அடங்காத அதிகாரா 65
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரா 65
ஒருநாள் மாலைப் பொழுது அனைவருக்கும் இனிமையாக கழிய, தொலைகாட்சி நிறுவன அலுவலகத்தில் சோர்வாக அமர்ந்திருந்தாள் நேத்ரா.
திருமணம் நிகழ்ந்து ஒரு மாதம் கடந்து விட்டது. தேன்நிலவுக்குப் பின் அவளுக்கும் வசீகரனுக்கும் தனிமையான நேரம் எதுவும் அமையவில்லை. சில நாட்களாக இரவில் கூட இருவரும் சோர்வில் அணைத்தபடி உறங்குவது வழக்கமாகி இருந்தது.
மாலையில் சூரியன் மறைவதை பத்தாம் தளத்தில் இருந்த கண்ணாடி தடுப்பு வழியாக பார்த்த அவளுக்கு வசீகரன் தோள் சாயும் ஆசை வந்தது.
சூரியன் மேற்கில் முழுமையாக மறைந்து போனது. அதனைக் கண்டபின் தன் நாற்காலியில் தலையை பின்னால் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் அவள் தன்னருகே யாரோ இருப்பது போல உணர, தலை நிமிர்ந்தபோது அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் வசீகரன்.
சோர்ந்து போயிருந்த நேத்ராவின் விழிகளில் நொடி நேரத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
அவளது கரத்தை கேட்டு தன் வலக்கரத்தை நீட்டினான் வசீகரன்.
இன்பமாய் அவனிடம் தான் காரத்தைக் கொடுத்து விட்டு எழுந்து அவனருகில் அவள் சென்றதும்,
“வீட்டுக்கு போலாமா ஐஸ்?” என்று மென்மையாக வினவினான்.
“ம்ம்” என்ற முணுமுணுப்பு மட்டுமே வந்தது அவளிடமிருந்து.
இருவரும் கைகோர்த்து தங்கள் இல்லம் நோக்கி காரில் பயணித்தனர்.
“ஓரளவு எல்லா வேலையும் ஸ்ட்ரீம் லைன் பண்ணிட்டேன் ஐஸ். இனிமே இந்த நேரம் நாம வீட்டுக்கு போயிடலாம். நானே வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்.” என்று வசி கூறியதும்,
“நானும் வேலையெல்லாம் நாம இல்லாமலே நடப்பது போல சரியான ஆள் போட்டு அவங்களை ட்ரெயின் பண்ணி முடிச்சிட்டேன் வசி. ஏதோ நிற்காம ஓடுற மராத்தான் போல ஃபீல் ஆகுது. நாம கொஞ்சம் நிதானிக்கணும் டா.” என்று சீட்டில் தலையை சாய்த்துக் கொண்டு அவன் புறமாக திரும்பினாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“புரியுது ஐஸ். ஆனா மாமா… அவரை யோசி. உன் அக்காவையும் அத்தானையும் கண்காணிச்சு, அப்பாவுக்கு பிடிச்சது செய்து, அவரோட காதலை அந்த பக்கமா ஒதுக்கி வச்சுட்டு நமக்காக நிறைய செய்து, அதையும் தாண்டி இந்த மக்களுக்கு செய்ய ஓடுறார். அவரை கம்பேர் பண்ணினா நாம அவ்வளவு தூரம் ஒன்னும் செய்யல. பிஸ்னஸ் பண்றோம் அவ்வளவு தான்.” என்று பெருமூச்சு விட்டான்.
“நாம இவ்வளவு பிஸ்னஸ் பண்ண வேண்டிய தேவையே இல்ல வசி. ஆனா செய்யறோம். யாருக்காக? அண்ணாவுக்காக தான். அவர் போல மக்களுக்காக நாம யோசிக்கல தான், அதுக்காக நாம செய்யறது ஒன்னும் குறைச்சல் இல்ல.” என்று சற்று ஆதங்கம் கலந்து பதிலளித்தாள்.
“ஹே! நான் அப்படி சொல்ல வரல. நாம சோர்ந்து போகக் கூடாதுன்னு அப்படி சொன்னேன் ஐஸ்.” என்று அவள் கையில் மெல்லிய அழுத்தம் கொடுத்தான்.
“நமக்குள்ள பேசிக்க கூட வேற இல்லையா டா?” என்று சலிப்பாக வினவினாள் நேத்ரா.
வீடு வந்ததும், இருவரும் உள்ளே சென்று புத்துணர்வு அடைந்ததும், அவளை தன் மடியில் போட்டுக் கொண்டான் வசீகரன்.
“நாம ஆசையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சூழ்நிலை எப்படி இருந்தாலும் நாம நம்ம சந்தோஷத்தை கொஞ்சமும் இழந்துடக் கூடாது.” என்று அவள் கன்னத்தில் தன் முத்திரையைப் பதிக்க,
“ஐ மிஸ்ட் யூ மேன்” என்று அவன் கழுத்தில் தன் கரத்தை மாலையாக கோர்த்து தன் காதலை அவன் இதழில் இதழ் சேர்த்து தெரிவித்தாள் நேத்ரா.
ஆறுதலாக ஆரம்பித்து பின் இருவரும் தங்கள் காதலின் ஆதாரமாகக் கூடிக் களித்தனர்.
அடுத்து வந்த நாட்கள் எதிர்கட்சியை மக்கள் பார்வையில் இறக்கிப் பார்க்க வைக்கும் முயற்சியில் இருந்தது வசீகரனின் நிறுவனம்.
அவர்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் செய்யத் தவறிய விஷயங்கள், கையாண்ட தவறான முறைகள், தவற விட்ட முக்கியமான தருணங்களை சிறு சிறு பதிவுகளாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டி விட்டனர்.
அதனை செய்தியாக வெளியிட்டு நேத்ராவின் செய்தி நிறுவனம் அது மக்களிடையே எழுந்த கேள்விகள் போல காட்டிக் கொண்டது.
மாவட்ட அலுவலகங்களில் வைத்து இது தொடர்பான போராட்டம், மறியல், மற்றும் கவன ஈர்ப்பு முறைகள் பற்றி பேச்சு நடந்தது.
இந்த விஷயம் நீரூபன் செவிகளை எட்டியதும் அன்று கட்சியின் தலைமை அலுவலகம் செல்ல திட்டமிட்டான்.
காலை உணவின் போது கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கூட்டம் நிகழ இருப்பதாகவும் அதில் அவன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திருமூர்த்தி தெரிவித்து விட்டு அவனுக்கு முன்பே கிளம்பி விட்டார்.
உணவை முடித்துக் கொண்டு தன் மடிக்கணினியுடன் சற்று நேரம் ஹாலில் அமர்ந்து கொண்டான் நீரூபன்.
இது போல கூட்டம் நிகழும் நேரத்தில் அவன் செய்ய வேண்டியவற்றை ஏற்கனவே பட்டியல் தயாரித்து வைத்திருந்தான். அதனை சரிபார்த்து காகித பிரதிகளையும் தயாரித்து எடுத்துக் கொண்டான்.
தனது காரின் அருகில் சென்றவன் பின் என்ன நினைத்தானோ அவனது தார் ஜீப் நோக்கிச் சென்றான்.
அதில் ஏறும்போதே அவனுள் ஒரு மகிழ்ச்சி பிறந்தது. அது ஏலகிரி மலையில் அவன் வசதிக்கு சென்று வர ஆசையாக வாங்கியது. ஆனால் அதுவே அவனுடைய அன்றாட நண்பன் போல பின்னாளில் மாறிப் போனது. தொழிலதிபர் அவதாரம் எடுத்தபோது ஜீப்பை விட கார் தான் மரியாதை என்று மாற்றிக் கொண்டான். ஆனால் இன்று அரசியல் என்றதும் ஏனோ மனம் ஜீப்பின் பின்னே சென்றது.
வாகனத்தை இயக்கியவன் நேராக கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாயிலில் நிறுத்தினான்.
வேகமாக ஓடி வந்த ஊழியர் ஒருவர் அவனிடமிருந்து வாகனத்தை பெற்று தரிப்பிடம் கொண்டு செல்ல, லேப்டாப் தோள் பையுடன் நேராக உள்ளே சென்றான்.
முன்னே இருந்த மகளிர் அணிக்கான அலுவலக அறையில் அமர்ந்திருந்த அஞ்சனா, தம்பி வண்டி நிறுத்தியது முதலே அவனையே பார்த்திருந்தாள்.
அவனிடம் தென்பட்ட ஆளுமை, அவனைக் கண்டு பணிபவர்களிடம் அவன் காட்டும் அன்பும் கனிவும், அதைத் தாண்டி, அலுவலகத்தில் நுழையும்போது அவனிடம் தென்படும் அந்த இலகுத்தன்மை. அவனுடைய இடம் என்பது போன்ற உரிமை. அதைக் கண்டதும் அவளுக்குள் மணி அடித்தது.
நேராக தந்தையைக் காண அவளும் எழுந்து கொண்டாள். தந்தையின் அலுவல் அறைக்கு அவள் செல்ல, அவர் கலந்தாய்வு அறையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
விரைவாக அங்கே சென்றாள். தன்னை விட்டு அங்கே என்ன ஆலோசனை என்ற கோபம் அவள் கண்களை மறைத்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
நேராக அவள் உள்ளே செல்ல அங்கே தந்தையும் மகனும் தவிர ஆறுமுகம் மட்டுமே இருந்தார். இன்னும் சிலர் வர வேண்டி அவர்கள் காத்திருப்பது அவளுக்குப் புரிந்தது. அவளும் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர, மகளை நோக்கி வரவேற்பாக புன்னகைத்தார் திருமூர்த்தி.
பத்துக்கும் மேற்பட்டோர் சில நிமிடங்களில் ஒருவர் பின் ஒருவராக வந்து அவ்வறை நிறைந்தது. அதில் ராக்கேஷும் ஒருவன். சந்திரனின் தலையும் தெரிந்தது.
தேர்தல் தேதி அறிவிப்பு வர சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவே கூட்டம் கூட்டப்பட்டு இருந்தது.
முதலில் திருமூர்த்தி இதனைப் பற்றி பேச ஆரம்பித்தார். ஏற்கனவே வகுக்கப்பட்டு இன்னும் அவர் ஆட்சியில் செய்யாமல் இருக்கும் திட்டங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியவர் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று சொல்லி அமைதியானார்.
ஆறுமுகம் அவருக்குத் தெரிந்தவரை சில தொகுதிகளில் தேவைப்படும் திட்டங்களை வரையறுத்து கூறிவிட்டு புதிய திட்டங்களாக சொகுசு போக்குவரத்து, உயர் ரக குழந்தைகள் பூங்கா போன்றவற்றைக் கூறினார்.
சிலர் மேலும் சில பழைய திட்டங்களை அப்படியே செயல்படுத்துவது பற்றி பேசினர்.
சந்திரன் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் சில திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு அது போல இங்கும் செயல்படுத்தலாம் என்று கூறினான்.
அடுத்து அமர்ந்திருந்த ராக்கேஷ், பெண்களுக்கு சில இலவச திட்டங்கள் அறிவிப்பது மூலம் அவர்கள் ஓட்டைப் பெற முடியும் என்று கூற நீரூபன் சட்டென்று சிரித்து விட்டான்.
“என்ன?” என்று சற்று காட்டமாக வினவினான் ராக்கேஷ்.
“இன்னும் ‘பெண்கள் முட்டாள்’ என்ற எண்ணத்தை நீங்க மாத்திக்கல போல இருக்கு. இலவசம் இனிமே வேலைக்கு ஆகாது.” என்று சிரிப்பைத் தொடர்ந்தான்.
“என்னப்பா இப்படி சொல்ற? எல்லா முறையும் இலவசம் அறிவிப்பது இயல்பு தானே?” என்று வேறொருவர் கூற,
“இலவசம் எப்ப இயல்பாச்சு மாமா? மக்களுக்கு செய்யறது அரசோட கடமை. அவங்க காசுல அவங்களுக்கு இலவசமா பொருள் கொடுப்பேன்னு ஆசை காட்டி ஓட்டு கேட்கறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? அப்படி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து அதை மட்டும் கொடுத்தா போதுமா? நல்ல ஆட்சி தர வேண்டாமா?” என்று நறுக்கென்று வினவினான்.
“நாம தான் செய்வோமே!” என்று ஒருவர் கூற,
“எவ்வளவு செய்வோம்? போன முறை ஆட்சியில் என்னென்ன செய்யறதா சொன்னிங்க, செய்தீங்க? சொல்லுங்க.” என்று கேட்டான்.
அவர் திருதிருவென்று விழிக்க,
“அப்படிக் கேளு நீரூபா” என்று உள்ளே நுழைந்தார் முருகப்பன்.
“வாங்க பெரியப்பா” என்று அவன் எழுந்து கொள்ள திருமூர்த்தி முதல் அனைவரும் எழுந்து நின்று அவரை மரியாதையுடன் வரவேற்றனர்.
“நாம செய்திருக்கோம் தான். ஆனா செய்யாம விட்டதும் நிறைய” என்று அவர் கூறியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
“இப்ப என்ன பண்ணலாம்? ஆக்கப்பூர்வமா பேசுவோம்.” என்று திருமூர்த்தி நிலைமையின் தீவிரத்தைக் கூட்டாமல் நீர்த்துப் போகச் செய்தார்.
“நான் சில ஐடியா வச்சிருக்கேன்.”என்று தன் மடிக்கணினியை திறந்து வைத்துவிட்டு பையிலிருந்த பிரதிகளை அங்கிருந்த அனைவருக்கும் விநியோகித்தான்.
” *முதல்ல நீர்நிலைகளை சரி பண்ணனும். நீர் மேலாண்மை ஆணையம் அமைச்சு ஊருக்கு ஊர் நிலத்தடி நீரை நம்பாம மழை வரும்போது அதை சேகரிக்க ஆவன செய்யணும்.
*அடுத்து குப்பை குப்பைன்னு எங்க பார்த்தாலும் குப்பை, சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தாலும் பார்சல் தேவைக்கு நிறைய பிளாஸ்டிக் தான் பயன்படுது. அதைக் குறைக்க வழி செய்யணும். குப்பையை மறுசுழற்சி பண்றதுக்கு வெளிநாடுகளில் இருக்கும் சில திட்டங்களை ஆய்வு செய்து இங்க அதுக்கான வேலைகளை செய்யணும்.
- போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்தணும். கட்டணம் மட்டும் தான் பத்து வருஷத்தில் ஏறி இருக்கு. ஆனா பஸ் எல்லாம் படு மோசமா இருக்கு.
*பெண்களுக்கு சுயஉதவிக் குழுக்கள் வச்சு செயல்படுத்துறது நல்ல திட்டம் தான். ஆனா பலர் அதை ஏதோ சீட்டு கம்பெனி போல நடத்திக்கிட்டு வர்றாங்க. தொழில் செய்யறவங்க லோன் வாங்கினால் அதை சரியா செய்து விற்பனை மையத்துக்கு அனுப்பும் எல்லா படிகளிலும் அவர்களை கண்காணித்து வாழ்க்கை தரத்தை உயர்த்த தனி கட்டமைப்பு உருவாக்கணும்.
- மதுக்கடைகள் அளவுக்கு அதிகமா இருக்கு. நேரம் குறைந்தாலும் மக்கள் அதுக்கு அடிமை ஆகுறது நாட்டுக்கு நல்லது கிடையாது. அதனால கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதோடு இனிமே மதுக்கடைக்கு தனி கார்டு கொடுக்கணும். அதுக்கு லிமிட் வைக்கணும். அதை மீறினால் அரசே அவங்களை மது போதை அடிமையில் இருந்து மீட்க மனநல ஆலோசனை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும்.
*ஒவ்வொரு வார்டிலும் வணிக வளாகங்கள் திறந்து சிறுவணிகத்தை வளர்க்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு செயல்வழி என்பது வாய்மொழியாக அல்லாமல் உண்மையில் பிள்ளைகளின் அறிவுத்திறனை வளர்க்க மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
*தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ள விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஆசிரியர் தரத்தினையும் கட்டணத்தின் அளவையும் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும்.”
இது போல எட்டு பக்கங்களுக்கு அவன் அறிக்கை தயார் செய்திருந்தான்.
பலருக்கு இதை மக்கள் பார்த்தாலே தங்களுக்கு ஓட்டு கிடைக்கும் என்று தோன்றினாலும் இதை செயல்படுத்துவது சாத்தியமா என்று எண்ணினர்.
அதனை முழுமையாக வாசித்த பலர்,
“தம்பி நல்லா தான் இருக்கு. ஆனா இதெல்லாம் செய்ய நிறைய நிதி வேணும் பா. நம்ம கையில் ஆட்சி வரும்போது கண்டிப்பா கஜானா காலியாகவும், பல வங்கிகளில் கடன் மலை போலவும் இருக்கும். இதுல நம்ம இதெல்லாம் செய்ய ஆரம்பிக்கவே ரெண்டு வருஷம் பிடிக்கும். முடிக்கறத்துக்கு ஆட்சி முடிஞ்சு போயிடும்.” என்று அலுப்பாகக் கூறினார்.
“அரசு இயந்திரம் கொஞ்சம் சுத்துதுன்னா அதுல மதுபான விற்பனை சில விழுக்காடு பங்கு வகிக்குது. அதை அப்படியே குறைக்க முடியாது பா.” என்று யோசனையாக கூற,
“அதுக்கு தானே மாமா ஆலோசனை மற்றும் மறுவாழ்வு மையம் ஆரம்பிச்சு அரசே மக்களை பாதுகாக்கணும்னு சொல்றேன்.” என்று பதில் கூறினான்.
“இதெல்லாம் சொல்ல வேணா நல்லா இருக்கும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது தம்பி.” என்று கேலியாக பதில் கூறினாள் அஞ்சனா.
அதைக் கேட்டு பலர் சிரித்து விட, தந்தையை ஆழ்மாக ஒருமுறை நோக்கிய நீரூபன்,
“இப்படி சொன்ன பல விஷயங்களை போல நான் ஒரு என். ஜி. ஓ.வா இருந்தார் தனியா செய்து காட்டியிருக்கேன்.
இந்த பழமொழி எல்லாம் கட்சி கூட்டத்துல பேசி கைத்தட்டு வாங்குங்க மகளிர் அணித் தலைவி.
பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிட்டு வீட்டு ஆண்களை குடிக்கு அடிமையாக்கி அவன் சம்பாத்தியம் போக அவங்களுக்கு வர்றதையும் அவன் பிடுங்கிட்டு போவான். நாம ஆட்சி செய்தா, மக்கள் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கணும். குடும்பத்தலைவன் குடியால செத்து, பிள்ளைங்க படிப்பு கெட்டு அந்த பெண்கள் கஷ்டப்பட்டு… இதுக்கு பேர் என்ன? ஆட்சியா? அடுத்தமுறை எல்லாரும் கல்லறையில் போயா ஓட்டு கேட்பிங்க?” என்று காட்டமாக கேட்டவன்,
“நீங்க எப்படியோ சம்பாதிங்க. ஆனா மக்களை கொஞ்சமாவது நினைச்சு பார்த்து ஏதாவது செய்ங்க. இல்லன்னா நீங்க கோடி கோடியா வச்சிருந்தாலும் சென்ட்ரல்ல இருந்து வந்து தெருக் கோடில நிறுத்திட்டு போயிடுவான். அதையும் மறக்காதீங்க.” என்று வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
– அதிகாரம் தொடரும்