• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முள்ளில் பூத்த மலரே... நர்மதா சுப்ரமணியம்.....

Apsareezbeena loganathan

Well-known member
Member
முள்ளில் பூத்த மலரே.....

முள்ளாய் இருந்த வாழ்வில்
மலராய் வந்து
மாணிக்கம் வாழ்க்கையை
மலரச் செய்த மலர்....

முள்ளாக குத்திய வாழ்வு
மீட்டு எடுக்க உதவிய மாணிக்கம்
மறுவாழ்வு தந்து
மீண்டும் மலர்ந்த மலர்.....

மகள் ஆதினி பாசமாகவும்
மகன் மதுரன் ஒழுக்கமாகவும்
மனைவி மலர் துணிச்சலாகவும்
மாணிக்கம் நேர்மையாகவும்
மற்றவர்களுக்கு
மரியாதை செய்யும்படி
மதிப்பாய் இருந்து
மகிழ்ச்சியில் வாழும் குடும்பம்...

காதலில் கரம் பிடித்து
கல்யாணம் ஆன பின்
காதலை மறந்து
கடமைக்கு வாழும் வாழ்க்கை
காதல் எங்கே மறைந்தது???
கோபமாய் இருக்கும் மனைவியை
கையாள தெரியாமல்
காலம் கடந்தும்
காக்க தெரியாமல்
கவலை கொள்ளும் தம்பதியாக
தர்மன் சத்யா....

அகிலனின் ஆசை
ஆதினியின் அமைதி
அவர்களுக்குள் காதல்
அழகாய் உரைத்து
அவன் சம்மதம் வேண்டி
அவளின் தந்தையிடம் நிற்க
அருமை......

அண்ணன் தங்கை பாசம்
அகிலன் மீனா
ஆதினி மதுரன்
அருமை......

அன்றைய கதை
இன்றைய காதல் என்று
இரண்டும் ஒரே நேரத்தில்
இரு கதையாக பயணம் செய்ய
இறுதியில் ஒரு புள்ளியின்
இருகதையும் இணையும் இடத்தில் சூப்பரா இருக்கும்....


நான்கு ஜோடிகள்
நான்கு விதமான காதல்
நாலு பேரு
நாலு விதமா பேசத்தான் செய்வாங்க....
நாம் எதை எப்படி எடுத்து
நம் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்கிறோம் என்பதில் உள்ளது
நம் வாழ்வின் மகிழ்ச்சி.....

ஆயாவின் துணை
மலருக்கு பக்க பலம்......
தாய் தந்தையை எண்ணி
தன் சோகத்தை மறைத்து
தன்னுள் தவிக்கும் போது
தன் நிலை அவர்களுக்கு
தெரிந்த பின் துடிப்பது
தன்னை மீட்டு எடுக்க
தன்னம்பிக்கையுடன் போராட
தந்தையின் முற்போக்கு பேச்சு
தைரியமாக முடிவு எடுக்க உதவ
அனைத்தும் அருமை ....

பேபிமா_ மலரை மாணிக்கம் அழைக்கும் போது
அதில் அன்பே முதல் ....
கண்ணம்மா_ மாணிக்கம் ஆதினிய அழைக்கும் போது
தந்தையின் பாசம் முதலிடம்.....
கன்னும்மா _ அகி ஆதினியை அழைப்பில் காதலே முதல்......
பொண்ணும்மா என்று நிலாவை அழைக்கும் மதுரனின்
அசைக்க முடியாத நம்பிக்கையான நேசம்....

மனம் விட்டு பேசினால்
மன சஞ்சலம் ஏன்????
மனதில் உள்ளதை அப்படியே
மறைக்காமல் தெளிவாக பேசி
மகிழ்ச்சியாய் வாழ்வோம்.....

இது கதை அல்ல
இன்றைய தலைமுறைக்கு
இது ஒரு பாடம்....எடுத்துக்காட்டு.
இப்படி இருக்க வேண்டும் என்று
இதமாய் சொல்லும் கதை.....
நேர்மறை எண்ணங்கள்....
உறவுகளின் நம்பிக்கை
அன்பின் வலிமை
பொறுமையின் பரிசு
எதை நாம் எப்படி
எடுத்து கொள்ள வேண்டும்
என்பதை தெளிவாக பேசிய கதை......
ஒவ்வொறு வார்த்தைகளும்
ஒவ்வொறு வாக்கியமும்
ஒவ்வொறு கருத்துக்களும்
ஒவ்வொறு செயல்களும்
ஒவ்வொறு முடிவுகளும்
ஒவ்வொறு பிரச்சனைகளும்
ஒவ்வொறு இடத்திலும்
நிதானமும் நேர்மையாகவும்
அழகாகவும் அருமையாகவும்
ஆழமாகவும் அழுத்தமாகவும்
சொல்லிய விதம் அற்புதம்....

எதை விட
எதைச் சொல்ல
சொல்லிக்கொண்டே போகலாம்...

மொத்தத்தில் மனதை
வென்று விட்டார்கள்....
மலர் மாணிக்கம்💕💕💕💕💕

(திருமணத்தில் இணையும்
புதுமண தம்பதிகளுக்கு
பரிசாக கொடுக்கலாம்
முள்ளில் பூத்த மலரை)

என் புத்தக மாலையில்
சேர்க்க வேண்டிய மலர்...
முள்ளில் பூத்த மலர்.....
வாழ்த்துகள் சகி 💐💐💐💐💐💐💐
 
முள்ளில் பூத்த மலரே.....

முள்ளாய் இருந்த வாழ்வில்
மலராய் வந்து
மாணிக்கம் வாழ்க்கையை
மலரச் செய்த மலர்....

முள்ளாக குத்திய வாழ்வு
மீட்டு எடுக்க உதவிய மாணிக்கம்
மறுவாழ்வு தந்து
மீண்டும் மலர்ந்த மலர்.....

மகள் ஆதினி பாசமாகவும்
மகன் மதுரன் ஒழுக்கமாகவும்
மனைவி மலர் துணிச்சலாகவும்
மாணிக்கம் நேர்மையாகவும்
மற்றவர்களுக்கு
மரியாதை செய்யும்படி
மதிப்பாய் இருந்து
மகிழ்ச்சியில் வாழும் குடும்பம்...

காதலில் கரம் பிடித்து
கல்யாணம் ஆன பின்
காதலை மறந்து
கடமைக்கு வாழும் வாழ்க்கை
காதல் எங்கே மறைந்தது???
கோபமாய் இருக்கும் மனைவியை
கையாள தெரியாமல்
காலம் கடந்தும்
காக்க தெரியாமல்
கவலை கொள்ளும் தம்பதியாக
தர்மன் சத்யா....

அகிலனின் ஆசை
ஆதினியின் அமைதி
அவர்களுக்குள் காதல்
அழகாய் உரைத்து
அவன் சம்மதம் வேண்டி
அவளின் தந்தையிடம் நிற்க
அருமை......

அண்ணன் தங்கை பாசம்
அகிலன் மீனா
ஆதினி மதுரன்
அருமை......

அன்றைய கதை
இன்றைய காதல் என்று
இரண்டும் ஒரே நேரத்தில்
இரு கதையாக பயணம் செய்ய
இறுதியில் ஒரு புள்ளியின்
இருகதையும் இணையும் இடத்தில் சூப்பரா இருக்கும்....


நான்கு ஜோடிகள்
நான்கு விதமான காதல்
நாலு பேரு
நாலு விதமா பேசத்தான் செய்வாங்க....
நாம் எதை எப்படி எடுத்து
நம் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்கிறோம் என்பதில் உள்ளது
நம் வாழ்வின் மகிழ்ச்சி.....

ஆயாவின் துணை
மலருக்கு பக்க பலம்......
தாய் தந்தையை எண்ணி
தன் சோகத்தை மறைத்து
தன்னுள் தவிக்கும் போது
தன் நிலை அவர்களுக்கு
தெரிந்த பின் துடிப்பது
தன்னை மீட்டு எடுக்க
தன்னம்பிக்கையுடன் போராட
தந்தையின் முற்போக்கு பேச்சு
தைரியமாக முடிவு எடுக்க உதவ
அனைத்தும் அருமை ....

பேபிமா_ மலரை மாணிக்கம் அழைக்கும் போது
அதில் அன்பே முதல் ....
கண்ணம்மா_ மாணிக்கம் ஆதினிய அழைக்கும் போது
தந்தையின் பாசம் முதலிடம்.....
கன்னும்மா _ அகி ஆதினியை அழைப்பில் காதலே முதல்......
பொண்ணும்மா என்று நிலாவை அழைக்கும் மதுரனின்
அசைக்க முடியாத நம்பிக்கையான நேசம்....

மனம் விட்டு பேசினால்
மன சஞ்சலம் ஏன்????
மனதில் உள்ளதை அப்படியே
மறைக்காமல் தெளிவாக பேசி
மகிழ்ச்சியாய் வாழ்வோம்.....

இது கதை அல்ல
இன்றைய தலைமுறைக்கு
இது ஒரு பாடம்....எடுத்துக்காட்டு.
இப்படி இருக்க வேண்டும் என்று
இதமாய் சொல்லும் கதை.....
நேர்மறை எண்ணங்கள்....
உறவுகளின் நம்பிக்கை
அன்பின் வலிமை
பொறுமையின் பரிசு
எதை நாம் எப்படி
எடுத்து கொள்ள வேண்டும்
என்பதை தெளிவாக பேசிய கதை......
ஒவ்வொறு வார்த்தைகளும்
ஒவ்வொறு வாக்கியமும்
ஒவ்வொறு கருத்துக்களும்
ஒவ்வொறு செயல்களும்
ஒவ்வொறு முடிவுகளும்
ஒவ்வொறு பிரச்சனைகளும்
ஒவ்வொறு இடத்திலும்
நிதானமும் நேர்மையாகவும்
அழகாகவும் அருமையாகவும்
ஆழமாகவும் அழுத்தமாகவும்
சொல்லிய விதம் அற்புதம்....

எதை விட
எதைச் சொல்ல
சொல்லிக்கொண்டே போகலாம்...

மொத்தத்தில் மனதை
வென்று விட்டார்கள்....
மலர் மாணிக்கம்💕💕💕💕💕

(திருமணத்தில் இணையும்
புதுமண தம்பதிகளுக்கு
பரிசாக கொடுக்கலாம்
முள்ளில் பூத்த மலரை)

என் புத்தக மாலையில்
சேர்க்க வேண்டிய மலர்...
முள்ளில் பூத்த மலர்.....
வாழ்த்துகள் சகி 💐💐💐💐💐💐💐
வாவ் அருமையான கவிதை விமர்சனம் சிஸ். இனி தளத்தில் விமர்சனத்தை பகிர்ந்தால் என்னை டேக் செய்யுங்கள் அப்சரஸ் மா. இன்று தான் இதை கவனிக்கிறேன். வித்யா சிஸ் என்னை டேக் செய்திருக்கிறார் பாருங்கள். அது போல் செய்யுங்கள்.

முள்ளில் பூத்த மலரே கதையை அப்படியே வாசித்த உணர்வை தந்தது உங்களின் கவிதை ❤️❤️

இந்த கவிதையை எனக்கு தனியாக அனுப்ப முடியுமா சிஸ்‌‌. மீண்டும் மீண்டும் ரசித்து வாசித்தேன். மிக்க நன்றி அப்சரஸ் மா ❤️❤️

Lots of love and hugs to you 🤗😘💖
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom