TSM_30 | Ezhilanbu Novels/Nandhavanam

TSM_30

Annapurani Dhandapani

✍️
Writer
30.​காவ்யா கதிரின் சட்டையை அணிந்தபடியே அன்று முழுதும் நடந்து கொண்டிருந்தாள். அவன் பசியோடு வருவான் என்று நினைத்து அவள் சமைத்து வைத்த உணவு ஆறி அவலாய்ப் போனது. காலை வந்துவிடுவான் என்று நம்பிக்கையுடன் கழித்து மதியம் வரமாட்டானா என்று ஏங்கி இரவுக்குள்ளாவது வரவேண்டுமே என்று நினைத்து அழவே ஆரம்பித்துவிட்டாள்.

அழாத! அழுதா எல்லாம் சரியாகுமா? அழாத அழாதன்னு எத்தனவாட்டிதான் உங்கிட்ட சொல்றது? லலிதாவின் குரல் கேட்டது.

ஆனா அவர் இன்னும் வரலியேம்மா? எனக்கு பயமா இருக்கும்மா!

அழாதம்மா! சுலோகம் சொல்லு! நம்பிக்கையோட சுலோகம் சொல்லி கடவுள வேண்டினா நம்ம வேண்டுதல் நிச்சயமா பலிக்கும்மா காவ்யா! அழாம சுலோகம் சொல்லு! அம்மாவே வந்து அருகில் நின்று ஆறுதல் மொழிகளை சொல்லியது போல இருந்தது.

கண்ணைத் துடைத்துக்கொண்டு மணி பார்த்தாள். மாலை ஆறு மணியாகியிருந்தது. இரண்டு நாட்களாக கரண்ட் இல்லை! ஆனால் இவள் மட்டுமே வீட்டில் இருப்பதாலும் பெரும்பாலும் லைட் ஃபேன் எதையுமே போடாமல் இருந்ததாலும் இன்னும் இன்வர்ட்டரில் கொஞ்சம் பவர் இருந்தது. ஆனால் அவள் இப்போதும் எந்த மின் விளக்கையும் போடவில்லை. அவர் வரும்போது அவருக்கு காற்று வேண்டும்! கரெண்ட் இல்லாமல் அவரால் கஷ்டப் பட முடியாது! பாவம் அவர்! நினைத்தபடியே முகம் கழுவி தலை சீவிக் கொண்டாள். நெற்றியில் பொட்டிட்டு உச்சி வகிட்டில் குங்குமம் இட்டாள். வந்து விளக்கேற்றிவிட்டு கண்மூடி அந்த காமாட்சியம்மனை மனதுக்குள் கொண்டு வந்து கை கூப்பி மனமுருகி வேண்டினாள்.

தன் வீடு இருக்கும் குடியிருப்பை அடைந்து மெதுவாக படியேறினான் கதிர். நடக்கவே முடியவில்லை! மூன்று நாட்களாக சரியான தூக்கம் இல்லை! காலையிலிருந்து கொலைப் பட்டினி! கிட்டதட்ட மூன்று மணிநேரத்துக்கும் மேலாக நீச்சல் வேறு! அப்புறம் நடை பயிற்சி! பின்னர் இப்போது திரும்பவும் தண்ணீரில் நடந்தது என உடம்பு சோர்ந்து போனது. மனம் காவ்யாவை நினைத்துக் கொண்டிருந்ததால் உடம்பின் சோர்வு இன்னும் மூளையை அடையவில்லை! மூன்று மாடியேறுவதற்குள் கீழே விழுந்துவிடுவது போல தள்ளாடினான்.

ஒரு வழியாக வீட்டை அடைந்து வழக்கமாக செய்வது போல பேன்ட் பேக்கெட்டில் கைவிட்டு வீட்டு சாவியை தேடியெடுத்தான். நல்ல வேளையாக அது நீந்தும்போது தொலையாமல் இருந்ததே! வீட்டைத் திறந்தால் வீடு கும்மிருட்டாய் இருந்தது. கடவுளே! அப்ப என் காவ்யா இங்க இல்லையா? எங்க போயிருப்பா? என்ன ஏன் சோதிக்கற கடவுளே! என்று நினைத்தபடியே சாவியை அதனிடத்தில் மாட்டிவிட்டு லைட்டைப் போட்டான்.

கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. அவசரமாக எட்டிப் பார்த்தாள். இருட்டாகத் தொடங்கியிருந்ததால் சரியாகத் தெரியவில்லை. கதிர் லைட்டைப் போட்டதும் அவனைத் தன் கண் முன்னே கண்டவள் சந்தோஷம், ஆச்சர்யம் என உணர்ச்சிகளால் சூழப்பட்டாள்!

மூன்று நாட்களாகக் குளிக்காமல் முகச்சவரம் செய்யாமல் வளர்ந்த தாடியுடன் கறுத்துப் போய் ஒரே உடையையே உடுத்தியிருந்ததால் வந்த வியர்வையிலும் காலையிருந்து கண்ட அழுக்கு தண்ணீரில் நீந்தியதால் வந்த துர்நாற்றம் என எதுவுமே அவள் கருத்தில் பதியவேயில்லை!

சாமியறையிலிருந்து தேவதை போல வெளியே எட்டிப் பார்த்தவளைக் கண்டதும் ஒரு மனநிறைவு ஏற்பட்டது கதிருக்கு. ஓடிப் போய் அவளை அணைத்துக் கொள்ள துடித்தான்! அவள் என்ன நினைப்பாளோ என்று ஒரு நொடி தயங்கி நின்றான்! ஆனால் அவளுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை!

"கதிர்! கதிர்! வந்துட்டீங்களா?" கேட்டுக் கொண்டே ஓடி வந்து அவனை அணைத்து அவன் கன்னங்களிரண்டிலும் மாறி மாறி முத்தமிட்டாள். கண்களில் கண்ணீரோடு அவன் முகம் முழுதும் முத்தமிட்டு,

"எங்கடா போன? என்ன தனியா தவிக்க விட்டுட்டு நீ எங்கடா போன? நான் எவ்ளோ தவிச்சேன் தெரியுமா? இனிமே என்ன விட்டு நீ எங்கியும் போகக் கூடாது!" என்று உரிமையோடு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவனிடம் செல்லம் கொஞ்சினாள்.

அவளுக்கே தயக்கம் இல்லாதிருக்கும் போது அவனுக்கென்ன வந்தது. தயக்கம் அறவே நீங்கப் பெற்றவனாய் அவளை அணைத்துக் கொண்டு அவள் முகம் முழுதும் முத்தமிட்டான்.

"இல்லடா! கவி! கவி! என் செல்லம்! இனிமே உன்ன விட்டு எங்கியும் போகவே மாட்டேன்! நம்ம ரெண்டு பேரும் இனிமே ஒண்ணாதான் இருப்போம்! என் செல்லம்!" என்று கொஞ்சினான். அவள் கண்ணோடு கண்பார்த்து அதில் தெரிந்த காதலை உள் வாங்கிக் கொண்டான். அவள் இதழோடு இதழ் பதித்து நீண்ட முத்தத்தை பரிசளித்தான்.

அலை பாய்ந்து கொண்டிருந்த இருவர் மனமும் ஒரு நிலைக்கு வந்து அமைதியடைந்தது.

- தொடரும்....
 

Rajam

Well-known member
Member
சின்ன எபி.
அலை பாய்ந்த மனங்களில்
அமைதி தவழந்தது.
பயமும்,பிரிவும் இருவரையும
மனதை திறக்க வைத்தது.
இனி சந்தோஷம் தான் அவர்களிடையே.
 

Annapurani Dhandapani

✍️
Writer
சின்ன எபி.
அலை பாய்ந்த மனங்களில்
அமைதி தவழந்தது.
பயமும்,பிரிவும் இருவரையும
மனதை திறக்க வைத்தது.
இனி சந்தோஷம் தான் அவர்களிடையே.
correct ah sonneenga sis,. thank you.
இந்த பிரிவும் பயமுமே அவர்களுடைய அன்பை வெளிக் கொணர்ந்து விட்டது
amam akka. thank you.
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom