• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

5.பக்கம் வந்து கொஞ்சம்...

மனோஜா

✍️
Writer
உ.உ -5

பக்கம் வந்து கொஞ்சம்….

ஹாய்….இப்பதான் “ஹெர் ஸ்டோரிஸ்” என்ற முகநூல் பக்கத்தில் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் காதல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்தேன். ரொம்ப அருமையான கட்டுரை. உடனே என்னடா நாம இதைப்பத்தி யோசிக்கமா விட்டுட்டேனே ஒரு கேள்வி. அதை இன்னொரு நாள் எழுதுவோம்னு முடிவு செய்த பின்னர் , இன்றைக்கு எழுத யோசனை கிடைத்தது.

ஹிந்தி சீரியல், கொரியன் சீரியல்ஸ் இப்படி எல்லா நாடகங்களும் எடுத்துக் கொள்ளுங்கள். ஹீரோ ஹீரோயினுக்கும் ஓத்தே வராது. ஆனால் ஹீரோ ஹீரோயின் மேல கோபப் படும் போதெல்லாம் பக்கத்தில் அதாவது பெரும்பாலும் ஏதாவது சுவற்றில் இருகைகளாலும் அணைகட்டி மிரட்டிக் கொண்டிருப்பார். இதைப் பார்த்து “வாவ் சோ ரொமாண்டிக் “ என்று பரவசப்பட்டிருக்கலாம்.

நல்லா யோசிச்சு பாருங்க. உங்களுக்கு பிடிக்காத நபரை அவ்வளவு நெருக்கமாக வீடுவீர்களா? இல்லை நீங்கள்தான் உங்களுக்கு பிடிக்காத ஒரு நபரை உங்கள் அருகில் வர விடுவீர்களா?

விலங்குகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது. தன்னுடைய எல்லையில் ஏதாவது ஒன்று அத்துமீறி நுழைந்தால் அடித்துவிடும். ஏனென்றால் அது அந்த விலங்கின் பர்சனல் ஸ்பேஸ். அதாங்க தனிப்பட்ட இடம்.

இது மனிதர்களுக்கு உண்டு. பர்சனல் ஸ்பேஸ் பிராக்ஸிமிட்டி என்கின்ற கொள்கைக்குள் வரும்.

பர்சனல் ஸ்பேஸ் எனப்படும் தனிநபரின் இடைவெளி நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

மிகநெருக்கமான இடைவெளி (INTIMATE DISTANCE OR ZONE):


இது நேரடியான தொடுதலை உடையது. வழக்கமாக 2 அடி இடைவெளி வரை இருக்கும். கணவன், மனைவி, பெற்றோர்கள், குழந்தைகள் , நண்பர்கள் இப்படி நெருக்கமான உறவுகள் மட்டும் இந்த இடைவெளிக்குள் நுழைய முடியும்.

2.பர்சனல் ஜோன் (PERSONAL DISTANCE):


இந்த இடைவெளி ஒரு அடியிலிருந்து நாலடி வரை இருக்கும். கைதொடும் தூரத்தில் நபர்கள் இருப்பார். நம்ம தம்பிகளை, தங்கச்சிகளை அப்படியே ஒரு எட்டு எட்டி கொட்டிவிட்டு ஓடிவிடமுடியும். இந்த இடைவெளியிலும் நமக்கு நன்றாக தெரிந்த நபர்கள்தான் இருக்க முடியும். கைகோர்த்து நடக்கும் உறவுகள் இதில் அடக்கம். இந்த இடைவெளிக்குள் புதிய நபர் ஒருவர் நுழையும் போது நமக்கு அசவுகரியமாக இருக்கும்.

3. சமூக இடைவெளி (SOCIAL DISTANCE):


இந்த வார்த்தை நம் காதுகளில் இரண்டு வருடமாக ஒலிக்கும் வார்த்தைதான். அதே சமூக இடைவெளிதான். 4 அடியிலிருந்து 12 அடி வரை சமூக இடைவெளிக்கான தூரம். வழக்கமாக வியாபாரங்கள், அலுவல்கள் இந்த இடைவெளியில் தான் நடைபெறும். நம்ம நாட்டு மக்கள் தொகைக்கு பேருந்தில் ஏறினால் நேராக இண்டிமேட் ஸ்பேஸ்தான். சமூக இடைவெளி எல்லாம் கிடைக்காது.

4.பொது இடைவெளி(PUBLIC DISTANCE):

  • 12 அடியிலிருந்து 25 அடி வரை பொது இடைவெளிக்கான தூரம் அமையும். நேரடி தொடுதல் இருக்காது. கண்களால் கூட பார்க்க மாட்டோம். ஒரு நடைபாதையில் நடந்து சென்றால் அதிலிருக்கும் போகும் வரும் அனைத்து நபர்களையும் நமக்கு தெரிந்திருக்க போவதில்லை. அவர்கள் அருகில் நாம் நெருங்கவும் போவதில்லை.

  • இவை கலாச்சாரத்திற்கு , நாட்டிற்கு ஏற்ப மாறும். இந்தியாவில் புதிய நபர்களுக்கு சிறிது தூரத்தில் வைத்தே வணக்கம் சொல்லிவிடுவோம். ஆனால் வெளிநாட்டில் தோள்பற்றி அணைத்து கன்னத்தில் முத்தமிடுவர். இது அவர்களின் வழக்கம். இப்போது முன்பு சொன்ன நாடகங்கள் விஷயத்திற்கு வருவோம். ஹீரோ இப்படி ஹீரோயினின் பர்சனல் ஸ்பேசிற்குள் நுழைவார். கோபத்துடன் இருக்கும் வரை சரி. ஆனால் கோபம் இல்லை என்றால் , ஒரு அந்நிய ஆண்மகன் நம் அருகில் இருப்பது ஒருவித பதட்டத்தையும் , குற்ற உணர்வையும் ஏற்படுத்தும். இவ்வாறு ஒருநபர் நமது பர்சனல் ஸ்பேசில் நுழைந்து கொண்டிருந்தால் நாளடைவில் நாம் ஏற்கப் பழகிக் கொள்வோம்.

  • இதைவிட்டு இன்னொரு விஷயத்திற்கு வருவோம். நாடகங்களில் ஹீரோ ஹீரோயினும் அடிக்கடி பார்த்துக் கொள்ளும்படியும் , ஹீரோயின் விழுந்தால் , ஹீரோ அவரைப் தாங்கிப் பிடிப்பர். இதற்குப் பெயர்தான் மியர் எக்ஸ்போசர் (MERE EXPOSURE EFFECT) விளைவு.அதாவது அடிக்கடி நீங்கள் பார்க்கும் விஷயம் உங்களுக்கு பழக்கமாகிவிடும். நாளடைவில் அது பிடிக்கவும் செய்யும் . ஹீரோ ஒருநாள் வரவில்லை எனில் ஹீரோயின் கண்கள் அவனைத் தேடும். உங்களுக்கு புதிதான ஒரு விசயத்தையும் , பழகிய விஷயத்தையும் கொடுத்து எது வேண்டும் என்றால் , எது பிடித்திருக்கிறது எனக் கேட்டால் நமது மூளை பழக்கப்பட்ட விஷயத்தையே தேர்ந்தெடுக்கும். நீங்கள் அடிக்கடி கேட்கும் பாடல் பிடிப்பதற்கும் இதுவே காரணம். ஓரே விளம்பரம் அதிக தடவை ஒளிபரப்பப் படுவதற்கும் காரணம் இதுதான்.
இந்தியாவில் நாடகம் , நாவல்கள் ஏன் நிஜத்திலும் கூட “அப்புறம் அதுவா பழகிரும்.” என்று கொள்கைப் படியே பல திருமணங்கள் நடைபெறுகின்றது. BYE EVERYONE. HOPE YOU ARE WELL. LETS KEEP TOUCH WITH COMMENTS.

அன்புடன்

மனோஜா

20210618_133603.jpg
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom