• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 4

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் நான்காம் அத்தியாயம் இதோ...😁😁😁 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😊😊😊


eiRRRGM34647.jpg



பயணம் 4



துயில் கொண்டிருந்தவனின் காதுகளில் அவசர ஊர்தியின் சத்தம் கேட்க, “ப்ச்… காலங்கார்த்தால தூங்கக் கூட விட மாட்டிங்குறாங்களே. டேய் ரம்மு அந்த ஜன்னல மூடு டா.” என்று கத்தினான், பாலா.



மீண்டும் மீண்டும் அதே ஒலி கேட்டுக் கொண்டிருக்க, அதை பொறுக்க முடியாதவன், எழுந்து பார்க்க, அப்போது தான் அவனிருக்கும் இடத்தை உணர்ந்தான்.



மணியைப் பார்க்க, அது ஐந்தே முக்கால் என்று காட்டியது. கொட்டாவி விட்டவாறே பால்கனி கதவைத் திறந்து பார்க்க, அந்த விடுதியின் வாயிலில், சைரனை அலற விட்டுக்கொண்டு நின்றிருந்தது அந்த அவசர ஊர்தி.



மருத்துவமனை சீருடை போட்ட இருவர், தூக்கு படுக்கையில் ஒருவரை சுமந்து கொண்டு அந்த ஊர்தியை நோக்கி செல்வது பாலாவிற்கு தெரிந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவனிற்கு, தேஜுவின் நினைவு வர, வேகமாக அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.



அங்கு அவன் அறைக்கு எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள் தேஜு. குழப்பத்துடன் அவளைக் கண்டவன், விழிகளை சுழற்ற, அங்கு வேறு சிலரும் நின்றிருந்தனர்.



இந்த அதிகாலை வேளையில், இவர்கள் இங்கு நிற்க காரணம் என்னவென்பதை யோசித்துக் கொண்டே தேஜுவை நெருங்கினான் பாலா.



அவளோ அவனைக் கண்டதும் முறைக்க, ‘போச்சு இவ இப்போ ஏன் முறைக்குறான்னு தெரியலையே!’ என்று புலம்பிக் கொண்டே அவளை நோக்கி சிரித்தான்.



“சும்மா சும்மா பல்ல காட்டுறத நிறுத்து…” என்று தேஜு அடிக்குரலில் சீற, ‘நம்மகிட்ட நல்லா இருக்குறதே அந்த சார்மிங் ஸ்மைல் தான். அதையும் செய்யக் கூடாதுன்னு சொன்னா எப்படி…’ என்று பாலா தீவிரமாக சிந்திக்க, அவனின் மனசாட்சியோ அவனைத் திட்டி, நடப்பதைக் கவனிக்குமாறு கூறியது.



மனசாட்சியின் திட்டில் சிந்தனை கலைந்தவன், “ஆமா, நீ எதுக்கு இங்க நிக்குற..?” என்று வினவினான்.



தேஜுவோ கோபமாக, “ஹான் வேண்டுதல்…” என்றாள். அவளை ஒரு மாதிரி பார்த்தவன், “இவங்களும் உன்கூட வேண்டிக்கிட்டாங்களோ…” என்று கேட்க, கோபத்தில் அவனை அங்கிருந்து சற்று தள்ளி இழுத்து வந்தவள், “தூங்குமூஞ்சி. கும்பகர்ணனுக்கு தம்பியா நீ..? ஒரு தடவ கதவைத் தட்டுனா எழுந்துக்க மாட்டீயா..? எத்தனை தடவ தான் நானும் கதவ தட்டுறது… இதுல என்னை எழுப்ப சொல்லி உன்கிட்ட சொன்னேன் பாரு…” என்று அவனிற்கு பேச அவகாசமே கொடுக்காமல் திட்டிக் கொண்டிருக்க, ஏற்கனவே தூக்கக் கலக்கத்தில் இருந்த பாலா முழித்துக் கொண்டிருந்தான்.



அப்போது தான், ஒருவரை அவசர ஊர்தியில் ஏற்றியது அவனின் நினைவிற்கு வந்தது. அவளின் மனநிலையை மாற்ற வேண்டி அந்த பேச்சை எடுக்க, கோபத்தில் இன்னும் அவனைத் திட்டினாள் பெண்ணவள்.



“அதுக்காக தான் டா உன் ரூம் கதவ இவ்ளோ நேரம் தட்டுறேன். நம்ம ரெண்டு பேரு ரூமுக்கு நடுல இருந்த அந்த 33வது ரூம்ல இருந்தவர யாரோ கொலை செய்ய வந்துருக்காங்க. இப்போ அவரை தான் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறாங்க.” என்று அவள் கூறவும், சற்று விறைப்புற்றவனாக, “என்ன ஆச்சு..? முழுசா சொல்லு…” என்று பாலா கேட்டான்.



அவன் உடல்மொழியைக் கண்டவள், “உனக்கு ஒன்னும் அவ்ளோ சீன் இல்ல…” என்றவள், நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.



அரை மணி நேரத்திற்கு முன்…



பழக்கமற்ற இடம் என்பதால் சரியான தூக்கமில்லாமல் புரண்டபடி படுத்திருந்த தேஜுவிற்கு மிக மெல்லிய ஒலி கேட்டது. இந்த அதிகாலையில் யாராக இருக்கும் என்று யோசித்தவள், பின் விடுதி பணியாளர்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் கண்மூடி தூங்கும் முயற்சியில் இறங்கினாள்.



ஆனால் அவள் மனதில் ஏதோ விபரீதமாக பட, அறையின் கதவைத் திறந்தாள். அப்போது பக்கத்து அறையில் ஏதோ கீழே விழுந்து உடையும் சத்தமும், தொடர்ந்து சிறு சிறு சத்தங்களும் கேட்க, முதலில் பதறியவள், உடனே வரவேற்பில் இருப்பவருக்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள்.



அவளிற்கு வெளியே செல்லவும் பயமாக இருந்ததால், அறையினுள்ளேயே இருந்தாள். அறைக் கதவு படபடவென தட்டப்பட, சற்று பயத்துடனே கதவைத் திறந்தாள். அங்கு, இரவு அவர்களிடம் தகவல்களை கேட்டு அறையின் சாவியினை கொடுத்தவன் நின்றிருந்தான்.



அவனுடனே பக்கத்து அறைக்கு சென்றாள். அவ்வறையின் கதவு பூட்டப்படாமல், பாதி திறந்திருப்பதைக் கண்டு இருவருமே சற்று அதிர்ச்சியுடனே உள்ளே செல்ல, அப்போது பால்கனி வழியாக யாரோ இறங்கி ஓடுவது தெரிந்தது.



உடனே அந்த பணியாளன் பால்கனிக்கு சென்று எட்டிப் பார்க்க, தேஜுவோ கட்டிலில் படுத்திருந்தவர் அருகே சென்றாள். இவ்வளவு நடக்கும் போதும் எந்த அசைவும் இல்லாமல் இருப்பவரை தூரத்திலிருந்து பார்க்கும்போதே ஏதோ தவறாக தெரிய, அருகில் சென்று பார்த்தாள்.



பாதி முகத்தை போர்வை மூடியிருக்க, அவரின் தலை அருகே தலையணை இருந்த கோலத்தைக் கண்டவள், சற்று முன் ஓடியவன் தலையணையை வைத்து முகத்தை அழுத்தியிருப்பானோ என்று எண்ண, படுத்திருந்தவரின் வயிற்றிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த செங்குருதி, அவன் கத்தியால் குத்தியிருப்பதை உணர்த்தியது.



அவள் திடுக்கிட்டு கத்த, அந்நேரம் உள்ளே வந்த பணியாளனும், அதைக் கண்டு வேகவேகமாக விடுதியில் பணிபுரிவோருக்கு தகவல் தெரிவித்தான். அடுத்தடுத்த காரியங்கள் விரைவாக நடைபெற, தேஜுவிற்கு சற்று நேரம் ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு ஓரத்தில் நின்றிருந்தவளிற்கு பாலாவின் நினைவு வர, அவனின் அறைக் கதவை தட்டினாள்.



ஆனால் அதற்கெல்லாம் அசறுபவனா பாலா! கதவு தட்டும் சத்தம் தாலாட்டு சத்தம் போல் கேட்டிருக்க வேண்டும் அவனிற்கு, நல்ல உறக்கத்தில் இருந்தான் அவன். பத்து நிமிடங்களாக கதவைத் தட்டி சலித்துப் போனவள், கோபமாக எதிரிலுள்ள சுவரில் சாய்ந்து நின்று விட்டாள். அதன்பின்பு அந்த அவசர ஊர்தி வர, அடிப்பட்டவரை அதில் ஏற்றினர். அந்த அவசர ஊர்தியின் சத்தம் தான் தெய்வாதீனமாக (!!!) பாலாவின் காதுகளில் கேட்டு எழுந்திருந்தான்.



நடந்ததை சொல்லி முடித்தவள், மீண்டும் தன் வேலையான முறைத்தலைத் தொடர, ‘அச்சோ ரொம்ப உக்கிரமா இருக்காளே…’ என்று மனதிற்குள் நினைத்தவன், வெளியில் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டான்.



அவனின் ‘பாவ’ முகத்தை பார்த்தவள் என்ன நினைத்தாளோ, “நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்கயிருந்து கிளம்பிடுவேன். நீயும் வரதுனா வா…” என்றாள்.



கையிலிருந்த கடிகாரத்தில் மணியைக் கண்டு, “ஆறு மணி தான ஆகுது… ஆறரைக்கு தான பஸ்னு அந்த கண்டக்டர் சொன்னாரு…” என்றான் பாலா.



“இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க போலீஸ் வந்துடுவாங்க. அப்பறம் விசாரிக்க ஆரம்பிச்சா, இன்னைக்கு முழுசும் அதுலயே போயிடும். எனக்கு இன்னைக்கு பெங்களூரு போயே ஆகணும். சோ நான் கிளம்புறேன். நீ வெட்டியா இருந்தேனா, எல்லா விசாரணையும் முடிஞ்சதுக்கு அப்பறம் மெதுவா வா.” என்றாள்.



அப்போது தான் பாலாவிற்கு, அவன் கையில் வைத்திருந்த பொருளும், அதை இன்றே உரியவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நினைவும் வர, அவனும் அவளுடனேயே கிளம்ப ஆயத்தமானான்.



‘கிளம்பிவிட்டு வருகிறேன்’ என்று கூறி அறைக்குள் சென்றவன், இன்னும் வராததால் அவனை திட்டிக் கொண்டிருந்தாள் தேஜு. “பொண்ணு நானே கிளம்பிட்டேன். இவன் இன்னும் என்னத்த பண்றான்னு தெரியலையே..” என்று புலம்பியவளின் குரல் பாலாவிற்கு கேட்டதோ, அவனின் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.



வந்தவன் வழக்கம் போல இளிக்க, இவள் திட்ட என்று அதிலேயே கால் மணி நேரம் கடந்திருக்க, வேகமாக அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு வரவேற்பிற்கு சென்றாள். அவள் பாலாவின் கையை பிடித்துக் கொண்டு செல்லும்போது பாலாவிற்கோ, “நம்தன.. நம்தன…” என்று பிஜிஎம் ஓடிக் கொண்டிருந்தது.



வரவேற்பிற்கு சென்றவள், அறைகளை காலி செய்வதாகக் கூறிவிட்டு, சாவியைக் கொடுக்கும் நேரத்தில், பூட்ஸ் அணிந்த காலடி சத்தங்கள் கேட்க, இருவரும் வாயிலை நோக்கித் திரும்பினர்.



அங்கு நின்றிருந்த காவலரின் பார்வை, அந்த கூடத்தை சுற்றிலும் வலம் வந்து இவர்களிடம் நின்றது. இவர்களின் பயணப்பொதியைக் கண்டவர், “விசாரணை முடியுற வரைக்கும் யாரும் இந்த இடத்தை விட்டு போகக் கூடாது…” என்றார் கட்டளையாக.



அவரின் கூற்றைக் கேட்ட தேஜு, அப்போது தான் அவனின் ‘நம்தன’விலிருந்து வெளி வந்திருந்த பாலாவை முறைக்க, அவனும் முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டான். இனி இதையே அவன் பழகிக் கொள்ள வேண்டுமோ!


தொடர்ந்து பயணிப்போம்...
 

Rajam

Well-known member
Member
இனி எஙக கிளம்ப.
போலீஸ் விசாரணை முடியனும்.
 
இவன் என்னத்தை தூக்கிட்டு போறான்🤔🤔🤔. இவளும் யாருக்கோ பயந்து ஓடுறாள்🤔🤔🤔. கதை நல்லா காமெடியா சஸ்பென்ஸா இன்டரெஸ்டிங்கா போகுது. சூப்பர் 👌👌👌. I like it.
 

Barkkavi

✍️
Writer
இவன் என்னத்தை தூக்கிட்டு போறான்🤔🤔🤔. இவளும் யாருக்கோ பயந்து ஓடுறாள்🤔🤔🤔. கதை நல்லா காமெடியா சஸ்பென்ஸா இன்டரெஸ்டிங்கா போகுது. சூப்பர் 👌👌👌. I like it.
Tq so much😍😍😍
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom