அடங்காத அதிகாரா 58
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 58
நேத்ராவின் திருமண ஏற்பாடுகள் அமைதியாக நடைபெற ஆரம்பித்திருந்தது.
நீரூபன் தந்தையிடம் அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி விட, அவரும் மகன் பொறுப்பில் அனைத்தையும் விட்டுவிட்டு கட்சிப் பணியில் கவனமாக இருந்தார்.
இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது. கூடவே இருந்து கொண்டு என்ன செய்கிறார்கள் என்று கணிக்க முடியாமல் இருக்கும் மகளும் மருமகனும் அவருக்கு வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுகளாகவே காட்சி அளித்தனர்.
அவர்களை கண்டித்து வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று தோன்றினாலும் எதை வைத்து கண்டிப்பது? தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கிடைத்திருக்கும் சில பைல்களை வைத்து அவர்கள் மீது சந்தேகம் தான். ஆனால் சாட்சியம் இல்லையே! அதே நேரம் மகளிடம் பொறுப்பை முழுவதுமாக ஒப்படைக்க அவருக்கு பிடித்தமில்லாமல் போனது.
மகன் அரசியலுக்கு வருகிறேன் என்றபோது மகள் அதனை குழப்பி விட்டதும் லேசாக சுதாரித்தவர் மகனை இளைய மகளின் காதலை காரணம் காட்டி கிடுக்குப் பிடி போட்டு அரசியலுக்கு இழுத்து வந்து விட்டார். இதை மகளது கண்களை உறுத்தாதவாறு கொண்டு சென்று அவனுக்கு பொறுப்பை கொடுக்க வேண்டும்.
அதற்கான அடுத்த கட்ட வேலையில் அவர் இறங்கி விட்டார். அவர் கட்சி அலுவலகம் செல்லும் நேரம் அஞ்சனா தயாராகி இருக்க, அவளை மதுரை அலுவலகம் வரை சென்று ஏதோ முக்கிய பணியை முடிக்குமாறு பணித்து தனியே கிளம்பி விட்டார்.
நீரூபன் காலை நேரம் மீண்டும் பண்ணைக்கு சென்று வரத் துவங்கி இருந்தான். அப்போது தான் அங்கிருந்து திரும்பியவன் தந்தையும் தமக்கையும் ஆளுக்கு ஒரு காரில் ஏறிச் செல்வதை கவனித்து வீட்டிற்குள் நுழைய, வாடிய முகத்துடன் உணவு மேஜையில் தலைசாய்த்து இருந்தார் நாகரத்தினம்.
தாயை இரண்டு நாட்களாக அவ்வப்போது கண்டாலும் அவனது வேலையும் திருமண வேலையும் அதிகமாக இருக்கவே புன்னகை ஒன்றுடன் விடைபெற்று இருந்தான்.
இன்று நிதானமாக அவர் அருகில் வந்து அமர்ந்து அம்மா என்று அழைக்க,
எழுந்து அமர்ந்தவர் உடலில் படபடப்பு கூடியது. வா தம்பி சாப்பிட வர்றியா என்று அவர் கேட்டத்தில் இருந்த வித்தியாசம் உணர்ந்தவன்,
அம்மா உட்காருங்க. என்ன ஆச்சு? என்று கேட்க கண்ணீருடன் கோவிலில் அர்ச்சனாவை சந்தித்தது, வீட்டிற்கு வந்து திருமூர்த்தியிடம் பேசியது, இடையில் அஞ்சனா வந்தது வரை கூறியவர்,
உன் கல்யாணத்தையும் பாப்பா கல்யாணத்தோட செய்ய நினைச்சேன் தம்பி. இல்லன்னா இவ மகளுக்கு மட்டும் செய்துகிட்டா அந்த பையனை பார்க்கலன்னு யாரும் சொல்லிடுவாங்க தானே! உங்க அப்பா கிட்ட பேசி எப்படியாவது சம்மதம் வாங்க இருந்தேன். அந்த அஞ்சனா பொண்ணு நடுவுல வந்துடுச்சு பா. எப்பவும் நான் அந்த பொண்ணு கிட்ட போட்டிக்கு நின்னது இல்ல. சின்ன பிள்ளை அப்படி நினைச்சு தான் ஒதுங்கி போவேன். ஆனா உனக்கு நல்லது செய்ய நினைக்கும் போது எங்க அன்னைக்கு மாதிரி எதுவும் பேசி நீ மறுபடி என்னை விட்டு போயிடுவியோன்னு பயமா இருக்கு பா. என்று அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டார்.
அம்மா. என்ன பேசிட்டு இருக்கீங்க? நேத்ராவுக்கு கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு செஞ்சா போதாதா? யார் உங்களை பேசுவாங்க? என் கிட்ட வந்து பேச சொல்லுங்க மா. நான் பார்த்துக்கறேன். அதே மாதிரி இது என்ன அவளுக்கு எனக்குன்னு பிரிச்சு பேசுறீங்க? ரெண்டு பேருக்கும் நீங்க தானே அம்மா என்று அவர் கன்னத்தில் அவன் முத்தமிட உடைந்து போய் வாய்விட்டு அழ ஆரம்பித்தார் நாகரத்தினம்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
உனக்கு தெரியாது சாமி, உன்னை பார்த்துக்க தான் எங்க கல்யாணமே நடந்தது. நான் சாதாரண கிரமத்துக்காரி. எங்க சித்தி கொடுமைன்னு சொல்லிடுவாங்களோன்னு பயந்தே அஞ்சனா பொண்ணு கிட்ட அதிகம் வச்சுக்க மாட்டேன். ஆனா நீ என் உசுரு யா. எங்க அதையும் இதையும் சொல்லி உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோன்னு ரொம்ப பயப்படுவேன். இப்பவும் எனக்குள்ள அந்த பயம் இருக்கு என்று கூறினார் அவர்.
அம்மா நான் உன் பிள்ளை மா. பூமி உங்க கிட்ட இருந்து என்னை பிரிக்க மாட்டா. அதை நான சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம். சின்ன வயசுலேயே உங்க விஷயத்துல அக்கா பேச்சை நான் கேட்க மாட்டேன். அப்பா உங்களை பிரிச்சு பார்ப்பாரா? வேற யார் வருவா உங்களை என் கிட்ட இருந்து பிரிக்க? என்று அவர் நெற்றியில் செல்லமாக முட்டிக் கொண்டே கேட்டான்.
என்னவோ நான் சொல்லி இந்த கல்யாண விஷயத்துல உங்க அப்பா எதுவும் பேசாம போகவும் எனக்கு மனசு துடிச்சு போச்சு. உன் ஆசை நிறைவேறணும் தம்பி. அஞ்சனா சொல்லி அப்பா வேற பொண்ணு பார்த்துட்டா என்ன செய்ய? என்று அவர் கலங்க,
இந்த ஜென்மத்துல பூமி தான் என் பொண்டாட்டி, நீங்க தான் என் அம்மா. இதை யாரும் மாத்த முடியாது. இந்த நீரூபன் மாத்த விட மாட்டான். கவலைப்படாம இருங்க. நேத்து குட்டிக்கு கல்யாணம் நீங்க இந்நேரம் காஞ்சிபுரம், திருபுவனம் கிளம்பி போய் பட்டு சேலையா அள்ளிட்டு வந்திருக்க வேண்டாமா? முன்னாள் முதல்வர் மனைவி, இந்நாள் எதிர்கட்சித் தலைவர் மனைவி, வருங்கால முதல்வர் மனைவி… இப்படி அழலாமா? என்று கேலி செய்ய,
உன் தங்கை புடவை கட்டிட்டு தான் மறுவேலை செய்வா பாரு, நான் ஊர் ஊரா போய் புடவை எடுத்து தள்ள? மால் மாலா போய் ஜீன்ஸ் வேணா எடுக்கலாம் என்று அவரும் மகனுடன் சேர்ந்து கேலி செய்து சிரித்தார்.
இந்த பேச்சுக்களை மாடியில் இருந்த ஒரு அறைக்கதவின் பின்னிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் ராக்கேஷ்.
ஓ கதை அப்படி போகுதா? உன் காதலை உன் அம்மா பாசத்தை வச்சு சக்சஸ் பண்ண பார்க்குறியா? என்னை எல்லா இடத்திலும் மரியாதை குறைவா தெரிய வச்ச உன்னை நல்லா வாழ விடுவேனா டா நான்? இரு டா எங்க கொளுத்திப் போட்டா இது பத்திகிட்டு எரியுமோ அங்க கொளுத்தி போடுறேன் 3ந்று எண்ணிக் கொண்டான்.
அதே நேரம் படிகளில் தாவி இறங்கி வந்த நேத்ரா,
அண்ணா உன் போன் எங்க? ஆனந்தும் வசியும் அரை மணி நேரமா உனக்கு டிரை பண்ணுறாங்களாம். ஏதோ பிரச்சனை போல. உடனே ஆனந்த் உன்னை ஆபிஸ் வர சொன்னான் என்று கூறிவிட்டு கையில் இருந்த கைபேசியில்,
சொல்லுங்க அத்தை, இந்த அண்ணா தான் போனை எடுக்கல போல, உங்க பையன் எனக்கு போன் பண்றான். இப்பல்லாம் அவங்க ரெண்டு பேரும் தான் அத்தை அதிகமா பேசுறாங்க. என்று வருங்கால மாமியாரிடம் தன் காதலனை போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
இவளைப் பாரு தம்பி, சம்பந்தி அம்மா கிட்ட போய் அந்த தம்பியை அவன் இவன்னு பேசுது. என்னை என்ன நினைப்பாங்க. என்று நீரூபனிடம் அவர் வினவ, அதனை கவனித்து பதில் தரும் நிலையில் அவன் இல்லை.
அம்மா அப்பறம் பேசுவோம். என்று தாவி படிகளில் ஏறி, பத்து நிமிடத்தில் உடை மாற்றிக் கொண்டு அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.
அங்கே பலரது முகம் கவலையாக காட்சியளித்தது. அதிலும் ஆனந்தின் முகத்தில் அத்தனை கோபம் வேறு.
என்ன ஆனந்த் என்னாச்சு என்று அவன் இருக்கையில் அமர,
சார் நம்ம டிரஸ்ட்ல செலக்ட் பண்ணி ஹெல்ப் பண்ணுற ஒரு கம்பெனி மிஷனரி கேட்டு கொடேஷன் வாங்கி அட்வான்ஸ் பணமும் கொடுத்த பின்னாடி இப்ப அவங்க அந்த மிஷனரி டெலிவரி பண்ண ஆறு மாசம் ஆகுமன்னு சொல்றாங்க. இவங்க பத்து நாளில் டெலிவரி தருவேன்னு சொன்னதை நம்பி அந்த பையன் ஒரு ஆர்டர் வேற அக்சப்ட் பண்ணிட்டான்.
அதை வச்சு இன்னொரு கம்பெனிக்கு சப் ஆர்டர் வேற கொடுத்திருக்கு. இப்ப இவங்களால ரெண்டு கம்பெனி என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க என்று வேகமாக நிலவரத்தை கூறினான் ஆனந்த்.
ஆர்டர் கேன்சல் பண்ணி பணத்தை ரிட்டர்ன் வாங்குங்க. வேற கம்பெனில அர்ஜெண்ட் ரெக்குயர்மென்ட் கொடுத்து மிஷனரி வாங்கிக்கலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று இலகுவாக கேட்ட நீரூபனை ஆழமாக பார்த்த ஆனந்த்,
இது எனக்கு தெரியாதா அண்ணா? ஆனா அப்படி செய்ய முடியாத சூழல். கேன்சல் பண்ணினாலும் பணம் கைக்கு வர ரெண்டு மாசம் ஆகும். அதே மாதிரி இந்த மிஷனரி இவங்க கிட்ட மட்டும் தான் அவைலபிள். என்று எரிச்சலும் கூறினான்.
அந்த கண்பெனியுடன் நிறைய சண்டை போட்டு அவன் சோர்ந்திருப்பது அவனது பேச்சில் இருந்தே தெரிய,
ஓகே. இரு என்று கைபேசி எடுத்து யாருக்கோ அழைத்தான்.
ஹலோ பாஸ்கர். அன்னைக்கு உங்க கிட்ட ஒரு லிஸ்ட் கேட்டு இருந்தேனே! கிடைத்ததா? என்று இன்முகமாக வினவ,
அந்த பக்கத்தில் என்ன பதில் வந்ததோ, ஓ. சூப்பர். அப்ப எனக்கு மெயில் பண்றீங்களா? எனக்கு ஒரு அவசரமான தேவை இருக்கு. இது எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் என்று கேட்டு கையோடு மெயில் செய்த பின் அழைப்பை துண்டித்தான்.
அந்த மின் அஞ்சலை உடனடியாக பிரிண்ட் எடுத்து ஆனந்திடம் நீட்டினான்.
இந்த உனக்கான சொல்யூஷன். என்று கொடுக்க,
அதில் இருநூறுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயரும், முகவரியும், எண்ணும் கூடவே ஏதோ ஒரு பெயரும் குறிப்பிடப் பட்டிருந்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
என்ன அண்ணா இது? என்று புரியாமல் வினவ,
இது தமிழ் நாட்டுல தன்னோட கண்டுபிடிப்புக்கு பேட்டன்ட் வச்சிருக்கிறவங்க லிஸ்ட். இதுல உனக்கு தேவையான மிஷனரி செய்தவங்க யாராவது இருக்காங்களா பாரு. இந்த பிரச்சனையை முடி. அடுத்து இதுல உள்ள பெஸ்ட் பிராடாக்ட்ஸ் எல்லாம் மார்க்கெட் வர ஏற்பாடு பண்ணு. அவங்களுக்கு ஃபேக்டரி வைக்க லோனுக்கு ஹெல்ப் பண்ணு. யாரையும் விடாத. என்று அழுத்தமாக சொல்லிவிட்டு,
எப்பவும் பதிலை தேடிகிட்டே இருக்க கூடாது. சில நேரம் அதை நாம உருவாக்கணும். இந்த பிராசஸ்ல ஏதாவது டிலே இருந்தாலும் நீயே ரெண்டு சைடும் பேசி சரி பண்ணு. என்று கூறிவிட்டு எழுந்தான்.
இப்ப தானே வந்தீங்க சார்? அடுத்து எங்க? என்று ஆனந்த் வினவ,
காலைல ரமணி மாமா போன் பண்ணி வீட்டுக்கு வர சொன்னார். என்ன விஷயம்னு தெரியல என்று குரலை சாதாரணமாக வைத்து பேசினாலும் ஆனந்த்துக்கு அதில் இருந்த வேற்றுமை தெளிவாகத் தெரிந்தது.
அந்த பிசாசு எதுவும் பண்ணல அண்ணா. வேற யாராவது அங்கிள் கிட்ட எதுவும் சொல்லி இருப்பாங்களோ? நேத்ரா மேம் கல்யாணம் வரைக்கும் எதுவும் இருக்காதுன்னு நினைச்சேன் என்று தாடையை தேய்த்தான்.
என்ன சொல்ற? என்று புரியாமல் கேட்ட நீரூபனிடம்,
நேத்து உங்க அக்கா ரமணி அங்கிளை பார்த்து பேசி இருக்காங்க. இது பூமிக்கோ ஆன்ட்டிகோ தெரியாது. என்று கூற,
உனக்கு எப்படி ஆனந்த்? என்ற நீரூபன் முகம் கடுமை அடைந்திருக்க,
உங்க அத்தான் பின்னாடி ஆள் போட்டு வச்சேன். அவன் தன் நேத்து உங்க அக்கா அங்கிளை பார்த்து பேசியதா சொன்னான். ராக்கேஷ் சார் உள்ள போகல போல. இவங்க மட்டும் அரை மணி நேரம் பேசியதா சொன்னான். இதை சொல்ல உங்களுக்கு நேத்து கூப்பிட்டேன். நீங்க கல்யாண விஷயமா ஏதோ வேலை சொல்லவும் மறந்துட்டேன். என்று விளக்கினான்.
விடு. அவளால என்ன முடியுதோ செய்யட்டும். என்று கூறிய நீரூபன் முகமும் குரலும் கல்லென கடினமுற்று இருந்தது.
– வருவான்