KMY_18

Annapurani Dhandapani

✍️
Writer
காதல் மொழி - 18


விராட் முக்கிய வேலையாக டிஐஜி அலுவலகம் செல்ல வேண்டி சீக்கிரமே கிளம்பியிருந்தான்.

தன் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது தன் பழைய கல்லூரித் தோழனை சந்தித்தான்.

"ஹே விராட்! கைஸே ஹோ யார்?" என்று அவன் பெரிய குரலில் விராட்டை அழைத்துப் பேச,

"ஹே! ரோஹித்?" என்று விராட்டும் அவனுடன் மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினான்.

இருவரும் பல நாட்கள், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டு வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள்.

இருவரும் அருகிலிருந்த உணவகத்துக்குள் சென்று வசதியாக அமர்ந்து கொண்டு சாப்பிட எதையோ வரவழைத்துக் கொண்டு மெதுவாக சாப்பிட்டபடியே பேசத் தொடங்கினார்கள்.

(இருவரும் ஹிந்தியில் பேசிக் கொள்வதை இங்கே தமிழில் தருகிறேன்.)

"ம்.. அப்றம்? இந்த என்ன பண்ற?" விராட் கேட்டான்.

"நா மெடிக்கல் ரெப்பா ஜாயின் பண்ணினேன். இப்ப சீனியர் சேல்ஸ் ஆஃபீசர் ப்ரொமோஷன் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். நீ என்னவா இருக்க?"

"நா போலீஸ்ல சேர்ந்தேன். இப்ப எஸ் ஐ ஆகிருக்கேன்."

"சூப்பர்! சூப்பர்! எந்த ஸ்டேஷன்ல இருக்க?"

விராட் சொன்னான்.

"சூப்பர்டா! அப்றம் லைஃப் எப்டி போகுது?"

"ம்.. நல்லா போகுது. அடுத்த வாரம் எனக்கு மேரேஜ்."

"வாவ்! கங்க்ராட்ஸ் டா! பொண்ணு மும்பையா? புனேயா?" கேட்டான் ரோஹித்.

"இல்லடா! பொண்ணு தமிழ். சோ மேரேஜ் தமிழ்நாட்ல.. இங்க மும்பைல ரிசப்ஷன் இருக்கு. நீ கட்டாயம் வந்துடணும். இந்தா கார்ட்! இங்க வெச்சி குடுக்கறேன்னு தப்பா நெனக்காத." விராட் தன் திருமண வரவேற்பு பத்திரிகையை எடுத்து அவனிடம் நீட்டினான்.

"சூப்பர்டா. கண்டிப்பா வரேன்!"

"உனக்கு எப்ப மேரேஜ்!? நீ காலேஜ்ல அந்தப் பொண்ணு பேர் என்ன.. ம்.. ஆங்.. ரீமா.. ரீமா பின்னாடி சுத்திட்டிருந்தியே.. என்னாச்சு?" என்று சிரித்துக் கொண்டே வினவினான் விராட்.

"அது ஊத்திகிச்சி.. அவ என் புடிக்கலன்னு சொல்லிட்டா!"

"என்னது? உன்னப் புடிக்கலன்னு சொன்னாளா? ஏனாம்?"

"பின்ன.. நா என்ன? பெரிய கம்பெனில பெரிய வேலைல இருக்கேனா? இல்ல வீடு கார் பங்களான்னு சொத்து சுகத்தில இருக்கேனா? இதோ.. இந்த மருந்து பைய தூக்கிகிட்டு தெருத் தெருவா அலையற வேலை! என்ன எவளுக்கு பிடிக்கும்?" என்றான் ரோஹித்.

"டேய்! ஏண்டா இப்டிலாம் சொல்ற? உன் அறிவுக்கும் பொறுமைக்கு வேற எதாவது ஈடு வைக்க முடியுமா? உனக்குன்னு பொறந்த ஒருத்தி சீக்கிரமாவே உன்னத் தேடி வருவா! டோன் வொரி!" என்றான் விராட், சமாதானம் செய்யும் வகையாய்.

"ஹூம்.. அப்டி யாராவது வந்தா சரி!" என்று பெருமூச்சு விட்டான் ரோஹித்.

"வருவா! வருவா!"

"சரி! என்ன கதைய விடு! உன் கதைய சொல்லு! பொண்ணு தமிழ்ன்னு சொன்னியே! எப்டி? நீ தமிழ்நாடு போனியா? இல்ல அவ இங்க வந்து வேலை பாக்கறாளா?"

"அவ எங்க அண்ணியோட தங்கச்சிதான். அண்ணன் தமிழ் பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினான்."

"நீ அவன் வழியை பின்பற்றிட்டியா?"

"ஹா.. ஹா.. ஆமாம்.."

"அப்றம்.. முக்கியமான விஷயத்தை மறந்தேன் பாரு. உங்க அண்ணன் எப்டி இருக்கார்? இப்ப ஃபேமிலி ப்ராப்ளம்ஸ் எல்லாம் சரியாகிடுச்சா?" என்று அவன் கேட்டான்.

"என்ன.. ஃபேமிலி ப்ராப்ளம்ஸ்.. புரில.." என்றான் விராட் குழப்பத்தோடு.

"இல்லடா.. அவரோட மேரேஜ் அப்ப.. உன் வேலை.. உன் தங்கச்சி படிப்பு.. அப்றம் வீட்ல சில ஹெல்த் இஸ்யூஸ்ன்னு சொல்லி அவரு ஃபேமிலி ப்ளானிங் பத்தி பேசணும்னு என்கிட்ட சொல்லி நல்ல டாக்டர் யாராவது இருந்தா சொல்ல சொன்னாரு.. நாந்தான் அவரை எனக்கு தெரிஞ்ச நம்பிக்கையான டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன்! அதான் கேட்டேன்! இப்ப ஃபேமிலி இஸ்யூஸ் எல்லாம் சரியாகிடுச்சான்னு.." என்றான் ரோஹித்.

"ஓ.. யா.. வெல்.. எல்லாம்.. ஐ மீன்.. எல்லாமே சரியாகி.. சரியாகிடுச்சி.." என்று தடுமாறியபடி பதிலளித்தான் விராட்.

"ஏன்டா? அவரு கல்யாணத்தப்பவே உனக்கு வேலை கிடைச்சிடுச்சில்ல.. உனக்கு சம்பளம் வர ஆரம்பிச்சிருக்குமே.. ஏன்.. உன் சம்பளத்தை நீ வீட்ல தரலயா? ஏதாச்சும் பிரச்சனையா?"

"அது.. அது வந்து.. அப்ப எனக்கு கொஞ்சம் குறைவா.. எதிர்பார்த்த அளவுக்கு.. வரல.. கொஞ்சம் குறைவாதான் வந்திச்சி.. அந்த டைம்ல.. தங்கச்சி படிப்புக்காக கொஞ்சம் லோன் வேற எடுத்திருந்தோம்.. அதான்.. வேற ஒண்ணுமில்ல.." என்று விராட் மனதுக்குள் கடுத்தபடி கூறினான்.

"ஓ.. ஓகே ஓகே.. என்னடா இப்டி நேரடியா கேட்டேனே தப்பா எடுத்துக்காத.. எனக்கு உங்க ஃபேமிலிய பத்தி ரொம்ப நல்லா தெரியும்.. நீயும் உங்க அண்ணனும் எவ்ளோ க்ளோஸ்.. ஒருத்தர ஒருத்தர் விட்டுக் குடுக்காம எவ்ளோ அன்பா இருப்பீங்கன்னு தெரியும்.. அதான் கேட்டேன்.." என்றான் ரோஹித்.

"புரியுதுடா!" என்றான் விராட்.

"இப்ப உன் கல்யாணமும் வந்திடுச்சி.. இனிமேலயும் அண்ணனை குழந்தை பிறப்பை தள்ளிப் போட வேணாம்னு சொல்லுடா.. அது அவ்ளோ நல்லதில்ல.." என்றான் ரோஹித்.

"இல்லடா! இனிமே தள்ளி போட மாட்டான்!"

"நல்ல வேளை அவரு என்கிட்ட கேட்டு டாக்டர்கிட்ட வந்து கன்சல்ட் பண்ணினாரு.. இல்லன்னா அவரு ஏற்கனவே வாங்கி வெச்சிருந்த கான்ட்ரசெப்டிவ் பில்ஸை உங்க அண்ணிக்குதான் தரதா இருந்தாரு.. டாக்டர் அட்வைஸ் பண்ணினதால அத டிஸ்கார்ட் பண்ணிடறேன்னு சொன்னாரு.. பாவம்.. இல்லன்னா உங்கண்ணிக்குதான் உடம்பில பிரச்சனை வந்திருக்கும்.." என்று அவன் சொல்லிக் கொண்டே போனான்.

கேட்டுக் கொண்டிருந்த விராட்டுக்கு தன் அண்ணன் சூரஜின் மேல் கோபம் கோபமாக வந்தது.

'சுட்கி சொன்னது மாதிரி எல்லா தப்பும் இவந்தான் பண்ணிருக்கான். சே! நா பாபிய போய் எவ்ளோ தப்பா நெனச்சேன்.. பாவம் பாபி! எனக்கு எவ்ளோ பண்ணிருக்காங்க.. எனக்கு அறிவே இல்லாம போச்சு.. இப்ப நேத்திக்கு கூட அவங்கள திட்டினேன்.. ஆனா எதையும் மனசில வெச்சிக்காம அமைதியா இருந்தாங்களே! சாரி பாபி!' என்று தனக்குள் நினைத்து வருந்தினான்.

"சரி டா! டைம் ஆகுது! மூணு மணிக்கு அந்த கைனக்காலஜிஸ்ட் பாக்கணும்.. இன்னிக்கு விட்டுட்டா அவங்கள அடுத்த வாரம் வரைக்கும் பாக்க முடியாது! நா கிளம்பறேன்! உன் ரிசப்ஷன்ல பாக்கலாம்!" என்றான் ரோஹித்.

"ஓகே டா! டேக் கேர்!" என்று விராட்டும் கிளம்ப, இருவரும் கைகுலுக்கிப் பிரிந்தனர்.
விராட்டின் உள்ளம் உலைகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.

'இருக்கட்டும். இப்ப இந்த பிரச்சனைய ஆரம்பிச்சா எல்லாரோட மூடும் ஸ்பாயில் ஆகிடும்! என் கல்யாணம் முடியட்டும்! இவனுக்கு கச்சேரி வெச்சிக்கறேன்! இடியட்!' என்று தனக்குள் சூரஜை நினைத்து திட்டிக் கொண்டே தான் பணி புரியும் காவல் நிலையம் விரைந்தான்.

ஒரு வாரம் பிரச்சனைகள் ஏதுமின்றி திருமண ஏற்பாட்டுகளின் பரபரப்போடு கழிந்தது.

ஒரு வழியாக விராட்டின் திருமணம் வந்தது. அனைவரும் திருச்சி வந்து இறங்கினர். பெண் வீட்டார் வந்தவர்களை வரவேற்று நன்றாக உபசரித்தனர். ஆனந்தன் தீபிகாவைப் பார்த்து வரவேற்பாய் புன்னகை செய்ததுடன் விலகிச் சென்று விட்டான். உறவினர்கள் அனைவரும் சேர்ந்தால் பேச விஷயங்களுக்கா பஞ்சம்!

செல்வி எல்லாரிடமும் சந்தோஷமாக பேசி சிரித்து தன் மனதில் உள்ள வருத்தங்களை எல்லாம் மறந்தாள்.

திருச்சியில் இருக்கும் பெரிய திருமண மண்டபத்தில் விராட் ஆனந்தியின் திருமணம் மிக மிக கோலாகலமாக நடந்தேறியது.
அண்டை அயலார் கூடியிருக்க பெற்றோர் பெரியோர் நண்பர்கள் என அனைவரும் வாழ்த்த விராட் ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டினான். தீபிகா ஆனந்தியின் கழுத்தில் நாத்தனார் முடிச்சாக மூன்றாவது முடிச்சினை அழுத்தமாக போட்டுவிட்டு அதன் மேல் குங்குமம் இட்டாள். ஆனந்தன் தங்கைக்காக அக்னியில் பொரியிட்டான். திருமண வைபவம் இனிதே நிறைவுற்றது.

கௌரியும் தீன்தயாளும் நெஞ்சம் நிறைய பாசத்தோடு மகனையும் மருமகளையும் வாழ்த்தினர்.
பூங்குழலியும் கீர்த்திவாசனும் கண்கள் குளமாக ஆசீர்வதித்தனர். கிரிதரனும் மங்கையர்கரசியும் சந்தோஷமாக வாழ்த்தினர். தாத்தா பாட்டியின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்தபின் லட்சுமி அம்மாளின் பாதம் பணிந்து எழுந்தனர்.

அனைவரும் நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றாக அமர்ந்து உண்டதைப் போல இப்போதும் உணவு உண்ண, பார்த்தவர்கள் அனைவரும் அதிசயப்பட்டுப் போனார்கள். இப்படி ஒரு அன்யோன்யத்தை வேறு எங்கும் நாங்கள் கண்டதேயில்லை என்று பேசிக் கொண்டனர்.

லட்சுமி அம்மாள் அனைவரையும் அமர்த்தி திருஷ்டி கழித்தார்.

செல்வியின் திருமணத்தின் போது கூறியது போலவே இந்த திருமணத்தின்போது முதலிரவு வீட்டில்தான் நடத்தப்பட வேண்டும் என்று கௌரி தீன்தயாள் தம்பதி கூறிவிட்டனர். அதனால் அன்று எப்படி ஏற்பாடு செய்தார்களோ அதே போல இன்றும் ஆனந்தியின் வீட்டில் அவளது அறையைத் தயார் செய்துவிட்டு புதுமணத் தம்பதிகளை வீட்டில் விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவரும் மண்டபம் சென்றுவிட்டனர்.

ஆனந்தி விராட் இருவரும் தங்கள் திருமண இரவை இன்பமான இரவாக ஆக்கி கொண்டனர்.


நண்பனின் சொற்கள் கேட்டு
கலங்கி நின்ற தம்பியவன்
அண்ணன் செயும் தவறையுமே
தட்டிக் கேட்கத் துணிகிறானே!

உண்மை அவன் கண்ணெதிரே
தலை விரித்து ஆடினாலும்
மனதுக்குள் பூட்டி வைத்தான்!
மணமேடை ஏறி நின்றான்!

மங்கையின் கை பிடித்தான்!
மணமாலை சூடிக் கொண்டான்!
கவலைகளைக் களைந்தெறிய
மனதுக்குள் உறுதி கொண்டான்!

C. புவனா.

- காதலின் மொழி என்ன?
 

kothaisuresh

Active member
Member
பாவம் செல்வி. இவன் பண்ற தப்புக்கு கௌரி செல்வி மேல் கோவப்படறா.விராட் எப்போ பேசுவான்?
 

Rajam

Well-known member
Member
விராட்பேசனும்.
செல்வியிடம் குறையில்லை என தெரியனும்.
கெளரி உணரனும்.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom