NR_30_final | Ezhilanbu Novels/Nandhavanam

NR_30_final

Aruna Kathir

✍️
Writer
பகுதி – 30

அபர்ணா

சின்னைய்யாவா...என் சின்னைய்யாவா?

இங்கு நடக்கும் எல்லா குழப்பங்களுக்கும் காரணம் இவரா? இல்லை. அவராக இருக்காது. சின்னைய்யாவால் ஒருபோதும் இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொள்ள முடியாது.

என் மூளை நிமிடத்தில் பல கணக்குகள் போட்டுவிட்டிருந்தது. என்ன காரணத்தினாலோ என்னை இவர்கள் நினைவிழக்கச் செய்யவில்லை. என் கண்களும் கைகளும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தன. மூச்சை நன்றாக இழுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். என் காதுகளும் மூளையும் நடப்பவற்றை கவனித்தவண்ணம் இருந்தன.

ஏதோ காரணமாக நான் சுய நினைவுடன் இவர்களுக்குத் தேவைப் படுகிறேன். அருகில் சலசலத்த நீரோடை, கம்மாய் வந்துவிட்டது என நினைவூட்டியது. கம்மாயில் இறங்கி நடக்கிறார்கள் போலும். குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு பேர் இருக்க வேண்டும்.

கட்டிலிருந்து விடு பட திமிரிய என்னை ஒரு நபரால் கட்டுப்படுத்தி பிடித்திருக்க இயலாது. அதே போலத் தான் அஷோக்கையும் ஒரு நபரால் தனியே தூக்கிச் சுமக்க இயலாது.

இதுவரை அஷோக் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் இருந்துவிட்டேனே. அவனுக்கு தலையில் பலமாக அடிபட்டிருக்குமோ. பாவம். என் பொருட்டு அவனும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருக்கிறானே.

இதிலிருந்து எப்படி தப்பிப்பது. தினேஷ் என்ன ஆனான். கண்டிப்பாக அவன் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்கக் கூடாது கருப்புசாமி! காப்பாத்து!

கம்மாய் தண்ணீரின் சத்தம் வெகுவாக குறைந்துவிட்டது. சருகள் கால்களில் மிதிபடும் ஓசையும் லேசாக நாய்கள் குறைக்கும் ஓசையும் கேட்டன.

முதலில் ஒரு இரும்புக கதவு திறக்கும் சத்தமும் பின்பு ஒரு மரக்கதவின் கிரீச் சத்தமும் தெளிவாகக் கேட்டன.

‘பாத்து டா. அந்த மூட்டையை பழைய மூட்டையோடு பக்கத்து ரூமில சேர்த்து வை. இந்த மூட்டையை மட்டும் தனியா வை.’

‘அந்த மூட்டை’ என்பது அஷோக். இந்த மூட்டை என்பது நான்.

இந்த குரலை நிட்சயமாக எங்கோ கேட்டிருக்கிறேன். எனக்கு பரிட்சியமான குரல் போலத்தான் இருந்தது. கண்டிப்பாக சின்னையாவின் குரல் இல்லை. அந்த மட்டில் சிறிது நிம்மதியாக இருந்தது.

கண்டிப்பாக என்னால் இவர்களுக்கு ஏதேனும் காரியம் நடக்க வேண்டியிருப்பது மட்டும் நிச்சயம்.

சிறிது நேரம் நிசப்தமாக இருந்தது. அருகில் அஷோக்கின் குரலோ தினேஷின் குரலோ எதுவுமே கேட்கவில்லை. வெகு மெல்லிதாக வேட்டுகள் வெடிக்கும் சத்தம் மட்டும் அவ்வப்போது கேட்டவண்ணம் இருந்தது. திருவிழாவில் வானவேடிக்கை சத்தம்.

என் கை கட்டுகளை அவிழ்க்கமுடிகிறதா என்று முயன்று பார்த்தேன். கயிறு நெகிழ்ந்து கொடுக்கவில்லை.

‘கை இருக்கமா இருக்கா வேணி. இரு அவுத்து விடறேன்.’ என்று புதிதாக ஒரு கரகர குரல் கூறியது.

என் கைகள் மற்றும் கண்களின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. முகத்தில் பளீரென அடித்த மின்விளக்கின் ஒளியால் கண்கள் கூசியது. சுற்றிலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறை.

சத்தம் வந்த திசையில் நோக்கினேன்.

என் மூளை ஏற்கனவே நான் இருக்கும் இடத்தை கணித்திருந்தது. கம்மாய் தாண்டி சிறிது தூரத்தில் இருப்பது மாணிக்கத்தின் தோட்டம். இது கண்டிப்பாக அவனது தோட்ட வீடாக இருக்க வேண்டும்.

என் தந்தை குடி போதையில் இருக்கும் போது அவரிடம் இருந்து நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கியவனுக்கு இப்போது என்னிடம் என்ன தேவைப்படக் கூடும். என் சொத்தைத் தவிர.

‘என்ன வேணி, நான் யார்னு தெரியலையா?’ என்று நக்கலாக கேட்டவண்ணம் அருகில் இருந்த நெல்மூட்டை ஒன்றின் மேல் வாகாக அமர்ந்தபடிக்குக் கேட்டான்.

‘ஏன் தெரியாம? நல்லா கண்ணு தெரியும் மாணிக்கம்’ என்றேன் நானும் அதே தோரணையில். பயந்து போய் நான் பேசுவேன் என்று எதிர்பார்த்தமாணிக்கத்திற்கு தெளிவாக நான் பேசியது கவலையை கொடுத்திருக்க வேண்டும்.

எனக்கு உள்ளூர பயம் இருந்தது தான். ஆனால் அது எனக்கு மட்டும் தான் தெரியும் அல்லவா. “குருதிப்புனல்” கமல் சொல்வது போல், தைரியம் என்பது பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நடிப்பது. அதைத்தான் நான் இப்போது செய்தேன்.

‘நீ தைரியசாலிதான் வேணி. ஒத்துகிடறேன்’ என்றான். என் மனம் குழம்பித் தான் போயிருந்தது. அடுத்த அறையில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. என் பயத்தை இவன் முன் காட்டாமல் இருப்பது தான் என் தைரியம்.

‘என்னை ஏன் புடிச்சுட்டு வந்திருக்க மாணிக்கம்.’

மாணிக்கத்திற்கு என்னை விட மூன்று நான்கு வயது அதிகமாக இருக்கும். ரஞ்சித்துடன் சேர்ந்து ஒரே வகுப்பில் படித்தவன். பள்ளியில் கூட எனக்கு சீனியர் தான். பக்கத்து தோட்டக்காரன், அவனின் தந்தையும் என் தந்தையும் நண்பர்கள் என்ற ரீதியில் இரண்டோரு வார்த்தை பேசியிருக்கிறேன்.

‘உனக்குத் தெரியாத வேணி. எல்லாம் உன் சொத்துக்காகத்தான்.’

‘அதைத் தான் ஏற்கனவே என் அப்பாட்ட இருந்து ஏமாத்தி வாங்கிட்டியே மாணிக்கம். அப்பறம் என்ன?’

‘அதுக்கு தான் நீ கேஸ் போட்டு என்னை கோர்ட் வரைக்கும் இழுத்திட்டியே. எல்லாம் உன் சித்தப்பன் கொடுக்கற தைரியம்ம்ம்ம்?’

‘ஏய் மரியாத! மரியாதையா பேசு. அவன் இவன்னு பேசின பல்ல தட்டி கைல குடுத்துருவேன். ஜாக்கிரதை!’

‘சித்தப்பன் மேல இவ்வளோ பாசமா? புல்லரிக்குது வேணி’

‘என்ன தான் வேணும் உனக்கு. மத்தவங்கள என்ன செஞ்ச? எங்க கட்டி வச்சிருக்க? இதுக்கெல்லாம் எத்தனை வருஷம் தண்டணை தெரியுமா மாணிக்கம். வாழ்க்கை முழுக்க கம்பி எண்ண வேண்டியிருக்கும்’

‘நான் படிக்காதவன் வேணி. எத்தனை வருஷம் தண்டனைனு எனக்கு என்ன தெரியும்? ஆனா ஒன்னு நல்லாத் தெரியும். தப்ப தப்பில்லாம பண்ணா தப்பிச்சராலாம். என்ன நான் சொல்லறது?’ என்று கேட்டுவிட்டு தெலுங்கு பட வில்லன் போல பயங்கரமாக சிரித்தான்.

இவ்வளவு நேரம் இவனுடன் பேசியது இவன் மன நிலை என்ன என்பதை கணிப்பதற்காகவே. அது முடியாமல் போகவும் எப்படியாவது பேச்சை வளர்த்துவது என்று முடிவு செய்தேன்.

நானும் அஷோக்கும் வீட்டை விட்டு கிளம்பும் போது ஜெடி உடன் வர ஆயத்தமாயிற்று அல்லவா. இந்த நேரம் சின்னைய்யா ஊரில் இருந்து வந்திருப்பார். அவரை அழைத்துக் கொண்டு என் வாடையை மோப்பம் பிடித்து இங்கே அழைத்து வந்துவிடும்.

அதுவரையில் தாமதப்படுத்த வேண்டும். இவனை தாமதப்படுத்துவது ஒன்று தான் இப்போது எனக்கிருக்கும் ஒரே ஆயுதம். எப்படி?

பேச்சு கொடு! மாணிக்கத்திடம் பேச்சு கொடு என்றது மூளை.

‘என் சின்னைய்யா எங்க? உனக்கு என் சின்னைய்யாக்கும் என்ன சம்பந்தம்? என்றேன். என் சின்னைய்யா தர்மதுரைக்கும் இந்த கயவனுக்கும் எள்ளளவும் தொடர்பு இருக்காது என்று என் மனம் திடமாக நம்பியது.

இருந்தாலும் இவனை பேச வைக்க வேண்டும். தற்பெருமை பேசுவது ஒன்றே அதற்கு சிறந்த வழி என்றும் தோன்றியது.

‘ஓ. வரும் போது நம்ம சண்முகம் பேசினதை கேட்டு உங்க சின்னைய்யானு நினைச்சிட்டியா வேணி? ஏலேய் சண்முகம் இங்க வா.உன் அண்ணன் மக உங்கிட்ட ஏதோ கேட்கனுமாம்’ என்றான். முகத்தில் பெருமை பொங்கிவழிந்தது.

அடுத்த அறையில் இருந்து சண்முகம், எங்கள் தோட்டத்து வேலைக்காரன் கோனாரின் மகன் சண்முகம் நான் நின்றிருந்த அறைக்குள் நுழைந்தான்.

‘என்ன மாணிக்கம் தம்பி? கூப்பிட்டீங்களா?’ என்றான்.

‘நான் கூப்பிடலை சண்முகம். உன் அண்ணன் மக தான் உன் கிட்ட பேசனுமாம்’

கோனாரின் மகன் எனக்கு எப்படி சின்னைய்யாவாக முடியும்? என்னை குழப்புவதற்காக நாடகமாடுகிறார்களா? என் மனக் குழப்பங்கள் என் முகத்தில் தெளிவாக தெரிந்தது.

‘சண்முகம் எனக்கு சின்னைய்யாவா? என்ன உளர்ற மாணிக்கம்? கோனாரோட மகன் சண்முகம் எனக்கு எப்படி உறவாக முடியும்?’

‘சொல்லுடா சண்முகம். வேணி கேட்குதில்லை’ என்று ஒதுங்கி நின்றிருந்த சண்முகத்தைப் பார்த்தவாறே மாணிக்கம் கூறினான். சண்முகத்தின் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லை. நெல்மூட்டைகளின் மேல் சாய்ந்திருந்த மாணிக்கத்தையும், அவன் எதிரில் குழப்பமாக நிற்கும் என்னையும் மாறி மாறி பார்த்தவண்ணம் நின்றிருந்தான்.

‘சண்முகம் சொல்ல கூச்சப்படறான். நானே சொல்லறேன் வேணி’ என்று மறுபடியும் மாணிக்கம் சொல்ல ஆரம்பித்தான்.

‘உன் தாத்தா, சண்முகத்தோட அம்மா சாரதாவை சோழவந்தானுக்கு திருவிழாக்கு போறப்போ பார்த்திருக்காரு. தனக்கு கல்யாணமாகி இரண்டு புள்ளைக இருக்குங்கற விஷயத்தை மறைச்சி சண்முகத்தோட அம்மாவை கல்யாணம் கட்டிகிட்டாறு.’

‘திருவிழா முடிஞ்சு வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னவரு திரும்பி வரவேயில்லை. வயத்துல புள்ளையோட உங்க ஊருக்கு வந்த சண்முகத்தோட அம்மாவை இந்த புள்ளை என்னது இல்லைன்னு சொல்லி விரட்டிட்டாரு.’

‘உங்க தாத்தாவோட நெருக்கின பழக்கத்தில இருந்த கோனாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சு, பாவம் புள்ளத்தாச்சி பொண்ணாச்சேனு கோனார் சம்சாரம் தன் வீட்டோட வச்சகிச்சு.’

‘சண்முகம் பிறந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவன் ஆத்தா இறந்திருச்சு. கோனாரும் அவர் சம்சாரமும் தன் மகனா சண்முகத்தை வளர்தாங்க. இவங்க தோட்டத்தில குடியிருந்ததால சாரதா விஷயம் யாருக்குமே தெரியாம போயிருச்சு.’ என்று பெரிய வரலாறு போல சொல்லி முடித்தான். இது மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் என் பக்கம் திரும்பவேயில்லை.

இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை எவ்வளவு தூரம் உண்மை என்றும் தெரியவில்லை. விஷயம் என்ன என்று கேட்டு தெளிந்து கொள்ள கோனாரும் உயிருடன் இல்லை என்று நினைக்கும் போது இந்த கயவன் மேல் ஆத்திரமாக வந்தது.

‘அப்படி தூக்கி வளர்த்துன பாவத்துக்குத் தான் கோனாரை தலையில அடிச்சு கொன்னியா சண்முகம்?’ என்றேன் சண்முகத்தின் முகத்தைப் பார்த்தபடி.

ஏதோ சொல்ல வருவது போல வாயைத் திறந்த சண்முகம் மாணிக்கத்தின் தொண்டை செருமலில் முகத்தை பழையபடிக்கு உணர்ச்சியில்லாமல் வைத்துக் கொண்டான்.

‘அதுவா. அது தற்செயலா நடந்த விபத்து வேணி’

இந்த கதை உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்கள் இன்னமும் என்னிடம் ஏதோ மறைக்கிறார்கள் என்றே என் மனதிற்குப் பட்டது.

அடுத்த நிமிடம் மாணிக்கத்திற்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. தொடர்பை துண்டித்தான்.

‘சரி. சரி. வெட்டி போச்சு போதும். இன்னும் சித்த நேரத்தில் திருவிழா முடிஞ்சிரும். உன்னை காணம்னு தேட ஆரம்பிச்சிருவாங்க. இங்க தேடிகிட்டு வர ரொம்ப நேரமாகாது.’ என்றான் மாணிக்கம் திடீரென்று தெளிந்தவன் போல.

‘மாணிக்கம் என்னை கட்டி போட்டு கையெழுத்து வாங்கறதில ஒரு உபயோகமும் இல்லை. நான், என் சின்னைய்யா, என் அத்தை, அத்தை மகன்னு நிறைய பேர் கையெழுத்து போட்டாத்தான் என் சொத்துல ஒரு துரும்பக் கூட அசைக்க முடியும்’

‘ஹ ஹ . அது தெரியாதா வேணி. அது என் பிரச்சனை நான் பார்த்துக்கறேன். நீ ஏன் கவலை படற’ என்றான் ஒரு மந்தகாச சிரிப்புடன்.

இந்த முட்டாளுடன் விவாதிப்பதில் பயனில்லை என்று தோன்றியது. இவனுக்கு புரியவைக்க முடியும் என்றும் தோன்றவில்லை.

‘இப்போ என்ன உனக்கு கையெழுத்து தான போடனும். பேப்பர் குடு போடறேன். அதுக்கப்பறம் உன்னால ஆனதைப் பார்த்துக்க’ என்று தெனாவெட்டாக கூறிவிட்டிருந்தேன்.

‘இன்னமும் புரிஞ்சுக்காமையே இருக்கியே வேணி. ஒரு கையெழுத்து வாங்கவா உன்னை கடத்திட்டு வந்திருக்கேன்னு நினைக்கற?’

‘பின்ன வேற எதுக்காக?’

‘நீ பாட்டில கையெழுத்து போட்டுட்டு நாளைக்கு கோர்ட்டில கேஸ் போடுவ... ‘இது என் கையெழுத்தே இல்லைன்னு’ எகத்தாளம் பேசுவ. ஆயுசு முழுக்க கோர்ட்டிக்கும் வீட்டுக்குமா அலையனுமாக்கும்?’ என்று கூறிவிட்டு தீர்கமாக என்னைப் பார்த்தான்.

அவன் கண்களில் ஒரு தீர்மானம் தெரிந்தது. இனிமேல் விடுவதாய் இல்லை என்பது போன்ற தீர்மானம்.

‘இப்ப என்ன செய்யனும்கற?’

‘அதை அப்பறமா சொல்லறேன் நீ மொதல்ல கையெழுத்தைப் போடு’

‘முட்டாள் மாதிரி பேசற மாணிக்கம். என் சின்னைய்யா, அத்தைன்னு எல்லார் சம்மதமும் இருந்தாத் தான் உனக்கு சொத்து கிடைக்கும்.’

‘சே. என்ன நீ சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு. அதெல்லாம் ஏற்கனவே வாங்கியாச்சு. நீயும் உன் சின்னைய்யாவும் தான் பாக்கி.’ என்று கூறி நிறுத்தினான்.

மாணிக்கத்தின் வார்த்தைகள் என் காதில் விழுந்ததே தவிர என் மனத்தில் பதியவில்லை.

‘என்ன? என்ன சொன்ன?’ என்றேன் அவசரமாக.

‘உன் அத்தை, அத்தை பையன் கிட்டையெல்லாம் கையெழுத்து நான் வாங்கிட்டேன். நீயும் உன் சித்தப்பனும் தான் பாக்கி’ என்றான் மறுபடியும். என்னைக் கடைசியில் பதட்டப்பட வைத்துவிட்ட சந்தோஷம் அவனிடம் இருந்தது.

என் முகத்தில் மாறுதல்கள் இல்லை. இப்போது தான் முழுவிவரமும் எனக்கு தெளிவாக புரிந்தது போல இருந்தது. இதழில் குறுங்சிரிப்புடன் மாணிக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘என்ன சிரிக்கற வேணி. நான் கையெழுத்து வாங்கிட்டேன்னு சொல்லறதை நம்ப மாட்டியா?’

‘நம்பறேன் மாணிக்கம். ஏன் சிரிச்சன்னா உன்னை என்ன எல்லாம் சொல்லி என் அத்தை மகன் ரஞ்சித் ஏமாத்தியிருப்பான்னு நெனைச்சேன். சிரிப்பு வந்திருச்சு’

மாணிக்கத்தின் முகத்தில் ஈயாடவில்லை. அவன் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

“உன்னை முன்னால விட்டு பின்னாடி நின்னு கேம் ஆடறானா? நேருக்கு நேர் மோதத் தெரியாத பொறுக்கி. என்ன மாணிக்கம்? ஏன் முழிக்கற? எங்கிட்ட கையெழுத்து வாங்கித் தர ரஞ்சித் உனக்கு எவ்வள்ளோ பணம் தர்றதா சொன்னான்?’

‘சபாஷ் வேணி. நிஜம்மா நீ புத்திசாலி. கடைசி வரை நான் இதுக்கு பின்னால இருக்கேன்னு நீ கண்டுபிடிக்க மாட்டன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். யூ ஆர் ப்ரில்லியண்ட்’ என்று கைகளை தட்டிக் கொண்டே சாத்தியிருந்த அறை ஒன்றில் இருந்து குறுந்தாடியுடன் ரஞ்சித் வெளியே வந்தான்.

‘எப்பவுமே உன் கணக்கு தப்பு கணக்கு தான் ரஞ்சித்’ என்றேன். எதிரி யார் என்று தெரியாத வரையில் தான் எல்லா பயமும். இவன் தான் என்று தெரிந்த பின் பயம் எல்லாம் காற்றுடன் கலந்துவிட்டது.

குள்ள நரியைப் பார்த்து புலி பயந்துவிடுமா என்ன?

‘சரி. நான் தான்னு தெரிஞ்சிருச்சில்ல, இப்ப கையெழுத்து போடு.”

தமிழ் படங்களின் கடைசி நேர வில்லன் போல இருந்தது அவன் செய்கை. நான் சிறிதும் அசராமல் அவனை பார்த்தவண்ணம் இருந்தேன். இன்னும் எந்த காலத்தில் இருக்கிறான் இவன். முட்டாள்.

‘என்ன சிரிக்கற. அவ்வளவு எகத்தாளமா?.. கையெழுத்து போடலைன்னு வை, உன் கழுத்தை திருகி கோழியை கொல்லற மாதிரி கொன்னு தூக்கி போட்டுருவேன்’ என்று இரண்டு அடிகள் என்னை நோக்கி நடந்தான்.

‘என்ன மாணிக்கம் ரஞ்சித் தம்பி புதுசா ஏதேதோ சொல்லுது? என் பங்கு சொத்தை நியாப்படி எனக்கு வாங்கித் தர்றேன்னு தான வேணிய தூக்கிட்டு வர சொன்ன. இங்க என்னடான்னா இவன் கொலை பண்ணுவேங்கறான்? எனக்கு ஒன்னும் புரியலையேபா’ என்று அதுவரையில் வாயைத் திறக்காத சண்முகம் மாணிக்கத்திடம் திடமான குரலில் கேட்டான்.

‘கொலை பண்ண போறேன் பொண்ணைத் தூக்கிட்டு வான்னு சொன்னா நீ செஞ்சிருப்பியாக்கும். போ போயி ஓரமா நில்லு. உனக்கு இதெல்லாம் புரியாது’ என்றான் தன் அதிகாரக் குரலுல் ரஞ்சித் கர்ஜித்தான்.

மாணிக்கம் அமைதியாக இருக்கவும், அவன்புரம் திரும்பி சண்முகம் பேசத் தொடங்க்கினான்.

“என்ன மாணிக்கம் ஒன்னும் பேச மாட்டேங்கற? வேணி இந்த ஊரில இருந்தா சொத்தை பிரிச்சு தர விடமாட்டான்னு அவளை தொரத்த ப்ளான் பண்ண...நீ சொன்னப்பல்லாம் உன்னை வந்து பார்த்து, நீ சொன்ன மாதிரியே வேலை செஞ்சேன்ல....”

“ஆமாய்யா செஞ்ச...இப்போ அதுக்கு என்ன?” என்றான் மாணிக்கம் கடுப்பில்.

“அதுக்கு என்னவா? பெரியய்யா வீட்டுலயே வேலை செஞ்சுட்டு, அவர் வீட்டுக்கே தூரோகம் பண்ணியிருக்கேன்...ஏதோ நீ வாங்கித் தர்றேன்னு சொன்ன சொத்து, எனக்கு இல்லைன்னாலும், என் புள்ள குட்டிக்காவது உபயோகமா இருக்கும்னு நினைச்சேன்.....நீ சொன்னப்பல்லாம் எடுபிடியாட்டம் வேலை செஞ்சிருக்கேன்...கால்வாயில கிளாம்பு வைக்கச் சொன்ன, ஏன்னு கூட கேட்காம செஞ்சேன்ல...”

“யோவ்...கொஞ்சம் நேரம் பேசாம இருய்யா...எல்லாத்தையும் உளறிக் கொட்டனுமாக்கும் இப்போ?” என்றான் மாணிக்கம்.

இருந்தும் சண்முகம் விடவில்லை. தன் போக்கில் பேசிக் கொண்டே இருந்தான்.

“இந்த பயலுக ஊருக்கு வந்தப்போ அவனுகளை நான் தானே லோடு வண்டில ஏத்திட்டு வந்தேன்னு...அவனுகளை இறக்கி விட்டதுமே உனக்கு தகவல் சொன்னேன்ல...”

“சண்முகம் நீ பேசாம இருக்கப் போறீயா இல்லைய்யா?”

“வேணி முத நாள் எங்கப்பன் கூட நின்னு பேசுனதுல இருந்து, தோ, முந்தானேத்து கருப்பன் கோவில்ல நீ சொன்ன விஷயம் வரைக்கு உன் வார்த்தைய அச்சு மாறாம, ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம செஞ்சனேப்பா” என்றான் பரிதாபமாக. அவன் முகத்தில் ஒரு கையாலகாத்தனம் மிளிர்ந்தது.

“சரி..சரி.... விடு.. நீ எனக்காக செஞ்சது எதையும் மறக்கலை.. இந்த பிரச்சனை முடிஞ்சதும் உன் பங்கு உனக்கு வந்து சேரும்....நீ உள்ள போயி அடைச்சு வச்சிருக்கவுங்க என்ன ஆனாங்கன்னு பாரு...” என்று அமர்தலாக மாணிக்கம் கூறிய போதிலும், சண்முகத்தின் முகத்தில் இருந்த குழப்பங்கள் மறையவில்லை.

ஒரு தயக்கத்துடன் என் பக்கம் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு உள் அறை நோக்கி நடந்தான். சண்முகத்தின் தடுமாற்றத்தை ரஞ்சித் கவனிக்கத் தவரவில்லை.

‘என்ன சண்முகம் அண்ணன் பொண்ணு மேல பாசம் பொத்துகிட்டு வருதோ?’

‘கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கறதெல்லாம் இந்த காலத்துல பெரியவிஷயமில்லை ரஞ்சித் தம்பி. கோர்ட்டுல கேஸ் போட எம்புட்டு நேரமாகும் சொல்லு’ என்று தனக்குத் தெரிந்த வகையில் அறிவுரை போல ஏதோ கூறினான் சண்முகம்.

‘யோவ். இவ்வளோ தான் உனக்கு மரியாதை. அப்படி ஓரமா போய் நில்லு. எல்லாம் எனக்குத் தெரியும். புத்தி சொல்ல வந்துட்டான் பெருசா. ரொம்ப பேசின சல்லிக் காசு தரமாட்டேன் பார்த்துக்க’

இதற்கும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இவனுக்கே இங்கு யாரும் சொத்து தரப்போவதில்லை. இதில் இவன் சண்முகத்திற்கு எங்கிருந்து கொடுப்பது என்று நினைத்துக் கொண்டேன்.

சண்முகத்திடம் ஒரு சலனம் தெரிந்தது. இந்த சந்தர்பத்தை நழுவவிட எனக்கு மனதில்லை.

‘ஏன் சண்முகம் அண்ணே சொத்து தான் உன் பிரச்சனைன்னா நேரா எங்க கிட்டையே வந்திருக்கலாமேண்ணே. தோ நேத்து எடுத்த டி.என்.ஏ டெஸ்ட் மாதிரி உனக்கும் என் சின்னைய்யாவுக்கும் ஒரு சின்ன டெஸ்ட் எடுத்தா நீ என் தாத்தாவுக்கு பிள்ளையான்னு தெரிஞ்சிருக்குமே. அதுக்கு எதுக்கு இவ்வள்ளோ ரிஸ்க் எடுக்கனும்.’ என்றேன்.
 
Aruna Kathir

✍️
Writer
சண்முகத்தின் முகத்தில் குழப்பங்கள் சூழ்ந்திருந்தன. தான் தவறு செய்துவிட்டோம் என்று தெளிவாக முகத்தில் காட்டினான். தன் மன மாற்றத்தின் அடையாளமாக என் பக்கம் ஒரு அடி எடுத்து வைக்கவும் செய்தான்.

ரஞ்சித்திற்கு என் திட்டம் புரிந்துவிட்டிருந்தது. அவன் ஆட்களை அவனுக்கு எதிராக திருப்பப் பார்க்கிறேன் என்று உணர்ந்து கொண்டான்.

‘இத பாரு வேணி. நீ பேசி சண்முகத்தை உன் பக்கம் இழுத்துக்கலாம். அவனால எனக்கு ஒன்னும் பிரியோஜனம் இல்லை. வெட்டி பேச்சு பேசாம கையெழுத்து போடற வழியைப் பாரு. எனக்கு டைம் இல்லை.’

‘நீ சொன்னது எல்லாமே சரி தான். கடைசியா சொன்னியே அது மட்டும் தப்பு. உனக்கு டைம் நிறைய இருக்கு. வாழ்க்கை பூரா கம்பி எண்ணத் தான போற. என்ன அவசரம் ரஞ்சித்’

‘என் கோபத்தை கிளராத வேணி. உன்னை கொலை பண்ண கூட நான் தயங்க மாட்டேன். தெரிஞ்சுக்கோ.’

‘அது எனக்கு தெரியும் டா முட்டாள். ஏற்கனவே என் அப்பாவையும் கோனாரை இரக்கமில்லாம கொலை செஞ்ச பாவி தான நீ.’

‘ஆமா டீ. நான் தான் கொன்னேன். உன் அப்பன் குடி போதையில கையெழுத்து போட்டான்… ரெண்டு நாள் கழிச்சு தெளிவா வந்து, அந்த பேப்பரை எல்லாம் குடுக்கச் சொல்லி மிரட்டுணான். குடுக்கலைன்னா, உன் சித்தப்பன் அரசியல் பலத்தை வைச்சு உண்டு இல்லைன்னு ஆக்கறேன்னு என் முன்னாலையே சீருனான்…”

“சொந்த தாய் மாமன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, சகட்டு மேனிக்கு அவன் இவன்ங்கற…உன்னை….”என்று ஓங்கி அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தேன்.

இன்னமும் என் ஆத்திரம் அடங்கவில்லை….என் கோபத்தைப் பார்த்த ரஞ்சித்திற்கு சிரிப்பு தான் வந்தது. ஒரு கையில் என்னை உதறிவிட்டு, அவன் பாட்டில் தன் பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தான்.

“என்ன கோவம் வருதா…. ம்ம்ம்… பெத்த அம்மாவே என்னை புள்ளை இல்லைன்னு சொல்லிட்டா, இதுல எங்கிருந்து தாய் மாமன்னு பாசம் வைக்கறது?”

“டேய்”

“முழுசா கேளு வேணி…. என்னை சொடுக்கு போட்டு மிரட்டினான் உங்க அப்பன்…. எவ்வளவு திமிரு…ம்ம்… ஓங்கிவிட்டேன் ஒன்னு…மயங்கி விழுந்துட்டான்…மயக்கம் தான்னு நினைச்சேன்…அப்பறம் பார்த்தா ஒரேஅடியில போய் சேர்ந்துட்டான்….அதனால என்ன பண்ண? எப்படியும் கையெழுத்து வாங்கியாச்சு…இனிமேல் அந்தாளு இருந்தா என்ன? இல்லைன்னா என்னன்னு, நாங்களா புதைச்சிட்டோம்…”

“ஆனா கோனாரை வேணும்னு கொல்லலை வேணி. அது ஒரு ஆக்ஸிடெண்ட். உன் நாய் ஜெடி தினமும் குளிக்க வாய்க்கால் வரும்னு தெரிஞ்சு வாய்க்கால் தண்ணீல கிளாம்ப் வைச்சேன். ஆனா அதுக்கு முன்னால அந்த பாழாய் போன மாடு உள்ள இறங்கி என் திட்டத்தை கெடுத்துச்சு’

பற்களை நர நரவென கடித்துக் கொண்டேன். அவன் தன் தற்பெருமையை பேசியவண்ணம் இருந்தான்.

‘உன்னை பயமுறுத்தி எப்படியாவது இந்த ஊரைவிட்டு காலி பண்ணவைக்கணும்னு நினைச்சேன். உன் செல்ல மாடு அழகிய கொல்லத்தான் அன்னைக்கு உன் வீட்டு தொழுவத்துக்கு வந்தேன். ஆனா அது போட்ட கன்னு இருந்ததும் பசுவை விட கன்னைக் கொன்னா இன்னமும் வருத்தப்படுவன்னு நினைச்சு அது கழுத்தை அறுத்து போட்டேன்.’

‘இந்த வேலையை சண்முகத்தை தான் செய்ய சொன்னேன். அவனுக்கு தைரியம் பத்தலை. புதுசா பொறந்த கன்னுகுட்டிய எப்படி கொல்லறதுன்னு ரொம்ப தயங்கினான். அதனால நானே வரவேண்டியதா போச்சு.’

‘என் வாசம் புதுசா இருந்ததை உணர்ந்த நாய்கள் குலைக்க ஆரம்பிச்சது. தப்பிக்கலாம்னு ஓடறப்போ அந்த கிழம் கோனார் என்னை புடிச்சுகிட்டான். அதனால ஓடற அவசரத்துல கோனாரை கீழே தள்ள வேண்டியதா போச்சு. என் நேரம் அந்த கிழம் கல்லுல மோதி உயிரை விட்டிருச்சு’

‘அப்ப ரெயிவே ஸ்டேஷன்ல அன்னைக்கு நான் வர்றேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது?”

‘நீ அன்னைக்கு ராத்திரி ஊருக்கு வர்றன்னு என் அம்மா, உன் பரிமளா அத்தை சொன்னாங்க. அதனால உன்னை பயப்படுத்த தான் உனக்கு மெசேஜ் பண்ணினேன்’

‘அப்போ அத்தையும் உன் கூட கூட்டா?’

‘அப்படி இருந்திருந்தாத் தான் கவலை இல்லையே. வீட்டுக்குள்ள என் வேலைகளை செய்ய ஒரு ஆள் தேவை பட்டது. குடிச்சுட்டு போதையில உளரின சண்முகத்தை என் திட்டத்துக்கு சரியா உபயோகப் படுத்திகிட்டேன்’என்றான் ஆயாசமாக.

‘உங்க அம்மா கூட நீ பேசவே இல்லையா?

‘ஏன் பேசாம. சண்முகத்தின் மூலமா தகவல் கொடுத்துப் பார்த்தேன்.மசியவே இல்லை. தன் பங்கு சொத்தையும் உன் பேர்ல எழுதி உயில் ஏற்பாடு பண்ணியிருக்கு என்னை பெத்த கிழவி. நானும் கெஞ்சி கொஞ்சி எவ்வளவோ பேசி பார்த்துட்டேன். ஒன்னும் முடியலை’.

‘பாவம் அவங்கள கூட நான் சந்தேகபட்டேன்.’

‘தோ பாரு வேணி. வளவளன்னு பேசிட்டு இருக்க எனக்கு டைம் இல்லை. என் வீசா இன்னும் நாலு நாள் தான் இருக்கு. எனக்கு கையெழுத்து போட்டுக் குடு. நான் இந்த சொத்தை ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பனிக்கு விலை பேசிட்டேன். இந்த ஊர்ல ஒரு பெரிய தண்ணி பாட்டில் செய்யற ஃபேக்டரி வரப் போகுது. இரண்டு நாள்ல எல்லா பிரச்சனைகளையும் முடிச்சுட்டு நான் திரும்பி போகணும்.’

சலனமே இல்லாமல் தன் காரிய சித்தியை மட்டும் எண்ணிக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தான். என்ன மனிதன் இவன் என்று சலிப்பாக இருந்தது.

‘இங்க இவ்வளோ பண்ணிட்டு நீ அமெரிக்கா போகமுடியும்னு நினைக்கற பாரு. உனக்கு தன்னம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி ரஞ்சித்’ என்றேன்.

‘நீ மட்டும் தான் இங்க என் பிரச்சனை வேணி. மாணிக்கம் தன்னோட நிலத்தையும் ஃபாக்டரி கட்ட குடுக்க சம்மதிச்சிருக்கான். சண்முகத்துக்கு வர சொத்துல அவனோட பங்கா ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் கொடுத்திருவேன். வேற என்ன பிரச்சனை.’

அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று அவன் முகத்தை பார்த்தபடிக்கு இருந்தேன்.

‘எனக்கு டைம் இல்லை வேணி. மரியாதையா கையெழுத்து போடு’ என்று கற்றை காகிதங்களை மேஜை மேல் வைத்து பேனாவை என்புறம் நீட்டினான்.

நீட்டிய பேனாவை வாங்கி அவன் கழுத்தில் சொறுகிவிடலாமா என்று தோன்றியது.

‘என்னால கையெழுத்தெல்லாம் போட முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்க’ என்றேன்.

‘குழந்தைக்கு சொல்லற மாதிரி படிச்சு படிச்சு சொல்லறேன். நீ என்னடான்னா திமிராவே பதில் சொல்லீட்டு இருக்க. டேய் அதுகளை கொண்டு வாங்கடா’ என்று உள் அறையை நோக்கி குரல் கொடுத்தான்.

உள்ளே இருந்து அடியாட்கள் போல இருந்த இருவர் அஷோக் மற்றும் தினேஷை இழுத்து வந்தனர். இருவரின் முகங்களும் மூடப்பட்டிருந்தன. கைகள் பின் பக்கமாக கட்டப்பட்டிருந்தன.

‘கண்கட்ட அவுத்து விடுங்கடா’ என்றான் ரஞ்சித். தினேஷின் கண்கள் கலங்கியிருந்தன. அஷோக் மட்டும் என்னை தீர்கமாக பார்த்தவண்ணம் நின்றிருந்தான். ரஞ்சித்தை அவன் பார்த்த பார்வையில் அனல் தெறித்தது.

‘இவன் தான உன் ஹீரோ. இவனை உன் கண் முன்னால மேல அனுப்பறேன். அப்பவாவது நீ கையெழுத்து போடுவியான்னு பார்க்கலாம்’ என்று அந்த நவீனமான ரிவால்வரை தன் பேன்ட் பாக்கட்டில் இருந்து வெளியே எடுத்தான்.

மாணிக்கமும் சண்முகமும் விஷயம் பெரியாத இருப்பதை பார்த்து சிறிது பின்னால் நகர்ந்திருந்தனர்.

‘என்ன வேணி. இப்பவாவது பயம் வருதா? நான் சொன்ன மல்டி நேஷனல் கம்பனிக்கு இந்த இடம் ரொம்ப முக்கியம். அதனால் நான் என்ன சொன்னாலும் செய்ய தயாரா இருக்கானுக. ஏன் எனக்கு துப்பாகி குடுத்துவிட்டதே அவனுக தான். இது நீ நினைக்கற மாதிரி உன் நிலத்துக்காக போட்டுக்கற பங்காளி சண்டை இல்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபாரம்.’

என் மூளை ஒரு கனம் ஸ்தம்பித்துதான் போயிற்று. இவன் கூறுவது போல இதில் பெரும் புள்ளியின் கைகள் இணைந்திருந்தால் ரஞ்சித்தால் தான் செய்த தவறுகளில் இருந்து லாவகமாக தப்பித்துக் கொள்ள இயலும். இவனை சற்று கீழாக எடை போட்டது பிசகு.

‘அதிர்ச்சியா இருக்கா வேணி. இப்ப கையெழுத்து போடறியா இல்லை..’ என்ற வாறு அஷோக்கின் கால்களை நோக்கி துப்பாக்கி முனையை பிடித்திருந்தான்.

அதே நேரம் அறையினுள் அரவம் கேட்டது, தெய்வாதீனம் போல, சினிமாவில் கடைசியாக வரும் போலீஸ், இந்த சீனில் முன்னமே வந்திருந்தனர். போலீஸ் என்றால் முழு படையும் இல்லை, டி.ஐ.ஜி சரவணன் மட்டும் என் சின்னைய்யாவுடன் நின்றிருந்தார்.

கடைசியாக எந்த பிரச்சனையும் இன்றி விஷயம் முடியப் போகிறதே! அப்பாடா என்று நான் நினைக்கும் வேளையில் தான் சின்னைய்யாவின் முகம் பார்த்தேன். அதில் நிம்மதிக்கு பதிலாக பயம் அப்பியிருந்தது. சின்னைய்யாவின் விலாபுரத்தில் டி.ஐ.ஜி தன் ரிவால்வரை வைத்து அழுத்தியவண்ணம் நின்றிருந்தார். முகத்தில் ஒரு கோரப் புன்னகையுடன்.

********

அபர்ணா

துப்பாக்கி முனையில் சின்னைய்யாவக் கண்டதும் என்னுள் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் வரண்டு விட்டது. சின்னைய்யா வந்து எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் தான் முடிந்த மட்டும் நேரம் கடத்திக் கொண்டிருந்தேன்.

அது இல்லை என்று ஆன போது, மனதில் கவலை வந்து சூழ்ந்து கொண்டது. இன்னமும் டி.ஐ.ஜி, என் சின்னைய்யாவின் முதுகில் ரிவால்வரை வைத்து அழுத்திய படிக்கே நின்றிருந்தார். இன்னமும் என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது. நின்றிருந்தான்.

சின்னைய்யாவின் முகத்திலும் கவலை, ஆத்திரம், குரோதம் எல்லாமே கொட்டிக் கிடந்தது. திடீரென்று கட்சி மாறிய டி.ஐ.ஜியின் சுயரூபம் சின்னைய்யாவை வெகுவாக பாதித்தது.

“சரவணா...என்னப்பா செய்யற...என்ன இதெல்லாம்? உன்னை நம்பினேனேப்பா...” என்று, தன் முதுகில் ரிவால்வர் அழுந்தியிருந்த சூழலிலும், தன் நண்பன் என்ற முறையில் மன்றாடினார்.

“துரை.... இதெல்லாம் உனக்குப் புரியாது. எவ்வளவு நாள் தான் நானும் கவர்மெண்ட் குடுக்கற கொஞ்ச சம்பளத்தை வச்சே காலம் தள்ளறது? நானும் செட்டில் ஆக வேண்டாமா?” என்றபடிக்கு குரூரமாக சிரித்த டி.ஐ.ஜியை எரித்துவிடும் பார்வையுடன் பார்த்தவண்ணம் நின்றிருந்தேன்.

அத்தனை நேரம் என்னிடம் இருந்த என் துடுக்குப் பேச்சும், அசாதாரண தைரியமும் நிலைமையின் தீவிரத்தைப் பார்த்து சிறிது அச்சப்பட வைத்துவிட்டன.

இங்கிருந்து என்னையும், என்னை சேர்ந்தவர்களையும் உயிருடன் விட்டால் போதும் என்ற மன நிலை சிறிது சிறிதாக ஏற்பட்டிருந்தது.

“என்ன ரஞ்சித், உன் வெளிநாட்டு முதலாளி, அதான்ப்பா அந்த டேனியல் கூப்பர், என்னைப் பத்தி உங்கிட்ட எதுவும் சொல்லலியா?” என்று தன் கூட்டுக் களவானி ரஞ்சித்திடம் வினவினார் டி.ஐ.ஜி.

தன் வெளி நாட்டு முதலாளியின் பெயரை கேட்டபின் தான் ரஞ்சித், டி.ஐ.ஜியை முழுவதுமாக நம்பினான். அதுவரையில் அவன் முகத்தில் இருந்த சிறு கலக்கமும் மறைந்து, சின்ன சிரிப்பொன்ரையும் உதிர்த்தான்.

“சொல்லியிருக்க மாட்டான். ஏன்னா, நான் யார்கிட்டையும் இதைப் பத்தி பேச வேண்டாம்னு தீவிரமா எச்சரிச்சிருந்தேன். என் வேலையும், அது எனக்குத் தர்ற கெளரவமும் முக்கியம் பாரு..” என்றார் டி.ஐ.ஜி.

ரஞ்சித் அப்போதும் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் முகம் தெளிவுற்றுவிட்டது. தான் நினைத்த காரியம் கை கூடப் போகிறது என்ற இறுமாப்பு சூழ்ந்து கொண்டது.

“சரி...சீக்கரம் ஆக வேண்டிய காரியத்தை பாருங்க...திருவிழா முடின்சு வீட்டில இருக்கறவங்க தேடிட்டு வர நேரமாகது “என்று துரிதப்படுத்த வேறு செய்தார் டி.ஐ.ஜி.

முகத்தில் மாறாத புன்னகையுடன் என் பக்கம் திரும்பிய ரஞ்சித், “சோ.. வேணி.... நீ போட்ட ப்ளான் புஸ்ஸ்ஸ்ன்னு போயிருச்சு...உன் சின்னைய்யா போலீஸோட வந்து உன்னை காப்பாத்தி, என்னை அரெஸ்ட் பண்ணுவாருன்னு நீயும் தம்கட்டி பேசிட்டு இருந்த... இப்போ அது இல்லைன்னு ஆகிப் போச்சு.... சீக்கரமா கையெழுத்து போடறியா?” என்றான். ஏற்கனவே வென்று விட்ட களிப்பு ரஞ்சித்தின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ரஞ்சித்...நான் சொல்லறதைக் கேளு...இதல்லாம் நம்மோட நிலம்.... நம்ம பரம்பரை சொத்து.... இதைப் போயி எவனுக்கோ விக்கனும்னு ஏன் இப்படி கெடந்து துடிக்கற...உன் கூட இருக்கறவங்க எல்லாமே காசுக்காக மட்டுமே வந்தவங்க...நாளைக்கு உன்னையும் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டாங்க...”

“என்ன ட்ராக் மாத்தி பேசிப் பாக்கறியா? வேணி எல்லாமே எனக்குத் தெரியும். இங்க எல்லாருமே அவங்க சொந்த ஆதாயத்துக்கு தான் நிக்கறாங்க... இதுல நீ நினைச்சு கூட பார்க்க முடியாத அளவு பெரிய கை எல்லாம் சேர்ந்திருக்கு.... “

“வேணிம்மா.... கையெழுத்து போட்டுருடா...இதெல்லாம் நமக்கு வேணாம் டா... எதுவும் ஆகாம இங்க இருந்து போயிருவோம் டா,...” என்று சின்னைய்யா தன் பங்கிற்கு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“என்ன சின்ன மாமா, இன்னமும் புரிஞ்சுக்காமையே பேசிட்டு இருக்கீங்க...கையெழுத்துப் போட்ட உடனே உங்களை யாரு விடறேன்னு சொன்னா?” என்று கேட்ட ரஞ்சித்தை அதிர்சியுடன் நான், சின்னைய்யா உட்பட அனைவருமே பார்த்தோம்.

எங்கள் முகம் காட்டிய அதிர்ச்சியில் மகிழ்ச்சியுற்ற ரஞ்சித், “பின்ன வெளிய போன உடனே கேஸ்ல போடுவீங்க.... அதனால வேற ப்ளான் இருக்கு” என்று சிரிப்புடனே கூறினான்.

“என்ன புரியலையா? தெளிவா சொல்லவா? நாளைக்கு காலையில பேப்பர்ல மூனாவது பக்கத்துல சின்ன பெட்டி செய்தி ஒன்னு வரும். திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த டாடா சஃபாரி வண்டி எதிர்பாராத விதமாக எதிரில் வந்த சரக்கு லாரியில் மோதியது. வண்டியில் பயணித்த, அபர்ணா (24), அஷோக்(27), தர்மதுரை(52) ஆகிய அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் போலீஸ் விசாரித்து வருகின்றனர்” என்று டீவியில் செய்தி வாசிப்பவன் போலக் கூறிக் கொண்டிருந்தான்.

அவன் சொல்லச் சொல்ல என் முகத்தில் இருந்த ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது. சொல்வது போல நிஜத்தில் இது போல் எல்லாம் செய்ய முடியுமா? செய்துவிட்டு தப்பித்துக் கொள்ள முடியுமா?

என் முகபாவங்களில் இருந்து ரஞ்சித்திற்கு என்ன புரிந்ததோ, “என்ன நான் சொல்லறதெல்லாம் நடக்குமா நடக்காதான்னு நினைக்கறியா வேணி? நீ எடை போட்ட மாதிரி இது சின்ன சட்ட சிக்கல் இல்லை.”

“இதுல இருந்துதெல்லாம் நீ அவ்வளவு சீக்கரமா தப்பிக்க முடியாது ரஞ்சித்”

“ஏன் முடியாது…சின்னதா உங்க மூனு பேர்த்துக்கும் மயக்க ஊசி போட்டு கார்ல உக்காத்தி வச்சிரலாம்….லாரிய விட்டு ஏத்த சொல்லறப்போ, டிரைவரை குதிக்க சொல்லிரலாம்….ஆக்ஸிடெண்ட் கேஸ்க்கு மேக்ஸிமம் 7 வருஷம்…அதுக்கெல்லாம் உள்ள போக ஆள் தயாரா இருக்கு தெரியுமா?”

ரஞ்சித் பேசுவதை கேட்க கேட்க வயிற்றில் புளியைக் கரைத்தது.

“ஹ ஹ....உலகம் முழுவதும் தொழில் பண்ணற மல்டி நேஷனல் கம்பெனியோட ப்ளான் வேணி. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை ஹேண்டில் பண்ணற ஆள் பலம், பண பலம் எல்லாமே இருக்கு...இன்னைக்கு உங்க டி.ஐ.ஜிய விலைக்கு வாங்குன மாதிரி இன்னும் எவ்வளவு பேரை வேணூம்னானுல் விலைக்கு வாங்கி தன் காரியத்தை சாதிச்சுக்குவாங்க”

“ரஞ்சித் தம்பி சொல்லறது கரெக்ட் அபர்ணா, பணத்தால அடிக்க வேண்டிய இடத்தில பணம், மசியலைன்னா அடுத்த நடவடிக்கைன்னு இது பெரிய லெவல் என்ஸிக்யூஷன்.” என்றார் டி.ஐ.ஜி என் சின்னாய்யாவின் முதுகில் ரிவால்வரை அழுத்திக் கொண்டே.

“இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை வேணி...நீ மட்டும் முழு மனசோட நிலத்தை விக்க சம்மதிச்சு, உன் குடும்பத்தையும் சம்மதிக்க வை... உன் நிலத்துக்கு பத்து பர்சென்ட் அதிகமா பணம் நான் வாங்கித் தர்ரேன்.. நீ உன் காதலனை கல்யாணம் பண்ணிட்டு ஹேப்பியா செட்டில் ஆகலாம்.. என்ன?”

“வேணி, குடுத்தரலாம் டா.... அவங்க தர்ற பணத்தில வேற எங்கையாவது நிலம் வாங்கி விவசாயம் பண்ணலாம் டா... “ என்று சின்னைய்யா தன் முதுகில் ரிவால்வர் இருந்தும் என்னிடம் வாதாடினார்.

“இவன் சொல்லறதை நம்பறீங்களா சின்னைய்யா? கையெழுத்து போட்டாலுல் நம்மளை உயிரோட விடற எண்ணம் இவனுக்கு இல்லை சின்னைய்யா?”

“வேணிம்மா….”

“நீங்க ஒத்துகிடலாம் சின்னைய்யா..நான் என் நிலத்தை யாருக்கும் குடுக்க மாட்டேன்…. என்னை கொன்னே போட்டாலும் பரவாயில்லை..” என்றேன் அதே தீவிரத்துடன். சின்னைய்யா என்னை பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“இத்தனை தடவை சொல்லறேன் ஒத்துக்கறாளான்னு பாரேன்..செத்து தொலை டீ.. ” என்று ஆத்திரத்துடன் ரஞ்சித் என்னை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான்.

“இரு தம்பி ரஞ்சித்...ஏன் அவசரப்படற? உனக்கு நான் இன்னொரு நல்ல ப்ளான் சொல்லறேன்..அபர்ணா உனக்கு முறை பொண்ணு தானே.பேசாம அவளை கல்யாணம் பண்ணிக்க..அப்பறமா சொத்து எல்லாம் உனக்குத் தானே” என்று டி.ஐ.ஜி தன் மூளையை கசக்கி ஒரு தீர்வு உருவாக்கியிருந்தார்.

“சார்...அதெல்லாம் நிட்சயம் வரை வந்து நின்னு போச்சு..மறுபடியும் எதுக்கு அந்த பேச்செல்லாம் இப்போ.” என்றான் ரஞ்சித் அதே ஆத்திரத்துடன்.

“நான் இன்னும் சொல்லி முடிக்கவேயில்லையே ரஞ்சித்.. என்னை கொஞ்சம் பேச விடு.” என்று தன் கரகர குரலில் மேலும் தொடர்ந்தார்.

“அபர்ணாவை கல்யாணம் பண்ணிகிட்டா, அவ புருஷங்கற பேர்ல உனக்கு சம உரிமை. உன் மனைவி இறந்துட்டா, சொத்து உனக்கு தான். அப்பறம் நீ வைக்கறது தான் சட்டம்... என்ன சொல்லற?” என்றார்.

“எதுக்கு சுத்தி வளைச்சு மூக்கை தொடனும் சார். இந்த குடும்பத்தில் யாரும் உயிரோட இல்லைன்னாலே, சொத்து எனக்கு வந்து சேர்ந்திரும்.”

“அதும் கரெக்ட் தான். இருந்தாலும், சின்ன பையன், மாமன் மக வேற தளதளன்னு இருக்கா...ஒரு வேளை ஆசை படுவியோன்னு நினைச்சேன்.. இந்த பொண்ணை பார்த்தா, இந்த வயசில எனக்கே ஆசை வருது... உனக்கு வராதா?” என்ற டி.ஐ.ஜியை கண்ணில் வெறியுடன் சின்னைய்யா பார்த்தார்.

இதற்குள் மயக்க நிலையில் இருந்த அஷோக்கிற்கு, நினைவு வந்திருந்தது. டி.ஐ.ஜியின் பேச்சைக் கேட்டு கைகள் கட்டியிருந்த போதிலும் திமிரிக் கொண்டு நின்றான். அவனை அடக்க, சண்முகமும், மாணிக்கமும் திணறியபடிக்கு இருந்தனர்.

டி.ஐ.ஜியின் புதிய யோசனை, ரஞ்சித்தின் மூளையில் எவ்வளவு தூரம் பதிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவன் முகம் கண நேரத்தில் மாறுதல் காட்டியது. அவ்வளவு நேரம் இருந்த பணத்தாசை மறைந்து, புதிதாக கண்களில் காமக் கனல் வீசியது.

அதுவரையில் ஒரு அடி கூட பின்னால் நகராத நான், அவன் முக மாறுதல்களைக் கண்டு தன்னிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தேன்.

“எப்படியும் சாகப்போறவ, ஆசை தீர அனுபவிச்சுட்டு அப்பறமா அனுப்பிவை..அதனால யாருக்கு என்ன நஷ்டம் ரஞ்சித்...நீ முடிச்சிட்டு முடிஞ்சா எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைச்சா..... நானும்....ஹி..ஹி..” என்று கூறவும், கைப்பிடியில் இருந்து சின்னைய்யா திரும்பி டி.ஐ.ஜி முகத்தில் காரி துப்பியிருந்தார்.

“என்ன திமிர் இருந்தா.... என் பொண்ணை...நீ....கிழட்டு நாயே..” என்று பற்களை நர நர வென கடித்தார். கைகள் மட்டும் இறுக்க பிணைக்கப் படாமல் இருந்தால், டி.ஐ.ஜியின் குரல்வளையை கடித்து துப்பியிருப்பார்.

“ம்ம்ம்ம். கிழட்டு நாயா? இந்த கிழட்டு நாய் என்ன பண்ணுதுன்னு பாக்கறியா?” என்றவாரே சின்னைய்யாவை தூணில் கட்டிய டி.ஐ.ஜி, கைப்பேசியை எடுத்து காமிராவை ஆன் செய்தவண்ணம், “ம்ம்ம்..சீக்கரம் ரஞ்சித் ஆரம்பி... சீக்கரம்” என்று வக்கிரம் காட்டினான்.

டி.ஐ.ஜியின் தூண்டுதலில், ரஞ்சித்தின் முகம் அதே கோரத்துடன் என் மீது பாய்ந்தது. பலம் கொண்ட மட்டும் அடித்தும், கடித்தும், நகங்களை வைத்து கிழித்தும் பார்த்தேன்.

நடந்த சம்பாஷணையிலேயே நான் பாதி செத்து தான் போயிருந்தேன். என் பலம் ரஞ்சித்தின் மிருக பலத்துடன் கொஞ்சம் கூட போட்டியிட முடியவில்லை.

கண்கள் சொருகிக் கொண்டு இதோ மயக்கம் வந்துவிடும். அதன் பின்னர் நிரந்தர மயக்கம் தான். எப்போதுமே எவரையும் இனிமேல் நான் கண் கொண்டு காணப் போவதில்லை என்று நினைத்தேன்.

அஷோக்கின் முகம் கண்களில் முழுவதும் நிறைந்தது. தொண்டையை அடைத்துக் கொண்டு கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் இரண்டு சம்பவங்கள் நடந்தன.

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் திண்டாடிக் கொண்டிருந்த சண்முகம், அஷோக்கை பிடித்திருந்த கைக்களை தளர்த்திக் கொண்டான். அத்துடன் நில்லாமல், மறுகையை பிடித்திருந்த மாணிக்கத்தின் கால்களையும் பலம் கொண்ட மட்டும் மிதித்து தள்ளி விட்டான்.

இந்த சின்ன சந்தர்ப்பத்தை உபயோகித்த அஷோக், என் மீது படர்ந்திருந்த ரஞ்சித்தின் வயிற்றில் எட்டி உதைத்தான். மறுபக்கம் உருண்டு விழுந்த ரஞ்சித்தின் கழுத்தின் மீது, கட்டப்பட்டிருந்த கைகளை மாலை போலக் கட்டி, பலம் கொண்ட மட்டும் நெறித்துக் கொண்டிருந்தான்.

எனக்கு கிடைத்த சின்ன இடைவெளியில் நான் எழுந்து, ரஞ்சித்தை அடித்துக் கொண்டிருந்த அஷோக்கின் வாய்கட்டை கழற்றியிருந்தேன்.

இது அத்தனையையும் படம் பிடித்துக் கொண்டிருந்த, டி.ஐ.ஜி, அஷோக்கின் அருகில் நின்றிருந்த என் கையில் அந்த பொருளை திணித்த போது, அரண்டு தான் போனேன்.

அது டி.ஐ.ஜியின் ரிவால்வர். ஒரு கணம் என்ன நடக்கிறது என்று புரிவதற்குள், டி.ஐ.ஜி, தன் கைப்பேசியை எடுத்து உள்ளே வைத்தபடிக்கு அஷோக்கை எழுப்பி கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
 
Aruna Kathir

✍️
Writer
இந்த செய்கை, எனக்கு, அஷோக்கிற்கு, சின்னைய்யாவிற்கு மட்டும் அல்லாமல், ரஞ்சித்திற்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

“சார்...என்ன செய்யறீங்க?” என்ற ரஞ்சித்தின் அலறலை மதிக்காமல் அருகில் இருந்த தூணில் ரஞ்சித்தை அவன் சட்டையைக் கொண்டே கட்டிப் போட்டார்.

“சுடு அபர்ணா... உன் அப்பாவைக் கொன்னவன், உங்க கோனாரை கொன்னவன், உன் நிலத்தை அழிக்கப் பார்த்தவன்....இவனை நீ தராளமா சுடலாம்...” என்று என்னைப் பார்த்துக் கூறவும், இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது.

சொன்னதோடு அல்லாமல், சின்னைய்யா இருந்த இடத்திற்கு சென்று அவர் கை கட்டுகளை அவிழ்த்துவிடத் தொடங்கினார்.

“மன்னிச்சிரு துரை. நீயும் நான் பேசினதை மனசில வச்சுக்காத அபர்ணா.. நீ என் பொண்ணு மாதிரி.. உன்ன நான் என்னைக்குமே தப்பான எண்ணத்தில பார்க்க மாட்டேன். எனக்கு வேற வழி தெரியலை...” என்று தான் சற்று முன் செய்த செய்கைக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தார்.

“நம்ம கிட்ட பெருசா எந்த ஆதாரமும் இல்லை துரை. வெறும் கடத்தல் கேஸ் கோர்டில வலுவா நிக்காது. அதான் ட்க்குன்னு இப்படி ட்ராக் மாறி பேசி அவனை அபர்ணாவை கெடுக்கறது மாதிரி தூண்டிடேன். அவனும் என்னை நம்பி, நான் சொன்னதை போல செஞ்சேன். இந்த வீடியோ ஆதாரம் ஒன்னு போதும், எந்த கோர்ட் போனாலும் நாம ஜெயிக்க.”

“நீ என்ன அபர்ணா கையில துப்பாக்கி வைச்சுட்டு நின்னுட்டே இருக்க... நீ சுடறியா? நான் சுடட்டுமா?” என்றார் டி.ஐ.ஜி.

“நீ என்னை இன்னும் நம்பலைன்னா,உன் மனசு திருப்தி ஆகலைன்னா, என்னை பளார்னு ரெண்டு அடி கூட வைச்சுக்கோ ஏண்டா நாயே அப்படி பேசினன்னு” என்று பேசி என்னை சகஜமாக்கினார்.

நிமிட நேரத்தில் நடந்த மாறுதல்களால் குழம்பிப் போயிருந்த சண்முகமும், மாணிக்கமும் செய்வதறியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். கை கட்டுகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், சின்னைய்யா வேகமாக ரஞ்சித்தின் அருகில் சென்றவர், அவன் முகத்திலும், வயிற்றிலும் மாறி மாறி அடிக்கத் தொடங்கினார்.

“யார் பொண்ணை தொடப் பாக்கற...நாயே... உனக்கு சோறு போட்டு படிக்க வச்ச பாவத்தை தவர எதுவும் தெரியாத என் அண்ணனை கொன்னிருக்கியே...உன்னை அடிச்சே கொல்லாம விடமாட்டேன்.” என்று ஆத்திரம் தீர அடித்துக் கொண்டிருந்தார்.

அஷோக் சின்னைய்யாவை சமாதனாப்படுத்த சென்றவன், தன் பங்கிற்கு ரஞ்சித்தின் முகத்தில் குத்தத் துவங்கினான்.

“என்ன அபர்ணா.. சுடமாட்டியா? அந்த ரிவால்வரை எங்கிட்ட குடு” என்று கையில் இருந்து துப்பாக்கியை வாங்கிய டி.ஐ.ஜி, ஒரு சின்ன மூச்சை இழுத்துக் கொண்டு, ரஞ்சித்தின் காலில் சுட்டார்.

சீறிப்பாய்ந்த துப்பாக்கியின் தோட்டா, சரியாக ரஞ்சித்தின் முழங்காலை பதம் பார்த்தது. அம்மா என்ற பெரிய அலரலை உதிர்த்தான்.

“என்ன ரஞ்சித்? என்ன பாக்கற? இதுக்கெல்லாம் என்ன தண்டனைன்னு எல்லாம் வீணா யோசிச்சு உன் கம்பியூட்டர் மூளையை வேஸ்ட் பண்ணாத. ஒரு பெண் தன் கற்பு பறிபோகும் நிலையில் கொலை செய்தால் அது தண்டனை ஆகாதுன்னு இந்திய சட்டம் சொல்லுது. அதுவே ஒரு போலீஸ் சுட்டாருன்னு வைச்சுக்கோ, கேஸ் கூட போட வேண்டாம் தெரியுமா? எனக்கு பதவி, பாராட்டெல்லாம் கூட கிடைக்க சான்ஸ் இருக்கு ரஞ்சித்... “ என்றவரை வலியில் முனங்கியபடிக்கே ரஞ்சித் ஏறிட்டான்.

“கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் வரும். போய் கால்ல இருக்கற குண்டை எடுத்துட்டு நீயா வந்து சரண்டர் ஆகிரு. சரியா..”என்றார்.

“எவ்வளவு வருஷம் போடுவாங்க கற்பழிப்பு கேஸுக்கு?” என்றாள் அபர்ணா.

“சுமாரா ரெட்டை ஆயுள் தண்டனை…அதாவது 14 வருஷம் நான் பெயிலபிள் அஃபென்ஸ்”

“கடத்தல் கேஸுக்கு?”

“அதுக்கு கம்மி தான் அபர்ணா..மூனோ நாலோ கிடைக்கும்… பெயில் கூட கிடைக்கும்..”

“அப்போ ரஞ்சித் பேர்லையும் மாணிக்கம் பேர்லையும் கடத்தல் கேஸ் மட்டும் போடுங்க” என்று சொன்ன அபர்ணாவை எல்லோருமே விசித்திரமாகவே பார்த்தனர்.

“அபர்ணா…. அது வந்து…”

“இல்லை சார்…நான் இவங்களை மன்னிக்கலை… மன்னிக்கவும் மாட்டேன்… ஜெயில்ல 14 வருஷம் குடுக்கற தண்டணைய நான் குடுக்கறேன்….. வேற விதத்தில….”

“புரியலைம்மா…”

“கடத்தல் கேஸ் போடுங்க….” என்று தீர்கமாகக் கூறியவள், அடிபட்டு கால்களில் ரத்தம் சொட்ட படுத்திருந்த ரஞ்சித் அருகில் சென்றாள்.

“உன் மேல கடத்தல் கேஸ் மட்டும் தான் போடப்போறேன்….. அதுக்கு நீ பெயில் அப்ளை பண்ணக்கூடாது. 5 வருஷம் தண்டனை முடிஞ்சு இங்கேயே திரும்பி வரனும்….”

“சரி…வேணி..நீ என்ன சொன்னாலும் கேட்கறேன் வேணி….” என்றான் வலியில் முனங்கலுடன்.

“இரு…..நான் இன்னும் முடிக்கலை. வெறும் ஜெயில் தண்டனை மட்டும் உனக்கு சரியானது இல்லை. எந்த விவசாயம் வேணாம்னு அலறி வெளி நாடு போனானோ, அதே விவசாயத்தை தன் வாழ் நாள் முழுக்க செய்யனும்.”

“நீ இதுக்கு ஒத்துகிட்டா, உன் மேல நாங்க கேஸ் போட மாட்டோம். இல்லைன்னா கேஸ் போட்டா, உன் பாஸ்போர்ட் சீஸ் பண்ணுவாங்க. உன் எம்.என்.சி கம்பெனி, உன் கழுத்தை புடிச்சு வெளிய துரத்தும்..... அப்பறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், உன் மேல கேஸ் இருக்கறதால, உன்னால இனிமே அமெரிக்காவெல்லாம் போக முடியாது. ஏன் திண்டுக்கல் தாண்டி கூட போக முடியாது. அதனால் என்ன பண்ணற, ஜெயிலுக்கு போயிட்டு வந்தப்பறமா, மரியாதையா சின்னைய்யா கூட சேர்ந்து விவசாயம் பாரு..சரியா” என்ற என்னை எந்த உணர்ச்சியும் இல்லாமல் ரஞ்சித் தலையை ஆட்டினான்.

“எந்த குதர்கமான எண்ணமும் வைச்சுக்காத…. இந்த வீடியோ காப்பி எங்க ஒவ்வொருதர்கிட்டையும் இருக்கும்…மறந்திடாத…”என்றேன் நெருப்பு கக்கும் விழிகளுடன்.

“இன்னொரு வேலையும் இருக்கு, தோட்டதுல என் அப்பாவுக்கு சமாதி கட்டுவோம். அதை தினமும் சுத்தம் பண்ணி விளக்கு போட்டு பொறுப்பா பார்த்துக்கனும். அப்பறம், நம்ம தொழுவத்தை பராமறிக்கற பொறுப்பும் உனக்கு தான்.” என்றேன்.

“எங்க அந்த ரெண்டு கடத்தல் குண்டனுக...டேய் இங்க வாங்க” என்று டி.ஐ.ஜியின் கூவலுக்கு, சண்முகமும், மாணிக்கமும் மெதுவாக நடந்து அருகில் வந்தனர்.

“மாணிக்கம், நீ ஜெயில்ல கம்பி எண்ண போற இந்த ஐஞ்சு வருஷமும், அதுக்கு அப்பறம் ஒரு 99 வருஷமும் உன் தோட்டம் எனக்குன்னு குத்தகைக்கு எழுதி கையெழுத்து போடு…. நீ ஜெயில்ல இருந்து வர்ற வரைக்கும் உன் குத்தகை தொகை கிராமத்துல இருக்கற குளம் தூர்வாற, இல்லாதவங்களுக்கு நிலத்தை உழன்னு நல்லவிதமா செலவு செய்வோம்…அடுத்த 99 வருஷத்துக்கும் உன் பணம் உனக்கு சரியா வந்து சேரும்..”

“அது வந்து…….வேணி….. பல ஏக்கர் நிலம்….”

“நிலத்தை குடுக்கறையா இல்லை கொலை கேஸ்ல ஆயுசுக்கும் கம்பி எண்ணனுமான்னு நீயே முடிவு பண்ணிக்க…ஒரு நிமிஷம் டைம் தர்றேன்”

“இல்லை….இல்லை…தர்றேன்…தர்றேன்….. “ என்றான் மாணிக்கம்.

“சரி…அப்பறம் மாணிக்கம் இந்த பிரச்சனை இத்தோட முடியனும்னு நினைக்கறேன். மரத்துக்கீழ, கருப்பன் கோவில் கிட்டன்னு நின்னு எதாவது ஏடாகூடமா ரெண்டு பேரும் ப்ளான் பண்ணீங்க.... தொலைஞ்சீங்க...” என்றார் மிரட்டலுடன்.

“ஏப்பா சண்முகம் உனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கா உன் அப்பா யாருன்னு? வேணூம்னா ஒரு பண்ணலாம், உங்க செத்துப் போன அண்ணனை அடாப்ஸி பண்ண ஃபோட்டோஸ் இருக்கு, அதே மாதிரி உனக்கும் பண்ணி ரெண்டு ஃபோட்டோவும் மேட்சு ஆகுதான்னு பார்க்கலாமா? என்ன சொல்லற?” என டி.ஐ.ஜி கேட்கவும் சண்முகம் அரண்டேவிட்டான்.

“சார்..சண்முகத்துகிட்ட அப்படி ஒரு கதையை சொல்ல சொல்லி ரஞ்சித் தான் சொன்னான் சார். அந்த வீட்டில எங்க வேலை எல்லாம் செய்ய ஒரு ஆள் தேவைபட்டுச்சு சார். கருப்பனும் அந்த டிரைவர் முத்துவேல் பக்கத்துல கூட போக முடியலை சார்.” என்ற மாணிக்கம் நிறுத்தாமல் தொடர்ந்தான்,

“சின்னவர் பத்தி தப்பா ஒரு வார்த்தை சொன்னதுக்கு அந்த டிரைவர் ஸ்பானரை கழட்டி அடிக்க வந்துட்டான் சார். அதான் சண்முகத்துக்கு கிட்ட அப்படி ஒரு கதை சொன்னா நாங்க சொல்லற மாதிரி நடந்துக்குவான்னு ரஞ்சித் சொன்னாரு சார்.” என்று ஒரு வாறு மாணிக்கம் தெளிவு படுத்தினான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் எதுவும் பேசவில்லை. தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு முகம் முழுவதும் அப்பியிருந்தது. நெடுஞ்சானாக சின்னைய்யாவில் காலில் விழுந்தான்.

“சரி துரை, நீங்க அபர்ணாவையும் அஷோக்கையும் கூட்டிட்டு கிளம்புங்க... ஆம்புலன்ஸ் வந்ததும் இந்த ரஞ்சித் பயலை ஏத்தி விட்டுட்டு நான் வர்றேன்”

“நீ செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை சரவணா..”

“நன்றி எல்லாம் பெரிய வார்த்தை துரை. நீதி தேவதை வலது கையில் தராசு இருக்கும் பார்த்திருப்ப? இடது கையில் என்ன இருக்கும்னு பார்த்திருக்கியா?” என்றார் டி.ஐ.ஜி.

சின்னைய்யா இல்லை என்று தலை ஆட்டினார்.

“இடது கையில் வாள் இருக்கும். நீதி வழங்க வாளையும் யூஸ் பண்ணூடான்னு சட்டமே இண்டைரக்டா சொல்லற மாதிரி இருக்கும் எனக்கு. என் வழிகள் சட்டத்தின் படி தப்பானதா இருக்கலாம், ஆனா என் மனோதர்மபடி நியாயமானது. என் மனசு எது கரெக்டுன்னு சொல்லுதோ அதை கண்டிப்பா நான் செய்வேன்.”

இந்த பேச்சுக்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த போதே, அஷோக் சென்று தினேஷை எழுப்பி வந்து கூடத்தில் நிறுத்தியிருந்தான்.

அப்போதும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல், “அப்ப அந்த மினிஸ்டர் பையன் சாவு ஆக்ஸிடண்ட் இல்லையா சார்... திட்டமிட்டா செஞ்சீங்க?” என்று தன் துடுக்குக் கேள்வியை கேட்டான்.

“அதுக்கு பதில் உனக்கு நான் தனியா சொல்லறேன் தம்பி.. சரியா... இவ்வளவு நேரம் மயக்கமா இருந்தீங்க...திடீர்னு எந்திரிச்சு, நான் யாரு, எங்கே இருக்கேன்னு வழக்கமா கேட்காம, ஏன் இந்த கேள்வியெல்லாம் கேட்கற தினேஷ்?”

“அதுவா சார்....அது..அப்பவே மயக்கம் எல்லாம் தெளிஞ்சிருச்சு, எங்க எந்திரிச்சா ஃபைட்ல எனக்கும் ரெண்டு அடிவிழுமோன்னு நினைச்சு கண்ணை மூடி அப்படியே படுத்திருந்தேன்” என்று கூறியதைக் கேட்டு, சின்னைய்யா உட்பட அனைவருமே சிரித்தோம்.

“சரி துரை..கிளம்புங்க...”

“நாளைக்கு உங்களுக்கு பெரிய விருந்து ஒன்னு ஏற்பாடு செய்யறேன் சரவணன்..அவசியம் வரனும்...”

“அதுக்கென்ன, கல்யாண விருந்தாவே போடுங்க... ஃபுல் போலீஸ் ஃபோர்சோட பந்தோபஸ்துக்கு வந்திர்றேன்..”

“அபர்ணா பாவம் , நிலத்தை காப்பாத்த உசிரை குடுத்து போராடுது.. அப்படி விளைவிச்ச நெல்லை இந்த ஆள் ஒரே நாள்ல, தன் டிபார்ட்மெண்ட் போலீஸிக்கு எல்லாம் சோறு போட்டு அழிக்கப் பார்க்கறாரு...ஒரு கிலோ அரிசி என்ன விலை விக்குது தெரியுமா?” என்று தினேஷ் சீரியஸாகக் கூறியது கேட்டு டி.ஐ.ஜியுமே முறுவலித்தார்.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அஷோக், அபர்ணா திருமணம் காண அனைவரும் வந்து, தம்பதிகளை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.முற்றும்.சுபம்.

*****************

தன் மண்ணை நேசிக்கும், மற்ற விவாசாயிகளுக்காக சிந்திக்கும் இந்த நெற்காட்டு ராஜகுமாரி போன்ற சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் நாம் இன்னமும் பணத்திற்கு பதிலாக காய்கறிகளை உண்ண முடிகிறது.

இன்று இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 90 சதவித மக்கள் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்கள் காலத்திற்குப் பின் விவசாயம் என்ன ஆகும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

சிந்திப்பீர்! விவசாயத்தைக் காப்பீர்!**********************

*************

தளத்தில் கருத்துக்கள் பகிர்ந்து புத்தகப்பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்.

விவரங்களுக்கு:

வாசகர்களுக்குப் பரிசு
 
kothaisuresh

Active member
Member
அருமை. நான் கூட அத்தையை சந்தேகப் பட்டேன்.பாவம். அபர்ணா சூப்பர் . ரஞ்சித் பணப்பேய் அவனுக்கு நல்ல தண்டனை கொடுத்தால். எந்த கிராமத்தை வெறுத்து ஒதுக்கி போனானோ அங்கேயே கடைசிவரை சூப்பர்👌👌👌👌. வாழ்த்துக்கள் அருணா.
 
Babu Krishnaswami

New member
Member
வித்தியாசமான கதை.நாட்டுக்கு தேவையான கருத்து.எல்லோரும் சுயநலமாக இருக்கிற காலத்தில் இந்த கருத்துள்ள கதை ரொம்ப அவசியம்.திடீரென முடித்துவிட்டீர்கள்.கல்யாணம் பற்றியும் எழுதியிருக்கலாம்
 
Madhu

New member
Member
Arumaiyana kadhai.. kramathu vaasam apdiye irukiradhu.. viruvirupaga kondu Sandra vidham migavum arumai.. vazhukal.. ashok and aparna enga settle anaga nu solave ilaye sis..
 
நாமளே எல்லாத்தையும் தலையில் தூக்கி வச்சு சுத்தனும்னு இல்ல தான் ஆனா நம்ம அந்த விஷயத்துக்கு எவ்ளோ முக்கியம் ன்னு தெரிஞ்சா கண்டிப்பா நம்மளால எனக்கென்னனு போக முடியாது. அப்படித்தான் என் கண்ணுக்கு அபர்ணா தெரிஞ்சா.. இந்த கதையை நான் சில ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கிறேன். கதை பெயரோ ஆசிரியர் பெயரோ நினைவில் இல்லை. ஆனால் 4 சம்பவம் நினைவில் நன்றாகவே இருந்தது.

1. கிளாம்பில் மாட்டும் மாடு
2. கன்றுக்குட்டி கோனார் கொலை
3.கூர்கில் நடக்கும் சம்பவங்கள்
4. டி.ஐ.ஜியின் டிராமா

கதையில் மாடு கிளாம்பில் மாட்டும் பகுதி வரும் வரை எங்கோ படித்த நினைவு இருந்ததே தவிர இது தான் என்ற தெளிவு இல்லை. ஆனால் அந்த காட்சியில் இது படித்த நாவல் என்று பொறிதட்டியத்உ. பல கதைகள் வாசிக்கும்போதும் எனக்கு இயர்கள் மறந்து போனாலும் ஏனோ சம்பவங்கள், மனதை வருடும், பாதிக்கும் காட்சிகள் அப்படியே பதிந்து விடுக்கும் அவ்வகையில் நெற்காட்டு ராஜகுமாரி மனதில் பதிந்து போனவள்( பெயரும் மறந்து போனவள் எனக்கு அவ்வ்).

அவரவர் நின்று பேசுவது போன்ற நடையில் கதை அழகாக இருந்தது. கதையில் நல்ல முதிர்ச்சியான மனநிலை கொண்ட நாயகியும், அனலிட்டிகல் மைண்ட் கொண்ட நாயகனும் அருமை. ஆனாலும் அவன் குடிச்சிட்டு பேசுனதுக்கு ஒரு தண்டனையும் இல்லாம போச்சேன்னு நாயகி முன்னேற்ற கழகம் சார்பா எழுத்தாளரை நான் இந்த இடத்துல பொங்கல் வைக்கிறேன். அவ்ளோ பேசிட்டு கூலா அவ வீட்டுக்கே வர்றான். சரி அதுக்கப்பறம் அவளோட நிலையை புரிஞ்சு ஆறுதல் சொன்னதால போகட்டும் ன்னு விட்டுடலாம்.

தினேஷ் கதாபாத்திரம் இன்றைய விளையாட்டு எண்ணம் கொண்ட இளைஞர்களின் பிரதிபலிப்பு. ஸ்வாப்னா போல தோழிகள் பேச்சு கேட்டு கெட்டுப்போகும் பிள்ளைகள் ஏராளம். அவளை அழகாக அபர்ணா வழி நடத்திய விதம் அருமை.

கதையோட ட்விஸ்ட், டர்ன்ஸ் எல்லாமே செம. விவசாய மக்களோட கஷ்டத்தையும், காசுங்கற பேய் பிடிச்சா வளர்த்தவர் மேல நன்றி கூட இல்லாம கொல்லவும் துணியும் மக்கள் இருக்காங்கனு அழகா கதை எடுத்து காட்டிச்சு.

அருமையான படைப்பு. முதல் கதைன்னு நம்ப முடியல. அவளோ முதிர்ச்சியான எழுத்துக்கள். சிந்தனைகள். இயல்பான காதல் கதை போல அல்லாத ஒரு காதல் கதை. வாழ்த்துக்கள் அருணா டியர்.
 
Maheswari

New member
Member
இந்த செய்கை, எனக்கு, அஷோக்கிற்கு, சின்னைய்யாவிற்கு மட்டும் அல்லாமல், ரஞ்சித்திற்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

“சார்...என்ன செய்யறீங்க?” என்ற ரஞ்சித்தின் அலறலை மதிக்காமல் அருகில் இருந்த தூணில் ரஞ்சித்தை அவன் சட்டையைக் கொண்டே கட்டிப் போட்டார்.

“சுடு அபர்ணா... உன் அப்பாவைக் கொன்னவன், உங்க கோனாரை கொன்னவன், உன் நிலத்தை அழிக்கப் பார்த்தவன்....இவனை நீ தராளமா சுடலாம்...” என்று என்னைப் பார்த்துக் கூறவும், இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது.

சொன்னதோடு அல்லாமல், சின்னைய்யா இருந்த இடத்திற்கு சென்று அவர் கை கட்டுகளை அவிழ்த்துவிடத் தொடங்கினார்.

“மன்னிச்சிரு துரை. நீயும் நான் பேசினதை மனசில வச்சுக்காத அபர்ணா.. நீ என் பொண்ணு மாதிரி.. உன்ன நான் என்னைக்குமே தப்பான எண்ணத்தில பார்க்க மாட்டேன். எனக்கு வேற வழி தெரியலை...” என்று தான் சற்று முன் செய்த செய்கைக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தார்.

“நம்ம கிட்ட பெருசா எந்த ஆதாரமும் இல்லை துரை. வெறும் கடத்தல் கேஸ் கோர்டில வலுவா நிக்காது. அதான் ட்க்குன்னு இப்படி ட்ராக் மாறி பேசி அவனை அபர்ணாவை கெடுக்கறது மாதிரி தூண்டிடேன். அவனும் என்னை நம்பி, நான் சொன்னதை போல செஞ்சேன். இந்த வீடியோ ஆதாரம் ஒன்னு போதும், எந்த கோர்ட் போனாலும் நாம ஜெயிக்க.”

“நீ என்ன அபர்ணா கையில துப்பாக்கி வைச்சுட்டு நின்னுட்டே இருக்க... நீ சுடறியா? நான் சுடட்டுமா?” என்றார் டி.ஐ.ஜி.

“நீ என்னை இன்னும் நம்பலைன்னா,உன் மனசு திருப்தி ஆகலைன்னா, என்னை பளார்னு ரெண்டு அடி கூட வைச்சுக்கோ ஏண்டா நாயே அப்படி பேசினன்னு” என்று பேசி என்னை சகஜமாக்கினார்.

நிமிட நேரத்தில் நடந்த மாறுதல்களால் குழம்பிப் போயிருந்த சண்முகமும், மாணிக்கமும் செய்வதறியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். கை கட்டுகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், சின்னைய்யா வேகமாக ரஞ்சித்தின் அருகில் சென்றவர், அவன் முகத்திலும், வயிற்றிலும் மாறி மாறி அடிக்கத் தொடங்கினார்.

“யார் பொண்ணை தொடப் பாக்கற...நாயே... உனக்கு சோறு போட்டு படிக்க வச்ச பாவத்தை தவர எதுவும் தெரியாத என் அண்ணனை கொன்னிருக்கியே...உன்னை அடிச்சே கொல்லாம விடமாட்டேன்.” என்று ஆத்திரம் தீர அடித்துக் கொண்டிருந்தார்.

அஷோக் சின்னைய்யாவை சமாதனாப்படுத்த சென்றவன், தன் பங்கிற்கு ரஞ்சித்தின் முகத்தில் குத்தத் துவங்கினான்.

“என்ன அபர்ணா.. சுடமாட்டியா? அந்த ரிவால்வரை எங்கிட்ட குடு” என்று கையில் இருந்து துப்பாக்கியை வாங்கிய டி.ஐ.ஜி, ஒரு சின்ன மூச்சை இழுத்துக் கொண்டு, ரஞ்சித்தின் காலில் சுட்டார்.

சீறிப்பாய்ந்த துப்பாக்கியின் தோட்டா, சரியாக ரஞ்சித்தின் முழங்காலை பதம் பார்த்தது. அம்மா என்ற பெரிய அலரலை உதிர்த்தான்.

“என்ன ரஞ்சித்? என்ன பாக்கற? இதுக்கெல்லாம் என்ன தண்டனைன்னு எல்லாம் வீணா யோசிச்சு உன் கம்பியூட்டர் மூளையை வேஸ்ட் பண்ணாத. ஒரு பெண் தன் கற்பு பறிபோகும் நிலையில் கொலை செய்தால் அது தண்டனை ஆகாதுன்னு இந்திய சட்டம் சொல்லுது. அதுவே ஒரு போலீஸ் சுட்டாருன்னு வைச்சுக்கோ, கேஸ் கூட போட வேண்டாம் தெரியுமா? எனக்கு பதவி, பாராட்டெல்லாம் கூட கிடைக்க சான்ஸ் இருக்கு ரஞ்சித்... “ என்றவரை வலியில் முனங்கியபடிக்கே ரஞ்சித் ஏறிட்டான்.

“கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் வரும். போய் கால்ல இருக்கற குண்டை எடுத்துட்டு நீயா வந்து சரண்டர் ஆகிரு. சரியா..”என்றார்.

“எவ்வளவு வருஷம் போடுவாங்க கற்பழிப்பு கேஸுக்கு?” என்றாள் அபர்ணா.

“சுமாரா ரெட்டை ஆயுள் தண்டனை…அதாவது 14 வருஷம் நான் பெயிலபிள் அஃபென்ஸ்”

“கடத்தல் கேஸுக்கு?”

“அதுக்கு கம்மி தான் அபர்ணா..மூனோ நாலோ கிடைக்கும்… பெயில் கூட கிடைக்கும்..”

“அப்போ ரஞ்சித் பேர்லையும் மாணிக்கம் பேர்லையும் கடத்தல் கேஸ் மட்டும் போடுங்க” என்று சொன்ன அபர்ணாவை எல்லோருமே விசித்திரமாகவே பார்த்தனர்.

“அபர்ணா…. அது வந்து…”

“இல்லை சார்…நான் இவங்களை மன்னிக்கலை… மன்னிக்கவும் மாட்டேன்… ஜெயில்ல 14 வருஷம் குடுக்கற தண்டணைய நான் குடுக்கறேன்….. வேற விதத்தில….”

“புரியலைம்மா…”

“கடத்தல் கேஸ் போடுங்க….” என்று தீர்கமாகக் கூறியவள், அடிபட்டு கால்களில் ரத்தம் சொட்ட படுத்திருந்த ரஞ்சித் அருகில் சென்றாள்.

“உன் மேல கடத்தல் கேஸ் மட்டும் தான் போடப்போறேன்….. அதுக்கு நீ பெயில் அப்ளை பண்ணக்கூடாது. 5 வருஷம் தண்டனை முடிஞ்சு இங்கேயே திரும்பி வரனும்….”

“சரி…வேணி..நீ என்ன சொன்னாலும் கேட்கறேன் வேணி….” என்றான் வலியில் முனங்கலுடன்.

“இரு…..நான் இன்னும் முடிக்கலை. வெறும் ஜெயில் தண்டனை மட்டும் உனக்கு சரியானது இல்லை. எந்த விவசாயம் வேணாம்னு அலறி வெளி நாடு போனானோ, அதே விவசாயத்தை தன் வாழ் நாள் முழுக்க செய்யனும்.”

“நீ இதுக்கு ஒத்துகிட்டா, உன் மேல நாங்க கேஸ் போட மாட்டோம். இல்லைன்னா கேஸ் போட்டா, உன் பாஸ்போர்ட் சீஸ் பண்ணுவாங்க. உன் எம்.என்.சி கம்பெனி, உன் கழுத்தை புடிச்சு வெளிய துரத்தும்..... அப்பறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், உன் மேல கேஸ் இருக்கறதால, உன்னால இனிமே அமெரிக்காவெல்லாம் போக முடியாது. ஏன் திண்டுக்கல் தாண்டி கூட போக முடியாது. அதனால் என்ன பண்ணற, ஜெயிலுக்கு போயிட்டு வந்தப்பறமா, மரியாதையா சின்னைய்யா கூட சேர்ந்து விவசாயம் பாரு..சரியா” என்ற என்னை எந்த உணர்ச்சியும் இல்லாமல் ரஞ்சித் தலையை ஆட்டினான்.

“எந்த குதர்கமான எண்ணமும் வைச்சுக்காத…. இந்த வீடியோ காப்பி எங்க ஒவ்வொருதர்கிட்டையும் இருக்கும்…மறந்திடாத…”என்றேன் நெருப்பு கக்கும் விழிகளுடன்.

“இன்னொரு வேலையும் இருக்கு, தோட்டதுல என் அப்பாவுக்கு சமாதி கட்டுவோம். அதை தினமும் சுத்தம் பண்ணி விளக்கு போட்டு பொறுப்பா பார்த்துக்கனும். அப்பறம், நம்ம தொழுவத்தை பராமறிக்கற பொறுப்பும் உனக்கு தான்.” என்றேன்.

“எங்க அந்த ரெண்டு கடத்தல் குண்டனுக...டேய் இங்க வாங்க” என்று டி.ஐ.ஜியின் கூவலுக்கு, சண்முகமும், மாணிக்கமும் மெதுவாக நடந்து அருகில் வந்தனர்.

“மாணிக்கம், நீ ஜெயில்ல கம்பி எண்ண போற இந்த ஐஞ்சு வருஷமும், அதுக்கு அப்பறம் ஒரு 99 வருஷமும் உன் தோட்டம் எனக்குன்னு குத்தகைக்கு எழுதி கையெழுத்து போடு…. நீ ஜெயில்ல இருந்து வர்ற வரைக்கும் உன் குத்தகை தொகை கிராமத்துல இருக்கற குளம் தூர்வாற, இல்லாதவங்களுக்கு நிலத்தை உழன்னு நல்லவிதமா செலவு செய்வோம்…அடுத்த 99 வருஷத்துக்கும் உன் பணம் உனக்கு சரியா வந்து சேரும்..”

“அது வந்து…….வேணி….. பல ஏக்கர் நிலம்….”

“நிலத்தை குடுக்கறையா இல்லை கொலை கேஸ்ல ஆயுசுக்கும் கம்பி எண்ணனுமான்னு நீயே முடிவு பண்ணிக்க…ஒரு நிமிஷம் டைம் தர்றேன்”

“இல்லை….இல்லை…தர்றேன்…தர்றேன்….. “ என்றான் மாணிக்கம்.

“சரி…அப்பறம் மாணிக்கம் இந்த பிரச்சனை இத்தோட முடியனும்னு நினைக்கறேன். மரத்துக்கீழ, கருப்பன் கோவில் கிட்டன்னு நின்னு எதாவது ஏடாகூடமா ரெண்டு பேரும் ப்ளான் பண்ணீங்க.... தொலைஞ்சீங்க...” என்றார் மிரட்டலுடன்.

“ஏப்பா சண்முகம் உனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கா உன் அப்பா யாருன்னு? வேணூம்னா ஒரு பண்ணலாம், உங்க செத்துப் போன அண்ணனை அடாப்ஸி பண்ண ஃபோட்டோஸ் இருக்கு, அதே மாதிரி உனக்கும் பண்ணி ரெண்டு ஃபோட்டோவும் மேட்சு ஆகுதான்னு பார்க்கலாமா? என்ன சொல்லற?” என டி.ஐ.ஜி கேட்கவும் சண்முகம் அரண்டேவிட்டான்.

“சார்..சண்முகத்துகிட்ட அப்படி ஒரு கதையை சொல்ல சொல்லி ரஞ்சித் தான் சொன்னான் சார். அந்த வீட்டில எங்க வேலை எல்லாம் செய்ய ஒரு ஆள் தேவைபட்டுச்சு சார். கருப்பனும் அந்த டிரைவர் முத்துவேல் பக்கத்துல கூட போக முடியலை சார்.” என்ற மாணிக்கம் நிறுத்தாமல் தொடர்ந்தான்,

“சின்னவர் பத்தி தப்பா ஒரு வார்த்தை சொன்னதுக்கு அந்த டிரைவர் ஸ்பானரை கழட்டி அடிக்க வந்துட்டான் சார். அதான் சண்முகத்துக்கு கிட்ட அப்படி ஒரு கதை சொன்னா நாங்க சொல்லற மாதிரி நடந்துக்குவான்னு ரஞ்சித் சொன்னாரு சார்.” என்று ஒரு வாறு மாணிக்கம் தெளிவு படுத்தினான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் எதுவும் பேசவில்லை. தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு முகம் முழுவதும் அப்பியிருந்தது. நெடுஞ்சானாக சின்னைய்யாவில் காலில் விழுந்தான்.

“சரி துரை, நீங்க அபர்ணாவையும் அஷோக்கையும் கூட்டிட்டு கிளம்புங்க... ஆம்புலன்ஸ் வந்ததும் இந்த ரஞ்சித் பயலை ஏத்தி விட்டுட்டு நான் வர்றேன்”

“நீ செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியலை சரவணா..”

“நன்றி எல்லாம் பெரிய வார்த்தை துரை. நீதி தேவதை வலது கையில் தராசு இருக்கும் பார்த்திருப்ப? இடது கையில் என்ன இருக்கும்னு பார்த்திருக்கியா?” என்றார் டி.ஐ.ஜி.

சின்னைய்யா இல்லை என்று தலை ஆட்டினார்.

“இடது கையில் வாள் இருக்கும். நீதி வழங்க வாளையும் யூஸ் பண்ணூடான்னு சட்டமே இண்டைரக்டா சொல்லற மாதிரி இருக்கும் எனக்கு. என் வழிகள் சட்டத்தின் படி தப்பானதா இருக்கலாம், ஆனா என் மனோதர்மபடி நியாயமானது. என் மனசு எது கரெக்டுன்னு சொல்லுதோ அதை கண்டிப்பா நான் செய்வேன்.”

இந்த பேச்சுக்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த போதே, அஷோக் சென்று தினேஷை எழுப்பி வந்து கூடத்தில் நிறுத்தியிருந்தான்.

அப்போதும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல், “அப்ப அந்த மினிஸ்டர் பையன் சாவு ஆக்ஸிடண்ட் இல்லையா சார்... திட்டமிட்டா செஞ்சீங்க?” என்று தன் துடுக்குக் கேள்வியை கேட்டான்.

“அதுக்கு பதில் உனக்கு நான் தனியா சொல்லறேன் தம்பி.. சரியா... இவ்வளவு நேரம் மயக்கமா இருந்தீங்க...திடீர்னு எந்திரிச்சு, நான் யாரு, எங்கே இருக்கேன்னு வழக்கமா கேட்காம, ஏன் இந்த கேள்வியெல்லாம் கேட்கற தினேஷ்?”

“அதுவா சார்....அது..அப்பவே மயக்கம் எல்லாம் தெளிஞ்சிருச்சு, எங்க எந்திரிச்சா ஃபைட்ல எனக்கும் ரெண்டு அடிவிழுமோன்னு நினைச்சு கண்ணை மூடி அப்படியே படுத்திருந்தேன்” என்று கூறியதைக் கேட்டு, சின்னைய்யா உட்பட அனைவருமே சிரித்தோம்.

“சரி துரை..கிளம்புங்க...”

“நாளைக்கு உங்களுக்கு பெரிய விருந்து ஒன்னு ஏற்பாடு செய்யறேன் சரவணன்..அவசியம் வரனும்...”

“அதுக்கென்ன, கல்யாண விருந்தாவே போடுங்க... ஃபுல் போலீஸ் ஃபோர்சோட பந்தோபஸ்துக்கு வந்திர்றேன்..”

“அபர்ணா பாவம் , நிலத்தை காப்பாத்த உசிரை குடுத்து போராடுது.. அப்படி விளைவிச்ச நெல்லை இந்த ஆள் ஒரே நாள்ல, தன் டிபார்ட்மெண்ட் போலீஸிக்கு எல்லாம் சோறு போட்டு அழிக்கப் பார்க்கறாரு...ஒரு கிலோ அரிசி என்ன விலை விக்குது தெரியுமா?” என்று தினேஷ் சீரியஸாகக் கூறியது கேட்டு டி.ஐ.ஜியுமே முறுவலித்தார்.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அஷோக், அபர்ணா திருமணம் காண அனைவரும் வந்து, தம்பதிகளை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.முற்றும்.சுபம்.

*****************

தன் மண்ணை நேசிக்கும், மற்ற விவாசாயிகளுக்காக சிந்திக்கும் இந்த நெற்காட்டு ராஜகுமாரி போன்ற சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் நாம் இன்னமும் பணத்திற்கு பதிலாக காய்கறிகளை உண்ண முடிகிறது.

இன்று இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 90 சதவித மக்கள் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்கள் காலத்திற்குப் பின் விவசாயம் என்ன ஆகும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

சிந்திப்பீர்! விவசாயத்தைக் காப்பீர்!**********************

*************

தளத்தில் கருத்துக்கள் பகிர்ந்து புத்தகப்பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்.

விவரங்களுக்கு:

வாசகர்களுக்குப் பரிசு
Very nice story....மண் மணத்துடன்
 
Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom