• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விமர்சனம்_ பார்கவி முரளியின் மிரட்டும் அமானுஷ்யம்👻💀

Nithya Mariappan

✍️
Writer
கதை : மிரட்டும் அமானுஷ்யம்👻💀
எழுதியவர் : பார்கவி முரளி👸


ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் படிச்ச ஹாரர் ஸ்டோரி👀... கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட ஜான்வி அந்த பயத்தை எப்பிடியாச்சும் ஓவர்கம் பண்ணியே ஆகணும்னு பாராநார்மல் கோர்ஸ் படிக்க புனேக்கு போறா... அங்க அவ ஆதர்ஷ், விஷ்வா, சாக்ஷிய சந்திக்கிறா... கூடவே அவளைச் சுத்தி நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது... அவளை விடாம தொடருது ஒரு நிழல்👀... அவ தங்கியிருக்குற விடுதிலயும் சில திகில் அனுபவங்கள் அவளுக்கும் சாக்ஷிக்கும் கிடைக்குது... இது எல்லாத்துக்கும் என்ன காரணம்னு யோசிக்கிறப்ப இன்னொரு கிராமத்துலயும் நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது...

ஜானுவுக்கும் அந்தக் கிராமத்துல நடக்குற சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் ஜானுவ சுத்தி இவ்ளோ மர்மமான சம்பவம் நடக்குது? அந்த நிழல் யார்? இப்பிடி கதை படிக்கிறப்ப நமக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள் எழுறதை தடுக்கவே முடியல.... இதுக்கு இடைல அர்ஜூன், சதீஸ், நிஷா மூனு பேரும் வர்றாங்க... யார் அவங்க அவங்களுக்கும் ஜானுவுக்கும் என்ன சம்பந்தம்னு அடுத்த கேள்வி வருது👁️👁️... இது எல்லாத்துக்கும் நடுவுல அப்பப்ப 'அது' வேற வந்து பயம் காட்டுது👻💀

கதைய திகிலோட நகர்த்துறப்ப கூடவே பாராநார்மல் இன்வெஸ்டிகேசன்ல யூஸ் பண்ணுற எக்யூப்மெண்ட்ஸ், அமானுஷ்யமான இடங்கள் பற்றிய தகவல்களை அழகா விவரிச்சிருக்காங்க பார்கவி👌.... பெயர்ல மட்டும் அமானுஷ்யத்தை வைக்காம கதையோட ஒவ்வொரு அத்தியாயமும் மர்மமும் திகிலும் நிறைஞ்சதா அடுத்து என்ன நடக்கும்னு நெய்ல் பைட்டிங் சீன்சா இருந்துச்சு🤘...

என்ன தான் அமானுஷ்ய கதையா இருந்தாலும் விஷ்வா சாக்ஷி காம்போ பண்ணுற கலாட்டா நமக்கு சிரிப்பை வரவைக்குது😜... சில கியூட்டான லவ் சீன்ஸ்சும் அருமைமா😍... அந்தக் காமெடியோ லவ்வோ கதைய கொஞ்சம் கூட டிஸ்டர்ப் பண்ணல... கதையோட்டத்துல அதுவும் இயல்பா இணைஞ்சு அழகா பொருந்திடுச்சு...

மொத்தத்துல சுவாரசியம் குறையாத திகில் கதை கொடுத்ததுக்கு எழுத்தாளருக்கு நன்றி!🙏 உங்களோட மற்ற கதைகளை ஆவலோட எதிர்பாக்குறேன்🤗

இந்தக் கதைக்கு ஒரு மீம்😜👇

MEME-20210529-110418.jpg
 

Barkkavi

✍️
Writer
வாவ் ரொம்ப அழகான விமர்சனம் சிஸ்😍😍😍 இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி😁😁😁 எனக்கும் இது முதல் ஹாரர் கதை... கதை எழுதும்போது ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு... கூடவே உங்க கருத்துக்களும் விமர்சனமும் இந்த கதையை சரியா கொடுத்துருக்கேன்னு நம்பிக்கையை கொடுக்குது... Tq so much sis😍😍😍

அந்த மீம் 😂😂😂 இந்த கதையை நைட் டைப் பண்ண என் நிலைமையை நினைச்சு பாருங்க...😂😂😂
 

Nithya Mariappan

✍️
Writer
வாவ் ரொம்ப அழகான விமர்சனம் சிஸ்😍😍😍 இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி😁😁😁 எனக்கும் இது முதல் ஹாரர் கதை... கதை எழுதும்போது ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு... கூடவே உங்க கருத்துக்களும் விமர்சனமும் இந்த கதையை சரியா கொடுத்துருக்கேன்னு நம்பிக்கையை கொடுக்குது... Tq so much sis😍😍😍

அந்த மீம் 😂😂😂 இந்த கதையை நைட் டைப் பண்ண என் நிலைமையை நினைச்சு பாருங்க...😂😂😂
நீங்க இந்தக் கதைய முதல் முதல்ல போட்டப்போவே நான் படிக்கணும்னு நினைச்சிருந்தேன்... பிகாஸ் ஐ லவ் ஹாரர் ஸ்டோரி... ஆனா அப்ப வேலை சரியா இருந்துச்சு...இப்போ சான்ஸ் கிடைச்சதும் படிச்சாச்சு😁😁😁
 

Barkkavi

✍️
Writer
நீங்க இந்தக் கதைய முதல் முதல்ல போட்டப்போவே நான் படிக்கணும்னு நினைச்சிருந்தேன்... பிகாஸ் ஐ லவ் ஹாரர் ஸ்டோரி... ஆனா அப்ப வேலை சரியா இருந்துச்சு...இப்போ சான்ஸ் கிடைச்சதும் படிச்சாச்சு😁😁😁
Enakum horror stories pidikum sis🙌😍
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom