அதிகாரா 59
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மாமாவின் அழைப்பை ஏற்று அவரைக் காண எங்கே வர வேண்டும் என்று அழைத்துக் கேட்டான் நீரூபன்.
வீட்டிற்கே வந்துவிடும்படி அவர் கூறிவிட வீட்டை நோக்கி ஜீப்பை செலுத்தியவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.
‘அஞ்சனா ஏன் நேற்று மாமாவை சந்திக்க வேண்டும்? அதற்கு ராக்கேஷ் துணை எதற்கு. நேற்று தானே தாயிடம் அத்தனை பெரிய நாடகத்தை நிகழ்த்தி முதல் அடியை எடுத்து வைத்தோம்? அதற்குள் முட்டுக்கட்டை போட வந்து விட்டாளா? எப்படி மாமாவை எதிர்கொள்வது?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.
வீட்டின் வாயிலில் ஜீப்பை நிறுத்திவிட்டு அவன் உள்ளே செல்ல, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக நுழைந்தவனைக் கண்டு எழுந்து நின்று வரவேற்றார் ரமணி.
“வாப்பா” என்று ஆர்வமாக அவனை அணைத்துக் கொண்டவர் அவனை அமரச் செய்து தானும் எதிரில் அமர்ந்து கொண்டார்.
சில நிமிடங்கள் கடந்தும் அவர் பேசாமல் இருக்க,
“என்னாச்சு மாமா?” என்று மென்மையாக வினவினான் நீரூபன்.
“தம்பி முழுசா அரசியலுக்கு போகறதா முடிவு பண்ணிட்டிங்களா?” என்ற அவர் கேள்வியில் ஏகத்துக்கு தயக்கம் இருந்தது.
“முழுசான்னா என்ன அர்த்தம்னு புரியல மாமா” என்று அவன் விழிக்க,
“ஏற்கனவே சொல்லி இருப்பேன்னு நினைக்கிறேன். உங்க அம்மாவை உங்க அப்பாவுக்கு கொடுக்கும் போது அவர் அரசியல்வாதி இல்ல.
ஆனா அப்படி ஆனத்துக்கு பின்னாடி என் தங்கச்சி நிறைய கஷ்டம் அனுபவிச்சா? அதான்… இப்ப நீங்க என் மகளை விரும்புறீங்க! நான் நீங்க தொழில் பண்ணுற மகிழ்ச்சியில தான் அன்னைக்கு சம்மதம் சொன்னேன்.
ஆனா சமீபமா எப்பவும் கட்சி ஆபிஸ்ல இருக்கீங்களாம். கட்சி முடிவுகள் எல்லாம் அப்பா உங்க கிட்டயும் கலந்து செய்யறாங்களாம். அதான் உங்க வாழ்க்கையில அரசியல் எந்த இடத்தில் இருக்கு? அதுல உங்க முடிவு என்னன்னு தெரிஞ்சுக்க கூப்பிட்டேன்.” என்று தயங்கியபடி அவர் கூறி முடித்தபோது தன் தமக்கை இங்கே வந்த காரணம் விளங்கியது நீரூபனுக்கு.
மெல்ல எழுந்து ஹாலின் நீள அகலத்தை அளப்பது போல அங்கும் இங்கும் நடந்தான்.
பின் அவர் முன்னே சென்று, “நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லுங்க மாமா. எனக்கு பூமி வேணும். அவ தான் முதல்ல. நான் அரசியல்ல இருந்தா நீங்க உங்க பொண்ணை தர மாட்டீங்களா? அப்ப எனக்கு அரசியல் வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு அவர் முன் மீண்டும் வந்து அமர்ந்தவன்,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அப்படியெல்லாம் கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன் மாமா.” என்று அழுத்தமாகக் கூறினான்.
அவன் பதிலில் அவர் திகைக்க,
“எனக்கு பூமி முக்கியம் தான். அதே மாதிரி இப்ப அப்பாவுக்கு கட்சியை காப்பாத்தி கொடுக்க வேண்டிய கட்டாயமும், என்னை நம்பி பின்னாடி வந்த பலருக்கு நல்லது செய்ய வேண்டிய பொறுப்பும் இருக்கு.
முதல்ல ஃபார்ம் மட்டும் இருந்தப்ப எப்படி இருந்தேனோ அப்படி தான் சிட்டில ஆபிஸ் போட்டப்பவும் இருந்தேன். மேல எத்தனை பிஸ்னஸ் வந்தாலும், நான் பார்த்தாலும் எனக்கு அதை வகைப்படுத்தி சரியா கையாளத் தெரியும். அரசியலுக்கு போனாலும் நான் மாறப் போறது இல்ல.” என்று நிதானமாகச் சொன்னவன்,
“இப்ப திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்துச்சுன்னு எனக்கு தெரியும். அஞ்சு இங்க வந்துட்டு போயிருக்கா இல்லையா! அதோட தாக்கம்…” என்று அவன் சிரிக்க,
“அது…அப்படி இல்லப்பா” என்று இழுத்தார் ரமணி.
“புரியுது மாமா. ஆனா புரியல” என்று அவரது கரத்தைப் பற்றினான்.
அவர் அவனது பேச்சில் குழம்பவே அது அவர் பார்வையில் வெளிப்பட்டது.
“அவ வந்ததால நீங்க கவலைப்பட்டது புரியுது. ஆனா ஏன் அந்த கவலை வந்ததுன்னு தான் புரியல” என்று அவரது பார்வைக்கு அவன் விளக்கம் கொடுத்தான்.
“அது…” என்று நிறையத் தயங்கிவிட்டு,
“உன் அப்பா போல நீயும்…” என்று இழுத்தார்.
“அவர் போல அரசியலுக்கு போனா, நான் என்ன பண்ணிடுவேன்? என்ன பண்ணக் கூடாதுன்னு நீங்க எதிர்ப்பார்க்கறீங்க?” என்று நேரடியாகக் கேட்டு விட்டான்.
தன் கண்களில் இருந்து வெளிவரத் தயாராக இருந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார் ரமணி.
“உன் அம்மா ரொம்ப உடல்நலமில்லாம தான் இறந்து போனாள். ஆனா அப்ப எம்.எல்.ஏவா இருந்த உன் அப்பா அவ சாவை கூட அரசியல் ஆக்கிட்டார்.
மஞ்சள் காமாலை முத்தி இறந்து போன என் தங்கச்சியை அவரால போஸ்ட்மார்ட்டம் பண்ணி அறுத்து பொட்டலமா கட்டித் தான் எங்க கிட்ட கொடுத்தாங்க.
சும்மா இல்லாம அவ இருந்த ஆஸ்பத்திரி எதிர்க்கட்சி ஆதரவாளனோடதுன்னு அறிக்கை விட்டு, பெரிய போராட்டம் பண்ணி, கையில் உன்னை குழந்தையா வச்சுட்டு அவர் போட்ட நாடகம் கொஞ்சமில்ல.
கடைசில செத்துப் போன என் தங்கை பிணத்துக்கு நிம்மதியா காரியம் கூட பண்ணாம, போலீஸ், மீடியான்னு அவர் செய்த காரியம் கொஞ்ச நஞ்சமில்லை.
அதுக்கு முன்னாடி நான் பார்த்த திருமூர்த்தி அப்படிப்பட்டவர் இல்ல. ஆனா அரசியலுக்கு போனதும் ஆள் மாறி, குணம் மாறி, அவரோட நல்லது எல்லாம் போய் பொண்டாட்டி பிள்ளைங்களை வச்சு கூட அரசியல் பண்ணியதை என்னால ஏற்க முடியல.
அப்பவும் எதுவும் பேசாம பொறுமையா தான் இருந்தேன். உனக்காக அவர் மறுபடி கல்யாணம் பண்ணும்போது உன்னை நாங்க பார்த்துக்க கேட்டப்ப கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார். நாகுவும் நல்ல பிள்ளையா இருக்கவும் நான் விட்டுட்டேன்.
ஆனா அஞ்சனா எல்லா அரசியல் கூட்டத்துக்கும் அவரோட போகறது பிடிக்காம அவர் கிட்ட பேச வந்தப்ப மரியாதை இல்லாம பேசி தான் எங்களுக்குள்ள பிரிவே வந்தது. உங்க பக்கமே நான் வராம போனதுக்கு காரணம் உன் அப்பா மட்டுமில்ல உன் அக்காவும் தான்.
அன்னைக்கு அவளும் அவ போகக் கூடாதுன்னு சொல்ல எனக்கு உரிமை இல்லன்னு அவங்க அப்பாவுக்கு சாதகமா பேசினா. அவளுக்கும் அரசியல் புத்தி வந்துடுச்சுன்னு தான் விலகி போனேன்.
இப்ப நீங்களும் அரசியலுக்கு வந்தா…” என்று அவர் இழுக்க,
“உங்க பயம் எனக்கு புரியுது. நீங்க சொன்னது எதுவும் எனக்கு இப்ப வரை தெரியாது. ஏதோ மானஸ்தாபம்னு நினைச்சுட்டு இருந்தேன். என்னால உங்களுக்கு ஒரே ஒரு வாக்கு கொடுக்க முடியும். என்ன நடந்தாலும் என் குடும்பம் வேற அரசியல் வேற. இதை பிரிச்சு பார்க்கிற அளவுக்கு எனக்கு அறிவு இருக்கு. என்னால முடிவு பண்ண முடியாத சூழல் வந்தாலும் நான் குடும்பம் தான் முக்கியம்ன்னு நிற்பேன் மாமா. என் மேல நம்பிக்கை இருந்தா உங்க பொண்ணை கொடுங்க. இல்லன்னா…” என்று அவர் இழுக்க,
“உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல. நேத்து அஞ்சு வந்து, நீயும் அரசியலுக்கு வந்துட்ட, பூமிகா அவங்க வீட்டு மருமகளா வந்தா நல்ல இருக்கும்ன்னு மட்டும் தான் சொன்னா.” என்றார் அவசரமாக.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அவ என்ன சொல்லி இருந்தாலும், உங்க மனசுல உள்ள குழப்பத்துக்கு இப்ப விடை கிடைத்ததா இல்லையா மாமா?” என்று பொறுமையாவே கேட்டான் நீரூபன்.
அவர் ஆமோதிப்பாக தலையசைக்க, “சரி மாமா நான் கிளம்புறேன்.” என்று எழுந்து கொண்டான்.
‘என்னை தவறா நினைக்க வேண்டாம் பா” என்று அவர் தயக்கமாக கூறவே,
“மாமா! கூடப்பிறந்த பிறப்பை இழந்து அந்த துக்கத்தை வெளிப்படையா அனுஷ்டிக்க கூட முடியாத நிலையில உங்களுக்கு அப்பா மேலயும் அரசியல் மேலயும் எவ்வளவு வெறுப்பு வந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.” என்று அவரை மென்மையாக அணைத்து விடுவித்தான்.
அவர் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் சட்டென்று விடுபட்டு வெளியே வந்தது.
தன்னையும் தன் மனநிலையையும் புரிந்து கொண்டான் என்ற எண்ணம் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலை அளித்திருக்க, முதல் நாள் தன்னிடம் பேசிய அஞ்சு,
“தம்பியும் முழு நேர அரசியலுக்கு வந்துட்டான். இப்ப உங்க மக அவனுக்கு மனைவியா வந்தா எல்லாத்தையும் சரியா பார்த்துக்குவா.” என்று அலட்சியமாக சொன்னபோது அவர் வயிற்றில் உதித்த பயத்தை அவரால் வார்த்தைகளில் விளக்க முடியாது.
அந்த பயம் நீங்கிய நிம்மதி அவர் முகத்தில் தெரிந்ததும் மனநிறைவுடன் கிளம்பினான் நீரூபன்.
வாசல் வரை வந்தவனுக்கு பூமிகாவை நிச்சய விழாவில் பார்த்தது தான், அதன் பின் அவளை சந்திக்கவில்லை என்பது நினைவில் வர,
கைபேசியை எடுத்து அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
அவளது கைபேசியின் அழைப்பொலி அவன் முதுக்குப் பின்னே கேட்க,
சட்டென்று திரும்பினான் நீரூபன்.
வீட்டின் சுற்றுச் சுவரின் மேல் சாய்ந்து நின்றிருந்தாள் பூமிகா.
அவள் அணிந்திருந்த இளமஞ்சள் நிற டாப்சில் சிவப்புப் பூக்கள் ஆங்காங்கே சிதறியது போல இருப்பதைக் காண மாலை வானத்தில் காற்றில் ஆடும் பூக்கள் போல தோன்றியது அவனுக்கு.
அவளும் மெல்லிய மலர் போன்றவள் தானே! எண்ணியவன் உதட்டில் இளநகை பூக்க,
“என்ன இங்க இருக்க பாப்பா?” என்றான் ஜீப்பில் கையை ஊன்றியபடி.
“நேத்து உங்க அக்கா வந்துட்டு போனதுல இருந்தே அப்பா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாங்க. அதான் உங்களை வர சொல்லுவாங்களோ சந்தேகப்பட்டு தெரு முனையில் நின்னுட்டு இருந்தேன். உங்க ஜீப் வரவும் நினைச்சது சரியா போச்சுன்னு வண்டியை தள்ளிட்டு இப்ப தான் வந்து சேர்ந்தேன்.” என்று கைகளை பின்னால் வைத்து சாய்ந்த நிலையில் அவள் பேசிக்கொண்டிருக்க,
வார்த்தைக்கு வார்த்தை ஒட்டி ஒட்டி விலகும் அவளது செவ்விதழ்களைப் பார்க்கப் பார்க்க நீரூபன் மனம் அலை பாய்ந்தது.
மெல்ல முன்னேறி அவளது தோளுக்கு இருபுறமும் தன் கரங்களை சுவரில் பதித்து அவளது கண்களை நோக்கியபடி,
“இந்த டிடெக்டிவ் வேலையெல்லாம் மேடம் எப்ப ஆரம்பிச்சிங்க?” என்று நக்கல் போல வினவினாலும் அவன் குரலில் காதலைத் தாண்டிய ஆசை வெளிப்பட்டது.
“நாத்தனார் நாரதர் வேலை பார்த்தா, நான் கொஞ்சமாவது கவனமா இருக்க வேண்டாமா?” என்று அவன் பார்வையை எதிர்கொண்டபடி பதிலளித்தாள்.
அவளது கூந்தல் காற்றில் கலைந்திருக்க, அதனை மெல்ல ஒதுக்கியவன்,
“ஏன் டி என்னை வந்து பார்க்கல நீ?” என்று உரிமையாக வினவ,
“நாலு வருஷமா நான் தான் உங்க பின்னால சுத்திட்டு இருக்கேன்.” என்று உள்ளே போன குரலில் பார்வையை தழைத்துக் கொண்டு கூறினாள்.
“ஓ! அப்ப இனிமே பின்னாடி வர மாட்டியா?” என்று அவளை வம்புக்கு இழுக்க,
“மாமா!” என்று சலுகையாக அழைத்து அவனை நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள்.
“நானும் பாவம் டி. அப்பப்ப வந்து கவனி. ஆயிரம் வேலையில் தலை கிறுகிறுத்து போனாலும் உன்னைப் பார்க்கும்போது தான் பாப்பா சர்வீஸ் பண்ணினா மாதிரி பக்காவா வேலை செய்யும்.” என்று அவளை குளிர்விக்க நினைக்க,
“யோவ் மாமா, நான் என்ன மெக்கானிக்காக? போங்க உங்க கூட நான் பேசவே மாட்டேன்.” என்று விலகிப் போக இருந்தவளை அப்படியே வளைத்துப் பிடித்து ஜீப்பினுள் ஏற்றினான்.
அவனது திடீர் செய்கையில் அவளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அவனது அன்பும் ஆசையும் அவளுக்கு இதமாக இருந்தது.
‘எங்கே அஞ்சனா தனக்கு கிடைக்க இருக்கும் வாழ்வை தட்டி விட்டு விடுவாரோ!’ என்று பயந்து போயிருந்த அவளுக்கு அவனது நெருக்கமும், ஆசையும், அணைப்பும் தேவையாக இருந்தது.
ஏன் அதற்கு மேலும் அவன் அவளை நெருங்கினால் கூட இன்றைய மனநிலையில் பூமிகா ஒத்துழைத்து விடுவாள். அப்படி பயந்து போயிருந்தாள். முதல் நாள் வீட்டின் சிசிடிவி பதிவுகளை எப்பொழுதும் போல இரவில் பார்த்துக் கொண்டிருக்க அஞ்சனாவின் வரவைக் கண்டு அவளது உள்ளம் ஆடிப் போனது.
வீட்டை எதிர்த்து நீரூபன் மணக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் ஏற்கனவே வலுத்திருக்க, இனி மாமன் தனக்கில்லை என்றால் என்ன செய்வது என்றது வரை அவளது உள்ளம் ஒரு இரவில் கணக்கு போட்டு வைத்திருக்க,
நீரூபனின் நெருக்கம் அவளுக்கு பெரும் ஆறுதல் கொடுத்தது.
“ரொம்ப பயந்து போயிட்ட போல பாப்பா. என்று கேலியாகக் கேட்டவன், பாப்பான்னு கூப்பிட்டா பாப்பா மாதிரி பயப்படணுமா என்ன?” என்று அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்.
வாகாக தன் தலையை அவன் நெஞ்சில் சேர்த்துக் கொண்டவள்,
“உங்களுக்கு என்ன? பேசுவிங்க. உங்க அப்பா பேசியதும் என்கிட்ட ரெண்டு மூணு நாள் பேசாம இருந்தவர் தானே! அப்ப என் அப்பா ஏதாவது சொன்னா, எங்க என்னை முழுசா விட்டுட்டு போயிடுவீங்களோன்னு எனக்கு வந்த பயம் தப்பில்லை மாமா.” என்றாள் கண்களை மூடிக்கொண்டு.
“ஏன் அப்படி சொல்ற? நான் அதுக்கு சாரி கேட்டேன் தானே?” என்று அவள் தாடையை பிடித்து தன்னைப் பார்க்க வைத்து வினவியவன்,
“எப்படி உனக்கு நம்பிக்கை கொடுக்கலாம” என்று தன் நெற்றியைக் கீறி யோசிக்க,
அவன் எண்ணம் போகும் போக்கை அறிந்தவள்,
“மாமா… வேண்டாம்” என்று ஆரம்பிக்க, முடிவை தான் இதழ் கொண்டு அவள் இதழில் எழுதி நம்பிக்கை பத்திரம் வரைந்தான் நீரூபன்.