வர்ணிகா 6 | Ezhilanbu Novels/Nandhavanam

வர்ணிகா 6

Janu Murugan

✍️
Writer
அத்தியாயம் : 6


தேவ பிரகாஷ் ஹாஸ்பிடலின் முன் காரை நிறுத்திய மிருணாளினி முகத்தில் சந்தோஷத்துடன் எம்.டி அறையினுள் நுழைந்தாள். ஒரு பைலை மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்த தேவ பிரகாஷிற்கு மினியின் சத்தம் கேட்டு கவனம் கலைந்தது.

தேவ பிரகாஷ், "என்னாச்சு மினி? இன்னைக்கு ஓவரா சந்தோஷமா இருக்க?" என்றார்.


மினி, "டாடி, உங்களுக்கு இன்னும் நியூஸ் வரலையா?" என்றாள்.


தேவா பிரகாஷ், "என்ன நியூஸ் மினி? எனக்கு இன்னும் எந்த நியூஸும் வரலை..!" என்றார்.
மினி, "அப்பா, உங்களுக்கு சிறந்த சமூக சேவகர் அவார்டு அறிவிச்சிருக்காங்கபா..!" என்றாள். இதைக் கேட்டதும் தேவ பிரகாஷிற்கு சந்தோஷம் தாளவில்லை.
"என்ன சொல்ற மினி? எப்போ அறிவிச்சாங்க?" என்றார்.
மினி, "இப்பதான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி அனௌன்ஸ் பண்ணாங்க. நியூஸ் வந்தவுடனே முதல் வேலையா உங்களைத் தேடி வந்துட்டேன்..." என்றாள்.
சிறிது நேரத்தில் மருத்துவமனையில் அனைவருக்கும் செய்தி பரவி அனைவரும் தேவ பிரகாஷின் கேபினுக்கு வந்துவிட்டனர். அனைவரும் தேவ பிரகாஷுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.
சீப் டாக்டர், "சார், நீங்க ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணி வச்சு இருக்கீங்க சார். அதனால தான் உங்களுக்கு இந்த அவார்ட் கிடைச்சிருக்கு. இந்த அவார்ட் வாங்க எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு சார்..." என்றார்.
இதை மற்ற டாக்டர்களும் ஆமோதித்தனர். தேவ பிரகாஷ் பாராட்டு மழையில் நனைந்த சந்தோஷத்தில், "இதை செலிப்ரேட் பண்ண நாளைக்கு உங்களுக்கு ஒரு கெட் டு கெதர் அரேஞ்ச் பண்ண போறேன். எல்லாரும் மறக்காம வந்துடுங்க..." என்றார். பின் எல்லோரும் கலைந்து சென்றனர். அனைவரும் சென்றபிறகு தேவப்பிரகாஷின் முகத்தில் கவலைக் கோடுகள்.
அதை கவனித்த மிருணாளினி, "டாடி, என்ன ஆச்சு? இவ்வளவு நேரம் சந்தோஷமா தான இருந்தீங்க? திடீர்னு ஏன் சோகமாகி விட்டீங்க?" என்றாள்.
தேவ பிரகாஷ், "இல்லம்மா... அந்த வர்ணிகா மேட்டரை நினைச்சுத்தான் கவலையா இருக்கு. இப்ப வரைக்கும் அந்த எவிடன்ஸ் எங்க இருக்குன்னு தெரியல!"
மினி, "டாடி, அதுதான் திலீப் கிட்ட இந்த விஷயத்தை ஒப்படைச்சுட்டோம்ல. அவர் பாத்துக்குவாரு. கண்டிப்பா வர்ணிகாவை சீக்கிரம் கண்டு புடிச்சுடுவாரு. இப்ப இருக்கிற சந்தோஷத்தை என்ஜாய் பண்ணுங்க டாடி" என்றாள்.
திலிப் ஜெகன் வீணா மூவரும் வர்ணிகாவின் நண்பர்களைப் பார்க்கப் சென்று கொண்டிருந்தனர். ஜெகன் ஜீபின் கண்ணாடியை பார்த்து தலை முடியை சரி செய்து விட்டு விணாவிடம், "இந்த சார்ட் எனக்கு நல்லா இருக்கா?" என்றான்.
வீணா, "ம்ம்... ஏதோ இருக்கு" என்றாள்.
ஜெகன், "என்னது, ஏதோ இருக்கா? பாஸ் பாஸ் பக்கத்துல ஏதாவது துணி கடை இருந்தா பார்த்து நிறுத்துங்க பாஸ்.."
திலீப், "ஏன்டா, என்ன ஆச்சு?"என்க,
ஜெகன், "இவதான் என் சட்டை சுமாரா இருக்குன்னு சொல்லிட்டாளே! அதான் ஒரு நல்ல சட்டையை பார்த்து வாங்கிப் போட்டுட்டு போலாம்.." என்றான்.
திலீப், "இப்ப எதுக்குடா உனக்கு புது சட்டை?"
ஜெகன், "என்ன பாஸ், இப்படி கேட்டுட்டீங்க? வர்ணிகா ஃப்ரண்ட்ஸ்யை பார்க்க போறோம். அந்த பொண்ணுங்க முன்னாடி நான் கொஞ்சம் அழகா இருக்க வேணாமா?" என்றான்.
இதைக் கேட்டதும் திலீப்பும் வீணாவும் அவனைக் கொலைவெறியுடன் முறைத்தனர். ஜெகன் மைண்ட் வாய்ஸில் 'ரொம்பத்தான் பண்ணி விட்டோமோ?' என நினைத்து, "சரி, சரி விடுங்க. புது சட்டை இல்லேன்னா என்ன? பழைய சட்டையவே போட்டுக்கிறேன். நோ பிராப்ளம்.." என்றான்.
வீணா, "அவன் தலையில் தட்டி எருமை நாம பாக்கப்போறது பொண்ணு இல்லை பசங்களை.." என்றாள். இதைக் கேட்டதும் அவன் முகம் அஷ்டகோணலாகியது.
வீணாவிற்கு அவன் ரியாக்ஸன் பார்த்து சிரிப்பு வந்து விட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் அந்த ரெஸ்டாரன்ட் அடைந்தனர் . திலீப்பும் வீணாவும் ஜீப்பில் இருந்து இறங்கினர். ஜெகன் மட்டும் இறங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
திலீப், "ஏன்டா, இறங்காம வேடிக்கை பார்த்துட்டு இருக்க..?"
ஜெகன், "போங்க பாஸ், பசங்களை பார்க்கலாம் நான் வரமாட்டேன். நீங்களே பார்த்து பேசிட்டு வாங்க.." என்றான்.
திலீப் அவன் தலையில் ரெண்டு தட்டி, "வர வர உனக்கு கொழுப்பு கூடிப் போச்சு. வாடா உள்ள..." என இழுத்துச் போனான்.
உள்ளே வர்ணிகாவின் நண்பர்கள் நந்தகுமாரும் முகுந்தனும் காத்திருந்தனர்.
திலிப், "வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா?"
நந்தகுமார், "இல்லை சார், இப்ப தான் வந்தோம்.." என்றான். காபியை ஆர்டர் செய்து விட்டு பேச தொடங்கினர்.
நந்தகுமார், "சொல்லுங்க சார், என்ன விஷயமா பாக்கணும்னு சொன்னீங்க?"
திலிப், "வர்ணிகா விஷயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."
வர்ணிகாவின் பெயரைக் கேட்டதும் அவர்கள் இருவரும் ஆர்வமாகி, "வர்ணிகா எங்க இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா?" என்றனர் கோரசாக.
திலீப், "இல்லை, அவங்களை கண்டு பிடிக்கத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம். அதுக்குத்தான் உங்களை விசாரிக்க கூப்பிட்டேன்."
முகுந்தன், "நீங்க எதுக்கு வர்ணிகாவ தேடுறீங்க?" என்றான்.
திலீப், "என் டிடக்டிவ் ஏஜென்சி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். என்கிட்ட வர்ணிக்காவ கண்டுபிடிக்கச் சொல்லி பிராஜக்ட் வந்து இருக்கு.." என்றான்.
நந்தகுமார், "அவளை கண்டுபிடிக்கச் சொல்லி யார் சொன்னது?திலீப், "மினிஸ்டர் துரையரசன் பையன் பரத் அண்ட் தேவப்பிரகாஷ். இன்ஸ்டியூஷன் எம்.டி ஓட பொண்ணு மிருணாளினி.." என்றான். இதைக் கேட்டதும் அவர்கள் முகத்தில் யோசனை கோடுகள்.திலீப், "எனக்கு வர்ணிகா கேஸ்ல நிறைய குழப்பம் இருக்கு. இந்த கேஸ்ல நாங்க இன்வால்வ் ஆகியிருக்கிறது பிடிக்காமல் எங்கள துப்பாக்கியால சுட்டுக்கொல்ல முயற்சி எல்லாம் நடக்குது..!" என்றான்.
இதைக் கேட்டதும் அவர்கள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி. திலீப், "இந்த கேஸ்ல ஏதோ மர்மம் இருக்கு. கண்டிப்பா உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. நீங்க என்கிட்ட நடந்த விஷயத்தை சொன்னால் தான் எனக்கு வர்ணிகாவ தேட உதவியாயிருக்கும்.."
நந்தகுமார் யோசிக்க, திலீப், "யோசிக்காதீங்க மிஸ்டர் நந்தகுமார், நீங்கள் நடந்தத சொன்னா தான் நாங்க வர்ணிகாவ தேட முடியும். லேட்டாக லேட்டாக வர்ணிகாவோட உயிருக்கு தான் ஆபத்து. தேடப் போன எங்களையே சுட்டுக்கொள்ள ட்ரை பண்றாங்க. அப்ப வர்ணிகாவோட நிலைமையை யோசிச்சு பாருங்க.." என்றான்.
நந்தகுமார், "சார், நாங்க வர்ணிக்க காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கோம். போலீஸ் கிட்ட கூட உண்மையை சொல்லலை. ஆனால், உங்களை பார்த்தால் எனக்கு நம்பிக்கை வருது. வர்ணிகாவை பத்திரமா மீட்டுக்கொண்டு வந்துடுவீங்கன்ற நம்பிக்கை வருது..!" என்று கூறி நடந்த அனைத்தையும் விவரித்தான்.
நடந்ததைக் கேட்ட மூவருக்கும் அதிர்ச்சி. ஜெகன், "பாஸ், இது என்ன கொடுமையா? இருக்கு இப்படி எல்லாம் கூட நடக்குமா?" என்றான்.திலீப், "அதான் நடந்து இருக்கு.." என்றவன் நந்தகுமாரிடம், "இதுக்கெல்லாம் எவிடன்ஸ் இருக்கா?" என்றான்.
நந்தகுமார், "இருக்கு, ஆனால் அதெல்லாம் எங்க இருக்குன்னு வர்ணிகாவுக்கு தான் தெரியும். அவளைக் கண்டு பிடிச்சா தான் அந்த எவிடன்ஸ் கிடைக்கும். அப்புறம் இந்த பரத் எதுக்கு வர்ணிகாவ தேடுரான்னு தெரியலை..!" என்றான்.
திலீப் பதில் சொல்லும் முன் ஜெகன் முந்திக் கொண்டு, "அட என்ன சார்? உங்களுக்கு விஷயம் தெரியாதா? வர்ணிக்காவும் அந்த பரத்தும் லவ் பண்றாங்களாம்...?" என்று கூற, இதை கேட்டதும் திலீப்பின் இதயம் எகிறி குதித்து.
நந்தகுமார், "வாட்! வர்ணிகா அந்த பரத்தை காதலிக்கிறாளா? இருக்கவே இருக்காது. அவன் பொய் சொல்கிறான். இதுல வேற ஏதோ இருக்கு.."
ஜெகன், "எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?" என்றான்.
நந்தகுமார், "எனக்குத் தெரியும். வர்ணிகா என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட். எனக்குத் தெரியாமல் எதுவும் பண்ண மாட்டா.." என்றான்.

இதைக் கேட்டதும் திலீப்பின் மனதில் நிம்மதி பரவியது .ஜெகன் திலீப் காதில் யாருக்கும் கேட்காதவாறு, "பாஸ், கவலைப் படாதீங்க! அண்ணிக்கு லவ்வர் யாரும் இல்லை. அவங்க எனக்கு அண்ணி ஆகுறது கன்ஃபார்ம்..! என்றான்.


திலீப் ஜெகனை முறைத்தான். பின் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் கிளம்பினர்.
புது இடம் என்பதால் வர்ணிகாவிற்கு உறக்கம் வரவில்லை. சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள். எழுந்து பெட்டில் அமர்ந்து வெளியே போகலாமா? என யோசித்துக் கொண்டிருக்க,
அமுதா, "வர்ணிகா...! வர்ணிகா..!" என கதவைத் தட்டினார். வர்ணிகா எழுந்து சென்று கதவைத் திறக்க, அமுதா கையில் காபியுடன் நின்றிருந்தாள்.
அமுதா, "இந்தாம்மா காபி..." என்றவர் போய் குளிச்சிட்டு வாம்மா.." என்றார்.வர்ணிகா, "


அது..." எனத் தயங்க,
அமுதா, "என்னம்மா? ஏன் தயங்குற? இது உன் வீடு மாதிரி. தயங்காமல் என்ன வேணுமோ கேளு..!" என்றார்.
வர்ணிகா, "எனக்கு சேஞ்ச் பண்ண வேற ட்ரஸ் இல்லை!" என்றாள்.
அமுதா, "சாரிமா, மறந்துட்டேன். வசீ உனக்கு டிரஸ் வாங்கிட்டு வர ஆள் அனுப்பி இருக்கான். வந்ததுமே எடுத்துட்டு வந்து தரேன்..." என்றார்.
முத்து எழுந்து வர, வர்ணிகா அவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள் .சிறுது நேரத்தில் உடை வரவே வர்ணிகா குளித்து விட்டு வந்தாள். அமுதா இருவருக்கும் சாப்பாடு பரிமாறினார். வர்ணிகா வசீ எங்க என வினவ,
அமுதா, "அவன் ஒரு முக்கியமான வேலையா காலையில கிளம்பிட்டான்.." என்றார்.
வர்ணிகா, "அவர் சாப்பிடலையா?"
அமுதா, "அவன் எப்பவும் இப்படித்தான் . வேலைன்னு வந்துட்டா சாப்பாடு தூக்கம் கூட கிடையாது. அவனுக்கும் முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கணும்.." என்றார்.
வர்ணிகா, "பண்ண வேண்டியதுதான?" என்றாள்.
அமுதா, "பொண்ணு தேடிட்டு இருக்கோம்.." என்றார்.
வர்ணிகா, "ஓ..... அப்படியா! சரிம்ம.." என்றாள். வர்ணிகாவிற்கு அமுதாவிடமே பொழுது ஓடியது . வசீகரனிடம் உண்மையைக் கூறி உதவி கேட்கலாமா? என யோசித்துக்கொண்டிருந்தவள், வசீகரனிடம் அனைத்தையும் கூறிவிடலாம் என முடிவெடுத்து காத்திருந்தாள்.
ஆனால், மாலை ஆகியும் வசீகரன் வரவில்லை. முத்துவிடம் எப்போ வருவார் எனக் கேட்டாள்.
முத்து, "இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.." என்றவன், வர்ணிகாவின் வலது கையில் உள்ள நட்சத்திர வடிவ மச்சத்தைப் பார்த்துவிட்டான்.

மர்மங்கள் தொடரும்!!!!
 

Rajam

Well-known member
Member
யூகிக்க முடியலையே.
விறுவிறுப்பாக இருக்கு.
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom