• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 9

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் அடுத்த அத்தியாயம் இதோ... படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...😁😁😁

eiF4Q8G30868.jpg



பயணம் 9



அந்த பையைப் பற்றி பாலா கேட்டதும் தேஜுவிற்கு வியர்க்க ஆரம்பித்தது. ஒருவித தயக்கத்துடனே அவன் முகத்தையும், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநரையும் பார்த்தாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவன், அந்த சாலையோரம் இருந்த தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்தச் சொன்னான்.



பின் அந்த ஓட்டுநரிடம், “அண்ணா, இங்கயிருந்து சென்னை போக நேரம் ஆகும்ல. நீங்க வேணா இந்த டீக்கடைல டீ குடிச்சிட்டு வாங்களேன்…” என்றான்.



அவருக்கும் அது சரியென்றே தோன்ற, “தம்பி நீங்க…” என்று தயக்கமாக இழுத்தார்.



“இல்லண்ணா நாங்க இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க போயிட்டு வாங்க.” என்றான்.



அவர் செல்லும்வரை காத்திருந்தவன், தேஜுவின் புறம் திரும்பி, “ஹ்ம்ம் இப்போ சொல்லு… அந்த பையில உங்க அப்…” என்று கூற வந்தவன், அவளின் முறைப்பில், “அந்த ஆளு சம்மந்தப்பட்ட ஏதோ தான் இருக்கணும்…” என்று திருத்திக் கொண்டான்.



அவனின் கூற்றில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருங்கே தோன்றியது தேஜுவிற்கு. அதே மனநிலையில், “உனக்கு எப்படி தெரியும்..?” என்று வினவினாள்.



“இதைக் கண்டுபிடிக்க ஜேம்ஸ் பாண்டா வருவாங்க…” என்று கேலியாக கேட்டவன், “ஆனா எனக்கு இது மட்டும் புரியல.. அந்த ஆளை ‘அப்பா’ன்னு சொல்லவே தயங்குறவ, எதுக்கு அவரு சம்மந்தப்பட்டதை தூக்கிட்டு அலையனும்..?” என்று தன் கூரிய பார்வையை அவளின் மேல் படரவிட்டவனாக வினவினான் பாலா.



ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள், “எல்லாத்துக்கும் காரணம் எங்க அம்மா தான். ஹ்ம்ம்.. என்ன சொல்றது… காதல்னு வந்துட்டா எங்க அம்மா கோழை தான் போல… எங்க அம்மா மட்டும் அப்போவே தைரியமா அந்த ஆளை எதிர்த்து நின்னுருந்தா இந்நேரம் எங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்துருக்காதோ என்னவோ…” என்று விரக்தியாக கூறினாள்.



அவளின் கவலை பாலாவையும் தாக்கியதோ, அவளின் கைகளை ஆறுதலாக பிடித்துக் கொண்டான்.



“எங்க அம்மா சாகுற நிலைமைல இருந்தப்போ, அவரு வந்து அழுது சீன் போட்டுருக்காரு… அதை உண்மைன்னு நம்புன எங்க அம்மாவும், என்னை அவரு கூட போய் தங்க சொன்னாங்க. நானும் ரொம்ப சண்டை போட்டு முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா அதுக்கு அப்பறம் ஒரு நாள் கூப்பிட்டு, அவரு என்ன சொன்னாலும் அதைக் கேட்டு நடந்துக்கணும்னு சொன்னாங்க. அதுக்கும் நான் முடியாதுன்னு சொல்லிப் பார்த்தேன். ஆனா அவங்க கடைசி நிமிஷத்துல கேட்டத என்னால ரொம்ப மறுக்க முடியல. அதுவும் அவங்க மேல சத்தியம் செஞ்சு கேட்டப்போ, எனக்கு ஒத்துக்குறது தவிர வேற ஒன்னும் தோணல.” என்றாள், அன்றைய நினைவில் கண்ணோரம் எட்டிப் பார்த்த கண்ணீருடன்.



“அம்மா இறந்ததுக்கு அப்பறம் அந்த ஆளு என்னை எட்டிக்கூட பார்க்கல… ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் என் வீட்டுக்கு வந்து இந்த பையைக் குடுத்துட்டு பாட்டி கூட ஊருலயே இருக்க சொன்னாரு…” என்றாள். இப்போது அவள் முகத்தில் கோபம் மட்டுமே…



“அப்போ உண்மைலேயே அந்த பையில அவரோட தில்லாலங்கடி வேலைக்கான ஆதாரம் தான் ஒளிஞ்சுட்டு இருக்கோ…” என்றவன், “அப்போ இதையெல்லாம் அந்த ஆப்போசிட் கேங் கிட்ட குடுத்தா நிறைய பணம் கிடைக்கும் போலயிருக்கே…” என்று சத்தமாகவே திட்டம் தீட்ட, அவனின் தலையில் அடித்தவள், “புத்தி எப்படி போகுது பாரு… என்ன இருந்தாலும் எங்க அம்மாக்கு செஞ்சு குடுத்த சத்தியத்தைக் கப்பாத்தியே ஆகணும்…” என்றாள்.



பாலா நினைத்தது போலவே, அவன் பேசியதில் அவளின் இயல்பு மீண்டிருக்க, அதைக் கண்டு மென்முறுவல் உதிர்த்தான்.



“எனக்கு தெரிஞ்சு அந்த ஆப்போசிட் கேங்… அதான் அந்த வருண் ஆளுங்க தான் உன்ன அட்டாக் பண்ணிட்டு அந்த பையைத் திருட பிளான் பண்ணிருக்கணும். ஆனா நீ அந்த ஹோட்டல்ல தான் ஸ்டே பண்ணிருக்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சுருக்குன்னா அவங்க உன்னை ஃபாலோ பண்ணிட்டே இருந்துருக்கணும். ஹ்ம்ம்... நல்லா யோசிச்சு பாரு, அந்த பஸ்ல யாராவது உன்னை வாட்ச் பண்ணிட்டு இருந்தாங்களா…” என்று அவன் கூறவும், தேஜுவும் யோசித்தாள்.



“அப்படி எதுவும் எனக்கு தோணல… பஸ் பிரேக்-டவுன் ஆனவொடனே, மத்த எல்லாரும் வந்த பஸ்ல கிளம்பி போயிட்டாங்க… மீதி இருந்தது நீ, நான்…” என்று கூறிக் கொண்டே வந்தவள், ஏதோ தோன்ற அவனைப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



“எஸ்… நீ, நான், அப்பறம் அந்த பஸ்ஸோட ட்ரைவர் அண்ட் கண்டக்டர்…” என்று அவளின் வாக்கியத்தை அவன் முடித்தான்.



“ஹே பாலா… அந்த ட்ரைவரையும் கண்டக்டரையும் அதுக்கு அப்பறம் நம்ம பார்க்கவே இல்ல…” என்றாள் தேஜு.



அவனும் அதையே தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். “ம்ம்ம்… அவங்களைத் தவிர இன்னும் சிலரும் இதுல சம்மந்தப்பட்டுருக்கலாம் தேஜு… அந்த ஹோட்டல்ல வித்தியாசமா ஏதாவது நடந்துச்சான்னு யோசி…” என்றான்.



சிந்தித்தவளின் நினைவில் முதலில் வந்த காட்சியில் சற்று சத்தமாகவே நகைக்க, அவளின் சிரிப்பொலியில் குழப்பமாக அவளை நோக்கினான் பாலா.



“ஓய் இப்போ எதுக்கு இப்படி சிரிச்சுட்டு இருக்க..?” என்றான்.



“ஹாஹா நீ உன் ‘பச்சகிளி’ கிட்ட பல்ப் வாங்குனியே அதை நெனச்சு சிரிச்சேன்…” என்றாள் இன்னும் சிரிப்புடன்.



‘ச்சே என்ன கொடுமை டா பாலா…’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன், “க்கும்… போதும் போதும் பல்லு சுழுக்கிக்க போகுது… நீ அந்த ரெண்டு பேர பார்த்து பயந்து ஓடுன பாரு ஒரு ஓட்டம்… உசைன் போல்ட் கூட தோத்து போயிடுவான் போல…” என்று அவளிற்கு பதிலடி தர முயன்றான்.



அவளிற்கும் அந்த நினைவு எழ, “அப்படி ஒடுனதுல யாரையோ இடிச்சுட்டேன்னு நினைக்குறேன்…” என்று அவளும் சிரித்துக் கொண்டே கூறினாள்.



“அப்போவே ஒரு கொலை முயற்சி நடந்துருக்கு!” என்று கூறிவனின் கூற்று முதலில் விளங்காவிட்டாலும், புரிந்த பின் அவனை மொத்தினாள்.



பின் அவள் இடித்த அந்த மனிதனைப் பற்றிய நினைவும் அவளுக்கு வர, அடுத்த நொடி அதிர்ச்சியை பிரதிபலித்தது அவளின் முகம்.



அடித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று அடிப்பதை நிறுத்தவும், அவளின் முகம் கண்டே அவளின் நிலை உணர்ந்தவன், “ஹே தேஜு, ஆர் யூ ஓகே..?” என்றான்.



“பாலா, நான் இடிச்சவன் ஒரு க்ரே கலர் ஹூடெட் ஜாக்கெட் போட்டுருந்தான்…. அந்த ரூம்லயிருந்து தப்பிச்சவனும் அதே கலர் ஜாக்கெட் தான் போட்டுருந்தான். சோ… ரெண்டு பேரும் ஒருத்தர் தான்…” என்றாள்.



“ஓ…” என்றவன், தலையை அழுத்தி தேய்த்து, “ நம்ம அந்த ஹோட்டல் ரிசெப்ஷன் பக்கத்துல தான் வெயிட் பண்ணோம்… அப்போ அந்த மாதிரி ஜாக்கெட் போட்டு யாரும் உள்ள போறதை நான் பார்க்கல… சோ… அவன் ஏற்கனவே அந்த ஹோட்டல்ல உனக்காக வெயிட் பண்ணிருக்கணும்…” என்றான் பாலா.



“எஸ் பாலா. அந்த லாஸ்ட் பஸ்ல சீட் இருந்தும் நம்மள ஏத்தாம இருந்தப்போவே ஐ ஃபெல்ட் சம்திங் ஃபிஷி… கண்டிப்பா அந்த ட்ரைவருக்கும் கண்டக்டருக்கும் இதுல சம்மந்தம் இருக்கு…”



“ஹ்ம்ம்… ரொம்ப தெளிவா ஸ்கெட்ச் போட்டுருக்காங்க… நம்ம இப்படி வெளிய சுத்துறது அவ்ளோ சேஃப் இல்ல…” என்றான் பாலா.



“இப்போதைக்கு அந்த ஆளுகிட்ட தான் போகணும்…” என்றாள் தேஜு வெறுப்புடன்.



“அவரு உன்னைக் காப்பாத்துவாருன்னு நினைக்குறியா..?” என்று சற்று நக்கலாகவே கேட்டான்.



“கண்டிப்பா என்னைக் காப்பாத்த மாட்டாரு… ஆனா இதுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா மேபி காப்பாத்த யோசிக்கலாம்…” என்றாள் அவளின் கையிலிருந்த பையை ஆட்டியபடி. “அப்படி இல்லனாலும், இதை அவருக்கிட்ட குடுத்துட்டு கிளம்பிட வேண்டியது தான்… இதுக்காக தான என்னை டார்கெட் பண்றாங்க…” என்றாள்.



பாலா அவளிற்கு தலையாட்டினாலும், அவன் மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது.



அப்போது தேஜுவின் அலைபேசிக்கு அவளின் பாட்டி அழைத்திருந்தார். அவள் அழைப்பை ஏற்கப்போகும் சமயம், அவளிடம், “நீ சென்னைக்கு போறன்னு யாருக்கிட்டயும் சொல்ல வேண்டாம். இன்னும் அந்த ஹோட்டல்ல தான் இருக்கன்னும், இன்னிக்கு நைட் தான் கிளம்ப முடியும்னு சொல்லு…” என்றாள்.



அவனை பொருள் விளங்கா பார்வை பார்த்தாலும் அவன் கூறியது போலவே கூறினாள். ஒருவழியாக அவளின் பாட்டியை சமாளித்து அழைப்பைத் துண்டித்தவள் பாலாவிடம், “எதுக்கு அப்படி சொல்ல சொன்ன..?” என்று வினவினாள்.



“யாருக்கு எப்படி இன்ஃபார்மேஷன் போகுதுன்னு நமக்கு தெரியாது. நீ நேத்து பெங்களூரு போறன்னு யாரு மூலமா அந்த கேங்குக்கு தெரியும்..? மேபி உன் ஃபேமிலிக்கே தெரியாம அவங்க போன் கால்ஸ் ட்ரேஸ் பண்ணலாம்…” என்றான் யோசனையாக.



தேஜுவிற்கும் அவன் கூறியது சரியென்றே தோன்றியதால், வேறெதுவும் கேட்கவில்லை. வண்டியின் ஓட்டுநரும் அவரின் தேநீரை குடித்துவிட்டு வந்துவிட்டார்.



“சாரி தம்பி… கொஞ்சம் லேட்டாகிடுச்சு…” என்றவாறே அவர் வண்டியை உயிர்ப்பிக்க, “பரவாலண்ணா…” என்றான் பாலா.



சென்னையை நோக்கிய அவர்களின் பயணம் தொடர்ந்தது. ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேஜு, ‘இவன் ஏன் என்னோட வரணும்..? எதுக்கு எனக்கு ஹெல்ப் பண்றான்..?’ என்று மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.



அவளருகே சற்று இடைவெளியில், இன்னொரு ஜன்னலின் வழியே தலையை வெளியே விட்டு அமர்ந்திருந்தவனிற்கும் இதே கேள்வி மண்டையை குடைந்தது. ஆனால் விடை தான் கிடைத்த பாடில்லை.



ஒருவேளை, இருவரும் இணைய, அவர்களின் (வாழ்க்கைப்) பாதையை மாற்றிய விதியின் ‘இணைப்புத் திட்டம்’ இதுவென்று அறிய முற்பட்டால், இவர்களின் நிலை என்னவோ…


தொடர்ந்து பயணிப்போம்...
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom