• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

16. விலோசன விந்தைகள்

ஷாலினி

New member
Member
"அப்பறம் என்னாச்சு யக்ஷூ?" என்று தன் மனைவியின் பதிலைக் கேட்க அவசரப்பட்டான் அற்புதன்.


அதற்குப் பிறகு நிகழ்ந்தவை யாவும் அவளுக்குச் சாதகமானதாக அமையவில்லை என்பதை மனைவியின் கம்மிப் போனக் குரலிலேயே தெரிந்து கொண்டான் அவளது கணவன்.


"ம்ஹ்ம் சொல்றேன் ங்க" என்றவள், மீண்டும் தொடர்ந்தாள் யக்ஷித்ரா.


'படி! படி!' என்று தன்னை நெருக்கவில்லை என நிம்மதி

அடைந்தாலும், அதிலும் மன அழுத்தம் வந்தது அவளுக்கு.


தந்தையின் குணம் என்னவென இப்போது வரை மகளுக்குப் புரியவில்லை தான்!


ஆனால், அதை தவிர வேறெதுவும் செய்யத் தெரியாமல் இருப்பது, அவளுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தது.


அவ்வப்போது, நிவேதிதாவைப் பாட வைத்துக் கேட்டு அமைதியடைந்து விடுவாள் யக்ஷித்ரா.


இப்போதெல்லாம், அதுவும் அவளைச் சாந்தப்படுத்தவில்லை.


"அம்மா! ஏதோ மனசை அழுத்துது!" என்று மீனாவிடம் கூறினாள் யக்ஷித்ரா.


அதைக் கேட்டவர்,'அதெல்லாம் வரலைன்னா தான் ஆச்சரியம்!' என்பதைப் போல, வேதனையுடன் மகளைப் பார்த்தார் அவர்.


கணவனின் செய்கைகள் இவளை வெகு சீக்கிரம் இப்படியான மனநிலைக்கு மாற்றி விடும் என்பதை முன்னரே அறிந்திருந்தார்.


அதனால்,"பெரியப்பா இல்லைன்னா சித்தப்பா ஊருக்குப் போயிட்டு வர்றியா?" என்று அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு கேட்டார் மீனா.


அன்னையின் தோளில் முகம் புதைத்துக் கொண்டவள்,"எங்க மிஸ் லீவ் கொடுக்க மாட்டாங்க ம்மா. அதுவும் எக்ஸாம்ஸ் வரப் போகுதே?" என்று வருத்தத்துடன் உரைத்தாள் யக்ஷித்ரா.


"அந்த ஸ்கூலில் எதுக்குத் தான் லீவ் கொடுப்பாங்க!" என்று சலித்துக் கொண்டாள் யாதவி.


சாதாரணமாகப் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில பள்ளிகளில் கூடுதல் கெடுபிடி இருக்கும். அவ்வளவு எளிதில் விடுப்புக் கொடுத்து விட மாட்டார்கள்.


"படிக்கனும், எக்ஸாம் எழுதனும் இதையெல்லாம் சொல்றவர்,அதை ஸ்ட்ரெஸ் இல்லாமல்‌ எப்படி பண்ணனும்னு சொல்ல மாட்டேங்குறாரே அம்மா?" என்று சோகமாக வினவினாள் யக்ஷித்ரா.


"நீ என்ன அக்கா இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கிற? என்னைப் பாரு, நான் அவர் பண்றதை எல்லாம் கேஷுவலாக எடுத்துக்கிறேன்ல? அப்படி இரு. அதுதான் உன் மென்டல் ஹெல்த்துக்கு நல்லது" என்று தமக்கைக்கு இலவசமாக அறிவுரை வழங்கினாள் யாதவி.


"அப்படி என்னால் இருக்க முடியலையேஏஏஏஏ!" என்று திடீரென தொண்டைக் கிழியக் கத்த ஆரம்பித்து விட்டாள் யக்ஷித்ரா.


அதில் அதிர்ந்து, உதறல் எடுக்கத் தன் அக்காவைப் பார்த்து பயந்து பின்னே நகர்ந்தாள் யாதவி.


"யக்ஷிம்மா! ஒன்னும் இல்லைடா" என அவளைத் தன் கை‌ வளைவில் வைத்துக் கொண்டு, சமாதானம் செய்தார் மீனா.


ஆனால், அவரிடமிருந்து திமிறி விலக யத்தனித்துப் போராடினாள் யக்ஷித்ரா.


"ஸ்ஸூ..‌. அமைதியாக இருடா! என்னடா ம்மா?" என்று மகளது தோளைத் தடவிக் கொடுத்து சாந்தப்படுத்த முயற்சித்தார் மீனா.


அதற்குள் அதிர்ச்சி தெளிந்து, சமையலறைக்குப் போய் அக்காவிற்காக குடிநீர் கொண்டு வந்தாள் யாதவி.


"முடியலையே ம்மா!!" என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி, சொல்லிக் கத்தினாள் யக்ஷித்ரா.


"தொண்டை வலிக்கும் டா ம்மா! கத்தாதே!" என அவளது தோளைத் தடவிக் கொடுத்தார் மீனா.


"ஆஆஆஆ!!!" என்று உரக்கக் கத்தி அழுகவும்,


யாதவியோ ஓடி வந்து யக்ஷித்ராவைக் கட்டிக் கொண்டு,"அக்கா! அழாதே! நான் இருக்கேன், உனக்காக நான் பேசுறேன். அமைதியாகு!" என்று அவளும் தமக்கையைச் சமாதானம் அடையச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டாள்.


மகள்கள் இந்தளவிற்கு அவதிப்படுவதைக் கண்டு கண்ணீர் வடித்தார் மீனா.


ஓரளவிற்குக் கத்தி முடித்து, நிதானம் ஆனாள் யக்ஷித்ரா.


அப்படியே தாயின் மேல் சரிந்து விழுந்தவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர் அன்னையும், யாதவியும்.


"தண்ணீர் குடிக்கிறயா டா?" என்று அவளது முகத்தைச் சீர் செய்து கொண்டே கேட்டார் மீனா.


"வேண்டாம் மா. எனக்குப் பிடிக்கலை!" என்று அழுத்தமாக கூறினாள் யக்ஷித்ரா.


"சரிடா வேணாம். வா, ரெஸ்ட் எடு" என அவளை அறைக்கு அழைத்துப் போனார்கள்.


"பாலைச் சூடு பண்ணி எடுத்துட்டு வா யாது" என்று சின்ன மகளிடம் மெதுவாக கூறி அனுப்பினார் மீனா.


"வேணாம்னுச் சத்தமாகச் சொல்லக் கூட முடியலையே ம்மா!" என்று தாயிடம் கூறினாள் யக்ஷித்ரா.


"ஏன்டா ம்மா இப்படியெல்லாம் பேசுற? அம்மா இருக்கேன் டா! உன் கூட, யாது இருக்கால்ல?" என என்னென்னவோ சொல்லி அவளுக்கு நம்பிக்கை அளிக்கப் பார்த்தார் மீனா.


"வேணாம்! வேணாம் மா!" என்றாள் மகள்.


"சரி வேணாம்" என்று அவளுக்கு இசைந்து கூறினார்.


"யாது!" என்று சிறியவளை அழைத்தார் மீனா.


இதோ கொண்டு வந்துட்டேன் ம்மா" எனக் கையில் தம்ளருடன் அறைக்குள் வந்தாள் யாதவி.


"என்ன இது?" என்று அவளிடம் கேட்டாள் யக்ஷித்ரா.


"பால் அக்கா, குடிச்சிப் பாரு. பெட்டர் ஆக இருக்கும்" என்று மென்மையாக கூறினாள் தங்கை.


என்ன நினைத்தாளோ? ஒன்றும் சொல்லாமல், அதை வாங்கி படக்கென வாயில் சரித்துக் கொண்டாள்.நல்லவேளையாக, மிதமான சூட்டில் தான், அதைக் கொண்டு வந்திருந்தாள் யாதவி.


"கண்ணு சொருகுது, தலை வலிக்குதும்மா!" என்று அனத்தினாள் யக்ஷித்ரா.


அவளை மடியில் படுக்க வைத்துக் கொண்டவர்,மகளுக்கு இவ்வளவு மன அழுத்தம் கூடாது என முடிவு செய்தவர், அடுத்து செய்ய வேண்டியதை யோசித்து வைத்துக் கொண்டார் மீனா.


🌸🌸🌸


இந்த நிகழ்வின் முடிவு என்னவென்று கேட்காமல், மனைவியை இறுக அணைத்து விட்டு, அவளது நெற்றியில் தன் இதழைப் பதித்தவன், அதன்பின், முகம் முழுவதும் முத்தங்களை இறைத்து, தனது தவிப்பை, மனைவியிடம் காட்ட முயற்சி செய்தான் அற்புதன்.


கணவனுடைய இந்தச் செயல் அதிர்ச்சியைத் தந்தாலும், அதில் வெறுப்பு ஏற்படவில்லை யக்ஷித்ராவிற்கு.


மனைவியின் முகத்திலிருந்து தன்னுடைய இதழைப் பிரித்தெடுத்தவன், "ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன் மா! சாரி" என்றவன், அப்போதும் கூட அவளை விலகி நிற்கவில்லை.


"நான் உங்ககிட்ட ஒன்னுக் கேட்கலாமா?" என்றாள் அவனது மனைவி.


அவள் அதைக் கேட்டவுடன் அற்புதனின் முகம் தொங்கிப் போய், கண்கள் ஏமாற்றத்தைப் பிரதிபலித்தது.


  • தொடரும்
 

Latest profile posts

#பூந்தென்றலாய்_வந்தவளே எபி 2
“மாமா இல்லடி... அத்தான்னு சொல்லு... அவங்கப்பாவும் மாமா, அவனும் மாமாவா உனக்கு?”
“அத்தான்னு சொல்லுறதுலாம் டூ ஓல்ட் ஃபேஷன்... என்னைப் பாத்தா அந்தக் காலத்து சரோஜாதேவி சாவித்திரி மாதிரி தெரியுதாம்மா உனக்கு? அத்தான்னு கூப்புடணுமாம்ல... உவ்வேக்” என்றாள் ராதா.
அவளது ‘உவ்வேக்’கில் மாதவன் திரும்பிப் பார்க்கவும்
“அது உங்களுக்குச் சொன்ன உவ்வேக் இல்லை மாமா... அந்த அத்தான்ங்கிற வார்த்தைக்குச் சொன்னது... நீங்க வேலைய பாருங்க” என்றாள் அவள்.
அதற்குள் உள்ளே இருந்து “உன்னைய போய் சரோஜாதேவி சாவித்திரி கூட கம்பேர் பண்ணுவேனாடி? அவங்க மூக்கும் முழியுமா எவ்ளோ அழகா இருப்பாங்க... நான் பெத்தது பொண்ணா குரங்கானு இப்ப வரைக்கும் எனக்கே சந்தேகமா இருக்கு... வாலு ஒன்னு தான் இல்லை” என்று பதிலடி வந்தது கனகதாரணியிடமிருந்து.
ராதா “க்ரேட் இன்சல்ட்” என்று வாய்க்குள் முணுமுணுக்க மாதவனிடமிருந்து நமட்டுச்சிரிப்பு வெளிப்பட்டது.
உடனே அவனை முறைத்தாள் ராதா.
“இதுக்கு மட்டும் கத்துதா இந்தப் பல்லி?” என்று மைண்ட் வாய்சில் மட்டும் கேட்டுக்கொண்டாள், எல்லாம் அவனது முறைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தான்.
இத்தனை களேபரங்களுக்கு இடையே ராதாவின் முதுகலைப்படிப்பிற்கான விண்ணப்பமும் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது.
“செலக்டான ஸ்டூடண்ட்ஸ் லிஸ்டை சைட்லயே பாத்துக்கலாம்... ஃபீசும் ஆன்லைன்லயே கட்டிட்டோம்னா காலேஜ் திறக்குறப்ப அங்க போனா போதும்”
அவளிடம் கூறிய மாதவன் சமையலறையை நோக்கி செல்ல அவனை ராதாவும் தொடர்ந்தாள்.
கனகதாரணி மகளுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று வினவினார் மாதவனிடம்.
“நல்ல மார்க் இருக்கு அத்தை... அதனால சீட் கிடைக்கிறதுல பிரச்சனை இருக்காது... நீங்க யோசிக்காம யூனிஃபார்முக்குத் துணி எடுத்து தைக்க குடுத்துடுங்க” என்றான் மாதவன்.
கனகதாரணி சந்தோசத்தில் தலையசைத்தபோது “என்னது யூனிஃபார்மா?” என ராதாவின் அதிர்ந்த குரல் கேட்டது.
“ஆமா... ஏன் அங்க யூனிஃபார்ம் போடணும்னு உனக்குத் தெரியாதா?”
சாதாரணமாக கேட்டுவிட்டு மெஸ்சுக்குக் கிளம்ப தயாரானான் மாதவன்.
சீருடை அணிந்து கல்லூரிக்குச் செல்வது தனக்கு இழைக்கப்படும் அநீதி எனும் அளவுக்கு ராதா கனகதாரணியிடம் வாதிட ஆரம்பிக்க அதை கேட்டு சிரித்தபடியே தனது அறைக்குள் சென்றான்.
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-2.5668/

#நித்யாமாரியப்பன்
அவள் ஒரு ராகமாலிகை pre_final

#அவள்ஒருராகமாலிகை epi 27
சந்திரிகாவின் தோற்றத்தில் திருப்தியுற்றவன் ரிசார்ட்டிலிருந்து காரைக் கிளப்பி ஜங்டுங்சாவை நோக்கி செலுத்தினான்.
செல்லும் வழியெங்கும் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
“இந்த வருசம் செர்ரி ப்ளாசம் கொஞ்சம் ஏர்லியரா ஆரம்பிச்சிடுச்சு”
“இதெல்லாம் நீங்க ரசிப்பிங்களா? ஆச்சரியமா இருக்கு”
“ஏன் நான் ரசிக்கக்கூடாதா?”
“இல்ல… செர்ரி ப்ளாசமை ஜப்பானியர்கள் தானே கொண்டாடுவாங்க… அதான் கேட்டேன்”
“கொரியா முழுக்க ஜப்பானோட காலனி ஆதிக்கத்துக்குக் கீழ வந்தப்ப அவங்க கொரிய பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சு ஜப்பானோட கலாச்சாரத்தை புகுத்த ஆரம்பிச்சாங்க… அதோட ஆரம்பமா கொரியாவுல முக்கியமான அரண்மனைகள்ல செர்ரி மரங்களை வளர்த்தாங்க… ஆரம்பத்துல செர்ரி ப்ளாசமை கொரியர்கள் ‘பிட்டர் ஸ்வீட் மொமண்ட்’டா கடந்தாலும் காலப்போக்குல அதை தூய்மை அழகோட சின்னமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க… சௌத் கொரியால செர்ரி ப்ளாசம் ஃபெஸ்டிவலை அந்தந்த பிராந்தியங்கள்ல ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க… எனக்குச் செர்ரி ப்ளாசம் வந்தாலே என் அம்மாவோட ஞாபகம் வந்துடும்”
எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவன், அதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கறாராகப் பேசுபவன் அன்று மனம் விட்டுப் பேசுவதே சந்திரிகாவுக்கு ஆச்சரியம். அதிலும் அவனது அன்னையைப் பற்றி சொன்னதும் கொஞ்சம் மனம் இளகியது அவளுக்கு.
“உங்க அம்மா எங்க இருக்காங்க?” மெதுவாக வினவினாள்.
“வூசொங் யூனிவர்சிட்டில கொரியன் லாங்வேஜ் செண்டர்ல ஒர்க் பண்ணுனாங்க”
“பண்ணுனாங்க மீன்ஸ்….”
“ஷீ இஸ் நோ மோர் நவ்”
சந்திரிகா அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“அப்பிடி பாக்காத… எனக்குப் பிடிக்கல”
அடுத்த நொடியே அவள் தன்னைத் தவறாக எண்ணிவிடுவாளோ என விளக்கமளிக்க ஆரம்பித்தான்.
“நான் சின்ன வயசுல இருந்து இப்பிடியே வளர்ந்துட்டேன்… யாரும் என்னை பரிதாபமா பாத்தா பிடிக்காது… சாரி”
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-27.5653/

#நித்யாமாரியப்பன்
#மாயமித்ரா எபி 26
தேள் கொடுக்கு நாக்கால் சந்திரிகாவைப் பற்றி கணவன் மோசமாகப் பேசியதில் சரிதாவுக்கே சங்கடமாகிவிட்டது. என்ன தான் ஆண்பிள்ளையை உயர்வாக நினைக்கும் தாயாக இருந்தாலும் மகள் தனிமரமாக நிற்பாளென மகன் சொன்னதைக் கேட்டதும் சாந்தமதியின் மனம் இரணமாகிப்போனது. அதை அவரது முகமாற்றத்தில் கண்டுகொண்டாள் சரிதா. மாமியார் மீது பரிதாபம் கொண்டவள் கணவனை அதட்டினாள்.
“சர்வேஷ் வேண்டாம்… அப்பிடிலாம் பேசாத”
“ஏன் பேசக்கூடாது பேபி? நமக்குக் குழந்தை இல்லனு எவ்ளோ கஷ்டப்படுறோம்? இவங்க மூனு பேரும் சொகுசா இருக்காங்க… மனசுல கொஞ்சம் ஈரம் இருந்துச்சுனா நமக்குப் பணம் குடுத்து உதவுவாங்க… இவங்களுக்குத் தான் மனசே இல்லையே”
“ப்ச்! என் யூடியூப் வருமானம் உன் சம்பளத்தை வச்சு சமாளிக்கலாம் சர்வேஷ்”
“எல்லாத்தையும் ட்ரீட்மெண்டுக்கே செலவளிச்சிட்டா எனக்குனு எதுடி மிஞ்சும்? நான் லொட்டு லொட்டுனு வேலை பாத்து சம்பாதிக்கிறதால எனக்கு என்னடி யூஸ்? ஒரு பார்ட்டி, பப்னு போக முடியாது… வீக்கெண்ட்ல அவுட்டிங், சினிமானு எதுவுமே இல்லாத வாழ்க்கைலாம் ஒரு வாழ்க்கையா? உங்க யாராலயும் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல”
சர்வேஷின் சுயரூபம் இப்போது தான் வெளிப்பட்டது. அவனது சுயநலமான மனப்பாங்கில் அவன் மட்டுமே அவனுக்கு முக்கியம். தனது சந்தோசம், தனது பணம், தனது சௌகரியம் மட்டுமே அவனுக்கு பெரியது.
மனைவியே ஆனாலும் தனக்காக கூட அவன் யோசிக்கவில்லை என்பதை அறிந்ததும் சரிதா அதிர்ந்தே போய்விட்டாள். இவனை மணமுடித்து தவறு செய்துவிட்டோமோ என்று தாமதமாக ஞானோதயம் பிறந்தது.
கோபத்துடன் அவனை முறைத்தாள்.
“என்னடா ஓவரா பேசுற? என்னமோ குழந்தை பிறந்தா அது எனக்கு மட்டும் தான் குழந்தைங்கிற மாதிரி பேசுற… சீ! நீ இவ்ளோ செல்ஃபிஷாடா? காசு காசுனு ஏன் அலையுற? நீ நரேஷ் கூட சேர்ந்து செஞ்ச கேவலமான காரியத்துக்கு அப்புறமும் சந்து உன்னையும் என்னையும் இந்த வீட்டுல தங்க வச்சிருக்காடா… உன் சம்பளத்துல இருந்து ஒரு ரூபா நீ இந்த வீட்டுக்காக செலவளிச்சிருக்கியா? இந்த வீட்டை விட்டு வெளியே போய் வாடகைக்கு இன்னொரு வீட்டுல இருந்து பாரு… மாசமாசம் எவ்ளோ செலவாகும்னு உனக்குத் தெரியும்… உன்னால பெத்த அம்மாக்கு மெடிக்கல் செலவு பண்ணமுடியாது, கட்டுன பொண்டாட்டிக்கு ட்ரீட்மெண்டுக்குச் செலவு பண்ணமுடியாது… அப்ப என்ன தான் பண்ண முடியும் உன்னால? உன் பணத்தை வச்சு சொகுசா நீ மட்டும் வாழணும்… இதே மாதிரி சந்திரிகா யோசிச்சிருந்தா நீயோ நானோ இவ்ளோ சொகுசா வாழ முடியுமாடா? உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு முதல் தடவையா வெக்கப்படுறேன்.. நீ எனக்காக பத்து பைசா செலவளிக்கவேண்டாம்… இப்ப இருந்து உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது”
வெறுப்போடு சொன்னவள் சாந்தமதியைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டாள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-26.5647/

#நித்யாமாரியப்பன்

New Episodes Thread

Top Bottom