அடங்காத அதிகாரா 24

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 24

தன் தம்பி தன்னிடம் பேசிய விதத்திலும் கணவனைப் பற்றி அவன் கூறும் குற்றச்சாட்டுகளிலும் குழம்பி இருந்த அஞ்சனா காலை எழுந்து அருகில் கணவன் இல்லாதது கண்டு கோபமுற்றாள்.

குளித்து தயாராகி கீழே வந்தவள் உணவு மேசையிலும் அவன் இல்லாதது கண்டு எரிச்சலுடன் தோட்டத்திற்குச் சென்றாள்.

அழகிய செம்பருத்தி மலர்கள் பூத்திருக்க, சிறுவயதில் அன்னையிடம் சேர்த்து எட்டி எட்டி பூப்பறித்து கோவிலுக்கு அவருடன் சென்ற நினைவுகள் வந்தது.

‘நீ இருந்திருந்தா என்னை நீரூ இப்படி பேசுவானா? நீ தான் விட்டிருப்பியா?’ என்று அந்த மலரைப் பார்த்து தன் அன்னையிடம் கேட்பது போல என்னை மனதில் பேசிக் கொண்டிருந்தாள்.

வெளியே சென்றிருந்த ராக்கேஷ் அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைய, மனைவி தோட்டத்தில் இருப்பதைக் கண்டு அங்கே நடந்தான்.

அவளிடம் பேச அவன் எண்ணியிருக்க,

“ராக்கி எங்க போயிருந்த? அந்த ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸ் சாவி எனக்கு வேணும்” என்று அஞ்சனா வினவ,

அதை வாடகைக்கு கொடுத்திருப்பதால் திருதிருவென்று விழித்தான் ராக்கேஷ்.

“என்ன? சாவி எடுத்துக் கொடு. மகளிர் அணில உள்ள லேடீஸ் எல்லாரையும் வர வச்சு எலக்ஷன் சம்பந்தமா பேசணும்” என்று கூறி அவள் நகர்ந்து செல்ல,

“அதுக்கு எதுக்கு கெஸ்ட் ஹவுஸ்? நம்ம பார்ட்டி ஆபிஸ்ல பேசலாமே!” என்று ஐடியா மணியாக மாறி ராக்கேஷ் அவளுக்கு ஐடியா கொடுக்க, கடுப்பானவள்,

“சாவி வேணும்.”அழுத்தமாக கூறிவிட்டு நகர்ந்தாள்.

“சரி சாயங்காலம் வாங்கித் தர்றேன். அங்க கிளனிங், கார்டனிங் பண்ண ஆள் போட்டிருக்கு. அவன் கிட்ட தான் சாவி இருக்கு” என்று ராக்கேஷ் சமாளித்து பதிலுரைக்க,

“அப்ப அவன் தான் வீட்டை வாடகைக்கு விடுறானா?” என்றாள் காரமாக.

இனி மறைத்து என்ன பயனும் இல்லை என்றுணர்ந்த ராக்கேஷ்,

“வருமானம் வருதுல்ல அஞ்சு. மாசத்துல ரெண்டு புக்கிங் தான். சும்மா பூட்டி வைக்க வேண்டாம்னு தான்” என்று இழுத்தான்.

“எல்லாத்தையும் கிளோஸ் பண்ணி நாளைக்கு என்கிட்ட சாவியை கொடுக்கணும் ராக்கி. அப்பறம் இனிமே எனக்கு தெரியாம இன்கம் கொண்டு வர்ற வேலையெல்லாம் வேண்டாம். நான் ஒன்னும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற குடும்பத்தில் இருக்கல. எங்க கிட்ட கோடி கோடியா பணம் இருக்கு. டோண்ட் ஆக்ட் ஸ்டுபிட்” என்று கூறி வீட்டினுள் நுழைந்தாள்.

போகும் அவளை வெறித்த அவன், ‘என்னைக்காவது எனக்கு செலவுக்கு பணம் கொடுத்து இருக்கியா டி?’ என்று அவள் முடியைப் பற்றி இழுத்து தன் காலில் போட்டு கேட்க வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் அவன் திட்டமெல்லாம் பாழாகி விடும் என்று மென்று விழுங்கிக் கொண்டான்.

தான் ஒரு பாம்புக்கு பால் வார்ப்பதைப் பற்றி அறியாதவளாக அஞ்சனா தன் மொத்த குடும்பத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருந்தாள்.


நேத்ரா அன்று காலை அலுவலகத்தில் நுழையும் போதே ஒருவித தவிப்புடன் காணப்பட்டாள்.

வீட்டில் இருந்தோ அல்லது வசீகரனை சந்திக்கவே செல்ல இருந்தவள் புதிய அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பால் அங்கே வந்திறங்கினாள்.

“சொல்லுங்க மிஸ்டர் சாம் என்ன பிரச்சனை?” என்று தன் இருக்கையில் அமர்ந்து வினவ,

“மேம் நீங்க சொன்னது போலவே டிஜிட்டல் ஆட்ஸ் போட ஆரம்பிச்சோம். அப்ப ஆளுங்கட்சில உள்ளவங்க சிலதுக்கு மோசமான விமர்சனங்கள் வச்சாங்க. அதுக்கு இந்த கட்சி ஆட்களும் பேச ஆரம்பிக்க வேற மாதிரி போகுது மேம். இதுல பத்து வருஷத்துக்கு முன்னாடி உங்க அப்பா சி.எம் மா இருந்தப்ப நடந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு ரெவன்யு ஆபிசர் கொலை கேஸ் எல்லாம் இழுத்து, எங்களால அதை ஹேண்டில் பண்ண முடியல.”

“சரி, முருகப்பன் சாருக்கு கூப்பிட்டு பேச வேண்டியது தானே!” என்றாள் எரிச்சலாக.

“பேசினோம் மேம். சாருக்கு காய்ச்சல். அவங்க வைப் எடுத்து, இன்னிக்கு மட்டும் சமாளிங்க நாளைக்கு அவரை நேர்ல வர சொல்றேன்னு சொன்னாங்க” என்று கையைப் பிசைந்தார்.

உடனே அவள் நீரூபனை அழைக்க,

“அந்த விஷயத்தில் நாம பதில் சொல்லாம இருக்கறது தான் நல்லது நேத்து மா. கமென்ட் எல்லாத்தையும் ரிமூவ் பண்ண சொல்லு, நம்ம கட்சில யார் பதில் போஸ்ட் போடுறாங்கன்னு பார்த்து அவங்க டீட்டெய்ல் கலெக்ட் பண்ண சொல்லு.” என்று கூறியவன்,

“எனக்காக நீ ஒரு ஆட் ரன் பண்ணணும் டா நேத்து. ஸ்கூல் பத்தி எல்லாம் போட்டு,” என்று கூறி அடுத்தடுத்து
அவன் கூறியதைக் கேட்டவள்,

“எங்க இருந்து தான் உங்களுக்கு ஐடியா வருதோ அண்ணா. கண்டிப்பா பண்ண சொல்றேன்.” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

அந்த கொலைகேஸ்களை பற்றி பேச வேண்டாம் என்றால் என்ன அர்த்தம் என்று புரியாத அளவுக்கு நேத்ரா சிறுபிள்ளை அல்லவே! தந்தைக்கு பின்னே பல அரசியல் விளையாட்டுகள் இருப்பதாக தோன்றியதும் அவள் முகம் மேலும் வாடியது.

தன் சோர்வையும் மனநிலையையும் மாற்ற வல்லவன் வசீகரன் ஒருவன் தான் என்று அவனை கைபேசியில் அழைத்தாள்.


நீரூபன் முருகப்பனை கைபேசியில் அழைத்து உடல்நலம் பற்றி விசாரித்தான்.

“பொண்ணைப் பார்க்க கனடா போயிட்டு வந்தது அந்த குளிர் தாங்கல நீரூபா. வேற ஒன்னும் இல்ல. ரெண்டு நாள்ல நார்மலாயிடுவேன்”என்றார் அவர்.

“பெரியப்பா அந்த கேஸ் விஷயத்தை இப்ப இழுத்து பேசுறாங்க. இது பெருசாச்சுன்னா இந்த தேர்தல்ல ஜெயிக்க முடியாது. என்ன செய்யலாம்?” என்று யோசனையாக வினவினான்.

“அதை மூடி மறைச்சு வச்சா அந்த பாவம் நம்மளை சும்மா விடாது நீரூபா” என்றவர் குரலில் வருத்தம் இருந்தது.

“எனக்கும் அதை மூடி மறைக்க விருப்பம் இல்ல பெரியப்பா. அதுக்கு ஒரு முடிவு வரணும். கட்சி பேரும் கெட்டுப் போகக் கூடாது” என்று அவன் சிந்தனையோடு கூற,

“யாரையாவது சரண்டர் பண்ணணும். அவன் நம்ம கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவனா இருக்கணும்” என்றார் வெறுப்புடன்.

“அந்த ரெண்டு குடும்பத்துக்கு வேண்டியதை நான் செய்றேன். ஆளையும் நானே அனுப்பி விடுறேன்.” என்று இறுகிய குரலில் அவன் கூற,

“தப்பு பண்றோமா நீரூபா? இதுக்கு தான் நான் அதிகம் உள்ள வராம இருந்தேன்.” என்று அவர் குற்றவுணர்வுடன் பேசினார்.

“இல்ல பெரியப்பா, யாரு என்னனு தெரியாம அந்த குடும்பங்கள் தவிக்குது. அதுக்கு ஒரு முடிவு வரட்டும்.  ஆனா பெரியப்பா நான் அதை விட மாட்டேன். செஞ்சது யாருன்னு இப்ப வரைக்கும் நமக்கு தெளிவா தெரியல. மாட்டினா என் தென்னந்தோப்புல மட்டை உறிக்கிறது போல உறிச்சிடுவேன்.” என்றான் வெறியுடன்.


“டேய் என்ன தான் டா நடக்குது? அண்ணா போன் பண்ணி உன் டிஜிட்டல் மார்கெட்டிங் டீம் கிட்ட ஒரு வேலை இருக்கு, நான் அனுப்புறத கொஞ்சம் செஞ்சு தர சொல்லுன்னு சொல்றாரு. நீ என்னடான்னா நாளைக்கு அப்பா கட்சி ஆபிஸ்ல வச்சு போட்டோஷூட் ரெடி பண்ண சொல்ற? நான் இதையே பார்த்தா என் கம்பெனியை எப்ப டா பார்க்க?” என்று சலுகையாக அவன் மார்பில் பின் தலையால் முட்டினாள்.

அவளை சோஃபாவில் அமர்ந்து தன் மடியில் அமர்த்தி கண் மூடி இருந்த வசீகரன்,

“உன்னை யாரும் கேமரா எடுத்துட்டு வந்து ஷூட் நடத்த சொல்லல, உன் அண்ணனும் மார்கெட்டிங் வேலையை உன்னை செய்ய சொல்லல. அப்புறம் ஏன் ஐஸ் உனக்கு இவ்ளோ சலிப்பு?” என்று அவள் உச்சில் தாடை பதித்து கேட்டான்.

“எனக்கும் சரி அண்ணாவுக்கும் சரி அரசியல்.. இது சரிப்பட்டு வராது டா. நான் ஏதோ செட் பண்ணிக் கொடுத்துட்டு ஒதுங்கிடலான்னு இருந்தேன்” என்று வருத்தமாகக் கூறினாள்

“நீ ஏன் இதை அரசியலா பார்க்கற ஐஸ்? உன்னோட பிஸ்னஸா மட்டும் பாரு. உன்னால ஒரே நேரத்துல ரெண்டு பிஸ்னஸ் ஹேண்டில் பண்ண முடியாதா?” என்று கேட்க,

“அப்படி இல்ல, உனக்கு உன் ஆபிஸ்ல எல்லாத்தையும் உன் பிரெண்ட் பார்த்துப்பான். எனக்கு?” என்று இழுக்க,

“நல்ல அசிஸ்டன்ட் வச்சுக்கோ. நாம நம்ம வேலைகளை நேரடியா அசிஸ்டன்ட் மூலமா செய்துக்கலாம். எனிதிங் கேன் பி டன் ப்ரம் எனிவேர் இன் திஸ் டிஜிட்டல் வேர்ல்ட்.”என்று வசீகரன் சிரிக்க,

“ம்ம் ஓகே” என்று அவன் தோள் வளைவில் முகம் சரித்துக் கொண்டு கண் மூடினாள்.

“என்னாச்சு என் ஐஸ் செல்லத்துக்கு?” என்று அவன் அவளை தாடை தொட்டு நிமிர்த்த,

“கல்யாணம் பண்ணிக்கலாமா? அண்ணா கிட்ட பேசுறியா?” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

அவள் அப்படிப் பேசும் ரகமில்லை என்பதால் வசீகரன் துணுக்குற்று,

“என்னாச்சு நேத்ரா?” என்று அவள் முகத்தை கையில் தாங்கி வினவ,

“நைட் வீட்டுக்கு போகவே பிடிக்கல. அண்ணா கிட்ட சொன்னா பெரிய பிரச்சனையாகிடும். அதான்.” என்று கண்ணீரைத் துடைக்கத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.

“யூ மீன்.. எனி ஹராஸ்மெண்ட்?” கேட்ட வசீகரனின் முகம் இறுகியது.

“நோ. ஐ திங்க் ஐ ஹாவ் பீன் வாட்ச்ட்.” என்றாள் உதடு பிதுக்கி.

“நீ இப்படி கிடையாதே! திடீர்னு என்ன?” என்று கோபத்தை அடக்கி வசீகரன் வினவ,

“அந்த வீட்ல அப்பா, அண்ணா தவிர ராக்கேஷ் மாமா மட்டும் தான் ஜென்ஸ். அப்பா என்கிட்ட நைட் சாப்பிடும்போது பேசிட்டு போயிடுவார். அண்ணா ரூமுக்கு வந்து பேசிட்டு போவாங்க. ராக்கேஷ் மாமா பேசவே மாட்டாங்க. ஆனா யாரோ என்னை வீட்ல உத்து கவனிக்கிறது போல..” என்று அவள் திணற,

“எப்ப? வீட்டுக்கு போனதுமா? இல்ல” என்று கேட்காமல் வசீகரன் நிறுத்த,

“மூணு நாளா லேட் நைட் அப்படி தோணுச்சு. நானும் விண்டோ ஸ்கிரீன் க்ளோஸ் பண்ணி, டோர் லாக் பண்ணிட்டு தான் படுக்கறேன் என்று கூறியவள் , வேலையாள் கூட நைட்ல வீட்டுக்குள்ள இருக்க மாட்டாங்க வசீ. தட் இஸ் வாட் மேக்கிங் மீ அப்செட்.” என்றுரைக்க,

“அதான் அவசரமா வர சொல்லி இப்படி என் கைகுள்ளேயே இருக்கியா?” கடினப்பட்டுப் போன குரலை மறைக்காமல் காட்டி கேள்வி எழுப்பினான் வசீகரன்.

“பிளீஸ் ” என்று நேத்ரா கூறிக்கொண்டே அவன் மார்பில் முகம் சேர்த்து,

“அது என்னோட வீடு, அங்க யாரை?” என்று அவள் கண்ணீரை நிறுத்தப் போராட,

வசீகரன் செல்போனை எடுத்து நீரூபனுக்கு அழைத்திருந்தான்.

“அண்ணா கிட்ட சொல்லாத வசீ.”அப்பறம் என்று அவள் தடுக்க,

அதற்குள் நீரூபனிடம் அனைத்தையும் கூறி இருந்தான் வசீகரன்.

“மாமா என்ன பண்ணலாம்?” என்றவன்
கேட்க,

“ஐந்து நிமிஷம் டைம் கொடு வசீ” என்ற நீரூபனின் குரலில் இன்னதென்று கண்டறிய முடியாத உணர்வு ஒட்டிக் கொண்டிருந்தது.

“அவ்வளோ தான். ஒண்ணு தெரிஞ்சுக்கோ ஐஸ், எல்லா பொண்ணுங்களும் ஏதோ ஒரு வகையில சொந்த குடும்பத்து உறவுகளாலயே பாலியல் ரீதியா துன்புறுத்தப்படுறாங்க. நம்ம மாமா, நம்ம சித்தப்பா, நம்ம பெரியம்மா பையன் இப்படி உறவை காரணமா காட்டி ஒதுங்கிப் போறது அவங்க நாளைக்கு பெரிய அளவுல தப்பு பண்ண வசதியா போயிடும். உன் வீட்ல என் மாமனாரும் சரி, என் மச்சானும் சரி உன்னை ராணி மாதிரி ட்ரீட் பண்றாங்க. மிஞ்சி உள்ளது உன் சொக்கா புருஷன் தான். நாளைக்கு எப்படியும் போட்டோஷூட்டுக்கு வருவான்ல..”  என்று பல்லைக் கடிக்கவும் செல்போன் அடிக்கவும் சரியாக இருந்தது.

எடுத்தவன் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி. “தேங்க்ஸ் மாமா” என்று வசீகரன் அதனை வைக்க, நேத்ரா கேள்வியாக நோக்கினாள்.

“நாளைக்கு அவன் வரமாட்டான்.” என்றவன் முகத்தில் அத்தனை நிம்மதி.

“என்ன ஆச்சு?” என்று நேத்ரா பதற

“ம்ம் அவன் காலை உடைச்சுட்டார் நீரூ மாமா” என்றான் கண்கள் மின்ன.