• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மோகமுள்ளே குத்தாதே

Chithu

✍️
Writer
மோகமுள்ளே குத்தாதே


நிசப்தமே நிறைந்த அவ்வறையில் ஆசிரியர் மட்டுமே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அங்கே அவர் மட்டுமல்ல மாணவர்களும் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தனர்.

அனைவரின் அம்பகங்களும் தாளில் தான் இருந்தது. நமது நாயகியின் விழிகள் கூட தாளிடம் குத்தகைக்கு கொடுத்தது போல விழியகற்றாது தீவிரமாக பதிலை எழுதிக் கொண்டிருந்தாள்.

இது அவளுக்கு மூன்றாமாண்டு முதல் செம், கடைசி பரீட்சை. மிக எளிமையான பாடமாக இருக்க, எல்லாம் தெரிந்த கேள்விகளாகவும்இருக்க, மடமடவென எழுதினாள்.
வேறு வேறு வண்ணம் கொண்ட எழுதுக்கோலையும் உபயோகித்து பரீட்சை எழுத, அவளது கைப் பட்டு, அவ்வெழுதுகோல் கீழே விழுந்தது. அதை எடுக்க, கீழே குனிந்தாள். அப்போது உள்ளிலிருந்த மஞ்சள் வண்ண நாண் வெளியே எட்டிப் பார்த்தது. அதை வேகமாக எடுத்து உள்ளே போட்டாள்.
மீண்டும் பரீட்சையில் கவனம் செலுத்த, அது முடியாமல் தான் ஆருயிர் கணவனின் நினைவே வந்தது.


ஜாதகத்தில் இந்த வயதை விட்டால் இனி திருமணம் யோகம் பத்து வருடங்களுக்கு பிறகு தான் இருக்கிறதென்று சொல்லிவிட, தேஜஷ்வினிக்கு கல்யாணம் செய்திட முடிவு செய்தனர். பாவம் அவள் எவ்வளவு சொல்லியும் கெஞ்சியும் கேட்காதவர்கள் தூரத்து சொந்தம் என்று பேசி முடித்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அவளுக்கு விருப்பமில்லை என்பதால் போனில் கூட அவனிடம் பேசிக் கொள்ளவில்லை... முதல் நாள் நிச்சயம் மறுநாள் கல்யாணம். கதிருடன் நிற்கும் போது கொஞ்சம் தயக்கமும் பயமுமாக இருந்தது அவளுக்கு. அதை அவனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிய முதலிரவிற்காக தேஜுவை உள்ளே அனுப்பு வைத்தனர்... உடல் நடுங்க, முத்து முத்தான வியர்வையுடன் உள்ளே நுழைந்தாள். அவளின் நிலை அறிந்த கதிரும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு அதை மேலும் கூட்டும் விதமாக, அவள் கைகளைப் பற்ற வெடுக்கென எடுத்துக் கொண்டு பின்னே நகன்றாள்.


"ஹேய் ரிலாக்ஸ், நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன். இங்க பாருமா நானும் மனுசன் தான் ஏதோ துஷ்டனை கண்டது போல தள்ளி போற.. இங்க பாரு உன் பயம் எனக்கு புரியுது. முதல் நாள் அதுவும் பழக்கம் இல்லாத ஆண் கூட ஒரே அறையில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இனி நம்ம லைஃப்ல நாம ரெண்டு பெரும் தான் வாழணும். நாம ஏன் ஒருத்தரை ஒருத்தர் அண்டெர்ஸ்டாண்ட் பண்ணிட்டு வாழக்கூடாது. அண்ட் நீ இன்னும் படிச்சு முடிக்கல, நாம் இந்த டைம் யூஸ் பண்ணி முதல் ஃபிரண்டஸ் ஆகிட்டு அப்றம் லவ்வரஸ் ஆகி அப்றம் புருஷன் பொண்டாட்டி வாழலாமே உனக்கு ஒகேவா? உனக்கு ஒ.கேன்னா கொஞ்சம் சிரிக்கலாமே!" என்று உதட்டின் கீழ் விரலை விரித்து காட்டினான்.


அவன் அவ்வாறு சொன்னதும் தான் மூச்சே வந்து சிரித்தாள். அதன் பின் வந்த நாட்களில் இருவரும் முதலில் நட்போடும் பின் காதலோடும் கடத்தினர்.. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்திருந்தனர்.
இதற்கிடையில் அவளுக்கு பரீட்சை வர, அவனை தள்ளி வைத்திருந்தாள்... அவனும் அவளுக்கு தேவை எல்லாம் செய்தாலும் ஏக்க பார்வையுடன் தான் வலம் வந்தான்.
அப்போ அப்போ அவளை பார்ப்பது பெருமூச்சை விடுவதுமாக இருந்தான். அவ்வ போது காஃபி கொடுக்க, அவளுக்கு சமைத்து வைக்க, என இருந்தாலும் அவனது பார்வையில் மட்டுமே தாபமே இருந்தது.


"துஷ்டன்... இங்க வா..." அவனை அழைக்க, கண்களிலொரு மின்னல் வெட்ட, வேகமாக அவள் அருகில் வந்தான். "சொல்லு பேபி ஏதாவது வேணுமா..." இடைவெளியின்றி நெருங்கி நின்றான். இருவருக்கும் நடுவில் பார்த்தவள், "என்ன இது...? முதல்ல தள்ளி நில்லுடா"என்றாள். "மக்கும்" என நொடித்துக் கொண்டு நான்கு அடி தள்ளி நின்றான்.
"உன் பார்வையே சரியில்ல... எங்கிட்ட என்ன வேணும் உனக்கு?" என்றதும் "எஸ் பேபி அதான் பேபி எனக்கு உன் கிட்ட... " என வெட்கப் பட, "யோவ் என்னால பார்க்க முடியல துஷ்டன். சீக்கிரமா சொல்லு..." என்றதும் அவளை போலியாக முறைத்தவன், காதில் எதோ கிசு கிசுக்க, வாயில் கைவைத்து விழிகளைப் பெரிதாய் விரித்தாள்.

"என்னடி நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா...?"அச்சத்தில் அவனும் கேட்க, "தப்பா கேட்டுடீயா, எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா இது? எதோ நல்லவன் போல, படிச்சு முடிச்சதும் வச்சுக்கலாம் சொன்ன... இப்போ இப்படி கேக்குற? நீ ரொம்ப மோசம் டா துஷ்டன். உன்னை எப்படி எல்லாம் நினைச்சேன் ச்ச தள்ளி உட்காரு டா..." என கோபம் கொண்டு நகர்ந்து அமர்ந்தாள்.
"ஹேய் தேஜு சாரி டி, நானும் மனுசன் தானே எனக்கும் ஆசைகள் இருக்கும் தானே? நீ தாலிய வேற முன்னாடி தொங்க போட்டுகிற, அது, எனக்கு இது உன் பெண்டாட்டி டா, உனக்கு தான் டா சொந்தம் எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு சொல்லுது பேபி... நான் என்ன பண்ண? ப்ளீஸ் என்னை தப்பா எடுத்துக்காத தேஜு... நீ கேட்டதுனால தான் சொன்னேன்.. ப்ளீஸ் டி சாரி..." என பதறி மன்னிப்பு கேட்க,
"எங்கிட்ட பேசாத துஷ்டன் இங்க இருந்து போ..." எனக் கத்த, அவனும் பாவமாக முகத்தை வைத்து கொண்டே எழுந்து சென்றான். அதன் பின் அவளை அவன் நெருங்கவே இல்லை. ஆனால் தேவையானதை மட்டும் சரியாக செய்தான். மறுநாள் கல்லூரியிலும் இறக்கிவிட்டான். அவள் பேசுவாள் என்று நினைத்தான். ஆனால் அவள் எதுவும் கூறாது சென்று விட்டாள்.


முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றான். இப்போது அதை எண்ணியவளுக்கு சிரிப்பே வர, தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் எழுத ஆரம்பித்தாள். பரீட்சை முடிய, அவள் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

இருவரும் மட்டுமே தனியாகத் தான் இருந்தனர். அவள் வந்து சாப்பிட்டு உறக்கத்தை போட்டு எழுந்து விட்டாள்.. பின் காஃபி கலக்கியவள், ஹாலில் அமர்ந்து டிவியை பார்த்துக் கொண்டு பருகினாள். அவனும் வந்து சேர்ந்தான்.
தன்னை சுத்தம் செய்தவன் அவனும் காஃபியை எடுத்துக்கொண்டு இடைவெளி விட்டு நகர்ந்து அமர்ந்தவன் டிவியைப் பார்த்தான். அவள் எழுந்து கொள்ள, அவனுக்கு தான் உள்ளே ஊசியை வைத்து குத்தியது போலானது.

இருவரும் இரவு வரை பேசிக் கொள்ளவில்லை.. இரவு உணவு முடித்த பின் அவள் அறைக்கு செல்ல, அவனோ ஹாலில் சென்று படுத்தான். வெகுநேரம் அவன் வராமல் போக, எழுந்து சென்று பார்த்தாள், அவன் ஹாலில் படுத்திருப்பத்தை பார்த்தவள் கடுப்பாகி " துஷ்டன் இங்க வா..."


"போடி நான் வரலை... நீ தான் பக்கத்துல வந்தாலே துஷ்டனை போல தள்ளி போற ஒன்னும் வேணாம் போ... " என்று குழந்தையாய் சிணுங்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


"பச் இப்போ நீ வர போறீயா இல்லையா...? " எனக் குரலை உயர்த்தினாள். அவனும் உள்ளே நுழைய கதவை சாத்தியவள் அவனை பின்னின்று அணைத்தாள்.
"துஷ்டா சாரிடா, சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன் சாரி..." எனத் தலையை சரித்து கண்ணை சிமிட்டி மன்னிப்பு கோர, அதில் விழுந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது "போடி... " எனக் கைகளை விலகி கொண்டு நகர்ந்தான்.


"சாரி துஷ்டா! இனி இப்படி பண்ண மாட்டேன்... வா..." என காதில் கை வைத்து மன்னிப்பு கேட்டவள், கைகளை நீட்ட அவனும் வந்து அவளுக்குள் அடைக்கலமானான்.
"தப்பு பண்ணலாமா துஷ்டா...?" என்றதும் விலகி அவளை பார்த்தவன், " ஆமா, உனக்கு மட்டுமா அந்தக் ஃபீலிங்ஸ் இருக்கு, எனக்கும் தான் இருக்கு. இருந்தாலும் எக்ஸாம் முடியட்டும் வெயிட் பண்ணினேன். இதுக்கு மேல என்னால முடியாது துஷ்டா ஐ நீட் யூ..." என ஏக்கி இதழில் முத்தம் பதிக்க, அவனோ இதழை பிரிக்காது அவளை தூக்கி மஞ்சத்தில் சேர்ந்தான்... மூன்று மாத கால இருவரையும் குத்து கிழித்துக் கொண்டிருக்க மோகமுள் கொடுத்த காயத்திற்கு, மருந்தென காதலையும் காமத்தையுமிட்டு வலியை இல்லாது ஆக்கினார்கள்.


காத்திருந்த
இதயங்களில்
மோகமுள்
குத்தி
காயங்களாகிட,
காமம்
கலந்த
காதலும்
மருந்தென
வலியை
போக்கியது.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom