• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 12

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 12
நேரம் மாலை ஏழை தாண்டிக்கொண்டிருக்க இரண்டு வீட்டிலுமே விருந்தினர்கள் வர ஆரம்பித்திருந்தனர்.

கோதை வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வேதாவை பற்றிய கேள்விகளே. எல்லாரையும், எல்லாவற்றையும் சமாளித்து சமாளித்து ஓய்ந்துதான் போயிருந்தாள் கோதை. இதுவரை யாரிடமும் இப்படி பொய் பேசி பழக்கமே இல்லை அவளுக்கு. மனதோடு சேர்ந்து தலையும் கனத்தது.

கோகுலுடன் பேச வேண்டும் போல் இருந்தது. அவன் வாங்கிக்கொடுத்த அந்த கைப்பேசியை தேடி களைத்திருந்தாள் அவள். எங்கே வைத்தாளென்று அவளுக்கே நினைவில்லை. ஆனால் அந்த கைப்பேசி இருந்தது. இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக இருந்தது.

அப்பாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவருடன் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்போது அவரை எப்படி தொடர்பு கொள்வதாம்?

தளர்ந்து போயிருந்த கால்கள் அருகிலிருந்த கோவிலை நோக்கி நடந்தன. கோவிலை அடைந்து அவள் பிரகாரத்தை சுற்றி வந்து அமர்ந்த நேரத்தில்....

“கோதை மாமி என்ன பண்றேள்?” என்ற குரல் கேட்டு திடுக்கென திரும்பினாள் அவள். தலைசாய்த்து புன்னகைதான் கோகுல்.

எழுந்தே விட்டாள் கோதை

“நீங்க எப்போ வந்தேள்.?”

நினைத்தவுடன் எப்படி என் கண் முன்னே வந்து நிற்கிறான்? மகிழ்ச்சி புன்னகை அவளிடம் மலர்ந்தது நிஜம்.

“நேக்கே உங்களண்ட பேசணும் போலே இருந்தது”

அழகாக புன்னகைத்தான் கோகுல். ''நான் ரொம்ப நாழியா இங்கே தான் இருக்கேன். நீ எப்படியும் இங்கே வருவேன்னு தெரியும். அதான் வெயிட் பண்ணிண்டு இருக்கேன்”

“பாரு. எவ்வளவு டல்லா ஆயிட்டா பாரு கோதைப் பொண்ணு. தெரியும் நேக்கு. அதான் பார்க்க வந்தேன். இப்படி உட்காரு” என்றபடியே அவள் அருகில் அமர்ந்தான் கோகுல்

“ஆமாம் உன் போனை எங்கே போட்டே?”

“தெரியலை. எங்கே வெச்சென்னு நேக்கு ஞாபகமே இல்லை”

“ஒரே சமயத்திலே உங்காத்திலே எல்லா போனும் அவுட்... என்ன பண்றது?” என்றபடியே படித்தான் அவள் முகத்தை. முகம் நிறைய கவலைக் கோடுகள்.

“நேக்கு ரொம்ப பயமா இருக்கு. அக்கா பத்தி ஏதானும் தெரிஞ்சதா கோகுல். என்னாலே பொய் சொல்ல முடியலை. திடீர்ன்னு அக்கா நம்ம கண் முன்னாடி வந்து நின்னுட்டா நன்னா இருக்கும்ன்னு தோண்றது”

“வருவா. சீக்கிரம் வருவா. நானும் அவ எங்கே இருக்கான்னு கண்டு பிடிக்க ட்ரை பண்ணிண்டுதான் இருக்கேன். முரளி சொன்னா மாதிரி ப்ராப்ளம்ஸ் வரத்தான் போறது. சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம். நாளைக்கு வரைக்கும் கொஞ்சம் பொறுமையா தைரியமா இருக்கணும் சரியா?”

“ச... சரி..." என்று அரை குறையாக அசைந்தது அவளது தலை. “நாளைக்கு எல்லாம் சரியா நடக்குமோன்னோ?”

“கண்டிப்பாடா... எது நடந்தாலும் நான் உன்னை விட்டுட மாட்டேன்..... கவலைப் படாதே சரியா” கோகுல் சொல்லிக்கொண்டிருந்த போதே ஒலித்தது அவன் கைப்பேசி. மாயக்கண்ணன் என்று ஒளிர்ந்தது திரை.

“போன் வந்திருக்கு இதோ வந்திடறேன்மா” கோதையிடம் சொல்லிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்து அழைப்பை ஏற்றான் கோகுல்.

“சொல்லுடா”

“ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு.டா... வேதா சென்னையிலிருந்து போன கார் நம்பர் எங்களுக்கு கிடைச்சிருக்கு. ஆக்சுவலி அவளோட முகம் சென்னை - பெங்களுர் ஹை வே டோல் கேட்லே இருக்கிற ஒரு சி.சி கேமராலே பதிவு ஆகி இருக்குடா. அந்த கார் நம்பர்...” என்று மாயக்கண்ணன் சொல்ல அவன் நெஞ்சுக்குள்ளே பூகம்பம்.

மனம் மடமடவென கணக்கு போட அவன் உதடுகள் மெலிதாக உச்சரித்தன “ச...ர.. வ..ண...ன்..” நம்பவே முடியவில்லை கோகுலால். சரவணனா? அவன் இப்படி எல்லாம் செய்திருப்பானா?

“கண்ணா” என்றான் கோகுல் “அது எங்காத்து கார்டா”

“உங்க காரா?”

“ஆமாம் கொஞ்ச நாள் யூஸ் பண்ணிட்டு தரேன்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் வாங்கிண்டு போனான்”

“அவன் பத்தின டீடைல்ஸ் குடு”

சரவணனை பற்றிய விவரங்களை கொடுத்துவிட்டு சொன்னான் கோகுல்

“அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட்டா. அவன் தப்பு பண்ணி இருப்பான்னு என்னாலே நம்ப முடியலை.” அந்த நேரத்திலும் ஒரு நல்ல நண்பனாகவே இருந்தான் கோகுல்.

“ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட். நான் பார்த்து டீல் பண்றேன்.. கவலைப் படாதே.” சீக்கிரம் கூப்பிடறேன் “ துண்டித்தான் அழைப்பை.

கோவில்னுள்ளே வந்தான் கோகுல். அவளிடம் இப்போது எதுவும் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று தோன்றியது அவனுக்கு.

“சரிடா நான் இப்போ ஆத்துக்கு போகணும் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ தைரியமா இரு. கார்த்தாலே பார்க்கலாம். நோக்கு என் நம்பர் தெரியுமா?”

“தெரியும்”

“எதுவா இருந்தாலும் போன் பண்ணு. ஆத்திலே அத்தை எல்லாம் வந்தாச்சா”

“ம்”

“குட்... நான் கிளம்பறேன் ..சரியா” அவளிடம் அவசரம் அவசரமாக விடை பெற்று கிளம்பினான் கோகுல். சரவணனை அவன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் தோல்வி.

“சரவணனா? அவனால் தவறு செய்ய முடியுமா?” இந்த ஒரு கார் விஷயத்தை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா? இல்லை என் காரை அவன் வேறே யாரிடமாவது கொடுத்திருக்கிறானா?

“கவலை படலைடா. வெறுத்தே போயிட்டேன். இந்த நாட்டிலே ஜெயிக்கறவன் மட்டும் தான் ஆம்பிளைன்னு ஒரு கணக்கு. ஹீரோன்னா நிறைய படிச்சு இருக்கணும், ஸ்மார்ட்டா இருக்கணும், நிறைய பணம் இருக்கணும், எப்பவும் ஜெயிச்சிட்டே இருக்கணும். இது எதுவுமே என்கிட்டே இல்லையே. நானெல்லாம் ஜீரோதான்டா” முன்பு ஒரு முறை சரவணன் அவனிடம் சொன்னதும் நினைவுக்கு வந்துதான் போனது.

வாழ்க்கை மீதிருக்கும் வெறுப்பில் தவறு செய்துக்கொண்டிருக்கிறானா அவன்?

யோசித்தபடியே நேராக அவன் சென்றது முரளியின் வீட்டுக்கு. எல்லா விவரங்களையும் அவனிடம் சொல்லி முடித்தான் கோகுல்.

“சரவணன் எந்த ஊர்டா?” கேட்டான் முரளி.

“தூத்துகுடி பக்கத்திலே ஒரு கிராமம்” சொன்னான் கோகுல்.

இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தனர். சரவணனின் பெற்றவர்களை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக நேரம் இரவு பன்னிரெண்டை தொட்டிருக்க அவனுக்கும் சரவணனுக்கும் பொதுவான ஒரு நண்பனை தொலைப்பேசியில் பிடித்திருந்தான் கோகுல்

இந்த விவரங்கள் எதுவும் சொல்லாமல் பொதுவான பேச்சுக்கு பிறகு கேட்டான் கோகுல்

“நம்ம சரவணன் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமாடா? ரெண்டு நாளா அவன் கூட பேசணும்ன்னு பார்க்கிறேன் லைன் கிடைக்கலை”

“சரவணனா?” என்றான் அந்த நண்பன்.. “அவனை எதுக்குடா இப்போ தேடறே. அவனுக்கு கல்யாணம்டா”

“கல்யாணமா.? யாருடா பொண்ணு? எந்த ஊரிலே கல்யாணம்?”

“அதெல்லாம் தெரியாதுடா. திடீர் கல்யாணம்ன்னு கேள்விப்பட்டேன் அதற்கு மேல் வேறெந்த விவரமும் தெரியவில்லை அவனுக்கு.

அப்படி என்றால் வேதாவுக்கும். சரவணனுக்கும் திருமணமா? வேதா சொன்னபடி பார்த்தால் இன்று திருமணம் நடந்திருக்க வேண்டுமே? இன்னமும் குழப்பமே நீடித்தது.

எப்படியோ இரவு கடந்து அதிகாலை பொழுது வந்திருந்தது. வாசல் தெளித்து, கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் கோதை. உள்ளம் யோசனையில் அவள் மூழ்கி இருக்க

“கோதை” என்ற அன்பான குரல் கேட்க ... திடுக்கிட்டு கலைந்து விருட்டென நிமிர்ந்தாள் அவள்..

நிறைய பைகளை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு முகம் முழுவதும் பயண களைப்பும், அதனோடு நிறையவே வாஞ்சையும் மகள்களுக்கு திருமணம் என்ற சந்தோஷமும்... சேர்ந்திருக்க புன்னகையுடன் நின்றிருந்தார் அவள் அப்பா.

“அப்பா... வாங்கோ...” கையிலிருந்து பைகளை வாங்கிக்கொண்டாள் கோதை. ஆனால் அதற்கு மேல் பேச நா எழவில்லை அவளுக்கு. அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் சக்தி அற்றுப்போயிருந்தது.

அவள் கொடுத்த காபியை பருகிக்கொண்டே அவர் வாங்கி வந்த இரண்டு பட்டுப் புடவைகளையும் காட்டினார் அப்பா.

“நோக்கு ஒண்ணு.. அக்காவுக்கு ஒண்ணு. அப்பா முதல் முதலா உங்க ரெண்டு பேருக்கும் பட்டுப் புடவை வாங்கிண்டு வந்திருக்கேன். ரெண்டும் ஒரே மாதிரி. நன்னா இருக்கா மா?”

புடவையை கையில் எடுத்துக்கொண்டாள் கோதை. கண்கள் மின்ன அதை பார்த்தாள் அவள். அப்பா வாங்கிக்கொடுத்த முதல் பட்டுப் புடவை. அவளுக்கு அது ஒரு பொக்கிஷம். மனம் நிறைய சந்தோஷம். ஆனால் அதை கொண்டாட விடாமல் தடுத்தது அவளது மனம். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்து விட்டதை போன்றதொரு ஒரு எண்ணம்.

“வேதா எங்கே மா போயிருக்கா? அப்படி என்னமா அவசர வேலை?”

“டெல்லி.. டெல்லி தான்பா போயிருக்கா” தயங்கித் தயங்கி சொன்னவளின் கரம் அக்காவின் புடவையை மெல்ல வருடியது “அக்கா எங்கே இருக்கே?. இங்கே வந்திடேன் ப்ளீஸ் “

அதே நேரத்தில் முரளியின் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்தான் கோகுல். இரவு முதல் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த எந்த கேள்விக்கும் இன்னமும் பதில் கிடைத்தபாடில்லை

கோகுலின் ஒன்று விட்ட சித்தி, மாமா, அத்தை என ஒவ்வொருவராக எதிர்பட எல்லாருடைய வாழ்த்துகளையும் வாங்கிக்கொண்டு, நேரம் காலம் தெரியாமல் அவர்கள் அடித்த ஜோக்குக்கெல்லாம் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு, ஒரு வழியாக தப்பித்து

“மா... காபி மா” என்றபடி சமையலறையில் நுழைந்தான் கோகுல்

“இன்னைக்கு நோக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கோ?”

“நன்னா... அதுக்குதான் ஆத்துக்கு வந்தேன்” கண்சிமிட்டினான் அவன். ஆனால் அந்த கண்சிமிட்டலில் வழக்கமான உற்சாகம் இல்லை என்றுதான் பட்டது அம்மாவுக்கு.

“ஏன்டா... ராத்திரி சரியாத் தூங்கலையா?”

“நன்னாத்தான் மா தூங்கினேன். நான் போய் குளிச்சிட்டு, சந்தியாவந்தனம் பண்ணிட்டு வரேன்” அம்மா அடுத்தக் கேள்வியை தொடுப்பதற்குள் அவசரமாக காபியை முடித்துவிட்டு அவர் முகம் பார்க்காமல் அவன் நகர போக..

“டேய்... உன் போனை கொஞ்சம் குடுடா... பெரிம்மாக்கு ஒரு போன் பண்ணனும்... என் போன் இப்போதான் சார்ஜ் போட்டிருக்கேன்.” அம்மா கேட்க... யோசிக்காமல் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து கொடுத்துவிட்டு...

“பேசிட்டு என் போனையும் சார்ஜ் போட்டுடு” சொல்லிவிட்டு தனது அறைக்கு நகர்ந்தான் மகன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருந்த நிலையில் அங்கே டைனிங் டேபிள் அருகே சார்ஜரில் இணைந்திருந்த கோகுலின் கைப்பேசி ஒலித்தது. மாயக்கண்ணன் என்று ஒளிர்ந்தது திரை. அதை பார்த்தார் அம்மா.

அவருக்கு மாயக்கண்ணனை தெரியும். ஓரிரு முறை அவனை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான் கோகுல். ஒரு வேளை அவனை நிச்சியத்திற்கு அழைத்து இருப்பானாக இருக்கும் என்ற எண்ணத்துடனே அழைப்பை ஏற்றார் தேவகி.

“சொல்லுப்பா... நான் தேவகி பேசறேன்”

“அம்மா... எப்படி இருக்கீங்க?”

'நன்னா இருக்கேன்பா. கோகுல் குளிச்சிண்டிருக்கான். அவனண்ட ஏதானும் சொல்லணுமா..'

“அப்படியா சரிமா நான் அப்புறமா கூப்பிடறேன்”

“ஏதானும் முக்கியமா சொல்லணும்னா சொல்லுப்பா நான் சொல்லிடறேன்” அம்மா இயல்பாக கேட்க..

“இல்லமா... அவன் வேதான்னு ஒரு பொண்ணை ரெண்டு நாளா காணோம்னு தேட சொல்லி இருந்தான். அதை பத்தி சில விஷயங்கள் கன்ஃபார்ம் பண்ணிக்கணும் அதுக்குத்தான் கூப்பிட்டேன்” என்றான் இயல்பாக.

சில மணி நேரங்கள் கடந்திருந்தது. அன்று மதியம்.

கோகுலின் வீட்டில்....

முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் கையில் இருக்கும் டம்பளரில் இருந்த காபியை ருசித்து பருகிக்கொண்டிருந்தான் முரளி...

“பாரு பாரு நான் இவ்வளவு கத்தறேனே கொஞ்சமானும் ஏதானும் பேசறானான்னு பாரு உன் பிள்ளை... ரசிச்சு ருசிச்சு காபி குடிச்சிண்டு இருக்கான்... நமக்கு எதிரா எவ்வளவு அழகா பிளான் பண்ணி இருக்கான் இவன்.... சாயங்காலம் நிச்சயதார்த்தம்ன்னு சொல்லி எத்தனை பேர் வரப்போறா தெரியுமா? போயிடுத்து ஊரிலே நேக்கு இருந்த மானம் மரியாதையை எல்லாம் போயிடுத்து.. இதைக் கூட என்னாலே பொறுத்துக்க முடியறது.... அந்த ஸ்ரீதரன்... என்ன தைரியம் இருக்கணும் அந்த மனுஷனுக்கு” கோபத்தின் உச்சியில் கொதித்துக்கொண்டிருந்தார் நந்தகோபால். முரளியின் தந்தை.

'அதான் நான் நெனெச்ச மாதிரி தான் எதுவுமே நடக்கலையே. கோதை தான் எல்லாத்தையும் மாத்திப் பண்ணிட்டாளே? எல்லாரும் அங்கே பேசாம தானே இருந்தேள்? இங்கே வந்து என்னத்துக்கு குதிச்சிண்டிருக்கேள்..' உதடுகள் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டு மெல்ல விழி நிமிர்த்தி எல்லாரையும் பார்த்தான் முரளி.

சோபாவின் பின்னால் சாய்ந்து கண்களை மூடி இருந்தான் கோகுல். புது வேஷ்டியும், ஷர்ட்டும் முகத்தில் தாண்டவமாடும் கல்யாண களையுமாக அமர்ந்திருந்தான் அவன். நடந்த எல்லாவற்றையும் தாண்டி கோதையே அவன் மனதில் நிறைந்திருந்தாள். அவள் மீதான காதல் பல மடங்கு கூடி விட்டதை போன்றே தோன்றியது

'பொய், பேராசை, துரோகம்... இது போன்ற குணங்களின் சாயல்கள் கூட இல்லாத வெள்ளை மனம் அவளது. இப்படி பட்ட பெண்ணுடன் வாழ்வதற்காக எப்படி பட்ட அவமானத்தையும் சந்திக்கலாம் என்றே தோன்றியது அவனுக்கு.

அவர் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்கவே முடியாத ஒரு பாவத்துடன் அமர்ந்திருந்தார் வாசுதேவன். நியாயமாக இப்படி ஒரு சூழ்நிலையில் இரண்டு அன்னையரின் கண்களிலும் கண்ணீரே நிறைந்திருக்க வேண்டும்.

ஆனால் இங்கே கண்ணீர் இல்லை. மாறாக இருவர் மனமும் ஏனோ சலனமற்றே இருந்தன. அவர்கள் முகத்தில் நிறையவே தெளிவு. கோகுலின் அன்னையின் மனதின் ஓரத்தில் கொஞ்சம் சந்தோஷ ரேகைகள் கூட இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

அங்கே கோதையின் வீட்டில்....

அப்பாவின் கையில் அந்த கடிதம். வீட்டை விட்டு கிளம்பும் முன்னால் வேதா எழுதி அவர் சட்டை பையில் வைத்து விட்டு சென்ற அந்த கடிதம். அதையே மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தார் அவர்.

அவர் முகத்தில் கோப தாண்டவம். அவள் பக்கம் கூட திரும்பவில்லை அவர்.. பெண்ணை பெற்ற தந்தைக்கு எழும் நியாயமான தவிப்பும், கோபமும் அவரிடத்தில்.

அப்பா ஆசை ஆசையாக வாங்கிக்கொடுத்த அந்த புது பட்டுப்புடவையும், காதில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஜிமிக்கிகளும், கூந்தலில் மணம் வீசிக்கொண்டிருந்த மல்லிகை சரமுமாக அப்பா அமர்ந்திருந்த நாற்காலியின் கீழே... அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கோதை........

“அப்பா” அவள் அழைக்க திரும்பவே இல்லை அவர்.

“நான் தப்பு செய்து விட்டேனா? என் அப்பாவை ஏமாற்றி விட்டேனா?” தவிப்புடன் அவரையே பார்த்திருந்தாள் கோதை.
தொடரும்

மை டியர் ஃப்ரெண்ட்ஸ்.

சில மணி நேரங்கள் கழித்து எல்லாருடைய மன நிலையும் எப்படி இருந்ததுன்னு ‌நான் சொல்லிட்டேன். இதை வெச்சு கோகுல் - கோதை ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்ததா இல்லையான்னு நீங்க சொல்லுங்க பார்ப்போம்.



 

Rajam

Well-known member
Member
வேதாவுக்கு தான் தெரிஞ்சு போச்சே
சரவணனின் ஏமாற்று வேலை.
கல்யாணம் நடந்திருக்காது.
தப்பித்து இருப்பாள.
 

kothaisuresh

Well-known member
Member
வேதா தப்பிச்சிருப்பா.கோகுல் கோதை ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கும்.
 
வத்சலா மேம்!
என் யூகம்... நீங்கள் கோதை குணாதிசயங்களை விவரித்ததில் இருந்து....
கோகுல்-கோதை ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்திருக்காது!தள்ளிப் போட்டிருப்பாள் கோதை பெண்... அனைவரிடமும் உண்மையை சொல்லி! அப்பாவிடம் பொய் சொல்ல முடியாது அவளால்... அக்கா வாழ்க்கைக்கு பதில் தெரியாமல், அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு அவள் பேராசைகாரி இல்லை... அப்படியே வேதா புத்தி தெளிந்து திரும்பி வந்திருந்தாலும், உண்மையை மறைத்து அவளுக்கு திருமணம் நடப்பது சரியில்லை என்று நினைத்து அனைத்தையும் சொல்லியிருப்பாள்!புகுந்த வீடு என்பதை தாண்டி, உயிராய் நினைக்கும் அந்த வீட்டாருக்கு, அவளால் துரோகம் செய்துவிட முடியுமா? அதனால் தான் முரளியிடம் ஒரு நிதானம்; கோகுல் மனதில் ஒரு பூரிப்பு, வீட்டுப்பெண்கள் மனதில் ஒரு தெளிவு என்பது என் யூகம்🙈🙈
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom