாயம் போல் இருந்தது. ஒரு நொடி அவன் மடியில். அடுத்த நொடி.. நினைக்கும் போதே.. பிருத்விகாவினால் நம்ப முடியவில்லை. அதிலும் அவனை அதிகம் முத்தமிட்டது அவள்தான்.

‘அப்படி என்றால்.. வருணை.. இல்லை.. நோ.. இட்ஸ் ஐஸ்ட் ஏ மொமெண்ட்.. நோ..’ இப்படி அவள் மனதில் புயல் அடித்துக் கொண்டிருந்தது.

ஆனால் வருணோ இமைக்காமல் அமர்ந்திருந்தான். மனமோ எங்கோ பறந்து கொண்டிருந்தது. அந்த முத்தம் அந்த பித்தனை காதல் கடலில் குதிக்க வைத்துச் சென்றிருந்தது. அவள் இதழ் தீ தீண்டிய இடங்கள் அனைத்தையும் புனிதமடையச் செய்திருந்தது. பல வருட ஒரு தலைக் காதலில் முதல் அங்கிகாரம் அவனைத் திக்கு முக்காடச் செய்து கொண்டிருந்தது.

அவள் கைபட்டு அவன் தலை முழுவதும் கலைந்து முள் போல் அங்காங்கு தூக்கிக் கொண்டிருந்தது.

“என்ன வருண்? புது ஹேர் ஸ்டைலா?” என்றபடி ஹாலுக்குள் நுழைந்தான் கிருஷ்.

அவன் பின்னால் வந்தாள் மித்ரா. புடவை வேறு தட்டி விட முன்னால் இருந்த கிருஷ்ஷின் தோளை லேசாகப் பிடித்தாள்.

சிரித்தப்படியே அவள் கையை எடுத்து விட்டான் கிருஷ்.

“என்ன வருண்? என்னாச்சு? ஏன் இப்படி முழிக்கற?”

“ஹான்.. ஒன்னுமில்லை..” என்றவன் தன் அறைக்குச் செல்ல மாடியேறினான்.

“என்னாச்சு வருணுக்கு? வித்யாசமா நடந்துக்கிறான்.” என முனகிய கிருஷ்ஷூம் மாடியேறிவன் திரும்பி ஹாலில் நிற்கும் மித்ராவை ஒரு முறைப் பார்த்தான். அவன் பார்வை போகும் திசையை அறிந்தவள் போல் அங்கிருந்து வேகமாக திரும்பி தன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தாள் மித்ரா.

மாயக் கண்ணனைப் போல் புன்னகையுடன் தன் அறைக்குச் சென்றான் கிருஷ்.

இரவு உணவு உண்ணும் நேரம். மித்ரா, கிருஷ் மற்றும் வருண் மூவரும் டைனிங்க் டேபிளில் அமர்ந்திருந்தனர்.

“வருண் பிருத்விகா ஏன் வரலை?”

அவன் பதில் கூறும் முன், “பாப்பா அப்பவே சாப்பிட்டாச்சு. டையர்டா இருக்குனு தூங்கிட்டு இருக்கு.” என பதில் கொடுத்தப்படியே கையில் பாத்திரத்துடன் வந்தாள் தேவகி அம்மாள்.

“அப்ப இன்னிக்கு நைட் நான் நிம்மதியா சாப்பிடலாம்னு சொல்லுங்க.” என்றான் கிருஷ்.

வருண், மித்ரா இருவருமே இதைக் கேட்டு  அவனை ஒரு பார்வை பார்த்தனர்.

“என்ன லுக்கு? பிருத்விக்கு பேருக்குத்தான் நான் பிரண்ட்டு. நிஜத்தில் சம்பளம் வாங்காத அடிமை. அது என்னோடதை புடுங்கி சாப்பிடறதில் அவளுக்கு அப்படி என்ன சந்தோஷமோ? முன்னாடி எல்லாம் பகலில் மட்டும் தான் ஆர்டர் போட்டுட்டு இருப்பா. நைட் நான் நிம்மதியா சாப்பிடுவேன். இங்க வந்ததில் இருந்து  அதுவும் போச்சு. இந்த தமிழ் சினிமாஸ் எல்லாம் வீட்டுல் இருக்கறவங்களுக்கு பொண்ணுங்க எப்படி பரிமாறுவாங்க? ஆனால் இங்க நான்தான் அவளுக்குப் பரிமாறனும். தெரியுமா?” என்று நீளமாகப் பேசினான்.

மித்ரா டைனிங்க் டேபிளில் அடியில் இருந்து காலால் கிருஷ்ஷை உதைக்க வலியில் “ஆ” வென்று அலறினான் கிருஷ்.

“என்னாச்சு தம்பி?”

காலை தேய்த்துவிட்டப்படியே “இரண்டு கொசு கடிச்சுடுச்சும்மா.. பெரிய கொசு. பால்டாயிலை ஊத்தி கொல்லனும்.” என்றான்.

“தம்பி கொசுவைக் கொல்லனும்னா கொசுவர்த்தி பத்த வைக்கனும். இல்ல ஆல் அவுட் போடனும். பால்டாயில் ஊத்தக் கூடாது.”

தலையை வலியுடன் ஆட்டிய கிருஷ் உணவை எடுத்து மென்றான். அவனைப் புன்னகையுடன் பார்த்தப்படி நின்று தானும் உணவை உண்டான் வருண். அவனும் தானே மித்ராவுடன் சேர்ந்து கிருஷ்ஷின் காலை உதைத்தது.

வருண் உண்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட மித்ரா இன்னும் உண்டு கொண்டிருந்தாள். கிருஷ் அவளுக்காக இன்னும் மெதுவாக உணவை உண்டு கொண்டிருந்தான்.

மித்ரா உண்டு முடித்து கை கழுவ வாஷ்பேசின் அருகே செல்ல அவள் பின்னாலேயே சென்றான் கிருஷ்.

வாஷ்பேசின் அருகே ஒரு சுவர் தடுப்பு இருந்ததால் யார் நின்றாலும் தெரியாது. மித்ரா கை கழுவிக் கொண்டிருக்க அவளுடன் போட்டி போட்டி கை கழுவியவனை முறைத்தாள் மித்ரா.

இவனும் எதுவும் பேசாமல் அவளைக் கண்களால் அளந்து கொண்டிருந்தான். அவனை மேற்கொண்டு முறைத்தவள் நகர முயற்சிக்க அவன் விட்டால் தானே. வாஷ்பேசின் பக்கவாட்டில் உள்ள சுவற்றில் சிறைப் படுத்தி இருந்தான்.

“என்னடி பிரச்சினை உனக்கு? இன்னும் எத்தனை வருஷம்தான் என்னை படுத்துவ?”

மித்ராவோ வாயைத் திறக்கவில்லை. அவனிடம் இருந்து விலக மட்டும் முயற்சித்தாள். ஆனால் அவையெல்லாம் ஆறடியில் ஜீம் சென்று ஏற்றிய அவன் உடல் பலத்தின் முன் எதுவும் ஈடேறவில்லை.

“பதில் சொல்லு..”

அவள் தாடையைப் பிடித்தவன் சிவந்த நிற உதடுகளை இரு விரல்களால் பிடித்தான்.

“அப்படி ஒரு வார்த்தை கூட பேசாத அளவுக்கு பிடிவாதம் எதுக்கு? யு லவ் மீ. ஒத்துக்க?”

அவளின் கருப்பு நிற புருவங்களைத் தூக்கிப் பார்த்தவள் அலட்சியத்தோடு நின்றாளே தவிர பதில் பேச முயலவில்லை.

“இது வரைக்கும் எதனால் என்னை விட்டு பிரிஞ்சனு என்னிக்காவது சொல்லி இருக்கியா? நானும் எத்தனை நாள் கேட்டுருக்கேன். நாம ஒரு காலத்தில் பெஸ்ட் பிரண்ட். அப்புறம் ஐ ஃபெல் இன் லவ். உனக்கு பிடிக்கலைனா ஓகே. ஆனால் உனக்கு பிடிச்சுருக்கு. இல்லைனா இன்னிக்கு காரில் அது நடந்திருக்காது.”

அவளுடையை நைட் ஷர்ட்டைத் தூக்கி அவள் இடையைப் பார்த்தான். மஞ்சள் நிற மேனியில் ஐந்து விரல் தடங்கள் சிவப்பாகத் தெரிந்தது.

“சாரி ஃபார் தட். பட் எனக்கு இன்னிக்கு ஆன்சர் வேணும்.”

அதற்கும் அவளிடம் பதில் இல்லை. அவளை ஒரு முறை ஊன்றி பார்த்தவன், “இதுக்கு மேலயும் உனக்கு சொல்ல விருப்பமில்லைனா விடு. இதுக்கு மேல் நானும் பேச மாட்டேன். உங்கிட்ட வந்து நிக்க மாட்டேன். உங்கிட்ட இருந்து மூவ் ஆன் ஆகப் போறேன். இனிமேல் நீ யாரோ நான் யாரோ. நம்மளோட பர்ஸ்ட் கிஸ்தான் லாஸ்ட் கிஸ்.” அவளை விட்டு விலகியவன் சில நொடிகளுக்குள் மாடி ஏறினான். கோபத்துடன் விரைப்பாக செல்பவனை கண்களில் தேங்கிய நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

அவளுடைய அறையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பிருத்விகா வெளியே வந்தாள். தன்னைக் கண்டு கொள்ளாமல் படியேறும் கிருஷ்ஷை யோசனையாகப் பார்த்தவள் மீண்டும் தன் அறைக்குள் சென்றாள்.

தன் கைப்பேசியை எடுத்தவள் எதையோ டைப் செய்தாள்.

அடுத்த நாள்,

தேவகி அம்மாள் வீடெங்கும் தேடிக் கொண்டிருந்தாள்.

“பிருத்விகா.. பாப்பா.. எங்க இருக்க?”

“என்னாச்சு தேவகி அம்மா? ஏன் பிருத்வியைத் தேடிட்டு இருக்கீங்க?”

“பிருத்விகா எங்கேயும் இல்லை தம்பி. வீடு புல்லா தேடிட்டேன்.”

“என்ன சொல்றீங்க? வாங்க தேடலாம். இங்க எங்காவது இருப்பா.” அவளுடைய கைப்பேசிக்கு அழைத்தப்படி செல்ல அது ஸ்விட்ச் ஆஃப் என்று அழகிய பெண் குரலில் கூறியது.

அடுத்து வேகமாக கிருஷ்ஷீக்கு அழைக்க அவனோ அதுவும் ஸ்விட்ச் ஆஃப் என்று கூறியது.

“இரண்டு பேர் மொபலும் சுவிட்ச் ஆஃப். எங்க போயிருப்பாங்க?”

கொட்டாவி விட்டபடியே வந்தாள் மித்ரா.

“என்ன வருண்? ஒரே நாய்ஸ்.”

“மித்ரா.. பிருத்வி, கிருஷ் இரண்டு பேருமே மிஸ்ஸிங்க்.”

                -பாகம் ஒன்று முற்றியது.