1&2.மனம் போல் மாங்கல்யம்

Arthi manu

✍️
Writer
அன்புள்ள சகோதர சகோதரிகளே,நான் ஆர்த்தி மனு.இந்த தளத்திற்கு புதிது.தாங்கள் ஓய்வு வேளையில் நான் எழுதும் நாவல்களை படித்து மேலான தங்கள் கருத்துக்களை கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
Arthi manu

✍️
Writer
மனம் போல் மாங்கல்யம்-1 "அமுதா அடியே அமுதா எங்கடி போன . மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போற நேரம் ஆகுது. இப்போ ஒழுங்கு மரியாதையாக தயாராகுரியா இல்லையா" என்று கோபத்துடன் கத்தி கொண்டிருந்தார்,ஜெயந்தி.மழையில் நனைந்த கோழி குஞ்சு போல் பயந்தபடியே தாயின் அருகில் நின்று கரம் பிடித்து ,"அம்மா எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை .என்னை விட்டு விடுங்கள் "என்றாள்,மகள். உள்ளே உருகினாலும் விறைப்பாக "சரிடி கல்யாணம் பிடிக்காததற்கு ஒரு காரணம் சொல்லு அப்பா கிட்ட நான் பேசறேன்".காரணம் உள்ளது, வலுவாக.ஆனால் அதை யாரிடமும் சொல்லும் நிலையில் அவள் இல்லை.
அமைதியாக நின்ற மகளிடம் , "அம்மு புரிஞ்சுக்கோடா.உனக்கு அடுத்து அனு வேற இருக்காடா ,இரண்டே வயது வித்தியாசத்தில்.நானும் அப்பாவும் நல்ல நிலைமையில் இருக்கும் போதே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிக்கணும் னு இருக்கோம்டி.என் கண்ணு ல.போம்மா ,இந்த புடவையை கட்டு " என்று விட்டு நகர்ந்தார்,ஜெயந்தி.
அமுதா ,சிவக்குமார் - ஜெயந்தியின் மூத்த மகள்; அனுவின் இனிய தமக்கை.அனுவிற்க்கும் அமுதா விற்கும் இரண்டு வயது வித்தியாசம் என்றாலும் இருவரும் தோழிகள் போல் தான் இருப்பார்கள்.அமுதா‌ வின் அப்பா‌ கோவை மாநகராட்சி அரசு பள்ளி ஆசிரியர்.ஜெயந்தி ஒரு இனிய இல்லத்தரசி.அளவில் சிறிது எனினும் அன்பில் பெரியது,இந்த நால்வர் கூடு.
அமுதா இயல்பிலே அமைதியான அமைதியான பெண்; வேளாண்மை இளங்கலைப் பட்டதாரி. வேலைக்கான தேர்விற்கு படித்து கொண்டிருக்கிறாள்.இந்த நேரத்தில் தான் ஊட்டியில் இருந்து வந்து சம்பந்தம்.எப்போதும் எதையும் மறுத்து பேசாத மகளின் எதிர்ப்பு மனதை தைத்தாலும் வேலைகளில் ஈடுபட்டார்.
வாசலில் கார் சத்தம் கேட்டு , சிவக்குமார் வெளியே சென்று மாப்பிள்ளை வீட்டாரை மனதார வீட்டிற்குள் வரவேற்றார்.மாப்பிள்ளை கார்த்திகேயன் ஒரு இளம் மருத்துவர்; அவனது தந்தை சுப்பிரமணியமும்
மருத்துவர்;தாய் சுவர்ணா இல்லத்தலைவி. தந்தை யும் மகனும் ஊட்டியில் சொந்த மருத்துவமனை கட்டி மக்களுக்கு நன்முறையில் மருத்துவம் செய்து வருகின்றனர். ஒருமுறை மருதமலையில் தற்செயலாக அமுதா வை பார்த்த கார்த்திகேயனின் பெற்றோர்க்கு அவளை மிகவும் பிடித்து விட்டது; தீவிர விசாரணை க்கு பிறகு இன்று மகனுடன் பெண் கேட்டு வந்திருக்கின்றனர்.
வந்தவர்கள் அனைவரும் ஷோபாவில் வீற்றிருக்க சிவக்குமார் ஒரு மர நாற்காலியை ஆக்கிரமித்து இருந்தார்.
நெய் மணக்கும் கேசரி, சூடான பஜ்ஜி ( அதானே நம் பாரம்பரியம்) அடங்கிய டிபன் தட்டுகளை அனைவரிடமும் கொடுத்தார், ஜெயந்தி. "என்னம்மா , அம்மு வை கூட்டி வரலை " என்ற கணவரிடம்," இதோங்க . அனு அக்காவை கூட்டி வாடா" .
ரோஜா நிற பட்டில் மலர்ந்த தாமரை போல் இருந்த அமுதாவை பார்த்த கண்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் மலர்ந்தன , முக்கியமான ஒரு ஜோடி கண்களை தவிர .அதான் அமுதாவை பார்த்த கணத்திலிருந்து கார்த்திகேயன் முகம் தீவிர யோசனையிலும் இறுக்கத்திலும் இருந்தது. அமுதா ஒவ்வொருத்தரிடமாய் காபியை கொடுத்து விட்டு மெல்ல கார்த்திகேயன் அருகில் வந்தாள்;மெல்ல நிமிர்ந்த அவள் கண்கள் அவனை கண்டதும் பயத்திலும் வியப்பிலும் விரிந்தன.
🌹🌹🌹🌹🌹
-தொடரும்

"அமுதா அடியே அமுதா எங்கடி போன . மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போற நேரம் ஆகுது. இப்போ ஒழுங்கு மரியாதையாக தயாராகுரியா இல்லையா" என்று கோபத்துடன் கத்தி கொண்டிருந்தார்,ஜெயந்தி.மழையில் நனைந்த கோழி குஞ்சு போல் பயந்தபடியே தாயின் அருகில் நின்று கரம் பிடித்து ,"அம்மா எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை .என்னை விட்டு விடுங்கள் "என்றாள்,மகள். உள்ளே உருகினாலும் விறைப்பாக "சரிடி கல்யாணம் பிடிக்காததற்கு ஒரு காரணம் சொல்லு அப்பா கிட்ட நான் பேசறேன்".காரணம் உள்ளது, வலுவாக.ஆனால் அதை யாரிடமும் சொல்லும் நிலையில் அவள் இல்லை.

ரோஜா நிற பட்டில் மலர்ந்த தாமரை போல் இருந்த அமுதாவை பார்த்த கண்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் மலர்ந்தன , முக்கியமான ஒரு ஜோடி கண்களை தவிர .அதான் அமுதாவை பார்த்த கணத்திலிருந்து கார்த்திகேயன் முகம் தீவிர யோசனையிலும் இறுக்கத்திலும் இருந்தது. அமுதா ஒவ்வொருத்தரிடமாய் காபியை கொடுத்து விட்டு மெல்ல கார்த்திகேயன் அருகில் வந்தாள்;மெல்ல நிமிர்ந்த அவள் கண்கள் அவனை கண்டதும் பயத்திலும் வியப்பிலும் விரிந்தன.​
🌹🌹🌹🌹🌹
-தொடரும்
 
அன்புள்ள சகோதர சகோதரிகளே,நான் ஆர்த்தி மனு.இந்த தளத்திற்கு புதிது.தாங்கள் ஓய்வு வேளையில் நான் எழுதும் நாவல்களை படித்து மேலான தங்கள் கருத்துக்களை கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கண்டிப்பாக படிப்போம் சிஸ் . கீப் ராக்கிங்.... எங்களின் கருத்துகளைக் கூறுவோம்...
 
மனம் போல் மாங்கல்யம்-1 "அமுதா அடியே அமுதா எங்கடி போன . மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போற நேரம் ஆகுது. இப்போ ஒழுங்கு மரியாதையாக தயாராகுரியா இல்லையா" என்று கோபத்துடன் கத்தி கொண்டிருந்தார்,ஜெயந்தி.மழையில் நனைந்த கோழி குஞ்சு போல் பயந்தபடியே தாயின் அருகில் நின்று கரம் பிடித்து ,"அம்மா எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை .என்னை விட்டு விடுங்கள் "என்றாள்,மகள். உள்ளே உருகினாலும் விறைப்பாக "சரிடி கல்யாணம் பிடிக்காததற்கு ஒரு காரணம் சொல்லு அப்பா கிட்ட நான் பேசறேன்".காரணம் உள்ளது, வலுவாக.ஆனால் அதை யாரிடமும் சொல்லும் நிலையில் அவள் இல்லை.
அமைதியாக நின்ற மகளிடம் , "அம்மு புரிஞ்சுக்கோடா.உனக்கு அடுத்து அனு வேற இருக்காடா ,இரண்டே வயது வித்தியாசத்தில்.நானும் அப்பாவும் நல்ல நிலைமையில் இருக்கும் போதே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிக்கணும் னு இருக்கோம்டி.என் கண்ணு ல.போம்மா ,இந்த புடவையை கட்டு " என்று விட்டு நகர்ந்தார்,ஜெயந்தி.
அமுதா ,சிவக்குமார் - ஜெயந்தியின் மூத்த மகள்; அனுவின் இனிய தமக்கை.அனுவிற்க்கும் அமுதா விற்கும் இரண்டு வயது வித்தியாசம் என்றாலும் இருவரும் தோழிகள் போல் தான் இருப்பார்கள்.அமுதா‌ வின் அப்பா‌ கோவை மாநகராட்சி அரசு பள்ளி ஆசிரியர்.ஜெயந்தி ஒரு இனிய இல்லத்தரசி.அளவில் சிறிது எனினும் அன்பில் பெரியது,இந்த நால்வர் கூடு.
அமுதா இயல்பிலே அமைதியான அமைதியான பெண்; வேளாண்மை இளங்கலைப் பட்டதாரி. வேலைக்கான தேர்விற்கு படித்து கொண்டிருக்கிறாள்.இந்த நேரத்தில் தான் ஊட்டியில் இருந்து வந்து சம்பந்தம்.எப்போதும் எதையும் மறுத்து பேசாத மகளின் எதிர்ப்பு மனதை தைத்தாலும் வேலைகளில் ஈடுபட்டார்.
வாசலில் கார் சத்தம் கேட்டு , சிவக்குமார் வெளியே சென்று மாப்பிள்ளை வீட்டாரை மனதார வீட்டிற்குள் வரவேற்றார்.மாப்பிள்ளை கார்த்திகேயன் ஒரு இளம் மருத்துவர்; அவனது தந்தை சுப்பிரமணியமும்
மருத்துவர்;தாய் சுவர்ணா இல்லத்தலைவி. தந்தை யும் மகனும் ஊட்டியில் சொந்த மருத்துவமனை கட்டி மக்களுக்கு நன்முறையில் மருத்துவம் செய்து வருகின்றனர். ஒருமுறை மருதமலையில் தற்செயலாக அமுதா வை பார்த்த கார்த்திகேயனின் பெற்றோர்க்கு அவளை மிகவும் பிடித்து விட்டது; தீவிர விசாரணை க்கு பிறகு இன்று மகனுடன் பெண் கேட்டு வந்திருக்கின்றனர்.
வந்தவர்கள் அனைவரும் ஷோபாவில் வீற்றிருக்க சிவக்குமார் ஒரு மர நாற்காலியை ஆக்கிரமித்து இருந்தார்.
நெய் மணக்கும் கேசரி, சூடான பஜ்ஜி ( அதானே நம் பாரம்பரியம்) அடங்கிய டிபன் தட்டுகளை அனைவரிடமும் கொடுத்தார், ஜெயந்தி. "என்னம்மா , அம்மு வை கூட்டி வரலை " என்ற கணவரிடம்," இதோங்க . அனு அக்காவை கூட்டி வாடா" .
ரோஜா நிற பட்டில் மலர்ந்த தாமரை போல் இருந்த அமுதாவை பார்த்த கண்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் மலர்ந்தன , முக்கியமான ஒரு ஜோடி கண்களை தவிர .அதான் அமுதாவை பார்த்த கணத்திலிருந்து கார்த்திகேயன் முகம் தீவிர யோசனையிலும் இறுக்கத்திலும் இருந்தது. அமுதா ஒவ்வொருத்தரிடமாய் காபியை கொடுத்து விட்டு மெல்ல கார்த்திகேயன் அருகில் வந்தாள்;மெல்ல நிமிர்ந்த அவள் கண்கள் அவனை கண்டதும் பயத்திலும் வியப்பிலும் விரிந்தன.
🌹🌹🌹🌹🌹
-தொடரும்

"அமுதா அடியே அமுதா எங்கடி போன . மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போற நேரம் ஆகுது. இப்போ ஒழுங்கு மரியாதையாக தயாராகுரியா இல்லையா" என்று கோபத்துடன் கத்தி கொண்டிருந்தார்,ஜெயந்தி.மழையில் நனைந்த கோழி குஞ்சு போல் பயந்தபடியே தாயின் அருகில் நின்று கரம் பிடித்து ,"அம்மா எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை .என்னை விட்டு விடுங்கள் "என்றாள்,மகள். உள்ளே உருகினாலும் விறைப்பாக "சரிடி கல்யாணம் பிடிக்காததற்கு ஒரு காரணம் சொல்லு அப்பா கிட்ட நான் பேசறேன்".காரணம் உள்ளது, வலுவாக.ஆனால் அதை யாரிடமும் சொல்லும் நிலையில் அவள் இல்லை.
அமைதியாக நின்ற மகளிடம் , "அம்மு புரிஞ்சுக்கோடா.உனக்கு அடுத்து அனு வேற இருக்காடா ,இரண்டே வயது வித்தியாசத்தில்.நானும் அப்பாவும் நல்ல நிலைமையில் இருக்கும் போதே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிக்கணும் னு இருக்கோம்டி.என் கண்ணு ல.போம்மா ,இந்த புடவையை கட்டு " என்று விட்டு நகர்ந்தார்,ஜெயந்தி.
அமுதா ,சிவக்குமார் - ஜெயந்தியின் மூத்த மகள்; அனுவின் இனிய தமக்கை.அனுவிற்க்கும் அமுதா விற்கும் இரண்டு வயது வித்தியாசம் என்றாலும் இருவரும் தோழிகள் போல் தான் இருப்பார்கள்.அமுதா‌ வின் அப்பா‌ கோவை மாநகராட்சி அரசு பள்ளி ஆசிரியர்.ஜெயந்தி ஒரு இனிய இல்லத்தரசி.அளவில் சிறிது எனினும் அன்பில் பெரியது,இந்த நால்வர் கூடு.
அமுதா இயல்பிலே அமைதியான அமைதியான பெண்; வேளாண்மை இளங்கலைப் பட்டதாரி. வேலைக்கான தேர்விற்கு படித்து கொண்டிருக்கிறாள்.இந்த நேரத்தில் தான் ஊட்டியில் இருந்து வந்து சம்பந்தம்.எப்போதும் எதையும் மறுத்து பேசாத மகளின் எதிர்ப்பு மனதை தைத்தாலும் வேலைகளில் ஈடுபட்டார்.
வாசலில் கார் சத்தம் கேட்டு , சிவக்குமார் வெளியே சென்று மாப்பிள்ளை வீட்டாரை மனதார வீட்டிற்குள் வரவேற்றார்.மாப்பிள்ளை கார்த்திகேயன் ஒரு இளம் மருத்துவர்; அவனது தந்தை சுப்பிரமணியமும்
மருத்துவர்;தாய் சுவர்ணா இல்லத்தலைவி. தந்தை யும் மகனும் ஊட்டியில் சொந்த மருத்துவமனை கட்டி மக்களுக்கு நன்முறையில் மருத்துவம் செய்து வருகின்றனர். ஒருமுறை மருதமலையில் தற்செயலாக அமுதா வை பார்த்த கார்த்திகேயனின் பெற்றோர்க்கு அவளை மிகவும் பிடித்து விட்டது; தீவிர விசாரணை க்கு பிறகு இன்று மகனுடன் பெண் கேட்டு வந்திருக்கின்றனர்.
வந்தவர்கள் அனைவரும் ஷோபாவில் வீற்றிருக்க சிவக்குமார் ஒரு மர நாற்காலியை ஆக்கிரமித்து இருந்தார்.
நெய் மணக்கும் கேசரி, சூடான பஜ்ஜி ( அதானே நம் பாரம்பரியம்) அடங்கிய டிபன் தட்டுகளை அனைவரிடமும் கொடுத்தார், ஜெயந்தி. "என்னம்மா , அம்மு வை கூட்டி வரலை " என்ற கணவரிடம்," இதோங்க . அனு அக்காவை கூட்டி வாடா" .

🌹🌹🌹🌹🌹
-தொடரும்
நல்ல ஆரம்பம் சிஸ்....
அமுதா பயப்படவும் வியக்கவும் காரணம் என்ன...?
மாப்பிள்ளை ஏன் அமுதாவை பார்த்ததும் இறுக்கமாக ஆனான்..
ஏற்கனவே அமுதாவை அவனிற்கு தெரியுமா...?
 
அப்டேட் போடும் போது நல்லா செக் பண்ணிட்டு போடுங்க சிஸ்..
அத்தியாயம் இரண்டு முறை பேஸ்ட் ஆகியிருக்கிறது...

ஒரு பத்தி முடிந்ததும் ஒரு வரி இடைவெளி கொடுங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்...

வார்த்தை நடை அழகாக இருக்கிறது. அதோடு பிழையின்றியும் எழுதுகிறீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள் சிஸ்.. வாழ்த்துகள் சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
 
Arthi manu

✍️
Writer
நன்றி சகோதரி 😍😍இன்று இரண்டாவது அத்தியாயம் பதிவிடுகிறேன் சகோதரி
 
Arthi manu

✍️
Writer
2.மனம் போல் மாங்கல்யம்:
மாப்பிள்ளை வீட்டார் சென்று விட்டிருந்தனர்; மழை பெய்து ஓய்ந்த பாவனையை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது, அமுதாவின் வீடு .தாய் ஜெயந்தி அடுக்களையில் ஏதோ வேலையாக இருந்தார்; சிவக்குமார் யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்; அனு தோழி வீட்டிற்கு சென்றிருந்தாள்.

அமுதாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை. பெண் பார்க்கும் படலத்தின் போது அவள் செவிகள் பணிபுரிந்தனவா என்ற ஐயப்பாடு அவளுக்கு இன்னும் நீங்கவில்லை. ஏனெனில் கார்த்திகேயன் அவள் முகம் பார்த்து அனைவரின் முன்பும் கூறிய சொற்கள் அவளை பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாக்கிருந்தன. அவனிடம் இருந்து அவள் இதை எதிர்பார்க்கவில்லை. மனம் தானாக இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது

இரண்டு வருடங்களுக்கு முன்
கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊட்டியில் நடக்கவிருக்கும் அகில இந்திய
விளையாட்டு போட்டிகளுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.அப்போது அமுதா மூன்றாம் வருட மாணவி. அவள் இயல்பில் நன்றாக ஓடும் திறமை உள்ளவள்.எனவே தடகள போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ பட்டியலில் அவள் பெயரும் இடம் பெற்றிருந்தது.
பேருந்து கிளம்ப போவதை அறிவிக்க ஹாரனை அழுத்தினார், ஓட்டுனர். அனைத்து மாணவ மாணவிகளும் தம் தோள் பைகளுடன் ஏறி கொண்டனர்.அமுதாவின் தந்தை பேருந்து சன்னல் வழியே அவளுடன் பேசிக் கொண்டிருந்தார் ; " அம்மு பார்த்து போய் வா டா ; கவனம் , நன்றாக உண்; முன் பின் தெரியாதவங்களோட அதிகம் பேச வேண்டாம் என்னடா " என்றவரின் கையை " சரிப்பா" என்று அழுத்தவும் பேருந்து நகரவும் சரியாக இருந்தது.தந்தை அறிவுரை படி நடந்து கொள்ளாமல் போனதற்கு பின்னாளில் அவள் பெரிதாக வருத்தம் கொள்ளும் படி ஆனது.

ஊட்டி மலை உண்மையிலேயே உன்னதமாய் இருந்தது; கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதே சிலிர்ப்பை ஊட்டியது; ஊட்டி குளிர் மிதமாக இருந்தது; நல்ல சீசன் வேறு. மறுநாள் போட்டிகள் தொடங்க போகும் நிலையில் முதல் நாள் ஊர் சுற்ற தயாராகினர் , அமுதா( ம)அவள் தோழியர் குழு. அங்கிருந்த கிறித்தவ பள்ளியில் அவர்களுக்கு தங்க இடம் கிடைத்திருந்தது.

அமுதா வெள்ளை நிற சுடிதார் டாப் , பிங்க் நிற பாட்டம்( ம) துப்பட்டா என அம்சமாக இருந்தாள்; விரித்த கூந்தல் அவளை தேவதை போல் காட்டியது. தோழிகள் அனைவரும் ஊட்டியின் அழகில் உலகையே மறந்து உல்லாச பறவைகளாய் திரிந்து கொண்டிருந்தனர். போன் மெமரி நிரம்பும் வரை நிறைய புகைப்படங்கள் எடுத்தார்கள்.எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தது, பொட்டானிக்கல் கார்டன் செல்லும் வரை.

ரோஸ் கார்டனில் பல விதமான ரோஜாக்களை ரசித்து விட்டு, தொட்டபெட்டா சிகரத்தை தரிசித்து அதனை குறித்து வியந்து விட்டு பொட்டானிக்கல் கார்டன் சென்றனர்.
பொட்டானிக்கல் கார்டனில் அனைவரும் உள்ளே சென்று விட்டனர். அமுதா மாத்திரம் அனு ரொம்ப நாளாய் கேட்டு கொண்டிருந்த தொப்பி இருந்த கடையை நோக்கி சாலையை கடக்க முற்பட்டாள்.அப்போது தான் அமுதா அவனை பார்த்தாள். வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பாண்ட்டும் அணிந்திருந்தான்.கைப்பேசியில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். ஆறடி உயரத்தில் கம்பீரமாக இருந்தான்.அமுதா அவனை சைட் அடிக்கவில்லை என்றாலும் அவளால் அவன் மீது வைத்த கண்களை எடுக்க முடியவில்லை.இந்நிலையில் தான் அது நடந்தது.
🌹🌹🌹🌹🌹🌹

- தொடரும்
 
Arthi manu

✍️
Writer
அப்டேட் போடும் போது நல்லா செக் பண்ணிட்டு போடுங்க சிஸ்..
அத்தியாயம் இரண்டு முறை பேஸ்ட் ஆகியிருக்கிறது...

ஒரு பத்தி முடிந்ததும் ஒரு வரி இடைவெளி கொடுங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்...

வார்த்தை நடை அழகாக இருக்கிறது. அதோடு பிழையின்றியும் எழுதுகிறீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள் சிஸ்.. வாழ்த்துகள் சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
கண்டிப்பாக இன்னும் கவனம் செலுத்துகிறேன் சிஸ் 😊👍
 
சூப்பர் சிஸ்... செமையா போகுது....
அமுதாக்கு முன்னாடியே கார்த்திக் தெரியும்னு நெனச்சேன்..
அப்படி என்னதான் நடந்துச்சு...
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்....
 
கண்டிப்பாக இன்னும் கவனம் செலுத்துகிறேன் சிஸ் 😊👍
எழுத்து நடை... கதை நகர்வு... பிழையின்மை... எல்லாமே சூப்பர் சிஸ்...

போன அப்டேட் விட இப்போ கரெக்டா பார்த்துட்டு போஸ்ட் போட்டு இருக்கீங்க...

ஒரு சின்ன ஆலோசனை சிஸ்..
மனம் போல் மாங்கல்யம் - 2
Ithu pola update title kodunga.
title end la : Venam....
Title kum story starting kum oru line space kodunga....

Update update ah unga story thread la separate ah post podunga.

Ore thread la next next nu potta angeye readers comments then athuku aduthu unga next update then athuku comments nu collapse agum..

இது எனக்கு தெருஞ்ச ஐடியா சிஸ்.. நம்ம சைட்ல ஆத்தர்ஸ் எல்லாம் போடறாங்கல அது ஒரு தடவை பார்த்தால் உங்களுக்கு ஐடியா கிடைக்கும்...

உங்கள் கதை நன்றாக போகிறது.. இந்த மாற்றங்களும் செய்தால் நிறைய பேர் எளிதாக படிப்பார்கள்...
 
Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom