அடங்காத அதிகாரா 39
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 39
சென்னை நோக்கி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த இரு பெண்களுக்குமே மனம் ஒரு நிலையில் இல்லை.
முதல் நாளிலிருந்து நேத்ரா பழைய எண்ணங்களுக்குள் உழன்று கொண்டே இருந்தாள்.
அன்று நடந்தவை பற்றி அக்காவிடம் கேட்கச் சென்றபோது அவள் பார்த்த மிரட்டலான ஒரு பார்வைக்கு பயந்து தன் தோழியை நிற்கதியாக விட்டுவிட்ட தன் கோழைத்தனத்தை எண்ணின் நொந்தாள்.
அந்த ஒரு பொறி தான் அவளை மீண்டும் அவள் அக்காவின் அருகில் கூட செல்ல விடாமல் தடுத்தது. உடனடியாக மேல் படிப்புக்கு ஓராண்டு வெளிநாடு சென்று விட்டு திரும்பியவள் அந்த பயம் தன்னை எப்பொழுதும் பீடித்து விடக்கூடாது என்பதற்காகவே தைரியமானவளாக அனைத்தையும் எதிர்க்க துணிந்தவளாக முழு உலகத்தையும் தன் கைக்குள் அடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் தொழிலை துவங்கி அதில் தன் கால் தடத்தையும் பதித்து இருந்தாள்.
ஆனால் தான் தன்னுடைய தைரியத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல் போனது காலதாமதமாக அவள் புத்தியில் உறைத்தது.
பூமிகா கேட்டுக் கொண்டதைப் போல உடனடியாக நீரூபனை சந்தித்து நடந்தவைகளை கூறி விட எண்ணினாள்.
வசீகரனிடமும் சொல்ல வேண்டும் என்று எண்ணியவளுக்கு நீரூபன் தன் குடும்ப விஷயங்களை அவனுடன் கலந்துரையாட அனுமதிப்பானா என்ற சிறு சந்தேகம் எழுந்தது.
அதனால் முதலில் அண்ணனிடம் பேசிவிட்டு பின் வசீகரனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவுடன் இம்முறை சென்னை செல்லும் பயணத்தில் அவள் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்து இருந்தாள்.
சென்னை வந்தடைந்ததும் நீரூபனின் அலுவலகத்தில் ஆனந்தின் வண்டியை வைத்துவிட்டு பூமிகா தன்னுடைய சாவியை வாங்குவதற்காக வரவேற்புக்கு சென்றாள்.
நேத்ரா தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்லலாமா அல்லது மேலே சென்று அண்ணனுடன் பேசலாமா என்ற தவிப்புடன் காரின் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அதிலிருந்து இறங்கிய நீரூபனை சற்று அச்சத்துடன் நேத்ரா நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ இரு கைகளையும் அகலமாக விரித்து
அவளுக்கு அதிக சிரமம் தராமல் நீரூபனின் கார் தரிப்பீடத்திற்குள் நுழைந்து அவளுக்கு எதிரே இருந்த காலி இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.
“ஏய் நேத்து குட்டி எப்படிடா இருக்க? உன்னோட லாங் டிரைவ் ஜாலியா போச்சா? எங்க பாண்டிச்சேரியா இல்ல பெங்களூரூவா? பூமி ஆட்டம் போட்டு இருப்பாளே! அவளை சமாளிக்கிறதே உனக்கு பெரிய வேலையா இருந்திருக்கும்.” என்று அவளை அணைத்துக் கொண்டான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அண்ணனின் இந்த மாதிரியான வரவேற்பை எதிர்பார்க்காதவள் சற்று திகைப்புடனும் மனதில் நிறைந்த மகிழ்ச்சியுடனும் அவனது தோளில் வாகாக தன் முகத்தை புதைத்துக் கொண்டு,
“ரெண்டு பேருமே ஜாலியா தான் இருந்தோம் அண்ணா. அவ அவ்வளவு எல்லாம் சேட்டை பண்ணல” என்று கூறிவிட்டு மெல்ல நிமிர்ந்து தயக்கத்துடன் நீரூபனை நோக்கினாள்.
“வாடா எதுக்கு இங்கே நிக்கணும்? என்னோட ஆபீஸ் ரூம்ல போய் பேசலாம் வா.” என்று அவளின் தோளில் கை போட்டு அழைத்துக் கொண்டு அவனுக்கு என்று இருக்கும் பிரத்தியேகமான லிப்டில் அழைத்துச் சென்றான்.
வரவேற்பில் சாவிக்காக காத்திருந்த பூமிகாவிடம் வந்து முறைப்புடன் இடுப்பில் கையுன்றி அவளையே முறைக்கத் துவங்கினான் ஆனந்த்.
அவனை கண்டதும் முப்பத்தி இரண்டு பற்களும் பளிச்சென்று தெரியும்படி சிரித்து வைத்தாள் பூமிகா.
“சிரிக்காத சிரிக்காதன்னு சொன்னேன்” என்று மிரட்டலாக அவளை நோக்கி அவன் ஒரு அடி எடுத்து வைக்க,
“டேய் இது மாமாவோட ஆபீஸ் டா. நம்ம ஓடிப் பிடிச்சு விளையாட முடியாது. அதனால ஒழுங்கா என் வண்டி சாவியை கொடுத்துடு. நான் இங்கிருந்து ஓடி போயிடுறேன்.”என்று சொல்லியபடி பின்னால் நகர ஆரம்பித்தாள் பூமிகா.
“அதேதான் நானும் சொல்றேன் குட்டிப் பிசாசே. இது ஆபீஸ் நீயும் நானும் ஓடி எல்லாம் விளையாட முடியாது மரியாதையா நின்னு நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. இல்ல சாவியும் கிடையாது ஒன்னும் கிடையாது” என்று அவளை உரிமையுடன் மிரட்டிக் கொண்டிருந்தான் ஆனந்த்.
அவ்விருவரையும் தன்னுடைய அறைக்குள் நுழைந்த நீரூபன் பார்த்துவிட்டு கண்ணாடி வழியாக கையசைத்து அவர்களை அங்கே வரும்படி அழைத்தான்.
அதனை கவனித்த ஆனந்த் “மவளே தப்பிச்சுட்டே. சார் கூப்பிடுறார். அங்க வந்து ஒழுங்கா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு. எடக்கு மடக்கா ஏதாச்சும் பேசுனே.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று அவளை தோளைப் பிடித்து முன்னே தள்ளிவிட்டு அவனும் பின்னால் நடக்கத் துவங்கினான்.
ஆனந்திடம் நிரூபன் “என்னப்பா உன் ஃபிரண்ட விசாரிச்சு முடிச்சிட்டியா?சொல்லாம கொள்ளாம எங்க போனாளாம்?”என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க,
நேத்ரா முன்னால் அவனுக்கு ஏற்கனவே அவள் தகவல் தெரிவித்ததை சொல்ல முடியாமல் பற்களை கடித்துக் கொண்டு ஆனந்திற்கும் பதில் சொல்ல தெரியாமல் திருதிருவென்று ஆடு திருட்டுகள் போல விழிக்கலானாள் பூமிகா.
நேத்ரா தன் அண்ணன் தன்னை வரவேற்ற விதத்தையும் ஆனந்திடம் பூமிகாவை மாட்டிவிடும் விதத்தையும் கண்டு சிரித்தவளாக சோபாவில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு பூமிகா விழிப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“அண்ணி என்ன அண்ணி இவங்க ரெண்டு பேரும் என்னை இப்படி கேள்வி கேக்குறாங்க நீங்கள் ஹாயா உட்கார்ந்து இருக்கீங்க? ஏதாச்சும் சொல்லுங்க அண்ணி என்ன காப்பாத்துங்க” என்று நேத்ராவை பூமிகா துணைக்கழைக்க அவளோ
“காலேஜ் காலத்திலேயே உனக்கும் ஆனந்துக்கும் நடுவுல நான் வரமாட்டேன். அது அவனுக்கு பிடிக்கவும் பிடிக்காது.” என்று சிரிப்பை உதடுகளுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு பதில் அளித்தாள் நேத்ரா.
ஆனந்த் பதட்டத்துடன் “அப்படியெல்லாம் இல்ல மேடம்” என்று அவளுக்கு மறுப்பு தெரிவிக்க,
“ஆனந்த் பதறாத என் அண்ணன் தான் உன்னோட பாஸ். நான் கிடையாது. என்னை நீ முன்னாடி மாதிரி நேத்ரான்னே கூப்பிடு” என்று அவனுக்கு கூறியவள் பூமிகாவிடம்
“கேட்கறாங்க இல்ல பதில் சொல்லு பூமி” என்று அவளை கோர்த்து விட்டு அமர்ந்து கொண்டாள்.
பூமிகா தன்னை காப்பாற்றும்படி நீரூபனிடம் கண்களால் கெஞ்ச துவங்கினாள்.
அவளை காதல் ததும்பும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளது தவிப்பை அத்தனை நேரம் ரசித்து விட்டு அவள் கெஞ்சலை தாங்க முடியாமல்,
“சரி சரி விடுங்க ரெண்டு பேரும் ஜாலியா போயிட்டு வந்தீங்க இல்ல, சேஃபா திரும்பி வந்துட்டீங்க அதுவே போதும். இனி அடுத்த வேலையை பார்ப்போம்.” என்று கூறியதும் ஆனந்த் அவன் கையில் இருந்த பூமிகாவின் வண்டி சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு,
“சார் இன்னைக்கு கிளாசஸ்கான ஸ்மார்ட் போர்ட்ஸ் மாட்டுறதுக்கு கம்பெனியில் இருந்து வர்றாங்க. நான் அதை ஒரு தடவை பார்த்துவிட்டு இன்வெண்டரி செக் பண்ணிட்டு நேரா மதியம் பிசினஸ் மீட்டிங்கு அந்த ஹோட்டல் வந்துடுறேன்.” என்று அவரிடம் உரைத்து விட்டு
“நேத்ரா மேடம் நான் கிளம்புறேன்.” என்றவன் பூமிகாவின் தலையில் லேசாக குட்டி விட்டு “வரேண்டி” என்று விடை பெற்று சென்றான்.
அவன் வெளியேறுவதற்கும் கதவை திறந்து கொண்டு வசீகரன் நீரூபனின் அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருக்க இருவரும் பரஸ்பர புன்னகையுடன் விலகிக் கொண்டனர்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
நேத்ராவை கண்ட வசீகரன் வேகமாக அவள் அருகில் சென்ற அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“எங்க போன? அதுவும் என்கிட்ட சொல்லாம? ரொம்ப பதறிட்டேன். மாமா தான் நீங்க பாண்டிச்சேரி இல்லன்னா பெங்களூர் தான் போய் இருப்பிங்க. பயப்பட வேண்டாம் பத்திரமா வந்துருவிங்கன்னு என்கிட்ட சொன்னாரு.” என்று நேத்ராவை தலை முதல் பாதம் வரை ஒரு முறை கண்களால் சரிபார்த்த படி திரும்பி பூமிகாவை முறைக்கலானான்.
“இவதான் நான் எலெக்ஷன் டைம்ல சரியா பேசலன்னு கோபத்துல என்கிட்ட சொல்லாம உன்னோடு கிளம்பி வந்தான்னா, நீயாச்சும் என்கிட்ட சொல்லனுமா இல்லையா?” என்று உரிமையாக சண்டே போட ஆரம்பித்தான்.
நீரூபன் அதனைக் கண்டு சத்தமாக வாய்விட்டு சிரிக்கத் துவங்க, நேத்ராவுக்கு பூமிகாவை பார்க்கவே பாவமாக இருந்தது.
“ஏய் எல்லாரும் சும்மா நிறுத்துங்க. என்ன ஒருத்தி அன்பா, விளையாட்டா, அக்கறையா, எல்லாமுமா இருந்தா எப்ப பார்த்தாலும் என்ன நடந்தாலும் அவளையே கேள்வி கேட்டு திட்டுவீங்களா? நான் தான் வா போகலாம்ன்னு அவளை கூப்பிட்டேன். நான்தான் உங்க யார்கிட்டயும் எதுவும் சொல்லக்கூடாதுன்னும் சொன்னேன். நான் சொன்னதுனால தான் அவ அப்படி இருந்தா. ஆள் மாத்தி ஆள் அவளையே கார்னர் பண்றீங்க?”என்றவள்
“ஏண்டி நீயாவது நேத்ரா தான் கூப்பிட்டாங்க நான் சும்மாதான் போனேன். எனக்கு தெரியாது. அவங்கள கேளுங்கன்னு சொல்ல மாட்டியா?” என்று விரட்டினாள்.
“எங்க எல்லாரையும் சொல்லிட்டு இப்ப நீ ஏன் அவளை விரட்டிக்கிட்டு இருக்க?” என்று நீரூபன் எழுந்து வந்து பூமிகாவை மெல்ல தோளோடு அணைத்துக் கொண்டு
“ஏண்டா யார் கேட்டாலும் வாய் திறந்து சொல்றதுக்கு என்ன?” என்று அன்புடன் வினவினான்.
பதில் சொல்லாமல் அமைதியாக அவன் தோள்களில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள் பூமிகா.
அவளின் அமைதி அங்கிருந்தவர்களை சற்றே சங்கடத்தில் ஆழ்த்த, மெல்ல தன் மலர்வாய் திறந்து தன் எண்ணங்களை வெளியிட துவங்கினாள் பூமிகா.
“யார் என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கிறத நான் என் பழக்கமா மாத்திக்கிட்டேன். அப்பதான் தனியா இல்லாம எப்பவும் நமக்கு பிடிச்சவங்க நம்மள சுத்தி எப்பவும் இருப்பாங்க. அவங்களுக்கு பிடிக்காதது செய்யும்போது நாம அவங்களுக்கு பிடிக்காதவங்களா மாறிடுவோம். நம்மள விட்டு விலகி போயிடுவாங்க. எனக்கு யாரும் என்ன விட்டு விலகி போறது பிடிக்காது. அதனால எனக்கு பிடிக்குதோ இல்லையோ எனக்கு வலிக்குதோ வலிக்கலையோ,என்னை யாரும் கேட்கிறாங்களோ இல்லையோ? எனக்கு பிடிச்சவங்களுக்கு அவங்களுக்கு பிடிச்ச எல்லாத்தையும் செய்ய என்னை நானே வழக்கப்படுத்திக்கிட்டேன். எந்த ஒரு சூழ்நிலையிலையும் யாரையும் கைநீட்டி இவங்கதான் அப்படின்னு காட்டக்கூடாதுன்னு ஒரு முடிவோட தான் ஒவ்வொண்ணுமே நான் செய்வேன். என்ன கட்டிப்போட்டு அடிச்சு சித்திரவதை பண்ணி கேட்டாலும் எனக்கு பிடிச்சவங்க என்ன செய்ய சொன்ன ஒரு விஷயத்துக்கு என்னைக்கும் அவங்கள காட்டிக் கொடுக்க மாட்டேன்.
இதுதான் நான். இதுதான் பூமிகா. இவ இப்படித்தான் இருப்பா. இதை வெளியில் இருக்கும் யாருக்கும் நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஆனா நீங்க மூணு பேருமே என்னோட குடும்பம். நான் யாருன்னு உங்களுக்கு தெரிகிறதுலையோ இல்ல என் பலவீனம் இதுதானே உங்ககிட்ட சொல்றதிலையோ எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றவள் நிமிர்ந்து நீரூபனை காண, அவன் அவளது நெற்றியில் செல்லமாக முட்டிவிட்டு அவள் கூறியதை அவளுக்கு தெரியாமல் ஜீரணித்துக்கொள்ள உள்ளே பெரிய போராட்டமே நிகழ்த்திக் கொண்டிருந்தான்.
ஏனென்றால் அவள் சொல்வதெல்லாம் அவ்வளவு எளிதில் யாராலும் செய்து விடக் கூடிய காரியம் இல்லை. எத்தனை தூரம் தனிமை அவளை பீடித்திருந்தால் அவள் இம்மாதிரியான ஒரு முடிவை எடுத்திருப்பாள்? இதனால் எத்தனை பேர் அவளை உபயோகப்படுத்திக் கொண்டிருப்பார்கள்? அது தெரிந்தும் அமைதியோடு அதை கடந்து வர அவளுக்கு எத்தனை மனவலிமை இருந்திருக்க வேண்டும்? தனக்கு அது மாதிரி ஏதாவது இருக்கிறதா?” என்று உள்ளுக்குள்ளே அவனையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
அதே நிலையில் தான் நேத்ராவும் வசீகரனும் அமர்ந்திருந்தனர். அந்த மௌனத்தை பூமிகாவே கலைத்தாள்.
“அண்ணி நாம சொல்ல வந்தத இப்பவே சொல்லிடுவது நல்லது” என்று நேத்ராவை பேசும்படி தூக்கிவிட்டு அவள் அமைதியாக பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்களை மூடி கொண்டாள்.
நேத்ரா நடந்த அனைத்தையும் பொறுமையாக நீரூபனுக்கும் வசீகரனுக்கும் விளக்கிவிட்டு தாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதை அங்கே தங்களுடைய தோழி இன்னும் மனவேதனையுடன் இருப்பதையும் கூறிவிட்டு அண்ணனையும் தன் வருங்கால கணவனையும் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டாள்.
நீரூபன் வசீகரனை அருகே அழைத்து “நான் சொன்னன்ல இங்கே என்னமோ நடக்குது. அதுவும் பெருசா இருக்கு. நம்மளால இன்னும் அதை முழுசா கண்டுபிடிக்க முடியல. என்ன காலைல தயங்கினே இப்போ என்ன சொல்ற?” என்று வசீகரனிடம் அவனது முடிவை கேட்கலானான்.
“நேத்ராவ கொல்ற அளவுக்கு இங்கே யாரோ இருக்காங்கன்னா அது தெரிஞ்சும் உங்க அக்கா அமைதியா இருக்காங்கனா என் சந்தேகம் முழுக்க முழுக்க இப்ப உங்க அக்கா மேல தான் திரும்புது. உங்கள கட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக என்ன செஞ்சாங்கன்னு இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க சொல்லல ஏதோ அவங்க விருப்பம் தெரிஞ்சு நீங்களா விலகின மாதிரி தான் எங்க கிட்ட சொன்னீங்க. ஒருவேளை நேத்ராவும் வரக்கூடாதுறதுக்காக ஏன் உங்க அக்காவே அவளை ஆள் வச்சு கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்க கூடாது? அதுல இன்னொரு பொண்ணு மாட்டவும் ஏன் தன்னை காப்பாத்திக்க அந்த பொண்ணு மேல பழி போட்டு இருக்க கூடாது?” என்று வசீகரன் கோபத்துடன் கேள்விகளை அடுக்கினான்.
“நீ சொல்றது ஒரு வகையில சரியா கூட இருக்கலாம். ஆனா அஞ்சனா என்னை எந்த விதத்திலும் மிரட்டல. எனக்கு எந்த ஒரு தீங்கையும் அவ செய்யல. நானா தான் அவளோட உடல் மொழி பார்வை பேச்சு எல்லாத்தையும் வச்சு இந்த கட்சிக்குள்ள நான் வரத அவ விரும்பலன்னு தெரிஞ்சு ஒதுங்கினேன். சின்ன வயசுல இருந்தே அக்கா கிட்ட எனக்கு ஒட்டுதல் இல்லனாலும் அவ மேல அக்கான்னு எப்பவும் ஒரு பிரியம் இருக்கும்.
அவ விருப்பப்படி அவ அப்பா கூடவே அரசியலை கவனிக்கட்டும்னு தான் எனக்கு பிடித்திருந்தாலும் நான் விலகி இருந்தேன். ஆனா இப்போ நேத்ராவை யாரோ கொலை செய்த முயற்சி செய்தும் அவ அதை மறைத்து இருக்கானா ஒன்னு அவ நேத்ராவை கொலை செய்ய நினைத்து இருக்கணும், இல்ல செய்ய நினைச்சவங்க கிட்ட இருந்து நேத்ராவை காப்பாத்தி இருக்கணும்.” என்று தன் தாடையை தேய்த்தபடி கூற
“உங்க அக்கா அவ்வளவு நல்லவங்களா? யாரையுமே எதுவுமே செய்ய மாட்டாங்களா?” என்று எரிச்சலுடன் வினவினான் வசீகரன்.
“எப்பவும் ஒரு பக்கத்திலிருந்து யோசிக்காதே. அதே மாதிரி பாதிக்கப்பட்டவங்க நமக்கு சம்பந்தப்பட்டவங்கங்கிறதுக்காக எதிரில் இருக்கிற எல்லாருமே நமக்கு எதிரி இல்ல.
நாம எப்போ சரியா நம்மை எதிரியையும் துரோகியையும் அடையாளம் காணுறோமோ அப்பதான் நாம எந்தவித சரிவையும் சந்திக்காம இந்த அரசியல்ல முன்னாடி போக முடியும். இந்த அரசியலுக்கு நானும் என் தங்கச்சியும் வரக்கூடாதுன்றது தான் இங்கே இருக்கிறவங்களோட நோக்கமா இருந்தா நானும் என் தங்கச்சியும் இந்த அரசியல்ல வந்து அவங்க எல்லாரோட மூக்கையும் ஒடச்சிட்டு தான் அடுத்த வேலை பாப்போம்.” என்று அழுத்தம் திருத்தமாக நீரூபன் கூற பூமிகா மகிழ்ச்சியுடன் எழுந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
வசீகரனுக்கும் அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்து அவன் அமைதியாக இருக்க நேத்ராவோ “அரசியலா ச்சீ… எனக்கு வேண்டாம். நான் வரமாட்டேன். நாம நல்லது செய்ய நினைச்சாலும் அதை இங்கே கொச்சைப்படுத்த தான் நிறைய பேர் இருக்காங்க. ஏன் நீயே அன்னைக்கு ராக்கி மாமா விஷயத்தை திரிச்சி பேசலையா? நீங்க எல்லாரும் என்னமோ பண்ணுங்க. என்னை அதுக்குள்ள இழுத்து விட முயற்சி பண்ணாதீங்க. நான் வரமாட்டேன்.” என்று கூறிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று அவரை விட்டு நேத்ரா வெளியேறினாள்.