அத்தியாயம்-1
அறிமுகம்
நட்பூக்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் தோழி தளவம் என்ற பூவின் பெயரில் உங்களின் மனங்களை வசமாக்க வருகிறேன்.
நாயகன் சூர்யா
நாயகி சந்திரா
அத்தியாயம்-1
அதிகாலை 5.30 மணிக்கே சூரியன் பளீரென்றிந்தது. ஓ! லேட் ஆகிடுச்சா அவசரமாக மணியை பார்த்தவள் 5.30 என்று பார்த்ததும் சற்று நிம்மதி அடைந்தாள். மெதுவாக கட்டிலை விட்டு கீழே இறங்கியவள் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள். அங்கு எம் எஸ் அம்மாவின் குரலில் வெங்கடேச சுப்ரபாதம் அப்போதுதான் முடிந்தது. கைப் பேசியில் அதை அணைத்து விட்டு,
அன்னை,
வாடி! இந்தா காபி. பித்தளை டம்ளரில் புது டிகாக்ஷன் மணக்க மணக்கச் சுடசுட ரசித்துக் குடித்தாள் . அவளுக்கு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலையில் புது பால் புது டிகாக்ஷன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரையுடன் காபி வேண்டும். வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே வெள்ளை சர்க்கரை. வீட்டில் அவளுக்கு எப்போதுமே நாட்டுச் சர்க்கரை தான். காபியை குடித்து விட்டு முற்றத்தில் இருந்த சில பாத்திரங்களை கழுவி வைத்தாள். அடுத்து மெதுவாக வீட்டை பெருக்கினாள். அவர்கள் இருப்பது 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. கையில் இருந்த பணத்தைக் கொண்டு நண்பனிடமிருந்து வாங்கி இருந்தார் அவர் தந்தை. அதற்க்கு இன்றளவும் லோன் கட்டிக் கொண்டிருக்கிறார். தந்தையின் கஷ்டத்தை உணர்ந்தவள் என்று பி.காம் எடுத்து படித்து சிஏவையும் முடித்து இப்போது ஒரு கம்பெனியில் அகௌண்ட்ஸ் பகுதியில் தலைமை பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறாள்.
நீ ஏம்மா இந்த வேலைலாம் செய்யற? அவசரமாக துடைப்பத்தை பிடுங்கினார் தந்தை.
அதை ஏம்பா பிடுங்கறீங்க? இந்தாங்க! நான் வேலைய முடிச்சுட்டேன். சிரித்துக் கொண்டே தந்தையிடம் கொடுத்தாள் . அவளின் பளீரென்ற சிரிப்பும் வைர மூக்குத்தியும் போட்டி போட்டுக் கொண்டு மின்னியது. அவள் விட்டு வைத்திருந்த குப்பையை அள்ளிக் கொட்டி விட்டு செய்தித்தாளை பார்க்க உட்கார்ந்தார் தந்தை. மெதுவாக குளிக்க சென்றாள் அவள் .
சந்திரா என்னாச்சு? குளிக்கும்போது கதவைத் தட்டினாள் அன்னை. ஒன்னும் இல்லமா தலைக்கு ஊத்திக்கிட்டேன். தலையில் துண்டை சுற்றியவாறே வெளியில் வந்தாள். இப்போ எதுக்கு தலைக்கு லீவு நாள்ல குளிக்க வேண்டியது தானே? சரி சரி சீக்கிரம் தலையை துவட்டிக்கிட்டு ரெடியாகு . டாக்டர்கிட்ட போகணும். ஆபிசுக்கு லீவு சொல்லிட்டியா ?
இல்லமா இன்னைக்கு புதுசா வேறு ஒரு பாஸ் வர்றாராம் அதுனால லேட்டானாலும் வந்துடுன்னு சொன்னாரு ஸ்ரீதர் சார்.
என்னவோ போ தலையில் லேசாக அடித்துக் கொண்டு சமையல் அறைக்கு ஓடினாள் அன்னை. அவள் வருவதற்குள் இட்லியை அணைத்துவிட்டு சட்னிக்கு தாளித்துக் கொண்டிருந்தார் கணவர். வேகமாக சிற்றுண்டியை உண்டுவிட்டு வேகமாக மூவரும் மருத்துவரிடம் சென்றனர். அவர்கள் சென்ற சில மணி நேரம் கழித்துதான் அழைத்தனர். இவளுக்கோ டென்ஷனாக இருந்தது.
இவளின் ரிபோர்டுகளை பார்த்த மருத்துவர் எல்லாமே நார்மல் தான். ஆனா பிபி ஏறாம நீங்க பார்த்துக்கணும். எந்த விஷயத்துக்கும் நீங்க டென்ஷன் ஆகவேக் கூடாது.
சொன்ன எங்க கேட்கறா ? சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கண்ணுல தண்ணி கொட்டுது கோபத்துடன் உரைத்தாள் அன்னை.
தலையை குனிந்துக் கொண்டாள் சந்திரா. அவள் மனதில் என்ன இருந்ததோ ?
———————————————————————————————————————————————————————————–
இவளின் கம்பனிக்கு புது பாஸ் சூர்யா வந்தான். பார்க்கவே மிடுக்காய் இருந்தான். அவன் முகத்தில் படிப்பின் களை தாண்டவம் ஆடியது. ஆறடிக்கு அழகாய் நிமிர்ந்து நின்றான். அவனின் வருகையே அவன் தான் பாஸ் என்று அப்பட்டமாய் காட்டியது.
ஹாய் கைஸ்! ப்ளீஸ் பியூ மினிட்ஸ் அழைத்தான் ஸ்ரீதர். வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இவர்தான் உங்களோட புது பாஸ். நான் நம்மளோட டெல்லி ஆபிசுக்கு போறேன் எஸ் அஃப்கோர்ஸ் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். எனக்கு எப்படி ஒத்துழைப்பு குடுத்தீங்களோ அதே மாதிரி இவருக்கும் தரணும்.
எஸ் சார் கோரஸாக ஒலித்தது சத்தம். அவனை வரவேற்கும் விதமாக வெல்கம் சர் என்று போட்ட கேக்கை கொண்டு வந்தாள் வாணி .
சர் ப்ளீஸ்! கையில் கத்தியை நீட்டினாள். புன்னகையுடன் கேக்கை கட் செய்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் யாரைத் தேடுகிறான்? வாணியும் ஸ்ரீதரும் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் அவனோ அங்கே மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆயாவை அழைத்தான். அவளுக்கு ஊட்டினான். அவன் கையை தடுத்தவள் அதை அவனுக்கே ஊட்டினாள் .
ஹேய்! என்று அங்கு கரகோஷம் எழும்பியது.
நல்லா இருக்கணும் ராசா ! மனதார வாழ்த்தினாள்.
தேங்க்ஸ்ங்க !
ஹாய் கைஸ் நம்மளோட ஐஸ் கிரீம் போலவே நான் எப்பையும் கூலாவே இருக்க மாட்டேன். வேலைல மட்டும் கவனம் செலுத்துங்க. பிரச்னை இல்லாத வரைக்கும் நான் உங்களோட நண்பன். ஆல் தி பெஸ்ட். சொல்லி விட்டு மட மடவென தன் அறைக்குச் சென்றான். அவனின் இந்த நடவடிக்கை ஸ்ரீதரே எதிர்பார்க்காதது.
என்னடா இது? பர்ஸ்ட் டைம் பேசும்போதே ஸ்ட்டாப்ஸ் கிட்ட இவ்ளோ கறாரா பேசிட்ட ?
இல்லடா! முதல்லயே சிரிச்சு பேசினேனா யாருக்கும் என் மேல பயம் இல்லாம போய்டும். அப்பப்ப ப்ரண்ட்லியா இருப்பேன். நீ கவலை படாத.
என்னமோடா நான் படிச்ச மேனேஜ்மென்ட்ல இதல்லாம் சொல்லி தரல .
வேலைய பாக்கலாமா ? கண்ணை உற்று நோக்கினான்.
அதற்க்கு பிறகு இருவரும் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். ஸ்ரீதர் அனைத்து விஷயங்களையும், வேலை பார்ப்பவர்கள் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் கூறிக் கொண்டிருந்தான். அப்போது சந்திரா அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள்.
வா ராசாத்தி! டாக்டர் என்ன சொன்னாங்க? ஆயா கேட்டாள் .
ம்ம்! எல்லாம் நல்லா இருக்கு, ஆனா BP மட்டும் பார்த்துக்கணும்னு சொன்னாங்க. புது பாஸ் வந்தாச்சா ?
வந்துட்டாரு. அவரை வந்ததும் கேக்கு வெட்டினாரு .
ஓ !
நீதான் இல்ல.
ம்! அழகாய் சிரித்தாள்.
அவரு சொக்க தங்கம். கேக்க வெட்டிட்டு எல்லாரும் பாக்கும்போது எனக்கு ஊட்டிட்டாரு . எனக்குதான் வெட்கமா போச்சு. இந்த வயதிலும் மீண்டும் வெட்கப் பட்டாள் ஆயா .
உன்கிட்டேர்ந்து நல்ல பேர் வாங்க கேக் ஊட்டினா போதும் இல்ல .
ஏண்டி! என் வயசுக்கு யாரு எப்படின்னு பார்த்ததும் தெரியாது ?
தலையை குனிந்து ஒரு கும்பிடு போட்டாள் .
சோம்பல் முறித்து நாற்கலையில் இருந்து எழுந்தவன் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். அப்படியே அலுவலில் என்ன நடக்கிறது என்பதை கதவில் இருந்த திரையை விலக்கி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இவை அனைத்தும் நடந்தது. எல்லாரையும் பேச்சிலேயே மயக்கிடுவா ? மனதில் பொறாமையுடன் கலந்த எரிச்சல் வந்தது. சட்டென வந்து தன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.
சிறிதளவு நீரைப் பருகியவள் புது முதலாளியைப் பார்க்கச் சென்றாள் . மனம் இன்ப அதிர்ச்சி அடைந்தது. தன் வாழ் நாளில் மீண்டும் ஒரு முறையாவது அவனை வாழ்வில் வெற்றி அடைந்தவனாக பார்க்கத்தானே அவள் காத்திருந்தது! இன்று அது நடந்து விட்டது.
அவள் சிந்தனையை ஸ்ரீதர் கலைத்தான். சந்திரா இவர் சூர்யா இனிமே நீங்க இவர்கிட்டதான் வேலை பாக்கப் போறீங்க.
சூர்யா இவங்க ……..
சந்திரா ! சட்டென்று அவளிடமிருந்து பார்வையை விலக்கியவன்,
நீதானே சொன்ன ?
முதலில் சிறு தடுமாற்றம் இருந்தாலும் பின்னர் இருவருமே சமாளித்துக் கொண்டார்கள். ஸ்ரீதர் சந்திராவின் வேலைகளை பற்றி விளக்கினான் . ஸ்ரீதர் நடுவில் ரெஸ்ட் ரூமிற்க்கு சென்றான். அப்போது பியூன் கேக்கை கொண்டு வந்து மூவருக்கும் வைத்துவிட்டு போனான். உங்கள இங்க பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி. நான் இதை சந்தோசமா சாப்பிடப் போறேன். உங்களுக்காக! உங்களோட வெற்றிக்காக! கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. அதை துடைத்துக் கொண்டாள் . அப்போது அதைப் பார்த்துக் கொண்டே ஸ்ரீதர் வந்தான். இருவரின் உடல் மொழியை பார்த்தவனுக்கு வேறு ஏதோ விஷயம் இருக்குமோ என்றது தோன்றியது.
பிறகு தன் இருப்பிடத்திற்கு சென்றவள் வழக்கம்போலவே தன் வேலையில் மூழ்கினாள் .
வேலையை முடித்துவிட்டு பேருந்தில் ஏறியவள் ஏதாவது பாட்டுக் கேட்கலாம் என்று மொபைலை ஆன் செய்தாள் . அவளுக்கு மனம் முழுவதும் அவனே நிரம்பி இருந்தான். போதாதற்கு அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாமே? மனம் சிறகை விரித்தது .
மதியம் அலுவலகத்தில் மகேஷ்,
சார் இன்னிக்கு என்ன சாப்பாடு? பஸ்ட் டே புது ஆபிஸ். கண்டிப்பா மேடம் ஏதாவது ஸ்பெஷலா தான் குடுத்துருப்பாங்க என்றான். ஆம்! அவனும் அவர்களுடன் சேர்ந்ததே உண்ண வந்தான்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல. சாம்பார் ரைஸ் தான். அதுவும் அம்மா செய்தது. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. சந்திராவை பார்த்துக் கொண்டே சொன்னான். இவளுக்கு தான் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதம் புரை ஏறியது.
சட்டென்று பதறி ஓடி வந்தவன் சாரா என்று தன்னை மீறி அழைத்துவிட்டான். அவசரமாக தண்ணீரை ஊட்டினான்.
அதிர்ச்சியில் அவள் இவனைப் பார்த்தாள், மற்றவர்களும்தான். உள் அறையில் இருந்து ஸ்ரீதரும் இதை கவனித்துக் கொண்டேதான் இருந்தான். ஒருவேளை அவள்தான் இவளோ ?
எதுக்கு இந்த மாதிரி சாப்பாடு கொண்டு வற்ரீங்க ? இந்தாங்க என்னோடது இது ஈஸியா இருக்கும். இதை சாப்பிடுங்க. இருவரின் சாப்பாடும் இடம் மாறியது. எச்சிலும்தான். அவள் இன்பமாகவே உண்டாள் . அவன்?
அவன் இல்லாத வாழ்க்கையே துன்பமாகத்தான் இருந்தது. அதை இன்னும் இன்னும் துன்பமாகத்தான் பலர் இருக்கிறார்களே ! விரக்தியில் சிரிப்பு வந்தது.
யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு காதில்,
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா
உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா
உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா
உன் பொய்கள் எல்லாம் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா………….
அங்கே காரில் சென்றுக் கொண்டிருந்தவனுக்கும் வானொலியில் அதே பாட்டு
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா…………………
ஏனோ கவிஞர் இவர்களுக்காவே எழுதியது போலவே உணர்ந்தனர்……….
பூக்கள் பூக்கும்…………………..