• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 8

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இதோ "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாவது அத்தியாயம் போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁

eiW4QEG48617.jpg



பயணம் 8



“ஐ’ம் பாலகிருஷ்ணன் ஃப்ரம் சிபிஐ, இன் அண்டர்கவர் ஆப்பரேஷன்.” என்று திமிரான உடல்மொழியுடன், சற்றே அலட்சியத்துடன் கூறியவனைக் கண்டவர்கள் அனைவரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நிமிடங்கள் கடந்தும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராது இருந்தவர்களைக் கண்ட பாலா, சொடக்கிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, அப்போது தான் திறந்த வாய் மூடி நிகழ்விற்கு வந்தனர்.



“என்ன கார்ட் எடுத்து காட்டினா தான் நம்புவீங்களா…” என்று தோரணையாக கேட்க, துரையுடன் இருந்த மற்ற இரு காவலர்களும் பதறியபடி எழுந்து, “ஐயோ சார், அப்படியெல்லாம் இல்ல…” என்று ‘கோரசாக’ கூறினர். அவர்களுடன் துரையும் வேண்டாவெறுப்பாக எழுந்தார்.



அவர் எழுவதைக் கண்டவன், உதட்டத்தைக் கேலியாக வளைத்தவாறே எதிரில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். அதில் துரையின் முகம் இன்னும் கூம்பியது.



இவையெல்லாம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, தேஜுவிற்கோ பாலா சி.பி.ஐ ஆஃபிசர் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை. அவனையே தன் முட்டைக் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று திரும்பியவன் கண்ணாடியை லேசாகக் கழட்டி, மற்றவர்கள் அறியாதவாறு அவளிற்கு ஒரு கண் சிமிட்டலை பரிசாகக் கொடுத்து, மீண்டும் ‘ஆஃபிசர்’ தோரணையில் அமர்ந்து கொண்டான்.



‘இவன் இப்போ என்ன பண்ணான்…’ என்று குழம்பியவள் தேஜுவே.



மற்ற மூவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள, “க்கும்… என்ன தீவிரமான டிஸ்கஷன் போல இருக்கு..?” என்றான் பாலா.



“அதெல்லாம் ஒன்னுமில்ல சார். இந்த கேசு… இல்ல நீங்க எதுக்கு சார் இந்த கேசுல…” என்று அந்த ஏட்டு தயக்கத்துடன் கேட்டார். இதற்கு முன் ‘தம்பி’ என்றவர் இப்போது வார்த்தைக்கு வார்த்தை ‘சார்’ போட்டுக் கூப்பிட, மெல்ல விரிந்தன பாலாவின் இதழ்கள்.



“இந்த கேசை நான் எடுக்க என்ன காரணம்..? இந்த தேஜுவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்…? – இதைத் தான கேக்க வந்தீங்க…” என்று அந்த ஏட்டைப் பார்த்து வினவினான்.



‘நான் எப்போ டா உனக்கும் அந்த பொண்ணுக்கும் சம்பந்தம்னு சொன்னேன்…’ என்ற கேள்வி அவருக்கு மட்டுமில்லை, அங்கிருந்த அனைவரின் மனதிலும் தோன்றியது. இவ்வளவு நேரம் குழப்பத்துடன் இருந்த தேஜுவும் அவனின் கூற்றில் அவனை முறைத்தாள். அவற்றையெல்லாம் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.



“இந்த தேஜு என்கிற தேஜஸ்வினியோட ‘அப்பா’... அதான் நம்ம ரவிசங்கருக்கும், முதல்வர் உள்ளிட்ட கட்சில பெரிய பதவி வகிக்கிறவங்க பலருக்கும் பிரச்சனை இருக்குறது எல்லாருக்குமே தெரியும். இப்போ ஆறு மாசத்துக்கு முன்னாடி, ரவிசங்கர் கூட இருக்குறவங்க, கட்சில இருக்க பலருக்கு கொலை மிரட்டல் விட்டதா எங்களுக்கு புகார் வந்துச்சு. இது ‘சென்சிட்டிவ்’வான விஷயங்கிறதால, எங்களை மாதிரி பல ‘சீக்ரெட்’ ஃபோர்ஸ் உருவாக்கி, ரவிசங்கருக்கு நெருக்கமானவங்களைக் கண்காணிக்க உத்தரவிட்டாங்க… அந்த நெருக்கமானவங்க லிஸ்ட்ல இந்த ‘தேஜு’வும் ஒருத்தி.” என்று அவளைப் பார்த்தான்.



அவளோ புருவம் சுருக்கி, “அப்போ அந்த மால்ல…” என்று இழுக்க, அதைப் புரிந்து கொண்டவனோ, “எஸ். அப்போலயிருந்து உன்ன நாங்க.. நானும் என் பிரெண்ட் விக்ரமும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம்.” என்றான்.



தேஜு ஒருபுறம் மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம், துரையின் கண்ணசைவில் அந்த ஏட்டு மறுபடியும் திக்கித் திணறி, “சார், அப்போ இந்த கேசு…” என்று இழுத்தார்.



பாலா, அந்த இருக்கையிலிருந்து எழுந்தவாறே, “நீங்க ஒன்னும் கஷ்டப்படாதீங்க… நாங்க பார்த்துக்குறோம். நீங்க வழக்கம் போல நெய்ல ஊறிய பொங்கலை சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோங்க…” என்று அவர்களுக்கு குட்டு வைக்கவும் மறக்கவில்லை.



பாலா தன் நண்பனிற்கு அழைத்து, “ஹேய் விக்ரம். இங்க நம்ம பிளான் படி அந்த பொண்ணு, ரவிசங்கர் அவளோட அப்பான்னு அவ வாயாலேயே ஒத்துகிட்டா. ஆனா அவளைக் கொலை பண்ண முயற்சி நடந்துருக்கு. இனி அவளைத் தனியா வெளிய விடுறது ரிஸ்க். சோ அவளை நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வரேன். நீ அதுக்கான ஏற்பாடெல்லாம் பார்த்துக்கோ.” என்று வேகவேகமாக திட்டம் தீட்டினான்.



அவன் கூறியதைக் கேட்ட தேஜுவிற்கு, ‘என்னது… இவன் இடத்துக்கு கூட்டிட்டு போகப் போறானா..! இவனை நம்பலாமா… இவன் உண்மைலேயே போலீஸா…’ என்று ஆயிரத்தெட்டு எண்ணங்கள் அவளின் மனதை அலைக்கழித்தன.



அவன் பேசுவதை ‘பே’ என்று பார்த்துக் கொண்டிருந்த காவலர்களைக் கண்ட பாலா, “இப்போ அவசரமா சென்னை போகணும். எங்களுக்கு ஒரு கேப் வேணும்…” என்றவன் மீண்டும் அலைபேசியில் கவனமானான்.



மற்ற இருவரும் அவனிட்ட பணியை செய்ய விரைந்து வெளியே செல்ல, துரையோ அவனை முறைத்துக் கொண்டே வெளியே சென்றார்.



அடுத்த ஐந்து நிமிடங்கள் அவனிற்கு அலைபேசியிலேயே கழிய, தேஜுவோ இன்னும் அவனை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள். அவன் அலைபேசியை துண்டித்தப் பின்னரும் அவளிடம் எந்தவித எதிர்வினையும் இல்லாததைக் கண்டவன், “க்கும்… கிளம்பலாமா..?” என்றான்.



“நா.. நான் எதுக்கு உங்க கூட வரணும்… என்னால வர முடியாது…” என்று முயன்று தைரியத்தை வருவித்த குரலில் அவள் கூற, அவளையே அழுத்தமாகப் பார்த்தவன், “ஒரு சி.பி.ஐ ஆஃபிசர் கிட்ட இப்படி தான் பிஹேவ் பண்ணுவீங்களா..? இப்போ என்கூட வரலைனா, உங்களையும் அக்யூஸ்ட் லிஸ்ட்ல சேர்த்துடுவேன்…” என்று அடிக்குரலில் மிரட்டினான்.



அந்த குரல் அவளை ஏதோ செய்ய, அவன் பின் தொடர்ந்தாள், மனதிற்குள் அவனைத் திட்டிக்கொண்டே…



வெளியே, வண்டியைப் பிடித்தது மட்டுமல்லாது, அதற்கான தொகையையும் அந்த இரு காவலர்களும் கொடுக்க, அதைக் கண்ட துரை, “யோவ் நீங்க ஏன்யா காசு குடுக்குறீங்க..?” என்று வினவ, அவர்களோ, “சும்மா இருங்க சார். நம்ம வேற அவரை விசாரணைங்கிற பேர்ல போட்டு படுத்திருக்கோம். அவரு கோபத்துல மேலிடத்துல ஏதாவது புகார் செஞ்சுட்டா… அதான் இப்படியாவது ‘ஐஸ்’ வைக்குறோம். ஹ்ம்ம் உங்க பங்கு நீங்க குடுத்துருக்கணும், ஆனா எங்க தலையெழுத்து அதைக் கேக்க முடியாம நாங்களே எங்க கைக்காச போட்டு செலவு பண்றோம்.” என்று கடைசி வரியை மட்டும் முணுமுணுத்தனர்.



இவர்களின் செயல்களை பாலா கண்டாலும் எதுவும் கூறவில்லை. அவர்களிடம் ஒரு தலையசைப்பைக் கொடுத்து விட்டு, வண்டியில் ஏறினான். அந்த வண்டி அவனையும் அவளையும் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கிப் பறந்தது.



*****



ஜன்னலோரம் முகத்தை வைத்திருந்த தேஜு, எதிர்காற்றில் முடி கலைய, ஒவ்வொரு முறையும் அதை காதுக்கு பின் அடக்கியவாறே சிந்தனையில் மூழ்கியிருந்தாள். அப்போது அவளின் நாசி குப்பென்று ‘சாம்பார்’ வாசனையை நுகர, திரும்பிப் பார்த்தாள்.



அங்கு பாலாவோ, அவனின் காரியத்தில் (சாப்பிடும் வேலையில்) கண்ணாக இருந்தான். இவன் ‘சி.பி.ஐ’ என்பதை அறிந்த அந்த உணவகத்தின் பணியாளன், அவர்கள் கிளம்பும்போது அவசரமாக ஒரு பொட்டலத்தை அவனின் கையில் திணித்து, “சார் சுடச்சுட ‘நெய் ரோஸ்ட்டு’.” என்றான் பல்லிளித்தவாறே. ஒரு சிரிப்புடன் அதை வாங்கியவன், பணம் எடுக்க முயல, “ஐயோ சாரு… காசெல்லாம் வேணாம்…” என்றான் மீண்டும் அவனின் பற்களை காட்டியவாறு. அப்படி ‘உழைத்து’ வாங்கி வந்த ‘நெய் ரோஸ்ட்’டை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலா.



அவனைக் கண்டவள், ‘இவனைப் பார்த்தா போலீஸ் ஃபீலே வரலையே. காணாததைக் கண்ட மாதிரி இப்படி வெட்டிட்டு இருக்கான்.’ என்று மனதிற்குள் நினைக்க, அதை அவன் மனம் உணர்ந்ததோ, “ஏன் போலீசெல்லாம் சாப்பிடக் கூடாதா..?” என்று வினவினான், கண்களை சாப்பாட்டிலிருந்து விலக்காமலேயே…



‘இவன் என்ன மனசுக்குள்ள நினைக்குறதெல்லாம் கண்டுபிடிக்குறான்…’ என்று அதிர்ச்சியில் இருந்தவளை கலைத்தது அவனின் அலைபேசி ஒலி.



“ஓய் என் மொபைல் அடிக்குது… எடுத்து யாருன்னு பாரு…” என்றான் பாலா.



“ஹான்…” என்று கண்களை விரித்தவளைக் கண்டவன், “இப்போ எதுக்கு கண்ணை உருட்டுற..? நான் தான் பிஸியா இருக்கேன்ல… ஒரு பெரிய ஆஃபிசர் சொல்றேன். கேக்க மாட்டீயா..?” என்றான் மீண்டும் அதே குரலில்.



அவனைத் திட்டிகொண்டே, சட்டைப் பையிலிருந்த அவனின் அலைபேசியை எடுத்தவளின் கைப்பட்டு, அந்த அழைப்பு ஏற்கப்பட்டது மட்டுமல்லாமல் ஸ்பீக்கரையும் உயிர்பித்திருந்தாள்.



மறுமுனையிலோ பாலாவின் ஆருயிர் நண்பன், ‘ரம்’ என்கிற விக்ரம்…



“டேய் மச்சி. அப்போ போன் பண்ணி, ஏதோ பிளான்னு… பொண்ணு… இடத்தை ரெடி பண்ணுன்னு சொன்னியே… என்ன மச்சி போன இடத்துல பொண்ணு எதுவும் உஷார் பண்ணிட்டியா… என்ன ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..? அதுக்கு என் ஹெல்ப் வேணுமா… இங்க பாரு மச்சி இப்போலாம் காலம் ரொம்ப கெட்டு கிடக்கு… ஓடிப்போனவனை விட்டுட்டு உதவி செஞ்சவனை தான் வெட்டுறாங்களாம்… அதனால என்கிட்ட எந்த ஹெல்ப்பும் எதிர்பார்க்காத சொல்லிட்டேன்… என்ன மச்சி ஒன்னும் பேச மாட்டிங்குற… ஹலோ…” என்று விக்ரம் கத்திக் கொண்டிருக்கையிலேயே அழைப்பு துண்டிக்கப் பட்டது.



இங்கு பாலாவோ பாவமாக தேஜுவை பார்த்துக் கொண்டிருக்க, “எப்படி எப்படி.. சார் ‘சி.பி.ஐ ஆஃபிசர்’… இத்தனை நாளா என்ன கண்காணிச்சுட்டு இருக்காரு… இதுல அண்டர்கவர் ஆப்பரேஷன் வேற… சார் ரொம்ப பிஸியா இருந்தா, பாக்கெட்லயிருந்து மொபைல் எடுத்துத் தரனுமா…” என்று பற்களைக் கடித்தவாறே அருகிலிருந்த பை கொண்டு அவனை அடித்தாள்.



சில அடிகளைத் தாங்கியவன், அதற்கு மேல் முடியாமல் போக, “அட நிறுத்து டி. உன்னை அந்த பொங்கப் பானைகிட்டயிருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்தா என்னையவே அடிக்குறியா…” என்று ஆதங்கமாக வினவ, அவனின் கூற்றில் அர்த்தமிருந்தாலும், இத்தனை நேரம் அவன் செய்த அலப்பறைகளைத் தாங்க இயலாதவளாக மீண்டும் அவனை மொத்தினாள்.



ஒருவழியாக இருவரும் சமாதானமாக, “இப்படி பொய் சொல்லி ஏமாத்திருக்கியே… அந்த போலீஸுக்கு உண்மை தெரிஞ்சா, என்ன பண்ணுவ..?” என்று கேட்டாள்.



“எதே… என்ன பண்ணுவியா… என்ன பண்ணுவோம்னு கேளு… நீயும் தான் இந்த திட்டத்துல ஒரு பார்ட்… மறந்துறாத…” என்றான்.



“அடப்பாவி நீ மாட்டுறது மட்டுமில்லாம, என்னையும் மாட்டிவிட்டுருக்க…” என்று தேஜு புலம்ப, “ப்ச்… இப்போ எதுக்கு புலம்பிட்டே இருக்க… இப்போ அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கணும்…” என்றா பாலா.



தேஜுவும் அதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது பாலா அவளிடம், “ஆமா அந்த பேக்ல என்ன வச்சுருக்கன்னு இப்போயாச்சும் என்கிட்ட சொல்லலாம்ல…” என்று வினவியதும், ஜில்லென்ற காற்று வீசினாலும் தேஜுவின் முகமோ வியர்த்தது.


தொடர்ந்து பயணிப்போம்...
 
என்னது சிபிஐ இல்லையா😱😱😱😱. ரெண்டே எபிசோட்ல ரெண்டு டிவிஸ்டா🙄🙄🙄. அடக்கடவுளே நான் ரெண்டையும் எதிர்ப்பார்க்கவே இல்லை. செம பல்பு😂😂😂. வாவ் செமயா இருக்கு. கலக்கல் 👏👏👏👏. கதை நான் எதிர்பார்த்ததை விட சூப்பரா இருக்கு 👌👌👌. செம ரைட்டிங்.

எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் வெயிட் பண்ணுறது தான். ஒவ்வொரு எபிசோடுக்கும் இனி வெயிட் பண்ணனுமே☹️☹️☹️.
 

Barkkavi

✍️
Writer
என்னது சிபிஐ இல்லையா😱😱😱😱. ரெண்டே எபிசோட்ல ரெண்டு டிவிஸ்டா🙄🙄🙄. அடக்கடவுளே நான் ரெண்டையும் எதிர்ப்பார்க்கவே இல்லை. செம பல்பு😂😂😂. வாவ் செமயா இருக்கு. கலக்கல் 👏👏👏👏. கதை நான் எதிர்பார்த்ததை விட சூப்பரா இருக்கு 👌👌👌. செம ரைட்டிங்.

எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் வெயிட் பண்ணுறது தான். ஒவ்வொரு எபிசோடுக்கும் இனி வெயிட் பண்ணனுமே☹️☹️☹️.
😂😂😂 ஆமா சிபிஐ இல்ல... நன்றி சகோ...😍😍😍 மோஸ்ட்லி டெய்லி எபி வந்துடும் சகோ... என்னைக்காவது தான் மிஸ் ஆகும்...😁😁😁
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom