• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 7

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் அடுத்த அத்தியாயம் இதோ... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁


eiS3J4T31945.jpg


பயணம் 7



சந்தோஷ் கூறியதைக் கேட்டவர்கள் அதிர்ச்சியுடன் இருக்க, அவர் நடந்ததை மேலும் கூறத் துவங்கினார்.



“நான் படுக்கும்போது நைட் 11.30 மணி இருக்கும். எனக்கு எப்பவுமே போர்வையால முகத்தை மூடி தான் தூங்கிப் பழக்கம். நேத்தும் அப்படி தூங்கிட்டு இருந்தப்போ தான் ஏதோ சத்தம் கேட்டுச்சு. பக்கத்து ரூம்லயிருந்து சத்தம் வந்துருக்கும்னு முதல அலட்சியமா இருந்துட்டேன். கொஞ்ச நேரத்துல யாரோ, என் முகத்தை தலகாணி வச்சு அமுக்குனாங்க. திடீர்னு அப்படி நடக்கவும், என்னால தடுக்க முடியல. நிமிஷ நேர போராட்டத்துக்கு பின்னாடி, என் முகம் மேல இருந்த போர்வை விலகியிருக்கும் போல. இப்போ யோசிச்சா, என்னைப் பார்த்து அவன் ஷாக்காகிருப்பான்னு தோணுது.”



“ஆனா அந்த சமயம் என்னால எதுவும் யோசிக்க முடியல. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு போயிட்டேன். ஆனாலும் அவன் யாருக்கிட்டயோ போன் பேசுற சத்தம் கேட்டுச்சு. அப்போ தான் அவன் ரூம் மாறி வந்துட்டதா சொல்லிட்டு இருந்தான். அந்த பக்கம் என்ன சொன்னாங்களோ, அவன் கத்தி எடுத்து குத்த வந்தான். அந்த அரை மயக்க நிலைல என்னால எதுவும் செய்ய முடியல. அவ்ளோ தான்… நான் சாக போறேன்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான், யாரோ வர சத்தம் கேட்டுச்சு. அவனும் அவசரத்துல சரியா குத்தாம போயிட்டான்.” என்று அந்த கொடிய இரவின் நிகழ்வுகளைக் கூறினார் சந்தோஷ்.



“யாரோ வர சத்தம் கேட்டுச்சுன்னு சொன்னீங்களே, அது யாருன்னு தெரியுமா..?” என்று துரை கேட்டார். ஏற்கனவே, அந்த விடுதி பணியாளனிடம் இதைப் பற்றி விசாரித்திருந்தார் துரை.



சந்தோஷோ, “இல்ல சார். எனக்கு அது யாருன்னு தெரியல. மேபி நான் அப்போ மயக்கத்துல இருந்துருப்பேன்…” என்று கூற, தேஜுவோ, “நானும், அந்த ஹோட்டலோட செர்வன்ட்டும் தான் அவரோட ரூமுக்கு போனோம்.” என்றாள்.



அவள் கூறியதைக் கேட்ட அனைவரும் அவளின் பக்கம் பார்வையையைத் திருப்ப, அப்போது தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று சிந்தித்தாள் தேஜு.



‘ஹ்ம்ம் என் மேல குத்தம் சொல்லுவா... இப்போ அவளே வாலண்டியரா மாட்டிக்கிறா…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான் பாலா.



துரையோ தாடையைத் தடவியவர், “ஹ்ம்ம்… அந்த பையன் சொன்ன பொண்ணு நீ தானா..?” என்று கேட்க, சற்று தயக்கத்துடனே தலையாட்டினாள் தேஜு.



“ஓ… அப்போ நீ இவரைக் குத்துனவனை பார்த்தீயா..?” என்று அவர் கேட்க, “இல்ல சார். நாங்க உள்ள போனப்போ, அவன் பால்கனி வழியா குதிச்சுட்டான் சார். அந்த செர்வன்ட் தான் அவன் பின்னாடி போனான்.” என்றாள்.



“ம்ம்ம் உனக்கு எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிஞ்சுது… ஐ மீன்… நீ தான் ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு அந்த செர்வன்ட்டுக்கு போன் பண்ணன்னு அவன் சொன்னான்.”



“சார், இவரோட ரூம் பக்கத்து ரூம் தான் என்னோடது. நைட்ல ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு… அதான் ரிசப்ஷனுக்கு போன் பண்ணேன். நாங்க இவரு ரூமுக்கு போனப்போ, அது பாதி திறந்து இருந்தது. ஐ திங்க், அந்த கல்ப்ரிட் ரூம் என்ட்ரன்ஸ் வழியா வெளிய வரப்போ, எங்க சத்தம் கேட்டு வேகமா பால்கனி வழியா தப்பிச்சுருக்கணும்…” என்று தேஜு அவளின் அனுமானத்தைக் கூறினாள்.



அதைக் கேட்டவர், “நாம இன்னொரு தடவை, அந்த ஹோட்டல் போய், நைட் யாராவது சந்தேகப்படுற மாதிரி வந்தாங்களான்னு விசாரிக்கணும். ச்சே ஒரு சிசிடிவி கூட இல்லாம என்ன ஹோட்டல் நடத்துறாங்களோ…’ என்று அருகில் இருந்த ஏட்டிடம் புலம்பினார்.



பின்னர், மீண்டும் சந்தோஷிடம் திரும்பியவர், “அவன் யாரைக் கொல்ல வந்தான்னு பேரு ஏதாவது சொன்னானா..?” என்று வினவினார்.



அவரின் கேள்வியில், தேஜுவையை அரை நொடிக்கும் குறைவாக பார்த்த சந்தோஷ், “பேரு எதுவும் சொல்லல சார். ஆனா அவன் பேசுனதுலயிருந்து, ஒரு பொண்ணு தான் அவனோட டார்கெட்னு தெரிஞ்சுது.” என்றார்.



இவ்வளவு நேரம் அங்கு நடப்பதை சற்று அலட்சியமாகவே பார்த்துக் கொண்டிருந்த பாலா, சந்தோஷ் கூறியதைக் கேட்டதும் அவனருகில் நின்று கொண்டிருந்த தேஜுவைப் பார்த்தான். அவன் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவள் மீது தான் இருந்தது.



தேஜு இதை ஏற்கனவே யூகித்திருந்தாலும், அப்போது கேட்பதற்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அந்த கொலையாளி அறை மாற்றி சென்றதால், இவள் இன்று உயிருடன் இருக்கிறாள். இல்லையென்றால்… நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.



அனைவரும் அமைதியாக நின்றிருக்க, அவர்களின் அமைதியை கலைத்தது, செவிலியின் குரல்.



“சார், அவரு ரொம்ப நேரம் பேசக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.” என்று தயக்கத்துடன் அந்த செவிலி கூற, துரையும் சந்தோஷிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றார். அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் வெளியேறினர்.



தேஜு இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருப்பதைக் கண்ட பாலாவிற்கு சற்று பாவமாக இருக்க, அவளின் தோளைத் தொட்டான். அப்போது தான் நிகழ்விற்கு வந்தாள் தேஜு. பாலா அவளிடம் ஆறுதலாக பேச நினைக்கும்போது, “இன்னும் என்ன இங்கயே நின்னுட்டு இருக்கீங்க… உங்க ரெண்டு பேரையும் விசாரிக்கணும்… ம்ம்ம் வாங்க…” என்று அவர்களை அழைத்துச் சென்றார் துரை.



அந்த மருத்துவமனைக்கு அருகிலிருந்த உணவகத்திற்கு சென்றனர். பின்காலை பொழுதென்பதால், அவ்வளவாக கூட்டமில்லை. அங்கு சென்றதும் தான், இருவருக்குமே காலையிலிருந்து சாப்பிடாதது நினைவிற்கு வந்தது.



‘ஷப்பா.. இப்போயாச்சும் இந்த தொரைக்கு சாப்பாட்டைக் கண்ணுல காட்டணும்னு தோணுச்சே…’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான் பாலா.



ஆனால் துரையோ சாப்பிடும் நினைவே இல்லாதவாறு, அவர்களை அமர வைத்து விசாரணையைத் துவங்க, “சார், நாங்க காலைலயிருந்து சாப்பிடல… ப்ளீஸ் சார். நாங்க ஃபர்ஸ்ட் எங்க வயித்தை கவனிக்குறோம். அப்பறம் நீங்க எங்களை கவனிங்க…” என்று பாலா கூற, அவர்களின் நிலையைக் கண்டவர், “பத்து நிமிஷம் தான் டைம்…” என்று கூறிவிட்டு பக்கத்து மேஜைக்கு சென்றார்.



பசி மயக்கத்திலேயே அந்த உணவகத்தின் பணியாளரை அழைத்து ‘மெனு’வைக் கேட்டான். அவனோ, “ரெண்டே ரெண்டு ஆறிப்போன தோசை தான் இருக்கு…” என்று கூற, “எதே ஆறிப்போன தோசையா… அதுவும் ரெண்டு தான் இருக்கா…” என்று சோகமாகக் கேட்டான் பாலா.



“ஆமா சார். மணியைப் பாருங்க. இந்த நேரத்துக்கு அது இருக்குறதே பெருசு…” என்று அங்கலாய்த்தவாறே அதை எடுத்து வந்து ஆளுக்கு ஒன்றாக வைத்தான்.



அந்த ‘ஆறிப்போன தோசை’யைப் பார்த்த பாலா எதேச்சையாக எதிரில் அமர்ந்திருந்த துரையை பார்த்தவன், “இந்த ஆளு மட்டும் நல்லா பொங்கலை வெட்டிட்டு, என்ன இந்த தோசைய சாப்பிட வச்சுட்டான்…” என்று முணுமுணுத்தான்.



இவ்வளவு நடந்தபோதும் அதில் எதிலும் பங்கேற்காமல் ஏதோ யோசனையிலேயே இருந்தாள் தேஜு. அவளின் நிலை கண்டவன், ஏதேதோ குரங்கு சேட்டை செய்து, அவளிடம் திட்டு வாங்கி, அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்த பின்பே ஓய்ந்தான் பாலா.



இதற்குள் அவர்கள் சாப்பிட்டு முடித்திருக்க, விசாரணையை ஆரம்பித்தார் துரை. இம்முறை தேஜுவினிடத்தில்…



“உன்னைப் பத்தி சொல்லுமா…” என்று தேஜுவைப் பார்த்து கேட்டார் துரை. ஒரு நிமிடம் தயங்கியவள், பின் அவளைப் பற்றி கூறத் துவங்கினாள்.



“நான் தேஜஸ்வினி. சொந்த ஊர் மதுரை. எங்க அம்மா பேரு கயல்விழி. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. நான் எம்.எஸ்.சி முடிச்சுருக்கேன். இப்போ வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.” என்று கூறினாள்.



அவள் தந்தையைப் பற்றி எதுவும் கூறாமல் இருப்பதைக் கண்ட பாலாவிற்கு ஏனோ முன்தினம் விடுதி வரவேற்பில் அந்த தொண்டர்கள் பேசியது நினைவிற்கு வந்தது. அதே யோசனையுடன் அவளையே கூர்மையாக பார்த்தான்.



“உங்க அப்பா என்ன பண்றாரு மா..?” – தாயில்லா பிள்ளை என்ற கரிசனமோ துரையின் குரல் மென்மையானது.



“அப்.. க்கும்… அவரு பேரு ரவிசங்கர்.” என்றாள் தயக்கத்துடனே…



‘ரவிசங்கர்’ என்ற பெயரைக் கேட்டதுமே, அவ்வளவு நேரம் அலட்சியமாக அமர்ந்திருந்த துரை சுதாரித்து, “ரவிசங்கரா… சி.எம்முக்கு வலது கையா இருந்தாரே அந்த ரவிசங்கரா…” என்று சிறிது படபடப்புடனே விசாரித்தார்.



தேஜு ‘ஆம்’ என்று தலையசைத்தாள். பாலா இதை யூகித்திருந்தான். எனினும் அமைதியாக நடப்பதைக் கவனித்தான்.



“என்னமா சொல்ற..? அவருக்கு தான் கல்யாணமே ஆகலையே… அப்பறம் எப்படி…” என்று சொல்ல வந்தவர், பின் ஏதோ புரியவும் அமைதியானார்.



தேஜுவோ அவரின் கேள்விக்கு, “அவருக்கு தாலி கட்டின மனைவியையும், அவரோட குழந்தையையும் வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தறதை விட அவரோட அரசியல் வாழ்க்கை தான் பெருசா போயிடுச்சு…” என்றாள் விரக்தியாக.



இதுவரை அவளின் கோப முகத்தையும், அத்தி பூத்தாற் போல சிரிப்பையும் கண்டிருந்த பாலாவிற்கு, அவளின் விரக்தி ஏதோ செய்ய, ஆறுதலுக்காக அவளின் கைகளைப் பற்றிக் கொண்டான்.



அதை உணராதவளாக தேஜு பேசிக் கொண்டிருந்தாள். “சின்ன வயசுல அவரை அப்பான்னு வெளிய சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுருக்கேன். இதனால எத்தனையோ விதமான கேலி கிண்டல்களுக்கு ஆளாகிருக்கேன். ஆனா எப்போ எங்க அம்மா செத்தப்போ கூட, ‘மனைவி’ங்கிற அங்கீகாரத்தை குடுக்க யோசிச்சாரோ, அப்போலயிருந்து அவர ‘அப்பா’ன்னு கூப்பிடவே அருவருப்பா இருக்கு.” என்று தன்னை மறந்து, தானிருக்கும் சூழ்நிலை மறந்து சொல்லிக் கொண்டிருந்தவள், அப்போது தான் சுயத்திற்கு திரும்பினாள்.



“சாரி சார். கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்... ம்ம்ம் ஆமா சார் அவரு தான் நான் பிறக்க காரணமானவர்…” என்றாள். அப்போதும் ‘அப்பா’ என்ற வார்த்தையைத் தவிர்த்தாள்.



அவளின் சோகம் அங்கிருந்தவர்களை ஏதோவொரு வகையில் தாக்க, சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.



பின்னர் தேஜுவே ஆரம்பித்தாள், “நான் இருக்குறது மதுரைல தான் சார். இரண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் அம்மா கூட இருந்தாங்க. இப்போ பாட்டி கூட தங்கிருக்கேன். எங்க அம்மாவோட தம்பி வீடு பெங்களூருல இருக்கு. போன வாரம் ஒரு விஷேசத்துக்கு பாட்டி அங்க போயிருந்தாங்க. இப்போ நான் கூட அங்க தான் போயிட்டு இருந்தேன்.” என்றவள், அவர்களின் பேருந்து பழுதடைந்த கதையையும், வேறு பேருந்து இல்லாததால் அந்த விடுதியில் தங்க நேர்ந்த கதையையும் கூறினாள்.



அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த துரை, “எதுக்கு அவன் உன்னை கொல்ல வரனும்..? ரவிசங்கருக்கு நெறைய எதிரிகள் இருந்தாலும், அவங்களுக்கு தான் நீ அவரோட பொண்ணுன்னு தெரியாதே… தனிப்பட்ட முறைல உனக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா..?” என்று குழப்பத்துடன் வினவினார்.



“எனக்கு யாரும் எதிரிங்க இல்ல சார். என் பெர்சனல் லைஃப் ரொம்பவே ஸ்மூத்தா போயிட்டு இருக்கு… மேபி நான் அவரோட பொண்ணுன்னு அவரோட எதிரிங்க யாருக்காவது தெரிஞ்சுருக்கலாம். எனக்கு அவரோட அரசியல் பத்தியெல்லாம் பெருசா தெரியாது. ஆனா, இப்போ அவரைக் கட்சிலயிருந்து நீக்குனதால, எப்படியாவது கட்சில திரும்ப சேர்ந்துடனும்னு ரொம்ப தீவிரமா இருக்காங்க. அவரைக் கட்சிலயிருந்து தூக்குன அந்த வருணை எதிர்க்கணும்னு முயற்சி பண்ணிட்டும் இருக்காங்க. அந்த வருணும் இவங்களுக்கு எதிரா பல வேலைகளைப் பண்ணிட்டு இருக்குறதா அவரோட ஆளுங்க பேசுனதை நான் கேட்டுருக்கேன்…” என்று தேஜு கூறி முடித்ததும் அங்கு பெருத்த அமைதி நிலவியது.



இது பெரிய இடத்து விஷயமானதால் துரை சற்று பொறுமை காத்தார். ஏனெனில் அவருக்கு ரவிசங்கர் பற்றியும் தெரியும், வருண் பற்றியும் தெரியும். இருவருமே தற்போதைய ஆளுங்கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள். இதில் ரவிசங்கருக்கும் தலைமைக்கும் சமீபத்தில் பிணக்கு ஏற்பட, மாநிலமே அதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தது. அதற்கு காரணம், கட்சியின் இளைஞரணி செயலாளர், வருண் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.



வருணும் சாதாரன ஆளில்லை. கட்சியில் சேர்ந்த ஒன்றரை வருடத்தில், இப்போதைய நிலையை அவன் எட்டியிருக்க வேண்டுமென்றால் அவன் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் பல மூத்த தலைவர்களை ஓரம் கட்டிய பெருமையும் அவனையே சாரும்.



அதில் ஒருவர் தான், பல ஆண்டுகளாக தலைமைக்கு நெருங்கிய, சொல்லப்போனால், வலது கையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரவிசங்கர். இப்போது அவரையும் ஓரம்கட்ட, அரசியல் வாழ்விற்காக குடும்பத்தையே மறைத்தவர், சும்மா இருப்பாரா… இதன் காரணமாக ரவிசங்கருக்கும் வருணுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருப்பதும், அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.



இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த துரையைக் கலைத்தது பாலாவின் குரல். “வெல் மிஸ்டர். துரை இந்த கேஸை இவ்வளவு தூரம் கொண்டு வந்து, எனக்கு தேவையான டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்…” என்று கூறியவாறு ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியவாறு எழுந்து நிற்க, அவனை குழப்பத்துடன் பார்த்தனர் மற்றவர்கள்.



“ஓ சாரி... நான் என்னை இண்ட்ரோட்யூஸ் பண்ணலல. ஐ’ம் பாலகிருஷ்ணன் ஃப்ரம் சிபிஐ, இன் அண்டர்கவர் ஆப்பரேஷன்.” என்று அவன் கூறியதும் அங்கிருந்தவர்களில் யார் அதிகம் அதிர்ந்தனர் என்று தெரியவில்லை.


தொடர்ந்து பயணிப்போம்...
 
செம டிவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை பாலா சிபிஐனு👌👌👌. செமயா இன்டரெஸ்டிங்கா அதேசமயம் ஜாலியாவும் போகுது. இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌. நல்லா எழுதி இருக்கீங்க சூப்பர் இம்பிரஸ்டு.
 
Last edited:

Barkkavi

✍️
Writer
செம டிவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை பாலா சிபிஐனு👌👌👌. செமயா இன்டரெஸ்டிங்கா அதேசமயம் ஜாலியாவும் போகுது. இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌. நல்லா எழுதி இருக்கீங்க சூப்பர் இம்பிரஸ்டு.
அடுத்த எபில இப்படி சொல்வீங்களான்னு தெரியலையே...😁😁😁 நன்றி சகோ😍😍😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom