வர்ணிகா 31

Janu Murugan

✍️
Writer
வர்ணிகா : 31

மாலை நெருங்கும் வேளையில் அவர்கள் கௌதமின் வீட்டை வந்தடைந்தனர். திலீப் முதலாவதாக இறங்கி சென்றான். சிறிது நேரத்திலே சகஜமாகி இருந்த வர்ணிகா அவன் பின்னே இறங்கி சென்றாள்.

வீணா இறங்க முற்படும் போது காலில் வாகனம் இடித்து விட, வலியில் "அம்மா.." என்று காலை பிடித்து அமர்ந்துவிட்டாள். எல்லோரும் பதறி செல்ல, ஜெகன் அதீத பதட்டத்துடன் சென்று அவளது காலை பிடித்து காயத்தை ஆராயந்தவன், "சின்ன அடிதான். அந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுங்க கட்டு போடலாம்.." என்றான். நந்து முதலுதவி பெட்டியை எடுத்து தர, ஜெகன் மருந்து வைத்து கட்டு போட ஆரம்பித்தான்.

இவை எவையும் அறியாத திலீப்பும் வர்ணிகாவும் வாசலை அடைய, திலீப் அழைப்பு மணியை அழுத்தினான்.

சமையல் அறையில் இருந்து நித்திலா, "கௌதம், யாரோ வந்திருக்காங்க, போய் பாரு.." என்று குரல் கொடுக்க, தனது அலுவலக அறையில் கோப்புகளை புரட்டி வேலையில் ஈடு பட்டிருந்த கௌதம், "ஹான்.. போறோன்..." என்று கூறிவிட்டு கதவை திறந்தவன், அதிர்ச்சியாகி நின்றுவிட்டான்.

திலீப், "என்னடா..? இப்படி ஷாக்காகி நிற்கிற?" என்க, திலீப் அருகிலிருந்த வர்ணிகாவை பார்த்தவன், மனதினுள், 'ஆஹா! இவனும் இந்த காதல்ல சிக்கிட்டான் போல!' என நினைத்தவன், "மச்சான், நீ எதுக்கு வந்திருக்கேன்னு எனக்கு புரிஞ்சுப் போச்சு..!" என்க, திலீப்பும் வர்ணிகாவும் இவனுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ந்து பார்க்க,

கௌதம், "எல்லாம் லவ் மேட்டர் தான? எனக்கு தெரியும். நீ ஒன்னும் கவலைப்படாத! நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.." என்க, திலீப் பதறி ஏதோ சொல்ல வர, கௌதம் அதனை தடுத்து, "நீ ஒன்னும் சொல்ல வேணாம்! எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. என்ன அம்மா அப்பா ஒத்துக்கலை.. அவ்ளோதான? எந்த வீட்டுல தான் காதலை ஏத்துக்கிறாங்க. போகப் போக மனசு மாறிடுவாங்க. நீ எதை பத்தியும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத! நமக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல நிறைய ஆளிருக்கு. நாளைக்கே கல்யாணத்தை முடிச்சிடலாம்.." என்று தன் போக்கில் பேசிக்கொண்டு செல்ல, வர்ணிகாவும் திலீப்பும் அவனை ஏகத்திற்க்கும் முறைத்தனர்.

நடந்த சம்பாஷனைகளை சமையல் அறையில் இருந்து கேட்ட நிலா வேகமாக வந்து அவன் தலையில் கொட்ட, கௌதம் பேசுவதை நிறுத்திவிட்டு, "ஏன்மா?" என்று அவளைப் பார்க்க,

நிலா, "என்ன ஏன்மா? அவசரை குடுக்கை! அவங்களை எதாவது பேசவிட்றியா? அவங்களை பார்த்தா லவ்வர்ஸ் மாதிரியா தெரியுது?" என்று திட்ட,

திலீப், "இன்னும் நல்லா நாலு போடுமா.. அப்பதான் பேசுறதை நிறுத்துவான்.." என்று கோபமாக கூற,

கௌதம், "அப்போ நீங்க லவ்வர்ஸ் இல்லையா?" என்று கேட்க, இருவரும் ஓரே போல் இல்லை என்று தலையாட்டினர்.

கௌதம், "இதை முதல்லயே சொல்ல வேண்டியதுதான? தேவையில்லாம பேசி என் எனர்ஜிய குறைஞ்சிடுச்சு.." என்று கேட்க,

திலீப் பதிலுரைப்பதற்குள் நிலா, "நீ எங்க அவுங்களை சொல்ல விட்ட?" என்றவள், "வீட்டுக்கு வந்தவங்களை வாசல்லயே நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க..?" என்று திட்டவிட்டு, "உள்ள வாங்க.." என்று அவர்களை வரவேற்றாள். இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும், கௌதம் கதவை பூட்ட, வீணாவிற்கு கட்டு போட்டுவிட்டு வந்தவர்கள் கதவை தட்ட, கௌதம் பூட்டிய கதவை திறக்காமல், "நிலாம்மா, நான் சொன்னேன்ல பாரு.. அவங்க லவ்வர்ஸ்தான். அவங்களை தேடிதான் ஆளுங்க வந்திருக்காங்க.." என்றவன், திலீப்பிடம், "மச்சான், நீ தங்கச்சிய கூட்டிக்கிட்டு போய் ரூம்ல ஒளிஞ்சுக்கோ! நான் அவங்களை சமாளிச்சுக்கிறேன்!" என்க,

திலீப் ஏகத்திற்க்கும் கடுப்பாகி, "ப்ரெண்ட்னு கூட பார்க்க மாட்டேன். எதாவது சொல்லிடப் போறேன்.." என்றவன், கதவை திறக்க, எல்லோரும் உள்ள வந்தனர்.

அனைவரையும் கண்ட கௌதம், "என்னடா! ஒரு ஊரையே கூட்டிட்டு வந்திருக்க?" என்க,

"நான் சொல்றேன்.." என்று ஜெகன் முந்திக்கொண்டு வர, வசீகரன், "நீ பேசாம இரு. நான் சொல்றேன்.." என்றவன், "அது, நீ தங்கச்சியை ரெம்ப கொடுமை பண்றியாம். தங்கச்சி எனக்கு போன் பண்ணி நேத்து அழுதுச்சு. அதான் இவங்க எல்லாரையும் பஞ்சாயத்து பண்ண கூட்டிட்டு வந்திருக்கேன். நாங்க பாத்து பண்ணி வச்ச கல்யாணம். அதுல பிரச்சினை வந்தா நாங்க தான பொறுப்பு. இவங்க மகளீர் அமைப்போட தலைவி, இவங்க மனித உரிமை ஆணையத்துல இருந்து வந்திருக்காங்க.." என்று சரமாரியாக பொய்யுரைக்க, அவன் கூறியதை நம்பிய கௌதம் நெஞ்சில் கைவைத்து "நிலாம்மா, இவங்க சொல்றதெல்லாம் உண்மையா? நான் உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்குகேன். நீ சொல்லி எந்த வேலை நான் செய்யாமல் இருந்திருக்கேன்? வீட்டை சுத்தம் பண்றதுல இருந்து, பாத்திரம் கழுவுற வரை எல்லாமே செஞ்சிட்டு இருக்கேன். ஏதோ ஒரு நாள் டாமிக்கிட்ட வாய்விட்டு புலம்பிட்டேன். அதுக்காக இப்படியா?" என்று கேட்க, அவன் கூறிய விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. வசீகரன் கௌதமிடம் வம்பிழுப்பது சகஜம். ஆதலால் நிலாவும் பேசவில்லை.

கௌதம், "என்னடா! எல்லாரும் சிரிக்கிறாங்க.." எனப் பார்த்தவன், பின்பு, 'ஓ..! இது இவனோட வேலையா? இப்படி அசிங்கப் பட்டுட்டோமே!' என நினைத்து, வசீகரனை முறைத்து, "அப்போ நானாதான் எல்லாத்தையும் உறறிட்டேனா?" என்றான்.

நிலா, "ஆமா! நீயேதான் உன்னை அசிங்கப்படுத்திட்ட!" என்க, கௌதம் பேச்சை திசைதிருப்பும் பொருட்டு, "அவி, இப்போ எதுக்கு எல்லாரும் சேர்ந்து வந்திருக்கிங்க?" என்றான்.

அவினாஷ், "சொல்றேன். அதுக்கு முன்னாடி ரெம்ப டையர்டா இருக்கு. நிலா, காஃபி எடுத்துட்டு வாமா.." என்க,

நிலா, "இதோ போட்டு கொண்டு வர்றேன்.." என்று சமையலறையில் நுழைந்தாள். நிலா வருவதுற்குள் அவினாஷ் எல்லோரையும் கௌதமிற்கு அறிமுகம் செய்து முடித்திருந்தான்.

நிலா கையில் காஃபி ட்ரேயுடன் வந்தவள், திலீப்பிடம், "அண்ணா எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கிங்க... கடைசியா நீங்க எப்போ வந்திங்க? மாசத்துல ஒரு நாளாவது வந்திட்டு போக வேண்டியது தான? அவங்க எல்லாரும் தான் வேற ஊர்ல இருக்காங்க.. உங்களுக்கு என்ன?" என்றாள்.

கௌதம், "அதான ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோமே! உயிரோட இருக்கானா இல்லை செத்துட்டானானு கூட பார்க்க வரமாட்டிங்களா?" என்க, நிலா அவனை முறைத்துவிட்டு, திலீப்பிற்கு காஃபியை கொடுத்தாள்.

கௌதம் மனதில், 'டேய் கௌதம்! உனக்கு இன்னைக்கு நாக்குல சனி, வாயை வச்சிக்கிட்டு பேசாம இரு..' என நினைத்து விட்டு, நிலாவை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து, "சும்மாவே விளையாட்டுக்கு சொன்னேன்.." என சமாளித்தான்.
கௌதமின் செயலை பார்த்து சிரித்து கொண்டே காஃபி கோப்பையை எடுத்த திலீப், "இனிமேல் அடிக்கடி வர்றேன் மா.." என்றான்.

எல்லோரும் காஃபி அருந்தி முடித்ததும், அவினாஷ், "கௌதம், நாங்க இங்க ஒரு கேஸ் சம்மந்தமா பேச வந்திருக்கோம். நீ தான் அந்த கேஸ்ல வாதாட போற.." என்றவன், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.

அவினாஷ் கூறியவற்றை கேட்ட கௌதம், "இது என்னடா அநியாயமா இருக்கு. இப்பிடி கூடவா மனுசங்க இருக்காங்க? அந்த துரையரசனை சும்மா விடக்கூடாது! நான் நாளைக்கே கோர்ட்ல கேஸ் பைல் பண்றேன். இருக்க ஆதாரத்தை எல்லாம் வச்சு அந்தாள வெளியேவே வரமுடியாத அளவுக்கு உள்ள தள்ளுறேன்.." என்று கோபமாக பேச,

அவினாஷ், "அதுக்காக தான் நாங்க இங்க வந்திருக்கோம். வழியில எங்களை அட்டாக் பண்ண ஆளுங்க வந்தாங்க.." என்றான்.

நிலா, "பாவம்! சின்ன குழந்தைங்க, எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க? எப்படி கட்சிதமா பிளான் பண்ணி இருக்காங்க. அந்த தேவப்பிரகாஷை நல்லவருன்னு நினைச்சிட்டு இருந்தேன். எப்படிப்பட்ட வேலையை பார்த்திருக்காரு.." என்றாள்.

அவினாஷ், "நம்ம பாக்கிறது எல்லாம் உண்மை கிடையாது! நிறைய பேர் இப்படி தான் இருக்காங்க.." என்றவன், "இவங்க எல்லாரும் தங்குறதுக்கு பாதுகாப்பான இடம் வேணும்.." என்க,

கௌதம், "நம்ம வீட்டுலயே தங்கலாம். எல்லாரும் தங்க இடம் இருக்கு. பாதுகாப்பான இடமும் கூட...!" என்றான்.

அவினாஷ், "இல்லைடா! அது சரியா வராது. நாளைக்கு நீ கோர்ட்ல கைஸ் பைல் பண்ணப் பிறகு உன்னையும் அவங்க ஆள் வச்சு கண்காணிக்க ஆரம்பிச்சுடுவாங்க. நாங்க இங்க இருந்தா கண்டிப்பா அவங்க கண்டு பிடிச்சிடுவாங்க.." என்க, கௌதம் பேச ஆரம்பிக்கும் முன் நிலா, "அண்ணா, அப்போ என் அம்மா வீட்டுல தங்கிக்கிறிங்களா?" என்க,

ஜெகன், "உங்க வீடே பாதுகாப்பு இல்லைன்னு சொல்றாங்க அண்ணி. இதுல உங்க அம்மா வீட்லயா? உங்க அம்மா அப்பாக்கு எங்களால அவங்களுக்கு எதாவது பிரச்சினை வந்துட்டா என்னப் பண்றது?" என்றான்.

ஜெகன் தலையில் தட்டிய திலீப், "முந்திரி கொட்டை! எதுவுமே தெரியாம பேசக்கூடாது. அவங்கப்பா யாருனு தெரியுமா?" என்க,

ஜெகன், "யாரு? பெரிய மினிஸ்டரா?" என்று கேலியுடன் கேட்க, திலீப் ஆமாமென தலையாட்ட, ஜெகன் ஜெர்க்காகி நிலாவை பார்த்து, 'உண்மையா?' என கண்களால் கேட்க, நிலா சிரிப்புடன், "ஆமாம்! எங்கப்பா வருவாய் துறை அமைச்சர் ஜெயகோபாலன்.." என்றாள்.

வீணா அவன் காதில், "அவசரப்பட்டு பல்பு வாங்கிட்டியே!" என்று கிண்டலடிக்க அவளை முறைத்து, பின் அமைதியாகிவிட்டான்.

அவினாஷ், "நிலா, சொல்ற மாதிரி அங்கிள் வீட்லயே தங்கிக்கலாம். அது தான் பாதுகாப்பான இடம். யாரும் வர முடியாது!" என்க,

வர்ணிகா, "முதல்ல அம்முவ மீட்கணுமே!" என்று கேட்டாள்.

அவினாஷ், "நமக்கு எல்லாம்
தெரிஞ்ச உடனேயே அவங்க குழந்தைங்களை இடம் மாத்திருப்பாங்க. கேஸ் கோர்ட்ல பைல் பண்ண பிறகு விசாரணைல தான் அவங்க குழந்தைங்களை எங்க வச்சிருக்காங்கன்னு தெரியும். அதுக்கு முன்னாடி நான் அந்த இடத்தை கண்டுபிடிக்க முயற்சி பண்றேன். கவலைப்படாதிங்க, அவங்க குழந்தையை எதுவும் பண்ண மாட்டாங்க!" என ஆறுதல் கூறினான்.

நிலா, "நான் அப்பாக்கிட்ட இப்போவே பேசிட்றேன்.." என்று தொலைபேசியை எடுத்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

ஜெகன் கௌதமிடம், "பாஸ், உங்களுக்கு லவ் மேரேஜா?" என்க, கௌதம் ஆமா என்று தலையாட்டினான்.

ஜெகன், "மினிஸ்டர் பொண்ணை எப்படி காதலிச்சு கல்யாணம் பண்ணிங்க? வீட்ல ஒத்துட்டு இருக்க மாட்டாங்களே?" என்க,

கௌதம், "ஆமா! ஒத்துக்கலை. பெரிய போராட்டம் சேஸிங் எல்லாம் பண்ணி தான் இவங்க எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. இப்போதான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் அவங்க வீட்ல பேச ஆரம்பிச்சாங்க..." என்றான்.

ஜெகன், "பரவாயில்லை! காதலுக்காக பெரிய போராட்டமே பண்ணி இருப்பிங்க போல?"

கௌதம், "ஆமா! ஆனால் அதை நினைச்சு இப்போ வருத்தப்பட்றேன். கல்யாணம் ஆகிட்டப்புறம் அதை விட பெரிய போராட்டமா இருக்கு.." என்று வருத்தப்பட்டு திரும்பியவன், தன் பின்னே முறைத்த படி நின்றிருந்த நிலாவை பார்த்து திரு திரு வென விழித்து, தன் முன்னே உள்ளவர்களை பார்க்க, அவர்கள் கௌதமை பார்த்து சிரித்தனர்.

கௌதம், "யூ டூ புரூட்டஸ்?" என்ற ரீதியில் எல்லோரையும் பார்த்து, பின் மீண்டும் தனது ஆயுதமான அசட்டு சிரிப்பை உதிர்க்க, அவனே திட்ட வந்த நிலா, தனது சேலையை யாரோ இழுப்பதை உணர்ந்து திரும்பி பார்க்க, அங்க தூங்கி எழுந்து வந்த தியா தனது வீட்டில் வந்தாருந்தவர்களை பார்த்து முழித்தாள்.

தியாவை கையில் தூக்கிய நிலா, "அண்ணா, பாருங்க.. நீங்க ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை வந்து எம் பொண்ணுக்கு உங்களை அடையாளம் தெரியாம போச்சு..." என்று குறைபட்டு கொண்டவள், தியாவிற்கு எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

திலீப் தியாவை நோக்கி கைய நீட்ட, அவனை அடையாளம் கண்டு கொண்ட தியா, "மாமா.." என்று கூறி அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.

நிலா, "அண்ணா, அப்பாக் கிட்ட எல்லா விவரமும் சொல்லிட்டேன். உங்களுக்கு தங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்றேனு சொன்னாங்க. நீங்க எந்த உதவினாலும் தயங்காம அப்பாக்கிட்ட கேளுங்க.." என்க, சரியென தலையை ஆட்டியவன், "சரிம்மா, நாங்க கிளம்புறோம்.." என்றான்.

கௌதம், "சரிடா! பாத்து போங்க. ரீச் ஆகிட்டதும் ஒரு கால் பண்ணு. நான் கேஸ் பைல் பண்ணிட்டு ஹியரிங் எப்போனு உங்களுக்கு சொல்றேன்.." என்றான். பின் எல்லோரும் விடைபெற்று நிலாவின் வீட்டை நோக்கி கிளம்பினர்.


தொடரும்...
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom