வர்ணிகா 8 | Ezhilanbu Novels/Nandhavanam

வர்ணிகா 8

Janu Murugan

✍️
Writer
வர்ணிகா : 8


திலீப் அவினாஷை சந்திக்க செல்ல தயாரானான். ஜெகன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

திலீப், "ஜெகன்..." என அழைக்க, ஜெகன் அவன் அழைத்தது கேட்காதது போல ஒரு புக்கை வைத்து படித்துக் கொண்டிருந்தான். இல்லை இல்லை படிப்பது போல நடித்துக் கொண்டிருந்தான்.


திலீப் மீண்டும் ஜெகன் என அழைக்க ஜெகன், "வீணா, நான் யார் கூடவும் பேச தயாராக இல்லைன்னு சொல்லிடு" என்றான்.


திலீப்பிற்க்கு அவன் செயலைப் பார்த்து சிரிப்பு வந்தது. அதை இதழ்களுக்குள் அடக்கியவன் வீணாவிடம், "இப்ப எதுக்கு அவன் இப்படி காமெடி பண்ணிட்டு இருக்கான்..?"

ஜெகன் பொங்கி எழுந்து, "என்னது நான் கோபப்படுறது உங்களுக்கு காமெடியா இருக்கா?"


திலீப், "சொல்லு, எதுக்கு கோபமா இருக்க?"
ஜெகன், "சொன்னா சமாதானம் பண்ண போறீங்களா? அதான் தனியா ஜாலியா கிளம்பிட்டீங்கல்ல போங்க.." என்றான்.திலீப், "டேய் நாங்க சீக்ரெட்டா மீட் பண்ண போறோம். அதான் உங்க ரெண்டு பேரையும் வேண்டாம்னு சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் ஆபீஸை பார்த்துக்கோங்க. யாராவது என்னை தேடி வருவாங்க.." என்று கூறிவிட்டு வீணாவிடம் சொல்லிவிட்டு, கிளம்பினான். திலீப் கிளம்பியதும் ஜெகன் சோகமாக அமர்ந்து இருந்தான்.
வீணா, "டேய்! இப்ப முகத்தை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிருக்க?" என்றாள்.

ஜெகன், "ஏய்! சும்மா என்னை கடுப்பேத்தாத. நானே பாஸ் நம்மள விட்டுட்டு போயிட்டாரு என்ற சோகத்துல இருக்கேன் "


வீணா, "பாஸ் எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.." என்று கூற, ஜெகன் வீணா சொல்வதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
வீணா, "சரி டா, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு."ஜெகன் ஆர்வமாக, "என்ன..?" என்றான்.
வீணா, "பேசாம நாம ரெண்டு பேரும் பாஸை பாலோவ் பண்ணி போலாமா?"

ஜெகன், "நல்ல ஐடியா! ஆனால் ஆபிஸை யார் பார்த்துக்குறது?"


வீணா, "இப்போ ஆபிஸை பார்த்துக்குறது முக்கியமா? இல்லைபாஸ் கூட போவது முக்கியமா?"


ஜெகன், "பாஸ் கூட போறது தான் முக்கியம்."


வீணா, "அப்ப வா போகலாம்..." என்று ஆபீசை பூட்டிவிட்டு, இருவரும் வீணாவின் ஸ்கூட்டியில் கிளம்பினர்.
மினிஸ்டர் துரையரசன் வெளிநாட்டவரிடம் பேசிக்
கொண்டிருந்தார். துரையரசன் பேசும் தமிழை பரத் அந்த வெளிநாட்டவரிடம் ஆங்கிலத்தில் கூறிக் கொண்டிருந்தான்..

துரையரசன், "இந்த சிலை நடராஜர் சிலை. இதில் ஐம்பொன் கலந்து இருக்கு. இது பண்டைய காலத்தில் மன்னர் ஆட்சியில் செய்யப்பட்டது. இது விலை மதிப்பு இல்லாதது. நான் இதை விக்கிற ஐடியா இல்ல. நீங்க எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் என்பதால் தான் உங்களுக்கு விற்க சம்மதித்த இருக்கேன். இதோட விலை 20 கோடி" என்றார்


துரையரசன் கூறியதை வில்லியம்ஸிடம் பரத் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தான். வில்லியம்ஸ் அனைத்தையும் கேட்டுவிட்டு, "எனக்கு விலை பற்றி எந்த பிரச்சனையும் இல்ல. இன்னும் அதிகமா பணம் கூட தருகிறேன். எங்க நாட்டிற்கு இதுபோன்ற சிலைகள்தான் தேவைப்படுகிறது" என்றார்.


துரையரசன், "இது ரொம்ப ரகசியமாக இருக்கட்டும்."

வில்லியம்ஸ், "நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். உங்களுக்கு பணத்தை நான் டிரான்ஸ்பர் பண்ணிடுகிறேன்.." என்றார்.


துரையரசன் சரி என்க, இருவரும் கைகுலுக்கி விட்டு விடை பெற்றனர். பரத் மற்றும் துரையரசன் காரில் சென்று கொண்டிருந்தனர்.
பரத், "அப்பா, நீ சரியான கேடி. நம்ம நாட்டு சிலையை யாருக்கும் தெரியாம வித்து காசாகிட்ட...!"
துரையரசன், "இந்த திறமை மட்டும் இல்லைன்னா, நான் இத்தனை வருடம் இந்த அரசியலில் குப்பை கொட்ட முடியுமா? மத்த டிபார்ட்மெண்ட்டை விட இந்த டிபார்ட்மெண்ட்ல தான் கோடிகோடியாக சம்பாதிக்க முடியும். அதான் இந்த டிபார்ட்மென்ட் மினிஸ்டரியை கேட்டு வாங்கினேன்.." என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
வர்ணிகா, 'இவங்ககிட்ட இருந்து நான் எப்படி தப்பித்து போவேன்?' என யோசிக்க, அவள் மனசாட்சி, 'இவங்க என்ன உன்ன கடத்தியா வச்சி இருக்காங்க? நீ தப்பித்துப் போக?' எனக் கேலி செய்ய, நேரங்கெட்ட, 'நேரத்தில் வந்து நீ என் உயிரை எடுக்காத! ஒழுங்கா ஓடிப் போய்விடு..' என அதட்டி அடக்கி விட்டாள்.
மூளைய பலவாறாக யோசித்துக் கொண்டிருக்க, "உள்ளே வரலாமா?" என்று கதவை தட்டினான் வசீகரன். அவன் என்ன சொல்லப் போகிறானோ? என்று பயந்து கொண்டே வாங்க என்றாள்.
வசீகரன், "வர்ணிகா, எங்க வீடு உங்களுக்கு பிடிச்சிருக்கா?"
அவள் அவன் பார்வையில் உள்ள வித்யாசத்தை கவனித்தாள். நேற்று பேசும்போது அவன் பார்வை வேறு மாதிரி இருந்தது. 'இது சரி இல்லையே!' என மனதில் நினைத்த அவள், "ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றாள்.
வசீகரன், "என்கிட்ட ஏதோ பேசணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தியாமே?" என்றான்.
அவள், 'நல்ல வேலை, இவன் கிட்ட உண்மைய சொல்லலை..' என நினைத்தவள், "டிரஸ் வாங்கி கொடுத்ததற்கு நன்றி சொல்ல தான் தேடுனேன்.." என்றாள்

வசீகரன், "நமக்குள்ள எதுக்கு தேங்ஸ் எல்லாம்..?" என்றான். அவள் பதிலுக்கு புன்னகைத்தாள். பின் சில பொதுவான விஷயங்கள் பேசிவிட்டு வசீகரன் சென்று விட்டான்.


திலீப் அரக்கோணத்தை நோக்கி ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான். வழியில் அவன் ஜீப்பின் டையர் பஞ்சர் ஆகிவிட்டது. திலீப் மெக்கானிக்கிற்கு போன் செய்தான். மெக்கானிக் வர அரை மணி நேரம் ஆகும் என்றார்.
திலீப், 'வேற வழி இல்ல. இங்க பக்கத்துல மெக்கானிக் ஷாப் கூட இல்ல. வெயிட் பண்ணி தான் ஆகணும்..' என நினைத்து காத்திரிக்கலானான்.
அவனை தேடி பின்னாடி வந்த ஜெகனும் வீணாவும் அவனை பார்த்து விட்டனர். ஜெகன், "வீணா, அங்க பாரு பாஸ் நிக்கிறாரு.. அவரு ஜீப்ல ஏதோ பிரச்சனை போல. வா அவருக்கு உதவி பண்ணலாம்.." என்றான்.
வீணா அவன் தலையில் கொட்டி, "லூசு பயலே! நாமளே அவருக்கு தெரியாம தான அவரை ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம். இப்போ போயி அவரு முன்னாடி நின்னா, நாமல திட்டி தூரத்தி விட்ற மாட்டாரா?' என்றாள்.
ஜெகன், "அட ஆமாயில்ல?"
வீணா, "என்ன ஆமா? பேசாம வண்டிய ஓரமா நிறுத்து. அவர் ஜுப்பை எடுக்கும்போது நாம் அவரை ஃபாலோ பண்ணலாம்" என்றாள். இருவரும் ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு காத்திருந்தனர்.
அவினாஷ் பலவாறாக சிந்தித்து கொண்டிருந்தான். இவ்வளவு பெரிய விஷயம் எப்படி யாருக்கும் தெரியாமல் போயிற்று? ஒருவேளை கண்டுபிடித்தனால் தான் இங்க இருந்த போலீஸ் எல்லாம் இறந்து போயிருப்பார்களோ? என யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் யோசனையை கலைக்கும் விதமாக அவன் போன் அலறியது. எடுத்து பேசினான். திலீப் தான் மறுமுனையில் பேசினான். " என்னடா மச்சான் வந்துட்டியா?"
திலீப், "இல்லடா! வர வழியில டயர் பஞ்சர் ஆகிடுச்சு. வர கொஞ்சம் நேரம் ஆகும். எப்படியும் எட்டு மணி ஆகிடும். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு கால் பண்ணேன்‌."
அவினாஷ், "அப்படியா? சரி பார்த்து வாடா. என் வீட்டு அட்ரஸை உனக்கு மெசேஜ் பண்றேன். உனக்கு தெரியலன்னா, எனக்கு கால் பண்ணு. நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.." என்றான்.
திலீப், "ஓகேடா, நான் அங்க வந்துட்டு உனக்கு கால் பண்றேன்.." என்று காலை கட் செய்தான்.
அமுதா, "வர்ணிகா சாப்பிட வாமா.." என அழைக்க, அவளுக்கு தான் எங்கேயோ மாட்டிக்கொண்டது போல உணர்வு. அங்கே சாப்பிட கூட பயமாக இருந்தது. அவள் "இல்லம்மா, எனக்கு பசிக்கல..." என்றாள்.
அமுதா, "நைட் சாப்பிடாமல் இருக்கக் கூடாது! கொஞ்சமாவது வந்து சாப்பிடு" என்று அழைக்க, அவள், "இல்லம்மா, நான் பசிக்கும்போது கொஞ்ச நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுகிறேன்.." என்றாள்.

அமுதா, "சரிமா, சாப்பிடாமல் தூங்கிவிட்டாத..!" என்று கூறிவிட்டு, வசீகரனுக்கும் முத்துவிற்கும் சாப்பாடு பரிமாற சென்றார் . அமுதா சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருக்க வர்ணிகா வெளியே எட்டிப் பார்த்தாள்.


முத்து, "அம்மா, அண்ணிய நாளைக்கு அந்த குகைக்கு கூட்டிட்டு போகலாமா?" என்றான்.
அமுதா, "நாளைக்கு கூட்டிட்டு போவோம். இப்ப பேசாம சாப்பிடு.." என்றார்.
இதைக் கேட்டு வர்ணிகாவிற்கு பகீரென்றது. 'குகைக்கு கூட்டிட்டு போய் நரபலி கொடுக்கப் போறாங்களா? வர்ணி உனக்கு டேத் கன்பார்ம்..' என புலம்பியவள், அவர்களுக்கு தெரியாமல் பூனை நடைபோட்டு வெளியேறினாள்.
வீட்டு காவலாளி, "இந்த நேரத்தில் எங்கம்மா போறீங்க?" என கேட்க,
வர்ணிகா "வீட்டுக்குள்ளே இருக்க போரடிக்குது. அதான் காலாற நடந்துவிட்டு வரலாம் என்று வெளியே போறேன்.." என்றாள்

காவலாளி, "இந்த நேரத்தில் தனியா போக வேண்டாம். நானும் கூட வருகிறேன்.." என்றார்.


வர்ணிகா, "வேண்டாம் நான் மட்டும் போறேன். போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்‌.." என்று மறுக்க,
காவலாளி, "அம்மா, தம்பி கிட்ட சொல்லிட்டீங்களா?"
வர்ணிகா, "சொல்லிட்டேன்..." என்று கூறி வெளியேறினாள். வர்ணிகா சின்ன புலியூரிலிருந்து வெளியேறுவதற்காக வழியைத் தேடி நடந்து கொண்டிருந்தாள்.
திலீப் அவினாஷை நோக்கி ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் பின்னே ஜெகனும் வீணாவும் சென்று கொண்டிருந்தனர்.


மர்மங்கள் தொடரும்!!
 

Rajam

Well-known member
Member
வர்ணிகா ஏதும் சிக்கலை சந்திப்பாளா.
இவர்கள் கண்ணில் படுவாளா.
எவீட்டை விட்டு வந்து எதிலும் மாட்டாம இருக்கனும்.
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom