• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 6

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் ஆறாம் அத்தியாயம் இதோ... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁


eiXKFK891907.jpg


பயணம் 6



பாலாவின் அலப்பறைகளில் நொந்து போன அந்த காவலர்களோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, தன்னை வெறுப்பேற்றிய அந்த துரைசிங்கத்தின் முகம் போன போக்கைக் கண்டு துள்ளிக் குதிக்காத குறையாக உற்சாகத்தில் இருந்தான் பாலா.



அதே உற்சாகத்துடன் தேஜுவின் முகத்தைக் காண, இரவில் இருந்த அதே பதட்ட நிலையில் இருந்தாள் அவள். அவளின் நிலை குறித்து யோசித்தவாறே அவளை உலுக்கினான், பாலா.



பாலாவின் உலுக்கலில் நிகழ்விற்கு வந்தவள், திறுதிறுவென முழிக்க, ‘இவ முழியே சரியில்லையே…’ என்று யோசித்தான் பாலா.



“என்னய்யா இவன் உண்மைலேயே டம்மி பீஸு தான் போல…” என்று துரை ஏட்டின் காதில் கூற, அவரும் வேறு வழியில்லாமல் துரைக்கு ஒத்து ஊதினார்.



“சரி சரி ரெண்டு பேரையும் வெளிய அனுப்பு. ஹ்ம்ம்... இந்த கேஸ் இன்னும் எவ்ளோ நாள் நம்மள வச்சு செய்யப் போகுதோ…” என்று புலம்பினார், துரை.



அந்த ஏட்டும், “தம்பி, நீங்க கிளம்புங்க. விசாரணை முடிஞ்சது.” என்று கூற, அதுவரையிலும் தேஜுவின் முழிப்பிற்கான காரணத்தை சிந்தித்துக் கொண்டிருந்த பாலா, “என்னது கிளம்பவா..? என்னை மட்டும் குற்றவாளி மாதிரி செக் பண்ணிங்க.. இதோ இவ பேக்கெல்லாம் செக் பண்ண மாட்டிங்களா..?” என்றான்.



பாலாவின் கூற்றைக் கேட்ட தேஜு அவனை முறைக்க, அதை ஓரக் கண்ணில் பார்த்தவன், ‘ஹான் முறைக்குறா முறைக்குறா… நம்ம ஆளுக்கு எதுவும் ஆகல…’ என்று மனதிற்குள் மகிழ்ந்தான், அவள் மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டிருப்பதை அறியாதவனாக.



‘இந்த லூசு சும்மாவே இருக்க மாட்டான். அவங்களே கிளம்புன்னு சொன்னாலும், வாலண்டியரா மாட்டி விடுறான்…’ என்று தேஜு சற்று முன்னிருந்த பதட்ட நிலையிலிருந்து கோப நிலைக்கு மாறினாள்.



அப்போது அவளைக் காக்கவே துரையின் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, வேகமாக எழுந்தவர், அவரருகே இருந்த ஏட்டிடம், “அந்த கத்திக்குத்து பட்டவருக்கு நினைவு திரும்பிடுச்சாம். ஆனா திரும்ப எப்போ மயக்க நிலைக்கு போவாருன்னு தெரியலையாம். ஃபர்ஸ்ட் அவர விசாரிச்சுட்டு வந்துடலாம்…” என்று கூறிக்கொண்டே வெளியே செல்ல, அவரின் பின்னே மற்ற இருவரும் சென்றனர்.



அப்போது தான் தேஜு சிறிது ஆசுவாசமடைந்தாள், அவளின் நிம்மதியைக் கெடுக்கவே கடவுள் ஒருவனை அனுப்பி வைத்திருப்பதை அறியாதவளாக…



“அந்த துரையை எப்படி வெறுப்பேத்துனேன் பார்த்தேல…” என்று பெருமையாக பாலா கூற, அவனை முறைத்துப் பார்த்தவள் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தாள்.



“க்கும்… தேங்க்ஸ் சொல்றதா இருந்தா சத்தமாவே சொல்லலாம்…” என்று அவன் கூறினான். தேஜுவோ அவனை ஒருமாதிரி பார்த்து, “உனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்..?” என்று வினவினாள்.



“எதுக்கா… என்னால தான் இப்போ நீ ஃப்ரீயா இருக்க. நான் தான அவங்களை டைவர்ட் பண்ண என்னலாமோ பண்ணேன்.” என்று அவன் கூற, அவ்வளவு நேரம் பொறுமையை மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடன் இழுத்துக்கட்ட போராடியவள், அவனின் கூற்றில் அதை காற்றில் பறக்க விட்டவளாக, “உன் மூஞ்சி… லூசு மாதிரி ஏதோ பண்ணிட்டு அதை பெருமையா வேற சொல்லிக்கிற… இதுல என் பையை வேற செக் பண்ண சொல்ற… உன்னைக் கேட்டானா அவன்…” என்று அடிக்குரலில் சீறினாள்.



அவளின் கோபத்தில் ஒரு நிமிடம் திகைத்தவன், “உன் பையை தான செக் பண்ண சொன்னேன்… அதுக்கு எதுக்கு இந்த குதி குதிக்கிற… அப்படி என்ன அதுல ஒளிச்சு வச்சுருக்க… என்னமோ பெரிய தீவிரவாதி மாதிரி சீனப் போடுவா…” என்று பேசிக் கொண்டே சென்றவன், திடீரென்று பேச்சை நிறுத்தியவனாக, அவளைக் கூர்மையாக அளவிட்டுக் கொண்டே, “நீ ***** இயக்கத்தை சேர்ந்தவ தான… உண்மைய சொல்லு அந்த பைல என்ன வச்சுருக்க…” என்று கேட்டுக் கொண்டே அவளின் பையை இழுத்தான்.



அந்த பையின் மற்றொரு முனையை தேஜு பிடித்துக் கொள்ள, இருவருக்கும் இடையே இழுபறி நடந்து கொண்டிருந்தது.



“டேய் லூசு மாதிரி பிஹேவ் பண்ணாத விடு டா…” என்று அவள் கத்த, “முடியாது டி… ஒழுங்கா உள்ள என்ன வச்சுருக்கன்னு சொல்லிடு…” என்று அவனும் கத்தினான்.



இருவரும் பையை இழுத்துக் கொண்டே, அந்த அறையின் வாயிலை அடைந்தனர். காலையில் நடந்த கொலை முயற்சியின் காரணமாக அந்த இடமே அமைதியாக இருக்க, இவர்களின் சத்தம் அந்த விடுதி முழுவதுமே எதிரொலித்தது.



அந்த விடுதியில் இருந்த அனைவரும் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, விடுதியின் வாயிலை அடைந்த காவலர்களும் இவர்களின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தனர்.



ஏற்கனவே பாலாவின் செயலில் கடுகடுவென்றிருந்த துரைக்கு இவர்களின் சண்டையும் எரிச்சலை ஏற்படுத்த, “யோவ் என்னய்யா இம்சை இதுங்களோட…” என்று ஏட்டிடம் புலம்பினான்.



இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த மற்றொரு காவலரோ, “சார், ஏதோ தீவிரவாதின்னு பேசிக்குறாங்க… பெரிய கேசா இருக்கும் போல… இந்த வருஷம் இவங்கள வச்சு ப்ரொமோஷன் வாங்கிடலாம்.” என்று துரையிடம் கூற, “அப்படிங்கிற…” என்று தாடையைத் தடவி யோசித்தவர், “ஏட்டு, அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா.. ஹாஸ்பிடல்ல விசாரிச்சுட்டு, இவங்களை விசாரிக்கலாம்.” என்றார்.



தங்களைச் சுற்றி நடப்பது எதுவும் அறியாமல் சண்டையில் மூழ்கியிருந்தவர்களை நெருங்கியவர், “தம்பி… பாப்பா…” என்று மரியாதையாக அழைக்க, அவரைக் கண்டு கொள்ளவேயில்லை அவர்கள் இருவரும்.



சற்று நேரம் பொறுத்து பார்த்தவர், இருவரும் அவர்களாக தன்னைத் திரும்பி பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, “டேய் நிறுத்து… ஏம்மா நீயும் நிறுத்து… அப்போயிருந்து கூப்பிட்டுட்டே இருக்கேன்… ரெண்டு பேர்ல யாராவது திரும்பி பார்த்தீங்களா… முதல சண்டை போடுறத நிறுத்திட்டு சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க…” என்று குரலை உயர்த்தி பேசினார்.



அப்போது தான் இருவருக்கும் அவர்கள் இருக்கும் இடம் நினைவிற்கு வர, சுற்றிலும் பார்வையை செலுத்தினர். அங்கிருந்தவர்களின் கண்கள் இவர்களையே வித்தியாசமாக நோக்குவதை உணர்ந்தவர்கள், ஒருவரையொருவர் பார்த்து, “நீ தான் டா(டி) இதுக்கெல்லாம் காரணம்…” என்று மீண்டும் ஒரு சண்டையைத் துவங்க, “அடச்சே நிறுத்துங்க பா, ரெண்டு பேரும்… எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டு… சரி சரி ரெண்டு பேரும் என்கூட வாங்க…” என்று ஏட்டு கூறினார்.



அவர் அப்படி கூறியதும், குழப்பமாக அவரைக் கண்ட இருவரும், “எங்க..?” என்று ‘கோரஸாக’ கேட்க, “ஹான் ஜெயிலுக்கு…” என்றார் அவரும்.



“என்னாது ஜெயிலுக்கா…” என்று வாய் பிளந்த இருவரும், ‘எதுக்கு’, என்ற ரீதியில் அவரைப் பார்க்க, அதைப் புரிந்து கொண்டவர், “அதான் நீங்களே உண்மைய ஒத்துக்கிட்டீங்களே… ரெண்டு பேரும் தீவிரவாதின்னு…” என்று கூறினார்.



அதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், “சார், நான் இல்லை… இவ தான் தீவிரவாதி. அவ பையைக் கூட செக் பண்ணி பாருங்க…” என்று அப்ரூவராய் மாறியவன் போல பேச, ‘அடப்பாவி…’ என்று வாயை மட்டும் அசைத்தாள் தேஜு.



“அதெல்லாம் இல்ல சார்… அவன் ஒரு லூசு… அதான் உளறிட்டு இருக்கான்…” என்று தன் பங்கிற்கு அவளும் கூற, இருவரையும் அடக்கியவர், “எதுவா இருந்தாலும் ஸ்டேஷன் வந்து பேசிக்கோங்க…” என்று முன்னே நடந்தார்.



அவரின் பின்னே சென்ற இருவரும் என்ன கெஞ்சியும் சம்மதிக்காமல் அவர்களை ‘ஜீப்’பிற்கு அழைத்து வந்தார்.



துரை இருவரையும் மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு, “வண்டில ஏற சொல்லுய்யா…” என்று ஏட்டிற்கு கட்டளையிட்டார்.



‘நான் வெறுப்பேத்துனதுக்கு இப்போ நல்லா வச்சு செய்ற…’ என்று மனதிற்குள் துரையைத் திட்டிக் கொண்டே அந்த வண்டியில் ஏற, ‘என் தலையெழுத்து உங்கூட இப்படி மாட்டிருக்கேன்…’ என்று பாலாவைத் திட்டிக் கொண்டே ஏறினாள், தேஜு.



*****



அடுத்த கால் மணி நேரத்தில், மருத்துவமனை வளாகத்தில் நின்றது அந்த வண்டி. அந்த கால் மணி நேரமும், பாலாவும் தேஜுவும் முறைத்துக் கொண்டிருந்தனரே தவிர எதுவும் பேசிக் கொள்ளவில்லை.



“சார், உங்க ஸ்டேஷனை எப்போ ஹாஸ்பிடலுக்கு மாத்துனீங்க…” என்று அவ்வளவு நேரம் பேசாமல் இருந்தவன், அவனின் சந்தேகத்தை ஏட்டின் காதில் முணுமுணுக்க, ‘அடங்கவே மாட்டியா நீ’ என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்த ஏட்டு உள்ளே செல்ல, இவர்களும் அவரின் பின்னே சென்றனர்.



மருத்துவமனை வரவேற்பில் அறை எண்ணை விசாரித்துவிட்டு அங்கே செல்ல, அப்போது தான் அந்த அறையிலிருந்து மருத்துவர் வெளியே வந்தார்.



துரை அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அடிப்பட்டவரின் நிலை குறித்து வினவினார்.



“கனமான போர்வை அவர் மேல இருந்ததால, கத்தி ஆழமா இறங்கல… லேசா தோலை தான் கிழிச்சுருக்கு. இப்போ அவரு சேஃப் தான்… ஆனா குத்துறதுக்கு முன்னாடி தலகாணிய வச்சு மூச்சடைக்க முயற்சி பண்ணிருக்கான். அதுல தான் அவரு மயக்கமாகிட்டாரு.” என்று குத்துபட்டவரின் நிலையை விளக்கினார்.



“இப்போ நாங்க அவர விசாரிக்கலாமா, டாக்டர்?” என்று துரை வினவ, “என்னை கேட்டீங்கன்னா, இப்போ அவருக்கு ரெஸ்ட் தான் முக்கியம்னு சொல்லுவேன். பட் அவரை டிஸ்டர்ப் பண்ணாம சீக்கிரம் விசாரணையை முடிக்கிறதா இருந்தா யூ கேன் ப்ரோசீட்…” என்று கூறினார் அந்த மருத்துவர்.



அவருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு, உள்ளே சென்றனர் அம்மூன்று காவலர்களும். இவ்வளவு நேரம் நடப்பதை வெறும் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்த தேஜுவும் பாலாவும் தங்களின் விதியை நொந்து கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தனர், அவர்களின் வாழ்க்கை பயணத்தையே மாற்றக்கூடிய செய்தி அவர்களுக்காக காத்திருப்பதை அறியாமல்…



அந்த அறையினுள்ளே, சோர்வாக கண்மூடி படுத்திருந்தவருக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. இவர்கள் அறைக்குள் நுழையும் ஓசை கேட்டு விழித்தார் அவர்.



“ஹலோ மிஸ்டர். சந்தோஷ். சாரி டு டிஸ்டர்ப் யூ. இப்போ எப்படி இருக்கு..?” என்று துரை கூற, ‘பாரு டா… தொரை இங்கிலீஷ்லாம் பேசுது…’ என்ற ‘மைண்ட் வாய்ஸ்’ பாலாவினுடையாதாக அல்லாமல் வேறு யாருடையதாக இருக்க முடியும்.



“ஐ’ம் ஃபைன் சார். இப்போ பரவால… லேசான வலி தான் இருக்கு.” என்றார் அந்த சந்தோஷ்.



“சந்தோஷ், நீங்க எப்போயிருந்து அந்த ஹோட்டல்ல ஸ்டே பண்ணிருக்கீங்கன்னு சொல்லுங்க… அப்படியே உங்கள பத்தியும் சொல்லுங்க…” என்றார் துரை.



“சார், நான் ஒரு ஆர்கிடெக்ட். ***** கம்பெனியோட சென்னை ப்ரான்ச்ல வேலை பாக்குறேன். எங்க கம்பனியோட பெங்களூரு ப்ரான்ச்ல சின்ன பிரச்சனை. சோ நேத்தும் அதுக்கு முதல் நாளும், அங்க இருந்த பிரச்சனைய தீர்த்துட்டு, சென்னைக்கு கிளம்பிட்டு இருந்தேன். ரொம்ப ஒர்க் டென்ஷனால என்னால தொடர்ந்து வண்டியோட்ட முடியல. அதான் அந்த ஹோட்டல்ல நைட் தங்கிட்டு காலைல கிளம்பலாம்னு இருந்தேன்.” என்று தன்னைப் பற்றிக் கூறினார்.



“ஓகே சந்தோஷ். நீங்க வேலை செய்யுற கம்பெனில ஏதாவது பிரச்சனையா… அதாவது உங்க சக நண்பர்கள் கூட சண்டை… அதனால இந்த கொலை முயற்சின்னு நினைக்கிறீங்களா..? இல்ல உங்க பெர்சனல் லைஃப்ல எதுவும் பிரச்சனையா..?” என்று துரை கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல, அவரை இடையில் நிறுத்திய சந்தோஷ், “சார் சார்… ஹோல்ட் ஆன். இந்த கொலை முயற்சி எனக்கானது இல்ல..” என்றவரின் பார்வை பாலாவையும் தேஜுவையும் வெறித்தது.



*****



அதே நேரம், வேறொரு இடத்தில்… அவனின் அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்க, அதை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். பின், நடப்பது நடக்கட்டும் என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு அந்த அழைப்பை ஏற்றான்.



அவன் அழைப்பை ஏற்றதும், மறுமுனையிலிருந்து பல கெட்ட வார்த்தைகள் சரளமாக வர, அதைக் கேட்டவனிற்கோ பயத்தில் வியர்த்து விட்டது.



“***** ஒரு வேலை சொன்னா, அத சரியா முடிக்க துப்பில்ல… இத்தனைக்கும் நான் தான எல்லா பிளானையும் போட்டுக் கொடுத்தேன். அப்படியிருந்தும் சொதப்பி வச்சுருக்க… ***** சரி ரூம் தான் மாத்தி போயிட்ட, அவன குத்துனதையாவது ஒழுங்கா செஞ்சியா… அதுவும் இல்ல. இப்போ அவன் ஹாஸ்பிடல்ல தான் இருக்கானாம். அவன் மட்டும் நம்ம திட்டத்தை வெளிய சொன்னான்… அவ்ளோ தான்… என்னோட இத்தனை வருஷக் கனவு கனவாவே போயிடும். ஹ்ம்ம் உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு ஒன்னும் ***** முடியாது.” என்று மேலும் சில கெட்ட வார்த்தைகளை உச்சரித்த பின்னர், அவராகவே அழைப்பைத் துண்டித்தார்.



அதுவரையிலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தவன், “ஷப்பா… இனி கொஞ்ச நாளுக்கு இவர் கண்ணுல படக்கூடாது…” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் அவன்.


தொடர்ந்து பயணிப்போம்...
 
அது யாரு அந்த அவன் 🤔🤔🤔. ஏதாவது டிவிஸ்டா?

பாலா சொந்த காசுல சூனியம் வச்சுக்கறதுல டாக்டர் பட்டம் வாங்கி இருப்பான் போல😂😂😂.

சூப்பர் ஸ்டோரி செமயா இருக்கு 👌👌👌
 

Barkkavi

✍️
Writer
அது யாரு அந்த அவன் 🤔🤔🤔. ஏதாவது டிவிஸ்டா?

பாலா சொந்த காசுல சூனியம் வச்சுக்கறதுல டாக்டர் பட்டம் வாங்கி இருப்பான் போல😂😂😂.

சூப்பர் ஸ்டோரி செமயா இருக்கு 👌👌👌
அவனை பத்தி இனி வர எபில தெரிஞ்சுக்கலாம்...😁😁😁 பாலா😂😂😂 ஆமா... நன்றி சகோ😍😍😍
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom