• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விமர்சனம்_ ஆர்த்தி ரவியின் கண்ணம்மா

Nithya Mariappan

✍️
Writer
கதை : கண்ணம்மா👸
எழுதியவர் : ஆர்த்தி ரவி💝


வெகுளித்தனமான பெண்ணான கண்ணம்மா ஊராரால் அழைக்கப்படும் விதம் 'கூருகெட்டவ'. ஆனால் விப்ரநாராயணனுக்கு அவள் தான் தேவதை👸 விப்ராவுக்கு கண்ணம்மா மீது உண்டான நேசமும் காதலும் எவ்வித செயற்கைத்தனமும் இல்லாது விவரிக்கப்பட்ட விதம் அருமை. பாசமான தோழியாக பரிமளா, அன்பான அண்ணனாக முத்துவேல், சராசரி பெண்ணுக்குரிய கோபதாபங்களுடன் சுலோசனா இவர்களுடன் செயக்கொடி, குலசேகரன், ராமர், சீத்தம்மா, தீரன், நந்தகுமார் என அனைத்து கதை மாந்தர்களும் நம்முடன் பயணிப்பது போன்ற பிரமை😇

வெகுளியான கண்ணம்மாவை, அன்பான மனைவியாக, பாசமுள்ள ஓரகத்தியாக, தைரியமான பெண்ணாக என ஒவ்வொரு பரிமாணத்திலும் காட்டிய விதம் அருமை. அடுத்து விப்ரநாராயணன். கண்ணம்மாவின் குறையை (அது குறையே இல்லை என்பது வேறு விசயம்) காணாத காதல் அவனுடையது. காதலில் மட்டும் தான் சிறந்தவனா என்று கேட்டால் மனிதநேயத்திலும் அவன் சிறந்தவனே என்பதற்கு சாட்சியாக பாட்ஷாவும், முத்து பாண்டியும்! துணி வெளுக்கும் பெண்மணியிடம் காட்டும் இரக்கம், மனைவிக்காக தொலைபேசி இணைப்பு கொண்டு வந்தது, மதினியும் மனைவியும் உரையாடும் போது இடையிடாது முதிர்ச்சியாக அவன் நடந்து கொண்ட விதம் என விப்ராவும் விஸ்வரூபமாய் நிற்கிறான். பெற்றோராக இருவரும் எடுத்த முடிவில் மனம் கனத்து போனது😕

வண்ணங்களை சொன்ன விதம் அருமை - எழுத்து மை நிறம், ருக்மணி நிறம் (எனக்கு ருக்மணி நிறம்னா என்னனு தெரியல சிஸ்)

மர்பி ரேடியோ, கொடுக்காப்புளி, பள்ளி வாயிலில் தின்பண்டம் வாங்கி தின்பது என இன்றைய காலகட்டத்தில் நாம் இழந்த சின்ன சின்ன சந்தோசங்களை கதையில் காண முடிந்தது. சில தசாப்தங்களுக்கு முன்னர் என்று ஆரம்பித்து கதை எண்பதுகளின் இனிய நினைவுகளோடு நம்மையும் கோவிந்தநகரத்தில் சில மணிநேரங்கள் வாழ வைத்த கதை😍

LINK👇

 

Arthy

✍️
Writer
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நித்யா! 💐😍🙏🏻
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom