• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

4) கால் கிலோ காதல் என்ன விலை?

மனோஜா

✍️
Writer
உ. உ -4

கால் கிலோ காதல் என்ன விலை?

காதல் காலங்காலமாக பலரும் ரசித்து முகிழ்த்த உணர்வு. “அன்பிற்கும் உண்டே அடைக்குந்தாழ்” என்பது போல் காதலுக்கும் எல்லைகள் கிடையாது. நிறம் , சாதி , மதம், நாடு, மொழி , வயது என எதுவும் இதற்கு தடை கிடையாது. மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது அவர்களால் மட்டும் செய்ய முடியும்.

உண்மையான காதலில் எனக்கு இந்த தம்பதிகளின் கதை மிகவும் பிடித்த ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன் வகுப்பில் ஒரு பதினைந்து வயது மாணவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு ஒரு பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியையின் மகளும் அதே வகுப்பில் மாணவி. இந்த பையனுக்கு ஆசிரியை மீது காதல். என்ன நடந்திருக்கும் ? இருவருக்கும் 24 வருடங்கள் வித்தியாசம்.

வருடங்கள் உருண்டோட இந்தப் பையனும் வளர்ந்து பெரியவனாகிறான். முதலில் தவிர்க்க நினைத்த ஆசிரியை பிறகு காதலில் விழுகிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பெண்மணியின் குழந்தைகள் மற்றும் கணவனின் நிலை என்னவென்று சிலர் பொங்குவார்கள் ?

இன்னொருவரிடம் மனது சென்றுவிட்ட பின் கணவனுடன் வாழ்வது போல் நடிப்பது சரியா? அப்படி செய்தால் அது பச்சைத் துரோகம்.

இன்னொரு பக்கம் இன்னொருவன் பத்து வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறான். அவனுக்கு வேறு பெண்களா இல்லை? காதல் காத்திருக்க வைக்கிறது. எந்தவைகையான நிபந்தனைகளற்ற காதல் அவனுடையது. அன் கண்டிஷனல் லவ் என்பர். அது கைகூடியும் விடுகிறது. இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம்.

உலக அளவில் நிறைய பெண்களும் இப்படி அன்பைப் பொழிவர்கள்தான். அடித்தாலும், மிதித்தாலும் அவன் என் கணவன் என்று வாழ்கிறார்கள்???!!!!!

அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். நான் சொல்லுவதால் மாறிவிடப் போகிறதா என்ன? நாம் காதலின் வகைகளை பார்ப்போம்.

இதற்கு காதலின் முக்கோண மாதிரி என்று பெயர். இந்த கருதுகோளை உருவாக்கியவர் ஸ்டெர்ன்பர்க் .( நம் தமிழிலும் காதல் கல்யாண வகைக்கு இலக்கணம் உள்ளது. அது தனியாக ஒரு புது சீரிஸில் எழுதுவேன். முன் சொன்ன உதாரணம் பெருந்திணை என்ற வகையில் வரும்.)

நம்ம ஸ்டெர்ன்பர்க் கூற்றுப் படி ஒரு உறவுக்கு மூன்று அடிப்படை விசயங்கள் உள்ளது.

1 . நெருக்கம் ( INTIMACY )

ஆண் பெண் , பெண் பெண், ஆண் ஆண் ( இது நான் சொல்வது . பாலின பேதங்கள் கண்களுக்குத்தான். காதலுக்கு இல்லை. ) ஆக மொத்தத்தில் காதலர் இருவரும் எவ்வளவு தூரம் நெருக்கமாக உணர்கிறார்கள் மற்றும் பந்தத்தின் உறுதியைக் குறிக்கும்.

2. ஈர்ப்பு (PASSION) :

இந்த இரண்டாவது விஷயம் பெண்களை விட ஆண்களுக்கு முக்கியம் . ரொமான்ஸ் , உடல் ஈர்ப்பு இதைக் குறிக்கும். இணைகளுக்கு இடையே இருக்கும் அட்ராக்சன் ஆகும்.

3. உறுதி (COMMITMENT ):

இந்த விஷயம் எந்த உறவிற்கும் மிக அவசியம் . எனக்கு இந்த நபருடன் உறவு வேண்டும் என்று முடிவெடுத்தல் மற்றும் அந்த உறவை நிலைக்க செய்தல் என உறுதிகொள்ளல் .

ஆனால் எல்லா காதலர்களும் இந்த மூன்று விஷயங்களையும் அனுபவிப்பதில்லை. தற்போது வகைகளைப் பார்ப்போம்.

விரும்புதல் (LIKING)

நெருக்கம் மட்டும் இருக்கும். ஆனால் ஈர்ப்பும் , உறுதியும் இந்த காதலில் இருக்காது.

2. ரொமாண்டிக் காதல்

நெருக்கம் மற்றும் ஈர்ப்பு இரண்டும் ரெமாண்டிக் காதல் வகையில் இருக்கும். இது சம்மர் லவ் வகை. பொதுவாக கோடை காலத்தில் விடுமுறையை அனுபவிக்க செல்பவர்கள் இந்த வகைக் காதலில் விழுவர். ( வெளிநாடு)

3. கம்பானியனேட் லவ் :

நெருக்கம் மற்றும் நீண்ட காலத்திற்கு உறுதியான உறவு இருக்கும். ஈர்ப்பு இருக்காது. தோழமை உணர்வு போன்றுதான் இந்த வகை.

4. இனக்கவர்ச்சி:

இந்த வகையில் ஈர்ப்பு மட்டும் இருக்கும். பார்த்த முதல் பார்வையிலே அப்ஷனுடன் காதல் இருக்கும். நெருக்கமும், உறுதியும் இருக்காது.

5. பேட்டஸ் லவ் ( FATUOUS LOVE)

ஈர்ப்பு , உறுதி இரண்டும் உள்ள உறவு இது. ஆனால் பந்தம் உருவாக நேரம் இருக்காது. விர்ல்வைண்ட் கோர்ட்ஷிப் இந்த வகையில் வரும். என்ன எது என்று புரிவதற்குள் ஒரு உறவில் இருப்பர்.

6. எம்ப்டி லவ் (EMPTY LOVE)

நெருக்கம் , ஈர்ப்பு இரண்டும் இல்லாமல் இருவரும் அன்புடன் இருக்க முடிவெடுத்திருப்பர்.

இவற்றையெல்லாம் படித்த பிறகு மேற்கண்ட காதல் எல்லாம் நிறைவற்ற ஒன்றாகத் தோன்றும். ஏழாவது வகை ஒன்றும் இருக்கிறது.



7. கன்சீயூமேட் லவ்: (CONSUMMATE LOVE)

இது கம்பீளிட் லவ். நெருக்கம் , ஈர்ப்பு , உறுதியான உறவு இம்மூன்றும் உள்ள காதல். முக்கோணக் காதல். ஆழமான காதல். ஆனால் ஸ்டெர்பெர்க் இந்தக் காதல் கிடைப்பது கடினம் என்று கூறிவிட்டார். நிறைவான காதல் கிடைக்கட்டும் என்று நினைப்போம்.

ஏழும் மூன்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அவசியம்.

WITH LOVE

MANOJA

































Penguins.jpg
 

Nithya Mariappan

✍️
Writer
அது என்னவோ போங்க எனக்கு காதல்ங்கிற வார்த்தை மேல அவ்ளோவா பிடித்தமே இல்ல... அது மனுசங்களை பலகீனமாக்குதோனு மட்டும் தான் தோணுது🙄
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom