• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

❤️இறுதி அத்தியாயம்❤️

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம் - 21❤️

சேகர் ஐ பி எஸ் மலேசியன் போலிஸின் உதவியை நாடியதற்கு பதிலாக அவர்களும் உதவுவதற்கு ஒப்புகொள்ள, அவர்களின் உதவியோடும் துணையோடும் வினோத் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர்.

அவ்வீடு தனிமையில் இருந்ததாலும் அவ்வீட்டை சுற்றியுள்ள பகுதியில் மக்கள் நடமாட்டமும் வீடுகளும் இல்லாமல் போனதாலும் இவர்களின் இந்த எதிர்பாரா ஆபரேசனினால் பொது மக்களுக்கு எந்த இடையூறும் வராமல் இருந்தது.

அந்த வீட்டின் பாதுகாப்பிற்கு சிசிடிவிக்கள் மட்டுமே துணையாய் இருக்க, வேலைக்காரர்கள் வாட்ச்மேன் என யாரும் இல்லாது நிசப்தமாய் இருந்த அவ்வீட்டின் கேட்டை தாண்டி நுழைந்த பூட்ஸ் கால்களோ சிசிடிவி கேமராக்களை திறம்பட செயலிழக்க செய்ய,

அங்கு சேகர் ஐ பி எஸ்ஸோ அவரின் காதின் வழி மாட்டபட்டிருந்த பிளூடூத் மூலமாக தொடர்பில் இருந்த சத்யமூர்த்திக்கு இங்கு நடப்பதை ரகசிய குரலில் மெதுவாய் கூறியபடியே வினோத்தின் வீட்டினை சுற்றி வளைத்தார்.

அவ்வீட்டை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலிஸார் நிற்க உள்ளிருக்கும் சூழலை கிரகிக்க முடியா நிலையில் வேறுவழியில்லாத சேகரோ காலிங் பெல்லை மெதுவாய் அழுத்தியபடி மறைமூகமாய் நின்று கொண்டார்.

அவரின் செயலிற்கு பலனாய் யாருமே கதவை திறக்காது போகவே வேறு வழியின்றி கதவை உடைத்து கொண்டு வீட்டினுள்ளே நுழைந்த போலிஸாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

சேகர் ஐ பி எஸ்ஸும் மலேசியன் போலிஸாரும் வேகமாய் உள்நுழைய, அவர்களை வரவேற்றதென்னவோ ஷோபாவிற்கு அருகிலிருந்த டேபிளில் பாதி சிதைந்த நிலையிலிருந்த வினோத்தின் வெட்டபட்ட
தலை தான்.

அதனை பார்த்த மலேசியன் போலிஸார் எச்சிலை விழுங்க சேகர் ஐ பி எஸ்ஸோ அந்த தலையின் சிதையாத மறுபக்கத்தில் சின்னதாய் படபடத்து கொண்டிருந்த காகித துண்டை எடுக்க செல்ல மலேசியன் போலிஸ் தடுத்தும் அவர்களின் பேச்சை அலட்சியம் செய்து முன்னேறினார்.

அங்கு சத்யமூர்த்திக்கோ மலேசியன் போலிஸின் தடுப்பும் சேகரின் மெளனமும் கலகத்தை உண்டாக்கிட,
இங்கு சேகரோ கிளவுஸ் அணிந்த கையால் வினோத்தின் தலையினில் ஒட்டபட்டிருந்த துண்டு சீட்டினை எடுத்து பார்க்க அதிலோ,


100
BY MASTER MIND


என எழுதியிருந்தது.

அதனை கண்டு தடுமாறியவரோ தனது பாதத்தினை ஒரடி முன்னால் எடுத்து வைக்க, அவரின் காலில் வினோத்தின் உடலை சேர்ந்த சிறிய துண்டு தட்டுபட்டது.

ஆம்!

வினோத்தின் தலை பகுதி வெட்டபட்டு ஒருபக்கம் மட்டும் சிதைக்கபட்டிருக்க, அவனின் உடலை சார்ந்த பிற பாகங்களோ துண்டு துண்டாய் அறுக்கபட்டு அவனின் தலைபகுதி கிடந்த டேபிளினை சுற்றி அலங்காரமாய் வைக்கபட்டிருந்தது.

வினோத்தின் சுண்டு விரலே ஆறு துண்டுகளாக வெட்டபட்டிருக்க அவனின் முழு உடலின் பாகங்கள் யாவுமே எந்தெந்த பகுதியென அடையாளம் காண முடியாதளவிற்கு கூறுபோட்டு வெட்டிய நிலையில் வினோத்தின் சிதையாத பாதி தலைபகுதியை கொண்டே இது வினோத்தின் சடலமென அடையாளம் காண முடிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன சேகரை பிளூடுத் வழிகேட்ட சத்யமூர்த்தியின் குரலே சுயநினைவிற்கு கொண்டு வர,

உடனே சேகரோ சத்யமூர்த்தியிடம், "சத்யா சார், இங்க வினோத் செத்து போயிருக்கான்; அவனை கொன்னது வேற யாருமில்ல நான் இவ்ளோ நாளா தேடியலைஞ்ச மாஸ்டர் மைண்ட் தான்; அவன் போலிஸுக்கு சவால் விட்டமாதிரியே நூறு பேரை கொன்னுட்டான் சார்; அவனோட நூறாவது டார்கெட் வினோத் தான் இதுவரை அவன் ரேன்டம்மா யாரையோ கொலை பண்றானோனு யோசிச்சேன் ஆனா இப்போதான் விஷயமே புரியுது அவன் கொன்னவங்க எல்லாருமே சட்டத்தாலயே தண்டிக்கபடாத குற்றவாளிகள் சார் இதுக்கு முன்னாடி அவன் கொன்ன ஒரு கொலைக்கும் இதே ஒற்றுமை தான் இருக்கு சார் என கூற,

அதனை கேட்ட சத்யமூர்த்தியின் கண்களோ பிரமிப்பில் விரிய, உடனே அவர் சேகர் ஐ பி எஸ்ஸிடம், "சார், இப்போ நம்ம ஒண்ணு பண்ணலாம் இதைபத்தி நம்ம யாருக்குமே தகவல் சொல்ல வேணாம்; உலகத்தை பொறுத்தவரை வினோத் எப்பயோ விபத்துல இறந்த மாதிரியே இருக்கட்டும்; இப்போ நம்ம தேடுனதும் மாஸ்டர் மைண்ட் கொன்னதும் வெளியில தெரிஞ்சா அவன் ஹீரோவா மாறிடுவான் அதுவும் சட்டத்தாலயே தண்டிக்கபடாத குற்றவாளியை கொல்லுறானா மக்கள் எல்லாரும் உங்க டிபார்ட்மெண்ட்டை தான் திட்டுவாங்க அவ்ளோ ஏன் இது வெளியில தெரிஞ்சா சட்டத்தையோ காவல் துறையையோ யாருமே மதிக்க மாட்டாங்க; அதுனால வினோத்தோட ரகசியம் நமக்குள்ளவே ரகசியமா புதையட்டும்" என கூற

அதனை கேட்ட சேகர் ஐ பி எஸ்ஸோ, "ஆமா சார், நானும் இதேதான் நினைச்சேன்; ஆல்ரெடி அவனால எங்க டிபார்ட்மெண்ட்டுக்கு கெட்ட பேரு இதுல இதுவும் சேர்ந்துச்சுனா அவ்ளோதான்; என்கிட்ட மலேசியன் போலிஸ் உதவியை நாடுனதை யாருக்காவது தெரிஞ்சு கேட்டா கூட வேற விஷயத்தை சொல்லி சமாளிச்சிடுறேன்; இது ரகசியமாவே நமக்குள்ள புதைஞ்சு போகட்டும்" என கூறியவரோ வினோத்தின் பாடியை அங்கிருந்து ரகசியமாய் அப்புறபடுத்த துவங்கினார்.

அதேசமயம் இங்கு ஒரு விமானத்தின் ஸடையிலாக ஆண்கள் உடையில் கம்பீரமாய் அமர்ந்திருந்த நபரிடம் விமான பணிப்பெண் ஜுஸினை நீட்ட, அதனை வாங்கியபடியே புன்னகை ஏந்திய உதடுகள் வெற்றி மிதப்பில் திமிர் புன்னகையை சிந்திட, அந்நபரின் நினைவுகளோ சில காட்சிகளை வேகமாக அசைபோட துவங்கிட; அதனை எண்ணியபடியே மனதிற்குள் பேசிக் கொண்டார்.

'சேகர் ஐ பி எஸ், உன்னை சுத்தியிருக்கிற கருப்பாடு கூட்டத்தை பத்தி தெரியாமலேயே ஏமாளியா இருக்கீயே; உன்கூட வேலை பார்த்த போலிஸே வினோத்தை வேற வண்டியில ஏத்திவிட்டு அவனை வைச்சிருந்த வாகனம் வெடிச்சமாதிரி உன்னைய வேணா நம்ப வைச்சிருக்கலாம்; ஆனா அங்க நடந்ததை முதல்ல இருந்தே மறைஞ்சிருந்து வேடிக்கை பார்த்து பைக்குல கிளம்புன நான் அதை
நம்பவே மாட்டேன்,

'சரி போனா போகட்டும் அந்த வினோத் எவ்ளோதூரம் தான் தப்பிப்பான்னு வெயிட் பண்ணி பார்த்தா, தன்னோட அடையாளத்தையே மொத்தமா மாத்தி வெளிநாட்டுக்கே தப்பிச்சு போயிருக்கான்; உயிரோட இருந்தவனையே செத்துட்டானு நம்ப வைச்சிருக்காங்க இதையெல்லாம் பார்த்துட்டு போலிஸ் மேல இருந்த வெறுப்பும் கோபமும் எனக்கு அதிகமா தான் ஆச்சு,

'இப்படிபட்ட குள்ள நரிகளை தாண்டி உன்னைய மாதிரி நேர்மையான அதிகாரிங்க எல்லாம் நிஜ வாழ்க்கையில ஜெயிக்கவே முடியாதுனு தெளிவா புரிஞ்சுகிட்டேன்; அதான் அவனோட தண்டனையை உன்னோட டிபார்ட்மெண்ட் ஆளுங்களோட நரிதனத்தை நீயே புரிஞ்சகிட்டதுக்கு அப்புறமா தரலாம்னு தான் நீ வினோத்தை தேடி வரவரைக்கும் காத்திருந்தேன்; இப்போ என்னோட பிளான்படி நீயும் புரிஞ்சுகிட்ட வினோத்தும் செத்துட்டான் இனிமேலாவது நீ உன்னால முடிஞ்சளவுக்கு குள்ளநரிகளையும் தாண்டி குற்றவாளிகளுக்கு சட்டபடி தண்டனை வாங்கி தர முயற்சி பண்ணுவேல' என சிந்தித்தவனோ கர்வமாய் புன்னகைக்க,

அவனின் வெற்றி பயணமும் அழகாய் நிறைவடைந்து சென்னை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.

விமானத்திலிருந்து வெளியேறி செக்கின் எல்லாம் முடித்து கொண்டு வெளியே வந்த நபரோ அலைபேசியை ஆன் செய்ய, அப்பொழுது அந்நபரின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

அதனை உயிர்பித்து காதில் வைக்க எதிரிபுறமிருந்தவனோ, "மாஸ்டர் மைண்ட், நீ சொன்ன ஆளுங்களை எல்லாம் பத்திரமா நம்ம இடத்துக்கு தூக்கியாச்சு இனி நீ வந்ததும் வேலையை ஆரம்பிச்சிடு" என உற்சாகமாய் கூற அதனை கேட்ட மாஸ்டர் மைண்டின் முகத்தின் குரூர புன்னகை பரவியது.

💘💘💘💘💘

கவி அவளின் தெருவிலுள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கி கொண்டிருக்க, அப்பொழுது அவளின் தோளில் மேல் யாரோ கை வைத்ததில் வேகமாக திரும்பி பார்க்க,

அவளின் முன் குறும்பு புன்னகையுடன் காட்சி தந்தாள் நமது நாயகி அனுபிரியா.

அனுவை பார்த்த கவியின் முகத்தில் இவள் யாரென்ற குழப்ப ரேகைகள் படர, உடனே அனுவோ தனது கையிலிருந்த சிறு துண்டு பேப்பரை எடுத்து காட்டியவாறு,

"ஹாய் மேடம், எனக்கு இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்லுறீங்களா" என கேட்க,

அதனை வாங்கி பார்த்த கவிக்கோ அதிர்ச்சியில் மயக்கம் வராதது ஒன்றே குறையாய் இருந்தது.

உடனே தன்னை நிலைபடுத்தி கொண்டவளோ அனுவிடம், "இந்த வீடா, இது என்னோட வீட்டு அட்ரஸ் ஆச்சே; இங்க யாரை பார்க்க வந்திருக்கீங்க" என குழப்பமாய் கேட்க,

அதனை கேட்டு பெரிதாய் இதழ் விரித்து புன்னகைத்தவளோ, "அதெல்லாம் நான் இப்போ சொல்ல மாட்டேன்; நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அங்க வைச்சு யாருனு காட்டுறேன்" என கண்ணடித்து கூறியவளை பார்த்து குழம்பியவாறே கடைகாரரிடம் காய்கறிக்கான ரூபாயை தந்துவிட்டு அனுவை அழைத்துகொண்டு தனது வீட்டிற்கு விரைந்தாள்.

இங்கு கார்த்திக்கோ தனது வீட்டு வாசலிலே குட்டி போட்ட பூனையாய் நடையை கட்டியபடியே அனுவின் வருகைக்காக காத்திருக்க,

அவனின் தவிப்பினை கண்ட தாயோ, "ஏண்டா, இப்போ எதுக்கு நீ தேவையில்லாம இங்கயும் அங்கயும் நடக்குற, யாராவது முக்கியமானவங்க வர போறாங்களா என்ன.."என கேட்க,

அக்கேள்விக்கு சிரிப்பையே பதிலாக தந்தவனோ, "நீ சொல்றமாதிரி இப்போ வர போறவங்க முக்கியமானவங்க தான்மா, ஆனா அது யாருனு நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ" என கூறியவனோ தனது நடைபயிற்சியை தொடர,

அதனை கேட்டு குழம்பிய சாவித்திரியின் சிந்தையை கலைத்திடவே வீட்டின் கேட்டை திறந்து கொண்டு கவி நுழைய, அவளின் பின்னாலேயே நுழைந்த அனுவினை கண்டு உற்சாகமானவரோ அவளை நோக்கி வேகமாக ஓடினார்.

"அடடே அனுமா, நீ எப்படிடா எங்க வீட்டுக்கே வந்த; எப்படி டா கண்ணு இருக்க நல்லா இருக்கீயா" என பாசமாய் தலைகோதி வினவ,

தனது அன்னையவளின் பாசத்தில் குழம்பிய கவியோ, தம்பியவனின் முகத்தில் தோன்றிய பிரகாசத்தில் தெளிவடைந்து இவள் தான் கார்த்திக்கின் ஜுனியரோ என யோசிக்க துவங்கிட,

தான் அவளுடன் வந்த வழியெங்கும் பேசி பேசியே தன்னை ஈர்த்த பாங்கையும் அவளின் குறும்பு ததும்பும் பேச்சையும் யோசித்து பார்த்தவளோ அனுவின் காதினை பிடித்து திருகியபடி,

"அடியே வாலு! நீதான் என் தம்பியோட ஜீனியரா; என்னையவே யாரோ ஒருத்தி மாதிரி ஏமாத்தி எப்படியெல்லாம் நடிச்சிருக்க உன்னைய.." என மேலும் காதினை திருக,

அதற்கு அனுவோ, "அய்யோ அண்ணி, சாரி அண்ணி நான் சும்மா விளையாட்டுக்கு பண்ணேன் ஆஆஆ வலிக்குதே" என கத்த,

உடனே கவியின் கையை தட்டிவிட்ட சாவித்திரியோ, "அடியே, அவளே சின்ன பொண்ணு ஏதோ விளையாட்டுதனமா பண்ணிருப்பா; அதுக்கு போய் இப்படியா காதை பிடிச்சு திருகுவ ஓரமா போடி" என விரட்டியவரோ,

அனுவிடம், "அனுமா, உனக்கு ஒண்ணும் வலிக்கலீயே; அவ இப்படிதான் எப்போ பார்த்தாலும் லூசு மாதிரி பண்ணுவா நீ வாடா செல்லம் நம்ம உள்ள போகலாம்" என அழைத்து செல்ல,

அதனை கண்ட கவியோ கார்த்திக்கிடம், "டேய் தம்பி, இங்க என்னடா நடக்குது எப்பயும் என்னைய பொறுப்பான பொண்ணுனு சொல்ற அம்மாவை லூசு பொண்ணுனு சொல்ல வைச்சிச்சிட்டா; அப்படி என்ன மாயாஜாலம் பண்ணா.." என குழம்பி போய் விழிக்க,

அதனை கேட்டு அசடு வழிந்தவனோ, "அதெல்லாம் அப்படி தான்க்கா, அவகிட்ட பேசுனாலே எல்லாரும் இம்பிரஸ் ஆகிடுவாங்க" என கூறியவனை முறைத்தவளோ,

வீட்டிற்கு நுழையும் அனுவை வலது கால் வைத்து வர சொல்லுவதற்காக வாயை திறக்க அதற்குள் அனுவே தன்னிச்சை செயலாக வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் செல்ல அதனை பார்த்தவளோ,

"கார்த்திக், உன்னோட ஜீனியர் மாயகாரி மட்டுமில்லடா சரியான கேடி; பாரு இத்தனை கலவரத்துலயும் கரெக்டா வலது கால் எடுத்து வைச்சு போறா பாரேன்" என கூறிட,

அதற்கு கார்த்திக்கோ, "இதுக்கே இப்படினா, வீட்டுக்குள்ள போய் அப்பாகிட்ட என்னென்ன கூத்தெல்லாம் பண்ணுவாளோ சீக்கிரம் வா; அதையும் மிஸ் பண்ணாம பார்த்து தெரிஞ்சிப்போம்" என கவியின் கையை பிடித்து இழுத்து கொண்டு வீட்டிற்குள் நுழைய,

அதற்குள் அனுவோ வீட்டிற்குள் கணேசனின் காலில் விழுந்து தனது பர்பாமண்ஸை காட்ட துவங்கி விட்டாள்.

அனுவின் திடீர் வருகையில் திக்குமுக்காடிய சாவித்திரியோ அவளிற்காக விதம் விதமாய் சமைத்து தர கிட்சனுக்கு விரைய,

அப்பொழுது கணேசனிடம் உரையாடி கொண்டிருந்த அனுவோ அவர் தனது ரூமிற்கு சென்றபிறகு கவியிடம் பேச வந்தாள்.

"வாங்க மேடம், எங்க அம்மாகிட்ட வகையா மாட்டிவிட்டு இப்போ என்ன பாசமா வரீங்க; அதுவும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணினு வேற வருது என்ன விஷயம்" என கலாய்க்க,

அதற்கு அனுவோ, "அது ஒண்ணுமில்லை அண்ணி, நம்ம எல்லாருமே ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிட்டோம் அப்படி இருக்கும்போது இப்போவே உறவுமுறை சொல்லி கூப்பிட்டா தானே பழக்கிக்க முடியும்; அதுமட்டும் இல்லாம நிச்சயத்தப்போ நான் நீங்க இருந்த இடத்தை தான் சுத்தி சுத்தி வந்தேன்; அப்போ நீங்க என்னைய கண்டுக்காம இருந்தீங்கல அதுக்கு உங்களை பழிவாங்குறதுக்காக தான் அம்மாகிட்ட மாட்டி விட்டுட்டேன்" என கூறிட,

உடனே கவியோ, "ஓ அப்படியா ஜீனியர் மேடம், ஆனா பாருங்களேன் அன்னைக்கு உங்களை பார்த்தவங்க எல்லாருமே நீங்க உங்க சீனியர் பின்னாடி தான் சுத்துனதா சொல்லுறாங்க; ஆனா நீங்க இப்படி சொல்றீங்களே இதுல எது மேடம் உண்மை" என கேட்க,

அதற்கு அனுவோ அசடுவழிந்தபடியே, "அதுவா அண்ணி, அன்னைக்கு சீனியர் உங்களை சுத்தியே சுத்துனாரா; அதான் நான் அன்னைக்கு உங்க பின்னாடி சுத்துனது சீனியர் பின்னாடி சுத்துற மாதிரி தெரிஞ்சிருக்கு" என சமாளித்தவளோ,
கவியிடம் தான் பேச நினைத்த முக்கியமான விஷயத்தை பேச துவங்கினாள்.

"அப்புறம் அண்ணி, முதல்ல நான் உங்களை பாராட்டியே ஆகணும் அது என்னனா சீனியரோட பக்குவமான குணத்துக்கு நீங்க தானே அதிகபட்சம் வழிகாட்டியா இருந்திருக்கீங்க; அவரோட பல குழப்பமான சூழலுக்கு விடையை தந்து நிறைய வழிகாட்டி அவரோட கஷ்டம் எதுவா இருந்தாலும் உங்களை தேடி வந்து சொல்ற அளவுக்கு பக்கபலமா இருந்திருக்கீங்க; நான் சீனியரை விட்டு விலகுனப்போ கூட நீங்க தான் அவருக்கு துணையா சப்போர்ட் பண்ணிருக்கீங்க இதையெல்லாம் நினைச்சாலே பெருமையாவும் ஆச்சர்யமாவும் இருக்கு அண்ணி; உங்களோட இந்த அழகான பாசத்தை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு" என கண்கள் மின்ன கூற,

அதனை கேட்ட கவியின் சிந்தனையோ அனுவை பிரிந்த கார்த்திக்கின் கஷ்டமான தருணத்திற்கு சென்றது.

அன்று கார்த்திக் கவியின் மடியிலே படுத்து கொண்டு அவனின் நிலையை கூறி அழுக,

அதனை கேட்ட கவியோ, "இங்க பாருடா கார்த்திக், உன்னோட நிலமை ரொம்பவே கஷ்டமானது தான் ஆனா இதையெல்லாம் நீ கடந்து வந்தா மட்டும் தான் உன்னோட மனசு காதல்ல எத்தனை சிக்கல் வந்தாலும் அதை கையாள்ற பக்குவத்தை அடையும்; கண்டிப்பா இதுலயிருந்து மீள்றது கஷ்டம் தான் ஆனா நீ சொன்னதை வைச்சு சொல்றேன்; உன்னோட காதல் கண்டிப்பா கைசேரும் அதுவரை நீ பொறுமையா காத்திரு, ஒருவேளை கைசேரனா நீயே உன் காதலை தேடி போ ஆனா இப்போ உன்னோட காதலுக்கு இந்த பிரிவு அவசியமானது தான்; இதை கடந்து வா படிப்புல கவனத்தை செலுத்து கண்டிப்பா ஒருநாள் எல்லாமே மாறும்" என கூறிட,

அதனை கேட்டவனோ, "நீ சொல்றதும் சரிதான்க்கா கண்டிப்பா என் காதலுக்காக காத்திருப்பேன்" என கூறி கண்களை துடைத்து கொள்ள அவனின் உச்சிமுகர்ந்து முத்தமிட்டாள் கவி.

இதனை நினைத்து பார்த்தவளோ தன்னையும் தனது தம்பியுடனான உறவையும் முழுதாய் புரிந்து கொண்ட அனுவினை எண்ணி பெருமைகொண்டு அவளை கட்டி அணைத்திட,

இதனை தூரமாய் நின்று பார்த்த கார்த்திக்கோ 'உண்மையாவே இவ மாயக்காரி தான்' என நினைத்து கொண்டான்.

💘💘💘💘💘

தனது குடும்பத்தையே கட்டி ஈர்த்த அனுவின் செயலை எண்ணி பார்த்தபடியே பால்கனியில் நின்றுகொண்டிருந்த கார்த்திக்கை அனு பின்னிருந்து அணைத்து கொள்ள, அத்தருணத்தை கண்மூடி ரசித்தவனோ அவளை தன் முன்னால் இழுத்து கொண்டான்.

"அதெப்படி டி, எல்லாரையும் இவ்ளோ அழகா இம்பிரஸ் பண்ணிடுற எங்க எல்லாரையும் இம்பிரஸ் பண்ண ஏதாவது பிளாக் மேஜிக் செய்றீயா" என அவளின் முகத்தினை தனது இருகைகளிலும் ஏந்தி கொண்டு வினவ,

"நான் பிளாக் மேஜிக் எல்லாம் செய்யல சீனியர், லவ் மேஜிக் தான் பண்றேன் எல்லார்கிட்டயும் அன்பை காட்டுறேன் அதுவே எனக்கு ரிட்டனா கிடைக்குது அவ்ளோதான்" என கூறியவளை பார்த்து சிரித்தவனோ அவளை கட்டியணைத்து கொண்டு,

"இதேமாதிரி நான் எப்போ உன்னோட குடும்பத்தை பிளாக் மேஜிக் செஞ்சு வீழ்த்துவேனோ, நீ வேணா பாரு அப்படி நான் செய்யும்போது உன்னைய விட பெஸ்ட்டா பர்பாமண்ஸ் பண்றேன்" என கூற,

அதற்கு அனுவோ, "அட போங்க சீனியர், நீங்க ஆல்ரெடி என் அப்பாவை மேஜிக்கால வீழ்த்துனதே போதும் அவரோட பேச்சை தான் வீட்டுல எல்லாருமே கேட்பாங்க; சோ உங்களுக்கு பிரச்சனையே இல்ல இப்போதைக்கு என்னோட காதல் விவகாரம் அம்மாவுக்கு தெரிஞ்சா படிப்பையும் காதலையும் பேலன்ஸ் பண்ண முடியாதேற தவிப்புல திட்ட தான் செய்வாங்க; அதான் அவங்ககிட்ட நம்ம படிப்பு முடிஞ்சு செட்டிலானதுக்கு அப்புறமா அப்பாவை வைச்சு சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன் ஆனா இப்போதைக்கு நீங்க என்னோட சீனியரா இம்பிரஸ் பண்ணிடுங்க" என கூறியவளோ,

தனது அன்னை ஜெயாவிற்கு வீடியோ கால் செய்து தனது படிப்பிலிருந்து அனைத்திற்கும் உதவும் சீனியர் இவனே என கார்த்திக்கை அறிமுகம் செய்திட,

அதன்பிறகு மாமியாரும் மருமகனும் பல விஷயங்கள் பேசிகொள்ள அவர்களின் நேரம்கடந்த பேச்சில் பொறுமையிழந்தவளோ, "மா நீ சீனியர்கிட்ட இன்னொரு நாளு தனியா பேசு இப்போ போனை கட் பண்ணு.." என கூற,

அதற்கு ஜெயாவோ, "அதெல்லாம் பண்ணிடுறேன் டி, ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லு; அதெப்படி டி உனக்கு இப்படிபட்ட நல்ல பசங்க எல்லாம் பிரண்ட்ஸா கிடைக்குறாங்க" என கேட்க
அதனை கேட்டு அனுவோ கடுப்பாக,

அப்பொழுது ஜெயாவின் பின்னால் வந்த தேவி பாட்டியோ, "என்னடி, ஏதோ பசங்க பிரண்ட்னு சொல்லிட்டு இருக்க இந்த அனு எவனாவது ஒருத்தனை பிரண்ட்னு சொல்றாளா பார்த்துடி அவன் இவளோட லவ்வரா இருக்க போறான்" என கத்த,

அதனை கேட்டு வாயைபொத்தி சிரித்த கார்த்திக்கை முறைத்தவளோ, "நான் அப்புறமா பேசுறேன்மா ஓரே டிஸ்டர்பன்ஸா இருக்கு" என‌ கூறி போனை வைக்க,

"அதெப்படி அனு, உன் பாட்டி உன்னோட திருட்டுதனத்தை சரியா கண்டுபிடிச்சிட்டாங்க இவங்க கண்டுபிடிக்குறதை பார்த்தா பலதடவை மாட்டிருப்ப போலயே" என கூறிய கார்த்திக் தனது சிரிப்பினை தொடர,

"அட போங்க சீனியர், இந்த பாட்டி எப்பயுமே இப்படிதான் என்னை குறை சொல்லலேனா தூக்கமே வராது ஆனா இப்போ என்னோட நிலமையை விட உங்க நிலமை நினைச்சா தான் பரிதாபமா இருக்கு எங்க அம்மாவை கூட அப்பாவை வைச்சோ இல்ல இப்போ நீங்க பிரண்ட்டா பேசுனதை வைச்சோ நம்ம காதலை ஏத்துக்க வைச்சிடலாம் ஆனா இந்த பாட்டியை என்ன பண்ணாலும் சமாளிக்க முடியாதே பாவம் உங்க நிலமை" என கூறி சிரிக்க,

அதனை கேட்டு இளநகை பூத்தவனோ, "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல அனுமா நான் என்னால முடிஞ்சளவுக்கு சமாளிக்குறேன் ஒருவேளை என்னால அதையும் தாண்டி சமாளிக்க முடியலனா இருக்கவே இருக்கு உன்னோட டெக்னிக் டக்குனு கால்ல விழுந்து மனசை மாத்திடலாம்ல" என கூறி கேலி செய்ய,

அதனை கேட்டு கடுப்பாகியவளோ, "என்னையவா கலாய்க்கிறீங்க உங்களை சும்மா விட மாட்டேன் பாருங்க" என கூறி அருகிலிருந்த குச்சியை எடுத்துகொண்டு அடிக்க துரத்த, அவளிடமிருந்து தப்புவதற்காக கார்த்திக் வீட்டையும் தாண்டி தெருவினில் இறங்கி ஓட, இவர்களின் ரகளையை பார்த்த மக்களும் சிரித்துகொண்டே அங்கிருந்து சென்றனர்.

இங்கு கார்த்திக்கை துரத்திகொண்டு ஓடிய அனுவோ அவனை ஒரு சலூன் கடையையும் தாண்டி துரத்திபடியே ஓடிட,

அச்சலூன் கடையிலுள்ள டிவியில் ஒளிபரப்பான செய்தியோ அனைவரையும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

"சென்னையில் முக்கிய புள்ளிகளான சில நபர்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் மக்களையும் காவல் துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது".

"அமைச்சர் நாகலிங்கமும் அவரின் தம்பியான மருதநாயகமும் இவர்களுக்கு இதற்கு முன்னால் அடியாளாக வேலை பார்த்த காளியும் மர்மமான முறையில் காணாமல் போனதையடுத்து இவர்களை போலவே பிரபலமான வக்கீல் வேதாச்சலமும் காணாமல் போன சம்பவம் மக்களின் மத்தியில் பலவேறு அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது".

"இதில் சம்மந்தபட்ட இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு இறந்து போன அமைச்சரின மகன் வினோத்தின் கற்பழிப்பு கேஸிற்கு துணையாய் இருந்தவர்கள் என்பது தெரிந்தபடியால் அந்த வகையில் போலிஸார் தங்களின் விசாரணையை மேற்கொண்டவர்களோ,

இவர்கள் அனைவரையும் தனிப்படை அமைத்து தேடிக்கொண்டு வருகின்றனர்" என கூறும் விதமாக அச்செய்தி ஒளிபரப்பாக,

அதனை கண்ட அனிதாவின் பெற்றோரோ தனது பெண்ணின் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைத்ததென ஆறுதலடைய,

இதே செய்தியை வேறொரு இடத்திலிருந்து பார்த்தபடியே கையில் கிளவுஸ் அணிந்து கொண்டிருந்த நபரை தேடி வந்த ஒருவனோ,

"மாஸ்டர் மைண்ட் அவங்க எல்லாரையும் ரெடி பண்ணியாச்சு நீ ரெடியா" என கேட்க,

அதனை கேட்டு தலையாட்டியவாறே ஒரு பேக்கினை எடுத்துகொண்டு பக்கத்திலுள்ள அறைக்குள் விரைந்தார் மாஸ்டர் மைண்ட்.

தனது தவறான செயலால் சமூகத்தின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு நீதியால் தண்டனை கிடைக்காத தருணத்தில் சமூகமே நீதிமன்றமாய் மாறி தண்டனையை வழங்கிடும் அப்படிபட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த பின்பமாய் திகழ்ந்த மாஸ்டர் மைண்ட் தனது கடமையை சரியாக செய்து முடித்துவிட்டான்.

இங்கு சீனியரை துரத்தி சென்ற அனுவோ அவனை பிடித்து அடித்தபடியே அவனின் நெஞ்சமதில் சாய்ந்து கொண்டவளோ,

"சீனியர், நான் உண்மையாவே ரொம்பவே லக்கி தெரியுமா எத்தனை பொண்ணுங்களுக்கு இப்படிபட்ட அக்கறையா, பொறுமையா, காத்திருக்கிற காதலன் கிடைப்பாங்கனு தெரியல ஆனா உங்களோட காத்திருப்பு தான் உங்க மேலான காதலை எனக்கு அதிகரிக்க செஞ்சிச்சு;

"தான் காதலிக்கிற பொண்ணோட மனசை புரிஞ்சிக்காம தன்னோட மனசை சம்மந்தபட்ட பொண்ணு புரிஞ்சிக்க டைமும் தராம எத்தனையோ பேர் பொண்ணுங்களோட வாழ்க்கையை கொலை, கற்பழிப்புனு அழிக்கும்போது நீங்க அதெல்லாம் செய்யாம காத்திருந்து உங்க காதலை தேடிய செயல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு;

"இந்த காதல்ல காலம் முழுக்க தேடவும் தேடிய காதல்ல நித்தமும் தொலையவும் தான் என்னோட மனசு ஏங்குது நம்ம காதலே தேடலாய் வாழ்க்கை முழுக்க தொடர ஆசையா இருக்கு சீனியர் இந்த ஆசையை நிறைவேத்துவீங்களா" என கண்கள் மின்ன கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்து கேட்டவளின் நெற்றியில் ஒற்றை முத்தத்தினை ஆழமாய் பரிசளித்தவனோ அவளை இறுக அனைத்துகொள்ள அதுவே அனுவின் கேள்விக்கு விடையாய் அமைந்திட,

கார்த்திக்கோடு சேர்ந்து தனது வாழ்க்கை பயணத்தினை காதலால் முழுமையாக்க முதலடி எடுத்து வைத்தவளோ சீனியரின் தோளில் சாய்ந்தவாறே பயணிக்க துவங்கினாள்.

காதல் என்ற உணர்வினை பக்குவமாய் பொறுமையாய் ஒவ்வொரு நொடியும் ரசித்து காத்திருந்தால்,
காதலிலே நம்பிக்கையில்லாதவர்கள் கூட காதலில் கரைய தவமாய் தவமிருப்பர்

அதனை விடுத்து காதல் என்ற பெயரில் பெண்களின் வாழ்வினை அழித்து சமூகத்திற்கு கேடு விளைவித்தால் காதல் என்ற வார்த்தையே சாபமாய் மாறிவிடும்.

காதல் என்ற அழகிய உணர்வை வரமாய் மாற்றுவதும் சாபமாய் மாற்றுவதும்
நாம் அதனை கையாளும் விதத்திலே உள்ளது.

காதலுக்காக காத்திருந்து தேடலோடு பயணித்துகொண்டே இருந்தோமானால் நிச்சயமாக ஒருநாள் நம் காதலே தேடலாய் வாழ்க்கையை அழகாக்கும்.



காதலின் தேடல் நிறைவடைந்தது..✍️✍️✍️

* இந்த கதையை பொறுத்தவரை மாஸ்டர் மைண்ட் கெஸ்ட் ரோல் மாதிரி தான் அவனோட கதையையும் சேகர் ஐ பி எஸ்ஸோட கதையையும் வேற கதையா தான் எழுதுவேன் ஆனா அது இந்த கதையோட இரண்டாம் பாகம் கிடையாது இந்த கதையில வந்த வேற யாருமே அதுல வர மாட்டாங்க *

(இதுவரை இக்கதைக்கு ஆதரவளித்து ஊக்கபடுத்திய அத்துணை வாசக நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சமர்பித்து கொள்கிறேன்)💘
 
Last edited:

Rajam

Well-known member
Member
அட்டகாசமா வினோத் முடிவ
கொடுத்துட்டீங்க.
அருமையான நடை.
வாழ்த்துக்கள்.
 

Nancy mary

✍️
Writer
அட்டகாசமா வினோத் முடிவ
கொடுத்துட்டீங்க.
அருமையான நடை.
வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
உங்களோட ஆதரவுக்கு ரொம்பவே நன்றி இங்க கதையை போஸ்ட் பண்ணிட்டு வாசகர்கள் படிக்கிறாங்களா இல்லயானு யோசிச்சப்போ நீங்கதான் விமர்சனம் போட்டு ஆதரவு தந்தீங்க என்னோட எழுத்துக்கு கிடைச்ச பெரிய அங்கீகாரமா இருந்துச்சு உங்களோட இந்த பேராதரவுக்கு ரொம்பவே நன்றி சகி😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
வினோத்துக்கு குடுத்த முடிவு அருமை சகி😍 அந்த மாஸ்டர் மைண்டோட மெயின் ஸ்டோரி எப்ப வரும்? சேகர் ஐ.பி.எஸ் உண்மையாவே ஏமாளி தான்... நான் கூட நிஜமாவே வண்டி வெடிச்சு வினோத் செத்துட்டான்னு நினைச்சேன்... ஆனா அவன் சாகாம தப்பிச்சு போயிருக்கான்... ஆனா மாஸ்டர் மைண்ட் கையால செத்துட்டான்... நாகலிங்கம், மருதநாயகம், வேதாசலத்துக்கும் அவன் நிலமை தான் வரும்னு நினைக்கேன்...

கார்த்திக் அனுவோட காதல் ஒரு வழியா ஒன்னு சேந்துடுச்சு... எழுத்துநடை, கதை நகர்வு எல்லாமே சூப்பர் சகி...
 

Nancy mary

✍️
Writer
வினோத்துக்கு குடுத்த முடிவு அருமை சகி😍 அந்த மாஸ்டர் மைண்டோட மெயின் ஸ்டோரி எப்ப வரும்? சேகர் ஐ.பி.எஸ் உண்மையாவே ஏமாளி தான்... நான் கூட நிஜமாவே வண்டி வெடிச்சு வினோத் செத்துட்டான்னு நினைச்சேன்... ஆனா அவன் சாகாம தப்பிச்சு போயிருக்கான்... ஆனா மாஸ்டர் மைண்ட் கையால செத்துட்டான்... நாகலிங்கம், மருதநாயகம், வேதாசலத்துக்கும் அவன் நிலமை தான் வரும்னு நினைக்கேன்...

கார்த்திக் அனுவோட காதல் ஒரு வழியா ஒன்னு சேந்துடுச்சு... எழுத்துநடை, கதை நகர்வு எல்லாமே சூப்பர் சகி...
ரொம்ப சந்தோஷமா இருக்கு சகி இந்த கதையோட கருத்தும் கதை சொல்ற விதமும் சரியா இருக்குமானு பயத்தோடயே தான் எழுதுனேன் ஆனா அது நிறைவா அமைஞ்சிருக்குனு உங்க விமர்சனத்தை படிச்சப்போ தெரிஞ்சுகிட்டேன் எனக்கு இன்னும் நல்லா எழுதணும்ற ஊக்கத்தை தந்திருக்கு ரொம்பவே சந்தோஷம் சகி😍😍😍❤️❤️❤️❤️
மாஸ்டர் மைண்ட் கதையை தான் போட்டி கதையா கிறுக்கிட்டு இருக்கேன் அது எப்படி வருதுனு பார்க்கலாம்😌😌😌
ரொம்ப நன்றி சகி உங்களோட ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் பல😍😍😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom