• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

3) காதல் கற்போம்..

மனோஜா

✍️
Writer
உ.உ -3

3) காதலைக் கற்போம்

காதல் யாருக்குத்தான் பிடிக்காது? ( உலகில் அனைத்திற்கும் விதிவிலக்கு உண்டு.) காதலிப்பதும் , காதலிக்கப்படுவதும் நல்ல உணர்வுதான். காதல் என்பது அன்பின் வகையே. நாம் எழுதும் எழுத்துகளுக்கே பல வடிவங்கள் (ஸ்டைல்) உண்டு. மனித காதலுக்கு இல்லாமல் போகுமா? அதற்கும் வடிவமும் , வகையும் உள்ளது. ஒவ்வொரு மனிதர்களும் தங்களுடைய பாணியில் காதலிக்கின்றனர். காதலைக் கற்போம்.

காதலின் வரையறை :

காதல் என்பது கடவுள் போன்றது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். உணர்வுகள் , எண்ணங்கள் , நடத்தை ஆகிய மூன்றும் கலந்தது. இவை மூன்றும் நெருக்கமான உறவில் காணப்படும்.

இன்னொரு வித்தியாசத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். காதலில் இல்லாமல் உடல் ஈர்ப்பு நிகழும். ஆனால் காதலில் உடல் ஈர்ப்பு இல்லாமல் இருக்காது.

அறுவடிவங்கள்:

மூக்கோணக் காதல் போல் ஆறுவடிவங்கள் காதலில் காணப்படும்.

1 ) எரோஸ் (EROS ) :

இது பாஷனேட் காதல். இணைகள் பார்த்தவுடன் ஈர்க்கப்படுவர். அதாங்க கண்டதும் காதல். கியூபிட் முதல் பார்வையிலே அம்பு விட்டு சாய்த்துவிடுவார்.

2) ஸ்டோர்ஜ் ( STORGE ):

(கீரிக் வார்த்தை எனக்கு தமிழில் சரியாக தெரியவில்லை.)

இது ஆழமான நட்பைப் பாலமாக கொண்டது. இதில் தெய்வீக காதல் உணர்வு கிடையாது. கம்பானினேட் லவ் என்றும் அழைக்கப்படும்.

3) லுடஸ் ( LUDUS) :

இது விளையாட்டு தனமான காதல். அதாவது இதில் ஒருவருக்கு இரு காதலர்கள் இருக்கலாம். ஆனால் ஏமாற்றுவதைக் காதலர்கள் கண்டுபிடித்தால் அப்போதுதான் உண்மையான விளையாட்டு ஆரம்பிக்கும்.

4) மேனியா ;

இது உங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். பெசசிவ் அதிகமாக இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது காதலரின் பாதுகாப்பற்ற மனநிலை. தன் இணை வேறு யாரையோ தேடிச் சென்றுவிடுமோ என்று பயம் இருக்கும். இந்தக் காதல் முற்றி சந்தேகத்தில் காதலை உடைத்துவிடும் அபாயம் உள்ளது.

5)பிராக்மா (PRAGMA)

இந்தக் காதல் அறிவுப் பூர்வமான ஒன்று. அதாவது தன் தகுதிக்கு ஏற்றவாறு காதலித்தல். ஸ்டார் கிராஸ்டு லவ் இதற்கு எதிராக இருக்கும்.

6 ) அகேப் (AGAPE)

தன்னலமற்ற காதல். தன் இணையை தான் கஷ்டப்பட்டாலும் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்வர். வீரம் அஜித் பாணியில் தன் இணையைக் காப்பர். ஆண்கள்தான் இப்படி இருக்க வேண்டும் என்பது இல்லை. பெண்களும் தன் இணையை சுற்றி இருப்பவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளிலிருந்து காக்கலாம்.

இப்படி பல வடிவங்கள் இருந்தாலும் என் நண்பன் சொன்ன ஒரு விஷயம் எனக்கு பிடித்திருந்தது. “நீ 50 சதவீதம் உன் இணையிடம் அன்பை வெளிப்படுத்தினால் , உன் இணை 30 அல்லது 40 சதவீதம் அன்பை வெளிப்படுத்தினாலும் ரிலேசன்ஷிப் வெற்றிதான். “ இது அவன் திருமணவாழ்வில் கம்யூனிகேசனுக்காக சொன்னான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? கருத்தைத் தெரிவியுங்கள். அடுத்த தொடரில் காதலின் வகைகளைப் பார்க்கலாம்.

SOURCE : SOCIAL PSYCHOLOGY BY BARON & BYRNE


WITH LOVE
MANOJA

















 

Nithya Mariappan

✍️
Writer
ஆக்ஸ்வலி காதல் எனக்கு சம்பந்தம் இல்லாத டாபிக்... ரொம்ப நாளா அப்பிடி தான் ஒதுக்கி வச்சிருக்கேன் சிஸ்... ஏன்னு எனக்கே தெரியல... ஒருவேளை நான் பிராக்மா டைப்பா இருப்பேன் போல... இப்போ வரைக்கும் அந்த பட்டாம்பூச்சி ஃபீலிங் யார் மேலயும் வரலையே... தட் அகேப் டைப் லவ்வர்ஸ் என் ஃபேமிலில பாத்திருக்கேன்... வாவ்... நீங்க ஒவ்வொரு சேப்டர் போடுறப்பவும் நான் புதுசா எதையாச்சும் கத்துக்கிறேன்😍😍
 
Why blood ? Same blood. எனக்கும் அந்த லவ் ஹார்மோன் இருக்கா இல்லையானு தெரியல. என் லைப்ல எவ்ளோ ஆண்கள் இருக்காங்க. எனக்கு எந்த பீலிங்ஸ் வர மாட்டிங்குது. இவ்ளோ ஏன்கா கதைல லவ் சீன் வைக்க ரொம்ப கஷ்டபடுவேன்.
 

Nithya Mariappan

✍️
Writer
Why blood ? Same blood. எனக்கும் அந்த லவ் ஹார்மோன் இருக்கா இல்லையானு தெரியல. என் லைப்ல எவ்ளோ ஆண்கள் இருக்காங்க. எனக்கு எந்த பீலிங்ஸ் வர மாட்டிங்குது. இவ்ளோ ஏன்கா கதைல லவ் சீன் வைக்க ரொம்ப கஷ்டபடுவேன்.
என்னை போல் ஒருத்தி😜😜😜
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom