இணையும் இதயமிதுவே ..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 17)
அருமை, அருமை, இன்னைக்கு எபி ஆரம்பத்துல படிக்க கஷ்டமா இருந்தாலும், அதற்கப்புறம் உதயா சாட்டையை கையில தூக்கினவுடனே, எனக்கு ரொம்ப கொண்டாட்டமாகிடுச்சு.
பெண்கள் யோசிக்கவே கூடாது,
அவன் ஒரு சிகரெட்டை கூட ஆயுதமா கையில எடுக்கிறபோது, பொண்ணுங்களும் எது கிடைக்குதோ, அதை ஆயுதமா கையில எடுத்து அவனை மொத்தமா ஆஞ்சிப்போட்டு தான் வெளியிலயே வரணும்.
ஆனா பாவம், நிறைய பெண்கள், கணவன், குடும்பம், அம்மா, அப்பா, மானம் மரியாதைன்னு அடங்கி, ஒடுங்கி போறதாலத்தான்
நிறைய உதயாக்களும், நிறைய ரிதன்யாக்களும் உருவாகிறார்கள் இங்கு.
சில நியாயங்கள் கிடைக்க, அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தவறேதும் இல்லை, அசிங்கமேதும் இல்லை.
இப்படிப்பட்ட பெண்களுக்கு
சமூகம் கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும், அது நியாயமும் கூட.
முடியலை, நிச்சயமா முடியலை..
இந்த எபியை படிக்கும்போதே வயிறெரிஞ்சது... நாசமாப் போகணும் அந்த மாதிரி மிருகங்கள். இந்த மாதிரி காம வெறி பிடித்த பிள்ளைகளை மகன்களாக பெற்ற பெற்றவர்களை என்ன சொல்வதென்றே தெரியலை.
இந்த மாதிரி காம வெறி பிடித்த ஆண்களால, பெண்கள் அவர்களை விட்டு வெளியேறி ஒதுங்கி வந்து விட்டாலும், மறுமணத்திற்குள் நுழைவதென்பது மிகவும் சிரமம் என்று தான் தோணுகிறது. சூடு பட்ட பூனையின் நிலைமையை போல தான் பல பெண்களின் வாழ்க்கை அமையும் போல.
நல்ல ஆண்கள் இருந்தாலும், முதலில் இவர்கள் உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியதாகவும் நிறைய பாதிப்புகளை கடந்து வருவதென்பது மிகவும் கடினம் தான் போலவே..
ஓ மை காட் !



CRVS (or) CRVS 2797