வர்ணிகா 10 | Ezhilanbu Novels/Nandhavanam

வர்ணிகா 10

Janu Murugan

✍️
Writer
வர்ணிகா : 10


வசீகரனும் முத்துவும் பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக சாப்பிட்டனர். பின் தன் தாயுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

முத்து, "அண்ணா, அண்ணி இன்னும் சாப்பிடல."

அமுதா, "நான் போயி கூட்டீட்டு வரேன்.." என்று வர்ணிகா அறைக்குச் சென்றார். அவள் அறையில் இல்லை. வேறு எங்காவது வெளியில் சென்று இருக்கலாம் என தேடிச் சென்றார். ஆனால் அவளை எங்கே தேடியும் காணவில்லை.

அமுதா, "வசீ, வர்ணிகாவை காணோம்" என்றார்.

வசீகரன், "அம்மா, இங்கதான் எங்கயாவது இருப்பா, தோட்டத்தில் பார்த்தீங்களா?" எனக்கேட்க, அமுதா, "இல்லடா, நான் எல்லா இடத்திலேயும் தேடிட்டேன், அவள காணோம்.." என்றார்.

வசீகரன் எல்லா இடத்திலும் தேடி விட்டு வாசலுக்கு சென்றான். வாட்ச்மேன், "தம்பி, என்ன ஆச்சு..? யாரைத் தேடுகிறீங்க..?" என கேட்க,

வசீகரன், "என் கூட ஒரு பொண்ணு வந்தாங்கல்ல, அவங்க காணோம். அதான் தேடிட்டு இருக்கேன்" என்றான்.


வாட்ச்மேன், "தம்பி, அந்த பொண்ணு இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வெளிய போச்சு" என்றார்.

வசீகரன், "வெளியே போனாங்களா..? எங்க போனாங்க?" என்று கேட்டான்.

வாட்ச்மேன், "சும்மா காத்து வாங்க போறேன்னு சொல்லுச்சு தம்பி. நான் வசீ தம்பிகிட்ட சொல்லீட்டுதான் போறீயாம்மான்னு கேட்டேன். ஆமான்னு சொல்லுச்சு தம்பி."

வசீகரன், 'இந்த நேரத்துல காத்து வாங்கப் போனாளா? ஏதோ தப்பாக இருக்கு' என்று ஜீப்பை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல போக முத்து, "அண்ணா, நானும் வரேன்" என்றான். இருவரும் வர்ணிகாவை தேடிச் சென்றனர்.

அவர்களின் சண்டையை பார்த்து சிரித்த அவினாஷ், "திலீப், சூப்பர் அசிஸ்டண்ட்ஸ் வச்சிருக்கடா. எப்பவுமே சிரிச்சுகிட்டே வேலை பார்க்கலாம்."

திலீப், "ஆமா! எப்ப பார்த்தாலும் எதையாவது பண்ணி என்ன சிரிக்க வைச்சுட்டே இருப்பாங்க."

தாட்சாயினி, "சமைத்து முடிச்சுட்டேன்.." என்று கூறிக்கொண்டே வெளியே வந்தவள், ஜெகன் வீணாவை பார்த்து கேள்வியாக நோக்கினாள்.

அவினாஷ், "இது ஜெகன் அண்ட் வீணா, திலீபப்போட அசிஸ்டன்ஸ்" என்றான்.

அவினாஷ், "இது தாட்சா..." எனக் கூறிக்கொண்டிருக்கும் போதே ஜெகன் இடையில் புகுந்து, "அண்ணியா..?" எனக்கேட்டான். அவினாஷ் அவனை ஆச்சரியமாக பார்க்க, ஜெகன், "உங்களுக்கு பொருத்தமான ஜோடி அவங்க தான்" என்றான்.

அவினாஷ், "நல்லா பேசுற நீ."

தாட்சாயினி, "நான் நாம நாலு பேருக்கு மட்டும்தான் சமைச்சிருக்கேன்" என்றாள்.


ஜெகன், "அப்போ எனக்கு சோறு இல்லையா?"

வீணா அவன் தலையில் தட்டி, "எப்ப பார்த்தாலும் திங்கிறதுக்கு அலையாத.." என்று திட்டிவிட்டு, தாட்சாயினியிடம், "நாலு பேரா? யாரு அந்த நாலாவது ஆளு?" எனக்கேட்டாள்.

ஜெகன், 'சே இது நமக்கு தோணாம போச்சே' என்று நினைத்தான்.

தாட்சாயினி, "அது திலீப் அண்ணா கூட வந்த அந்த பொண்ணு" என்றாள்.

ஜெகன், "ஆமா பாஸ்! நானும் கேட்க மறந்துட்டேன். அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?"

தாட்சாயணி, "அவங்களுக்கு ஒன்னும் இல்ல. சாப்பிடாதனால மயங்கி விழுந்துட்டாங்க. சீக்கிரமா கண்முழிச்சுடுவாங்க, ரூம்ல தான் ரெஸ்ட் எடுக்கிறாங்க" என்றாள்.


ஜெகன், "வா வீணா, அவங்க கண்ணு முழிச்சுட்டாங்கலான்னு பார்த்துட்டு வரலாம்" என்றான்.

திலீப், "ஜெகன், அவங்க கண்ணு முழிச்ச பிறகு பார்த்துக்கலாம், உட்காரு" என்றான்.

வீணா, "நா மட்டும் போய் பார்த்துட்டு வரேன்" என உள்ளே சென்றாள். உள்ளே சென்று வர்ணிகாவை பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அதே அதிர்ச்சியுடன் வீணா வெளியே வர ஜெகன், "ஏய் குட்டச்சி! ஏன் இப்படி பேயை பார்த்த மாதிரி முழிக்கிற?" என்றான்.

மற்றவர்களும் அவளை கேள்வியாக பார்க்க, வீணா ஜெகனிடம், "டேய் அந்த பொண்ணு வர்ணிகா டா" என்றாள்.

ஜெகன் இதைக்கேட்டதும் உற்சாகமாக, "என்னது அண்ணியா? பாஸ் அண்ணியை தான தேடீட்டு இருக்காரு" என்றான்.

இதைக்கேட்டு அவினஷ்க்கு அதிர்ச்சி. அவன்‌ ஜெகனிடம், "திலீப் தேடின அந்த பொண்ணா?" எனக் கேட்க, "ஆமா! அது அண்ணிதான்.." என்றான் ஜெகன்.

அவினாஷ் திலீப்பை பார்க்க, திலீப், "ஆமாடா! நான் சொன்னேன்ல அந்த பொண்ணு தான். நான் உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்" என்றான்.

ஜெகன், "இதுக்காகத்தான் எங்கள விட்டுட்டு நீங்க மட்டும் தனியா வந்தீங்களா?" என்று பொங்க,

திலீப் அவன் தலையில் தட்டி அடக்கியவன், "இது எதார்த்தமா தான் நடந்ததுச்சு" என்றான்.

அவினாஷ்க்கு அப்போதுதான் ஜெகன் வர்ணிக்கவை அண்ணி என்று அழைப்பவதை கவனித்தான். அவினாஷ், "ஜெகன், ஏன் அந்த பொண்ணை அண்ணின்னு சொல்ற" என்று கேட்க ஜெகன், "அதுவா..." என ஆரம்பிக்க, திலீப் ஓடிச் சென்று அவன் வாயை கைகளால் மூடினான்.

அவினாஷ், "ஏன்டா அவனை சொல்ல விட மாட்ற, கையை எடுடா...!"

திலீப், "இல்லடா, இவன் ஒரு லூசு. இவன் சொல்றதை நம்பாத டா" என்றான்.

அவினாஷ், "நீ முதல்ல கையை எடு. அவன் சொல்லட்டும், அதுக்கு அப்புறம் நம்புறதா இல்லையான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்.." என்றான்.

திலீப் கையை எடுத்துவிட்டு ஜெகனை முறைத்தான். அவினாஷ், "நீ சொல்லு ஜெகன்."

ஜெகன், "பாஸ் என்ன முறைக்கிறரு. நான் சொல்ல மாட்டேன்.." என்று தலையை ஆட்டினான்.

அவினாஷ் திலீப்பிடம், "ஏன்டா அவனை முறைச்ச?" என கேட்க, திலீப், "நான் எங்கடா அவனை முறைச்சேன்?"

அவினாஷ் ஜெகனைப் பார்க்க, ஜெகன், "நான் உங்ககிட்ட அப்புறமா சொல்றேன்" என்றான்.

தாட்சாயினி, "நான் சமைச்சுட்டேன், எல்லோரும் சாப்பிட வாங்க" என்றாள்.

வீணா, "சாப்பாடா! அதுக்கு இவன் தான் முதலா போவான்" என்று ஜெகனை காட்டினாள். ஜெகன் அவள் தலையில் கொட்டி, "எருமை! நீ மட்டும் சாப்பிட மாட்டியா? சாப்பாட்டுல கைவை, உன் கையை வெட்டுறேன்" என்றான். இவர்கள் செய்கையைப் பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

தாட்சாயினி சிரித்துக்கொண்டே, "எல்லோரும் சாப்பிட வாங்க. நான் போய் வர்ணிகா முழிச்சுட்டாங்களா என்று பார்த்துட்டு வரேன்.." என வர்ணிகா ரூமை நோக்கி சென்றாள்.

வர்ணிகாவிற்கு அப்போதுதான் முழிப்பு தட்டியது. தாட்சாயினி அவள் ரூமில் நுழைந்தாள். தாட்சாயணி வர்ணிகாவிற்கு விழிப்பு வந்து விட்டதை பார்த்து, "வர்ணிகா.." என்று அழைத்தாள்.

மயக்கம் தெளிந்து எழுந்த வர்ணிகா, 'நான் எங்க இருக்கேன்? நான் அங்க மயக்கம் போட்டு விழுந்ததற்கு பிறகு என்ன ஆச்சு?' என்று நினைத்தாள்.

தாட்சாயினி, "எழுந்துருச்சிட்டீங்களா? இந்தாங்க இந்த தண்ணியை குடிங்க.." என்றாள். வர்ணிகா அந்த தண்ணீரை வாங்கி பருகினாள்.

தாட்சாயினி, "இப்போ உங்களுக்கு பரவா இல்லையா?" என கேட்க வர்ணிகா, "ம்ம்... பரவாயில்லை.." என்றுவிட்டு, "என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும்?" என கேட்டாள்.


தாட்சாயணி, "ஒரு நிமிஷம் இருங்க..." என்றுவிட்டு வெளியே சென்று, "திலீப் அண்ணா, அவங்க கண்ணு முழிச்சுட்டாங்க" என்றாள்.

ஜெகன் ஆர்வமாக, "அண்ணி கண்முழிச்சுட்டாங்களா?" என்றான். திலீப் அவனை தீயாய் முறைத்தான். ஜெகன் கப்சிப் என்றாகிவிட்டான். அவினாஷ், "வாங்க எல்லாரும் அந்த பொண்ணை பார்க்கலாம்."


எல்லோரும் வர்ணிகா இருந்த அறைக்குள் நுழைந்ததும், வர்ணிகா அத்தனை பேரை பார்த்து பயந்து விட்டாள். அடுத்து எந்த இடத்தில் மாட்டிக்கிட்டோம் என நினைத்தாள். தாட்சாயினி திலீப்பை காட்டி, "இவர்தான் உங்கள காப்பாற்றுனவரு..." என்றாள்.


வர்ணிகாவின் கண்ணில் பயத்தை பார்த்து அவினாஷ், "பயப்படாதம்மா! நீ பாதுகாப்பான இடத்தில் தான் இருக்க. நான் அசிஸ்டண்ட் கமிஷனர் அவினாஷ்.." என்றான். இதைக் கேட்டதும் வர்ணிகாவிற்கு நிம்மதி பிறந்தது. அப்போதுதான் அவள் கண்களில் பயம் இல்லை.

வர்ணிகா திலீப்பை பார்த்து தாங்க்ஸ் என்று கூறி முடிப்பதற்குள் ஜெகன் இடையில் புகுந்து, "அண்ணானு மட்டும் சொல்லீடாதீங்க" என்றான். இதைக் கேட்டு அனைவரும் அவனை விநோதமாக பார்க்க, வர்ணிகா அவன் கூறியதை கேட்டு விழித்தாள். திலீப்பிற்கு செல்ல முடியாத நிம்மதி! அதை மனதில் மறைத்துக் கொண்டு ஜெகனை முறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஜெகன் மைண்ட் வாய்ஸில் 'கொஞ்சம் ஓவராதான் பண்ணிட்டமோ?' என்று நினைத்து ஈஈஈ என இளித்தான்.

வீணா, "வர்ணிகா, நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க, அவனுக்கு கொஞ்சம் மூளைவளர்ச்சி இல்லை" என்று சமயம் பார்த்து காலை வாரினாள். வர்ணிகா அவர்களின் செயலை வித்யாசமாக பார்த்தாள்.

அவினாஷ், "இது டிடெக்டிவ் திலீப்குமார், இது அவரோட அசிஸ்டண்ஸ். இவங்க தான் உன்னைக் காப்பாற்றி பாதுகாப்பாக கூட்டிட்டு வந்தாங்க. உனக்கு எதுவும் பிரச்சனையா?" என கேட்க தாட்சாயினி, "அவங்க ரொம்ப டயர்டா இருப்பாங்க, முதல்ல ஏதாவது சாப்பிடட்டும். அப்புறம் உங்க இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணுங்க" என்றாள்.


எல்லோருக்கும் அதுவே சரி என தோன்றவே, வர்ணிகாவை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றனர். வர்ணிகாவிற்கு பாதுகாப்பான இடத்திற்கு வந்தது போல தோன்றியது. அவினாஷிடம் அனைத்தையும் கூறி உதவி கேட்கலாம் என நினைத்தாள். மதியம் வேறு சாப்பிடாததால் வர்ணிகா பசியில் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்து ஹாலில் வட்டமாக அமர்ந்தனர்.


வர்ணிகா அவர்கள் என்ன கேட்க போகிறார்களோ..? என யோசித்துக் கொண்டிருந்தாள். அவினாஷிற்கு கால் வந்தது, பேசிவிட்டு வந்தான். ஜெகன் அவளிடம் பேசுவதற்காக வாயை திறக்க போக அவினாஷ், "நம்ம இதைப்பற்றி காலையில பேசிக்கலாம்" என்றான். அவினாஷை எல்லோரும் கேள்வியாக பார்க்க அவினாஷ், "நான் காரணத்தோடு தான் சொல்றேன். நாளைக்கு ஒரு முக்கியமான ஆள் வர வேண்டி இருக்கு" என்றான்.


மர்மங்கள் தொடரும்!!!

 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom