Kalayatha Mounangal _Part 3 -Episode 11

Revadyashok

✍️
Writer
அத்தியாயம் -11

ஜெகன்நாத், சவீதா, அகில் மற்றும் மரகதம் ஆகிய நால்வரும் மிக மும்மரமாக அலசி ஆராய்ந்து, தங்களுக்குள் பேசி மூவரை தேர்ந்தெடுத்தார்கள்.

"இந்த வரன்களை ஜனனியிடம் கொடுத்து விசாரிக்க சொல்லணும். இந்த மூன்றில் யார் பெஸ்டோ அந்த பிள்ளையையே நம்ம மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கலாம்..." என சவீதா தவிர மற்ற மூவருக்கும் பெருத்த நிம்மதி உண்டாயிற்று.

"இந்த திருமணத்திற்கு செரீனா ஒத்துக்குவாளா ... ?

திடீரென்று சவீதாவால் எழுப்பப்பட்ட கேள்வியில் ஒரு பிரச்சினை தீர்ந்தது என்ற சந்தோஷத்தில் இருந்தவர்கள் ஏக காலத்தில் என்ன என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

"எனக்கு பயமா இருக்குங்க, எனக்கென்னவோ செரீனா மீது நம்பிக்கையில்லை..." என்றார் முகம் கசங்க.

"ஆனால் நான் இம்முறை விடுவதா இல்லை சவீதா. சித்தார்த்தும், ஜனனியும் நமக்கு கெடுதல் நினைக்கிறவங்க இல்லை. நீ பயந்தால் ஒதுங்கிக்கொள், செரீனாவை எப்படி கையாள்வதென்று எனக்கு தெரியும்..."என்றவர் தன் அறைக்கு செல்ல சவீதா விக்கித்து போனார்.

"ம்ம்மா டோன்ட் ஒர்ரி, நானும் அப்பாவும் பார்த்துக்கிறோம், நீங்க நிம்மதியா இருங்க. செரீனாவின் திருமண விஷயத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டாங்க இரண்டு பேரும், மீதி வேலைகளை நம்மால் முடிக்க முடியாதா ? பீ பிரேவ். எப்படியிருந்தாலும் செரீனா கல்யாணம் செய்துக்க தானே போறாள். அதுவும் ஏற்கனவே விஷாலை திருமணம் செய்துக்க முன் வந்தவள் தானே, இப்போ அவரை விட நல்ல நல்ல சம்மந்தம் வந்திருக்கு, மாப்பிளைகளும் பார்க்கவே ஹண்ட்ஸாம்மா இருக்காங்க, அப்புறம் உங்க பெண்ணுக்கு கசக்குதா ?

ஆனால் சவீதாவின் பயம் அகன்றபாடில்லை, மகளை பற்றி நன்றாக அறிந்திருந்ததினால் எந்த நேரத்தில் எப்படி படம் எடுப்பாளோ என்ற அச்சம் அவருள் உறைந்து போயிருந்தது.

சித்தார்த்தின் அறை ...

மனைவி அறைக்குள் நுழைந்ததும் அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்து கதவை தாழிட்டவன் அடுத்த நொடி மனைவியை பூமாலையை போல கையில் அள்ளிக்கொள்ள ஜனனி இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போனாள்.

"ஹையோ என்ன சித்தார்த் இது, கீழே இறக்கி விடுங்க..."என்று சிணுங்கலாக கொஞ்ச, சித்தார்த்தோ அவளின் கொஞ்சலை பொருட்படுத்தாமல் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.

கணவனின் செய்கையில் சூடான ரத்தம் பாய, வெட்கம் அவளை பாடாய் படுத்தியது. கணவனின் பரந்த மார்பில் முகம் புதைத்துக்கொள்ள சித்தார்த் சிரித்தபடி அவளை கட்டிலில் படுக்க வைத்து அவளை நெருங்கி படுக்க ஜனனி எழ முயற்சித்தாள்.

அவளை எழ விடாமல் தன்னருகில் இழுத்து அவள் இடையோடு அணைத்து,"எங்கே ஓட பார்க்கிறே, எல்லோரையும் ஹனிமூனுக்கு ஏர்போர்ட் போய் அனுப்பி வைக்க முடிகிறது, என்னை மட்டும் அம்போன்னு விட்டுடறே..."என்றவன் மனைவியின் மூக்கோடு மூக்கை உரச ஜனனியின் தேக தங்கம் கணவனின் சல்லாபத்தில், தாபத்திலும் உருக தொடங்கியது.

செய்ய ஆபிஸ் வேலைகள் இருந்தாலும் அதெல்லாம் தற்காலிகமாக மறந்து கணவனின் அருகாமையை மனம் விரும்ப தொடங்கியது.

கணவனின் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்து,"ஹனிமூன் தானே போனால் போச்சு, சொல்லுங்க எங்கே போகலாம்... ? என்றாள் கண்ணடித்து.

மனைவியின் செய்கையில் மேலும் சித்தார்த் அவளிடம் பித்தாகி அவளை தன்னிடம் இழுத்து தன் மேல் படுக்க வைத்து, தன் கரங்களால் அவளை வளைத்து,"மிஷேல் சொன்ன மாதிரி நாம் ஏன் பிரான்ஸ்க்கு போக கூடாது ஜானு. அங்கு பிசினஸ், மீட்டிங், கான்பரன்ஸ் என்று எவ்வித கவலைகளும் இல்லாமல் இரண்டு பேரும் கையை கோர்த்துக்கொண்டு ஈபிள் டவர், க்ரூஸ், மியூஸியம் என்று காதலை கொண்டாடும் நாட்டில் நாமும் காதலை சந்தோஷமாக கொண்டாடிட்டு வரணும். என்னடி சொல்றே என் செல்ல பொண்டாட்டி..."என்றவன் மனைவியின் இதழ்களை ஒரு விரலால் மெதுவாக வருடினான்.

கணவனின் தொடுகையிலும், அணைப்பிலும் ஜனனியை விழிகள் கிறக்கமாக மூடியது.

அவனின் மார்பில் தலைவைத்து படுத்து,"எனக்கும் ஆசையாக தான் இருக்கு சித்தார்த். அப்படியே நான் பிறந்த நாட்டையும் வளர்ந்த வீட்டையும் பார்க்க ஆவல் தான். ஆனால் நமக்கு தான் இங்கு வேலை அதிகமாக இருக்கே? எப்படி நாம பிரான்ஸ் செல்வது. மிஷேல் வேறு நம்மை அழைத்துக்கொண்டு தான் பிரான்ஸ் செல்வேன் என்கிறார். என்ன செய்யலாம் ஹீரோ..." என்று கேட்டபடி அவனிடமிருந்து விலகி அமர சித்தார்த்தும் கட்டிலில் தலையையனை வைத்து அதில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.

ஜனனி அவனருகில் அமர்ந்து சித்தார்த்தின் தோளில் தலையை சாய்த்துக்கொண்டு கணவனின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக்கொள்ள, சித்தார்த் அவளின் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தமிட பெண்ணானவளுக்கு உணர்ச்சிகள் கொந்தளித்தது.

ஆயினும் கணவனின் பதிலுக்காக காத்திருந்தபடியால்,"சொல்லுடா..."என்றாள் தாபமான குரலில்.

மனைவி தன்னை முதன்முதலில் டா போட்டு அழைத்ததும் சித்தார்த்தை பரவச நிலைக்கு அழைத்துச் செல்ல அவளின் செவ்விதழ்களில் ஆசை தீர அழுத்தமான முத்தமொன்றை பதித்தான்.

"நிச்சயம் போகலாம்டி பொண்டாட்டி, உன் ஆசையை நிறைவேற்றுவதை விட வேறு எதுவும் எனக்கு பெரிதில்லை கண்மணி. என் தங்கை, இப்போ ராதிகா என்று எல்லோரும் ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது என் மனைவிக்கு மட்டும் எப்படி அந்த பாக்கியம் கிடைக்காமல் போகும், கண்டிப்பா போகலாம். நமக்கு இப்போதைக்கு அலுவல் வேலைகளில் முடிச்சே தீர வேண்டிய விஷயங்கள் என்று ஒன்றுமில்லை.

பனையூர் ப்ராஜெக்ட்டை தேவ் பார்த்துக்குவான், அடுத்த மாதம் அகில்-சீதா திருமணம் முடிஞ்சதும் நாம விஷாலிடமும், தேவ்விடமும் பிசினெஸ்ஸை கவனிக்க சொல்லிவிட்டு ரெண்டு மாசம் பிரான்ஸ் போயிட்டு வரலாம். உனக்கு ஓகே தானே..." என வேகமாக எழுந்து அமர்ந்தாள் ஜனனி.

அதுவரை இருந்த தாபம், மயக்கம், பரவசம், இனிய உணர்வுகள் எல்லாம் பறந்தோட கணவனை யோசனையாக நோக்கினாள்.

"என்ன ஜானு எழுந்துட்டே... "என்றபடி சித்தார்த்தும் எழுந்து அமர்ந்தான்.

"செரீனா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாளா ஹீரோ... ?

இதை கேட்கும் பொழுதே அவளின் விழிகளில் சிறு கலவரம் தொனித்தது.

ப்ச் இந்த சந்தோஷமான நேரத்தில் அந்த கோட்டான் பெயரை ஏன் சொல்றே? இனிமையான ராகத்தில் அபஸ்வரம் விழுந்த மாதிரி இருக்கு..."என்றான் எரிச்சலோடு.

ஆனாலும் மனைவியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தவறவில்லை.

"உண்மையை சொல்லனும்னா வாய்ப்பே இல்லைன்னு தான் சொல்வேன், ஆனால் என்னுடைய கருத்து, அவளெல்லாம் மனுஷ ஜென்மத்திலேயே சேர்த்தி இல்லை, உன்னை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் கேவலப்படுத்துகிறவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய நீ ஏன் போராடுகிறாய்ன்னு தான் புரியலை? இந்த விஷயத்தில் உன் கருத்தோடு என்னோடு ஒத்துபோக முடியலை ஜானு..."

கணவனின் முகவாய் கட்டையை தன் பக்கம் திருப்பி,"எனக்கும் அது புரியாமலில்லை, ஆனால் நான் செய்வது முழுக்க முழுக்க சவீதா அம்மாவுக்கும், ஜெகன்நாத் அப்பாவுக்காக மட்டும் தான். அது மட்டுமில்லை இவள் திருமணமாகி போனால் தான் அகிலை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மருமகளா வீட்டுக்கு வரும் சீதாவுக்கு செரீனாவால் எந்த இடைஞ்சலும் வராது.

இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் முடிந்துவிட்டால் செரீனாவுக்கு தன் வாழ்க்கையை பற்றி யோசிக்கவும், கணவனுடன் நேரத்தை செலவழிக்கவும் தான் சரியாக இருக்குமே தவிர யார் குடியை கெடுக்கலாம், அல்லது சீதாவை எப்படி அழ வைக்கலாம், அவளை எப்படி பழிவாங்கலாம்னு யோசிக்க நேரமிருக்காது..."

"அவள் ஏன் சீதாவை பழிவாங்க வேண்டும் ... ? சீதாவுக்கும், செரீனாவுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை, சீதாவால் செரீனாவுக்கு எவ்வித தொல்லையும் இல்லையே ?

"என்ன சித்தார்த் இப்படியொரு கேள்வி கேட்கறீங்க சீதா யாரு, என்னுடன் ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தவள், என்னுடைய நெருங்கிய தோழி, இது போதாதா சீதாவை டார்ச்சர் செய்ய ?

"ஓஹோ ! இதை நான் மறந்துட்டேன், ஆனால் ஜானு இந்த செரினா சாப்டரை நாம இன்னும் சில நாட்களிலே க்ளோஸ் செய்யணும் , எனக்கு போரடிக்குது அவளுடன் மல்லுக்கட்டி. நமக்கென்று சில வேலைகள் காத்திருக்கிறது, அதில் நாம முழுமையா ஈடுபடணும்னா நாம இவளை பற்றி நினைக்காமல், இவள் என்ன செய்வாளோ என்று யோசிப்பதை விடுக்க வேண்டும்..."என்றவன் மீண்டும் மனைவியை தன் மடியில் சாய்த்து அவளின் வடிவான முகத்தில் ஒரு விரலால் கோலம் போட ஆரம்பித்தான்.

எதையோ பேச வந்தவளுக்கு கணவனின் செய்கையில் வார்த்தைக்கு பதில் காற்று வர அவள் திக்கி திணறுவதை சித்தார்த்தின் பொல்லாத விழிகள் கண்டுக்கொண்டது. மனைவியை அள்ளி அணைத்து தன் தாபத்தை தீர்த்துக்கொள்ள முயற்சிக்க, ஜனனியும் அந்த விஷயத்தில் கணவனுக்கு உதவ ஆரம்பிக்க காமன் தன் வேலையை சரியாக செய்தான்.
 

kothaisuresh

Well-known member
Member
எல்லோரும் செரீனாவுக்குத் தான் பயப்படறாங்க, அவ நிஜமாகவே திருந்திட்டாளா?
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom