• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 12

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் ப்ரீ-ஃபைனல் எபி...😁😁😁 இது குட்டி கதை தான் பிரெண்ட்ஸ்... இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து இதே ஆதரவை கொடுங்க...😊😊😊

ei4I0WR34866.jpg



பயணம் 12



பாலா தேஜுவைக் கடத்துவது தான் திட்டம் என்று கூறியதைக் கேட்ட மற்ற இருவரும் குழம்பித் தான் போயினர்.



“எதே… கடத்தனுமா… என்ன டா சொல்ற..?” என்றான் விக்ரம்.



“ஆமா டா. தேஜுவைக் கடத்திட்டாங்கன்னு வெளியுலகத்துக்கு சொல்லப் போறோம்.” என்று பாலா கூற, “அதுனால என்ன யூஸ்..? நான் யாரு பொண்ணுன்னு கூட இந்த உலகத்துக்கு தெரியாது.” என்று விரக்தியுடன் கூறினாள் தேஜு.



“அதை அந்த ஆளு வாயிலயிருந்தே வரவைக்குறதுக்கு இது ஒரு நல்ல சான்ஸ்…” என்றவனை மற்ற இருவரும் பார்த்திருந்தனர்.



“இப்போ உன்னைக் கடத்த பிளான் போட்டது அந்த ஆளு… ஆனா அந்த பிளான் ஒர்க்-அவுட் ஆகல… நீ எங்கே இருக்கன்னும் இதுவரைக்கும் அவருக்கு தெரியாது. சோ இப்போ நீ கடத்தப்பட்டதா சொன்னா, அவருக்கு யாரு மேல சந்தேகம் வரும்…?” என்று பாலா கேட்க, “அந்த வருண் மேல…” என்றான் விக்ரம்.



“எஸ் கரெக்ட். ஆனா அந்த வருணோ உன்னைக் கடத்த பிளான் போடவே இல்ல. இன்ஃபேக்ட் உன்கிட்ட அந்த ஆளுக்கு எதிரா இவ்ளோ பெரிய ஆதாரம் இருக்குறதே அவனுக்கு தெரிய சான்ஸ் கம்மி… சோ இப்போ நம்ம என்ன பண்ண போறோம்னா, எதிரிங்க ரெண்டு பேரையும் சண்டை போட வச்சு, அதுல கிடைக்கிற நேரத்துல வேற ஏதாவது பிளான் போட போறோம்…” என்று அவனின் திட்டத்தைக் கூறினான்.



“இது எவ்ளோ தூரம் சரியா வரும்னு நினைக்கிற..?” என்று தேஜு வினவினாள்.



“ம்ம்ம் உங்க அப்பா ரியாக்ஷன் எப்படி இருக்குங்கிறத பொறுத்து தான் இந்த திட்டத்தோட வெற்றியும் இருக்கு. உங்க அப்பா கிட்டயிருந்து ரெண்டு ரியாக்ஷன் எதிர்பார்க்கலாம். ஒண்ணு அந்த வருண்கிட்ட நேரடியா போய் சண்டைப் போட்டு உன்னைப் பத்தி விசாரிக்கிறது. இல்லனா இதையே பெரிய விஷயமாக்கி பொதுமக்களோட அனுதாபத்தை அவருக்கு ஆதரவா மாத்த முயற்சி பண்ணுறது… நான் சொன்ன முதல் ஆப்ஷனை உங்க அப்பா தேர்ந்தெடுத்தா, நம்ம திட்டம் தோல்விய தழுவ நிறைய வாய்ப்பிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு, கண்டிப்பா உங்க அப்பா ரெண்டாவது ஆப்ஷனை தான் தேர்ந்தெடுப்பாரு… இதை வச்சு எப்படி அரசியல் பண்ணலாம்னு தான் யோசிப்பாரு…” என்று பாலா விளக்கினான்.



அவன் கூறியவற்றைக் கேட்ட விக்ரமோ, “டேய் மச்சி… என்னடா இது அரசியல் விமர்சகன் மாதிரி பேசுற…” என்று ஆச்சரியமாகக் கேட்க, “ஒரு நல்ல அரசியலுக்கு எடுத்துக்காட்டு, ஆட்சி மேல பல விமர்சனங்கள் சுமத்தப்பட்டாலும், அதையெல்லாம் தாங்கி, தாண்டி வரது தான். ஆனா இங்க தான் விமர்சனம்னு சொன்னாலே வாயடைச்சுட்டு தான் மறுவேலை பார்க்குறாங்க.” என்றவன், “ப்ச் வேற டாபிக்குள்ள நுழைஞ்சாச்சு… தேஜு, உனக்கு போலீஸ் யாராவது தெரியுமா..? நேர்மையான அதிகாரிங்களோட உதவி நமக்கு தேவை.” என்றான்.



“ம்ம்ம் தெரியும். என் பிரென்ட் பூஜாவோட அப்பா தான் சென்னை கமிஷ்னர்.” என்று தேஜு கூறியதும், மற்ற இருவரும் சற்று பயந்ததென்னவோ உண்மை தான்.



“அடேய் கமிஷ்னருக்கு வேண்டப்பட்ட பொண்ணயா டா இவ்ளோ நேரம் வம்பிழுத்த… இந்த பிரச்சனை முடிஞ்சதும் உன் பிரச்னைன்னு தான் நினைக்கிறேன் மச்சி. எதுக்கும் ரெடியா இருந்துக்கோ.” என்று விக்ரம் கூற, “என்ன டா உயிர் நண்பனை பாதில விடுற. எதுவா இருந்தாலும் சேர்ந்து சமாளிப்போம் டா ரம்மு…” என்று துணைக்கு ஆள் சேர்த்தான் பாலா. அவனைத் திரும்பிப் பார்த்த விக்ரமோ, “யூ கோ மேன்… வொய் மீ..?” என்று முணுமுணுத்தான்.



அவர்கள் இருவரும் முணுமுணுப்பதைக் கண்டவளிற்கு சிரிப்பு வர, அதை அடக்கியவள், “நான் அங்கிளுக்கு கால் பண்ணி நம்ம பிளான்ன சொல்றேன்…” என்று அறைக்குள் சென்று விட்டாள்.



இப்படியே இவர்களின் நேரம் செல்ல, தேஜு கூறிய பூஜாவின் அப்பா வெற்றிவேல் அவர்களை வீடியோ காலில் சந்தித்தார்.



அவர்களின் அறிமுக படலம் முடிவடைந்ததும், அவர்களின் திட்டத்தை விளக்கினான் பாலா.



“ம்ம்ம் உங்க பிளான் சரியா தான் இருக்கு பாலா… அந்த ஆளை கரெக்டா எஸ்டிமேட் பண்ணிருக்கீங்க… இதுல நான் எப்படி உங்களுக்கு உதவனும்…” என்றார் வெற்றிவேல்.



“சார், தேஜுவை கடத்திட்டோம்னு நியூஸ்ல சொல்ல ஒரு ஆதாரம் வேணும். சோ அதை ஃபேக்கா உருவாக்க போறோம். கடைசியா அவ அந்த ஹோட்டல இருந்தது தான் அந்த ஆளுக்கு தெரியும். சோ அங்கயிருந்து பெங்களூரு போற வழில, ஏதாவது ஒரு ஏரியால இருக்க சிசிடிவிய ஹேக் பண்ணி அவளை யாரோ கடத்துன மாதிரி செட் பண்ண போறோம்… இந்த ஹாக்கிங் வேலையெல்லாம் என் பிரென்ட் பார்த்துப்பான். உங்க சைட்லயிருந்து… அதாவது அவங்களுக்கு கையாளா செயல்படுற போலீஸுக்கு இந்த விஷயம் லீக்காகாம பார்த்துக்கணும் சார்.” என்றான்.



“ஓகே பாலா. அதை நான் பார்த்துக்குறேன்… ஆல் தி பெஸ்ட்… வேற என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளுங்க…” என்று பாலாவை பார்த்து கூறியவர், தேஜுவிடம் திரும்பி, “எதுக்கும் பயப்படாத மா. நாங்க எல்லாரும் இருக்கோம்…” என்று ஆறுதல் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.



அதன்பிறகான வேலைகள் வேகமெடுக்க, அடுத்த நாள் காலை தேஜு கடத்தப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. மேலும் தேஜு ரவிசங்கரின் மகள் என்றும், இதை அவர் ரகசியமாக வைத்திருந்தார் என்றும் சில தொலைக்காட்சி சேனல்கள் தங்களின் டிஆர்பிக்காக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.



இவற்றையெல்லாம் விக்ரமின் வீட்டு சோஃபாவில் வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.



“அடேய் இந்த மேட்டர் எப்படி டா லீக்காச்சு…” என்று விக்ரம் கேட்க, “நான் தான் நம்ம சந்தீப் கிட்ட சொல்லி இதையும் சேர்த்து போட சொன்னேன்… செம ஹாட் நியூஸ்ஸா இருக்குல…” என்றான் பாலா. அப்போது தான் தேஜுவின் நியாபகம் வர, விக்ரமிடம் அவளைப் பற்றி விசாரித்தான்.



“பாவம் டா அந்த பொண்ணு. நேத்துலயிருந்து முகமே சரியில்ல. என்ன தான் வெளிய காட்டிக்களைனாலும் உள்ளுக்குள்ள வருத்தம் இருக்கத் தான செய்யும்…” என்று கூற, அதைக் காதில் வாங்கியவன், உடனே அவளைக் காண அறைக்குள் சென்று விட்டான்.



ஜன்னலின் வெளியே நீலவானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் தேஜு. அவளின் அருகே சென்றவன், “ஓய், ஆர் யூ ஓகே..?” என்றான்.



ஒரு பெருமூச்சை வெளியிட்டவள், “தெரியல பாலா… நான் ஓகேவான்னு எனக்கே தெரியல. ஒரு விதத்துல எங்க அம்மாக்கு நியாயம் கிடைக்கப் போகுதுன்னு சந்தோஷம் இருந்தாலும், இந்த விஷயத்தை மக்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு. அந்த ஆளு அவரோட அரசியல் வாழ்க்கையை காப்பத்திக்க, எங்க அம்மா மேல பழியை போட்டாலும் ஆச்சரியப்படுறதுகில்ல. இனிமே என்னோட வாழ்க்கை எப்படி இருக்கப் போகுது… இந்த விஷயம் வெளிய தெரிஞ்சதுக்கு பின்னாடி என்னென்ன தொல்லைகள் வரப் போகுதுன்னு நினைச்சாலே பயமா இருக்கு…” என்றாள்.



“நீ எப்போயிருந்து இவ்ளோ பயப்பட ஆரம்பிச்ச தேஜு..? உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ, அதான் அந்த கடைல பளார்னு ஒண்ணு விட்டயே, அப்போ செம போல்ட்னு நினைச்சேன்… அந்த போல்ட்னெஸ் எல்லாம் என்கிட்ட மட்டும் தானா..?” என்று கன்னத்தில் கைவைத்தவாறே பாலா கேட்கவும், அவளின் அனுமதியின்றே விரிந்தன அவளின் இதழ்கள்.



“மத்தவங்களுக்காக நாம வாழ ஆரம்பிச்சா, நம்மளோட சின்ன சின்ன சந்தோஷத்தை கூட இழக்க வேண்டியதிருக்கும் தேஜு. இது உன்னோட வாழ்க்கை… நீ தான் இதை முழுசா வாழப் போற. உனக்கு அட்வைஸ் பண்ற யாரும் உனக்கு பதிலா வாழப் போறதில்ல… சோ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸ்ட்டா இரு…” என்றான்.



அவன் கூறியதை உள்வாங்கியவளின் முகம் கலக்கத்தை விடுத்து தெளிவு பெற, அவளை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தான்.



*****



“என்னய்யா நடக்குது. நமக்கு முன்னாடி தேஜுவை யாரு கடத்துனா..?” என்று கோபமாக தன்முன் நின்றிருந்தவர்களை கேட்டார் ரவிசங்கர்.



அவரின் உதவியாளரோ, “அது தெரியலங்கைய்யா… அந்த வருண் தான் கடத்திருப்பான்னு…” என்று இழுத்தார்.



“அதுவும் கன்ஃபார்மா தெரியல அப்படி தான… எதைத் தான் உருப்படியா பண்ணுவீங்களோ.. ச்சை… தேஜு என் பொண்ணுங்கிறது எப்படியா வெளிய லீக்காச்சு…” என்று சரமாரியாக கேள்விகளைத் தொடுக்க, அந்த உதவியாளரோ தலையை சொரிந்தார்.



எதையோ முணுமுணுத்த ரவிசங்கர், “உங்களையெல்லாம் இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்பறம் பார்த்துக்குறேன்…” என்றவாறே வெளியே நின்றிருந்த பத்திரிக்கையாளர்களை சந்திக்க சென்றார்.



கேமராக்களின் முன்னே சென்றதும், கைத்தேர்ந்த நடிகனைப் போல தான் முகபாவத்தை சட்டென்று மாற்றிக் கொண்டவர், அவர்களிடம் தான் முன்பே யோசித்து வைத்திருந்த கதையை புனைய ஆரம்பித்தார்.



அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பல சோக பாவங்களை காட்டியவரின் பேச்சின் சாராம்சம் இதுதான்… சிறு வயதிலேயே அரசியலின் மீது ஆர்வம் கொண்டு நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று சபதம் பூண்டதால் (!!!) அவரின் மனைவி மற்றும் குழந்தையை கிராமத்தில் பெற்றோரிடம் விட்டு வந்ததாகவும், தன் நேர்மையான நடவடிக்கைகளால் (!!!) அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்பதற்காவே அவர்களின் அடையாளத்தை வெளியுலகிலிருந்து மறைத்ததாகவும் அழகாகக் கதை கூறினார்.



“ப்பா சான்சேயில்ல… என்ன உருட்டு…” என்று சிலாகித்த பாலாவை மற்ற இருவரும் முறைத்தனர்.



ரவிசங்கரின் திட்டத்தின்படி அனுதாபம் நன்றாகவே வேலை செய்தது. “உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா…?” என்று ஒரு பத்திரிக்கையாளர் இந்த செய்தியை சென்ஷேஷனலாக மாற்ற தன்னாலான சிறு முயற்சியை மேற்கொள்ள, அவரின் முயற்சிக்கு ரவிசங்கரும் ஒத்துழைப்பு கொடுக்க, இதோ மொத்த மீடியாவும் வருணின் பெயரை இழுக்கத் துவங்கினர்.



அங்கு வருணோ கடுப்பின் உச்சத்தில் இருந்தான். ரவிசங்கருக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதே இப்போது தான் அவனிற்கு தெரிய வந்துள்ளது. இதில் அவன் தான் அவரின் மகளைக் கடத்தியுள்ளதாக செய்திகள் பரவியுள்ளதை அறிந்ததிலிருந்து கோபத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான். கட்சியிலுள்ள பலரும் அவனிற்கு அழைத்து குற்றவாளி போல் விசாரிப்பதும் அவனின் கடுப்பின் அளவை உயர்த்தியது.



அப்போது மீண்டும் அவனின் அலைபேசி ஒலிக்க, யாரென்று பாராமல் அழைப்பை ஏற்றுவிட்டான்.



“என்ன தம்பி, நியூஸ் பார்த்து ஷாக்காகிட்டீங்களா..? இந்த ரவிசங்கர் கிட்ட வச்சுக்கிட்டா இப்படி தான் அடிக்கடி ஷாக்காக வேண்டியதிருக்கும். ஒழுங்கா என் பொண்ண பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வச்சுடு… இல்ல கட்சில நீ வாங்கி வச்சுருக்க நல்ல பேரை இந்த சம்பவத்தை வச்சே ஒன்னுமில்லாம ஆக்கிடுவேன்…” என்று மிரட்ட, ‘சரியான லூசா இருப்பான் போல… யாரு கடத்துனான்னு தெரியாம பேசிட்டு இருக்கான்… ஒரு வேளை சிம்பதிக்காக அவனே கடத்தி வச்சாலும் வச்சுருப்பான்…’ என்று யோசித்த வருண், “உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க…” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.



‘எவ்ளோ திமிரு இருக்கணும் இவனுக்கு…’ என்று கோபத்தில் முணுமுணுத்தவரை நோக்கி வந்த அவரின் உதவியாளர், “ஐயா, நியூஸ் பாருங்க…” என்று வேகமாக தொலைக்காட்சியை உயிர்பித்தார்.



அதில் ப்ரேக்கிங் நியூஸாக ரவிசங்கரின் ஊழல்களை ஆதாரங்களுடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இவையெல்லாம் பாலாவின் கைங்கர்யம் தான்.



நேர்மையான செய்திகளை மட்டுமே வெளியிடும் சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் சில நிறுவனங்களுக்கும் ஆதாரங்களின் நகலை அனுப்பியிருந்தான். சாதாரண செய்தியையே ‘ஹாட் நியூஸ்’ஸாக மாற்றிவிடுபவர்களுக்கு அல்வா போல் செய்தி கிடைத்தால் சும்மாவா விடுவார்கள். இதோ அதற்கு பக்காவாக ‘பேக்கிரவுண்ட் மியூசிக்’ போட்டு செய்திகளை சுடச்சுட வழங்கி வருகின்றனர்.



செய்தியைப் பார்த்த ரவிசங்கருக்கோ பெரும் அதிர்ச்சியாக இருக்க, அவரின் மூளை கூட செயல்பட மறுத்தது. இருந்தும் கட்சியின் மேல் நம்பிக்கை வைத்தவருக்கு அடுத்த அதிர்ச்சியாக அந்த தகவல் வந்தது.



இவரின் ஊழல் வெளியான அடுத்த ஐந்தாவது நிமிடம், கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற அறிக்கை கட்சி சார்பாக வெளியிடப் பட்டிருந்தது.



அடுத்தடுத்த செய்திகளால் ஸ்தம்பித்தவரை உலுக்கி நடப்பிற்கு கொண்டு வந்தார் அவன் உதவியாளர். ரவிசங்கரோ, எப்போது வேண்டுமானாலும் தான் கைது செய்யப்படலாம் என்பதால் உடனே கட்சித் தலைவரும், மாநிலத்தின் முதல்வருமான பெரியசாமியை சந்திக்கக் கிளம்பினார்.



கடந்த இரு மாத காலமாக முதல்வரை சந்திக்க இயலாமல் இருந்தவருக்கு இன்று உடனே அனுமதி கிடைத்தது. அவரைப் பார்த்ததும், “தலைவரே என்னதிது… அந்த வருண் தான் என் பொண்ண கடத்தி அந்த ஆதாரங்களை எல்லாம் வெளிய லீக் பண்ணிருக்கான். அவனை எதுவும் கேக்காம, கட்சிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு அறிக்கை குடுத்துருக்கீங்க… இந்த கட்சிக்காக நான் எவ்ளோ உழைச்சுருக்கேன்னு உங்களுக்கே தெரியும்…” என்று உடைந்த குரலில் கூறினார்.



“நீ நினைக்கிற மாதிரி உன் பொண்ண கடத்துனது வருண் இல்லய்யா…” என்று முதல்வர் கூற, அவரை நோக்கி புரியாத பார்வை வீசினார் ரவிசங்கர்.



“ஹ்ம்ம் உனக்கு வெளிய வேற எதிரி இருக்கான்யா. அது யாருன்னு கண்டுபிடி…” என்று கூறியவாறே அங்கிருந்து செல்ல முயன்றவர், சட்டென்று நின்று, “அப்படியே வருண் தான் கடத்தியிருந்தாலும், என்னால அவனை ஒன்னும் பண்ண முடியாது… ஏன்னா அவன் என் பையன்… அவன் என் பையன்னு வெளிய சொல்ல முடியாது... ஆனா அவனைத் தான் அரசியல் வாரிசா இன்னும் கொஞ்ச நாள்ல அறிவிக்க போறேன்…” என்று அடுத்த அதிர்ச்சியை ரவிசங்கருக்கு பரிசளித்தார்.



அதற்குள் ரவிசங்கரை கைது செய்ய காவலர்கள் முதல்வரின் உத்தரவின் பெயரில் அங்கேயே வந்திருக்க, “நீ கட்சிக்காக நிறைய உழைச்சுருக்கேல… கவலைப்படாத உன்ன விஐபி செல்ல போட சொல்லி நல்லா கவனிச்சுக்க சொல்றேன்.” என்று கூறிய முதல்வர், அந்த காவலர்களிடம் சைகை செய்ய, ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் ரவிசங்கர்.



எந்த கட்சிக்காக, மனைவி மற்றும் குழந்தையை மறைத்து, கட்சி ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தாரோ, அதே கட்சியின் சுயநலத்திற்காக இன்று அவர் பலிகெடாவாக்கப்படுகிறார்.



சுயநினைவின்றி காவலர்களுடன் சென்றவரை கூட்டத்தில் ஒருத்தியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜு. அவள் கண்களின் கண்ணீருமில்லை, உதட்டில் சிரிப்புமில்லை… ஆனால் வெகு நாட்களுக்கு பின்னர் அவளின் மனம் நிம்மதியாக இருந்தது.



அவளின் முகமாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்த பாலா, அவளை இடித்து, “வா போகலாம்…” என்று முன்னே நடந்தான். சற்று தூரம் சென்ற பின்பே அவளின் அரவத்தை உணராதவன், திரும்பிப் பார்க்க, தேஜுவோ தன் முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை விலக்கியபடி பத்திரிக்கையாளர்களின் முன் நின்று கொண்டிருந்தாள்.


தொடர்ந்து பயணிப்போம்...
 
கடைசில என்ன திடீர் டிவிஸ்டு😲😲😲. மைன்ட் எங்கேயோ போகுதே🤔🤔🤔. அப்படியும் இருக்குமோ😲😲😲. சீக்கிரமா கடைசி எபிசோடை போட்டுடுங்க சிஸ். தேஜு என்ன போறாள்னு தெரியலைனா மண்டை வெடிச்சிடும் போல.

இந்த ஃபேஸ்புக்ல தான் உருட்டு வச்சு மீம்ஸ் நிறைய வருதுனா இங்கேயும் வந்துடுச்சா😂😂😂. இன்னியோட பாலா கோட்டா நிறைவேறலையே. சூப்பர் எபிசோட் அண்ட் சூப்பர் ஸ்டோரி. வித்தியாசமாகவும் இருக்கு. விறுவிறுப்பாகவும் இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
 

Barkkavi

✍️
Writer
கடைசில என்ன திடீர் டிவிஸ்டு😲😲😲. மைன்ட் எங்கேயோ போகுதே🤔🤔🤔. அப்படியும் இருக்குமோ😲😲😲. சீக்கிரமா கடைசி எபிசோடை போட்டுடுங்க சிஸ். தேஜு என்ன போறாள்னு தெரியலைனா மண்டை வெடிச்சிடும் போல.

இந்த ஃபேஸ்புக்ல தான் உருட்டு வச்சு மீம்ஸ் நிறைய வருதுனா இங்கேயும் வந்துடுச்சா😂😂😂. இன்னியோட பாலா கோட்டா நிறைவேறலையே. சூப்பர் எபிசோட் அண்ட் சூப்பர் ஸ்டோரி. வித்தியாசமாகவும் இருக்கு. விறுவிறுப்பாகவும் இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
லாஸ்ட் எபில ஒரு ட்விஸ்ட் வச்சு அதை ரிவீல் பண்ற சுகமே தனி...😂😂😂 அதுக்காக பெருசா எல்லாம் யோசிச்சுறாதீங்க..😁😁😁
ஹாஹா இந்த கதை எழுதி பல மாசமாகுது... அப்போ இதுவும் 'அன்றே கணித்தார் பார்கவி'ல வந்துடுமோ...😂😂😂 க்ளைமாக்ஸ் வந்துடுச்சே பாவம் பாலா.. 😜😁 நன்றி சகோ😍😍😍
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom