• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 11

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் அடுத்த அத்தியாயம் இதோ... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁

IMG_20210726_144430.jpg


பயணம் 11



அக்குரலையும் அது கூறிய செய்தியையும் கேட்டவளின் உடல் நடுங்க, அருகில் நின்றிருந்த பாலாவோ அவளைத் தாங்கிப் பிடித்து, “என்னாச்சு… ஏன் திடீர்னு இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்க..?” என்றான்.



எவ்வளவு கேட்டும் பதில் கூற மறுத்தவள், உடனே அவனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். அவளின் நிலையறிந்து அவனும் அவளுடன் சென்றான்.



வழியில் வந்த ஆட்டோவைப் பிடித்து மீண்டும் விக்ரம் வீட்டிற்கே சென்றனர். செல்லும் வழியில் அவள் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பதைக் கண்டவன், எதுவும் பேசவில்லை.



வாசலில் இவர்களைக் கண்ட விக்ரம், “என்னடா அதுக்குள்ள வேலை முடிஞ்சுதா..?” என்றவன் இருவரின் முகத்தைக் கண்டு வேறெதுவும் கேட்காமல் அவர்களை உள்ளே அழைத்தான்.



அடுத்த பத்து நிமிடங்கள் அங்கு அமைதியே நிலவ, பாலா தான் முதலில் பேச ஆரம்பித்தான்.



“இன்னும் எவ்ளோ நேரம் தேஜு இப்படியே இருக்க போற..? திடீர்னு என்னாச்சு உனக்கு..? ஏன் அவ்ளோ டென்ஷனா இருந்த..? எதுக்கு அங்கயிருந்து கிளம்ப சொன்ன…? இதுக்கான விடை தெரிஞ்சா தான் அடுத்து என்னன்னு பிளான் பண்ண முடியும்…” சற்று கறாராகவே கூறினான் பாலா.



அப்போதும் எதுவும் பேசாமல் கீழே குனிந்து தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள் தேஜு.



“ப்ச் இப்போ என்ன.. உங்க ‘அப்பா’ தான் உன்ன கொல்ல பிளான் போட்டுருக்காரு. அதுக்கு தான் இப்படி இருக்கியா..?” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.



அவனின் கேள்வியில் அதிர்ச்சியுடன் பாலாவைப் பார்த்தாள் தேஜு. அவளின் அதிர்ந்த முகத்தை கண்டு அவள் அடுத்து கேட்கவிருக்கும் கேள்வியை யூகித்தவனாக, “அது எப்படி எனக்கு தெரியும்னு பார்க்குறியா… அரசியலுக்காக சொந்த பொண்ணையே கொல்லுற அளவுக்கு கேவலமா பிளான் போடுறது அந்த ஆளா தான் இருக்கணும். அண்ட் இப்படி தான் நடந்துருக்கும்னு எனக்கு ஏற்கனவே ஒரு கெஸ் இருந்துச்சு…” என்றான் பாலா.



இன்னுமே அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, “உன் முட்ட கண்ணை இன்னும் விரிக்காம, அந்த பையைக் குடு… அந்த ஆளு இன்னும் என்னென்ன தில்லாலங்கடி வேலை பார்த்துருக்கான்னு பார்ப்போம்…” என்றான்.



தேஜு இருந்த மனநிலையில் அவன் கூறியதை சரியாகக் கவனிக்கவில்லை. இல்லையென்றால் இந்நேரம் அதற்கு பெரிய சண்டை ஏற்பட்டிருக்கும்.



அந்த பையைத் திறந்து பார்த்தவர்களுக்கு கட்டுகட்டாக ஆதாரங்கள் சிக்கின. மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட பல உயிர்கொல்லித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ‘பணியாற்றி’யவர்களில் முக்கியஸ்தராக திகழ்ந்திருக்கிறார் மனிதர். பொறுக்கி தேர்ந்தெடுக்கக்கூடிய சில நல்ல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பெரும்பான்மை இவரின் முன்னிலையிலேயே கட்சியில் அரும்பாடுபட்டு உழைத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது!



“ப்பா… ஊழலோட மொத்த உருவமா இருந்துருக்காரு…” என்றான் விக்ரம்.



இவ்வளவிற்கும் அவர்கள் கண்டவை ஒரு பாதி காகிதங்கள் தான்!



“ம்ம்ம் இப்போ தெரியுது கட்சி ‘வளர்ச்சி’க்கு எவ்வளவு பாடுபட்டிருக்காருன்னு… இவ்ளோ பண்ண மனுஷனை ஜஸ்ட் லைக் தாட் கட்சிய விட்டு தூக்குனா கோபம் வருமா வராதா… சரி அந்த கட்ட பிரி… இன்னும் பல அரிய திட்டங்கள் இருக்கும் போல… சயின்டிஸ்ட்கே டஃப் குடுக்குறாங்க பா…” என்று கிண்டலாகக் கூறினான் பாலா.



இவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் அந்த காகிதங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜு. தந்தையின் அரசியல் மோகம், அதற்காக எதையும் செய்ய துடிக்கும் வெறி, இவற்றையெல்லாம் நன்கு அறிந்தவள் தான் தேஜு. அதற்காக இப்படி ஊழலில் புரள்பவராக அவரை நிச்சயம் கற்பனை செய்து பார்த்ததில்லை.



மக்களின் நன்மை ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்படுபர்களை மக்களே புறக்கணிக்கும் அளவிற்கு தங்கள் சாணக்கியத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், அவர் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்வார் என்று நினைக்கவில்லை தான். மறுபுறம் தன் சுயலாபத்திற்காக மக்களுக்கு கேடு விளைவிப்பதை மட்டுமே செய்வார் என்றும் யோசிக்கவில்லை. புகழிற்காக எந்த எல்லை வரை வேண்டுமென்றாலும் செல்பவர் அல்லவா… அவரை இவ்வாறும் யோசித்திருக்க வேண்டுமோ என்ற காலம் கடந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள் தேஜு.



விக்ரம் மற்றும் பாலா மட்டுமே உரையாடிக் கொண்டிருக்க, முதலில் தேஜுவின் அமைதியை உணர்ந்தது பாலா தான். அவள் முகத்தில் தெரிந்த கலக்கத்திலேயே அவளின் சிந்தனை செல்லும் பாதையை உணர்ந்தவனாக, அவளை உலுக்கியவன், கண்களாயே என்னவென்று வினவினான்.



“இப்படி ஒரு சுயநலவாதிக்கு மகளா பிறந்துருப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல… வீட்டுக்கு நல்லவரா இல்லைனாலும், நாட்டுக்காவது கொஞ்சமே கொஞ்சம் நல்லவரா இருப்பாருன்னு நினைச்சேன். ஹ்ம்ம்… கட்சி கட்சின்னு அதுக்காகவே பார்த்து, இன்னைக்கு வரைக்கும் எத்தனை உயிர் போகக் காரணமா இருந்துருக்காரு. எத்தனையோ திட்டங்கள், அதனால மக்கள் பாதிக்கப்படுவாங்கன்னு தெரிஞ்சும் கூட, எப்படி இவங்களால அதை செயல்படுத்த முடியுதோ…” என்று ஒருவித இறுக்கத்துடனே கூறினாள்.



“இதுல அவங்களை மட்டும் குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம். என்ன தான் அஞ்சு வருஷம் ஆடினாலும், எலக்ஷனுக்கு நம்மகிட்ட தான் வராங்க. அவங்களை குறை சொல்ற அதே மக்கள் தான், காசு வாங்கிட்டு ஓட்டும் போடுறாங்க… திரும்ப அடுத்த அஞ்சு வருஷம் நம்மகிட்ட கொடுத்த காசை அவங்க வசூலிக்கிறாங்க… எப்போ ஓட்டுக்கு காசு வாங்கிட்டோமோ, அப்பவே அவங்களை குறை சொல்ற தகுதியையும் இழந்துட்டோம்…” என்றான் பாலா.



இப்படி மாறி மாறி விவாதித்துக் கொண்டே அந்த காகிதங்களை ஆராய்ந்தனர்.



“ம்ம்ம் இது தான் டா லாஸ்ட்டு… எப்பா எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கு…” என்று சலித்துக் கொண்டான் விக்ரம்.



அந்த கடைசி காகிதத்தைப் படித்த பாலாவின் முகம் இறுகியது. இதுவரை அவனின் இந்த அழுத்தத்தை பார்த்திடாத தேஜுவிற்கு சற்று பயமாகவே இருந்தது.



விக்ரம் தான் அவனின் நிலை உணர்ந்து, “டேய் என்னடா ஆச்சு… அப்படி என்ன இருக்கு..?” என்று கேட்டான்.



“எங்கெங்கயோ கைவச்சு கடைசில விவசாயத்துலயே கைவைக்குறாங்க ****” என்று அவர்களை அர்ச்சித்தான் பாலா. அவனின் திட்டுக்களையெல்லாம் காது கொடுத்து கேட்க முடியாத விக்ரம் அவன் கையிலிருந்த காகிதத்தை வாங்கி படித்தான்.



“ஹே இதுல பசுமைத் திட்டம்னு தான போட்டுருக்கு… குறிப்பிட்ட சில இடங்களை தேர்ந்தெடுத்து அங்க செடி நடப்போறாங்க… இது நல்ல விஷயம் தான.” என்றான் விக்ரம்.



“மண்ணாங்கட்டி… அவங்க நடப்போற செடி என்ன தெரியுமா… எதுக்குமே பயன்படாத, ஆனா நிலத்தடி நீரை மட்டும் பெருமளவிற்கு உறிஞ்சுக்குற செடி. 1950ல ஆஸ்திரேலியால இருந்து கொண்டு வந்து இங்க பயிரிடப்பட்ட சீமை கருவேல மரத்தோட வகையை சார்ந்தது தான் இந்த செடி. இதை தான் அவங்க ‘பசுமைத் திட்டம்’ங்கிற பேர்ல நடப்போறாங்க. அதுவும் விளைநிலங்களுக்கு பக்கத்துல இருக்க இடங்களா பார்த்து பார்த்து செலக்ட் பண்ணிருக்காங்க… இந்த திட்டம் மட்டும் செயல்படுத்துனா இன்னும் ஒரே வருஷத்துல, இருக்க விவசாயிங்களும் பயிர் வளர்க்க தண்ணியில்லாம தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான்…” என்று கோபமாக பேசியவன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.



அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த தேஜுவிற்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இதுவரை அவனின் இந்த பரிமாணத்தை அவள் பார்த்ததில்லை அல்லவா…



ஒரு பெருமூச்சுடன் தேஜுவின் புறம் திரும்பிய விக்ரம் அவளிருக்கும் நிலையுணர்ந்து, “எப்பவும் ஜாலியா சுத்திட்டு இருக்குறவன் சீரியஸா பேசவும் ஷாக்கா இருக்கா..?” என்று சரியாகவே கேட்டான்.



“ம்ம்ம் எதுக்கு இவ்ளோ டென்ஷன்..?” என்று குழப்பமாக கேட்டாள்.



“அவனுக்கு விவசாயம்னா அவ்ளோ பிடிக்கும். சின்ன வயசுல அவன் தாத்தாவோட நிலத்துலயே தான் இருப்பானாம். ஆனா அப்போ ஏற்பட்ட பஞ்சத்துனால இவங்க நிலங்களையெல்லாம் விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டங்களாம். உயிரா நினைச்ச நிலம் கையவிட்டு போனதும், அவனோட தாத்தாவும் தவறிட்டாராம். அவன் அப்பா கிராமத்துல இருந்து சிட்டிக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுனாராம். இவன் ஸ்கூல் படிக்கிற வரை எல்லாம் நல்லா தான் இருந்துச்சு… ஆனா காலேஜ்ல அக்ரி தான் படிக்கணும்னு இவன் சொல்ல, இன்ஜினியரிங் படிச்சா தான் வேலை கிடைக்கும்னு (!!!) அப்பா சொல்ல, அதுலயிருந்து ரெண்டு பேருக்கும் சண்டை தான். என்ன தான் அப்பா சொன்ன மாதிரி இன்ஜினியரிங் படிச்சாலும் அப்பப்போ விவசாயம் பத்தின ஆர்ட்டிகிள்லாம் தேடித் தேடி படிப்பான்… ஹ்ம்ம் இவன் மட்டும் விவசாயம் படிச்சுருந்தா இந்நேரம் எவ்வளவோ முன்னேறிருப்பான்.” என்று பாலாவைப் பற்றி கூறி முடித்தான் விக்ரம்.



அதைக் கேட்டவளிற்கு பாலாவின் மேல் சிறு மரியாதை ஏற்பட்டது. மரியாதை ஈர்ப்பாகுமோ…



‘எனக்கு இந்த சிசுவேஷன் வந்துருந்தா, வாழ்க்கையே வேஸ்ட்டான மாதிரி இருந்துருப்பேன். இவன் மாதிரியெல்லாம் ஜாலியா கண்டிப்பா இருந்துருக்க மாட்டேன்… ஆனா இவன் மட்டும் எப்படி எல்லா சிஷுவேஷனையும் ஈஸியா ஹாண்டில் பண்றான்.’ என்று யோசித்தவளிற்கு, சில மணி நேரங்களுக்கு முன்னால் அவளின் சோகக் கதையைக் கூறி கலக்கமாக இருந்த போது, கிண்டல் செய்தே அவளின் மனநிலையை அவன் மாற்றியது நினைவிற்கு வந்தது.



உதட்டோரம் சிரிப்பில் நெளிய, அவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கையில், அவளின் எண்ணத்தின் நாயகனே அங்கு பிரசன்னமானான்.



“என்னை விட்டுட்டு ரெண்டு பேரும் தீவிரமா பிளான் போடுறீங்க போல… ஐடியா எதுவும் தேருச்சா…” என்று அவனின் அக்மார்க் கிண்டல் குரலில் பேசினான்.



‘அதுக்குள்ள இவன் மூட் மாறிடுச்சா…’ என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, கண்ணசைவில் என்னவென்று வினவ, ‘ஒன்றுமில்லை’ என்று தலையாட்டினாள்



“உன்னை விட்டுட்டு பிளான் பண்ணிட முடியுமா… வா வந்து உன் பிளான்னை சொல்லு…” என்று அலுத்துக் கொண்டே விக்ரம் கூற, அவன் அருகில் வந்த பாலா அவனைத் தோளோடு அணைத்து, “நண்பேன்டா…” என்று கூற, ‘இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல…’ என்று முணுமுணுத்தான் விக்ரம்.



“சரி இப்போ நம்ம பிளான்னை சொல்லப் போறேன் நல்லா கவனிங்க…” என்றான் பாலா.



“அடேய் சஸ்பென்ஸ் வைக்காம சொல்லித் தொலடா…” என்றான் விக்ரம். தேஜுவும் அதையே தான் மனதில் நினைத்தாள்.



இருவரையும் பார்த்தவன், தேஜுவிடம் திரும்பி, “உன்னைக் கடத்தப்போறோம்… இது தான் நம்ம பிளான்…” என்றான்.


தொடர்ந்த பயணிப்போம்...
 
தேஜுவோட அப்பாவா தான் இருக்கும்னு போன எபில நினைச்சேன். ஆனால் எதுவும் பல்பு வாங்க போறேன்னு தான் சொல்லலை.‌ பொண்ணையே கொலை பண்ணிட்டு நாட்டை கொள்ளையடிச்சு அந்த பணத்தை வச்சு என்ன தான் பண்ண போறாங்களோ🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️.

உண்மை தான் காசை வாங்கிட்டு ஓட்டு போடுறவங்க தான் எல்லாத்துக்கும் காரணம்.

சூப்பர் எபிசோட் 👌👌👌.
 

Barkkavi

✍️
Writer
தேஜுவோட அப்பாவா தான் இருக்கும்னு போன எபில நினைச்சேன். ஆனால் எதுவும் பல்பு வாங்க போறேன்னு தான் சொல்லலை.‌ பொண்ணையே கொலை பண்ணிட்டு நாட்டை கொள்ளையடிச்சு அந்த பணத்தை வச்சு என்ன தான் பண்ண போறாங்களோ🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️.

உண்மை தான் காசை வாங்கிட்டு ஓட்டு போடுறவங்க தான் எல்லாத்துக்கும் காரணம்.

சூப்பர் எபிசோட் 👌👌👌.
சரியா தான் கெஸ் பண்ணியிருக்கீங்க சகோ😁😂 உண்மை தான் சகோ... நன்றி...😍😍😍
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom