வர்ணிகா 7

Janu Murugan

✍️
Writer
வர்ணிகா : 7


ஜெகன், "பாஸ், நாம நினைச்ச மாதிரியே இந்த கேஸ்ல பெரிய பெரிய ஆளுங்க பின்னாடி இருக்காங்க.."



திலீப், "நானும் அதை பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்."



ஜெகன், "பாஸ், எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் டவுட்டா இருக்கு.."



திலீப், "என்ன விஷயம்?"
ஜெகன், "அந்த பரத் ஏன் பாஸ் அண்ணியை தேடிட்டு இருக்கான். ஒருவேளை இதுக்கு பின்னாடியும் பெருசா ஏதோ மர்மம் இருக்குமோ?"
திலீப், "கண்டிப்பா இருக்கும். ஆனால் வர்ணிகாவை கண்டுபிச்சா தான் இந்த எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும். இந்த கேஸ்ல நாம லீகலா மூவ் பண்றது தான் சரியாக இருக்கும்னு எனக்கு தோணுது. ஏன்னா, இது ரொம்ப பெரிய விஷயம். கண்டிப்பாக குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரணும்."

ஜெகன், "அதான் அந்த நந்தகுமார் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காருல பாஸ்.."


திலீப், "இதுல பெரிய பெரிய ஆளுங்க சம்பந்தப்பட்டு இருப்பதால், கேஸை மூடிமறைக்க தான் பார்ப்பாங்க. அப்படியே யாராவது நேர்மையா விசாரித்தாலும் அவங்கள பணிமாறுதல் பண்ணிடுவாங்க.." என்றான்.


இவர்கள் சீரியசாக டிஸ்கஸ் செய்து கொண்டிருக்க வீணா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜெகன், "நம்ம இங்க எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கோம். இவ நல்லா ஹாயா உட்கார்ந்து டிவி பார்த்திட்டு இருக்கா.." என்று அவள் தலையில் கொட்டினான்.
வீணா, "டேய் லூசு பயலே! எதுக்குடா என் தலையில் கொட்டுன?"
ஜெகன், "நாங்கள் எவ்வளவு முக்கியமான விஷயத்தை பத்தி பேசிட்டு இருக்கோம். நீ என்னடான்னா ஹாயாக உட்கார்ந்து டிவி பார்த்திட்டு இருக்க?"
வீணா, "அரக்கோணத்தில் அந்த காட்டுக்குள்ள போன எஸ்.ஐ இறந்து போன விஷயம் உனக்கு தெரியும் இல்ல? அந்த கேஸை விசாரிக்க புதுசா ஒரு ஏ.சி.பி வந்து இருக்காரு. அவரு பேரு அவினாஷ். அந்த நியூஸ் அதான் பார்த்துட்டு இருந்தேன்.."
ஜெகன், "இப்போ அது தான் ரொம்ப முக்கியம் பாரு..?" என்றான்.

அவினாஷ் என்ற பெயரை கேட்டவுடன் திலீப், "வீணா, அந்த ஏ.சி.பி பேரு என்ன சொன்ன?" என்றான்.


வீணா, "அவினாஷ் பாஸ்.." என்றாள்.


திலீப் வேகமாக டிவியை பார்த்தவன் அவினாஷ் போட்டோவை பார்த்து விட்டான். திலீபின் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது. வேகமாக போனை எடுத்து யாருக்கோ கால் செய்தான்.
ஜெகன், 'பாஸ்க்கு என்ன ஆச்சு? ஃபுல் பீரை யாரோ ஓசில கொடுத்த மாதிரி இவ்வளவு சந்தோஷப்படுறாரு..' என நினைத்தான்.
கேஸ் பைலை பார்த்துக் கொண்டிருந்த அவினாஷின் போன் அலறியது. அவன் எடுத்துப் பார்த்தான். புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அவன் காலை அட்டெண்ட் செய்து பேசினான்.
மறுமுனையில் "ஹலோ! பேசுறது அசிஸ்டன்ட் கமிஷனர் அவினாஷா?" என்றது ஒரு குரல் .
அவினாஷ், "ஆமா! நீங்க யாரு?" என்றான்.
மறுமுனையில், "ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கணும் சார். என்னோட ஒருகால் செருப்பை காணோம்."



அவினாஷிற்கு இதைக் கேட்டதும் கோபம் வந்தது, "ஹலோ! செருப்பு காணாமல் போனதுக்கு எல்லாம் நாங்கள் கேஸ் எடுக்க முடியாது. சும்மா என் நேரத்தை வீண் பண்ணாதீங்க..!" என்றான்.



மறுமுனையில், "சார், எனக்கு செருப்புத் திருடனவன் பேரு தெரியும். அவன் பேரு குச்சிஐஸ்.." என்றான். இதைக் கேட்டதும் அவினாஷ், "திலீப்.." என்றான்.
திலீப், "நானேதான்.. ஏன் மச்சான், என் குரலை கூட உன்னால் கண்டுபிடிக்க முடியலை! ஆனால் குச்சி ஐஸ்ன்னு சொன்னவுடனே திலீப்னு கண்டுபிடிக்குகுற?"

அவினாஷ், "மச்சான், எனக்கு ஏற்கனவே டவுட் வந்துச்சு. செருப்பு காணாமல் போனதற்கு எல்லாம் எவன் அசிஸ்டென்ட் கமிஷனருக்கு கால் பண்ணுவான்னு. ஆனால் நான் கண்டுபிடிக்கிறதுக்குள்ள நீயே சொல்லிட்ட.."


திலீப், "சரி, சரி சமாளிச்சது போதும்! அரக்கோணத்துக்கு டிரான்ஸ்பர் ஆகிட்டப் போல? சொல்லவே இல்ல" என்றான்.


அவினாஷ், "ஆமான்டா மச்சான்! இங்க ஒரு சிக்கலான கேஸ்ல வேலை அதிகமா இருக்கு. முடிச்சிட்டு உன்னை தொடர்பு கொள்ளலாம் என்றுதான் இருந்தேன்.." என்றான்.
திலீப், "அந்த எஸ்.ஐ மர்டர் கேஸ் தான?"
அவினாஷ், "ஆமா! உனக்கு தெரியுமா?"
திலீப், "தெரியும்! நியூஸ்ல பார்த்தேன்."
அவினாஷ், "சரி, உன் வேலை எப்படி போயிட்டு இருக்கு? தி கிரேட் டிடக்டிவ் திலீப் எப்பவுமே பிசியா இருப்பானே.."
திலீப், "நானும் இங்கே ஒரு கேஸ்ல மண்டையை பிச்சிட்டு இருக்கேன். ஒரு க்ளூவும் கிடைக்க மாட்டேங்குதுடா. எந்தப் பக்கம் போனாலும் வந்த இடத்திலேயே திரும்பவும் வந்து நிற்கிறேன்.." என்றான்.
அவினாஷ், "அப்படியா! உன்னையே அலைக்கழித்த வச்சிருச்சா அப்பிடி என்ன கேஸ்டா?" என்றான்.
திலீப், "அதை பத்தி தான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இதுல பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் இன்வால்வ் ஆகி இருக்காங்க. நீ ஃப்ரீயா? நாம மீட் பண்ணலாமா?" என்றான்.

அவினாஷ், "இன்னைக்கு சாயங்காலம் நான் ஃப்ரீதான். நாம மீட் பண்ணலாம்.." என்றான்.


திலீப், "ஓகே, நாம ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்று போனை கட் செய்தான்.


ஜெகன், "யார்கிட்ட பாஸ் போன் பேசினீங்க?"
திலீப், "என் ஃப்ரெண்டோட தான் டா. அவன்தான் அரக்கோணத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கான்."
வீணா, "பாஸ், ஏசிபி உங்க ஃப்ரண்டா? ஏன் இத்தனை நாள் என்கிட்ட சொல்லவே இல்ல?" என்றாள்.



திலீப், "அவனை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். நாங்க ஸ்கூல் காலேஜ் ஒன்னாதான் படிச்சோம். அப்புறம் அவங்கங்க ப்யூச்சரைப் பார்த்துட்டு போயிட்டோம். அவினாஷ்க்கு அடிக்கடி பணிமாறுதல் கொடுத்துடுவாங்க. அதான் எங்களால் அடிக்கடி மீட் பண்ண முடியாது. கோயம்புத்தூரில் இருந்து இப்பதான் டிரான்ஸ்ஃபர் ஆகி வந்து இருக்கான்.." என்றான்.
ஜெகன், "அப்போ அவர்கிட்டயே நாம உதவி கேட்கலாமா?"



திலீப், "அது விஷயமாகதான் நான் அவனை இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணி பேச போறேன்.." என்றான்.
ஜெகன், "போறேன்னு சொல்றீங்க? நீங்க மட்டும்தான் போறீங்களா? நாங்க வரலையா?" என்றான்.
திலீப், "ஆமா! நீங்க ஆபீஸை பார்த்துக்கோங்க. நான் போயிட்டு வர நேரம் ஆகும். அப்படி இல்லன்னா அங்கேயே ஒரே நாள் தங்கிடுவேன்.." என்றான்.
ஜெகன், "எங்களை விட்டு நீங்க மட்டும் போறீங்க? எங்களையும் கூட்டிட்டு போங்க.." என்று அடம் பிடித்தான்.
திலீப், "நான் சொன்னது சொன்னதுதான். அடம்பிடிக்காமல் வேலையை பாரு.." என்று கூறிவிட்டு சென்று விட்டான்.
அவினாஷ் இன்ஸ்பெக்டரிடம், "அந்த எஸ்.ஐயோட ரீபோஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா?" என்றான்.
இன்ஸ்பெக்டர், "இல்ல சார், இன்னும் வரல. ஆனா நீங்க கொஞ்சம் மண்ணை டெஸ்ட் பண்ண சொல்லி கொடுத்தீங்களே, அந்த ரிப்போர்ட் வந்து இருக்கு.." என்றார்.
அவினாஷ், "அந்த ரிபோட்ஸ் வந்திருச்சா?" என்று ஆர்வமாக அதை வாங்கி படிக்க ஆரம்பித்தான் . ரிப்போர்ட்ஸ்ஸை படித்தவனின் முகத்தில் பேரதிர்ச்சி!
முத்துவும் வர்ணிகாவும் கதை பேசிக் கொண்டிருந்தனர். முத்து வர்ணிகாவின் வலது கையில் உள்ள மச்சத்தை பார்த்துவிட்டான். முத்துவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. வசீகரன் வந்ததும் சொல்லலாம் என காத்திருந்தான். வர்ணிகா வசீகரன் வந்ததும் உண்மையை சொல்லலாம் என காத்திருந்தாள். ஆனால் காலையில் வெளியே போன வசீகரன் இன்னும் வீடு திரும்பவில்லை.
முத்துவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. ஹாலுக்கும் வாசலுக்கும் குட்டி போட்ட பூனை போல நடந்து கொண்டிருந்தான்.
அமுதா, "ஏன்டா, இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து இருக்க. அவன் வருவான். வர்றதுக்கு டைம் ஆகும்னு சொல்லிட்டுத்தான போனான்..." என்றார்.
முத்து, "அம்மா, அண்ணா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதுக்காகத்தான் அண்ணாவை தேடிட்டு இருக்கேன்."
அமுதா, "அப்படி என்னடா முக்கியமான விஷயம்?"
முத்து, "அதை நான் முதலில் அண்ணா கிட்ட தான் சொல்லுவேன்.." என்றான்.
அமுதா, "என்னமோ போ..." என்று விட்டு அடுக்களைக்குள் சென்று விட்டார்.
வர்ணிகாவும் வசீகரனுக்காக காத்திருந்து அவன் வரும்போது பேசிக்கலாம் என நினைத்து அறைக்கேச் சென்று விட்டாள். முத்துவை இரண்டு மணி நேரம் காக்க வைத்த பிறகே வசீகரன் வந்து சேர்ந்தான். முத்துவிற்கு அவன் வருவதைப் பார்த்ததும். சந்தோஷம் ஓடிச்சென்று கட்டிக் கொண்டான்.
வசீகரன், "என்னடா, வந்ததும் வராத்துமா இப்படி கட்டிப்பிடிக்குற? என்ன விஷயம் டா?"
வசீகரனின் கார் சத்தம் கேட்டு வர்ணிகா அவனுடன் பேச வெளியே வந்தாள். முத்து, "அண்ணா! நம்ம தேடிட்டு இருக்கப் பொண்ணு வர்ணிகாதான்.." என்றான். வசீகரனிடம் பேச வந்த வர்ணிகா இதைக் கேட்டு விட்டாள் கேட்டவள், அப்படியே ஒரு ஓரமாக நின்று அவர்களை கவனிக்க தொடங்கினாள்.



வசீகரன், "என்னடா சொல்ற? உண்மையாவா?"



"ஆமா ண்ணா. சப்துனிகா அம்மா சொன்ன மாதிரி வர்ணிகாவோட வலது வகையில் நட்சத்திர வடிவ மச்சம் இருக்கு. நான் அதை பார்த்தேன்.." என்றான் முத்து.



இதைக் கேட்டதும் வசீகரனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். தான் தேடிய பெண் தன்னையே தேடிவந்து விட்டால் என நினைத்தான்.
இதை கேட்ட வர்ணிகா அவர்களை தவறாக புரிந்து கொண்டு அறைக்குள் மீண்டும் சென்று விட்டாள். வசீகரனும் முத்துவும் இந்த விஷயத்தை அமுதாவிடம் சொல்ல சென்றனர்.

'இது என்னடா புது வம்பா இருக்கு. எனக்குன்னு எங்க இருந்து தான் பிரச்சனை இப்படி லைன் கட்டி வருமோ?' என நினைத்தவள், தன் கையிலிருந்த மச்சத்தை பார்த்துவிட்டு இதைப் பற்றி உண்மையைச் சொன்னால் கூட நம்பமாட்டார்களே. அவங்க எதுக்கு நம்மள தேடினாங்க? ஒருவேளை படத்துல எல்லாம் காட்டுவார்களே அந்த மாதிரி நரபலி கொடுக்க தேடி இருப்பாங்களோ? நான் உயிரோட போனா தான் அந்த ஆதாரத்தை கோர்ட்டில் சம்மிட் பண்ண முடியும். பேய் கிட்ட இருந்து தப்பித்து பிசாசுகிட்ட மாட்டுன கதை ஆயிடுச்சே. இங்க இருந்து எப்படி தப்பிப்பது' என யோசிக்க ஆரம்பித்தாள்.



மர்மங்கள் தொடரும்!!
 

Rajam

Well-known member
Member
இங்கிருந்தும தப்பி விடுவாளா.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom