Vizhi Moodukiren Un Ithazhodu Pesa -15

Revadyashok

✍️
Writer
அத்தியாயம்-15

மதிய நேரம் என்பதால் அலுவலுகம் சோம்பலாக இயங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் சிஸ்டம் முன்னால் அமர்ந்திருக்க பியூன் வர்ஷாவின் முன் ப்ரசன்னமானான்.

"வர்ஷா மேடம் உங்களை பார்க்க உங்க ஹஸ்பண்ட் வந்திருக்கார், ரிசப்ஷனில் காத்திருக்கார்..."என்ற தகவலை சொல்லிவிட்டு போக வர்ஷாவின் புருவங்கள் ஆச்சர்யத்தில் நெரிந்தது.

"என்ன தீனா என்னை பார்க்க ஆபிஸ்க்கு வந்திருக்காரா ! இதுவரைக்கும் இப்படி வந்ததே இல்லையே ? என்ன விஷயமாக இருக்கும் ? என்று யோசித்தபடி அவசரமாக எழுந்து வேக நடையுடன் ரிஸப்ஷனை நெருங்கினாள்.

எதையோ தீவிரமாக சிந்தித்தபடி அமர்ந்திருந்த கணவனை கண்டதும் வர்ஷாவின் முகம் புன்னகையில் தோய்ந்தது.

"ஹாய் தீனா, என்ன இது திடீர்னு தரிசனம் தர்றீங்க? வாட் எ ஸர்ப்ரைஸ் !

மனைவியை கண்டதும் யோசனை முகபாவம் மாறாமலே, "உன்னிடம் முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு வந்தேன் வர்ஷா, ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட முடியுமா? ரொம்ப அர்ஜன்ட் " என வர்ஷா கணவனை கேள்வியாக நோக்கினாள்.

"இப்போதைக்கு எந்த கேள்விகளும் கேட்காதே, எல்லாத்தையும் சொல்றேன், முதலில் பெர்மிஷன் இல்லையில்லை லீவ் போட்டுட்டே வா. நான் வெளியில் வெயிட் பண்றேன்..." என்றவன் மனைவியின் பதிலை எதிர்பாராமல் வெளியே செல்ல கணவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் தன் பேகோடு வெளியே வந்தவள் கணவன் யாருக்கோ அழைத்துக்கொண்டிருக்க குழப்பத்துடன் அவனை நெருங்கினாள்.

"என்னாச்சு தீனா, யாருக்கு கால் பண்றீங்க? ஏன் ஒரு மாதிரி டென்க்ஷனா இருக்கீங்க? என்ன நடந்தது?

"ம்ச் ஆதிக்கு தான் ட்ரை பண்றேன், ஆனால் லைன் கிடைக்கலை. சரி நீ முதலில் பைக்கில் ஏறு..." என்றவன் கைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய வர்ஷா கணவனின் பின்னால் அமர்ந்து அவன் தோளை பிடித்துக்கொள்ள பைக் சீறி பாய்ந்தது.

"குழந்தையை அழைச்சிட்டு போய்டலாம்..." என புரியாமலே தலையை உருட்டி வைத்தாள்.

கிரஷ்க்கு சென்று நேஹாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட வர்ஷாவுக்கு கணவனின் செய்கையில் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

பைக்கை உள்ளே விட்டு கதவை மூடிவிட்டு உள்ளே வந்தவனிடம், "என்னாச்சு தீனா, ஏன் வித்யாசமாக நடந்துக்கறீங்க? ஏதாவது பிரச்சினையா? சொல்லுங்கப்பா ?என்று படபடக்க அவளை விழிகளாலே அடக்கினான் குழந்தையை காட்டி.

"குழந்தைக்கு நான் பூஸ்ட் போட்டுக்கொண்டு வர்றேன், நீ அதற்குள் உனக்கும், பாப்பாவுக்கு தஞ்சாவூருக்கு போக ஒரு வாரத்திற்கு தேவையான உடைகளை பேக் செய்துக்கோ..."என்றுவிட்டு சமையலறை நோக்கி செல்ல முயன்றவனின் கையை பிடித்து நிறுத்தினாள்.

"நான் ஏன் தஞ்சாவூருக்கு போகணும்? அதுக்கென்ன அவசியம் வந்தது ? என்றைக்குமில்லாத திருநாளா இன்று ஆபிஸ் வந்தீங்க? பேச்சும் விநோதமா இருக்கு ? என்னதான்பா நடக்குது ? எனக்கு ஒன்றுமே புரியலை ? என்று தலையை பிய்த்துக்கொண்டாள்.

"ஒரு பிரச்சினை ஆயிடிச்சு வர்ஷா ..."என்றவன் மனைவியின் விழிகளில் தெரிந்த கலவரத்தை கண்டு அவளுக்கு விளக்க ஆரம்பித்தான்.

"அருண் பாடியை பார்க்க ஆதினியை அழைச்சிட்டு ஆதி டெல்லிக்கு போயிருந்தானே, அது ஒரு பெரிய பிரச்சினையில் முடிஞ்சிடிச்சி..."என்றதுமே வர்ஷாவின் இதயம் தூக்கிவாரி போட்டது.

"ஹையோ என்ன தீனா சொல்றீங்க, ஆதித்யாவுக்கு ஏதாவது பிரச்சினையா? ஆதி இப்போ எங்கிருக்கிறான்..." என்று துடி துடிக்க தீனா அவளை அமைதிப்படுத்தினான்.

"ஐ ம் சாரி வர்ஷா, எனக்கும் ஒன்னும் தெரியலை. அவனுக்கு தான் கால் பண்ணிக்கிட்டே இருக்கேன். லைன் தான் கிடைக்க மாட்டேங்குது. பட் டோன்ட் ஒர்ரி கண்டிப்பா அவனுக்கு ஒன்றும் ஆகாது. நல்லபடியா திரும்பி வருவான். அவனை நான் பாத்துக்கிறேன். இந்த நேரத்தில் நீ இங்கே இருக்க வேண்டாம், பாப்பாவை அழைச்சிட்டு உன் அம்மா வீட்டுக்கு போ..."

"சரி தீனா , நான் போறேன், ஆனால் என்ன பிரச்சினைன்னு நீங்க சொல்லவே இல்லையே...?`

"எப்படி சொல்றதுன்னே தெரியலை. போலீஸ் ஒரு கேஸை மூன்று ஆங்கிளில் தான் முதலில் டீல் பண்ணும். ஹன்னோ, பொண்ணோ, மண்ணோன்ற மூன்று விஷயம் தான். அதாவது காதல், பொண்ணு, சொத்துக்கள் போன்றவை தான். ஆனால் அருண் விஷயம் இந்த மூன்று விஷயத்திலும் அடங்காத ஒன்றுன்னு எங்களுக்கு எப்பொழுதோ தெரிஞ்சிருச்சி. அதனால் அருணை ஆர்கன் திருட்டு கும்பல் தான் கடந்திச்சின்னு நினைச்சோம். ஆனால் அதுவும் இல்லைன்னு இப்போ நடக்கிற சில விஷயங்கள் எங்களுக்கு அப்பட்டமா புரியவைக்குது..." என்று சிறு இடைவெளி விட்டு ஆரம்பிக்க வர்ஷா கையமர்த்தினாள் கணவனை.

"இந்த நாங்க , நாங்கன்னு சொல்றீங்களே, யார் அந்த இன்னொரு ஆள், ஆதித்யாவா ?

"இல்லை வர்ஷா, என் ட்ரைனிங் பேட்ச் ப்ரெண்ட் நரேஷ் சோப்ரா..."

"ஓ அப்போ ஆதித்யாவுக்கு என்ன பிரச்சினை, நீங்க இன்னும் சொல்லவே இல்லையே, ஹையோ கூட அந்த பொண்ணு வேற இருக்காளே? அப்படி என்ன தான் அருண் விஷயத்தில் நடக்குது, சீக்கிரமா சொல்லுங்க எனக்கு பதட்டமா இருக்கு ..." என்றவள் சட்டென்று கணவனின் சட்டையை பிடித்து உலுக்கினான்.

"வர்ஷா ப்ளீஸ் முதலில் என்னை பேச விடு, அதுக்கு நீ அமைதியா இருக்கணும்..." என வர்ஷா விழிகளை துடைத்துக்கொண்டு கணவனின் பேச்சை கேட்க ஆரம்பித்தாள்.

"சோப்ரா அவங்க இரண்டு பேரையும் அழைச்சிட்டு போய் அருண் பாடியை காண்பிச்சிருக்கான், அது எப்படியோ அருண் கொலையில் சம்மந்தப்பட்டவங்களுக்கு தெரியவந்திருக்கு. அதனால் சோப்ராவை அழைச்சி கமிஷனர் அவனை திட்டியிருக்கார். வந்தவங்க யாருன்னு வேறு கேட்டிருக்கார்..."என்றதும் வர்ஷா பதறினாள்.

"ஹேய் ஹேய் பயப்படாதே, சோப்ரா உஷாராகி ஆதித்யாவை காட்டி கொடுக்கலை. அதற்கு பதில் வேறு ஏதோ ஏதோ சொல்லி சமாளிச்சிட்டான் அவரிடம். ஆனால் அவனுக்கு யாரோ போன் செய்து மிரட்டி இருக்காங்க உன்னை யார் தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்க சொன்னதுன்னு. அவன் உடனே ஆதித்யாவுக்கு போன் செய்து அவனை எச்சரித்திருக்கான். அவனும் பதட்டமா தான் பேசினான்னு சொன்னான். லைனும் உடனே கட் ஆயிடிச்சாம். அதான் என்னை அலெர்ட் செய்தான்..."என்று சொல்லி முடிக்க வர்ஷா யோசிக்க முடியாமல் சிலை மாதிரி அமர்ந்திருந்தாள்.

மனைவியின் தோளில் கையை வைத்து உலுக்கி,"வர்ஷா என்ன யோசிக்கிறே, எனக்கு அருண் கேஸ் சாதாரணமா தோணலை. ஏதோ கையை வைக்க கூடாத இடத்தில் வைச்ச மாதிரி இருக்கு. அது நம்மை தாக்கறதுக்கு முன்னே, நாமா உஷாரா இருக்கணும்னு யோசிச்சி தான் உன்னையும், பாப்பாவையும் ஊருக்கு போக சொல்றேன்..."என்ற கணவனை ஆச்சர்யமும், கேள்வியுமாக நோக்கினாள்.

"உன் பார்வைக்குண்டான பதில் இது தான் வர்ஷா. எனக்கு ஏதாவது பிரச்சினைன்னா நான் எதிர்த்து நிற்பேன், ஆனால் பிரச்சினை என் குடும்பத்தை தொடுகிறது என்றால் என்னால் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும். ஐ ம் சாரி வர்ஷா , நீ என்னை கோழைன்னு கூட வைச்சிக்கோ. எல்லாத்தையும் சொல்லிட்டேன், இப்போ போய் டிரஸ் பேக் பண்ணு..."என்றவன் சமையலறை நோக்கி செல்ல மீண்டும் அவனின் கையை பிடித்து நிறுத்தினாள்.

"எல்லாம் சரி தீனா, ஆதித்யா எங்கே? அவன் எப்படியிருக்கிறான்? அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவேன்? ஊருக்கு போனதும் அம்மா கேட்கிற கேள்வி என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க? அதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? அவன் இப்போ எப்படி இருக்கான் தீனா, ரியலி ஐம் ஸ்கேர்ட்..." என்றவள் விழிகளில் அப்பட்டமாக பயம் தெறித்தது.

அவளை தோளோடு அணைத்து, "டோன்ட் ஒர்ரி, ஆதி என் மச்சான் மட்டுமில்லை , என் தம்பியும் கூட. அவனை நான் எப்படி சும்மா விட்ருவேன். அவனை பத்திரமா உன் கையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. சரி நீ ரெடியாகு..." என அதற்கு மேல் வர்ஷா தாமதிக்கவில்லை.

அடுத்த சில நொடிகளில் ரெடியாகி வர, அவர்களை பஸ் ஏற்றி விடும் வரை தொடர்ந்து ஆதித்யாவுக்கு அழைத்துக்கொண்டு இருக்க, லைன் கிடைத்தபாடில்லை. பஸ் கிளம்பியதும் ஏர்போர்ட் நோக்கி பைக்கை விரட்ட ஆதித்யாவின் நம்பரிலிருந்து அழைப்பு வர வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாக கைபேசியை உயிர்பித்தான்.

"ஆதி எங்கேடா இருக்கீங்க? ஏன் போனை எடுக்கவே இல்லை? ஏதும் பிரச்சினையில்லையே...? என்று படபடக்க எதிர்முனை தீணாவை அமைதிப்படுத்தியது.

"அத்தான் இப்பொழுது எங்களுக்கு ஏதும் பிரச்சினையில்லை, ஆனால் டெல்லி ஏர்போர்ட்டில் பெரிய பிரச்சினையாயிடிச்சி. உயிர்தப்பி வந்ததே பெரிய விஷயமாயிடிச்சி. சரி உங்களுக்கு ஏதும் பிரச்சினையில்லையே? என்று விசாரித்தான் அக்கறையோடு.

"அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம், நீ இப்போ எங்கே இருக்கே? எப்போ சென்னைக்கு வர்றீங்க? அந்த பொண்ணு நல்லா இருக்காளா?

"நாங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் சென்னை ஏர்போர்ட் விட்டு வெளியே வந்திடுவோம், நீங்க வர்றீங்களா அத்தான். அப்புறம் அக்காவிடம் இந்த விஷயத்தை பற்றி சொல்லாதீங்க, அவங்க பயந்துடுவாங்க..."என்னும் பொழுதே லைன் கட்டாக தீனா ஏர்போர்ட் நோக்கி புயலாக பறந்தான் பைக்கில்.

அடுத்த சில நிமிடங்களில் தீனா உள்நாட்டு விமான முனையத்தை அடைய, தீனாவும், ஆதினியும் ஓட்டமும் நடையுமாக சிறு பதட்டத்துடன் வர, தீனா மச்சானை முழுதாக பார்த்த சந்தோஷத்தில் அணைத்துக்கொள்ள, ஆதியும் மாமனின் அணைப்பில் அடங்கினான்.

சில நொடிகள் கழித்து அவனை தன்னிடமிருந்து விலக்கி,"கடவுளின் அருளால் உனக்கு ஒன்றுமில்லை, விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து ரொம்ப பயந்துட்டேன் ஆதி..."என்று அவனின் முகத்தை அன்பாக வருடியவனின் விழிகள் தங்களையே சிறு ஏக்கத்தோடும் விழிகளில் வைர துளியோடும் பார்த்துக்கொண்டிருந்த ஆதினியை கண்டு கனிவோடு புன்னகைத்தான்.

"எப்படிம்மா இருக்கே, ஆர் யூ ஆல்ரைட். சரி ரொம்ப நேரம் இங்கே நின்று பேச வேண்டாம், வீட்டுக்கு போய்டலாம்..."என்றவன் அங்கு நின்றிருந்த டாக்சியை அழைத்து அதில் இருவரையும் ஏற்றி முகவரியை சொல்லிவிட்டு வண்டியை பைக்கில் பின்தொடர்ந்தான்.

அதுவரை ஒருவித பதட்டத்தில் இருந்தவள் நிம்மதியுடன் ஆதியின் தோளில் சாய்ந்து விழிகளை மூட ஆதியின் இதழ்களில் சிறு புன்னகை ஜனித்தது.

வீட்டை அடைந்ததும் டாக்சியை அனுப்பிவிட்டு வீட்டின் படியேற வீடு பூட்டியிருக்கவும் பின்னால் வந்து பைக்கிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த அத்தானை கேள்வியாக நோக்கினான்.

"உள்ளே வா சொல்றேன்..."என்று வீட்டை திறந்து மூவரும் உள்ளே செல்ல ஆதினியின் முகத்தில் சிறு குற்றவுணர்ச்சி.

"உட்கார் ஆதினி, நான் காஃபி கொண்டு வரேன்..."என்று உள்ளே முயல, "ஐ ம் ஸாரி சார், என்னால் உங்களுக்கெல்லாம் எவ்வளவு பிரச்சினை..." என்றாள் திக்கி திணறி.

தன் அறைக்கு செல்ல முயன்ற ஆதியும், சமயலறைக்கு செல்ல முயன்ற தீனாவும் ஒரு சேர திரும்பினார்கள்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை ஆதினி, நீ என்ன தெரிஞ்சா செய்தே, உனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கோ, அதே அளவு அதிர்ச்சி தான் எங்களுக்கும். விடு பார்த்துக்கலாம். நீ முதலில் ரிலாக்ஸ் செய், மற்றதை அப்புறம் பேசலாம்... "

"ஆமாம் ஆதினி, ஆதித்யா சொல்றது சரி தான், நீ முதலில் முகத்தை கழுவிக்கிட்டு வா, ஒரு சூப்பரான காஃபி தரேன். குடிச்சிட்டு அப்புறம் பேசிக்கலாம்..." என்று விட்டு உள்ளே செல்ல ஆதித்யா அவளுக்கு ரெஸ்ட் ரூமை காட்டிவிட்டு தன் அறைக்கு சென்றான்.

ஆதித்யா ரெபிரெஷாகி வேறு உடையில் வர, ஆதினியும் முகத்தை கழுவி துடைத்துக்கொண்டு நெற்றியில் பொட்டை ஓட்டிக்கொண்டே வர, தீனா இருவருக்கும் காஃபியை கொடுத்து, தட்டில் பிஸ்கட்டையும் கொண்டு வந்து வைத்தான்.

தனக்கும் ஒரு கப்பை எடுத்தபடி அவர்களில் எதிரில் அமர,"அக்கா எங்கே அத்தான், இந்நேரத்திற்கு வந்திருக்கணுமே, பாப்பா கூட இல்லையே வீட்டில்...?

காஃபியை ஒரு சிப் உறிஞ்சிவிட்டு கப்பை உள்ளங்கையில் உருட்டியபடி,"உன் அக்கா தஞ்சாவூர் போயிருக்காள்..." என மற்ற இருவருமே கேள்வியாக நோக்கினார்கள்.

சோப்ரா போன் செய்தது, வர்ஷாவை ஊருக்கு அனுப்பியதை சொல்லி,"சோப்ரா போன் செய்ததுமே எதுவோ சரியில்லைன்னு தோணியது, நீங்க ரெண்டு பேரும் எங்கே இருக்கீங்கன்னு வேறு எனக்கு சரியா தெரியலை, வர்ஷாவையும், பாப்பாவையும் வீட்டில் வைச்சுக்கிட்டு நிம்மதியா எந்த வேலையும் செய்ய முடியலை. அதனால் தான் அவங்களை பத்திரமா ஊருக்கு அனுப்பி வைச்சிட்டேன்..."

"ஆனால் அத்தான் அருண் பாடியை பார்க்க வந்தவர்கள் யாருன்னு அவங்களுக்கு தெரியாது. அங்கே நாங்க இருந்ததால் எங்கள் டாக்சியை பாலோ செய்து எங்களை தீர்த்துக்கட்ட முயற்சி செய்தாங்க. ஆனால் நாங்க அவங்களிடமிருந்து தப்பிச்சிட்டோம்...."

"என்ன ஆதி சொல்றே, உங்களை துரத்திக்கிட்டு வந்தார்களா? எப்படி அவங்களுக்கு தெரிஞ்சது நீங்க அருண் பாடியை பார்க்க வந்தவங்கன்னு...?

"அதுதான் நான் ஏற்கனவே சொன்னேனே, அவங்களுக்கு எங்களை பற்றிய டீட்டைல்ஸ் தெரியலை, ஆனால் எங்களை மார்ச்சுவரியில் பார்த்திருக்காங்க, அதுவும் சென்னையிலிருந்து வந்திருக்கோம்னு தெரிஞ்சிருக்கு. அதனால் அவங்க கெஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அருண் பாடியை பார்த்திட்டு ரெஸ்ட்டாரெண்ட் போற வரைக்கும் பிரச்சினையில்லை. ஆனால் சோப்ரா சாருக்கு கமிஷனரிடமிருந்து அழைப்பு மேல் அழைப்பு வர அவருக்கே சந்தேகம் வந்து எங்களை அங்கிருந்து அனுப்பி வைச்சிட்டார். நாங்க கூட டாக்சியில் வரும் வரை எந்த பிரச்சினையுமில்லைன்னு நினைச்சோம். விமான நிலையத்திற்கு கொஞ்ச தூரத்திற்கு முன்னே எங்கே டாக்சியை மடக்கிட்டாங்க...."

"ஐயோ !

"நல்ல வேளை அத்தான், சோப்ரா சார் எங்களை அலர்ட் செய்ததினால் நாங்க மனதளவில் ரெடியாகி இருந்தோம், அதனால் அவங்க காரை மடக்கியதும் சட்டென்று நாங்க டாக்சியிலிருந்து இறங்கி ஏர்போர்ட்டை நோக்கி ஓட ஆரம்பிச்சிட்டோம். அவனுங்களும் விடாம எங்களை துரத்திக்கிட்டு வந்தாங்க. எப்படியோ தப்பிச்சு ஏர்போர்ட் உள்ளே நுழைஞ்சதும் அவனுன்களால் ஒன்றும் செய்ய முடியலை. பிளைட்டும் போர்டிங் முடிச்சி ரெடியாக இருந்ததினால் உடனடியா டேக் ஆப் ஆயிடிச்சு..." என்று முடிக்க தீனா வாயை குவித்து ஊதி தன் பதட்டத்தை தணித்துக்கொண்டான்.

"எப்படியோ பிரச்சினை இல்லாமல் தப்பிச்சிட்டோம்..."என்ற ஆதினிக்கு தீனா யோசனையுடன் பதிலளித்தான்.

"இனி தான் பிரச்சினையே ஆரம்பிக்க போகுது, அதுக்கு நீங்க ரெண்டும் பேரும் தயாரா இருக்கணும்..."என மற்ற இருவரும் சிறு பயத்துடன் பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டார்கள்.
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom