அத்தியாயம் 10

கிச்சனில் பாத்திரத்தை கழுவிக்கொண்டிருந்தாள் ரம்யா அவள் பின்னே வந்து நின்ற சுரேஷ் அசையாமல் நிற்க திரும்பி பார்த்தவள்

“என்ன வேணும் காபியா? டியா?” என கையை கழுவ பின்னோடு அணைத்து அவனும் கையை அவளோடு சேர்ந்து கழுவ அவனிடமிருந்து விலக பார்த்தாள் ரம்யா. 

“ப்ச் தள்ளி போங்க யாராவது வர போறாங்க” என அவள் அவனை தள்ள ஈர கையை அவள் இடையில் போட்டு இழுத்து பிடித்தவன் அவளை வாசம் பிடித்தான். 

“எப்படி ரம்யா உன்கிட்ட இவ்வளவு வாசம்?” அவன் கிறங்கிய குரலில் இளகாது அவள் வாசலை தான் பார்த்தாள். அதில் அவனுக்கு ஏக கோபம் அவள் இதழலை விரலால் பிடித்து இழுத்தவன் “என்ன கவணி டி” என அழுத்த வலித்தது அவளுக்கு.  வலிக்க வலிக்க அவள் இதழை மென்று முழுங்கியவன் விட்டு விலக   முழுவதும் சிவந்திருந்தது முகம். 

“உங்க வேலை முடிஞ்சிட்டுல? கிளம்புங்க எனக்கு சமைக்கிற வேலையிருக்கு” என்றவள் பால் பாத்திரத்தை அடுப்பில் வைக்க அடுப்பை அணைத்தவன் அவளையும் இறுக்கமாக அணைத்தான். 

“நீ ஏன் இந்த வேலைய செய்யிற? வேலைகாரங்க பாத்துப்பாங்க ரூமுக்கு வா” 

“வாசுகி பொண்ணும் உங்க வீட்டில வேலைகாரி தானே” எனவும் அவள் தோளை அழுத்தமாக பிடித்தவன் நிதானமாக நெருங்கினான். 

“அதேதான் வா வந்து என் பொண்டாட்டியா வேலை பாரு இல்லை உங்க அம்மா கிட்ட நியாயம் கேட்பேன்” என்றவன் துளிகூட அவளிடம் இரக்கம் காட்டவில்லை. 

“ச்சை” என அவன் கையை உதறியவள் வேகமாக மாடி ஏறிவிட்டாள். 

“யாருகிட்ட உன் அண்ணனுக்காக என்னையே கிண்டல் பண்ணல நல்லா அழு டி” என்றவன் மனைவியிடம் வேலை வாங்கி விட்டே கிளம்பிச் சென்றான்

__________

சாதனா பேக்கை தமிழ்மாறன் மாடிக்கொள்ள இருவரும் சேர்ந்து நடந்தனர். எப்பொழுதும் சாதனாவிற்கு வாய் ஓயாத பேச்சு  எதையாவது பேசிக்கொண்டே வருவாள். அவன் பெரிதாகப் பதிலுக்குப் பேசாவிட்டாலும் அவள் சொல்வதை கேட்டுக் கொள்வான். 

அவன் அவளுக்காக ஒதுக்கும் நேரம் அது மட்டும் தான் அவளை கல்லூரியில் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு நடந்தே செல்பவன் திரும்பி வர இரவு பத்தாகிவிடும். அவள் படித்து முடிக்கும் வரை அவளுக்கான இடத்தை கொடுத்திருந்தான் தமிழ்மாறன்.  

பெரிதாக எழும் மோகங்கள் கூட முத்தங்களோடு முடிந்துவிடும்  அத்தனை கட்டுபாடு. சாதனா முகத்தில் தான் ஏமாற்றம் தெரியும். அதையும் சமாளிக்க தெரிந்திருந்தான் தமிழ். 

என்றாவது ஒருநாள் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பாடு உண்டு அன்று உணர்வுகளின் ஆதிக்கம் தான். 

தன் அருகில் எதையோ யோசித்தவாறு நடந்து வந்தவனை பார்த்தவள்

“உங்களுக்கு ஹிந்தி தெரியுமா த்தான்? ” என மௌனத்தை கலைத்தாள். 

“பேச தெரியும் எழுத தெரியாது”

“எங்க கத்துகிட்டிங்க? “

” சீமாகிட்ட கத்துகிட்டது தான்” 

“ஓஓ அவங்க உங்க காலேஜ் பிரண்டா? ” 

“அப்படியும் சொல்லலாம்”

“அப்போ இல்லையா? ” 

“படிக்கிற இடத்தில பிரண்ட்”

“எங்க படிக்கிறப்போ? “

“ஏன் டி தொல்லை பண்ற? என்ன வேணும் உனக்கு?” அவன் கடுப்பாகிவிட அவனுக்கு பலிப்பு காட்டினாள் அவள். 

“என்கிட்ட நீங்க இங்கிலீஷ்ல பேசுனதே இல்லை?” அவள் குறைபட  தலையில் அடித்துக்கொண்டான் தமிழ்மாறன். 

“உனக்கு தான் தமிழ் தெரியும்ல அப்பறம் எதுக்கு இங்கிலீஷ்ல பேசனும்? அறிவாளி இதுக்கு தான் காலையிலே மூஞ்ச தூக்கி வச்சிருந்தியா? “

“இல்லையே நீங்க யார்ட்ட பேசினா எனக்கு என்ன?  நான் எதுவும் கேட்கலை பா” 

“யார்ட்ட பேசினேன்னு தான் சொன்னனே அப்பறம் என்னவாம்? “

“சொன்னிங்க சீமானு மட்டும்”

“சீமா வா சீமானு தான் சொல்ல முடியும்”

“காமெடியா? சகிக்கலை சீமா பாமானு இவருக்கு மட்டும் தான் பிரண்ட்ஸ் இருக்க மாதிரி. எனக்கும் தான் பிரண்ட்ஸ் இருக்காங்க” என அவள் பொரிய அவளை முறைத்தான் அவன். 

“என்ன முறைப்பு? நானும் முறைப்பேன்” அவள் அதட்ட விழி பிதுங்கியது அவனுக்கு. 

“என்ன டி பிரச்சனை…? கத்தாத எல்லாரும் பாக்குறாங்க” சற்று கடிந்துவிட அவ்வளவுதான் கண்கள் கலங்கி மூக்கு விடைத்தது

“என்ன என்ன டி?  நீ போடா உன்ன எனக்கு பிடிக்கலை” என அவள் முன்னே நடக்க அவள் பின் ஓடினான் தமிழ்மாறன். 

“சாரி….  சாரி சாதனா ஏய்….. நில்லுடி சது…..  ப்ச்…. சாதனா டோன்ட் கிரியேட் சீண் நில்லுனு சொன்னேன்” என அதட்ட நடையில் வேகம் குறைந்தது அவளுக்கு. 

“எதுக்கு இப்போ இந்த அழுகை? “

“என் பேக்கை தாங்க நானே காலேஜ் போறேன் “

“படுத்தாத சாதனா எதுக்கு இவ்வளவு ஆர்பாட்டம் என் பிரண்ட்ஸ் கூட நான் பேசினது தப்பா? “

“அய்யோ நான் தான் எதுவும் சொல்லலையே?”

“சொன்னா தானா? உன் மூஞ்சிலையே தெரியுது. உனக்கு பிடிக்கலையா? முகத்துக்கு நேரா சொல்லு சாதனா. நான் தப்புனா மாத்திக்கிறேன்”

“நிஜமாவா?”  அவன் முகம் பார்க்க தலையசைத்தான் தமிழ்மாறன். 

“சரி உங்க பேரு என்ன? “

“லூசாடி நீ? ” 

“சொல்லுங்க நீங்க” அவள் அடம்பிடிக்க தாடையை தேய்த்தான் அவன். 

“ஏ. தமிழ்மாறன் “

“எல்லாரும் உங்கள எப்படி கூப்பிடுவாங்க?”

“ப்ச் தமிழ்னு… இப்ப ஏன் இதை கேட்குற?”

“எனக்கு நீங்க யாரு?” எனவும் பல்லைக் கடித்தான் அவன். 

“ஆர் யூ ஓகே சாதனா?”

“நாட் ஓகோ எனக்கு யார் நீங்க? “

“உன்னக்கு தாலி கட்டுன அப்பாவி புருசன் மேடம்”

“அதை கேட்கலை நான் உங்களை எப்படி கூப்பிடுவேன்? “

“அத்தானு சொல்லுவ டி”

“யோவ் நக்கல் பண்ண   குரவலையை கடிச்சிருவேன்”

“ராட்சசி   நீயே சொல்லு டி”

“என்ன பாத்தா ராட்சசி மாதிரி இருக்கா?” என மீண்டும் அவள் மூக்கை விடைக்க நெஞ்சை பிடித்துக்கொண்டான் தமிழ்மாறன். 

“ச்சே இல்லடா உன்னைய சொல்லுவேனா? நான் என்னைய சொன்னேன்”அவன் மழுப்ப

“அப்போ ராட்சசன் தானே திட்டிக்கனும் நீங்க? ” 

“அய்யோ விவரம் விகாரம் மன்னிச்சிக்க தாயே விஷயத்த சொல்லு இல்லை என்னை விட்டுரு” அவன் தலைக்கு மேல் கும்பிடவும் தான் மலையிறங்கினாள் சாதனா. 

“சரி சரி போதும் நீங்க எனக்கு மாறான் தானே?” என்றதும் தான் அவனுக்கு புரிந்தது

‘லூசு புள்ள’ என மனதில் திட்டிக்கொண்டான். 

“அதுக்கு என்ன சாதனா?”

“உங்க பிரண்ட் எதுக்கு உங்களை மாறானு சொல்றாங்க? “

“இதை எல்லாம் பெருசு பண்ணலாமா சாதனா? “

“முடியாது நான் மட்டும் தான் அப்படி கூப்பிடுவேன்”

“நீ எங்கடி என்ன மாறானு கூப்பிடுவ? ” 

“நீங்க எங்க என்னை கூப்பிட விடுறிங்க?”

“நான் என்ன பண்ணேனாம்?” 

“என்னை கூப்பிட சொல்லிட்டு முழுசா கூட சொல்லவிடாம…” என அவள் தயங்க சிரித்தான் தமிழ்மாறன். 

“இப்போ வேனாலும் சொல்லேன்” என்றவன் பல்லால் கீழ் உதட்டை கடித்துவாறு சிரிக்க அவள் முகம்மொங்கும் வெட்கம். 

“பேச்சை மாத்தாதிங்க த்தான்” அவள் சிணுங்க அவளை ஒட்டி நடந்தான் அவன். 

“சீமாக்கு தமிழ் வாய்ல வராது அதான் மாறானு கூப்பிடுவா இதுக்கு போய் கோச்சிக்கலாமா?”

“இருந்தாலும்….. “

“ஏய்… எத்தனை பேரு மாறான்னு சொன்னாலும் நீ சொல்ற மாறா எனக்கு தனிதான் டி சரியா?” என்றவனை மயங்கி பார்த்தாள் சாதனா. 

அவளை கல்லூரியில் விட்டவன் தன் வீட்டிற்கு வர அவனுக்காக உணவோடு காத்திருந்தார் வாசுகி. ரவியோடு சிறுது நேரம் பேசியவன் தாய் தந்த உணவை நன்றாக உண்டான். 

“நைட் சாப்பிட்டியா தமிழு? ” என்றவரிடம் அவனால் பொய் சொல்ல முடியவில்லை என்ன தான் அழுத்தகாரணாக இருந்தாலும் துன்பத்தில் தாய் மடியை தானே பிள்ளைகள் தேடும். 

“இல்லை மா” என்றவனை பார்த்து கண்ணை கரிக்க இரண்டு இட்லியை எடுத்து வைத்தார். 

“உன் பொண்டாட்டி கேட்டலையா? ” 

“நான் போகும் போது அவ தூங்கிட்டாமா” 

என்றவன் தட்டை எடுக்க அவனை தடுத்து வாசுகியே  எடுத்தார். 

அங்கு நடப்பதை எல்லாம் ரம்யா தவறாமல் வாசுகியிடம் சொல்லி விடுவாள். அவர் செய்த தவறை அவர் உணர வேண்டும் என்று தான் சொல்ல ஆரம்பித்தாள். அதுவே அவளுக்கும் அறுதலாக இருக்க தினமும் தொடர்ந்தது. அவள் அந்தரங்கத்தை தவிர்த்து அவள் சொன்னதை கேட்டே தன் தவறை உணர்ந்து வருந்தினார் வாசுகி. 

பேசுவது சுந்தரமூர்த்தியாக இருந்தால் துணிந்து கேட்டுவிடலாம் ஆனால் சுரேஷ் அவர் மகளின் கணவன் ஆகிவிட்டானே அவனிடம் என்ன கேட்க முடியும் மனதிலேயே மறுகினார் அந்த தாய். 

சுரேஷ் ரம்யாவை படுத்தும் பாடுகளை முழுமையாக அறிந்தால் அவர் நிலை? 

“தமிழு மதியம் சாப்பாடு  இருக்கு மறந்திடாம சாப்பிடு நான் காய் பறிக்க போறேன்” என்றவர் சென்றுவிட தன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அமர்ந்தான். 

சற்று நேரத்தில் அவனுக்கு அழைப்பு வர சீமா தான் அழைத்திருந்தாள். சூமில் மீட்டிங் ஆரம்பிக்க அவன் சொல்வதை அனைவரும் கவனிக்க ஒரு ஒருத்தராக  தீவிரமாக பேசிக்கொண்டனர். மதியம் தாண்டி நீண்ட நேரம் அனைவரோடும் கலந்தாலோசனை சென்றது. 

மணி மூனாகும் போதுதான் வாசுகி திரும்பி வந்தார் அதுவரையிலும் பேசிக்கொண்டிருந்தனர். அவன் எப்போதாவது இது போல் பேசுவது உண்டு என்பதால் அவர் வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டார். 

தமிழ்மாறன் முகத்தில் சிறு அழுத்தம் தெரிந்தது எதையோ யோசித்தவன் மடிக்கணினிகனயை அணைத்துவிட்டு எழ பாவினியோடு போசிக்கொண்டு உள்ளே வந்தாள் சாதனா. 

மருமகளை பார்த்ததும் பிணக்கோடு உள்ளே சென்றுவிட்டார் வாசுகி. தமிழ் சாப்பிடானா  என சாதனா கண்டுக்கொள்ளாத கோவம் அவள் மேல். ஆனால் அவனுக்கோ அவளை பார்த்ததும் மனம் லேசானது போல் இருந்தது. ஒரு முறை மனைவியை காதலாய் வருடியது அவன் பார்வை. 

“என்ன சாதான வீட்டிக்கு போகம இங்க வந்திருக்க?” என்றவன் சோம்பல் முறிக்க கண்ணடித்தாள் அவள். தமிழ்மாறன் அவசரமாக பாவினியை பார்க்க அவள் ரவியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 

ஒற்றை விரலை நீட்டி அவளை எச்சரித்தவனை கண்டுக்கொள்ளாமல் உள்ளே வந்தவள் வாசுகியை தேடிச் சென்றாள். 

“அத்த எப்படி இருக்கீங்க?” என அவரை பின்னால் இருந்து அணைக்க 

“ம்ம் நல்லாருக்கன் மா” என்றவர் உளுந்தை கழுவினார். 

“மாவரைக்க போறீங்களா? நான் அரிசியை கழுவட்டா? என ஐடி கார்டை கழட்டியவள் வேகமாக முகம் கழுவ சென்றாள். வாசுகியிடம் பேசிக்கொண்டே அரிசியில் விளையாடி கீழே இறைத்து ஒருவழியாக கழுவியவள் அதை எடுத்து தின்ன கையில் தட்டினார் அவர். 

“ப்ச் அரிசியை  சாப்பிடாத சாதனா ரத்த  சோகை வந்திடும்” அவர் அதட்ட அவருக்கு தெரியாமல் மீண்டும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். 

“எப்படி எல்லாத்தையும் தனியா பாக்குறிங்க அத்த நீங்க?” என அவர் செய்யும் வேலையை வேடிக்கை பார்க்க பாவினியும் வந்து சேரவும் பேச்சு கலை கட்டியது. பாவினி கழுவ வேண்டிய பாத்திரத்தை எடுக்க சாதனாவும் அவளுக்கு உதவினாள். 

“வாசு அத்தை இங்க என்ன தனியா சாப்பாடு இருக்கு? ” சாதனா கத்த அவளை திரும்பி பார்த்தவர்

“தமிழ் மதியம் சாப்பிடலையா? அவனுக்கு தான் எடுத்து வச்சேன்” என அரிசியை கிரைண்டரில் போட்டவாறு  சொல்ல ஒரு தட்டில் உணவை வைத்தவள் தமிழிடம் எடுத்துச் சென்றாள். 

தட்டோடு தமிழ்மாறன் முன் சென்று அவனை முறைக்க புருவத்தை உயர்த்தினான் அவன். 

“மணி ஐஞ்சாகுது இன்னும் சாப்பிடலையா நீங்க? ” என்றவள் தட்டை அவன் கையில் திணிக்க வாங்கிக் கொண்டவன் 

“மறந்துட்டேன் சாதனா அம்மா தந்தாங்களா?” என உண்ன அவன் அருகே அமர்ந்தாள் அவள். 

“இல்லை அத்த நீங்க இன்னும் சாப்பிடலைனு சொன்னாங்க அதான் நான் எடுத்துட்டு வந்தேன்”  என்றவள்

“சாப்பிட கூடவா மறப்பிங்க நீங்க? இன்னேரம் வரை சாப்பிடாம இருப்பிங்களா? அண்ணி என்னனா உங்களை ஹெல்த் கான்ஷியஸ் உள்ளவர்னு பாராட்டுறாங்க” என்றவள் வாயில் “பேச்சை குறை டி” என்றவாறு

ஒரு உருண்டை எடுத்து திணித்தான் அவன். 

சாதனா பின்னே வந்த வாசுகி சாதனா தமிழை திட்டுவதை கண்டு மனம் நிறைந்தார். அவர்க்கு சாதனா மேல் இருந்த கோவம் குறைந்தது. அவன் சாப்பிட்டு முடிக்கவும் டியூசனுக்கு மாணவர்கள் வர ஆரம்பிக்க அவளை கிளப்பினான்  தமிழ்மாறன். 

“சது என்ன உட்காந்திருக்க? கிளம்பு  சதிஷ  வர சொல்றேன்” என்றவன் சட்டையை போட  

“உங்க கூடவே இருக்கேன் த்தான்…  சேந்து போலாம்” என கெஞ்சினால் அவள். 

“உனக்கு படிக்கிற வேலை இல்லையா? நாளைக்கு காலேஜ் கிளம்பணும்” 

“நாளைக்கு எனக்கு லீவ்தான்  சரி சொல்லுங்க த்தான்” என அவள்  நச்சரிக்க 

“நான் இன்னைக்கு அங்க வரலை சாதனா எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீ கிளம்பு  என்னாலையும் உன்னை வந்து விட முடியாது” என்றவன் அவள் கையை இழுக்க அசையாமல் நின்றாள். 

“என்னடி அடம்பிடிக்கிற எனக்கு நேரம் ஆகுது பிள்ளைங்க வந்திருப்பாங்க”

“நான் இங்கேயே இருக்கேன் ப்ளீஸ்… நாளைக்கு வீட்டுக்கு போயிக்கலாம்”

“அதெல்லாம் சரிவராது நீ வா முதல” 

“விடுங்க என்னை நான் இங்க தான் இருப்பேன்  இன்னைக்கு பாவினி மருதாணி போட்டுவிடுறேனு சொன்னாங்க  ப்ளீஸ் ….த்தான் நம்ம வீட்ல தானே இருக்கேன்” அவள் கெஞ்ச வேறு வழியின்றி சரி என்றான். 

அவள் முகத்தில் சந்தோஷம் பரவ அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு ஓடிவிட்டாள் சாதனா. 

அவன் டியூசன் முடித்து வரும்வரை அவள் பேச்சு ஓயவில்லை பாவினியும் சாதனாவும் நன்றாக ஒட்டிக்கொள்ள அவர்கள் பேசி சிரிப்பதை பார்த்தவாறு பாவினிக்கு மருதாணி வைத்துக் கொண்டிருந்தார் வாசுகி. 

தமிழ் சாவியை மாட்டிவிட்டு அவர்கள் அருகில் வந்து அமர அதிசயமாய் பார்த்தனர் அன்னையும் தங்கையும். எப்போதும் வந்ததும் ரூமில் சென்று கதவை அடைத்துக் கொள்பவன் இன்று அமர்ந்து வேடிக்கை பார்க்க அவன் கையிலும் மருதாணி வைத்துவிட்டார் வாசுகி. 

“எனக்கு ஏதுக்குமா? ” என்றவன் கையில் மருதணியை உருட்டி வைத்தவர்

“வச்சிக்கடா குளிர்ச்சி உடம்புக்கு நல்லது…  அதுவும் ஆம்பள பசங்க தான் மருதாணி அதிகமாக வச்சிக்கனும்” என இரண்டு கையிலும் வைத்துவிட ஆனந்தமாய் கழிந்தது நேரம். 

வாசுகியே அனைவருக்கும் ஊட்ட மூவருமே நிறையேவே உண்டனர். தமிழ் அதிகமாக உண்பதை சாதனா குறித்துக்கொண்டாள். 

‘அங்க மட்டும் ஏன்  கொஞ்சமா சாப்பிடுறாங்க? ‘ என முதல் முறையாக யோசித்தாள் அவள். 

தமிழ்மாறன் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு அன்றைய நாளை கொண்டாடினான் என்று தான் சொல்ல வேண்டும். நாளையில் இருந்து அவன் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதற்கு சாதனாவின் ஒத்துழைப்பும் தேவை அவளிடம் இன்றே பேசிவிடலாம் என்று இருந்தான் அவன். 

வாசுகி சாதனாவிடம் பால் டம்ளரை தந்துவிட்டார். அவள் தமிழ் அறைக்கு வர ஏதோ பெரிய புத்தகத்தை கையில் வைத்து பார்த்து கொண்டிருந்தான் அவன். 

டம்ளரை டேபில் வைத்தவள் கதவை தாழ் போடவும் நிமர்ந்து பார்த்தவன் புத்தகத்தை மூடி அதன் இடத்தில் வைத்துவிட்டு பாயை விரித்து இருவருக்கும் தலையணை எடுத்துப்போட அவனிடம் டம்ளரை நீட்டியவள் பாயில் அமர்ந்து போனை நோன்டிக் கொண்டிருந்தாள். 

“என்ன பண்ற சது?” என அவனும் அவளுடன் அமர அவன் மேல் சாய்ந்தவள் அவர்கள் திருமண படங்களை காட்டினாள். 

“இதுல நீங்க நல்லாருக்கீங்க  த்தான்” என திரைக்கு முத்தமிட 

“நான் தான் நேர்ல இருக்கனே என்னை விட்டு அவனுக்கு தர” என அவள் காது மடலை கடித்து இழுத்தான் அவன். 

“தந்துட்டா போச்சு” என்றவள் அவன் கன்னத்தில் முத்தம்மிட அவன் காட்டிய மறு கன்னத்தை நறுக்கொன கடித்து வைத்தாள். 

“ஸ்ஸ்ஸ்ஸ்  ம்மாஆஆ இருடி உன்னை” என்றவன் அவன் பங்குக்கு காணும் இடம்மெல்லாம் கடித்து வைக்க கிறங்கி போனாள் சாதனா. 

“போதும் விடுங்க அப்பறம் கத்திடுவேன்” மூச்சு வாங்க அவனை பிரித்தவள் அவன் மார்பிள் முகத்தை அழுத்த அவளை அணைத்துக்கொண்டு படுத்தான் அவன். 

“உனக்கு இங்க கம்பர்டபுளா இருக்கா சது?” காதோடு அவன் பேச நெருங்கி படுத்துக்கொண்டவள்  

“இப்போ ரொம்ப கம்பர்டபுளா இருக்கு” எனவும் அவள் கையை எடுத்து முத்தம் வைத்தவன்

“நீ அம்மா கூடவும் பாவினி கூடவும் நல்லா பேசுனதுக்கு தேங்கஸ்” என்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள். 

“என்னடி?” என்றவன் வார்த்தை குலைந்தது கரைய  

“அவங்க என் அத்தை பாவினி என் அத்த பொண்ணு நான் பேசுனா தேங்கஸ் சொல்றிங்க?  நான் என்ன வில்லியா? ” என அவன் மீசையை வலிக்க இழுத்தவள் அவன் உச்சு முடியை பிடித்து  ஆட்ட அவள் நெருக்கத்தில் அவனுக்கு உணர்வுகள் மேலெழுந்தது. அவன் விரல்கள் அவள் மேனியில் கோலமிட 

“தூக்கம் வருதா சது? ” என முத்தமிட ஆரம்பித்தவனுக்கு அவள் என்ன பதில் சொல்லமுடியும்  வழக்கம்போல் “மாறா” என்ற வார்த்தை இருவர் இதழுக்குள்ளே அடங்கியது.