வர்ணிகா 5

Janu Murugan

✍️
Writer


திலீப் பரத் பொய் சொல்வதாக கூற,

ஜெகன், "எப்படி பாஸ் பரத் சொல்றது பொய்ன்னு சொல்றீங்க?"‌ என்று வினவ, திலீப்புக்கு நேற்று இரவு தன் விட்டிற்கு சென்றவுடன் வர்ணிகாவின் பிரோவில் இருந்து எடுத்த டைரியில் படித்தது நினைவு வந்தது. வீட்டிற்கு வந்த திலீப் டைரியை படிக்க ஆரம்பித்தான்.

"இன்னைக்கு நாள் என்னால மறக்கவே முடியாது . ஏன்னா நானும் பவியும் இன்னைக்கு காலையில ஷாப்பிங் போயிருந்தோம். பவி கிரவுண்ட் ப்ளோரில் திங்ஸ் வாங்கிட்டு இருந்தா. நான் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போறேன்னு அவகிட்ட சொல்லிட்டு லிஃப்ட்ல போனேன். எங்கூட லிஃப்ட்ல யாரும் வரல. நான் மட்டும் தனியா போனேன் லிஃப்ட்ல போயிட்டு இருக்கும்போது எனக்கு தோணுச்சு. இந்த லிஃப்ட் திடீர்னு நின்றுவிட்டால் என்ன பண்ணுவது? என்று. நான் கத்துனா கூட வெளியே கேட்காது. அவ்ளோ பெரிய கதவு இது.

ஒருவேளை படத்துல வர்ற மாதிரி ஹீரோ வந்து என்ன காப்பாற்றுவாரா? இல்ல அப்படி எல்லாம் இல்ல நிஜ வாழ்க்கையில் நடக்க சான்ஸ் இல்ல! இப்படி எல்லாம் நான் நெனச்சுட்டு இருக்கும்போதே லிஃப்ட் நின்னுருச்சு . எனக்கு லைட்டா பயம் வந்துடுச்சு. வெளியே கூட்டம் கூடி இருக்குன்னு நினைக்கிறேன். பவி இன்னேரம் பயந்து இருப்பா. அவ ஏற்கனவே பயந்த சுபாவம். இப்ப சொல்லவா வேணும்? அழுதுருப்பா.

வெளியே இருந்து யாரோ பேசினார்கள். "லிஃப்ட் சரி பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்" என்று சொன்னங்க. நானும் அவங்க பேச்சை நம்பி உள்ளேயே வெயிட் பண்ணேன். ஆனா ரொம்ப நேரம் ஆகியும் லிஃப்ட் சரி பண்ணவே இல்ல . வெளியே போனதும் அந்த லிஃப்ட் ஆப்பரேட்டர் தலையில் ஒரு கொட்டு கொட்டனும்னு தோணுச்சு. எனக்கு வியர்க்க ஆரம்பிச்சிருச்சு. நான் மயக்கமாகி விட்டேன்.

அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலை. கண்முழிச்சு பார்க்கும்போது ஹாஸ்பிடல்ல இருந்தேன். என் பக்கத்துல அழுது வடிந்த முகத்தோட பவி உட்கார்ந்து இருந்தா. பாவம் பவி ரொம்ப பயந்துட்டா. நான் கண் முழிச்சதும் தான் அவளுக்கு நிம்மதி. அப்பவே என்ன ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜாகி வீட்டுக்கு கூட்டீட்டு போய்ட்டா. நான் மயக்கம் ஆகிவிட்ட பிறகு என்ன நடந்தது என்று பவி கிட்ட கேட்டேன். யாரோ ஒருத்தர் ஹீரோ மாதிரி வந்து என்னை காப்பாற்றினார் என்று சொன்னாள். அவர் யாருன்னு தெரியுமா என்று கேட்டேன். லூசு பதட்டத்துல யாருன்னு கேட்க மறந்து விட்டாள்.

அவரை நேரில் பார்த்து ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல. எனக்கு வருத்தம். அப்புறம் அத பத்தி நினைக்கலை. ஆனா இந்த பவி லூசு தான் அவர் அப்படி இருந்தாரு, இப்படி இருந்தாரு என்று சொல்லி என் மனசுல ஆசைய வளர்த்திட்டா. அவ சொன்னதெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மாநிறமாக இருப்பார், சின்னகண்ணு எடுப்பான நாசி அழுத்தமான உதடுகள். கூர்மையான பார்வை நெற்றியில் புரளும் கேசம். பார்க்கவே போலீஸ் மாதிரி இருந்தார் என்று சொன்னாள்.

அவ பேச்சைக் கேட்டு நானும் சென்னையில் இருக்க எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டேன். ஆனால் கண்டு பிடிச்ச பாடு இல்ல. ரெண்டு வருஷமா அவரை தேடிட்டு இருக்கேன். எனக்காக ரத்தம் எல்லாம் சிந்தி இருக்காரு. என்ன காப்பாற்றும் போது அவர் கையில் காயம் ஆகிடுச்சு. அவரை நேர்ல பார்க்கும்போது ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும், என்னன்னு நான் உன்கிட்ட சொல்ல மாட்டேன். அப்புறம் அவரை கூடிய சீக்கிரம் மீட் பண்ண போறேன் என உள் மனசு சொல்லுது."

ஜெகன், "பாஸ் என்ன பாஸ்? பகலிலே தூங்குறீங்களா?" என ஜெகன் உலுக்க, திலீப் நினைவு திரும்பினான். அந்த நிகழ்வை நினைத்து திலீப் தனது இடது கையில் இருந்தத தழும்பை பார்த்தான்.

ஜெகன் வீணாவிடம், "வீணா, நம்ம பாஸ்க்கு ஏதோ ஆகிருச்சுனு நினைக்கிறேன். திடீர் திடீர்னு ஏதோ ஆகிடுறாரு.." என முணுமுணுத்தான்.

இது திலீப் காதிலும் விழுந்தது. திலீப் ஜெகன் தலையில் தட்டியவன், "நீ சொன்னது என் காதில் விழுந்துருச்சு.." என்றான். ஜெகன் ஈஈஈ.. என இளித்து சமாளித்தான்.

திலீப், "டேய்! ரொம்ப சிரிக்காத! பல்லு கொட்டிட போகுது. அவன் சொல்வறலேயே தெரியுது, அவன் பொய் சொல்றான்னு. அது மட்டும் இல்லாம நானே அந்த பொண்ணோட டைரியை படிச்சேன். அதுல அவ யாரையும் லவ் பண்றதா எழுதவேயில்லை.." என்றான்.

ஜெகன் பொங்கி எழுந்து, "என்னை விட்டுட்டு நீங்க மட்டும் படிச்சீங்களா?"

வீணா, "டேய்! ரொம்ப பொங்காத. ஒரு பொண்ணோட டைரியை படிக்க இப்படி துள்ளுற? மூடிட்டு இரு.." என்றாள். ஜெகன் வாயை மூடி விட்டான்.

திலீப், "சரி, வாங்க நாம போய் வர்ணிக்காவோட ஃப்ரண்ட்ஸ மீட் பண்ணனும்.." என்றான். மூவரும் வர்ணிகாவின் நண்பர்களை சந்திக்க ஜீப்பில் கிளம்பினர்.

வர்ணிகா ஏறியதும் காரை வேகமாக ஓட்டினான் வசீகரன். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தியவன் வாட்டர் பாட்டிலை எடுத்து வர்ணிகாவிடம் நீட்டினான். வர்ணிகாவிற்கும் அது தேவை என்று தோன்றியதால் வாங்கி தாகம் தீரும் மட்டும் குடித்தாள்.

வசீகரன், "யாருமா நீ? ஏன் அவன் உன்னை துரத்துறான்? உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை?" என்று கேள்விகளை அடுக்கினான்.

அவள், "சார், என் பெயர் வர்ணிகா. நான் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட். இப்ப என்ன துரத்திட்டு வந்தானே அவன் பேரு கபிலன். அவன் என்னோட ஃப்ரண்டு தான். அவன் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணான். நான் எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். அப்புறம் நாம நண்பர்களா இருப்போம்னு சொன்னான். நானும் அவன் கூட நல்ல பிரண்டா தான் பழகினேன். ஆனால் அவன் என்ன கடத்திட்டு போய் கல்யாணம் பண்ண ட்ரை பண்ணான். நான் அவகிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன்."

வசீகரன், "இப்போ என்ன பண்றது மா? உன் வீட்டு அட்ரஸ் சொல்லு. நான் உன்னை பத்திரமா கொண்டு போய் விடுறன்.." என்றான்.

வர்ணிகா, "இல்ல சார், அது சேப் இல்ல. எனக்கு அப்பா அம்மா யாருமே இல்ல. நான் ஒரு அனாதை. நானும் என் ஃப்ரெண்டும் தனியாக ரூம் எடுத்து தங்கி இருக்கோம்.." என்றாள். இதை கேட்டதும் வசீகரனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

வசீகரன் சிறிது நேரம் யோசித்துவிட்டு, "நீ என்கூட என் வீட்டுக்கு வர்றீயா? அது உனக்கு பாதுகாப்பாக இருக்கும்.." என்று அவன் கூற, அவள் யோசித்தாள்.

வசீகரன், "என் வீட்டில், என் அம்மா, என் தம்பி எல்லாரும் இருக்காங்க. இப்போதைக்கு எங்க வீட்ல தங்கிகோ. என் ஃப்ரண்டு ஒருத்தன் போலீசா இருக்கான். அவன்கிட்ட சொல்லி உனக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்றேன்."

வர்ணிகா, 'இதைவிட்டா நமக்கு வேற வழி இல்ல. இப்போதைக்கு இதுதான் பாதுகாப்பு..' என நினைத்தவள், "சரி வரேன் சார்..." என்றாள்.

வசீகரன், "சரிமா, என்னை சார்னு எல்லாம் கூப்பிடாத. என் பெயர் வசீகரன். நீ என் பெயர் சொல்லியே கூப்பிடலாம்."

வர்ணிகா, "அது எப்படி சார்? உங்களுக்கு என்னை விட வயது கூட இருக்கும். நான் எப்படி பெயர் சொல்லி கூப்பிடுறது?"

வசீகரன், "பரவாயில்ல! பேர் சொல்லியே கூப்பிடு.."

"ஓகே சார்.." என்றவள், நாக்கை கடித்து விட்டு, "ஓகே வசீ..." என்றாள். சில மணி நேரம் பயணத்தில் இருவரும் வசீகரனின் வீட்டை அடைந்தனர்.

வர்ணிகா வசீகரனின் வீட்டை பார்த்து அதிசயித்து விட்டாள். அவன் வீடு என்றதும் சிறியதாக எதிர்பார்த்து வந்தாள். ஆனால் இது சின்ன சைஸ் பங்களா மாதிரி இருந்தது அங்கே நிறைய ஆட்கள் இருந்தனர் அவர்களைப் பார்த்ததும் பாதுகாப்பான இடத்திற்கு தான் வந்திருக்கோம் என நினைத்து நிம்மதி அடைந்தாள்.

வசீகரன், "ஏன் இங்கேயே நிக்குற? வா போகலாம்.." என்று உள்ளே அழைத்துச்சென்றான்.

வசீகரனிற்காக ஹாலிலேயே காத்திருந்த அமுதா வர்ணிகா வருவதை பார்த்ததும் நெற்றியை சுருக்கி யோசித்தார்.

வசீகரன், "அம்மா, இவங்க வர்ணிகா..." நடந்தவற்றை கூறினான். அவளுக்கு அம்மா அப்பா என யாருமே இல்லை என தெரிந்த உடனே அமுதாவிற்கு மனம் இளகியது. அவள் தலையை பரிவுடன் தடவியவர், "கவலைப்படாதமா.. இது உன் வீடு மாதிரி. உனக்கு என்ன வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளு.." என்றவர், "இரண்டு பேரும் இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. கையை அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்.." என்றார்.

அமுதா, "நீ இந்த ரூமை யூஸ் பண்ணிக்கோமா.." என்று வர்ணிகாவிடம் கூறினார்.‌ இருவரும் சாப்பிட அமர, அவர் பறிமாறினார்.

வசீகரன், "அம்மா, எங்க முத்து?"

அமுதா, "முத்து..." என அழைக்க,

"இதோ வரேன் மா..." என டான்ஸ் ஆடிக் கொண்டே வந்தவன், வர்ணிகாவை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான். அவளுக்கு அவன் செயலைப் பார்த்து சிரிப்பு வந்தது.

"ஐ அண்ணி! அண்ணா அண்ணியை இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டீங்களே! அண்ணா அண்ணி சூப்பரா இருக்காங்க..." என்று குதூகலித்தான். வசீகரன் முத்துவை முறைத்தான்.

அமுதா, "இது என் ரெண்டாவது பையன். முத்துக்குமரன் எப்ப பார்த்தாலும் இப்படித்தான் ஏதாவது பண்ணி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்.." என்றார். முத்து வர்ணிகாவை பார்த்து அசடு வழிந்தான்.

வசீகரன், "இது என் ஃபிரெண்ட். கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுல தங்கப் போறாங்க..." என்றான்.

முத்து வர்ணிகாவிடம், "ஹாய், ஐ ஆம் முத்துக்குமரன்.." என்றான்.

வர்ணிகா, "என் பெயர் வர்ணிகா.." என்றாள்.

முத்து, "நான் உங்களை எப்படி கூப்பிட்றது?"

அவள், "பேர் சொல்லியே கூப்பிடு. அப்படி இல்லன்னா அக்கான்னு கூப்பிடு.." என்றாள்.

முத்து, "அக்கா வேண்டாம். நான் வர்ணிகா என்றே கூப்பிடுறேன்.." என்றான்.

வர்ணிகா, "உன் இஷ்டம்..." என்றாள். பின் அனைவரும் சாப்பிட்டு உறங்க சென்றனர்.

வரவிற்கு மனதில் 1000 யோசனைகள். பேசாமல் வசீகரன் கிட்டையே நடந்ததை எல்லாம் சொல்லி உதவி கேட்கலாமா? என்று யோசித்தவள், காலையில பேசிக்கலாம் என நினைத்து உறங்கச் சென்றுவிட்டாள்.

அவினாஷ் டி.ஐ.ஜி அலுவலகத்தில், ஐ.ஜியிடம் பேசிக்கொண்டிருந்தான். அவினாஷ், "திரும்பவும் வேற ஒரு டாக்டர்கிட்ட போஸ்ட்மாடம் பண்ணனும் சார். எனக்கு இந்த எஸ்.ஐ டெத் கேஸ்ல நிறைய சந்தேகங்கள் இருக்கு சார். நாலு பேருமே ஹார்ட் அட்டாக்கில் இறந்து இருக்காங்க. ஆனால் இந்த எஸ்.ஐ க்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸே இல்லை. இவருக்கு ரொம்ப கொஞ்சம் வயது. அதுமட்டுமில்லாம இவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.." என்றான்.

ஐ.ஜி, "ஓகே அவினாஷ். ஆனால் இதை ஏன் சீக்ரெட்டா பண்ணனும்னு சொல்றீங்க?"

அவினாஷ், "அந்த டாக்டர்கிட்ட நான் பேசும்போது ரொம்ப கேஷுவலா பேசினார். அவர் கண்ணுல உண்மை தெரிந்தது. அவருக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லை. வேற யாரோ இதுல சம்மந்தப்பட்டு இருக்காங்க. அவங்க நம்மளை வாட்ச் பண்ணிக்கிட்டே இருப்பாங்க அவங்க அலார்ட் ஆகாம இருக்கத்தான் நான் சீக்ரெட்டாப் பண்றேன்."

ஐ.ஜி, "ஓகே அவினாஷ், சீக்கிரம் முடிக்க முயற்சி பண்ணுங்க. நான் உங்களுக்கு ஆர்டர் ரெடி பண்ண சொல்றேன்.."

அவினாஷ், "ஓகே சார்.." என்று விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். வெளியே வந்து ஜீப்பில் ஏற அவனது போன் ரிங்கானது. அதை எடுத்துப் பார்த்தவன் இதழ்களில்
குறுநகை தோன்றியது.


மர்மங்கள் தொடரும்!!
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom