அத்தியாயம் 1

பூப்பந்தளில் ஆலிங்கனம்💞

கதிரவன் தன் கைகளை மடக்கி மலையில் விழும் நேரம் அந்த பெரிய வீட்டில் அவள் அழுகை சத்தம் தேய்ந்து தேம்பலாக மாறிக்கொண்டிருந்தது 

அவள் சாதனா,  கரு வண்டு விழிகளை கொண்ட பாவையின் முகம் கோவை பழமாக சிவந்திருக்க பட்டு கன்னம் கை தடம் பதிந்து கன்னி கருத்திருந்து. கார்  கூந்தல் கலைந்து முகத்தில் பரவிகிடக்க அலங்கோலமாய் அழுதுக் கொண்டிருந்தாள். 

சற்று முன் “பேரழகி” என தன்னை புகழ்ந்து கள்ள பார்வை பார்த்த காதலனை நினைத்து கொஞ்சம் அழுதாள். 

சட்டென்று உள்ளே ஒரு குரல் “இப்ப மட்டும் அவன் உன்ன பார்த்தா அப்படியே திரும்பி தில்லிக்கு ஓடிருவான்” என நக்கல் செய்ய அவசரமாக பக்கவாட்டில் இருந்த நிலைக் கண்ணாடியை பார்த்தாள். அதுவும் அதையே பிரதிபலிக்க அவசரமாக கையால் ஒடிக்கிவிட்டவளை எதில் சேர்பது என தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டவர் சுந்தரமூர்த்தி சாதனாவின் தந்தை. 

“எல்லாம் நீங்க பண்ற வேலைப்பா” கோபமாக ஒரு குரல் கணீர் என கேட்க திடுக்கிட்டு குனிந்து கொண்டாள் அவள். 

“அவரை ஏன் திட்ற? நீயும் தான் “சின்ன பிள்ளை சின்ன பிள்ளை”னு செல்லம் கொடுத்த” என தன் பெரிய அண்ணனை திட்டிய சின்ன அண்ணனை எண்ணி பல்லை கடித்தாள் சாதனா. 

“இவனுக்கு இதுல ஒரு பொறாமை” என முனுமுனுத்தவள்  அந்த வீட்டில்  இளவரசி. 

“இவ்வளவு பேசுற நீ படிக்கும் போதே  இவளுக்கு போன் வாங்கி தராதனு  நான் சொல்ல சொல்ல கேட்காம ஏன்டா வாங்கி தந்த” சுரேஷ் தம்பியிடம் பாய 

“ம்ம் நல்லா கேளுடா பெரியவனே. எல்லாம் இந்த சின்னவனால” என தூண்டிவிட்டது சாட்சாத் சாதனவே தான். 

அனைவரும் அவளை முறைக்க  ‘ஆத்தாடி இன்னிக்கு சிக்கியது நீ தான்டி என் வெண்ண மவளே’ என திருதிருத்தவள் கன்னத்தை பிடித்துக்கொண்டு  அழ ஆரம்பித்தாள். அதாவது அப்படி நடிக்க ஆரம்பித்தாள். இன்னொரு அறை வாங்க தாங்கும் உடம்பா அது. 

அவள் அழுகையில் மூவருமே கடுப்பாகிவிட்டனர். ஆகாமல் என்ன செய்வர். அவள் சின்ன அண்ணன் சதிஷ் அடித்தது ஒரு அடிதான் அதற்காக அவள் நடித்த நடிப்பில் அவனே தன் கன்னத்தில் பலமுறை அறைத்து கொள்ளலாம் என  நினைக்கும் அளவு குட்டி கலாட்டா செய்திருந்தாள் சாதனா. 

அண்ணன் தம்பி இருவரும் அடித்துக்கொள்ள இருவரையும் அதட்டினார் சுந்தரமூர்த்தி. 

“டேய் நீங்களே அடிச்சிக்கிட்டு இருந்தா எப்படிடா?” என தளர்வாக அமர்ந்தவரை கண்டு இருவரும் சண்டையை நிறுத்திவிட்டு கவலையில் ஆழ்ந்தனர். 

அவர்கள் கவலைக்கு காரணம் அவர்கள் இளவரசி சாதனாவே தான். அவளின் மூன்று மாதமேயான காவிய காதலை தெரிந்து நொந்து வெம்பி போய்விட்டனர். 

சுந்தர மூர்த்தி மீனா தம்பதிகளின் காதல் பரிசு தான் சுரேஷ் சதிஷ் சாதனா. முத்தான மூன்று பிள்ளைகள் காதல் கணவன் நிறைவான வாழ்க்கை ஆனால் வாழதான் கொடுத்துவைக்கவில்லை போல் மீனாவிற்கு. சாதனா பிறந்து மூன்றே மாதத்தில் மஞ்சள்காமாலை அவரை கொன்றுவிட்டது. தாய் பாலுக்கு ஏங்கி அழுத சாதனாவை பார்க்க முடியாமல் துணைவி மறைவு மறக்கடித்து விட சுந்தரமூர்த்தி பிள்ளைகள் நினைவின்றி கிடந்தார். ஏழு வயது சுரேஷ் தந்தையை புரிந்துக்கொண்டானோ? இல்லையோ? இடைவேளை இல்லாது அழுத சிசு அவன் உடன்பிறப்பு என்ற பாசம்  அழுகையோடு கையில் எடுத்துக்கொண்டான் அவளை. சாதனாவை போலவே அனாதரவாக அழுத சதிஷையும் தோள் சேர்ந்து  அண்ணாக அவன் பயனம் ஆரம்பித்தது. 

சுந்தரமூர்த்தி தேறி பிள்ளைகளை தேடிய நேரம் சாதனா ஒரு வயது குழந்தையாக இருந்தாள். மீனாவிற்கு திதி கொடுத்துவிட்டு வந்தவர் பிள்ளைகளை பார்த்த போது சுரேஷ் ஊட்ட சாதனா சமத்தாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். அவளுக்கு இடை இடையே வெண்ணீர் புகட்டிக்கொண்டிருந்தான் சதிஷ். 

மீனாவை அச்சில் வார்த்தது போல் இருந்த சாதனாவின் மேல் பாசம் வெள்ளமாக பெருகியது அவருக்கு. ஓடிபோய் மூன்று பிள்ளைகளையும் சேர்த்து அனைத்துக் கொண்டார் அந்த தந்தை. 

அன்றில் இருந்து தாயில்லா குறையை தெரியாமல் அவளை  வளர்தனர் அவ்வீட்டு ஆண்கள். 

அப்படி சீராட்டி அவர்கள் வளர்த்த குருத்து குலகொழுந்தாக இல்லாமல் வால் வைக்காத குரங்கு குட்டியாக இருந்ததில்  பெரும் கவலை அந்த தந்தைக்கு தான். 

வசீகரியான சாதனா சதா பிரச்சினைகளை இழுத்து வைத்தாள். பாடசாலையில் பக்கத்தில் இருந்த ஜீலியை கிள்ளியதில் ஆரம்பித்த பயனம் காலேஜில் “மாங்கா பறிக்கிறேன்” என கல்லால் பியூன் மண்டையை உடைப்பதாக மாறிய போதும் அந்த அண்ணன்களின் பாசம் மாறவில்லை. 

அவர்களுக்கு சாதனா உயர்த்தி அவள் மட்டும் தான் உயர்த்தி. தப்பு யார் மேல் இருந்தாலும் அவர்கள் அவள் பக்கம் தான். ஆனால் தந்தையான சுந்தரமூர்த்தி கவலை கொண்டார். கல்யாணம் முடித்து அடுத்தவர் வீட்டிற்கு செல்லபோகும் மகள் பொறுபின்மையும் விளையாட்டுதனமும் அவரை பயமூர்த்தியது. அதை மகன்களிடம் பகிர்ந்துக்கொண்ட போது அவர்கள் சொன்ன பதில் “வீட்டோடு மாப்பிள்ளை பாருங்க” என்பதே. அவருக்கும் அதுவே சரியாக பட இதில் சுத்தமாக விருப்பம் இல்லாமல்போனது சாதனாவிற்கு தான். 

அதனால் விளைந்தது தான் அவள் காவிய காதல். கைகுள் வளர்ந்த சாதனாவிற்கு வெளி உலகம் பற்றிய அறிவின்மையின் வெளிபாடாக தன்னை காதலிப்பதாக வந்த நின்ற தர்ஷிதை நிராகரித்தவள் அவன் சொந்த ஊர் தில்லி என்று தெரிந்ததும் அவளே மீண்டும் வழிய சென்று அவன் காதலை பெற்றுக்கொண்டாள். 

தில்லி வாழ்க்கையில் மோகம் கொண்டவள் காதலனை பற்றி கனவு காண்பதை விடுத்து தில்லியின் ஆடம்பரத்தை கனவாக கண்டாள். காதல் வார்தைகள்  பஞ்சமாக உணவு வகை பட்டியல் முதல் இடம் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட காவியமான சாதனாவின் கணக்கு காதலை  கண்டுபிடித்து ஒரு அறைவிட்ட பாசகரன் சதிஸை எதிரியை போல் பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா. 

அன்று வீடியோ காலில் தர்ஷித்க்கு தரிசனம் கொடுத்தவள்  அவன் கேட்ட காதல் பரிசான முத்தத்தை தூக்கி குப்பை தொட்டியில் வீசிவிட்டு அவன் ஊரில் இருந்து வரும்போது வாங்கி வர வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டிருந்தாள். அவன் காதலாக பேச அவள் காரியமாக பேச  இதை முழுதாக அவள் குடும்பமே கேட்டுவிட  அந்த இடத்தில் உதயமான பிரச்சனை பெரும் புகையை கிளப்பி விட்டிருந்தது. 

இரவு மாடியில் மூவரும் அமர்ந்திருந்தனர். 

“ஏன் ப்பா வர சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க?” சதிஷ் கேட்க சுரேஷ் அமைதியாக தந்தையை பார்த்தான். 

“பாப்பாக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்  நினைக்கிறேன்” என மவுனத்தை கலைத்தார் சுந்தரமூர்த்தி. 

“என்னப்பா நீங்க அவ சின்ன பொண்ணு இன்னும் காலேஜ் கூட முடிக்கலை” சுரேஷ் மறுக்க அதையே ஆமோதித்தான் சதிஷ். 

“ஆமாம்பா அண்ணன் சொல்றது தான் சரி. அவள் பேசுறத கேட்டிங்க தானே? தில்லில செட்டில் ஆகலாம்னு அல்ப ஆசைல  தப்பு பண்ணிட்டாள். இதை பெரிசு பண்ணாதிங்க  நம்ம பேசினா புரிஞ்சிப்பா. அவளுக்கு உலகம் தெரியலை”

“எனக்கும் தெரியுதுடா   அது தான் பிரச்சினை சதிஷ். என் பொண்ணு குழந்தைடா உலகம் தெரியாதவள்.  அவளுக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியாது. பாப்பா வெகுளிதனத்தை எவனாவது பயண்ப் படுத்திடுவானோன்னு பயமா இருக்கு” தந்தையாக சுந்தரமூர்த்தி கண்கலங்க மகன்கள் ஆதரவாக கை பிடித்தனர். 

“நாங்க இருக்கோம் ப்பா  அம்முவ விட்டுடுவோமா?”

“அதுக்கு இல்லடா தம்பி இது மனசு சம்பந்தபட்டது . பாப்பா எதுவும் ஆசைய வளர்த்துகிட்டானா அவளால் வெளியே வரமுடியாதுப்பா. எம் பொண்ணு விளையாட்டு பிள்ளை தான் ஆனா ஆசையா வாங்கின பொருள் உடைஞ்சா கூட ஏங்கி போயிடும். அது சிரமம் பட்டு பார்க்கவா நான் உயிரோடு இருக்கேன்?” என்றவரின் கண்ணீர் முத்தாக கோர்க்க வேண்டியதே. 

“சரிப்பா நாங்க  நாளைக்கே மாப்பிள்ளை தேடுற வேலைய ஆரம்பிக்கிறோம்” என்றனர்  சகோதர்கள் அது அவ்வளவு எளிதல்ல என்பதை அறியாமல். 

__________________

மணி இரவு எட்டை தொட  அந்த தகர கொட்டகையில் அமர்ந்திருந்த மாணவ மாணவியர் எழுந்துங்கொண்டனர். 

“தேங்கியு சார்” என அனைவரும் விடைபெற அவ்விடத்தை சுத்தம்செய்துவிட்டு பூட்டி சாவியோடு வீட்டிற்குள் நுழைந்தான் தமிழ் மாறன். தின்னயில்  காலை நீட்டி அமர்ந்திருந்தார் அவன் அன்னை வாசுகி. மூலையில்  அரசாங்க தொலைகாட்சி பெட்டி அலறிக்கொண்டிருந்தது.

சாவியை மாட்டியவன் உள்ளே எட்டி பார்க்க அவன் சின்ன தங்கை பாவினி கல்லூரி புத்தகங்கள்  நடுவே மிதந்துக்கொண்டிருந்தாள். பின்கட்டுக்கு சென்றவன் முகம் கால் கழுவிக்கொண்டு கைலி உடுத்திக் கொண்டு வர வாசுகி வாசலை எட்டி பார்த்தார். அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்தாள் அவன் பெரிய தங்கை  ரம்யா. 

“ஏன்டி லேட்டு?” என உள்ள வந்தவளை பிடித்துக் கொண்டார் வாசுகி. 

“ம்மா சம்பள நாள் ஓனர் வர நேரம் ஆச்சு” என்றவாறு சில ஆயிரங்கள் எடுத்து அவரிடம் தந்தவள் சோர்வாக அமர்ந்தாள். ஒரு பல்பொருள் அங்காடிக்கு வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தாள்  ரம்யா. 

“ம்ம் சம்பாரிச்சி உங்கள கரைசேர்ப்பானு பெரிய காலேஜ்ல படிக்க வச்சேன்  இவனை. எல்லாம் நம்ம நினச்ச மாதிரியா நடக்குது” என புழுப்பியவர் கண்ணை துடைத்துக்கொண்டு அந்த பணத்தை கணவரின் படத்திற்கு முன் வைத்துவிட்டு வந்தார். 

வாசுகி பேசியது தமிழ் மாறனின் காதில் விழ முகம் இறுகியது. இப்போதெல்லாம் அவன் மேல் வாசுகியின் பாசம் குறைந்து வெறுப்பு உருவாகுவது போல் தோன்றியது அவனுக்கு. அது தான் உண்மையும் ஆனால் அது தன் பெற்ற பெண்களை பற்றிய கவலை என்பது அவன் அறியவில்லை. 

“எம்மாவ் ஏன் அத பேசுற? அது தான் டியூசன் எடுக்குதுல அப்பறம் என்ன?” என கத்திய மகளை கோபமாக பார்த்தார். 

“ஏன்டி  டியுசன் எடுக்கவா  மாடா உழைச்சி அவன படிக்க வச்சேன்?. கஞ்சிகே கையேந்திர நிலமையிலையும் உங்க அண்ணனை இங்கீலிசு மீடியம் படிக்க வச்சேன். காலேசுல அவன் ஆச பட்டானு  பத்திரக காரனுக்கு படிக்க வச்சேன்” என மூக்கை சிந்தி முத்தானையில் துடைத்தார். 

“அய்யே  ம்மா ஜர்னலிஸ்ட்னு சொல்லுனு சொல்லியிருக்கன” என சின்ன மகள் முகத்தை சுழித்து அதட்ட நங்கென்று  அவள் தலையில் கொட்டினார் வாசுகி. 

“ஏன்டி சின்ன கழுத? பாடம் படிக்காம எனக்கு கிலாசு எடுக்க வந்துட்டா” என நொடித்தவர் மகன் முகத்தை தவிர்த்தார். 

“அம்மா” என அவர் முன்  மூட்டு வழி தைலத்தை நீட்டினான் தமிழ். அதை வாங்கிக்கொண்டவர்  ஜன்னலில் வைத்துவிட்டு அந்த அலுமினிய சோற்று பானையை கஞ்சி வடிய வைக்க சென்றுவிட்டார். 

“விடு  தமிழ் அம்மாக்கு  நீ வேலைக்கு போய் சம்பாதிக்கலனு கவலை.”

“உனக்கு ரொம்ப சிரமமா இருக்கா ரம்யா?” என வேதனையோடு கேட்ட அண்ணனை கனிவாக பாரத்தவள். 

“ஆமா எங்க அண்ணன் இப்படி சோகமா இருந்தா பார்க்க கஷ்டமா இருக்கு” என அவன் தலையை கலைத்துவிட்டு எழுந்து சென்றாள். 

“ஏன் ண்ணா நீ வேலைக்கு போகலை? என் பிரண்ட் சொன்னா நீ பன்ன கோர்ஸ்கு நல்ல சம்பலத்துல வேலை கிடைச்சிருக்கும்னு” என்ற சின்ன தங்கை பார்த்து சிரித்தவன் எழுத்து சென்று தன் அறையை பூட்டிக் கொண்டான் தமிழ் மாறன்.  

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த அன்னை, தங்கம் பூட்டாத தங்க சிலையாக இரண்டு தங்கைகள், உடல் ஒட்டி ஒரு நாய்,சின்னதாக ஒரு ஓட்டு வீடு சுற்றி பெரிய இடம் இது தான் அவனின் மொத்த சொத்து.  வீட்டு வாசலில் ஒரு தகர கொட்டகை அமைத்து அதில் தான் டியைசன்  நடத்திக்கொண்டிருக்கிறான். அது அவன் தனிப்டட தேவைக்காக. காலை மாலை டியூசன் எடுப்பவன் மற்ற நேரம் எல்லாம் அவன் அறையிலேயே தான். 

பயிற்சி வகுப்பை தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை பெற்ற  பிள்ளை என வாசுகி தான் எதுவும் சொல்லாம் வேலைக்கு சென்று வந்தார். ரம்யாவும்  படிப்பை முடிக்க அவளும் அக்கவுன்ட்ஸ்  சக்சனில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள்.  ஊரில் அனைவரும் வாசுகியை  ஏளனமாக பாரக்க அவனால் சொல்லென்னா வேதனை அவருக்கு. சில நாட்களாகவே அவருக்கு மகள்களை பற்றிய கவலையும் தொற்றிக்கொண்டது. 

யோசனையோடு  அமைந்திருந்த அன்னையை கண்ட ரம்யா  பாத்திரங்களை எடுத்துவைத்தவள் அனைவரையும் உணவு உன்ன அழைத்தாள். 

பாவினி முதல் ஆளாக தட்டை எடுக்க மகனின் அறை கதவை பார்த்தார் வாசுகி. 

“ஏய் சின்ன குட்டி உங்க அண்ணனையும் வர சொல்லு” என கடிய

“ண்ணாஆஆ அம்மா உன்ன சாப்பிட கூப்புடுது” என பெரிய கத்தலாக கத்த அவள் முதுகில் தட்டினால் ரம்யா. 

தமிழும் வர வாசுகிதான் பரிமாறினார். எப்போதும்  போல் அனைவரையும் விட தமிழுக்கு அதிகமாக வைத்தவர் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார். 

தன் அன்னையின் அன்பில் அவன் கண்கள் கலங்கி ஒரு சொட்டு கண்ணீர் வாசுகியின் கையில் பட்டு தெரிக்க அவசரமாக நிமிர்ந்து மகனை பாசமாக தலையை வருடி விட்டார் அந்த தாய். 

காசு பணம் பஞ்சம் என்றாலும் குறையாத அன்பை அள்ளி தந்தனர் அவன் இரத்த சொந்தங்கள்.