வர்ணிகா 9 | Ezhilanbu Novels/Nandhavanam

வர்ணிகா 9

Janu Murugan

✍️
Writer
வர்ணிகா : 9

சின்னப்புலியூரில் எந்த வழியும் தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள் வர்ணிகா. வேகமாக நடந்ததால் அவளுக்கு மூச்சு இறைத்தது. இருந்தும் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடந்தாள். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. இருட்டில் தனியாக செல்வது வேறு பயத்தை உண்டாக்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் நடக்கமுடியவில்லை. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

லேட் ஆகிவிட்டது என்று திலீப் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். ஜெகனால் திலீப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. வீணா, "டேய்! வேகமா ஓட்டுடா..! பாஸை மிஸ் பண்ணிட போறோம். இந்த ஊருகுள்ள நமக்கு வழி கூட தெரியாது."

ஜெகன், "நீ ஓட்டிப்பாரு, தெரியும். நானே பசியோட கஷ்டப்பட்டு ஓட்டிட்டு இருக்கேன்.." என்று புலம்பினான்.

வீணா, "டேய்! சாப்பாட்டை பற்றி நினைக்காமல் வண்டியை ஒழுங்கா ஓட்டு."

வர்ணிகாவால் நடக்க முடியவில்லை. கண்கள் சொருகி மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். காரை ஓட்டிக்கொண்டு இருந்த திலீப் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் திடீரென மயங்கி விட, வேகமாக காரை ஓட்டியவன் அவள் அருகில் நிறுத்தினான்.

வீணா, "அங்க பாருடா! பாஸ் ஜீப்பை நிறுத்திட்டாரு. என்ன என்று போய் பார்ப்போம்."

ஜெகன், "அங்க பாரு, ஒரு பொண்ணு மயங்கி விழுந்துட்டா. பாஸ் உதவி பண்ணபோறாரு என்று நினைக்கிறேன்."

திலீப் காரிலிருந்து இறங்கினான். இருட்டில் அந்த பெண்ணின் முகத்தை அவனால் சரியாக பார்க்க முடியவில்லை. டார்ச் லைட்டை எடுத்து முகத்தில் அடித்தவன் அவள் முகத்தைப் பார்த்து அதிர்ச்சியுற்றான். வர்ணிகா என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. வேகமாக காரில் இருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். அவளுக்கு விழிப்பு வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்த திலீப் அவளை ஜீப்பில் படுக்கவைத்து ஜீப்பை கிளப்பினான்.

வீணா, "வாடா! அந்த பொண்ணுக்கு உதவி பண்ணலாம்."

ஜெகன், "நீ கவலைப்படாத, பாஸ் அந்த பொண்ணு யாருன்னு விசாரிச்சு, அவங்களை வீட்டில் கொண்டு போய் விடுவார்.." என்றவன் திலீப்பை ஃபாலோ செய்ய தொடங்கினான்.

திலீப்புக்கு வர்ணிகா கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சி. இருந்தும் இவ்வளவு நாள் இவள் எங்கே சென்றிருந்தாள். இவள் எப்படி இங்கே வந்தால்..? இவளுக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி மயங்கி சரிந்தாள்..? என்று மனதில் ஆயிரம் கேள்விகளோடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அவினாஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து விட்டான். இன்னும் திலீப் வரவில்லையே என யோசித்துக் கொண்டிருந்தான். காலிங் பெல் சத்தம் கேட்க அவனாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டு கதவை திறந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி.

வெளியே தாட்சாயினி நின்றிருந்தாள். அவினாஷ் இன்னும் அதிர்ச்சி விலகாமல் நின்று கொண்டிருக்க அவள், "இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறதா ஐடியா? வழியை விட்டா நானாவது உள்ள போவேன்.." என்றாள்.

அவினாஷ், "என்னடி சொல்லாம கொள்ளாம வந்திருக்க..?"

தாட்சாயினி, "ஏன்டா நான் வரக்கூடாதா..? ஏன் எனக்கு தெரியாம என்ன திருட்டு வேலை பாக்குற. வேற ஏதாவது புதுசா ஒரு கேர்ள் ஃபிரண்டா புடுச்சுட்டியா...?" என்று வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவினாஷ், "அது ஒண்ணுதான் குறைச்சல். உன்னையே என்னால ஹாண்டில் பண்ண முடியலை. இதுல இன்னொன்னு வேறயா..?" என்றான்.

தாட்சாயினி, "ஏன்டா நான் போன் பண்ணலன்னா, நீ பண்ண மாட்டியா?" என்று முறைத்தாள்.

அவினாஷ், "உனக்கு தெரியாதா..? நான் எவ்வளவு பிஸியாக இருக்கேன்னு. இப்பக்கூட திலீப் வரேன்னு சொல்லி இருக்கான். அவன்கிட்ட கேஸ் விஷயமாய் பேசணும்" என்றான்.

தாட்சாயினி, "திலீப் அண்ணா வராங்களா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.." என்றாள்.

அவினாஷ், "நாங்க அபிஷியலா பேசப் போறோம்."

தாட்சாயினி, "போடா! பெரிய ஆபீஷியலு... சீக்ரெட் பேச போறீங்க. நான் அதைக் கேட்டு உங்கள் எதிரிகள் கிட்ட சொல்ல போறேன்.." என்றவள், "சமைச்சுட்டியா? எனக்கு பசிக்குது..!" என்றாள்.

அவினாஷ், "இல்லடி, இனிமேல்தான் சமைக்கணும். நீயே போய் சமைச்சிடு" என்றான்.

தாட்சாயினி, "சரிடா, ஃப்ரிட்ஜில் மாவு இருக்கா?" என்று கேட்டவாறு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

காலிங் பெல் அடிக்க, அவினாஷ் கதவை திறந்தான். திலீப் வெளியே நின்றிருந்தான். அவினாஷ், "வாடா மச்சான் உள்ள.." என்று அழைக்க,

திலீப், "மச்சான், இங்க பக்கத்துல ஹாஸ்பிடல் எதுவும் இருக்கா..?"

அவினாஷ், "ஏன்டா, யாருக்கு என்ன ஆச்சு?" என கேட்க,

திலீப், "வரும் வழியில பொண்ணு ரோட்டில் மயங்கி கிடந்தாள். தண்ணீர் தெளிச்சும், கண் முழிக்கலடா! அதான் ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்னு இங்க கூட்டிட்டு வந்தேன்" என்றான்.

அவினாஷ், "அந்த பொண்ணை முதலில் உள்ள தூக்கிட்டு வா..." என்றான். திலீப் தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்தான்.
அவினாஷ் கிச்சனுக்குள் சென்று தாட்சாயணியை அழைத்து வந்தான்.

தாட்சாயினி, "திலீப் அண்ணா, எப்படி இருக்கீங்க?"

திலீப், "நான் நல்லாயிருக்கேன். நீ நல்லா இருக்கியா மா?" என்றான்.

அவினாஷ், "அப்புறமா நலம் விசாரிக்கலாம். முதலில் இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு செக் பண்ணு.." என்றான்

தாட்சாயினி, "என்ன ஆச்சு இவுங்களுக்கு?"

திலீப், "மயங்கி விழுந்துட்டாங்க."

தாட்சாயினி, "நான் போய் என்னோட சூட்கேசை எடுத்துட்டு வரேன்" என்று கூறி வெளியே சென்று ஐந்து நிமிடத்தில் திரும்பினாள். தாட்சாயினி வர்ணிகாவை பரிசோதித்தாள்.

திலீப் பதட்டமாகவே இருந்தான். அவினாஷ், "மச்சான், ஒன்னும் இருக்காது. பயப்படாத..!" என்றவன், 'யாரோ ஒரு பொண்ணுக்காக ஏன் இவ்வளவு பதட்டம் படுகிறான்..?' என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

தாட்சாயினி, "ஒன்றுமில்லை, சாப்பிடாததுனாலதான் மயக்கமாக இருக்காங்க. கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சுடுவாங்க.. நாம போகலாம், அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றாள்.

மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் தாட்சாயினி, "நான் சமைச்சிட்டு வரேன்.." என்று கிச்சனுக்குள் புகுந்து விட்டாள். அவினாஷும் திலீப்பும் பேசிக்கொண்டிருந்தனர்.

வீணாவும் ஜெகனும் அவினாஷ் வீட்டு வாசலில் நின்று முழித்துக் கொண்டிருந்தனர்.

வீணா, "டேய்! நீயே காலிங் பெல்லை அடி."

ஜெகன், "என்னால முடியாது, நீயே காலிங் அடி" என்றான்.

வீணா, "டேய்! என்னால பாஸ் கிட்ட திட்டு வாங்க முடியாது!"

ஜெகன், "சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி ஐடியா கொடுத்து இங்க கூட்டிட்டு வந்துட்டு, இப்ப என்ன கோர்த்து விட பாக்குறியா..?"

வீணா, "டேய்! என்னடா இப்படி பிளேட்டை திருப்பி போடுற. உனக்காகத்தானே ஐடியா கொடுத்தேன்.." என்றாள். இருவரும் இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

திலீப், "என்னடா.. எப்போ எனக்கு கல்யாண சாப்பாடு போட போற..?"

அவினாஷ், "அதுக்குள்ளயுமா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.." என்றான்.

அவினாஷ், "என்னை விடுடா, என்னைக்காவது பொண்ணு ரெடி. உனக்கு என்ன இப்படியே இருந்து விடலாம் என்று ஐடியாவா..?"

திலீப், "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா!"

அவினாஷ், 'ஒரு நிமிடம் அமைதியாக இரு..' என்று திலீப்பிற்கு சைகை செய்துவிட்டு, தன் காதுகளை கூர்மையாக்கினான். வெளியே ஜெகனும் வீணாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் ஹஸ்கி வாய்ஸில்.

அவினாஷ் தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பதுங்கி பதுங்கி முன்னேறினான். திலீப் கதவை திறக்க, அவினாஷ் துப்பாக்கியை நீட்டி "ஹாண்ட்ஸ் அப்.." என்றான்.
இதை எதிர்பார்க்காத ஜெகனும் வீணாவும் அதிர்ந்து நின்றனர்.

அவினாஷ், "யாரு நீங்க? எதுக்காக வந்து இருக்கீங்க..?" என்றான்.

இருவரும் ஒன்றாக திலீப்பை கை காட்டினார்கள். திலீப்புக்கு அவர்கள் இருவரையும் பார்த்ததில் அதிர்ச்சி. அவினாஷ் திலீப்பை பார்க்க திலீப், "அவங்க என்னோட அசிஸ்டெண்ட்ஸ்.." என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றான்.

வீணாவும் ஜெகனும் பள்ளியில் சிறுவர்கள் தவறு செய்துவிட்டு நிற்பது போல கைகளை கட்டிக் கொண்டு நின்றனர். திலீப் அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான். அவினாஷ், "நீ மட்டும்தான் வர்றேன்னு சொன்ன? இவங்க வருவதா என்கிட்ட சொல்லவே இல்லையே..?"

திலீப், "என்கிட்ட கூட வர்றதை சொல்லல" என்று முறைதான்.

ஜெகன், "பாஸ், நான் இல்லை. எல்லாத்துக்கும் இவதான் காரணம்.." என்று வீணாவை கைகாட்டினான்.

வீணா, "பாஸ், எல்லாத்துக்கும் காரணம் டபரா தலையன் தான்.." என்று ஜெகனை கைகாட்ட ஜெகன், "நீதான்டி ஐடியா கொடுத்த..?" என்க,

வீணா, "நான் சொன்னா நீ கேட்பியா? உனக்கு அறிவு எங்க போச்சு..?" என்று பதிலுக்கு பேச திலீப், "2 பேரும் சண்டை போடுவதை நிறுத்துங்க..!" என்று திட்ட, இருவரும் கப்சிப் என்றாகினர்.

திலீப், "வரக்கூடாதுன்னு சொல்லியும், வந்தும் நீங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம என்ன ஃபாலோ பண்ணிட்டு வந்து இருக்கீங்க..?" என்க, இருவரும் நாலாபக்கமும் தலையை ஆட்டினர்.

அவர்கள் செயலைப் பார்த்து அவினாஷ்க்கு சிரிப்பு வந்து விட்டது. அதை வாய்க்குள் அடக்கிக்கொண்டான்.

திலீப், "இப்படி குழந்தை தனமா நடந்துக்கிறீங்க... உங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோன்னு பயந்து தான் நான் உங்கள வர வேண்டாம் என்று சொன்னேன்..?" என்றான்.

இருவரும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டனர். அவினாஷ், "திலீப், சரி கோபப்படாத! தெரியாமல் செஞ்சுருப்பாங்க.." என்றான்.

ஜெகன், "ஆமா பாஸ், தெரியாமல் செஞ்சுட்டோம்."

திலீப், "செய்றதையும் செஞ்சுட்டு, தெரியாம செஞ்சுட்டேன்னு வேற சொல்றியா..? இனிமேல் இது மாதிரி பண்ண கூடாது."

இருவரும் வேகமாக தலையை ஆட்டி, "இனிமேல் பண்ண மாட்டோம்.." என்றனர்.

அவினாஷ், "அதான் உன் பிரச்சனை முடிஞ்சதுல, ரெண்டுபேரும் உட்காருங்க" என்றான்.

ஜெகன், "தேங்க்ஸ் பாஸ்.." என்று அமர, வீணா அவன் அருகில் அமர்ந்தாள்.

அவினாஷ், "என்னது, நானும் பாஸா...?"

ஜெகன், "ஆமா பாஸ், எங்க பாஸோட ஃப்ரண்ட் எனக்கும் பாஸ்தான், அப்புறம் நான் ஜெகன்.." என்றான். வீணா தன்னை அறிமுகப் படுத்துவதற்குள் ஜெகன், "இவ ஒரு வேஸ்ட்" என்றான்.

இதைக் கேட்டு வீணா அவன் காலை ஓங்கி மிதிக்க, "ஆ...." என்று கத்திய ஜெகன், "அவ பேரு வீணா, அதைத்தான் ஆங்கிலத்தில் சொன்னேன்.." என்றான்.மர்மங்கள் தொடரும்!!
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom