• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வெண்தாமரை அவர்கள் எழுதிய "வெண்தாமரைப் பதி மெல்லியலே"

அன்புள்ள வெண்தாமரை மலரே,
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்கள், கதாபாத்திரங்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் சகி!

பாரதியாரையும், பரதநாட்டியத்தையும் பிரமாதமாக இணைத்து குடும்ப கதை தந்த வெண்தாமரை மலருக்கு என் அன்பு கலந்த பாராட்டுகள்.

கதை முழுக்க நேர்மறை சிந்தனைகள், அழகான எழுத்து நடையில் வசனங்கள் எல்லாம் அருமையாக இருந்தது ஆத்தரே. நாயகன்-நாயகி இருவரின் பெற்றோர்களின் குணமும் அருமையோ அருமை.

பாரதியாரின் தீவிர ரசிகை என்று கதாபாத்திரங்களைப் பெயருக்கு மட்டும் குறிப்பிடாமல், அவர்களின் ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் உணர்த்திய விதம் சூப்பர்.

அதே போல, நடனம், நடனப்பள்ளி, அவற்றைச் சார்ந்த விழாக்கள் பற்றி நீங்கள் வர்ணித்த காட்சிகள், படிக்கும் போதே கண் முன்னே தோன்றும் அளவிற்கு, அத்தனை தத்ரூபமாக இருந்தது.

கதையின் சஸ்பென்ஸ் எளிதில் யூகிக்கக் கூடிய ஒன்றாக இருந்தாலும், அப்பிரச்சனைகளைப் பெரியவர்களும், சிறியவர்களும் கையாண்ட விதம் மிக மிகச் சிறப்பாக இருந்தது. அதே சமயத்தில், இரட்டை சகோதரர்கள் அறிமுகம் செய்து, இந்த ஆத்தர் முக்கோண காதல் கதை வளர்க்கப் போகிறாரா என்று யோசிக்கும் போது, அவர்களின் உணர்வுகள் பற்றி தகவல்கள் தந்து, நீங்கள் கதை நகர்த்திய விதம் தனித்துவமாக இருந்தது.

நம்மை வீழ்த்த நினைப்பவர்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று அனுராதா, மாதங்கியிடம் சொன்ன அறிவுரை அருமை. மீடியா, சமூக வலைத்தளங்கள் பற்றிய நிறைகுறைகளை, பாரதி & பாரதி நண்பர்கள் பேசியதும் மிகவும் எதார்த்தமாக இருந்தது. சிந்திக்க வைக்கும் வண்ணமாகவும் இருந்தது.

எல்லாவற்றிருக்கும் மேலாக, திருமண பேச்சு பற்றி பெற்றோர் அணுகுமுறையும், காதலில் தத்தளிக்கும் சிறியவர்களின் வெளிப்படையான பேச்சும், என் மனதைக் கவர்ந்தது ஆத்தரே! இன்றையத் தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டிய கதை என்று தோன்றியது.

இக்கதையில் காதல் வசனங்கள் இல்லை; காதல் காட்சிகள் இல்லை; ஆனாலும் காதலின் தாக்கத்தை கதை முழுக்க உணர முடிந்தது. Simply Wow Author!!!
மொத்தத்தில் நற்சிந்தனைகள் நிரம்பிய அழகிய குடும்ப கதை தந்த வெண்தாமரை மலர், இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!💐💐💐💐💐

கதைக்கான லிங்க்:

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@வெண்தாமரை
 
மிகவும் அருமையான விமர்சனம் வித்யா. உங்கள் விமர்சனம் படித்ததும் மிகுந்த மகிழ்ச்சி. எந்த எண்ணத்தில் கதை எழுதினேனோ அதைத் தெளிவாகப் புரிந்து ரசித்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. எந்த ஒரு எதிர்வினைகளையும், நம் நேர்மறை சிந்தனை மூலம் முறியடிக்கலாம் என்பது எனது நம்பிக்கை. அதை எனக்குத் தெரிந்தவரை கதையாகக் கொடுத்து இருக்கிறேன். அது உங்களுக்குப் பிடித்தத்தில் எனக்கும் சந்தோஷம். ஒவ்வொரு கதைக்கும் விமர்சனம் எழுதும் உங்கள் அர்ப்பணிப்பிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். மிகுந்த நன்றி . நன்றி. :love: :love: :love: :love: 🙏🙏🙏🙏🙏
 
மிகவும் அருமையான விமர்சனம் வித்யா. உங்கள் விமர்சனம் படித்ததும் மிகுந்த மகிழ்ச்சி. எந்த எண்ணத்தில் கதை எழுதினேனோ அதைத் தெளிவாகப் புரிந்து ரசித்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. எந்த ஒரு எதிர்வினைகளையும், நம் நேர்மறை சிந்தனை மூலம் முறியடிக்கலாம் என்பது எனது நம்பிக்கை. அதை எனக்குத் தெரிந்தவரை கதையாகக் கொடுத்து இருக்கிறேன். அது உங்களுக்குப் பிடித்தத்தில் எனக்கும் சந்தோஷம். ஒவ்வொரு கதைக்கும் விமர்சனம் எழுதும் உங்கள் அர்ப்பணிப்பிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். மிகுந்த நன்றி . நன்றி. :love: :love: :love: :love: 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் மா! இக்கதை இளைய தலைமுறையினருக்கு நற்சிந்தனை புகட்டும் விதமாக இருந்தது. இக்கதைப் பற்றி, நீங்கள் இன்னும் அதிகமாக விளம்பரம் செய்து நிறைய வாசகர்களின் கையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் சகி.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom