• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் - ஃபைனல்

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் இறுதி அத்தியாயம் போட்டாச்சு...😁😁😁 இதுவரை இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...😊😊😊 இந்த எபியையும் படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...😍😍😍

eiWKMV634236.jpg


பயணம் 13



கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவள் கண்முன் நிற்க, அங்கே பத்திரிக்கையாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை நோக்கி, “உங்களுக்கு என்கிட்ட கேக்க நிறைய கேள்விகள் இருக்குன்னு எனக்கு தெரியும். உங்க கேள்விகளுக்கெல்லாம் பதிலை நானே சொல்றேன்…” என்று தைரியமாக பேச ஆரம்பித்தாள்.



அவளின் சிறு வயதிலிருந்து அனுபவித்த அவமானங்களைப் பற்றிக் கூறியவள், அவளின் தாயைப் பற்றியும் கூறினாள். அதன்பின்பு தாயின் மீது செய்த சத்தியத்திற்காக, ரவிசங்கர் கூறிய பணியை மேற்கொண்டதையும், அவள் சென்ற பயணத்தின் அனுபவங்களையும் கூறினாள். தன்மேல் நடத்தப்பட்ட கொலை முயற்சியும், அதன் காரணம் அவளின் சொந்த தந்தை என்பதை அறிந்ததையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள். அவரின் சுயரூபம் அறிந்ததும், சந்தேகத்தினால் அவர் கொடுத்த பையை திறந்து பார்த்து அதில் இருந்தவைகளைக் கண்டு அதிர்ந்ததையும் கூறி முடித்தாள்.



அவளின் கூற்றைக் கேட்ட சிலர், ‘சொந்த மகளைக் கொன்றாவது பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மனிதர்கள் இருக்கிறார்களே…’ என்று நினைத்தனர்.



ஆனால் சிலரோ, அதிலும் ஏதாவது தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமா என்பதற்காக கேள்விகளை அடுக்கத் துவங்கினர்.



“இதை நிரூபிக்க இவ்ளோ பெரிய டிராமா தேவையா..?” என்று நக்கலாக ஒருவர் கேட்க, “உங்களுக்கு வேணா இந்த திட்டங்களும் அதில் செய்யப்படுற ஊழல்களும் ஜஸ்ட் அ நியூஸா இருக்கலாம்… ஆனா பலருக்கு இது தான் அவங்க வாழ்க்கையைத் தீர்மானிக்க கூடிய அடித்தளம்…” என்று சூடாக பதிலளித்தாள்.



மேலும், “இதுவரைக்கும் உங்க சேனல்ல வந்த ஆதாரங்கள் இதுவரைக்கும் அவர் செய்த ஊழல்கள் தான். இதோ இப்போ உங்களுக்கு காண்பிக்க போற ஆதாரம், ‘பசுமைத் திட்டம்’ங்கிற பெயர்ல, நம்ம நாட்டோட வளங்களை அழிக்குறதுக்காகவே செயல்படுத்தப்படப்போற திட்டத்தோட காபி. இதை பற்றிய விளக்கங்களை பாலா சொல்வாரு…” என்றவள் கண்களாலேயே பாலாவை அழைத்தாள்.



முதலில் தயங்கினாலும், தான் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன், பத்திரிக்கையாளர்களின் முன்னால் நின்றான்.



ஒரு பெருமூச்சுடன், அத்திட்டத்தை பற்றியும் அதற்காக அவர்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்போகும் செடியைப் பற்றியும் கூறத் துவங்கினான். இடையிடையே அதைப் பற்றி இரவோடிரவாக தான் சேகரித்து வைத்த தகவல்களையும் கூறினான்.



இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்த அதிர்ச்சிகளால், பத்திரிக்கையாளர்களே அரண்டு தான் போயினர். அதுவும் இப்போது பாலா கூறியவற்றை வைத்து பார்த்தால், அத்திட்டம் மட்டும் செயல்படுத்தப் பட்டிருந்தால், இன்னும் இரண்டு வருடங்களில் நாடே பஞ்சத்தில் அல்லவா வீழ்ந்திருக்கும்.



“நீங்க சொல்றதை நாங்க எப்படி நம்புறது..? நீங்க என்ன பையாலஜிஸ்ட்டா…” என்பன போன்ற கேள்விகளும் வரத்தான் செய்தன.



அதற்கு சிரித்தவன், “நாங்க ஒன்னும், அரசியல்வாதிங்களை நம்புற மாதிரி, நாங்க சொல்றதையும் கண்மூடித்தனமா நம்ப சொல்லல… இதைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தனும்… அந்த ஆராய்ச்சியோட எல்லா நிலைகளும், அதோட முடிவுகளும் மக்களுக்கு காட்டப்பட்டு, பொதுமக்களோட அனுமதி இருந்தா மட்டும் தான் அதை செயல்படுத்தணும்னு தான் நாங்க சொல்ல வரோம்.” என்றான்.



பாலா பேசப் பேச அவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. பலரும் அதை தங்களின் முகநூல், ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தனர்.



அந்த தகவல் அங்கிருப்பவர்களுக்கும் தெரிய வர, “உங்க ஸ்பீச் தான் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு… நிறைய இளைஞர்கள் இதை பகிர்ந்துட்டு வராங்க… இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க..?” என்றார் ஒருவர்.



“இதைப் பகிர்வது, நிறைய பேருக்கு இதைக் கொண்டு போய் சேர்க்குறது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா நம்மகிட்ட இருக்க கெட்ட பழக்கம், எவ்ளோ சீக்கிரம் இதை பகிர்கிறோமோ, அவ்ளோ சீக்கிரம் மறந்தும் போயிடுவோம். எங்க, போன வாரம் ட்ரெண்டிங்லயிருந்த சமூகம் சார்ந்த விஷயத்தை இப்போ யாரு பேசிட்டு இருக்கான்னு சொல்லுங்க பார்ப்போம்… பகிர்வது மட்டும் வெற்றியை கொடுத்துடாது, அதுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கிறதுலதான் உண்மையான வெற்றி இருக்கு… இப்போ நாங்க போட்டிருக்குறதும் தீர்வுக்கான விதையை தான். அது முளைச்சு மரமாகுறதும், மண்ணோட மக்கிப் போறதும் பொது மக்களான உங்க கைல தான் இருக்கு…” என்றான் பாலா.



“உங்க கருத்து என்ன..?” என்று தேஜுவைக் கேட்டதும், “எந்தவொரு திட்டத்தையும் கண்மூடித்தனமா வரவேற்கவோ எதிர்க்கவோ செய்யாதீங்க… அதைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கோங்க… ஏன்னா இன்னைக்கு செயல்படுத்தப்படுற இந்த திட்டம் உங்களோட முடிஞ்சுபோறது இல்ல. உங்க அடுத்த தலைமுறைக்கு நீங்க கொடுக்கப்போறது. அது வரமா இல்ல சாபமான்னு முடிவு பண்ண வேண்டிய நிலைல நீங்க இருக்கீங்கங்கிறதை புரிஞ்சுக்கோங்க…” என்றாள்.



*****



பாலாவின் வீடு…



பாலாவின் பேச்சைக் கேட்ட அவனின் தந்தைக்கு மனதிற்குள் உறுத்தியது. அவனின் பேச்சிலேயே, விவாசயத்தை அவன் எவ்வளவு நேசிக்கிறான் என்பது அவருக்கு விளங்கியது. அவரின் முகத்தைக் கண்டே அவரின் மனநிலையை யூகித்த அவரின் மனைவி, “என்னாச்சுங்க..?” என்றார்.



“நம்ம பையனோட கனவை நானே அழிச்சுட்டேனோ…” என்றார் கவலையுடன்.



“அவன் நம்மள மாதிரி கஷ்டப்படக்கூடாதுன்னு தான விவாசயம் படிக்க வேணாம்னு சொன்னீங்க… விடுங்க அவன் புரிஞ்சுப்பான்…” என்று மனைவியாய் கணவரை தேற்றினார்.



“என் பையன் நல்லா சம்பாதிக்கிறான்னு பெருமையா சொல்ல நினைச்சேனே தவிர, அவன் நிம்மதியா இருக்கணும்னு நினைக்கலையே…” என்று வருந்தியவர், “அவனை வீட்டுக்கு வர சொல்லு… இனி அவன் விவசாயம் பார்க்குறேன்னு சொன்னாலும் சரி தான்னு சொல்லிடு… என் பையன் ஊருக்கே சோறு போடுற விவசாயின்னு சொல்லி பெருமை பட்டுக்குறேன்…” என்று சந்தோஷமாக பேசினார். “அவன் அப்படியே எங்க அப்பா மாதிரி டி…” என்ற அங்கலாய்ப்பு வேறு…



*****



தேஜுவின் மாமா வீடு…



“என் பேத்தியை பார்த்தியா டா… அவ அம்மாக்கு நீதி வாங்கி குடுத்துட்டா…” என்று கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த தேஜுவின் பாட்டியை ஆதரவாக பிடித்துக் கொண்டார் அவளின் மாமா. நெடுநாட்களாக நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டிருந்ததிலிருந்து விடுபட்ட உணர்வு அக்குடும்பத்தினருக்கு… ஆவலுடன் பேத்தியின் வரவுக்காக காத்திருந்தது அக்குடும்பம்…



*****



மாநிலத்தையே உலுக்கிய சம்பவத்தின் காரணகர்த்தாவாகிய இருவரும், பரபரப்பு சூழலிலிருந்து வெளி வந்து, அந்த ரோட்டோர தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தனர்.



இருவரும் அங்கிருந்து வந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவ்வப்போது அவர்களின் கண்கள் மட்டுமே மோதிக் கொள்ள, இதழ்கள் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டன.



சுடச்சுட தேநீரை கொடுத்த அந்த கடையின் உரிமையாளர், இவர்களை கண்டுகொண்டவராக, “தம்பி, செமயா பேசுனீங்க…” என்று ஆரம்பித்து அவருக்கு தெரிந்த அரசியல் புலமையை எடுத்து விட்டார்.



முதலில் அவர் கூறுவதை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தவன், சற்று நேரத்திலேயே நெளிய ஆரம்பித்தான். அவனின் செய்கைகளைக் கண்டு சிரிப்பை கட்டுப்படுத்தியவள், சில நிமிடங்களுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் சற்று தள்ளி வந்து நின்று கொண்டாள்.



ஜில்லென்ற மாலை நேரக் காற்று அவளைத் தழுவிச் செல்ல, அதற்கு தோதாய் சூடான தேநீரை விழுங்கியபடி சிந்தனையில் ஆழ்ந்தாள்.



அவளின் யோசனையை கலைப்பது போல் வந்து சேர்ந்தான் பாலா. “ஓய் என்ன அவருக்கிட்ட மாட்டிவிட்டுட்டு, இங்க வந்து என்ன சீரியஸா யோசிச்சுட்டு இருக்க…” என்றான்.



அவனை நோக்கி இதழ் மடித்து சிரித்தவள், “எங்க போனாலும், உனக்குன்னு இப்படி யாராவது மாட்டிடுறாங்க…” என்றாள்.



“அது அப்படி தான்…” என்று சமாளித்தவன், “என்ன யோசிச்சுட்டு இருந்தன்னு கேட்டேன்… அதுக்கு பதிலே காணோம்…” என்றான்.



“ஹ்ம்ம் அந்த பஸ் பயணத்தைப் பத்தி தான் யோசிச்சேன்… ஒரு வேளை அன்னைக்கு நீ அந்த பஸ்ல வரலனாலோ, எனக்கு முன்னாடியே வேற பஸ்ல ஏறி போயிருந்தாலோ, என்ன ஆகிருக்கும்னு யோசிச்சேன்… மேபி அவங்க பிளான் போட்ட மாதிரி இந்நேரம் என்னை கொன்னுருப்பாங்கல…” என்றவளின் பேச்சு செல்லும் திசையறிந்து, “ப்ச்… இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுற…” என்றான் சற்று எரிச்சலுடன்.



அவனின் எரிச்சலை கண்டுகொண்டவள், “ம்ம்ம் அப்பப்போ இரிடேட் பண்ணாலும், நீ எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கேல… அதான் தேங்க்ஸ் சொல்லலாம்னு யோசிச்சேன்…” என்றாள் சிரிப்புடன்.



அவளின் கிண்டல் புரிந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “இப்பயாச்சும் ஐயாவோட ஹெல்ப்பிங் மைண்ட் புரிஞ்சுதே…” என்று சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டான். “அப்பறம்… இனி என்ன பிளான்…” என்று மெதுவாகக் கேட்டான்.



அவன் கேட்க வருவது புரிந்தாலும், தலைவனுக்கு இணையான தலைவியாக, புரியாத மாதிரியே காட்டிக் கொண்டு, “பிளான் எதுவும் இல்ல… மாமா வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் தங்கிட்டு பாட்டி கூட மதுரை போனா, திரும்ப ரொட்டின் ஒர்க் தான்…” என்றாள்.



‘புரியாத மாதிரியே பேச வேண்டியது…’ என்று மனதிற்குள் அலுத்துக் கொள்ள, அதற்குள் அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது. ஆம் தேஜு பெங்களூரில் உள்ள அவளின் மாமா வீட்டிற்கு செல்கிறாள். அவளைப் பேருந்தில் ஏற்றி விடவே பாலா அவளுடன் வந்துள்ளான்.



‘ஐயோ அதுக்குள்ள பஸ் வந்துடுச்சு… இப்போ விட்டா எப்போ கேக்க…’ என்று மனதிற்குள் அலறியவன், “கல்யாணம் பத்தி என்ன பிளான்…” என்று அவசரமாக அவளிடம் கேட்டான்.



தேஜுவோ மனதிற்குள் சிரித்துக் கொண்டவள், “எனக்கு ஒரு பிளான்னும் இல்ல… எல்லாம் பாட்டியோட முடிவு தான்…” என்று தோளைக் குலுக்கி கூறினாள்.



“இவளைக் கரெக்ட் பண்றதுக்கு பதிலா இவ பாட்டியைக் கரெக்ட் பண்ணிருக்கலாமோ…” என்று அவன் முணுமுணுத்தது அவளிற்கும் கேட்டது.



சிரமப்பட்டு சிரிப்பை அடக்கியவள், பேருந்தில் அவளின் இருக்கையில் சென்று அமர, அவளின் இருக்கைக்கு அருகிலிருந்த ஜன்னலிற்கு வெளியே நின்றவனின் முகம் போன போக்கில், அவன் மீது இரக்கம் சுரந்தது தேஜுவிற்கு.



“ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு…” என்று அவன் முகம் பார்த்து நிறுத்தினாள்.



‘க்கும் கண்டிஷன் வேறயா…’ என்று நொந்து கொண்டே அவளைப் பார்த்தான் பாலா.



அவள் முகமோ புன்னகையில் விகசிக்க, “எனக்கு ஹஸ்பண்டா வரணும்னா அவன் விவசாயியா தான் இருக்கணும்…” என்று கண்ணடித்துக் கூறினாள்.



முதலில் சரியாக கவனிக்காதவன், அவளின் கூற்று மூளைக்குள் சென்று நரம்புகளை தூண்ட, ஒருவித உற்சாகத்துடன் தலை நிமிர்ந்தான். அதற்குள் அந்த பேருந்து நகர ஆரம்பிக்க, அதனுடனேயே நகர்ந்தவன், “இப்போ என்ன சொன்ன..?”என்று அவளிடமே வினவினான்.



“சீக்கிரம் வந்து பொண்ணு கேளுன்னு சொன்னேன் டா லூசு…” என்றாள் தேஜு.



“நாளைக்கே வரேன் டி…” என்று பாலா கத்த, தேஜுவோ வெட்கத்தை மறைப்பதற்காக தலையிலடித்துக் கொண்டாள்.



விதி அவர்களை ஒன்றிணைக்க, அவர்களின் பயணத்தை பகடையாக்கியது. அதில் உண்டான மாற்றங்கள் இருவருக்குமே அவர்கள் விரும்பியவாறே வாழ்க்கையை மாற்ற உதவின.



பாலா, அவனின் கனவான விவசாயத்தில் தன் முதல் படியை எடுத்து வைக்க திட்டங்களை அவனின் தந்தையின் உதவியுடன் தீட்டினான். விவசாயத் துறை, அவனின் சாதனைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.



‘தவறு செய்தது தந்தை என்றாலும் அவருக்கு தண்டனை பெற்று கொடுத்தாள்’ என்று பலரும் தேஜுவை பாராட்ட, இவ்வளவு நாட்கள் அவள் சந்தித்து வந்த அவமானங்கள் எல்லாம் நீங்கி, புதிதாக பிறந்தவள் போல் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் கழிக்கிறாள் தேஜு.



அதே பேருந்து பயணம் தான், பாலாவிற்கு தேஜுவையும், தேஜுவிற்கு பாலாவையும் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றியுள்ளது.



இதே போல் தான், நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏதோ ஒரு சிறு மாற்றம், நம் வாழ்க்கை பயணத்தின் வழியையே மாற்றும் வல்லமை படைத்தது. அம்மாற்றத்திற்காக நாமும் காத்திருப்போம்.



மாற்றம் ஒன்றே மாறாதது!




பயணம் முடிவுற்றது...
 
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நல்லா விறுவிறுப்பா இருந்தது. அதேசமயம் காமெடியாகவும் இருந்தது. குட்டி டிவிஸ்ட் எல்லாம் நான் நல்லா என்ஜாய் பண்ணேன்.

இன்னும் கொஞ்சம் பெருசா எழுதி இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சூப்பர் 👏👏👏👏. உங்களோட கதை ரெண்டு தான் படிச்சிருக்கேன். எனக்கு ரெண்டுமே ரொம்ப பிடிச்சது‌.
 

Barkkavi

✍️
Writer
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நல்லா விறுவிறுப்பா இருந்தது. அதேசமயம் காமெடியாகவும் இருந்தது. குட்டி டிவிஸ்ட் எல்லாம் நான் நல்லா என்ஜாய் பண்ணேன்.

இன்னும் கொஞ்சம் பெருசா எழுதி இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சூப்பர் 👏👏👏👏. உங்களோட கதை ரெண்டு தான் படிச்சிருக்கேன். எனக்கு ரெண்டுமே ரொம்ப பிடிச்சது‌.
நன்றி சகோ😍😍😍 கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி...😁😁😁

இது குறுநாவல் போட்டிக்காக எழுதியது. அதான் பெருசா எழுத முடியல...

நன்றி 😊😊😊
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom