• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 2

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இதோ "வழி மாறிய பயணம்" கதையின் இரண்டாம் அத்தியாயம் போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁

ei532SS71133.jpg


பயணம் 2



பேருந்து வேகமெடுக்க, அவளோ காதில் செவிபேசியைப் (இயர் போன்) பொருத்திக் கொண்டு கண்களை மூடி சாய்ந்து கொண்டாள். அவளின் அசைவுகளை ஓரக் கண்ணில் பார்த்த பாலா, ‘கடவுளே, சைட்டடிக்க ஏத்த மாதிரி பொண்ணு வரணும்னு வேண்டுனா, என்னையே அடிக்கிற மாதிரி ஒரு பொண்ணோட கோர்த்து விட்டுருக்கியே…’ என்று புலம்பியவன் கண்களை மூடி தூங்கி விட்டான்.



ஒரு மணி நேரம் கழித்து பேருந்து நிற்க, அதன் நடத்துநர், “வண்டி பத்து நிமிஷம் தான் இங்க நிக்கும். அதுக்குள்ள வந்துடுங்க.” என்று கத்தவும், பாலா கண்களைத் திறந்தான்.



கைகளைத் தூக்கி கொட்டாவி விட்டவாறே அவன் திரும்ப, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளின் முறைப்பைக் கண்டு மனதிற்குள் அலுத்தவன், ‘நான் தான் ஒன்னுமே பண்ணலையே. இப்போ எதுக்கு முறைக்குறான்னு தெரியலையே…’ என்று நினைத்தான்.



அவனின் எண்ணம் அவளையும் எட்டியதோ, சைகையாலேயே தள்ளுமாறு கூறினாள்.



“வாயத் தொறந்து பேசுனா முத்து கொட்டிருமோ…” என்று முணுமுணுத்தவாறே அவனின் இருக்கையிலிருந்து எழ, அவளோ எதுவும் கூறாமல் வெளியே சென்று விட்டாள்.



சிறிது நேரத்திலேயே பாலாவும் வெளியே சென்று, விக்ரமிற்கு அழைத்தான்.



“மச்சி என்ன டா பண்ற..?” என்று பாலா கேட்க, “இன்னைக்கு தான் உன் தொந்தரவு இல்லாம நிம்மதியா சாப்பிடலாம்னு நெனச்சேன். அதையும் போன் பண்ணி கெடுத்துட்டு என்ன பண்ற, நொன்ன பண்றன்னு கேக்குற…” என்று விக்ரம் புலம்பினான்.



“ப்ச் உன் புலம்பல முடிச்சுட்டியா…” என்று சலித்துக் கொண்ட பாலா, “மச்சி நான் அவள பார்த்தேன் டா…” என்றான்.



“எவள டா பார்த்து தொலைஞ்ச..? இவன் பார்த்தது மட்டுமில்லாம இதையே சொல்லி இன்னைக்கு நைட் தூங்க விட மாட்டானே…” என்று முன்னதை சத்தமாகவும் பின்னதை முணுமுணுப்பாகவும் கூறினான் விக்ரம்.



அவனின் முணுமுணுப்பு பாலாவிற்கு தெளிவாகக் கேட்டாலும், அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளாமல், “அதான் டா அந்த மால்ல நம்மள அடிச்சால, அவள தான் பார்த்தேன்.” என்றான்.



“அடேய் ‘நம்மள’ன்னு என்னையும் எதுக்கு டா சேர்க்குற..? உன்னை மட்டும் தான அடிச்சா…” என்று பதறினான் விக்ரம்.



“ரொம்ப முக்கியம்… சொல்றதை கேளு டா. அவ பஸ்ல எனக்கு பக்கத்து சீட் டா…” என்று ஆரம்பித்து நடந்தவற்றை சொல்லி முடித்தான்.



“ஆமா ‘அவ’ன்னே சொல்லிட்டு இருக்க. இன்னுமா பேர கண்டுபிடிக்கல…” என்று நண்பனை அறிந்தவனாக விக்ரம் கேட்க, “எங்க பேர பார்க்கலாம்னு போனப்போ தான் இந்த பாழப்போன பஸ்ஸோட கண்டக்டர் பேர மறைச்சுட்டான்…” என்றான் பாலா.



பின் பாலாவே, “ஹே மச்சி ரெண்டாவது தடவ நான் அவள மீட் பண்றேனே… அப்போ எங்களுக்குள்ள ‘சம்திங் சம்திங்’ இருக்குமோ…” என்று பாலா உற்சாகத்துடன் கேட்க, அவனின் பேச்சை கேட்ட விக்ரமோ தலையிலடித்துக் கொண்டவன், “அவகிட்ட அடி வாங்காம ஊர் போய் சேர மாட்ட போல…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘பளார்’ என்று சத்தம் கேட்டது.



“என்ன டா சொன்னது போல அடிச்சுட்டாளா..?” என்று விக்ரம் பதட்டத்துடன் வினவ, “ஆமா மச்சி, ஆனா என்னை இல்ல… இன்னொருத்தன போட்டு அடிச்சுட்டு இருக்கா…” என்றான் பாலா.



கழிவறைக்கு சென்று வந்து கொண்டிருந்தவளை ஒருவன் வேண்டுமென்றே இடித்திருக்க, தெரியாமல் இடித்தாலே கன்னம் சிவக்குமளவிற்கு அடிப்பவள், இப்போது சும்மாவா விடுவாள்… அவன் சுதாரிக்கும் முன்பே இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவள், “இன்னொரு தடவ யாரயாச்சும் இடிக்கணும்னு நெனச்சா இந்த அறை தான் உனக்கு ஞாபகம் வரணும்…” என்று கூறிவிட்டு பேருந்தை நோக்கி நடந்தாள்.



அவளின் செய்கையை அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்க, அவளைப் பற்றி அறிந்தவனாதலால் பாலா அவ்வளவு அதிர்ச்சியடைய வில்லை என்றாலும் மனதிற்குள், ‘நல்ல வேளை ஜஸ்ட் மிஸ்ஸு. நான் விக்ரம் கிட்ட பேசுனது மட்டும் கேட்டுருந்தா, இன்னைக்கு அவ டார்கெட் நானா இருந்துருப்பேன்…’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.



அதற்குள் அலைபேசி தொடர்பிலிருந்த விக்ரம், “அப்பறம் மச்சி எப்போ ப்ரொபோஸ் பண்ண போற..?” என்று கேலியாக கேட்க, “ஆள விடு டா சாமி நமக்கு உசுரு தான் முக்கியம். இவ இல்லனா வேற யாராவது கிடைப்பாங்க மச்சி. ஏன்னா ஐயாவோட பெர்ஸனாலிட்டி அப்படி…” என்று மேலும் சில நிமிடங்கள் பேச, பேருந்து எடுப்பதற்கான அழைப்பு வந்ததும் அழைப்பைத் துண்டிக்க முயல, அப்போது விக்ரம், “மச்சி பார்த்து பத்திரமா போயிட்டு வா…” என்று கூற, பாலாவும் சரியென்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.



பேருந்தில் வந்து அமர்ந்ததும் அவளைப் பார்க்க, அவள் மீண்டும் காதில் ஒலிக்கும் பாட்டுடன் ஐக்கியமாகி விட்டாள். பாலாவும் ஒரு நொடி அவளைக் கண்டவன், பின் தலையை இடவலமாக ஆட்டி, ‘இனி அவளைப் பார்க்கவே கூடாது டா, பாலா..’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்.



அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் பேருந்து நிற்க, புழுக்கத்தின் காரணமாக கண் விழித்தான் பாலா.



“இப்போ எதுக்கு டா நிறுத்திருக்கீங்க..?” என்று தூக்கம் பறிபோன கடுப்பில் சற்று சத்தமாகவே கேட்டிருந்தான் பாலா.



“டையர் பஞ்சராம் ப்ரோ…” என்றான் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன்.



“ப்ச்…” என்று சலித்துக் கொண்டே வெளியில் சென்று பார்த்தான். அங்கு ஏற்கனவே ஓட்டுநரையும் நடத்துநரையும் சுற்றி வளைத்திருந்தனர் சிலர். இவனும் சென்று அவர்களின் அருகில் நின்று கொண்டான்.



“ஸ்டெப்னி கூடவா எடுத்துட்டு வராம இருப்பீங்க..? என்ன ட்ராவல்ஸ் வச்சுருக்கீங்க..? எதுவும் சரியில்ல. இப்போ நாங்க எப்படி ஊரு போய் சேருறது..?” என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, பாலாவோ அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.



அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவர்கள், “சாரி சார். இது போல எப்பவும் நடந்தது இல்ல. பெங்களூரு போற எங்க ட்ராவல்ஸ் பஸ்ஸே இன்னும் நாலு இப்போ வரும். உங்கள எல்லாம் அதுல ஏத்தி விடுறோம்.” என்று சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.



அதன்படி சிலரை முதல் மூன்று பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மீதி அங்கிருந்ததோ வயதான ஒரு தம்பதியர், சிறுவனும் அவனின் தாயும், பாலா மற்றும் ‘அவள்’.



அடுத்த பேருந்திற்காக காத்திருக்க, அந்த பேருந்தோ ஆடி அசைந்து வந்தது. அதைக் கண்ட பாலா, ‘என்ன இது மாசமா இருக்க பொண்ணு மாதிரி இவ்ளோ மெதுவா வருது. இதுல போனா எப்போ ஊர் போய் சேருறது!’ என்று மனதிற்குள் புலம்பினான்.



பேருந்து வந்து நிற்கவும், அங்கு நடந்த பிரச்சனைகளை புதிதாக வந்த பேருந்தின் நடத்துநரிடம் விளக்கியவர்கள், பயணிகளை ஒவ்வொருவராக பேரை சொல்லிவிட்டு ஏறுமாறு கூறினர்.



அவள் தான் முதலில் நின்றாள். ஆனாலும், குளிரில் அந்த வயதானவர்கள் கஷ்டப்பட்டு நிற்பதைக் கண்டவள், அவர்களை முதலில் ஏறச் சொன்னாள். அப்போது அவளின் பின் நின்ருந்த பெண்ணின் கையிலிருந்த சிறுவன் அழுவதைக் கண்டவள், சன்ன சிரிப்புடன் அவர்களுக்கும் வழி விட்டாள்.



அவளின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பாலா, “அன்னை தெரசான்னு நெனப்பு!” என்று முணுமுணுக்க அவனை திரும்பி முறைத்தவள், அடுத்து அப்பேருந்தில் ஏறச் சென்றாள்.



“பேரு என்ன மா..?” என்று நடத்துநர் வினவ, “தேஜஸ்வினி” என்று மென்குரலில் கூறினாள்.



யாருக்கு கேட்கக் கூடாது என்று மெல்லிய குரலில் கூறினாளோ, அவனோ அதற்காகவே செவியைத் தீட்டி வைத்திருந்ததால், அவளின் பெயரை அறிந்து கொண்டான்.



‘தேஜஸ்வினி… ஹ்ம்ம் தேஜு… நல்லா தான் இருக்கு…’ என்று அவளின் பெயரை மனதிற்குள் உச்சரித்துப் பார்த்தான்.



தேஜஸ்வினி உள்ளே ஏறப் போக, அப்போது அங்கு வந்த புதிய பேருந்தின் நடத்துநர், “இதுக்கு மேல இடம் இல்ல…” என்றான்.



உள்ளே இரு இருக்கைகள் காலியாக இருந்ததைக் கண்டவள், அதைப் பற்றி கேட்க, இனி வரும் இடங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான இடம் என்று கூறிவிட்டார்.



வேறு வழியில்லாமல் இறங்கியவள், என்ன செய்வது என்று யோசித்தபடி நிற்க, “சாரி மா. இந்த பக்கம் இனிமே காலைல தான் பஸ் வரும்.” என்று தலையை சொறிந்தபடி கூறினார் அந்த நடத்துநர்.



அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாலா, “அப்போ எங்கள என்ன பண்ண சொல்றீங்க..? இப்படியே நடுரோட்டுல நிக்க சொல்றீங்களா..?” என்று கத்த ஆரம்பித்தான்.



தேஜுவோ அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அமைதியாக நின்றாள்.



“ப்ச் பொண்ணு அதுவே அமைதியா இருக்கு, உனக்கென்ன பா…” என்று சலித்துக் கொண்டார் அந்த நடத்துநர்.



“ஹலோ என்ன இப்படி பொறுப்பே இல்லாம பேசுறீங்க..? இது தான் நீங்க பேசஞ்சரை நடத்துற முறையா..? சரி அதெல்லாம் விடுங்க, இப்போ எப்படி நாங்க இந்த கொட்டுற பனில நிக்க முடியும்..? அப்படியே காலைல பஸ் வந்தா அதுக்கான செலவ யாரு குடுப்பா..?” என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டான். கிடைத்த இடைவேளையில் தேஜுவையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.



“எப்பா சாமி, என் கை காசப் போட்டு உன்ன பத்திரமா பஸ் ஏத்தி விடுறேன் ராசா…” என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாக மன்றாடினார் அந்த நடத்துநர்.



‘ஹா அதான பாலானா சும்மாவா…’ என்று தன்னைத் தானே மனதிற்குள் பாராட்டிக் கொண்டவன், தேஜுவைக் காண, அவளோ மும்முரமாக அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.



‘ஹும்ம் இங்க ஒருத்தன் கஷ்டப்பட்டு இவ்ளோ பெர்ஃபார்மன்ஸ் பண்ணிருக்கேன். இவ என்னடானா கண்டுக்க கூட இல்ல…’ என்று மீண்டும் அவனின் புலம்பலைத் துவங்கினான்.



அப்போது நடத்துநர், “இன்னும் கொஞ்ச தூரத்துல ஒரு ஹோட்டல் இருக்கு. நாளைக்கு காலைல வரைக்கும் அங்க தங்கிக்கோங்க…” என்று தயங்கிக் கொண்டே இருவரிடமும் கூறியவர், தேஜுவின் பார்வையை உணர்ந்து, “அது பாதுகாப்பான ஹோட்டல் தான் மா. இந்த பக்கம் போறவங்க, ரெஸ்ட் எடுக்குறதுக்காக அங்க தான் தங்குவாங்க.” என்றார்.



தேஜுவும், கூகுல் மேப்பில் தீவிரமாக அலசியும், அருகில் வேறு இடம் இல்லாததால், வேறு வழியில்லாமல் சம்மதித்திருந்தாள்.



போகும் வழியில், “ஆமா இப்போ போற ஹோட்டலுக்கான செலவையும் நீங்களே குடுத்துடுவீங்களா…” என்று பாலா நடத்துநரிடம் வினவ, அவனைக் கண்டு பல்லைக் கடித்தவர், அருகிலிருந்த ஓட்டுநரிடம், “நமக்குன்னு வந்து சேருதுங்க…” என்று புலம்பினார்.



பெங்களூருவை நோக்கிய இவர்களின் பயணத்தில், வழியை மாற்றுவதாக இந்நிகழ்வு ஏற்பட, அடுத்த நாள் சரியான வழியில் சென்று அவர்களின் இடத்தை அடைவார்களா, இல்லை வழி தவறி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்களா…


தொடர்ந்து பயணிப்போம்...
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அடியில் தான்
அவள் அறிமுகம்
அடிக்கு பயந்து
அமைதியாக போனால்
அடுத்த அடி இல்லை இடியாய்
அவர்கள் பஸ் பஞ்சர்.....
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom